Advertisement

அத்தியாயம் 2

அரைமணி நேரத்தில் வருகிறேன் என்றவள் அரை நாள் ஆகியும் வரவில்லை. மகாவிற்கு லேசாக பயம் வந்தது. கணவனும் மகன்களும் வந்து அவளைக் கேட்டால் என்ன பதில் சொல்வது. அவருக்கு நிவிக்கு அசம்பாவிதம் எதுவும் நடந்திருக்கும் என்ற எண்ணம் இல்லை. நண்பர்களோடு வெளியே சென்றிருப்பாள் என நினைத்திருந்தார். அதனால் ஐம்பதாவது முறையாக அவளுக்கு அலைபேசியில் அழைத்து பார்த்தார்.

ஆனால் எந்த பதிலும் இல்லை. மணி ஒன்றாகியது. மகாவின் தொலைபேசி ஒலி எழுப்பியது. ஒட்டமும் நடையுமாக ஓடிச் சென்று அலைபேசியை எடுத்தவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

“சாரி அம்மா. லேட் ஆகிடுச்சு . வந்துடுறேன். எல்லாரையும் சமாளி” . ஐயையோ இவ வேற இப்படி அனுப்பி இருக்காளே இப்போ என்ன பண்ணுவேன். எப்படி சமாளிப்பேன். நீ வீட்டுக்கு வாடி அப்பறமா பேசிக்கிறேன் என்றவர் வீட்டில் உள்ள அனைவரையும் சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.

அந்த நேரம் கார் சப்தம் கேட்டது. இவரது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பானுவுக்கு மெல்லிய சந்தோஷம். 

ரகு தனது இரு புதல்வர்களுடன் வீட்டினுள் நுழைந்தார்.

“சனிக்கிழமை கூட மீட்டிங் போற மாதிரி ஆகிடுச்சே. இன்னைக்கு நிவிய வெளியே கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன்பா. ஆனால் ஹரிஸ் மீட்டிங் வச்சு எல்லாத்தையும் கெடுத்துட்டாரு. நாம என்ன தப்பு பண்ணுவோம்னு காத்துகிட்டு இருக்காரு. சிக்குனா எல்லா கோபத்தையும் நம்ம மேல காட்டிடுவாரு”

“ஆமாடா ராஜ். நீ சொல்றது உண்மை தான். ஆனால் இப்படி பர்சனல் ப்ராப்ளம்ஸ வேலயில காட்ட கூடாது. அவங்க அப்பா கையில ஆர்.என் குரூப்ஸ் இருந்த வரைக்கும் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஏன் நம்ம நிவிய அவர் பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் கூட எந்த ப்ராப்ளமும் இல்ல. எல்லாம் நம்ம நேரம்”

“டேய் ரவி. அவர் எவ்ளோ பெரிய ஆளா வேணா இருக்கலாம். அதுக்காக நிவிக்கு பிடிக்காத கல்யாணத்த பண்ண முடியுமா? அவர் பெரிய மல்டி மில்லியனர் தான். ஆனா நிவிக்கு பிடிக்கனும்ல. இதுவரைக்கும் அவ விருப்பத்துக்கு மாறா நாம எதுவுமே செஞ்சது இல்லயே”

“ஆமாம் பா. நிவி தான் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லியும் அவள‌‌ தான் கட்டுவேனு இருக்காரு. இன்னைக்கு செங்கல்பட்டு ப்ரான்ஜ் தியாகு என்கிட்ட என்ன ராஜ் என்ன இருந்தாலும் இது உங்க வருங்கால மச்சான் கம்பெனி தான. பொறுமையா வரலாம்ல ஏன் எங்கள மாதிரி ஓடி வரீங்க. ஆனா இவ்ளோ சொத்தையும் உங்க தங்கச்சி தான் ஆள போகுதுல. அப்படி என்ன உங்க தங்கச்சி ஸ்பெஷல். கட்டுனா அவங்கள தான் கட்டுவேனு சார் சொல்றாருனு கேக்குறான். இவர் எதுக்கு நிவிய பத்தி எல்லார்கிட்டயும் சொன்னாரு”

“அவ்ளோ தூரம் இது சரி வராதுன்னு சொல்லியும் நிவி தான் ஆர்.என் குரூப்ஸ் மருமகனு கம்பெனி முழுசும் சொல்லி வச்சுருக்காரு. நல்ல வேள மீடியாக்கு லீக் பண்ணாம இருக்காங்க இல்லனா அவ்ளோ தான். எனக்கு என்னமோ இது பெரிய பிரச்சினையாக போதுனு தோணுது”

“ம்ம்.. நானும் அப்படி தான் நினைக்குறேன். சரி விடுங்க வரும் போது பாத்துக்கலாம். இப்ப சாப்டலாம் வாங்க”

இதுவரை இவர்கள் உரையாடலை கேட்ட இரு பெண்களும் வேறு வேறு மனநிலையில் இருந்தனர். பானுவிற்கோ வயிற்றெரிச்சல். இங்கு தான் ராணி போல இருக்கிறாள் என்றால் தமிழ் நாட்டின் நம்பர் ஒன் பணக்காரன் அவளை சுற்றி சுற்றி வருகிறான். 

