Advertisement

வீராசாமி கையில் பேப்பருடன் ஹாலில் அமர்ந்து இருக்க சத்தியன் தான் வந்தான் பெட்டியுடன். “என்ன சத்தியா கிளம்பிட்டியா… என்று கேட்க “ம்ம் கிளம்பிட்டோன் பா… நீங்க நாளைக்கு மறு நாள் வாங்க… இப்ப இருந்து அங்க வந்து என்ன செய்ய??” என்னும் போதே தன் ஜாக்கிங்கை முடித்து வந்தான் ஜெய்… 
“என்னடா இந்த நேரத்தில கிளம்பி நிக்குற??” என்றவன் கேள்விக்கு மங்களம் தான் பதில் தந்தார் “அது ரம்யா அண்ணனுக்கு கல்யாணம் ஜெய். அவங்க வீட்டு மாப்பிள்ளையா இவன் முன்னாடி போய் இருந்தா தானா நல்லா இருக்கும். அது தான் ரெண்டு நாளை முன்னாடியே போகட்டும்”  என்றார்… 
“அப்ப மில்லை” என்று ஜெய் முடிக்கும் முன்னமே  “அதுக்கு என் மருமக இருக்கா.. அதை பத்தி மத்தவங்களுக்கு என்ன கவலை..” என்ற வீராசாமியின் பதிலுக்கு வேகமாக கோபத்தில் முகம் சிவக்க ஜெய் அவர் முன் வர, மங்களம்தான் இருவரையும் சமாதானம் செய்ய வேண்டியாதாகியது. 
“என்னங்க இப்ப தான் வந்தான்… அதுகுள்ள ஆரம்பிக்கனுமா… ஜெய் நீ போ.. குளிச்சுட்டு வா” என்று அவனிடம் சொன்னவர், “டேய் இன்னும் நீ கிளம்பலையா??” என்று சத்தியனை பார்க்க அவன் “நான் வர்றேன் ம்மா…” என்று கிளம்பிவிட்டான்.
ஜெய் அங்கேயே நின்று இருக்க, “என்ன ஜெய் உங்க அப்பாவ பத்தி தெரியாதா??” மங்களம் கேட்க, “எனக்கு தெரியறது இருக்கட்டும்” அன்னத்தை கை நீட்டியவன் “இங்க இவ தினமும் சாப்பிடாம தூங்குறது இவருக்கு தெரியுமா??” கேட்டவன் மாடிக்கு சென்று விட்டான்.
 
‘இப்ப என்ன சொல்ல வர்றேன்னு கூட கேக்காம, அது என்ன என் மருமக பாத்துப்பா… ஏன் நான் பாத்தா மில்லு ஓடாதா…. இருக்கட்டும் எத்தனை நாளைக்கு என்னோட முடிவ அவரே எடுப்பார்னு பாக்குறேன்’ நினைத்தவன், கதவை ஓங்கி அடித்து சாத்த அன்னம் தான் மிரண்டு போனால் கதவின் சத்ததில்.
வீராசாமியும் மங்களமும் அன்னத்தை பார்க்க “அது கொஞ்ச நாளா சாப்பிட்டா வாந்தி வருது மாமா.. அது தான்…” என்றவள் தலை குனிந்து நிற்க, பேச வந்த மங்களத்தை பேசவிடாமல் தடுத்தவர் “போம்மா… அவனுக்கு சாப்பிட எடுத்துவை” என்றவர் தயாராக அறைக்கு சென்றர்.
உள்ளுக்குள்ளேயே கோபத்தை ஜெய் கட்டுபடுத்தியவன்,  குளித்து முடித்து கீழே வர அவனுக்கு சாப்பிட தாயாராக அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள் அன்னம். 
நேற்று போலவே இன்றும் எளிய காட்டன் புடவையில் அழாகாக இருந்தவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ‘டேய் எத்தனை பொண்ணுங்களை விதவிதமா போட்டே எடுத்து இருக்குற.. என்னமோ பாக்காததை பாக்குறத போல பாக்குற..??’ மனதின் கேள்விக்கு ‘அவங்க எல்லாம் எனக்கு உடமை பட்டவங்க இல்லை. அதுவும் இல்லாம அது என் தொழில். இவ என் பொண்டாட்டி’ என்றவனுக்கு ‘இது எப்ப இருந்து!!’ ஆச்சரியமாக கேட்டது மனது. 
அதன் தலையில் தட்டி அடக்கியவன் “அனு…  ரெடியான சொல்லு நானும் உன் கூட வர்றேன்” என்றவன் வார்த்தையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த வீராசாமி அவனை நிமிர்ந்து பார்த்தார்.
மங்களம் எதுவும் சொல்லாமல் “அன்னம் போ வேகமா ரெடியாகிட்டு வா..” என்று சொல்ல, அன்னம் தான் வீராசாமியின் முகத்தை பார்த்தாள். 
“அன்னம் அவன் தான் கிளம்புன்னு சொல்லுறான்ல நீ எதுக்கு அவர் முகத்தை பாக்குற” என்றார் மங்களம். ஜெய் அன்னத்தை கூப்பிட்டதும் மங்களத்திற்கு தான் சந்தோசம் பிடிபட வில்லை. நேற்றில் இருந்து அவன் முகத்தையே பார்த்து இருந்தவருக்கு இரவு உறக்கம் கூட வரவில்லை.
காலையில் அவன் அறைக்கு போகும் போது அன்னம் இல்லை. ஆனால்… இரவு அவள் அங்கு தானே இருந்தாள். மகன் கோபமாகி சண்டையிடுவான் என்று நினைத்து இருக்க அவன் அறையில் இருந்து எந்த சத்தமும் வராதது அவருக்கு நிம்மதி என்றாலும் காலையில் அமைதியான அன்னத்தின் முகத்தை பார்த்தும் அவரால் என்ன நடந்து இருக்கும் என்ற முடிவுக்கு வர முடியவில்லை.
அவள் எப்போதும் அமைதி தான். அதுவும் நேற்று ஜெய் வந்ததில் இருந்து அவள் பேசும் அந்த இரண்டு வார்த்தைக்கும் பஞ்சம் வந்து விட்டது. 
அவளிடம் தான் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று ஜெய்யை பார்த்தால் அவன் அதற்கும் மேல். எப்போது எழுந்தான் ஜாக்கிங் சென்றான் என்பதே தெரியாது!!!??? குழப்பத்தில் நின்று இருந்தவருக்கு காலையிலேயே வீராசாமி மகனின் கோபத்தை தூண்டிவிட்டு இருந்தார். 
இப்போது ஜெய் வந்ததும் அன்னத்தை மில்லுக்கு கிளம்ப சொல்ல அவரின் குழப்ப மன நிலைக்கு ஜெய்யின் இந்த பேச்சே போதுமானாதாக இருந்தது.
அவர் ஒன்றும் அன்னத்தின் எதிரி அல்லவே.. மகன் இந்த திருமணத்தால் சென்று விட்டான் என்ற வருத்தம் அவ்வளவே. அதுவும் சில நாட்களுக்கு தான். 
அன்னத்தின் பொறுமையை பார்த்து கணவன் தன் குடும்பத்திற்கு தகுந்த பெண்ணை தான் மகனுக்கு கட்டி உள்ளார் என்ற நிம்மதி தான் அவருக்கு. 
ஜெய் வந்ததும் அன்னத்தை பற்றி கேட்காதது அவருக்கு சற்று வருத்தம் தான். ஆனாலும் அதை  ஜெய்யிடம் சொல்ல முடியாதே!!! அன்னத்தை பற்றிய அவனின் எண்ணம் என்ன?? என்பது தெரியாமல் பேச்சை ஆரம்பிக்க முடியாது…. வேதாளம் முருங்கையை தேடிய கதையாக தான் முடியும். அதனால், ஜெய்யே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று இருந்தார்…
இருவரும் தயாராகி வர மங்களம்  ஜெய்யின் முகத்தை பார்க்க “என்னம்மா..” என்றான். மனதில் பயம் இருந்தாலும் வெளியில் காட்டாதவரக “இல்லப்பா… முதல் முறையா ஒன்னா போறீங்க போற வழியில இருக்குற  கோயிலுக்கு போயிட்டு போங்க” என்றதும் ஜெய் “சரி” என தலை ஆட்ட அன்னத்திற்கு கனவு காண்பது போல் இருந்தது. 
