Advertisement

“சினிமானா நடிப்பு மட்டும் தானா?? நான் கோமிரா மேன் சித்தப்பா.” 
“என்னடா எந்த படத்துக்கு செஞ்சு இருக்குற?? யாரும் உன்னைய பத்தி பேசி கூட கேட்டது இல்லை” என்றிட, 
ஜெய்க்கு தான் கண்ணை கட்டியது. “எத்தனை கேள்விகள்?? எங்க அப்பாவே கேக்களை, கேக்க வேண்டியவ வாசலோட போயிட்டா… ஆனாலும் கோப பட முடியாது…” 
விளக்கமாக சொன்னான் அவரிடம் “நான் தமிழ் படம் செய்யுறது இல்லை சித்தப்பா ஹிந்தி படம் மட்டும் தான் ஜெடீன்னு சொல்லு வாங்க” என்றதும் கத்திவிட்டாள் ரூபிணி. “என்ன ஜெடீ நீயா!!!” என்று. சிரித்தவன் அவள் தலை செல்லமாக ஆட்ட அனைவரும் அவனையே பார்த்து இருந்தனர்.
மங்களம் தான் கேட்டார் அவனிடம் “அப்படின்னா என்னப்பா??” என்று. இப்போது ஜெடீயின் பிஏவாக ரூபிணி மாறி அவனை பற்றி சொல்ல அனைவரும் வாய் பிளந்து கேட்டு இருந்தனர்.
“எவ்வளவு பெரிய ஆளு நீ… ஆனா உன் போட்டே ஒன்னு கூட வந்து இல்லை.  எத்தனை நாள் உன்னைய பத்தி  தேடி இருக்குறேம் தெரியுமா?? இப்ப என் பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லுவேன்” என்றாள் ரூபிணி.
“அதுல என் பிரைவசி போயிடும் ரூபி.  அது தான்  நான் சொல்லும் போது நீ எல்லார் கிட்டயும் சொல்லு” என்றவன்  “நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்” என்றவன் அவனின் அறைக்கு சென்றான்.
மங்களம் செல்லும் ஜெய்யை பார்த்து கொண்டு இருந்தார். வந்ததில் இருந்து அவன் அன்னத்தை பற்றி கேட்கவே இல்லை. அவருக்கும் சொல்ல சற்று பயம் தான். சாந்தியிடம் பேசியதிலேயே தெரிந்து விட்டது அவனின் சுபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை என. 
இப்போது தான் மனம் இறங்கி வந்து இருக்கிறான் வந்ததும் பெட்டியை கட்ட வைக்க வேண்டுமா??  இனியாவது அவன் வாழ்க்கை நன்றாக வேண்டும் என்று. எதையும் நிதானமாக தான் செய்ய வேண்டும் என நினைத்தவர் அவன் மாடிக்கு சென்றதையும் பார்த்து கொண்டு தான் இருந்தார்.
அறைக்குள் நுழைந்த ஜெய்யின் நாசி முழுதும் அன்னத்தின் மணம். முதலில் அது அவனின் அறை இப்போது அவளின் அறை. அத்தனை சுத்தமாக இருந்தது பெண்களின் அறை என்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள் யாரும். 
பெண்களின் அறைக்கு உண்டான எந்த பொருளும் அங்கு இல்லை.கிரீம், பவுடர், சென்ட், கிளிப் இத்தியாதிகள் என்று. டிரசிங் டேபிளிலில் குங்கும சிமில்,  சுவரில்  பெரிய திரை எல்ஈடி மட்டுமே. கிங்க் சைஸ் கட்டிலில் போர்வை விரித்து சுத்தமாக இருக்க  ஜன்னல் அருகில் விண்ட் சையினின் சத்தம் மெல்லியதாக கேட்க கட்டிலில் விழுந்தவன் அப்படியே உறங்கி போனான் அவளின் வாசம் மட்டும் பிடித்துக்கொண்டு. 
இங்கு மில்லில்  இருந்த அன்னத்திற்கு தான் மனம் ஒரு நிலையில் இல்லை. மனம் முழுதும் ஜெய்யின் நினைவுகள் மட்டுமே.