மகாவிற்கோ இப்போது நிவியைப் பற்றி கேட்டால் என்ன செய்வது என்ற பயம்.

“ம்மா… சாப்பாடு எடுத்து வைங்க. நல்ல பசி.”

“ஆமாம்.. நிவி எங்க. ஆளக் காணும். நிவி சாப்ட வாடா. நிவி” என அவளது அறை நோக்கி குரல் கொடுத்தான் ராஜ். 

எந்த பதிலும் வராமல் போகவும் தாயைப் பார்த்தான். அவரது பதட்டம் வித்தியாசமாக தெரிந்தது.

“ம்மா. நிவி வெளியே போயிருக்காளா”

“ஆமாம்டா”

“எப்ப போனா”

“.    “

“பதில் சொல்லுங்க மா”

“காலைல “

“என்னது காலைல போனாளா. எங்க போனா”

“கோவிலுக்கு ” அவரது பதிலைக் கேட்டவர்கள் அதிர்ந்து எழுந்து நின்றார்கள்.

“ம்மா . விளயாடுறியா..காலைல கோவிலுக்கு போனவ இன்னும் வரலனு சாதாரணமா சொல்ற. போன் பண்ணி பாத்தியா. எங்க இருக்காலாம். ஏன் இன்னும் வரல”

“இல்லடா. போன் எடுக்கல. மெசேஜ் மட்டும் அனுப்பிருக்கா. லேட்டா வருவேன்னு”

அவ்வளவு தான் ராஜிற்கும் , ரவிக்கும் பதட்டம் உண்டானது. 

ராஜ் “அம்மா. நிவி எப்பவுமே மெசேஜ் அனுப்ப மாட்டா. எப்பவும் போன் தான் பண்ணுவா. நீங்க மெசேஜ்னு சொல்றீங்க. எனக்கென்னவோ தப்பா படுது ‘ என்றவன் திரும்பி ரவியை பார்த்தான். அவனோ நிவியின் அலைபேசிக்கு அழைத்து கொண்டு இருந்தான்.

“டேய் ராஜ் புல் ரிங் போய் கட்டாகுது. நீ வா நாம நேர்ல போய் பாத்துட்டு வரலாம்” 

“நானும் வரேன்டா நில்லுங்க”

“வேணாம்பா நீங்க இருங்க ” என்று அவர்கள் வெளியேறிவிட ரகு மகாவைப் பிடித்துக் கொண்டார்.

கோவில்:

நிவி சென்றிருந்த கோவிலுக்கு சென்று இருவரும் சுற்றி சுற்றி தேடினர். அங்கே அவள் இல்லை. வழக்கமாக வரும் கோவில் என்பதால் இவர்களின் தேடுதலைப் பார்த்த ஜயர் தானாக முன்வந்து பேசினார்.

என்னப்பா தேடுறீங்க. யாரையும் தேடி வந்தீங்களா? ஆமா நிவி ஏன் இன்னைக்கு கோவிலுக்கு வரல. நேத்து வரும் போது கூட சரியா காலையில நாலு மணிக்கு வந்து சேர் அச்சிடப்பட்ட ொஎீீடுவேன்னு சொன்னா‌. ஆனா ஏன் வரலஅவர் சொல்லிய அடுத்த நொடி இருவரும் அதிர்ந்து நின்றனர். இந்த நிமிடம் வரை ஒன்று கோவிலில் இருப்பாள் இல்லையென்றால் கோவிலிலிருந்து தோழிக்கு வீட்டிற்கு சென்றிருப்பாள் என நினைத்து இருந்தனர். இப்போது கோவிலுக்கே வரவில்லை என்றால் ஏதோ ஆபத்து என அவர்களுக்கு தோன்றியது. வீட்டிலிருந்து கோவிலுக்கு வரும் வழியெங்கும் விசாரித்தனர். ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். நேரம் செல்ல செல்ல இவர்களுக்கும் பயமாகியது. இன்னும் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை. ரகுவும், மகாவும்மாறி மாறி அடித்துக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மணி மாலை ஆறு முப்பது ஆகியது. இதற்கு மேலும் தாமதித்தால் ஆகாது என இருவரும் காவல் நிலையம் சென்றனர்

காவல் நிலையம்:

ரவி‌”சார் என்னோட தங்கச்சிய காலைலேர்ந்நு காணும் சார். எல்லா இடத்திலும் தேடிப் பாத்துட்டோம்அவள காணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்

பதட்டத்தோடு அவன் கூற போலீஸ் இன்ஸ்பெக்டரோ இவர்களின் நிலை புரியாமல்பதட்டப்படாம இருங்க. நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க. ” என சில கேள்விகளை கேட்டவர்சார் எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு எங்கயாவது ப்ரண்ட்ஸ் கூட போயிருக்கும் இல்லன்னா லவ்வர்கூட போயிருக்கும். இப்பவே இருட்டிடுச்சீ.போய்டடு காலைல வாங்கஎன அலட்சியமாக பேசினார்.

அவருக்கு தெரியவில்லை இந்த புகார் தான் தமிழ் நாட்டின் மிகப் பெரிய வழக்காக மாறப்போகிறது என.  

கிடைப்பாளா நிவி???

Advertisement