Advertisement

                          ஓம் நமச்சிவாயா
தாளம் 5
கோவிலில் அர்ச்சனை தட்டு வாங்க போக, அன்னத்துடன் வந்த ஜெய்யை தான் பார்த்திருந்தார் கடைகாரர்
  
இங்கு தான் இவர்களின் திருமணம் நடந்தது. கோவிலுக்கு இதுவரை அவள் யாருடனும் வந்தது இல்லை.  இங்கு தான் அர்ச்சனை பொருட்கள் வாங்குவாள் என்பதால் கடைகாரர் பழக்கம் தான். 
“யாரும்மா இது… உன் வீட்டுகாரரா?? நல்லா ராசாவாட்டம் தான் இருக்காரு” என்றவர் தட்டை அவள் கைகளில் தந்தவர் அவனிடம் பூவை கொடுத்து “முதல் முறை ரெண்டு பேரா வந்து இருக்கீங்க இந்த பூவை பாப்பாவுக்கு கொடுங்க” என்றதும் அன்னத்தின் முகம் பார்த்தான்  ஜெய். 
அவளும் அவனை தான் பார்த்தால் பயமாக. 
அவள் பார்வையில் அவன் நெற்றி சுருங்க, அவர் முன் வாக்கு வாதம் வேண்டாம் என நினைத்தவன் பூவை வாங்கி அன்னதின் கைகளில் கொடுக்க அப்போதும் பதட்டம் தான் அன்னதிற்கு.
ஜெய்யின் முகம் சற்று மாற இன்னும் அதிகமா பயம் பிடித்து கொண்டது அன்னத்திற்கு. இப்போது அவள் உடல் நடுங்குவது அவனுக்கே தெரிய சட்டென முகத்தை இயல்பாக்கியவன் அர்ச்சனை தட்டை வாங்கும் சாக்கில் அவள் கைகளை பிடித்துக்கொண்டான். 
அவளின் நடுக்கம் நிற்காமல் இருக்க காருக்கே அழைத்து வந்து விட்டான்  ஜெய். கார் கதவை திறந்தவன் தண்ணீரை  தர அதை வாங்கமல் அவனை பார்த்து இருந்தாள் அன்னம். 
“அனு என் பொருமைக்கும் ஒரு எல்லைதான் இருக்கு. நான் என்ன பண்ணுனேன்னு என்னைய பாத்து இப்படி நடுங்குற??” என்றான் பற்கள் கடித்து. 
அன்னதிற்கு பயம் எல்லாம் அவனை பார்த்து இல்லை அவன் கோபத்தை நினைத்துதான். திருமணம் முடிந்ததும் விட்டுச்சென்றவன் இப்போது தான் வந்து இருக்கிறான் எனும் போது வெளி ஆட்கள் அவனுடன் தன்னை இணைத்து பேசுவது அவனுக்கு பிடிக்குமா?? திருமணம் ஆகி வந்த புது பெண் நிலை தான் அவளது நிலையும். 
அதுவும் அந்த பெரியவர் பூவை கொடுத்து அவளிடம் தர சொல்லியது தான் அவளின் பயத்துக்கு காரணம். எங்கே அவரிடம் சண்டைக்கு சென்று விடுவானே என்ற பதட்டம் தான் காரணம். அதை எப்படி அவனிடம் சொல்ல… என தெரியாமல் தான் அவள் ஜெய்யை பார்த்து. 
அந்த நேரத்தில் அன்னம் மறந்தது நேற்று இரவு “இது நம்ம ரூம், நான் உன் புருசன்” என்று ஜெய் சொன்னதையும், இன்று அவனே தான் தன்னை அழைத்து கொண்டு வந்து இருக்கிறான் என்பதையும் தான். 
அன்னம் இன்னும் தன்னையே பார்த்து இருப்பதும் சுற்றி இருப்பவர்கள் அவர்களை வேடிக்கையாக பார்ப்பதும் அவனுக்கு  எரிச்சல் தர இப்போது “அனு” என்றான் அழுத்தமாக. அவனின் குரலில் விலுக்கென நிமிர்ந்தவள் முன் தண்ணீரை நீட்ட எதுவும் பேசாமல் அதை வாங்கி கொண்டாள். 
