Advertisement

                  ஓம் நமச்சிவாயா
தாளம் 2
ஒரு வாரம் யாரும் யாரிடமும் பேசவில்லை. அதிலும் அன்னத்திடம்… அவள் ஒருத்தி அங்கு இருப்பதே யார் நினைவிலும் இல்லை. அன்று தேவகி வீட்டிற்கு வர பாதி உடம்பாகி இருந்தாள் அன்னம். “அம்மா” என்று அவள் அழைத்திலேயே பதறி போனார் தேவகி. “என்னம்மா…??” என்று கேட்க அன்னம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“ஏண்டி அப்ப இருந்து கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ பதில் சொல்லாம இருக்குற… என்னடி இது உடம்ப இப்படி வைச்சு இருக்குற??” என்ற அவரின் சத்ததில் வீராசாமி வெளியில் வந்தார்.
குடிசையில் இருந்தாலும் தேவகி குழந்தைகளை நன்கு பார்த்து கொள்வார். இன்று அன்னத்தின் தோற்றம் அவரை பதறவைத்து விட்டது.
“வாம்மா தேவகி நல்லா இருக்கியா” என்றவர் “மங்களம்…. தேவகி வந்து இருக்கு பாரு” என்று குரல் கொடுத்தார். 
பக்கத்து அறையில் இருந்தாலும் வெளியில் வர அத்தனை நேரம் ஆனது அவருக்கு. “என்ன அண்ணா இது இவ இப்படி இருக்கா?? கேட்டாலும் பதில் சொல்லாம இருக்கா… மாப்பிள்ளை இல்லையா??” என்று கேட்டார் தேவகி பதட்டமாக.
அவருக்கு ஜெய்யின் விபரங்கள் எதுவும் சொல்லபடவில்லை…
“அது தம்பி படிக்க சென்னை போயிட்டான்” என்றதும் தான் தேவகிக்கு மனம் சமன் பட்டது. “ஏண்டி படிக்க தான போயிருக்காங்க… அதுக்காக இப்படியா உடம்பை கெடுத்துப்பா” என்று அவளை திட்டியவர் வீரா சாமி சொல்லியும் கேட்காமல் புறப்பட்டு விட்டார்.
தேவகி சொல்லிய பின் தான் கவனித்தார் அன்னத்தை. கண்கள் குழி விழுந்து பார்க்கவே பரிதாபமாக நின்று இருந்தாள் “என்னம்மா இது!!” என்றவர் பிடித்துக்கொண்டார் மங்களத்தை.
“என்ன செய்ற வீட்டுல?? பசங்க சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட பாக்காம” என்று திட்ட, மங்களத்தின் கோபம் எல்லாம் அன்னத்தின் மீது திரும்பியது.
ஆனாலும் அவளை எதுவும் சொல்ல முடியாது. விருப்பம் இல்லை என்றாலும் ஜெய் தாலி கட்டி அவளை விட்டு சென்றது தவறு என்பதால் அதன் பிறகு பேசாமல் அவளை கவனித்துக்கொண்டார். 
அக்கறையாக கவனித்து கொள்ளவில்லை என்றாலும் அவளுக்கு வேண்டியதை தரவும் தவறவில்லை. 
சில மாதங்கள் ஆகியும் ஜெய்யிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. விசாரித்த வரை இப்போது அவன் சென்னையில் இல்லை என்பது மட்டுமே தெரிந்தது வீராசாமிக்கு. ஜெய்யை பற்றி விசாரிக்க கிளம்பிவிட்டார் சென்னைக்கு.
கொஞ்சம் பயம் பிடித்து கொண்டது அவருக்கு. பின்னே ஊரார் கேட்கும் கேள்விக்கு பதில் என்ன சொல்ல…?? அதையும் விட அன்னதிற்கு என்ன சொல்ல?? வரும் போது அவனை அழைத்து வருவதாக சொல்லி வந்தார். ஆனால்… இப்போது என்ன சொல்ல அவளுக்கு. 
