Advertisement

                      ஓம் நமச்சிவாய
தாளம் 1
மும்பை நகரம்,  டீஜெயின் இசை கலப்பில் அரங்கம் அதிர ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் ஆடிய படி இருக்க, அந்த பார்ட்டி  கலைகட்டி கொண்டு இருந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய சினிமாவின் முக்கிய நபர்கள் நட்சத்திரங்கள் என அனைவரும் இருந்தனர். 
அனைவரும்  வந்த வேலையை பார்த்துகொண்டு இருக்க, அந்த பார்ட்டி ஹாலின் ஓர் மூலையில் இருந்த வட்ட சோபாவில் அமர்ந்து கையில் கிளாஸை பிடித்த படி கண்கள்  சொறுக இதழ் கடைசியில் புன்னகை வழிய அங்கு நடப்பதை பார்த்து இருந்தான் ஜெடீ என்று அனைவராலும் அழைக்கப்படும் ஜெய்தேவ்.
ஆறடி உயரம், அதற்கு ஏற்ற உடல், தினமும் உடற் பயிற்சி செய்வான் என்று கூறியது.  பிரன்ச் பியர்டு உடன் தலையில் இருந்த சிறிய குடுமி அவனை இன்னும் அழகாக காட்டியது.
 
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாதவன். சிறந்த ஒளிப்பதிவிற்காக மூன்று வருடங்கள் தொடர்ந்து தேசிய விருதுகள் வாங்கி இருப்பவன் அதற்காக தான் இந்த பார்ட்டி. மூன்று முறை என்றால் வயது அதிகமா என நினைத்தால் இல்லை. இருபத்தொன்பது முடியவே இன்னும் மாதங்கள் உள்ளது
“மச்சி சாதிச்சுட்டா…” என்ற படி வந்து கட்டிபிடித்தான் அவன் நண்பன் அமர். “மூனுவருசம் கன்டினியூஸா நேசனல் அவார்ட் சான்ஸே இல்லடா” என்றவனை முறைத்தான் ஜெய். 
“இல்ல மச்சி… ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சி அது தான் உடனே வரமுடியலை” 
“அப்படி என்னடா முக்கியமான வேலை அமர்??” என்று அவன் கேட்டதிலேயே சிரித்தவன் “அந்த முக்கியம் இல்லைடா… இது வேற” என்று நிறுத்தினான்.
ஜெய்யின் முகம் மாற ஆரம்பிக்க, சொன்னவனுக்கு தான் இப்போது எப்படி அவனிடம் விசயத்தை சொல்ல என இருந்தது. 
ஜெய்க்கு குடும்பம் என்று சொன்னாலே பிடிக்காது. அவர்களின் இந்த ஏழு வருட பழக்கத்தில் அவனின் பெயர் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாது. தெரிந்து கொள்ள அவன் அனுமதித்ததும் இல்லை. அதே போல் தான் அவனும் யாரிடமும் குடும்ப விபரங்களை கேட்க மாட்டான். அவர்கள் சொல்ல வந்தாலும் “எனக்கு தேவை இல்லை” என்று முகத்தில் அடித்தார் போல் பதில் வரும் அவனிடம் இருந்து.
நெருங்கியவர்களுக்கு மட்டுமே அவன் பழக இனிமையானவன். சில பேச்சுகளை தவிர. மற்றவர்களுக்கு அவன் வில்லனே. பேச்சும் பார்வையும் அப்படிதான் இருக்கும்.
அதனால் அவனை சுற்றி இருக்கும் யாருக்கும் அவனை பற்றிய எந்த விபரமும் தெரியாது… தெரிந்த சிலரும் அவனின் கோபம் தெரிந்து இருப்பதால் பேசவே மாட்டார்கள்.  அதில் அமரும்  அமீரும் அடக்கம்.