“தண்ணி விட்டு முகம் அலம்பு” என்றவன் அவள் துடைக்க துண்டினை தர அதை வாங்கிய படியே “சாரி” என்றாள். இந்த “சாரி” எதுக்கு?? என்று புரியாமல்  அன்னத்தை பார்க்க… 
“இல்ல அந்த பெரியவர் ரொம்ப நல்லவர்.  அவர் உங்க கிட்ட கொடுத்து பூ கொடுக்க சொன்னது தப்பு தான் பிளீஸ்  எனக்காக அவர மன்னிச்சுடுங்க…” என்று சொன்னவளை ஐய்யோ என்று பார்த்து இருந்தான் ஜெய்.. 
அவள் தலையில் நங்கென குட்டி ‘எவனாவது பொண்டாட்டிக்கு பூ கொடுக்க சொன்ன தப்பா நினைப்பாங்களா??’ கேட்க நினைத்தும்  அவளின்  இந்த பயம் தான் அவனுக்கு ஏதோ செய்தது.  
அன்னத்திடம் பேசும் சமயம் இல்லை என்று உணர்ந்தவன் “சரி வா” என்று கோயிலுக்குள் அழைத்து சென்றான். ஜெய்க்கு தெய்வ பக்தி உண்டா என்றால் அது காலையில் எழுந்ததும் நண்பர்களுக்கு சொல்லும் “குட்மார்னிங்” போல தான். தன் முயற்சி மட்டுமே தன்னை உயர்த்தும் என்பதில் அதிக நம்பிக்கை அதனால் வீணாக கடவுளை அவன் தொந்தரவு செய்வதில்லை.
இப்போதும் அவன் கடவுளை தொந்தரவு செய்ய வில்லை. கண்மூடி தெய்வ சன்னிதி முன் நின்ற இருவருக்கும் வேண்டுதல் ஒன்று தான், ‘தான் விட்டு சென்ற, தன் கை விட்டு சென்ற வாழ்க்கையை இனியாவது சரியாக தொடர வேண்டும்’ என்று. 
அடுத்து அவர்கள் சென்றது மில்லுக்கு தான். ஜெய் காரை விட்டு இறங்கியதும் ஆழ மூச்சு இழுத்து  விட்டான். உடம்பில் புது ரத்தம் பாய்வது போல் இருந்தது. பிறந்ததில் இருந்து கல்லூரிக்கு போகும் முன் வரை இது தான் அவன் இடம்.
அந்த சுற்று வட்டாரத்திலேயே இவர்களின் மில் தான் பெரியது. எப்போதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். முப்போகம் விளையும் பூமி என்பதால் மட்டும் இல்லை அவர்களின் வேலையும் அத்தனை சுத்தம்.
தானியம் அடுக்கவென தனியாக குடவுன் இருந்தாலும் அது சற்று சிறியது தான்.  இப்போது அதன் பக்கதிலேயே புதிதாக பெரியதாக  குடவுன் போட பட்டு இருந்தது. 
அதை போல மில்லை சுற்றி காலியாக இருந்த நிலத்தை சீர் செய்து  பழைய நெல் வகைகளை நடவு செய்தும் இருந்தார்கள். 
சுற்றி பார்த்தவன் “செகன்ட் யூனிட் ஆரம்பிச்சு இருக்கீங்களா??” என்றான் அன்னத்திடம்.
“ம்ம் ஆமா… முதல்ல மத்தவங்களுக்கான அரவை மட்டும் தான நடந்திச்சு இப்ப நமக்கே தனிய தேவை படுது. அதுதான் முதல் யூனிட்டை எப்பவும் போல யூஸ் பண்ணிட்டு இந்த செகன்ட் யூனிட்டை  நமக்குன்னு யூஸ் பண்ண தனியா செட் செஞ்சேன்” 
“நம்ம நிலத்துக்கு பக்கதுல இருக்கற எம்பது ஏக்கர் நிலம் தான் இப்ப வருது. நமக்கும் பக்கம் பாத்துக்கவும் சவுகரியமா இருக்கும் அது தான் பேசலாமான்னு மாமா பாக்குறாரு…” என்று அவன் கேட்காததற்கும் சேர்த்தே சொன்னால் வீட்டில் நடக்கும் பிரச்சனை இதுக்கு தான் என.. 
