Advertisement

அத்தியாயம் 19

 

                   திருமண நாள் நெருங்கி விட்டிருக்க திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே மீதமிருக்க, மணமகளின்  தாலிக்கு பொன் உருக்கும் சடங்குக்காக அன்று காலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டு இருந்தனர் இரு குடும்பத்தினரும். மணமகள்கள் இருவரும் அவரவர் வீட்டில் இருக்க மாப்பிள்ளைகள் மட்டும் தங்கள் தாய் தந்தை தாய் மாமன்களுடன் ஆசாரியின் வீட்டிற்கு புறப்பட்டு இருந்தனர்.

 

             பொதுவாக இந்த சடங்கு மணமகனின் வீட்டில் நடப்பது தான் என்றாலும்,இவர்கள் இரண்டு கல்யாணத்தை வைத்திருக்க எது மாப்பிளை வீடு என்று எப்படி முடிவு செய்ய முடியும்? அந்த குழப்பத்தில் தான் ஆசாரியின் வீட்டிற்கே சென்றிருந்தனர் இரு வீட்டினரும்.

 

            அங்கே ரங்கநாயகி தன் இளைய மருமகளின் தாலி செய்ய தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த போன் நாணயங்களை ஆசரியிடம் கொடுக்க அவர் கும்பத்திற்கு பூஜை செய்து அம்மையப்பனை வணங்கி அவர் கொடுத்த நாணயங்களை உருக்கி தாலிக்கான அச்சில் ஊற்றியவர் மணமகனின் தாய் மாமனை அழைக்க அவர்  இளநீரை அதன்மேல் கொட்டி அதன் வெம்மையை தனித்து சாந்தி கொடுக்க தாமரைக்கான தாலி உருப்பெற்றது.

 

            அடுத்ததாக விசாலம் தன்னிடமிருந்த தங்க காசுகளை தனாவிடம் கொடுக்க அவன் அதை ஆசரியிடம் கொடுக்கவும் மீண்டும் ஒருமுறை அதே சடங்குகளை செய்து பொன்னை உருக்கி முடித்தவர் அதை அச்சில் வார்த்து தாலியாக மாற்றிக் கொடுக்க இரு குடும்பத்தினரும் மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பினர்.

 

              மாப்பிளைகளுக்கு மட்டும் மணப்பெண் வராதது குறையாக இருக்க, கடுப்பாகவே திரிந்தனர் இருவரும்.அதிலும் ரங்கநாயகி வேந்தனை மிரட்டி அழைத்து வந்திருந்தார்.அவனுக்கு மில்லில் வேலைகள் சரியாக இருக்க, அவன் மில்லில் இன்னொரு பிளான்ட் போடுவதற்கான ஆரம்பகட்டத்தில் இருந்தான் அவன்.

 

          அதற்கான வேலைகள் அவனின் பெரும்பாலான நேரத்தை இழுத்துக் கொள்ள தாமரையிடம் கூட சரியாக  பேசுவதில்லை அவன்.அத்தனை வேலைகளையும் தலையில் போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தான். திருமணத்திற்குள் இந்த வேலைகளை ஓரளவுக்காவது முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தவன் அதற்காக ஓட்டத்தை ஆரம்பித்திருக்க நடுவில் சடங்கு,முறை,நலங்கு என்று அவன் நேரத்தை சாப்பிட்டு கொண்டிருந்தார் ரங்கநாயகி.

               இப்போதும் பக்கத்து ஊரில் ஒரு விவசாய சங்கத்தினர் அவனுக்கு நெல் கொடுப்பதாக சொல்லி இருக்க அவர்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவனை கிட்டத்தட்ட இழுத்து வந்திருந்தார் ரங்கநாயகி.

             வேந்தனின் நிலை இப்படி இருக்க தனாவோ மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தான். அவனை பொறுத்தமட்டில் இந்த திருமணமும்,மதியழகியும் அத்தனை பிடித்திருந்தது அவனுக்கு. தாமரையை அன்னை அழைத்து வரததில் இருந்தே எப்படியும் மதியும் வரமாட்டாள் என்பது புரிந்து போக பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை அவனுக்கு.