அவர் விசாரித்த வரையில் அவன் இப்போது நண்பர்கள் உடன் தொடர்பில் இல்லை. அவன் எங்கு இருக்கின்றான் என யாருக்கும் தெரியவில்லை. வந்தால் தகவல் தர சொல்லிவிட்டு தான் வந்தார் வீராசாமி. ஆனாலும் அவருக்கு நம்பிக்கை இல்லை அவர்கள் மீது. மகன் வேண்டும் என்றே தவிர்ப்பது புரிந்தது.
வாசலில் கார் வந்து நிற்க வேகமாக வந்தாள் அன்னம். கண்கள் அலைபாய பார்த்தவளை பார்க்க பாவமாய் இருந்தது அவருக்கு. “வாங்க மாமா” என்றவள் கைகளில், வாங்கி இருந்த திண்பண்டங்களை தர அவள் அதை அனைவருக்கும் சாப்பிட தந்தாள். 
இது தான் அன்னலட்சுமி எத்தனை மன வருத்தம் இருந்தாலும் அனைத்தையும் மறந்து வீட்டிற்காக பார்ப்பவள். வீராசாமி அவளையே பார்த்து இருக்க “என்ன மாமா??” என்றாள். 
“நீ படிக்கிறயா அன்னம்??” என்றதும், அவள் பார்த்து மங்களத்தை தான். “அங்க என்ன பார்வை?? கேட்டது நான் பதில் சொல்லு படிக்கிறயா… இல்லை” என தலை அசைத்தவர் “நாளையில இருந்து நீ படிக்க போற” என்று கட்டளையாக சொன்னவர் சென்றுவிட்டார். 
மங்களம் அன்னத்தை முறைத்து பார்க்க “நான் இல்லை அத்தை. மாமா தான் நீங்க வேண்டாம் சொன்ன நான் போகலை” என்றவளை அவர் எதுவும் சொல்லாமல் போக “அப்பாடா” என்று இருந்தது.
பின்னே வீராசாமி இருந்தாள் தான் மங்களம் அமைதியாக இருப்பார். அவர் போன பின்னால் திட்டு வாங்குவது இவள் தானே.
அதிலும் சாந்தியும் வள்ளியும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டாம். அத்தனை பேச்சு வரும். அதில் பாதி அவளுக்கு புரிவதே இல்லை. அவளுக்கு புரிந்தது இது மட்டுமே.. 
ஜெய்க்கு இந்த திருமணம் பிடிக்க வில்லை அதனால் வீட்டைவிட்டு போய்விட்டான். பிறந்த வீட்டுக்கும் போகமுடியாது.  இனி எதுவானாலும்  தனக்கான இடம் இது என்பது மட்டுமே.
மங்களம் “இப்ப எதுக்கு அவளை படிக்க அனுப்புறீங்க??”
“பின்ன என்ன செய்ய உன் பையன் செஞ்சு வச்சு இருக்குற காரியத்துக்கு?? யார கேட்டாலும் தெரியலை அப்படின்னர பதிலை தவிர வேற எதுவும் இல்லை. இப்ப அவ படிப்பை முடிக்கட்டும். அவனும் வந்துடுவான் பாத்துகலாம். இப்போதைக்கு அவன் மேல் படிப்பு படிக்க போயி இருக்கான் அதோட மட்டும் தான் பேச்சு இருக்கனும். அதோட அதுவும் இன்னும் சின்ன பொண்ணு தான… வீட்டுல இருந்து என்ன பண்ண போகுது” என்றார். 
“அது முன்னாடி தெரியலையா??” என்று மங்களம் கேட்க, வீராசாமி பார்த்த பார்வையில் எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டார். 
மறுநாள் கல்லூரி விண்ணப்பத்துடன் வந்தவர் அன்னத்தை கல்லூரியில் சேர்த்த பிறகே ஓய்ந்தார் வீராசாமி.