“இல்லை மச்சி” என்று அமர் இழுக்க, அமீர் “எதுக்குடா பம்முற சட்டுன்னு சொல்ல வேண்டியது தான தங்கச்சி என்கேஜ்மெண்ட் அதுதான் லேட்” என்றதும், ஆச்சர்யமாக அமரை பார்த்தான் ஜெய். 
“மச்சி உனக்கு அவ்வளவு பெரிய தங்கச்சி இருக்காளா!!” என ஜெய் கேட்க, அவன் எங்கு சண்டைக்கு வருவானோ என்று பயந்து இருந்த அமருக்கு அவன் கேள்வி அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது.
“டேய் நாம பழக ஆரம்பிச்சு ஏழு வருசம் ஆச்சு…. உனக்கு குடும்பம்ன்னு ஒன்னு இருக்கா அப்படின்னு கூட எங்களுக்கு தெரியாது!! அப்படியே கேட்டாலும் நீ பேசுற பேச்சுக்கு உன்னைய கொன்னா என்னன்னு தோனும் அப்பறம் எப்படி உன் கிட்ட சொல்லுவான்…”
“இப்ப என்ன உனக்கு…. அவனுக்கு தங்கச்சி இருக்காளான்னு கேள்வி??” என்று ஜெய்யை முறைத்த அமீரை பார்த்த அமருக்கு தான் இப்போது பயம் பிடித்துக்கொண்டது.
எங்கே இருவருக்கும் சண்டை வந்துவிடுமோ என்று பயந்து இருந்த அமருக்கு ஜெய்யின் அமைதி ஆச்சர்யமாக இருந்தது.
“ஏழு வருசம் ஆச்சா மச்சி நான் இங்க வந்து” என்றவன் “சரி வா மச்சி அதுக்கும் சேர்த்து பார்ட்டி பண்ணலாம்” என்றவன் அருகில் இருந்த பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் சரித்துக்கொண்டான். 
“டேய் என்ன பண்ணுற நீ” என அமர் பதறியவன் “ஏற்கனவே நிக்க முடியாம குடிச்சு இருக்குற இப்ப முழு பாட்டில்டா…” என்றவனை “எவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடி மச்சி” என்ற ஜெய்யை, அமரும் அமீரும் கை கொடுக்க “போங்கடா” என்றவன் எழுந்து நின்றான் கம்பீரமாக. 
எழுந்தவன் நடக்க ஆரம்பிக்க அங்கு நடனத்தில் இருந்த முன்னனி கதாநாயகி ஜெய்யிடம் “டான்ஸ் வித் மீ ஜெடீ” என்று வர “போச்சி இவளுக்கு இன்னிக்கு அடி நிச்சயம்” என்றான் அமர். அவன் முடிக்கும் முன்பே கீழே விழுந்து இருந்தாள் அவள். 
அனைவரும் அவள் கால் தவறி விழுந்தாள் என்று நினைக்க, அவனோ அவளிடம் குனிந்தவன் “ஜாக்கிரதை இன்னொரு தடவை மேல கைபட்டது..” என்ற அவனின் அடிக்குரலில் உறைந்து போனால் அவள்.
“மச்சி பாத்துக்கடா” என்று அமீரிடம் அவளை விட்டவன் சென்றுவிட்டான். அமீரும் அமரும் அவன் பின் போக காரின் பின் சீட்டில் இருந்தான் ஜெய்.
காரை அமீர் ஓட்ட முன் இருக்கையில் இருந்த அமர் தான் கேட்டான்  “ஏண்டா  நீ அவ்வளவு அழகா!!! எந்த பொண்ணுனாலும் அப்படியே விழுகுதுங்க உன் மேல”  என ஜெய்யிடம். 
“ஏண்டா நீ டிரை பண்ண போறியா??” என்ற ஜெய்யை என்ன செய்ய என பார்த்தான் அமர். கார் ஓட்டுவதில் கவனம் இருந்த அமீர் இதை கவனிக்காததலால் கடைசியில் ஜெய் சொன்ன “டிரை பண்ண போறியா” என்ற வார்த்தை மட்டும் காதில் விழ… 
“அவன் தான் சொல்றான்ல டிரை பண்ணு மச்சி” என்றிட  அவ்வளவு தான் அடி வெளுத்துவிட்டான் அமீரை. “டேய் ரெண்டு பேருக்கும் என்னைய பாத்தா எப்படி இருக்கு??” என்று சொன்னவன் சிரித்துவிட்டான். 
“மச்சி  சின்ன ஆப்ரேசன்  போதும்  நீ அடிச்சாலும் டிரை பண்ணி இருப்பேன்!!” என்றதும் “அவனா நீ!!!” என்ற சத்தில் கார் குழுங்கியது. 
“ஆமா போன மாசம் சுனில் பார்ட்டியில என்னடா நடந்தது?? அந்த மீனு அந்த பேச்சு பேசுது… கடைசியில கையில இருந்தத அப்படியே என் மேல ஊத்திட்டு போயிட்டாடா!!!” என்று வருத்தமுடன் ஜெய்யை அமர் கேட்க, “டேய் அவ பேசுனத விட அவ உன் வாயில ஊத்தாம உன் மேல ஊத்துனது தான் இப்ப உனக்கு கவலை” என்றான் அமீர்.
“டேய் நீ சும்மா இருடா… நீ… சொல்லு மச்சி அப்படி என்ன சொன்ன அவகிட்ட??” மீண்டும் அமர் ஜெய்யை கேட்க…
“அது மச்சி அவ ரொம்ப நாளா என்னைய பாக்குறாலாம்… புடிச்சி இருக்காம்… டிரை பண்ணலாமான்னு கேட்டா… ஏன் என்னைய புடிச்சி இருக்குன்னு கேட்டேன்… நான் மேன்லியா இருக்குறதா சொன்னா… அதுக்கு நான் நீ பொண்ணா இருக்கனும் அப்படின்னு சொன்னேன் தப்பா மச்சி!!!” என்றான் அப்பாவியாய் ஜெய்.
அமருக்கும் அமீருக்கும் முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. “டேய் இவன் கூட தான நாமளும் இருக்கோம்… ஏண்டா யார் கண்ணுக்கும் நம்மளை தெரிய மாட்டேங்குது??” என்றான் அமர் பொருமிய படி.
பேசிய படி அவர்கள் தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து சேர அமர் இறங்கியவன் “அமீ  நாளைக்கு காலைல என்னைய ஏர்போர்ட்டுல டிராப் செய்டா…  இவனுக்காத தான் வந்தேன் நாளைக்கு ஏதோ சடங்காம் நான் அங்க இருக்கனும் குட்நைட்” என்று அமர் செல்ல, ஜெய்யிடம் கார் சாவியை தந்தவன் “குட்நைட் ஜெய்” என்றவன் அவனின் அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்றான்.
மூவரும் ஒரே இடத்தில் இருந்தாலும் தனிதனி வீடுகளில் தான் இருந்தார்கள். ஜெய் இருவர் செல்வதையும் பார்தவன் தலை வலி வருவது போல் இருக்க அறைக்கு சென்றவன் மீண்டும் பாட்டில் கையில் எடுத்தான். அவன் தனிமை வேண்டும் போது மட்டுமே இப்படி குடிப்பது.
வீட்டின் அழைப்பு மணி கேட்க, அமர் “ம்ம் வர்றேன்” என்றவன் கதவை திறக்க எதிரில் ஜெய். “என்ன மச்சி இந்த நேரம் அதுவும் ஜீன்ஸ் டீசர்ட்டுல” என்றான் ஆச்சர்யமாக.
இது  ஜெய் வழக்கமாக ஜிம்மில் இருக்கும் நேரம். என்ன அவசர வேலை இருந்தாலும் இதை மட்டும் தவற விட மாட்டான். அப்படி பட்டவன் இப்படி வந்து நிற்பது ஆச்சர்யமாக தான் இருந்தது.
அவனை பார்த்தவனை “கிளம்பிட்டியா” கேட்டான் ஜெய். அப்போது தான் வந்தான் அமீர் “என்னடா இந்த நேரம் இங்க நீ??” என்று அதே கேள்வியுடன். 
ஜெய் அமைதியாக அவர்களை பார்க்க “என்னடா லொகேசன் பாக்க போறியா?? அப்படி போறவன் இப்படி வரமாட்டியே..” என்று அமீர் கேள்வியையும்  கேட்டு பதிலையையும் சொல்ல, அமர் தான் அவன் கைகளை தட்டிவிட்டான் ஜெய்யை பார்க்க சொல்லி.
அமர் “என்னடா?? முகம் ஒரு மாதிரி இருக்கு.. என ஆச்சு உடம்புக்கு ஏதாவது பண்ணுதா” என்றான்.
இருவரையும் பார்த்தவன் “நான் ஊருக்கு போறேன் அப்பா அம்மாவை பாக்க” என்று ஜெய் சொன்னதும் “என்ன…!!” என்றனர் இருவரும் ஒன்றாக. “எதுக்குடா இவ்வளவு சாக்காகுறீங்க” என்றான் ஜெய்.
“பின்ன நீ சொன்னது எவ்வளவு பெரிய விசயம். சொல்லு உன்னோட ஊர பத்தி” என்று அமர் கேட்க “இப்ப டைம் ஆச்சு அப்பறமா நாம பேசலாம்” என்று பேச்சை முடித்தவனை பார்த்து தலையில் அடித்து கொள்ள வேண்டும் போல் இருந்தது இருவருக்கும். இதற்கு மேல் பேசினால் வீண் வாதம் என்று தெரிந்ததால் எதுவும் பேசாமல் அவனுடன் சென்றனர்.
“மஞ்சு, இந்தா தேங்காய துறுவி வை… நான் வந்து சட்னி பண்ணறேன் எல்லாம் வந்ததுக்கு அப்பறமா தோசை ஊத்து… இப்பவே சுட்டு வைக்காத  ஆறிடும் யாரும் சாப்பிட மாட்டாங்க” என்றவளை மஞ்சு பாவமாய் பார்க்க “என்ன??” என்றாள் அவள்.
“ம்மா இந்த மாசம் கொஞ்சம் அட்வான்ஸ் வேணும் பெரியம்மா கிட்ட கேட்டேன் பாக்கலான்னு சொன்னாங்க” என்று அவள் முகம் பார்க்க “எவ்வளவு கேட்ட” என்றாள் அவள்.
“ரெண்டாயிரம் ரூபாய்” என்றாள் மஞ்சு
“சரி போ நான் தர்றேன் யார்கிட்டயும் சொல்லாத” என்றவள் சென்று விட்டாள் உள்ளே. அவள் அன்னம் என்று அழைக்கபடும் அன்னலட்சுமி. 
பெண்களில் சற்று உயரம் தான் அவள். துடைத்து வைத்த குத்துவிளக்கு போல் பளிச் முகம் எப்பேதும் முகத்தில் உறைந்து இருக்கும் சிரிப்பு  என பார்பவரை திரும்பி பார்க்க வைக்கும் அழகு தான் அவள். 
இளம்பச்சை நிறத்தில் அடர் சிவப்பு பாடர் வைத்த சில்க் காட்டன் அவளுக்கு அத்தனை கச்சிதாமாக பொருந்தி இருக்க தலை சீவி நெற்றியில் சிறிய பொட்டு   வைத்தவள்  கீழே  இறங்கி வர டைனிங்க் டேபிளில் இருந்தனர் அனைவரும். கீழே வந்தவளை “வாம்மா” என்றார் அவர்.

Advertisement