                 இன்னும் மூன்று நாளில் திருமணம் என்பதே அவன் மகிழ்ச்சி கொள்ள போதுமானதாக இருந்தது. ஆசாரி வீட்டிலிருந்து கிளம்பியவன் தன் குடும்பத்தினரை வீட்டில் விட்டு தன் ராஜ்யமான தோப்பிற்கு வந்து விட்டிருந்தான்.அங்கே தொடங்கி அவர்களின் வயல், அடுத்து மல்லிகை தோட்டம் என்று அவன் வேலைகள் அவனை சுருட்டிக் கொள்ள மொத்தத்தில் மாப்பிள்ளைகள் இருவரும் பிசியாக இருக்க வீட்டினர் திருமணத்திற்காக அலைந்து கொண்டிருந்தனர்.

                   அன்று மாலை நேரத்தோடு வீடு திரும்பிவிட்டான் தனஞ்செயன். தாமரையை ஒரு வாரத்திற்கு முன்பே வேலைக்கு விடுப்பு சொல்ல வைத்திருந்தார் விசாலம். அதனால் அவள் வீட்டில் இருக்க மாணிக்கமும் விசாலமும் இறுதிக்கட்ட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

           தனஞ்செயன் வரவும் அவனுக்கு காபி போட்டு கொடுத்தவள் தன் அண்ணனோடு அமர்ந்துவிட்டாள். அன்றைய வேலை விவரங்களை தனா சொல்லி கொண்டிருக்க அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் அவள். தன் குடும்பத்தை பிரிய போகும் பிரிவுத் துயர் அவள் பார்வையில் தெரிய தனஞ்செயன் அவளை புரிந்து கொண்டவனாக அவள் தலையை தடவி கொடுத்தவன்இப்போ எதுக்கு கண்கலங்குற, என்ன வெளிநாட்டுக்கா போக போற. எப்படி பார்த்தாலும் இருக்கிறதே நாலு தெருதான் இந்த ஊர்ல. இதுக்கு உனக்கு பீலிங் வேற.” என்று விளையாட்டாக அவன் சொல்ல

                “போண்ணா. உனக்கு புரியாதுஎன்றவள் அமைதியாகவே இருக்க

உனக்குதான் புரியல தாமரை. நீ கலங்குறது தேவையே இல்லாதது. நெனச்சா வந்து பார்க்கிற தூரத்துல தான் இருக்க போறான்னு நான் சந்தோஷமா இருந்தா நீ அழுதுட்டு இருக்க. அதிலேயும் ரங்கநாயகி அத்தை விஷயத்துல இன்னும் நிம்மதி தான். வேந்தனை பத்தி நான் சொல்லவே வேண்டாம்.”  

            “எப்படி பார்த்தாலும் நல்ல வாழ்க்கை தான் தாமரை. அப்பா அம்மாவை பிரியறது வருத்தமா தான் இருக்கும்.ஆனா உனக்கு மட்டும்தான் இது நடக்குதா. சொல்லப்போனா நீ எவ்ளவோ பரவாயில்லை. விட்டு தள்ளு.சும்மா யோசிச்சிட்டே இருக்காத.அம்மா வர நேரத்துக்கு இப்படி இருந்தின்னா என்னவோ ஏதோன்னு பதறிட்டு கெடப்பாங்க.போய் வேலைய பாருத்தா.” என்று கூற அவன் பேச்சில் தெளிந்தவளாக எழுந்து விட்டாள் தாமரை.

                 மணி ஆறை நெருங்கவும் சாமி மாடத்தில் விளக்கேற்றியவள் அபிராமி அந்தாதியை மெல்லிய குரலில் பாட வீட்டின் அமைதியில் நன்றாகவே கேட்டது தனஞ்செயனுக்கு.