‘அத்தை மாமாவ பார்த்து இருப்பாறே… என்ன சொல்லி இருப்பாங்க… என்னைய பத்தி கேட்டு இருப்பாரா??’ என்று அவளின் எண்ணங்கள் அவனை சுற்றியே இருக்க வேலையில் கவனம் செல்ல வில்லை.
தன்னை சக உயிராக கூட மதிக்காமல் போனவன் தான் இருந்தும் அவன் மீது இதுவரை அவள் கோபபட்டதே இல்லை. ‘அவர் நிலை என்னமோ’ என்ற எண்ணம் மட்டும் தான் வரும். ஏனோ… அவன் மீது கோபம் வருவதே இல்லை அவளுக்கு. 
பார்த்தது சில வினாடிகள் என்றாலும் உயிருடன் கலந்து விட்டவனை என்ன செய்ய… புரியவில்லை??? ஏழு வருட தவ வாழ்வு எதற்காக தெரியவில்லை?? 
ஒரு முறை மட்டுமே பார்த்து ஏழு வருடம் வாழ்ந்தவளால் இந்த ஏழு மணி நேரத்தை ஓட்ட முடியும் என்று தோன்ற வில்லை. 
ஏனோ அவனை திரும்ப பார்க்கும் எண்ணம் தலை தூக்க, கடிகாரத்தை எத்தனை முறை பார்த்தாலும்  முட்கள் நகர்ந்த பாடாக இல்லை.
மில்லுக்கு வந்த நாள் முதல் ஒரு முறை கூட அநாவசியமாக அவள் வீடு சென்றது இல்லை. எத்தனை வேலை இருந்தாலும் முடித்து விட்டு தான் போவாள். வீராசாமி சொன்னாலும் “இருக்கட்டும் மாமா முடிச்சுடுறேன்” என்பவளாள் அதற்கு மேல் பொறுமை இல்லை.
அவள் அறையை விட்டு வெளில் வர வீராசாமி எதிரில் வந்தார்.  கையில் பையுடன் வந்தவளை “என்னம்மா கிளம்பிட்டியா” என்று கேட்க “காய்சல் வர்ற மாதிரி இருக்கு மாமா நான் வீட்டுக்கு போறேன்” என்றவள் அவரின் பதிலை கேட்க கூட நிற்க வில்லை.
போகும் அவளையே பார்த்து இருந்தவருக்கு ஏதோ புரிவது போல் இருக்க யோசனையுடன் தன் அறைக்கு சென்றார்.
வீட்டின் வாசலில் கார் வந்து நிற்க மஞ்சு தான் சென்று பார்த்தாள். அன்னம் வர அவளுக்கு ஆச்சர்யம் “என்ன அக்கா இந்த நேரம்??” என்றவளுக்கு “தலை வலிக்குது மஞ்சு ஒரு காபி குடு” என்றாலும் பார்வை வீட்டை முழுவதுமாக சுற்றி வந்தது.
வீட்டில் யாரும் இருப்பதற்கான தடம் இல்லை. மங்களம் தூங்க சென்று இருப்பார். ரூபிணி கல்லூரிக்கு சென்று இருப்பாள். இன்று ஜெய் வந்து இருப்பதால் நிச்சயம் மட்டம் தான் அதனால் தோழிகளுடன் அரட்டையில் இருப்பாள். சத்தியனும் வீராசாமியும் அலுவலகத்தில்.  ஆக… ஜெய் எங்கே?? என்று தான் இருந்தாள். 
மஞ்சு தான் கேட்டாள் “யாருக்கா அவரு??” என்று.
“யாரு யாருக்கா??” என்றாள் தெரியாதது போல… 
“அது தான்க்கா காலையில வந்தாரோ… நம்ம பெரியம்மா கூட கட்டி பிடிச்சு அழுதாங்க” என்று காலையில் நடந்ததை ஒலிபரப்ப “ஓ….” என்ற சத்தம் மட்டுமே வந்தது அன்னதிடம் இருந்து. 
“எவ்வளவு அழகு தெரியுமா அந்த அண்ணா!!” என்றதும் “என்ன அண்ணாவ..!!” என்று புருவம் தூக்கியவள்  “மஞ்சு” என்றதும் தான் மஞ்சுவுக்கு தான் செய்த தவறு புரிந்தது. “அக்கா மன்னிச்சுடுங்க” என்றவள் எதுவும் பேசாமல் சமையல் அறைக்கு சென்றாள்.