இன்று காலை கண்விழித்ததே ஜெய்யின் முகத்தில் தான். கோபமாய் சென்று விட்டான் என்று இருந்தவள், அவள் அருகில் அவன் உறங்கி இருந்ததே அவளுக்கு நம்ப முடியாமல் இருக்கும் போது இப்போது மங்களம் சொன்னதற்கு சண்டையிடாமல் “சரி” என்றது எல்லாம் கனவு காண்பது போல தான் இருந்தது.
வீட்டில் இருந்த அனைவரின் பேச்சு படி அவன் கோபக்காரன்.. யாருக்கும் அடங்கதாவன்…  அவனாக ஒரு செயலை செய்தால் தான் உண்டு பிடிக்க வில்லை என்றால் யார் சொன்னாலும் கேட்க மாட்டான்.  இது மட்டுமே ஜெய்யை பற்றிய அன்னத்தின் மனதின் பிம்பம். 
ஆனால், அவன் வந்ததில் இருந்து தன்னிடம் அவன் கோபத்தையோ இல்லை வேண்டாத தன்மையையோ அவள் பார்க்கவே இல்லை. நேற்று இரவு கோபித்து சென்றவன் காலையில் அவள் அருகில். காலையில் கோபமாக சென்றவன் சில நிமிடங்களில் நிதானத்திற்கு வந்துவிட்டான் அதுதான் அவளின் குழப்பதிற்கு காரணம். 
சிந்தனையுடனே காரின் அருகில் சென்றவள், வழக்கமாக டிரைவிங் சீட்டில் அமர போக ஜெய்யின் கைகள் அவள் முன் நீண்டது. அன்னம் அவனை பார்க்க “சாவிய கொடு” என்றான்.
இன்னும் சிந்தனையில் இருந்து மீளாதவள் அவனை முழித்து பார்க்க, ‘கண்ணை முழிச்சு பாத்தே என்ன ஒரு வழி செய்யுறா!!!’ நினைத்தவன்… 
“அனு சாவிய குடு… நான் டிரைவ் செய்யுறேன்” என்றவன் கைகள் தன்னால் அவள் கைகளில் இருந்து சாவியை எடுத்து கொண்டது கை படாமல்.
அன்னம் காரின் பின் கதவை திறக்க போக “ஓய் நான் என்ன உன் டிரைவரா???” என்றான் சத்தமாக ஜெய்.
இப்போது நிஜமாகவே அன்னத்திற்கு மயக்கம் வரும் போல் இருந்தது.  காலையில் இருந்து அவளும் எத்தனை அதிர்ச்சியை தான் தாங்கி கொள்வாள். 
“நின்னுட்டே கனவு கண்டது போதும் முன்னாடி வா..” என்றவன் காரை எடுக்க அது அவளுக்கு சுக பயணம் தான். இதுவரை தனக்கானது எல்லாம் அவளே தான் செய்தாக வேண்டும். 
ஆனால்…. இன்று ஜெய் காரை ஓட்ட  அவளிடம் ஒரு ஆசுவாச பெரு மூச்சு.
“என்ன என் டிரைவிங் பரவாயில்லையா…” என்ற அவனின் இலகுவான கேள்வியில் இவள் தான் திரு திருவென முழித்தாள்… 
“இல்ல காரை நான் ஓட்ட ஆரம்பிச்சதும் பெரு மூச்சு விட்டியே… அது தான் கேட்டேன் நான் நல்லா டிரைவ் செய்றேனான்னு!!” என்று திரும்பி அவள் முகம் பார்த்து மெல்லியாத சிரிக்க… அன்னத்திக்கு மூச்சு முட்டிவிட்டது அவன் சிரிப்பை பார்த்து ‘இவரு இவ்வளவு அழகா சிரிப்பாரா!!!’ என்று. 
அன்னம் அவனையே பார்த்து இருக்க, அவள் முன் செடக்கிட்டவன் “என்ன நான் பேசுனா பதில் சொல்ல கூடாதுன்னு சாமிகிட்ட வேண்டுதல் வைச்சு இருக்குறியா??” என கேட்க…
“இல்லை” என தலை அசைத்தால் அன்னம். “அப்ப நா கேட்டதுக்கு பதில் சொல்லு.. இந்த தலை அசைக்குறது கண்ணால பேசுறது எல்லாம் எனக்கு புரியாது.. என்ன நான் சொன்னது புரிஞ்சுதா..” என்றான்.
அதற்கும் அன்னம் தலையை ஆட்ட, அவளை முறைத்தவன் காரை நிறுத்திவிட்டான். 
கார் நிற்கவும்.. அவனை அன்னம் பார்க்க “நீ வாய் தொறந்து பேசம வண்டி நகராது..” என்றவன் அவள் முகம் பார்க்க இன்னும் அதே பாவனை தான் அவள் முகத்தில்.
“நான் கேமிரா புடிக்குறவன் தான். அதுக்காக உன் நயன பாசை புரியும் அப்படினு நீ நினைச்சா அது தப்பு. எனக்கு வாய் திறந்து சொன்னா தான் புரிஞ்சிக்க முடியும்..” என்றதும் தான் “சரி” என்றால் அன்னம் வாய் திறந்து.
‘அப்பா…. இந்த ஒரு வார்த்தை பேச வைக்கவே என்ன இத்தனை வார்த்தை பேச வைக்குறாளே??? அப்ப நாளு வார்த்தை பேச நான் நர்த்தனம் ஆடனுமா??” என்ற அவனின் நினைவுக்கு அவனின் மனமே கை கொட்டி சிரித்தது. 
‘நர்த்தனம் மட்டும் இல்லை நடு கடல்ல ஆட சொன்ன கூட நீ ஆடி தான் ஆகனும்’ என்று………….
“ஒரு வார்த்தை இல்லை 
ஆயிரம் வார்த்தைகள் பேசுவேன்
நீ என் மனதின் வார்த்தைகளை புரிந்து கொண்டால்….”
தாளத்தில் சேராத தனி பாடல்…..
   
                                             
                                       
      

Advertisement