           தனஞ்செயன் வரவும் அவனுக்கு காபி போட்டு கொடுத்தவள் தன் அண்ணனோடு அமர்ந்துவிட்டாள். அன்றைய வேலை விவரங்களை தனா சொல்லி கொண்டிருக்க அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் அவள். தன் குடும்பத்தை பிரிய போகும் பிரிவுத் துயர் அவள் பார்வையில் தெரிய தனஞ்செயன் அவளை புரிந்து கொண்டவனாக அவள் தலையை தடவி கொடுத்தவன்இப்போ எதுக்கு கண்கலங்குற, என்ன வெளிநாட்டுக்கா போக போற. எப்படி பார்த்தாலும் இருக்கிறதே நாலு தெருதான் இந்த ஊர்ல. இதுக்கு உனக்கு பீலிங் வேற.” என்று விளையாட்டாக அவன் சொல்ல

                “போண்ணா. உனக்கு புரியாதுஎன்றவள் அமைதியாகவே இருக்க

உனக்குதான் புரியல தாமரை. நீ கலங்குறது தேவையே இல்லாதது. நெனச்சா வந்து பார்க்கிற தூரத்துல தான் இருக்க போறான்னு நான் சந்தோஷமா இருந்தா நீ அழுதுட்டு இருக்க. அதிலேயும் ரங்கநாயகி அத்தை விஷயத்துல இன்னும் நிம்மதி தான். வேந்தனை பத்தி நான் சொல்லவே வேண்டாம்.”

 

            “எப்படி பார்த்தாலும் நல்ல வாழ்க்கை தான் தாமரை. அப்பா அம்மாவை பிரியறது வருத்தமா தான் இருக்கும்.ஆனா உனக்கு மட்டும்தான் இது நடக்குதா. சொல்லப்போனா நீ எவ்ளவோ பரவாயில்லை. விட்டு தள்ளு.சும்மா யோசிச்சிட்டே இருக்காத.அம்மா வர நேரத்துக்கு இப்படி இருந்தின்னா என்னவோ ஏதோன்னு பதறிட்டு கெடப்பாங்க.போய் வேலைய பாருத்தா.” என்று கூற அவன் பேச்சில் தெளிந்தவளாக எழுந்து விட்டாள் தாமரை.

                 மணி ஆறை நெருங்கவும் சாமி மாடத்தில் விளக்கேற்றியவள் அபிராமி அந்தாதியை மெல்லிய குரலில் பாட வீட்டின் அமைதியில் நன்றாகவே கேட்டது தனஞ்செயனுக்கு.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

 

                        என்று உருகி பாடியவள் கண்களை மூடி வேண்டி நிற்க,அவளை பார்த்துக் கொண்டிருந்த தனஞ்செயனுக்கும் தங்கையின் பிரிவு வேதனையையே கொடுத்தது என்றாலும் தங்கையின் நல்வாழ்வுக்காக என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் அவள் முன் சாதாரணமாகவே வளம் வந்தான்.

                    தாமரை வணங்கி முடித்தவன் தன் அறைக்கு சென்றுவிட,ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துவிட்டான் தனஞ்செயன். அந்த நேரத்தில் அவர்களின் தாய்மாமன் வீட்டிற்கு வர அவர்களை வரவேற்று அமரவைத்தவன் தாமரையை அழைத்தான்.

             தாமரையும் தன் மாமனை வரவேற்றவள் அவர்களுடன் ஐக்கியமாகி விட, விசாலமும் மாணிக்கமும் வந்து சேரவும் வீடு கல்யாண கலை காட்டியது. நாளை திருமணக்கால் நடுவதாக இருக்க ஒவ்வொரு சொந்தமாக இனி வர ஆரம்பித்து விடுவர் என்பதால் விசாலம் ஏற்கனவே வீட்டை ஒதுக்கி வைத்திருக்க இப்போது தன் அண்ணனும் அண்ணியும் வந்திருக்க மகிழ்ந்து போனவராக அவர்களுடன் பேச ஆரம்பித்திருந்தார் அவர்.

                 அன்று காலையே தனஞ்செயனின் பெயருக்கு ஒரு கொரியர் வந்திருக்க அதை வாங்கி அவன் அறையில் வைத்துவிட்ட விசாலம் அவனிடம் அதை சொல்ல மறந்திருந்தார். இப்போதும் தன் பிறந்த வீட்டை பார்க்கவும் அவருக்கு அது நினைவுக்கே வராமல் போக அவனிடம் சொல்லவே இல்லை அவர். 