அன்னம் ‘வந்தவரு  இப்ப இல்லை… மாமா  அங்க வந்துட்டாங்க அத்தையும் இல்லை ஒரு வேளை திரும்ப போயிட்டாறா?? அப்ப அவரு வந்தது அவங்க அப்ப அம்மாவ பாக்க மட்டும் தானா… அப்ப நான்’ என்று நினைக்க பொய்யாய் சொன்ன தலைவலி வந்து விட்டது. அவளை அறியாமல்  கண்கள் கலங்க ஆரம்பித்து.
இனி மஞ்சு விடம் கேட்க முடியாது.. என்ன செய்ய.. என தெரியாமல் அவள் அறைக்கு போக அவள் கண்கள் நிறைத்து இருந்தான் அவன். 
அந்த கட்டில் முழுதும் அவன் தான். அன்னத்தால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ‘அவர் தானா கனவு இல்லையே’ என்று கண்களை கசக்கி மீண்டும் பார்க்க எந்த மாறுதலும் இல்லாம் அப்படியே படுத்து இருந்தான் ஜெய்.
தரை அதிர்ந்தால் எழுந்து விடுவானோ என்று நினைத்தவள் மெதுவாக அடி வைத்து நடந்தவள் அவனின் அருகில் சென்றாள். தூங்கும் அவனை பார்த்து இருந்தாள். இத்தனை நாட்களாக பார்க்க ஏங்கிய முகம்.  குழந்தைகள்  விளையாடி முடிந்து வீடு வந்ததும் உறங்குமே அது போல இருந்தான் ஜெய்.
‘எப்படி தூங்குறாரு பாரு.. டிரஸை கூட மாத்தம…  இத்தனை நாள் எங்க இருந்தாரு?? என்ன வேலை பாக்குறாரு??  வந்ததும் சாப்பிட்டு இருப்பாறா??’ நினைத்தவள்,  அவன் நன்றாக தூங்க ஜன்னல் திரை மூடி வெளிச்சம் உள்ளே வராமல் செய்தாள்.
கீழே சமையல் அறையிக்கு சென்றவள் “மஞ்சு  மத்தியம் சாப்பாட்டுக்கு என்ன செஞ்ச??” 
“அக்கா நீங்க சொன்னத செஞ்சு வைச்சுட்டேனே… ஏங்க்கா வேற செய்யனுமா ??”கேட்டாள் 
“ம்ம் அந்த வெங்கயத்தை மட்டும் உரி” என்றவள் மங்களம் சொல்லும் போது கேட்டு இருந்த அவனுக்கு பிடித்த சில வகைகளை செய்து வைக்க மங்களம் வந்தார்.
“மஞ்சு” என குரல் தர அன்னம் தான் அவருக்கு சாப்பாட்டினை எடுத்து வைக்க “நீ எப்ப வந்த” என்றார். 
“காலைலே வந்துட்டேன் அத்தை. காய்ச்சல் வர்ற மாதிரி இருந்தது” என்று வீராசாமியிடம் சொன்னதையே சொல்ல “அப்ப நீ எதுக்கு இதை செய்ற… மஞ்சு பாத்துக்க மாட்டாளா” என்று டேபிளில் இருந்ததை பார்க்க அனைத்தும் ஜெய்க்கு பிடித்தவை.
அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் உணவினை பரிமாறியவள் மாடியை பார்த்தாள் நொடிக்கு ஒரு முறை. மங்களம் அவள் செய்வதை பார்த்தாலும் எதுவும் சொல்ல வில்லை. 
மாலை மணி நான்கு ஆகியும் இன்னும் ஜெய் கீழே வரவில்லை.  ‘இன்னுமா தூங்குறாரு… போய் பாப்போமா??’ என்று அன்னம் நினைத்து மேலே போக பார்க்க வாசலில் கார்கள் சத்தம் கேட்டது. 
“வாழ்க்கை நாடகத்தில் நடிக்க 
ஒத்திகை முடித்து இருந்தேன்.
அரங்கேறும் நேரம் அனைத்தையும் மறந்தேன்
உன்னை பார்த்து….”
தாளத்தில் சேராத தனி பாடல்….

Advertisement