ஆரம்பத்தில் கல்லூரியில் புத்தமும் கைய்யுமாக இருந்தவளை யாரும் கவனிக்க வில்லை… 
பிறகு தான் ஆரம்பித்து… அவளின் திருமணம் பற்றி தெரிந்தவர்கள் முன்னால் ஆறுதலாக பேசினாலும் பின்னால் ஜாடை பேசும் போது அழுகை வந்தாலும் அடக்கி கொள்வாள் அன்னம். அனைவரையும் பகைத்து கொள்ள முடியாதே… எத்தனை பேரிடம் விளக்கம் சொல்ல முடியும்… சொன்னாலும் மீண்டும் ஒரு கேள்வி வரும். அதற்காவே யாரிடமும் பேசாமல் ஒதுங்கி செல்வாள்.  
பின் அதுவே அவளின் சுபாவம் என மாற்றியும் கொண்டாள். பேசினால் பேசுவாள் அதுவும் ஒரு வார்த்தையில் மட்டுமே இருக்கும் அனாவசிய பேச்சை கேட்பதோ பேசுவதோ இல்லை.
ஏழு வருடங்கள் ஓடிவிட்டது… இப்போது வீடு சற்று மாறி இருந்தது.. மங்களத்திற்கு பீபீ அதிகம் ஆகி இருக்க, கூடவே இலவச இணைப்பாக முட்டிவலியும் சேர  கீழ் தளம் முழுதும் வீராசாமிக்கும் மங்களத்திற்கும்.  இரண்டாம் தளத்தில் சத்தியனுக்கும் ரூபாவிற்கும் அறைகள் இருக்க,  மூன்றாம் தளம் தான் அன்னத்திற்கு.
ஏழு வருடங்களுக்கு பிறகு பார்க்கிறாள் அவனை. உண்மையிலேயே அவனை அவளுக்கு தெரியவில்லை தான்.  முழுதாக ஒருமுறை தானே பார்த்து இருக்கிறாள் …
அவனை தெரிந்து கொண்டதும் எப்படி நடந்து கொள்ள??? என புரியாமல் தான் சட்டென கிளம்பிவிட்டாள். வருவான் என்று தெரியும் ஆனால் அது எப்போது என்று தெரியாது?? வந்தாள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஒத்திகை பார்த்து இருந்தாள் தான்…. ஆனால் அது எல்லாம் மறந்து விட்டது அவனை பார்த்ததும். 
சற்றும் மாற்றம் இல்லை அவனிடம். அப்போது உடம்பு இல்லாமல் நெடு நெடுவென உயரமாக இருந்தான் இப்போது உயரத்திற்கு தகுந்த உடல். இன்னும் அழகனாகத்தான் தெரிந்தான் அவன்.
மில்லில் இருந்து ஃபோன் வந்து சிந்தனையை கலைக்க காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் மில்லுக்கு.
கார் உள்ளே நுழையும் போதே ஜெய் அன்னத்தை பார்த்துவிட்டான்.  தாலி கட்டும் போது தான் பார்த்தான் அவளை. அந்த முகம் அவன் கண்களில் அப்படியே பதிந்தும் போனது. இப்போது சிறு மாற்றம் மட்டுமே, அப்போது பதினெழு இப்போது இருபத்திநான்கு.  பார்த்தால் அப்படி தெரியவில்லை சற்று உயரமாகி இருந்தாள். 
அன்னத்தை நினைத்தபடியே சென்றவனுக்கு முதலில் கேட்டது வீராசாமியின் வழக்கமான கம்பீரக்குரல் தான் கேட்டது. எப்போதும் அவனை கவர்வதும் அவரின் குரல் தான். அவரை போல சில சமயம் பேசி பார்ப்பதும் உண்டு ஜெய். 
“அம்மா….” என்று அழைத்த படி உள்ளே சென்றவனை பார்த்த அனைவரும் அதிர்ந்தது சில நொடிகள் மட்டும் தான். மங்களம் கால் வலியையும் மீறி ஓடியவர் ஜெய்யை கட்டிபிடித்துக்கொண்டார்.
