Advertisement

“உன்னால முடியுமாடா?? இத்தனை வருசம் விட்டுட்டு இப்ப வந்து தூக்குனா எங்கையாவது புடிக்க போகுது” என்று அவனை பார்க்க, அவர் பார்வையில் தெரிந்தது கிண்டல் இல்லை அக்கறை மட்டுமே.
“அதெல்லாம் முடியும் மாமா.. ரத்தத்தில ஊறுனது நான் மறந்தாலும் தன்னால வேலை நடக்கும்” என்றவன் அடுத்த வேலைகளை பார்க்க சென்றான்.
போனவன் நேரம் ஆகியும் இன்னும் வராதாதால், அவனை தேடி சென்றாள் அன்னம் 
அவள் அங்கு பார்த்தது, லாவகமாக மூட்டைகளை அடுக்கிய படி கூடவே ஆட்களை வேலை வாங்கி கொண்டு இருக்கும் ஜெய்யை தான். “ஏண்டா இந்த வேலைய பாக்கவா ரெண்டு நாள் ஆகும்னு சொன்னீங்க??  இதே ரெண்டு மணி நேரம் தான் ஆச்சு போங்க வேகமா லோட ஏத்துற வேலைய பாருங்க” என்றவன் “என்ன மாமா இது??” என்றான் நவநீதத்திடம்.
“தான்  போற வேலைக்கு தம்பி போன  மத்துவம்… அந்த கதை தான்  இங்க நடக்குது. முதல் போல இல்லை ஜெய்யி.  அப்பா  பாத்துக்கிட்டாலும் முன்ன போல வேலை வாங்க முடியுறது இல்லை. சத்தியனும் எவ்வளவுனுதான் பாப்பான்.  அந்த புள்ளைக்கு அந்த பக்கமே வேலை சரியா போயிடுது. அதுவும் கண் கொத்தி பாம்பா தான் பாக்குது. இருந்தும் சில சமயம் இப்படிதான் ஏச்சு புடுறாங்க. எப்படியோ அவங்க சொல்லுற நேரத்துகுள்ள லோட அனுப்பிடுறோம்” என்று நிதர்சனத்தை சொல்ல “சரி நான் பாத்துக்குறேன்” என்றான் ஜெய்.
அவர்களுக்கு ஜெய்யை யார் என்று தெரியவில்லை. புதியவன் ஒருவன் அன்னத்துடன் நடந்து வருவது அனைவருக்கும் வேடிக்கையானது. அவர்கள் அவளையும் அவனையும் பார்த்து இருக்க  அவர்களின் பார்வை எதையும் அவள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
அவரிடம் பேசி முடித்து திரும்பியவன் கண்களில் அன்னம் விழ,  அவளும் அவனை  தான் பார்த்து கொண்டு இருந்தாள். “என்ன அனு??” என்றவன் அவள் அருகில் வர “உங்கள யாரு இந்த வேலையை செய்ய சொன்னா..”  என்றாள்  அன்னம். கோபமா… வருத்தமா.. அந்த சொல்லில் இருந்த பாவம் என்ன??
“நம்ம வேலை நாம பாக்கமா யார் பாக்குறது??  லோட் இன்னைக்கு ஏத்தனும் சொல்லிட்டு எல்லாம் அப்படியே இருந்த எப்படி??” என்றவன் “வேலைக்கு ஆள் பத்தலையின்னா போட்டுக்க வேண்டியது தான” என்றான். 
“இப்ப எல்லாம் யார் மில் வேலைக்கு வர்றேன்னு சொல்லுறாங்க?? இருக்குறவங்கள வைச்சு தான் செய்யனும்..” என பேசிய படி வர வாசலிலேயே ஏதே சத்தம் கேட்டது. 
எட்டி பார்த்தவள் நேராக அவர்களிடம் சென்றாள். பொதுவாக அங்கு வியாபாரம் விசயம் பேச வருபவர்கள் வீராசாமியிடமோ இல்லை சத்தியனிடமோ தான் பேசுவது. அன்னம் வந்தாலும் அவளின் இருக்கை என்பது அலுவலகத்தில்  மட்டுமே. தேவையை இருந்தாள் மட்டும் தான் அவள் வருவது. 
அவர்களிடம் சென்றவள் “என்ன அண்ணாச்சி.. இங்கயே நின்னுட்டீங்க. மாமா நீங்க வர்றதா தகவல் சொல்லலியே??” என்றாள் சிரித்த முகமாக. 
“அது ஒன்னும் இல்ல தங்கச்சி, அரவைக்கு தான் வந்து இருந்தேன் இந்த பயக ஏதோ பேசினதுல இங்கயே நின்னுட்டேன்” என்றவர் பேச்சு அன்னத்திடம் இருந்தாலும் பார்வை ஜெய்யிடம் தான் இருந்தது. 
அவனையே பார்த்து இருந்தவர் “உள்ள வாங்க அண்ணச்சி” என்ற அன்னதின் குரலில் “என்ன தங்கச்சி என்னோட அரவைய நிறுத்தி வச்சு இருக்கீங்களாம்??” என்றார் தேரணையுடன். 
அன்னம் சில நெடி சுதாரித்தவள், எதற்காக சத்தியன் அரவையை நிறுத்த சொல்லி இருப்பான்?? என்று தெரியவில்லை. நேற்றில் இருந்து அவனின் அமைதி வேறு என்னமே செய்தது.  அவர் ஆளும் கட்சி பிரமுகர் பகைத்து கொள்ள முடியாது… சாமாளித்து   தான் ஆக வேண்டும். 
“அண்ணாச்சி நம்ம எம்எல்ஏவேட அரவை வந்துடுச்சி என்ன செய்ய செல்லுங்க?? உங்க கிட்ட கூட சலுகையா பேசிடலாம்.. அவரை பகைச்சுக்க முடியுமா?? அது தான் நிறுத்தி வைச்சு இருக்காங்க அண்ணாச்சி கோவிச்சுகாதீங்க…” என்றாள் அன்னம் . 
எம்எல்ஏ பெயரை சொன்ன பின்னும் அவர் பேசுவாரா “ இல்ல தங்கச்சி அது உடனே அனுப்புற லோடு. நம்ம மில்லுன்னா பிரச்சனை இல்ல பாரு” என்று தனிந்து பேச அன்னத்திற்கு புரிந்து விட்டது பிரச்சனை என்னவென்று.
“இப்ப முடியாது அண்ணாச்சி.. இன்னும் ஒரு வாரம் ஆகும் வேணுன்னா இருக்கட்டும் நான் பத்து நாள் கழிச்சு அனுப்புறேன்” என்றதும் “இல்லம்மா இருக்கட்டும் நான்  நம்ம எம் எஸ்ல முடிக்குறேன்” என்றவர் புறப்பட்டு விட்டார். 
அவர் போகும் வரையிலும் ஜெய் எதுவும் பேசவில்லை. அவர் சென்றதும் “என்ன பிரச்சனை??” என்றான். 
“பணம் தான். ஏற்கனவே அரைச்சதுக்கு  பணமே இப்பதான் தந்தார் திரும்பன்னா தாங்காது. அது தான் சின்னவர் நிறுத்தி வைச்சு இருப்பாரு”
“எவ்வளவு??” என ஜெய் கேட்க, நோட்டை புரடியவள் “பதினஞ்சு லட்சம்” என்றாள்.
ஜெய் அன்னத்தை  ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தான். ‘காலையில் தன்னிடம் பேச பயந்த அன்னம் இவள் இல்லை… இவள் வேறு, வியாபாரத்தின் சூட்சமங்கள் தெரிந்தவள்… யாரிடம் எப்படி பேசுவது என்பதும் தெரிந்தவள்’ என..     . 
காலையில்  வீட்டிற்கு சென்ற சத்தியன் மனைவியை திட்டி தீர்த்து விட்டான். இது வரை அவனின் இப்படி ஒரு கோபத்தை பார்த்து இல்லை என்பதால்  அவனின் இன்றைய கோபம் ரம்யாவை சற்று மிரள வைத்தது.
 
“என்ன அத்தைங்கள வச்சு ஆட்டம் காட்டுறயா?? வீட்டுல பிரச்சனை வேண்டாம் அப்படின்னு நான் நினைச்சா நீ  என்ன செஞ்சு வச்சு இருக்குற??” 
“நான் உன் கிட்ட சொல்லி தான அனுப்பி வச்சேன். நம்ம வீட்டு விசயம் இங்க பேச கூடாதுன்னு. மீறி நீ அவங்கள அனுப்பி இருக்குற.   நீ என்ன சொல்லுறது நான் என்ன கேக்குறது அப்படின்ற நினைப்பு உனக்கு”
“என் பேச்சை கேட்காதவ இனி எனக்கு தேவை இல்லை நீ இங்கயே இரு” என்றவன் அறைவிட்டு வெளியே வந்து விட்டான். ரம்யாவை பேசவே விடவில்லை. ஆனால்  முகத்தில் எதையும் காட்டிக்கொள்ள வில்லை. ஏனோ சத்தியனால் எப்பேதும் அங்கு முழுதுமாக  ஒட்ட முடியவில்லை. இப்போதும் என்ன வேலை?? என்பதை கேட்டே செய்தான்.  இதை தான் நேற்று இரவு சத்தியனிடம் ஜெய் சொன்னது.
அத்தைகள் சொத்தை பற்றி பேசியது ஜெய்க்கு பிடிக்க வில்லை.  இருந்தாலும்  தான் சொல்ல முடியாது. அப்பாவே அவர்களிடம் யோசித்து பேசும் போது தான் பேசினால் பிரச்சனை பெரிதாகும் என்பதால் சத்தியனையே பேச செய்தான். 
சத்தியன் வாங்கி வந்த பொருட்களை சரி பார்க்க அவனின் அருகில் வந்தாள் ரம்யா.  ரம்யா முகம் வாடி இருக்க சாந்தி கேட்டார் சத்தியனை பார்த்துக்கொண்டே “ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு??”
“ஒன்னும் இல்லை சித்தி காலையில நேரத்துல எழுந்தது கொஞ்சம் தலைவலி”  என்றவள் சத்தியன் முகம் பார்க்க.. “நீயே அவங்களை சமாளி” என்பது போல தான் இருந்தது அவன் முகம்.
இல்லாத தலைவலி நிஜமாகவே வந்து விட்டது அவளுக்கு. 
அவள் அமைதியாக ரம்யாவின் அப்பா கேட்டார் சத்தியனிடம். “மாப்பிள்ளை உங்க அண்ணா வந்துட்டாராமே??” என்று. ‘அவன் நேத்தே வந்துட்டான்… தகவலும் உங்களுக்கு வந்துடுச்சு… நான் வந்து நாலு மணி நேரம் ஆச்சு இப்ப தான் கேட்க தோணி இருக்கு’  மனதில் நினைத்தவன்
“ஆமா மாமா வந்துட்டான்..” என்றவன் பேச்சை முடித்து கொள்ள, சாந்தி மீண்டும் ஆரம்பித்தார் “ஆமா வந்துட்டான்… ஆனா எங்க அண்ணா தான் பாவம்!!” என்று 
“இப்ப அப்பாக்கு என்ன அத்தை??” என்றவன் அவரை பார்க்க, “பாருங்க… பாருங்க எப்படி பேசுறானு?? சின்னதுல இருந்து இவன பாக்குறோம் தான, என்னிக்காவது இவன் இப்படி பேசி இருக்கானா?? இப்ப  எப்படி எடுத்து எறிஞ்சு பேசுறான்னு..” 
விசேச வீடு ஆட்கள் அடிக்கடி வந்து போக இருக்க சத்தியன் ரம்யாவை தான் முறைத்தான் “இப்ப எதுக்கு இந்த பேச்சு இங்க” என்று 
‘இந்த சித்தி சும்மாவே இருக்காதா.. இன்னும் ஏறுன மலையே இறங்க காணோம்  இவங்கள பேச விட்டா அவ்வளவு தான்??’ நினைத்தவள் “சித்தி இப்ப எதுக்கு இந்த பேச்சு??  நாராயணன் மாமா ஃபோன் சொஞ்சாரு உங்க ஃபோன் நாட் ரீச்சபில்ன்னு வருதாம்  உங்க கிட்ட பேசனும் சொன்னாங்க பாருங்க” என்றதும் சாந்தி உள்ளே போக சத்தியனும் ஏதே வேலைக்காக சென்று விட்டான்.
மில்லில் இருந்து அன்னம் மட்டும் வர வீராசாமி தான் கேட்டார் “என்னம்மா வேலை முடிஞ்சுதா சீக்கரம் வந்துட்ட??” 
“இன்னிக்கு லோட் வேலையை அவங்களே பாத்துகிட்டாங்க மாமா.. அது தான் வேகமா முடிஞ்சது.  மத்த வேலை அவங்க பாத்துக்கிறதா சொல்லி என்னைய அனுப்பி வைச்சுட்டாங்க” என்றவள் முகத்தில் புன்னகையுடன் மாடி ஏறினாள். 
போகும் அன்னத்தை தான் வீராசாமி பார்த்து கொண்டு இருந்தார். அவர் எதிர் பார்த்தது தான்  அன்னம் இன்று நேரத்திலேயே வீட்டிற்கு வந்து விடுவாள் என்பது.  
ஜெய் மில்லில் வேலை முடித்து வீட்டிற்கு வர அங்கு அமர்ந்து இருந்தவர்களை ஜெய்க்கு தெரியவில்லை?? அவனின் “அனு” என்ற சத்தில் அன்னம் வந்தாள்….. 
சப்தபதி அடிகள்  வைத்து 
உன்னுடன் நடக்க நான் நினைத்தது 
கனவாகி போனதால்
இந்த சத்தமில்லாத நடையோ!!! 
தாளத்தில் சேராத தனி பாடல்…………………………..

Advertisement