அதை புரிந்தவன் போல எதுவும் பதில் சொல்லாமல் மில்லை பார்த்த படியே நடந்தவன் “நீ போ… நான் பாத்துட்டு வர்றேன்’ என்றவனை “நீங்க தனியாவ போவீங்க!!  உங்க கூட யாரையாவது அனுப்பவா…??” என்றவள் பேச்சு அவன் பார்வையில் அந்தரத்தில் நின்றது.
“நீ இந்த நாலு வருசமா தான் இதை பாக்குற.. நான் பொறந்ததே இங்க தான்” என்று வாய் சொல்ல வில்லை என்றாலும் அவனின் பார்வைக்கு அது தான் அர்த்தம் புரிந்தவள் அமைதியாக உள்ளே போக அவன் முதல் யூனிட்டுக்கு சென்றான். 
இரவே லோட் வந்து இறங்கிவிடும் என்பதால் வெளியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இருந்த சிலரும் புதியவர்கள் என்பதால் யாருக்கும் அவனை தெரியவில்லை….
“ஏண்டா இங்க என்ன பிறாக்கு பாக்குறீங்க… மிசின்ல இருந்து நெல்லு சிந்துது பாரு…” என்றவரை  பின்னால் இருந்து பார்த்து இருந்தான் ஜெய். அவர் அந்த மில்லின் கணக்கு பிள்ளை நவநீதம். 
“என்ன மாமா சுகமா??” என்ற கேள்வியில் திரும்பியவர் ஜெய்யை பார்த்து “டேய் மாப்பிள்ளை வந்துட்டையா!! என்னையா இந்தனை வருசமா எங்க இருந்த… ஒரு தகவல் கூட தராமா இருந்துட்டியேப்பா… உன்னைய பாக்காமா அந்த மனுசன் தான் உள்ளுக்குள்ளையே உடைஞ்சு போயிட்டாரு..” என்று அவனை தலை முதல் பாதம் பார்த்தவர் சொல்ல, அதற்குள் அனைவரும் கூடி விட்டனர். 
வந்தவர்கள் அவனிடம் நலம் விசாரிக்க, சிரித்த முகமாகவே அனைவருக்கும் பதில் தந்தான். அவனின் முகத்தை பார்த்து நவநீததிற்கு தோன்றியது  ‘அப்பன கதற விடு.. வெளியில சிரிச்சு பேசு’ என்பது தான். 
அனைவரிடமும் பேசியவன் “நான் இங்க தான் இருப்பேன். இப்ப போயி நீங்க வேலைய பாருங்க… சாயங்காலம் சாவகாசமா பேசலாம்” என்று அனைவரையும் அனுப்பியவன் தானும்  வேலையில் அவர்களுடன் இணைந்து கொண்டான். 
அவன் அப்படி தான். வேலை ஆட்களிடம் எப்பேதும் முகம் காட்ட மாட்டான். பேச்சு இருந்தாலும் காரியம் முக்கியம் என்பவன். அவன் இருக்கும் இடத்தில் பேச்சுக்கும் வேலைக்கும் பஞ்சம் இருக்காது. 
ஆட்கள் இல்லாத சில சமயம் மூட்டை தூக்க வேண்டும் என்பதால் ஜெய் எப்போதும் இங்கு மாற்று துணிகளை வைத்தே இருப்பான். அதையே சத்தியனும் செய்ய ஜெய் வேலை செய்ய தோதாக உடை மாற்றியவன்..,
“மாமா என்னைய மனசுல திட்டுனது போதும்  வந்து ஒரு கை கொடுங்க” என்றவனை நவநீதம் “ஏண்டா… இன்னுமா மாறல!! உன்ன வைச்சுக்கிட்டு மனசுல கூட திட்டமுடியலடா??” என்று சடைத்தவர் அவன் சொன்ன படி   மூட்டையை தூக்க கை கொடுத்தார்.

Advertisement