“எங்கடா போன இத்தனை நாளா…??”என்று அழ… வள்ளி, சாந்தி, சத்தியன், நாராயணன், ரூபிணி என அனைவரும் அவனை சுற்றியவர்கள் “எங்க போன?? என்ன பண்ணுற???” என மாற்றி மாற்றி கேள்வி கேட்க, அனைத்துக்கும் பதில் சொல்லி அவர்களை சமாளித்து அனைவரையும் சமாதானம் செய்வதற்குள் ஜெய் அசந்து விட்டான்.
நடப்பதை பேச்சு ஏதும் இன்றி அமைதியாக பார்த்த படி இருந்தார் வீராசாமி. ஜெய் அவரிடம் வர அவனை ஆழ்ந்து பார்த்தவர் எதுவும் பேசாமல்  எழுந்து சென்றுவிட்டார். ஜெய்யும் அதற்கு கவலை பட்டதாக தெரியவில்லை. 
ஜெய் “அம்மா உங்கள பாக்க வர்ற சந்தோசத்துல நான் இன்னும் சாப்பிடலை” என்றதும் தான் மங்களம் ஓடினார் சமையல் கட்டுக்கு.
நீண்ட நாட்களுக்கு பிறகான வீட்டு சாப்பாடு. ஜெய் நிதானமாக உண்டவன் “அம்மா சமையல் சூப்பர்!!!” என்றதும்,  “அதை சமைச்சவங்களுக்கு சொல்லனும் அம்மாவுக்கு இல்லை” என்றான் சத்தியன். 
சத்தியனை பார்தவன் “எப்படிடா போகுது வேலை எல்லாம்” என்றான். சத்தியன் அமைதியாக சாந்தி தான் சொன்னார் “அதுக்கு என்ன?? மத்தவங்க  நாட்டாமை செய்ய நல்லாதான் போகுது” என்றதும் ஜெய்யிடம் வந்த கேள்வியில் சாந்தி வாயடைத்து போனார். 
“சத்தியா நீ என்ன ஊமையா!! உன்னைய கேட்டா அத்தை பதில் சொல்லுறாங்க… இல்ல உனக்கு பதிலா அத்தைய பேச வாடகை பேசி இருக்கியா??” என்று. அவன் பார்த்த பார்வையிலேயே சாந்தி அமைதியாகி விட்டார். 
அனைவரும் அவனை பார்க்க “சொல்லு சத்தியா வேலை எப்படி போகுது?” என்று சாதாரணமாக. “நல்லா போகுதுண்ணா” என்றவன் “ம்மா நான் மில்லுக்கு போறேன்” என்றவன் கிளம்பி விட்டான். 
“ரூபிணி” என்று அழைத்தவன் அவளை பார்க்க “நான் இப்ப பிபிஏ செகன்ட் இயர்ண்ணா” என்றாள் அவன் கேட்காததற்கும் சேர்த்து. ஜெய் கலகலவென சிரித்தவன் “அவ்வளவு பயமா என்கிட்ட??” என்றவன் “இங்க வா..” என்றான்.  கேஸில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து நீட்ட “என்ன அண்ணா!!” என்றாள்.
“உனக்கு தான் பிரிச்சு பாரு” என்றதும் அதில் இருந்தது விலை உயர்ந்த பிளே செட். “எனக்கா!!” என்று ரூபிணி கேட்க “ஆம்” என தலை அசைத்தான்.
நாராயணன் தான் கேட்டார் “என்ன வேலை செய்ற ஜெய்?? இத்தனை நாள் எங்க இருந்த??” என்று.
அவன் பதிலுக்காக அனைவரும் அவனையே பார்த்து இருக்க “சினிமால இருக்குறேன் சித்தப்பா”  என்றான்.
“சினிமானா… நடிக்குறியா?? அது வரை எந்த படத்திலையும் உன்னைய பாத்து இல்லையே…??”

Advertisement