             ஒரு வழியாக இரவு உணவு முடிந்து அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல தனா தன் அறைக்கு சென்றவன் அவனும் அந்த கொரியர் கவரை முதலில் கவனிக்கவே இல்லை. அவன் நினைவெல்லாம் மதி இன்றாவது தன்னை அழைப்பாளா ? என்பதிலேயே இருந்தது.

                      அன்று அவன் அத்தனை தூரம் கூறியும் கூட அவன் வருங்காலம் அவனை அழைக்கவே இல்லை.அதில் கடுப்பானவன்இவளுக்கு என்ன இம்புட்டு ஏத்தம்என்று அவனும் அழைக்கவே இல்லை அவளை.ஆனால் நேற்று இரவு முழுவதும் எதிர்பார்த்தான் அவள் அழைப்பை.அதில் தூங்காமல் அமர்ந்திருந்தது வேறு கோபத்தை கொடுத்திருக்க,இன்றாவது அழைப்பாளா என்று யோசனையில் இருந்தான் அவன்.

                 சரியாக அதே நேரம் மதியும் அவள் வீட்டில் தனஞ்செயனை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.கணிப்பாக கோபமாக இருப்பான் என்று தெரியும் ஆனால் என்ன செய்வது என்று புரியவே இல்லை அவனுக்கு.ஏதோ ஒரு தயக்கம் அவளிடம் இருந்து கொண்டே இருந்தது. அதேசமயம் அவனை பிடித்தும் தொலைத்தது அளவுக்கு அதிகமாக.

          இப்போதும் அவன் கோபத்தை பற்றிய பயம் நெஞ்சம் முழுக்க இருந்தாலும் அவன் குறை கெட்டுவிடும் ஆவலும் சரிபாதி இருக்க,போனை கையில் எடுப்பதும் கீழே வைப்பதுமாக விளையாடி கொண்டிருந்தவள் ஒருவழியாக முயன்று அவனுக்கு அழைத்துவிட, முழுதாக அழைப்பு முடிந்தும் அவன் எடுக்கவில்லை. கோபமாக இருக்கிறானோ என்று பயந்து போனவளாக அவள் திரும்பவும் அழைக்க இந்தமுறை அவளை ஏமாற்றாமல் அழைப்பை ஏற்றவன் எதுவுமே பேசவில்லை.

             அவன் கோபம் புரிய மெதுவாகஹலோஎன்று மதி சொல்லவும், புன்னகை எட்டிப்பார்த்தது தனாவுக்கு .ஆனால் எதையும் காட்டி கொள்ளாமல் அவன்ம்ம்என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக இருக்க,அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை மதிக்கு.

              தான் செய்தது தவறு என்பது மட்டும் புரிய தயங்கினாலும் ஒருவழியாகசாரி.நேத்து போன் பண்ணனும்ன்னு நெனச்சேன்.ஆனா அண்ணா கூட இருந்தாங்க.பேசிட்டு இருந்தேன் அவங்க கிளம்பும்போது ரொம்ப நேரமாகிடுச்சு அதுக்குமேல எப்படி கூப்பிடறது ன்னு தான் கூப்பிடலங்க.சாரிஎன்று மெல்லிய குரலில் சொல்லி முடிக்க

               “ஓஹ் நான் கோவமா இருந்தாதான் மேடத்துக்கு பேச்சு வருதோ, உன்னை இதை வச்சே வழிக்கு கொண்டு வரேண்டிஎன்று நினைத்தவனாகம்ம் பரவாயில்ல.அதான் சொல்லிட்ட .போய் தூங்கு போஎன்று கூற,சத்தியமாக இதற்கு என்ன மறுமொழி கொடுப்பது என்று புரியவில்லை அவளுக்கு.

