Advertisement

                             ஓம் நமச்சிவாய
தாளம் 4
மணி பத்து என்று கடிகாரம் சத்தம் போட, அன்னம் வாசலுக்கு வந்தாள்.  ஜெய் இன்னும் வரவில்லை. வாசலுக்கும் கூடத்திற்கும் நடந்த படி இருந்தவள் கால் வலி எடுக்க வாசல் படியில் அமர்ந்தாள்.
ஜெய்யை பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை அவளால். ஆரம்பித்தால் தானே முடிவு தெரிய… இங்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.
வந்தவனை பற்றி இதுவரை வீட்டில் எந்த பேச்சும் இல்லை. மங்களமோ இல்லை வீராசாமியோ எதுவும் அவளிடம் கேட்கவில்லை சொல்லவும் இல்லை.  
ஒருமுறை அழைத்தவனும்  “வர லேட் ஆகும்” என்று தகவல் சொல்லி சென்றுவிட்டான். பாவம் அவளுக்கு தெரியவில்லை, கணவன் போகுமிடம் மனைவிக்கு தகவலாக மட்டுமே சொல்லபடும் என்பதும் அது  வாழ்க்கையின் முதல் படி என்பதும். 
அது தகவல் என்பதை தண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பது அவர்கள் வாழ்க்கை துவங்கும் போது தான்  என்பதும் புரியவில்லை. 
அது அவளின் தவறு அல்ல… தாய்வீட்டில் இருக்கும் வரை அவளின் அப்பா வெளியில் சென்று அவள் பார்த்து இல்லை. அவர் உடல் நிலை சரியில்லாததால் தாய் தந்தை இடையே சிரிப்பு பேச்சு எல்லாம் அபரூபம் தான். இங்கு வந்தும் வேலை அது முடிந்ததும் படிப்பு என்று தன்னை சுருக்கி கொண்டவள் மங்களம் வீராசாமியின் பேச்சுக்களை கேட்டதே இல்லை. சத்தியன் திருமணம் முடிந்தாவது தெரியும் என்றால், சாந்தி  ரம்யாவிடம் அன்னத்தின் முன் கணவனுடன் பேச்சு வார்த்தை வேண்டாம் கண்படும் என்றது வேறு அவளுக்கு அரிச்சுவடி கூட தெரியாமல் போய்விட்டது
அதனால் கணவன் மனைவி உறவில் வரும் கோபங்கள், செல்ல சீண்டல், உரசல்கள், சந்தோசங்கள் என்று எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டது இன்று ஜெய் அவளிடம் கூறி சென்றது கூட தனக்காக தான் என்று புரியவில்லை.
வாசலில் கேட்ட பைக் சத்ததில் நிமிர்ந்து பார்த்தாள். ஜெய்யும் சத்தியனும் சிரித்தபடி வர கேட்டை திறந்தாள் அன்னம். 
ஜெய் வண்டியை நிறுத்தி உள்ளே வர சத்தியன் அறைக்கு சென்று விட்டான். சத்தியன் அறைக்கு போவதை பார்த்தவள்,  டைனிங் டேபிளில் ஜெய்க்கு மட்டும் தட்டை வைத்து கொண்டு இருந்தாள் அன்னம்.  ஜெய் வந்தவன் பாத்திரத்தில் சாப்பாட்டை தேட   சூடாக இட்லியை வைத்தாள் அவன் தட்டில். 
ஜெய் “சாப்பாடு இல்லையா??” என்றவன் அவளை பார்க்க, தலை குனித்த படியே “லேட் ஆகிடுச்சி சாதம் வேண்டாம் இட்லி வைச்சுங்குங்க” என்றாள். 
ஜெய் சாப்பிட்டு முடிக்க இடத்தை சுத்தம் செய்தவளை “நீ சாப்பிடலையா…??” என்ற ஜெய்யின் கேள்விக்கு “இல்லை” என்ற தலை அசைப்பு மட்டுமே … 
“என்ன சாப்பிடலையா??” என்று அவன் மீண்டும் கேட்க மெதுவாக “நைட் சாப்பிடுறது இல்லை” என்றாள் அன்னம்.
என்ன என்று சொல்லுவாள்?? முதலில் இரவு உணவையும் சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தால் அன்னம்.  இப்பேது தான் முடியவில்லை.  இரவில் உணவு சாப்பிட்டதும் வாந்தி வர நிறுத்திவிட்டாள்.
வீட்டில் இருக்கும் அனைவரும் நேரத்திலேயோ சாப்பிட்டு விடுவதால் இவள் சாப்பிடாமல் இருப்பது யருக்கும் தெரியாது.
“கேட்டேன்  அனு ஏன் சாப்பிடுறது இல்லை??” என்று ஜெய். அவன் அவளை தள்ளி நிறுத்தவில்லை. வீட்டில் அனைவரும் சாப்பிட்டு  இருக்க…  இவள் பட்டினியாய்!! அத்தனை ஆத்திரம் அவனுக்கு.’நான் இல்லையின்னா இவ என்ன பண்ணுறான்னு பாக்க கூட மாட்டாங்களா இவங்க??’ என்ற நினைப்பு தான் “நீ என்ன பண்ணுற அப்படின்னு கூட யாரும் கவனிக்குறது இல்லையா??” இப்போது அவன் குரலில் இருந்தது என்ன?? என புரியவில்லை அன்னத்திற்கு..
முதன் முதலாக அவன் அழைத்த “அனு” என்ற அவளின் பெயர் அவன் கேள்வியையும்  அவன் குரல் மாற்றத்தையும் மறக்க வைத்து இருந்தது. 
நிமிர்ந்து அவனை பார்த்தவள் “என் பேர் உங்களுக்கு தெரியுமா!!” என்ற அன்னத்தின் கேள்விக்கு அவளை பார்ப்பது ஜெய்யின் முறை ஆகிற்று. எப்படி சொல்லுவான் இதற்கு ‘இப்போது உன்னை கேள்வி கேட்க்கும் எனக்கு உன் முகத்தையும் பெயரையும் தவிர வேறு தெரியாது??’ என்று…
அன்னம் அவனையே பார்த்து இருக்க பேசாமல் அவளை பார்த்தவன் “உக்காரு” என்று என்று சேரில் அமர சொன்னவன் தட்டில் இட்லி கொண்டு வந்து வைத்தான்.
“இல்ல வேண்டாம் எனக்கு செரிக்காது வாந்தி வரும்” என்றதும் பாலை கொண்டு வந்து தர அதை பார்த்து முழித்த படி நின்றாள் அன்னம். 
“இப்ப என்ன?? இதை குடிச்சாலும் வாந்தி வருமா??” என்ற கேள்விக்கு இல்லை பிடிக்காது என்றாள் அன்னம். 
“சாப்பிட்டா வாந்தி வரும்.. பால் பிடிக்காது அப்பறம் எப்படி நீ இப்படி வளந்து நிக்குற??” என்றவன் “பிடிக்காட்டியும் குடி” என்றவன் பிடிவாத பேச்சில் வேறு வழி இல்லாமல் குடித்து முடித்தாள் அன்னம்.
அவள் குடித்தை பார்த்த பின் தான் அவன் அறைக்கு சென்றது. பாத்திரங்களை சுத்தபடுத்திய  படி இருந்த அன்னத்தின்  நினைவு முழுதும் இந்த அரை மணி நேர பேச்சுக்களே. ‘தன்னை உரிமையாக அழைத்ததை எப்படி எடுப்பது என??’ 
கிட்சனை ஒழுங்கு படுத்தியவள் அறைக்கு போக, அங்கு நைட்பேண்ட், டீசர்டில் லேப்டாப் சகிதம் கட்டிலின் மேல் இருந்தான் ஜெய். 
வாசலில் நின்று இருந்தவளுக்கு ‘உள்ளே போவதா… வேண்டாமா..’ என்ற எண்ணம் தான். ‘உள்ளே போனால் திட்டுவாரா??’ என்று அவனை பார்த்து நின்று இருக்க “என்ன அங்க நின்னு பாக்குற… உள்ள வா இல்ல வெளிய போ…” என்றான் ஜெய். 
அவ்வளவு தான் உள்ளே வந்து விட்டாள். அன்னம் இப்போது ‘எங்கே தூங்க??’ இது அடுத்த கேள்வி. அது என்னமோ… அவனை போல் சகஜமாக பேச வரவில்லை அவளுக்கு. மீண்டும் அவனையே பார்த்து இருக்க,
“எனக்கு வேலை இருக்கு நீ தூங்கு” என்றவன் கட்டிலில் சிறிது நகர்ந்து இடம் கொடுக்க அன்னத்திற்கு தான் பக்கென்று இருந்தது. 
‘என்னது இவர் கூட ஒரே கட்டிலுலயா….!!’ என்று அவனை பார்த்து முழித்து நிற்க…. 
ஜெய் அவளை பார்த்தவன்  “நீ சின்ன பொண்ணு இல்ல அனு… புருசன்னா யாருன்னு கேட்க… இது நம்ம வீடு, இது நம்ம ரூம், இது நம்ம கட்டில்… நீ பயம் இல்லாம தூங்கு” என்றவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். 
அன்னம் வந்தவள் தலையணையை எடுத்து கீழே போட்டு போர்வையை அதன் மீது விரித்தவள் தூங்க போக ஜெய் அவளை கேள்வியாக பார்த்தான்  ‘என்ன இது??’ என்று
“எனக்கு கட்டில்ல தூங்கி பழக்கம் இல்லை எப்பவும் கீழ தான்” என்றவளை “இனி பழகிக்க எனக்கு கீழ தூங்கி பழக்கம் இல்லை” என்றவன்  கீழே இருந்த போர்வையை கட்டிலில் போட்டவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
அன்னத்திற்கு தான் ஐய்யோ என்று ஆனது. “கோபம் வந்துடுச்சா என்ன… வெளிய போயிட்டாரு” என்றவள் என்ன செய்ய என தெரியமல்…. கட்டிலில் அமர அது அவளை சுகமாய் தனக்குள் இழுத்து கொண்டது.
எப்போதும் அவள் தூங்கும் நேரம் தான் அது. தூக்கம் தன் கடமையை செய்ய விழுந்த உடனேயே தூங்கி போனாள் அன்னம். 
ஜெய் வெளியில் சென்றவன் நேராக சென்றது மொட்டை மாடிக்கு தான். தான் “கட்டிலில் படு” என்று சொன்னதும் அன்னம் அவனை பார்த்து அவனால் தாங்கி கொள்ளவே முடியாத பார்வை… 
அவள் கண்களில் இருந்தது என்ன?? இதுவரை தொழில் முறையில் கூட அதிகமாக பெண்களுடன் பழக்கம் வைத்து கொள்ளாதவன் அவர்களை எட்டி நிறுத்துபவனை அன்னத்தின் பார்வை கோபம் வரலைத்து தான் பார்த்து. 
நட்பாக பெண்களிடம் பேசியதற்கே திருமணம் முடித்தவர் வீராசாமி. மற்றவர்களுக்கு காரணம் சொல்லவில்லை என்றாலும் தகப்பனின் குணம் முழுவதும் அறிந்தவனுக்கு எதற்கு இந்த திருமணம் என்று கூடவா புரியாது….
அந்த கசப்போ… என்னமோ… அதன் பிறகு பெண்கள் என்றாலே அவனுக்கு தூரம் தான். தன்னால் அவர்களுக்கு பிரச்சனை என்பதைவிட அவர்களால் தனக்கு வம்புகள் வேண்டாம் என்றே அவன்  இருப்பது.
“என்ன தெரியும் என்ன பத்தி அவளுக்கு??? படு சொன்ன என்ன அப்படி பாக்குறா… நான் என்ன அவளை முழுங்கவா போறேன்..”  என்றவனுக்கு ‘அதை தாண்டா நானும் கேக்குறேன்… என்ன தெரியும் உன்ன பத்தி?? அவளுக்கு தாலி கட்டுன கையோட அவள விட்டு வந்துட்ட…’ 
‘அவ இருந்தாளா… போனாளா.. எதுவும் தெரியாது… இன்னிக்கு காலையில வந்துட்டு வந்து படுன்னா அவ என்ன நினைப்பான்னு கூட புரியாத ஆளா நீ…’ என்ற அவனின் மனதின் கேள்விக்கு   பதில் இல்லை.
சென்றவாரம் வீராசாமியிடம் இருந்து வந்த விவாக ரத்து நேட்டீஸ்சில் இருந்து என்ன செய்ய?? என புரியாமல் இருந்தவன்…. இன்று காலை அன்னதை பார்க்கும் வரையிலும் எந்த முடிவுக்கும் வர முடியாமல் தான் இருந்தான்.
திருமணம் முடிந்து அவளை விட்டு சென்றதில் இருந்து அவள் பார்த்த அந்த  நொடி பார்வை மட்டுமே அவன் நினைவில் இருந்தது. ஏனோ அதை அழிக்க அவனுக்கு மனம் வந்ததே இல்லை. 
திருமணம் முடிந்து கோபத்தில் வீட்டை விட்டு சென்னை வந்தவனுக்கு, அவனுக்கு முன்னமே மும்பையில் இருந்து பிரபல ஒளிப்பதிவாளரிடம் சேர அனுமதி கடிதம் வந்து இருந்தது. அது அவன்  எடுத்த குறும் படத்துக்காக அவனுக்கு வழங்கபட்ட வாய்ப்பு.
தன் கனவினை நிறைவேற்ற வந்தவன் அதிலேயே மூழ்கியும் விட, அவனுக்கான வாய்ப்புகளும் அவனை தேடி வர அதை பிடித்து கொண்டான் கெட்டியாக.  
தான் செல்லும் இடம் பற்றி எந்த தகவலும் தன் தந்தைக்கு சொல்ல கூடாது என்று தன் நண்பர்களிடம் சொல்லி இருந்ததால் அவர்களும் அவனை பற்றிய எந்த விபரத்தையும் வீராசாமிக்கு தெரியவிடவில்லை.
ஆனாலும் வீராசாமி தன்னை தேடுவார் என்பதை உணர்ந்தவன்  தன் அடையாளத்தையே மாற்றிக்கொண்டான். சில நாட்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தவன்  அதன் பின் அவர்களிடமும் பேசுவது இல்லை. தன்னை பற்றி எந்த விபரமும் வெளியே தெரிய விட்டது இல்லை. அப்படியும் கண்டு பிடித்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டார்  வீராசாமி.
வீராசாமி அனுப்பியதற்கு பதில் அனுப்ப முடிவு செய்தவன் கண் முன்னால் வந்தது,  சிறு பிள்ளைக்கு புடவை சுற்றியது போல் நின்று இருந்த அன்னத்தின் முகம் தான்.  அவளை ஒருமுறை பார்த்து விட்டு முடிவை சொல்லாம் என்று நினைத்தவன் தான் வந்து விட்டான் இங்கு. 
காலையில் அவளை பார்த்தும் அந்த நொடியே முடிவு செய்து விட்டான் வீராசாமியின் கேள்விக்கு பதிலை. அதை நடைமுறை செய்யவே அவனுக்கு இப்போது நேரம் வேண்டும்.
யோசனையுடன் சிறிது நேரம் மாடியில் நடந்தவன் கீழே வர அன்னம் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
மாசு மரு இல்லாத குழந்தை தனமான முகம்.  இன்னும் பாக்க சொல்லி சொல்ல, “தூங்கற குழந்தையை இப்படி பாத்த கண் பட்டுடும்” என்று சொல்வது அவன் நினைவில் வர தானாக சிரித்தவன்  அவளிடம் இருந்து சிறிது இடை வெளி விட்டு படுத்துக்கொண்டான்.

Advertisement