                    கண்களில் கண்ணீர் கரை கட்டிவிட்டது அவன் கோபத்தில்.ஆனாலும்  அழக்கூடாது என்று தோன்றவும் அமைதியாகவே இருந்தாள். இவள் அமைதியில் அவன் மீண்டும்ஹலோஎன அதற்கு அவள் சொன்னம்ம்மெல்லிய கமறலோடு கேட்கஆரம்பிச்சிட்டாடாஎன்று நொந்து கொண்டவன்ஹேய் மதிம்மா.கல்யாண பொண்ணுடி நீ. இப்படி தொட்டதுக்கெல்லாம் அழுதா என் நிலைமை என்ன ஆகுறது. எதுக்கு இப்போ அழறஎன்று மென்மையாகவே கேட்க

          “நீங்க கோபமா இருக்கீங்களா என்மேல. ஏன் என்கிட்ட சரியாவே பேசல.”என்று கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவள் கேட்க

             “நான் சரியா பேசலன்னு புரியுதா உனக்குஎன்றான் தனா.

அதெல்லாம் புரியும். நீங்க என்மேல கோபமா இருக்கீங்க

ஆமா கோபம் இருந்துச்சு. உன்னை கால் பண்ண சொல்லி சொல்லிட்டு போன வைக்குறேன்.நீ கூப்பிடவே இல்லை.நைட் ரொம்ப நேரம் வெயிட் பண்ணேன். அந்த கோபம் கொஞ்சம் இருந்தது.”

  “இப்போ போய்டுச்சா

அதெப்படி போகும்.என் கோபம் போக நீ என்ன பண்ண

அதான் போன் பண்ணிட்டேனே

ஹேய் அது உனக்கு நான் கொடுத்த பனிஷ்மென்ட். இப்போ என் கோபத்தை குறைக்க என்ன பண்ண போற.அதை சொல்லுஎன்று அவன் கிடுக்கி பிடிக்க

        “என்ன செய்யணும். “

நான் சொல்றதை செஞ்சா கோபம் கொஞ்சம் குறையும்

சொல்லுங்க

நீ செய்வியா

நீங்க சொல்லுங்க.”

நீ மொதல்ல செய்றேன்னு சொல்லு.நான் அப்புறம் சொல்றேன்என்றான்.

வரப்போவதை அறியாமல்சரி சொல்லுங்க செய்றேன்என்றுவிட

       ” பேச்சு மாற மாட்டியேஎன்று அவன் கேட்க

ஐயோ.நீங்க சொல்லுங்க முதல்லஎன்று அவள் சொல்லவும்

என்னோட நாளைக்கு திருநெல்வேலிக்கு வரியா.நெல்லையப்பர் கோவிலுக்கு போயிட்டு வருவோம்.கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட எங்கயாச்சும் வெளிய போகணும்ன்னு தோணுது.வருவியாஎன்று கேட்க

          இவனை எப்படி மறுப்பது என்று கலங்கியவள்நாளைக்கு வீட்ல கன்னிக்கால் வைக்குறாங்க. இப்போவே அம்மா வீட்டை விட்டு வெளியே விடமாட்டாங்க.அதுவும் நாளைக்கு எப்படி விடுவாங்க. என்னால வெளியவே வர முடியாதுங்கஎன்று திக்கி திணறி அவள் சொல்லி முடிக்க

         உன்னோடு வரமாட்டேன் என்று அவள் சொல்லாததே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.மேலும் இந்த பந்தக்கால் ஊன்றுதல் நாளை அவன் வீட்டிலும் நடப்பதால் அதை அறிந்தே தான் இருந்தான் அவனும். அவள் சொல்வதில் உள்ள உண்மை உரைக்கசரி விடு பார்த்துக்கலாம்என்று முடித்துவிட்டான் அவன்.

                  அதன்பின்பு அதை பற்றி பேசாமல் அவளை வரிசையாக கேள்விகள் கேட்க ஆரம்பித்தவனுக்கு ஒருகட்டத்தில் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தாள்.அவர்களின் உரையாடல் அதற்குமேல்ஸ்வீட் நத்திங்ஸ்ஆக மாறிப்போக நாடு இரவு வரை தொடர்ந்தது இவர்களின்பேச்சு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement