விலகிச்செல்வது ஏனோ..?? -21

 

சிறிது நேரம் அவளின் செயல்களை புரியாத பார்வையோடு பார்த்தவன்,பின் மென் சிரிப்போடு எதுவும் சொல்லாமல் சென்று வேலை செய்ய ஆரம்பித்தான்…தனது எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு அடக்கிய ஜெயஸ்ரீயும் வேலையை செய்ய ஆரம்பித்தாள்…இருவரும் தத்தம் வேலையில் மூழ்கி போயினர்…

 

இருவரும் தத்தம் வேலையில் மூழ்கி இருக்க நேரமும் யாருக்கும் காத்திராமல் ஓடிக்கொண்டு இருந்தது…இடையிடையே சந்தேகங்களையும் ஜெயஸ்ரீ விஜயிடம் கேட்டு தீர்த்துக்கொள்ளவும் தயங்கவில்லை..

Advertisements

 

விஜயும் ஜெயஸ்ரீயின் சந்தேகங்களை சுலபமாக அவளுக்கு புரியும் வண்ணம் விளக்கினான்..தனது சந்தேகங்களை விஜய் தெள்ள தெளிவாய் விளக்க ஒவ்வொன்றையும் தனது குறிப்பேட்டில் குறித்துக்கொண்டே வந்தவளின் சிந்தனைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு விஜயின் விளக்கத்திற்கு காது கொடுக்காமல்,விஜயினையே பார்த்துக்கொண்டு இருந்தது…

 

அவளது சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டு இருந்தவன்,சிறிது நேரம் ஜெயஸ்ரீயிடம் இருந்து பதில் இல்லாமல் போக அவளை திரும்பி பார்த்தவனின் கண்களில் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவள் தான் பட்டாள்…

 

அவளது கண்களில் தொலைக்க இருந்த தன் மனதை பெரும்பாடுபட்டு அடக்கி,அவளை “ஜெயஸ்ரீ…”என சற்று கோவமாய் அழைக்க..கனவில் இருந்து விழிப்பவள் போல ஜெயஸ்ரீ விழிக்க “என்ன கனா கண்டுட்டு இருக்கீங்க..நான் சொன்னது எல்லாம் புரிஞ்சதா..??”என கேட்க…ஜெயஸ்ரீ “ஹ்ம்ம்…”என்று நன்கு தலையினை ஒரு உருட்டு உருட்டினாள்..

 

“ஹ்ம்ம்…என்ன புரிஞ்சதோ..சரி முடிங்க..சீக்கிரம் கிளம்பலாம்..”

என்றவன் தனது கணிணியை அணைக்க ஆரம்பித்தான்…ஜெயஸ்ரீயும் அவசரமாய் தனது கணிணியின் முன் அமர்ந்து இருக்கும் வேலையினை எல்லாம் முடிக்க ஆரம்பித்தாள்…

 

சிறிது நேரம் செய்துகொண்டு இருந்தவள்,அவள் எதிர்பார்த்த அளவு அவளின் டிசைன் சரி வர அமையாமல் போக விஜயிடம் கேட்க எண்ணி அவள் திரும்பவும்,விஜய் “என்ன ஜெயஸ்ரீ முடிச்சாச்சா..”என கேட்டுக் கொண்டே அவளின் பின் வந்து நிற்கவும் சரியாய் இருந்தது…

 

ஜெயஸ்ரீ”இல்ல விஜய்..இன்னும் முடிக்கல..இது என்னவோ ஒழுங்கா வரவே மாட்டன்னு இருக்கு…”என சிணுங்கிக்கொண்டே அவள் சொல்ல..”இரு இரு..அழுகாத…என்னன்னு பார்க்கலாம் ” என சிரித்துக்கொண்டே விஜய் அவளிடம் சொன்னவன் அவளது கணிணியில் அவள் செய்ததை பார்வையிட துவங்கினான்…

 

மிக அருகில் இருக்கும் விஜயிடம் இருந்து வரும் ஆப்டர் ஷேவ் லோசன் அவளை மிகவும் கிறங்கடிக்க தொடங்கியது…மனதினை ஒரு திட்டு திட்டி அடக்கியவள்,விஜய் என்ன செய்கிறான் என பார்வையாளராய் பார்வையிட துவங்கினாள்.சிறிது நேரம்    

அவள் செய்து இருந்த கோடினை(CODE) பார்வையிட்டவன்,அதில் இருக்கும் தவறினை கண்டுபிடித்தவன்,”இங்க பாருங்க ஜெயஸ்ரீ…”என அவளிடம் சொல்லியவன்,தனது கையில் இருந்த மௌஸை கொண்டு சுட்டிகாட்டியவன்,அதனை திருத்த செய்தான்…அதனை சரிபடுத்தியவன்

“சரி டைம் ஆச்சு போலாம்….மீதியை நாளைக்கு பார்க்கலாம்..”என சொல்லியவன் தனது லேப்டாப் பேக்கோடு நின்று இருந்தான்…

 

ஜெயஸ்ரீ அவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டு இருக்க…”என்ன ஜெயஸ்ரீ வர ஐடியா இல்லையா…??…ஹ்ம்ம்..போலாம் போலாம்..கம் ஆன்…”என சொல்ல..ஜெயஸ்ரீ அவனை முறைத்து பார்த்துக்கொண்டு நின்றுக்கொண்டு இருந்தாள்…

 

ஜெயஸ்ரீ முறைப்பதை,புரியாத பார்வையோடு பார்த்துக்கொண்டு இருந்தவன்,பின் “என்ன ஜெயஸ்ரீ என்ன அப்படி முறைச்சு பாக்குறீங்க…”என கேட்க..ஜெயஸ்ரீ எதுவும் சொல்லாமல் தனது உடமைகளை எல்லாம் எடுத்து வைத்தவள்,பின் கணிணியை அணைத்துவிட்டு “போலாமா..”என சற்று கோவமாக சொன்னவள் அவனின் பதிலுக்கு எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமல் முன்னே நடக்க ஆரம்பித்தாள்..  

 

“என்னாச்சு இவளுக்கு,எதுக்கு இப்படி கோவமா போறா…”என யோசித்தவன் பின் அவளின் பின்னே வந்தான்..அறையை விட்டு வெளியே வந்தவள் லிப்டில் நுழைந்துகொண்டாள்…விஜய் வரும்முன் அவள் லிப்டினை மூட முயல..சட்டென்று விஜய் உள்ளே அவசரமாய் நுழைந்து கொண்டான்…

 

விஜய் இப்போது ஜெயஸ்ரீயினை முறைக்க,ஜெயஸ்ரீயும் அவனுக்கு சற்றும் குறைந்தவள் இல்லை என்று அவனை பார்த்து முறைத்தாள்..விஜய்க்கு ஜெயஸ்ரீயின் இந்நடவடிக்கை சற்று குழப்பத்தை கொடுத்தது…லிப்ட் கீழ் தளம் வர,ஜெயஸ்ரீ வெளியேறவும்,மீண்டும் அவளின் கோவத்திற்கு என்ன காரணமாய் இருக்கும் என விடை தெரியாமல் குழம்பிய முகத்துடனே அவனும் லிப்ட்டில் இருந்து வெளிவந்தான்…   

 

விஜயிடம் எதுவும் சொல்லாமல் ஜெயஸ்ரீ தனது பெப்பியை உதைத்துக்கொண்டு இருந்தாள்…அங்கு இருந்த காவலாளியிடம் பேசிவிட்டு வந்தவன்,ஜெயஸ்ரீயின் வண்டியின் முன்னால் நின்று கொண்டு அவளின் செய்கையை மென்சிரிப்போடு பார்த்துக்கொண்டு இருந்தான்…

 

விஜயின் மேல் இருக்கும் கோவத்தை எல்லாம் அதன் மேல் காட்ட அதுவோ…பெரும் சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகி நின்றது…அதனை பார்த்து விஜய் “ஹா ஹா ஹா..”என சற்று உரக்கவே சிரிக்க…ஜெயஸ்ரீ பார்த்த

பார்வையில் தன் கைகளை கொண்டு வாயினை மூடிக்கொண்டவன் கண்களோ ennavo இன்னும் சிரித்துக்கொண்டே இருந்தன…

 

“என்ன சிரிப்பு வேண்டி கடக்கு..எனக்கு நேரம் ஆகுது..வழிவிட்டா நான் போயிட்டே இருப்பேன்..கொஞ்சம் வழி விட்றீங்களா…”என சூடாய் கேட்க…”சரி…”என தலை அசைத்தவன்,”ஆனா எதுக்கு இந்த கோவம் அப்படின்னு சொல்லிட்டா…நான் போகவிட்றேன்..”என சொல்ல…

 

“உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல…”என பட்டென்று பதில் வந்தது ஜெயஸ்ரீயிடம் இருந்து…”ஹ்ம்ம் அப்படியா..??..அவசியம் இல்லையா..??”என விஜய் புருவத்தை உயர்த்தி பவ்வியமான வியப்போடு கேட்க ஜெயஸ்ரீ முகத்தை திருப்பிகொண்டாள்…

 

“முகத்த திருப்புனா என்ன அர்த்தம்,பதில் சொல்லுங்க மேடம்…”என விஜய் மீண்டும் நக்கலோடு கேட்க..”

 

“ஒண்ணும் இல்ல…”என ஜெயஸ்ரீ சொல்ல…”என்னது ஒண்ணும் இல்லையா..??..ஒண்ணும் இல்லாம தான் அப்படி மேடம் என்னைய முறைச்சீங்களோ..??”என கிண்டலாய் கேட்டவன்…”நீ பதில் சொல்ற வரைக்கும்,நான் வழி விட மாட்டேன்..”என சொல்ல..

 

ஜெயஸ்ரீக்கோ..”ஐயோ…இவன் வேற..பேசாம இருந்தாவே நான் புல்லா பிளாட் ஆகிடுவேன்..இதுல நீயே வந்து பேசுனா என்னோட நிலைமை என்ன ஆகும்..மடையா..??..”என்று செல்லமாய் அவனை திட்டியவள்..

 

பின் சொல்லாமல் விடமாட்டான் என தெரிய “நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்..சீக்கிரமா போறேன்னு சொன்ன என்னைய வேல செய்னு சொல்லி, 9 மணி வரைக்கும் வொர்க் பண்ண சொல்லிட்டு,கடைசியில வேலையை முடிக்காமலே அழைச்சிட்டு வந்துட்டீங்க…”என கோவமாய் கேட்க…

 

“ஓ..மேடம்க்கு இதுக்கு தான் கோவமா..??”என சிரிப்புடனே கேட்டவன்..மீண்டும் ஜெயஸ்ரீ அவனை முறைக்க துவங்க,”சரி சரி முறைக்காத..இன்னும் வொர்க் பண்ண ஆசை இருந்தா நீ தாராளமா வொர்க் பண்ணலாம்..ஆனா நான் இங்க இருக்க மாட்டேன்..தனியா இருந்து செய்வீன்னா…எனக்கு ஓகே..சரி நீ போய் வேலையை பாரு…நான் கிளம்புறேன்..துணைக்கு செக்யூரிட்டியை பக்கத்துல உட்காரவச்சுக்கோ…”என்றவன் தனது ராயல் என்பீல்ட்டை ஸ்டார்ட் செய்தான்…

 

அவன் அப்படி சொல்லவும் சில நிமிடம் திருதிருவென முழித்தவள் ”அய்யோ…மீண்டுமா..என்னால எல்லாம் முடியாது..ஸ்ரீ உன் வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டா…ஒழுங்கா அடக்கிவாசி,இந்த நேரத்துல யாரும் இல்லாத அந்த ப்ளோர்ல தனியா எப்படி உட்கார்ந்து நீ வேலை செய்வ..அவனே விட்டான்னு சந்தோஷபட்றது விட்டுட்டு உனக்கு எதுக்கு தேவையில்லாத கோவம்…அவன் போறான் பாரு…நீயும் கிளம்பு..”என அவளது மனது அவளுக்கு அறிவுரை வழங்க அதனை கேட்டுக்கொண்டவள் சின்ன சிரிப்புடனே தனது பெப்பியினை அவனின் ராயல் என்பீல்ட் அருகில் சென்று நிறுத்தினாள்…

 

அவளது சிரிப்பினை கண்டு,தனக்குள் ஏற்பட்ட புன்னகையை உள்ளுக்குள் விழுங்கியவன் “என்ன நீங்க போகலையா..??..நீங்க இவ்ளோ நேரம் போய் இருப்பீங்க அப்படின்னு இல்ல நினச்சேன்,,,நீங்க என்னடான்னா இன்னும் இங்க இருக்கீங்க…”என சற்று நக்கலோடு கேட்க…

 

“ஓவரா என்னைய காலாய்க்கிற நீ..உனக்கு இருக்கு இரு..”என மனதிற்குள் கருவியவள் “எப்படி விஜய் நீங்க பொறுப்பு இல்லாம பேசுறீங்க…நீங்க ஒண்ணு சொன்னா அதுக்கு மறுப்பு இருக்குமா..லேட் ஆகிடுச்சு இன்னும் வேலையை முடிக்கல அப்படின்ற கோவத்துல தான் அப்படி நடந்துகிட்டேன்…சாரி…”என பொய்யாய் மன்னிப்பு கேட்க…

 

அவளின் நடிப்பினை கண்டுகொண்ட விஜயும் “என்கிட்டயா நடிக்கிற..பெரிய இவ மாதிரி பொறுப்பு பருப்புனு சொல்லிட்டு இருக்க..உன்னோட தில்லாலங்கடி வேலையை எல்லாம் என்கிட்ட வச்சிக்காத..உன்னோட கோவம் என்னன்னு எனக்கும் தெரியும்..வேலை முடிச்சே ஆகணும்ன்னு உன்ன நிறுத்தி,கடைசியில  வேலையை முடிக்காம இழுத்து வந்தது தான…நீ முன்னாடியே போய் இருந்தா உன்னோட கொஞ்ச நேரம் என்னால இருந்து இருக்க முடியுமா..எனக்கு அந்த கொஞ்ச நேரமே போதும்..அதான் இப்படி பண்ணேன்..புரியாத மக்கே இருக்கியே”என மனதிற்குள் அவளிடம் பேசிக்கொண்டு அவளின் தலையில் அவளுக்கு வலிக்கா வண்ணம் கொட்டினை வைத்தவன்…

 

தன் முன்னால் இருக்கும் ஸ்ரீயினை பார்த்து “பரவாயில்லை…”என்றவன்  வன்…”நீங்க கிளம்புங்க..நேரம் ஆகுது…”என்றவன் தனது பைக்கை ஸ்டார்ட் செய்தான்…ஜெயஸ்ரீயும் தனது பெப்பினை இயக்கியவள் “சரி…குட் நைட்…பா……” என கடைசியில் “பாய்…”என  சொல்ல வந்தவள் சட்டென்று நாக்கினை கடித்துகொண்டு “டா டா…”என சொல்லிவிட்டு சிட்டென அங்கு இருந்து கிளம்பி விட்டாள்…

 

கிளம்ப எத்தனித்த வேலையில்,அவளின் கடைசி வார்த்தை காதில் விழுந்து அவனின் வேதனையை தூண்டும் வண்ணம் அமைந்தது..

அவளுக்கும் அவனுக்கும் இடையேயான சிறு சிறு விஷயமும் அவர்களுக்குள் மென்மையான விஷயமாய் இருந்தது…தினமும் இரவில் “ஹாய்..”என ஆரம்பிக்கும் சில மெசேஜ் பின் “சாப்டியா..??” “என்ன பண்ற…” என நீண்டு கொண்டே போகும்…தினமும் கல்லூரியில் நடப்பதை மெசேஜ் மூலமே ஒரு ஒளிபரப்பை நடத்தி விடுவார்கள் இருவரும்…

 

அப்படி ஒரு நாள் இருவரும் மெசேஜ் மூலம் பேசிக்கொண்டு இருக்க,அன்றைய கோட்டா கேள்வி-பதில் பகுதி முடிந்து,நிறைவு பகுதியை தொட்டுக்கொண்டு இருந்தது..ஜெயஸ்ரீ “குட் நைட்…”என மெசேஜ் அனுப்பியவள் பின் “பாய்…”என அனுப்ப…விஜய் கொண்ட கோவத்திற்கு அளவே இல்லை..

 

அவளுக்கு அழைத்தவன் “ஹே என்னடி பாய்னு மெசேஜ் பண்ற..”என சற்று கோவமாய் கேட்க…”இதுல போய் என்ன இருக்கு…பாய்னா…டா டான்னு அர்த்தம்..அதுக்கு எதுக்கு கோவபட்றீங்க…”என ஜெயஸ்ரீ பொறுமையாய் கேட்க…விஜய்க்கு எப்படி சொல்வதன்று தெரியாமல் விழித்தவன்,தன் உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கலானான்…

 

”ஜெய் தயவுசெஞ்சு..இனிமேல் பாய் சொல்லாத….நீ அப்படி சொன்னா என்கிட்டே இருந்து நீ புரிஞ்சி போற மாதிரி இருக்கு..என்னால அப்படி நினைச்சு கூட பார்க்க முடியல…என்னால உன்னை என்னைக்கும் புரிஞ்சி போக முடியாது…நீ பிரிஞ்சி போகவும் விடமாட்டேன்…இனி பாய் சொல்லாத….”என உருக்கமாய் கரகரப்பான குரலில் சொல்ல அவனின் பேச்சில் ஜெயஸ்ரீ உறைந்து போனாள்…

 

ஒருவனால் இதைவிட வேறு எப்படி தனது அன்பை வெளிபடுத்த முடியும்…அவனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அளவிற்கு ஜெயஸ்ரீ ஒண்ணும் கல்நெஞ்சுகாரி அல்லவே…அன்று முதல் இருவருக்கும் இடையில் பாய் என்ற ஒரு வார்த்தை ஒட்டுமொத்தாய் உபயோகிப்பது நின்றது…

 

அவனின் பேச்சு அவளுக்குள் ஒரு மெல்லிய மழைச்சாரலையே தோற்றுவித்தது..இருவருக்கும் இடையில் காதலையே சொல்லாமல் ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் புரிந்துக்கொண்டு,அதற்கு ஏற்றார்போல் தன்னுடைய உணர்வுகளை உணர்த்திக்கொண்டு,”I LOVE YOU” என்ற மூன்று வார்த்தையின் பரிமாற்றம் இல்லாமலே அங்கே காதல் என்ற ஒரு நுண்ணிய உணர்வு இருவருக்குள் மெல்லிய மணத்தை பரப்ப தொடங்கியது…

 

அப்படி பட்ட அந்த உணர்வபூர்வமான வார்த்தையை நீண்ட நாட்கள் கழித்து கேட்ட விஜயினுள் ஆனந்ததிற்கு பதிலாக வேதனையே பெரிதானது…

 

இத்தனை நாள் கழித்தும் அன்று அவன் பட்ட அந்த அவமானம் இன்றும் கண் முன்னே நடந்தது போல அவனுக்கு பெரும் வேதனையை தந்தது…காலபோக்கில் காயங்கள் மறையும் என்பதற்கு எதிர்மறையாய் விஜயின் மனதின் காயம் நாளுக்கு நாள் அவன் மறக்கா வண்ணம் ஜெயஸ்ரீ என்ற ரூபத்தில் அவன் முன்னால் நடை பழகிக்கொண்டு இருந்தது…

 

ஆனால் அவன் அறியாத ஒன்று,காயத்தினை கிளரும் ஜெயஸ்ரீயே தான் என்றும் தன்னுடைய காயத்தின் மருந்து என்று..ஜெயஸ்ரீ கிளம்பியதை அப்போது தான் உணர்ந்தவன் தனது அபாச்சியினை இயக்கினான்அவன் வெளியில் சென்று பார்க்க ,அத்தெருவில் ஜெயஸ்ரீ இருப்பதற்கான அறிகுறி  ஒன்றும் அவனுக்கு…

 

ஆனால் அவன் அவனின் மனமோ “இத்தனை நாள் தனியாய் சென்றவளுக்கு இன்று போக தெரியாதா ..”என்று அவனை இடித்துரைத்தது…

 

ஆனால் அவன் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவளுக்கு அலைபேசியில் முயற்சித்துக்கொண்டு இருந்தான்…ஆனால் ஜெயஸ்ரீ அவனின் ஒரு அழைப்பையும் ஏற்கவில்லை…மீண்டும் இரு முறை முயற்சித்தவனுக்கு சுவிட்ச் ஆப் என்ற பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் தான் அவனுக்கு பதிலாய் அமைந்தது…


அவளை சீக்கிரமே அனுப்பி வைத்திருக்க வேண்டுமோ…தேவை இல்லாம இப்போ டென்ஷன் ஆகிட்டு இருக்கோம்..ராட்சசி போன் எடுத்து ஒரு வார்த்தை பேசுனா என்ன..கொழுப்பு அவ்வளவும் கொழுப்பு அவளுக்கு” என அவனின் மனம் அவளின் மேல் கோவம் கொண்டு மீண்டும் முருங்கை மரம் ஏறத்தொடங்கியது..

 

மீண்டும் மீண்டும் அவளுக்கு முயற்சித்துகொண்டு இருந்தவன் பின் தனது அறைக்கு செல்ல ராயல் என்பீல்ட்டை இயக்கினான்…

 

வழியில் நின்று கொண்டு தனது நகவிரல்களை எல்லாம் கடித்து துப்பிக்கொண்டு இருந்தாள் ஜெயஸ்ரீ..அவளது செல்ல பெப்பி அவளுக்கு சிறிதும் உதவாமல் தனது இயக்கத்தை அறவே நிறுத்திக்கொண்டது அவள் 2 கிலோமீட்டர் கடந்து வந்ததும்…

 

சிறிது நேரம் அதனை சரிபடுத்த எண்ணி அதனுடன் போராடியவள் விஜய் செய்த அனைத்து அழைப்பையும் ஏற்காமல் விட்டுவிட்டாள்..

அவனுக்கு தான் இங்கு இருப்பதை தெரிவிக்கலாம் என எண்ணி அவள் அவனுக்கு அழைக்க எடுத்து அவனைது பெயரினை அவள் தேடவும்,மொபைல் சுவிட்ச் ஆப் ஆகவும் சரியாய் இருந்தது…”ச்ச இது வேற நேரம் காலம் தெரியாம உயிரை வாங்கிட்டு…”என அதனை தனது ஹான்ட் பேக்கில் போட்டாள்…

 

நேரம் ஆக ஆக ஜெயஸ்ரீக்கு தொண்டையில் ஒரு பயபந்து உருள ஆரம்பித்தது..என்ன தான் வழியில் வண்டிகளும்,கார்களும் பறந்துக்கொண்டு இருந்தாலும்,இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு தினம் தினம் என்னவோ பல கொடுமைகள் மற்றவர்கள் கண் முன்னாடியே நடந்தாலும்,அதனை உடனே தட்டிகேட்காமல் போட்டோ எடுத்து பேஷ்புக்,ட்விட்டர் என போடும் மக்கள் ஏராளம் என்ற நிதர்சனம் அவளுக்கு ஒரு பயத்தை கொடுத்தது…

 

“ஜெயஸ்ரீ தேவை இல்லாம இப்படி வந்து நடுரோட்ல நின்னுட்டு ஜபம் பண்றதுக்கு பதிலா அங்கவே என்னன்னு பார்த்து சரி பண்ணிட்டு வந்து இருக்கலாம்..ஏன் பெப்பி இப்படியா என்னை பழி வாங்குவ..கொஞ்சம் கூட நீ சரியில்ல…”என பொய்யாய் அதனிடம் கோவம் கொண்டவள்,

ஏதாவது ஆட்டோ வருமா என பார்க்க ஆரம்பித்தாள்…

 

வந்த ஒரு இரு ஆட்டோவும் சவாரியோடு வர அடுத்து வரும் ஆட்டோவிற்கு காத்திருக்க ஆரம்பித்தாள்..10 நிமிடம் கழித்து ஒரு ஆட்டோ வர, “ஆட்டோ..”என கை காட்டி அதனை நிறுத்தியவள் “எலெக்ட்ரானிக் சிட்டி…” என சொல்ல…”3௦௦ ருபீஸ்..”என கன்னடத்தில் சொல்ல…”கன்னடம் தெரியாதவள் தனக்கு தெரிந்த கன்னடத்தில் அவனிடம் பேசி  2௦௦ ரூபாய் குடுப்பதாக சொல்லி,அவனை சம்மதிக்க வைத்தவளுக்கு அப்போது தான் உரைத்தது அவளின் பப்பி நடு ரோட்டில் இருப்பது…

 

என்ன செய்வது என தெரியாமல் விழித்தவள்,நிற்கும் ஆட்டோக்காரனை பார்த்தாள்…அவனோ “எவ்ளோ நேரம்மா..சீக்கிரம் ஏறு…நேரம் ஆகுது…நீ வரல அப்படின்னா சொல்லு எனக்கு ஆயிரம் சவாரி வரும்..நிக்க வச்சிட்டு பிலிம் காட்டிட்டு இருக்க…”என கன்னடத்தில் அவளை திட்ட துவங்கி இருந்தான்…

 

“பக்கி உன்கிட்ட எல்லாம் நான் பேச்சு வாங்க வேண்டி இருக்கே..

தமிழ்ல பேசி இருந்த இவ்ளோ நேரம் நீ காலி..ஆனா எனக்கு கன்னடம் தெரியாது அப்படின்னு கன்னடம் பேசிட்டு இருக்க..பேசுறியோ,

திட்றியோ,ஆனா உன்னோட பாவனை எல்லாம் பார்த்தா திட்ற மாதிரி தான் இருக்கு..”என தனக்குள்ளே பேசிக்கொண்டு இருந்தவள் அருகில்

சர்ர்ர் என்று வண்டி வந்து நிற்கவும் துள்ளி குதித்து விலகியவள் யாரென்று நோக்க வண்டியில் இருந்து விஜய் இறங்கிக்கொண்டு இருந்தான் கோவமாக…

 

மிரட்சியாய் அவனை நோக்கியவளை கண்டுகொள்ளாமல்,

ஆட்டோக்காரனிடம் சென்றான்..பின் அவனிடம் என்னவோ கன்னடத்தில் பேசி,அவனது கையில் ஒரு 50 ரூபாய் தாளை திணித்து அனுப்பிவிட்டு ஜெயஸ்ரீயின் பக்கம் திரும்பியவன்,அவளது அருகில் இருந்த வண்டியினை பார்த்தவன் அது இப்போதைக்கு சரியாகாது என்று உணர்ந்து,மெக்கானிக்கிற்கு போன் செய்து வரவரவழைத்தான்…

 

அடுத்த 15 நிமிடம் மெக்கானிக் வந்தவன்,சிறிது ஜெயஸ்ரீ பப்பியிடம் போராடிவிட்டு பின் அதனை சரி செய்தான்…இதை எல்லாவற்றையும் ஜெயஸ்ரீ அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டு இருக்க,பணத்தினை மெக்கானிக்கிற்கு குடுத்துவிட்டு வந்தவன் ஜெயஸ்ரீயின் முன் சொடக்கிட்டு அவளை நினைவிற்கு கொண்டு வந்தான்…   

 

கோவமாய் அவளை முறைத்தவன் “உன்ன எல்லாம் என்ன பண்றது,போன் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டியா..??,போன் பேசாதவளுக்கு எதுக்கு போனு,இந்த ஓட்ட பெப்பியை வச்சிட்டு எதுக்கு உனக்கு எல்லாம் வெத்து சீனு…”என திட்ட தொடங்க..

 

எல்லாவற்றையும் பொறுமை கேட்டவள் “என்னைய என்ன வேணும்னாலும் சொல்லுங்க..என்னோட பெப்பியை எதுவும் சொல்லாதீங்க.எனக்கு கேட்ட கோவம் வரும்…”என கோவமாய் சொல்ல…”இந்த கோவத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..

கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா,போன் இல்லாம யாருன்னே தெரியாத ஒருத்தன் கூட ஆட்டோல போவ,உனக்கு தெரிஞ்ச என் கூட வரமாட்ட அப்படி தான..அவன் உன்னை எங்கவாவது கடத்திட்டு போய் இருந்தா என்ன பண்ணி இருப்ப..”என அவனும் கோவமாய் சொல்ல…

 

ஜெயஸ்ரீயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…அவளை நோக்கியவன் அவளது அழுவது காண சகிக்காமல்,”நடு ரோட்ல நின்னுட்டு அழுதுட்டு இருக்காத,யாராவது பார்த்தா தப்பா பேசுவாங்க…,வண்டியை எடு,போலாம்..” என பொறுமையாய் சொல்ல..

 

“நான் அழுவுறது உங்களுக்கு பெருசா தெரியல,யாராவது தப்பா பேசிடுவாங்க அப்படின்னு தான் என்ன அழ வேண்டாம்னு சொல்றீங்க..”என மூக்கை உறிஞ்சிக்கொண்டே சொன்னவள்,”நீங்க ஒண்ணும் வர வேண்டாம்,நானே போய்க்கிறேன்..”என அவனிடம் முறிக்கிக்கொண்டு தனது பெப்பியினை இயக்கியவள்,போகும் முன் அவனை முறைத்துவிட்டு சென்றாள்…“உன் பின்னாடி நான் எதுக்கு வரணும்..எனக்கு வேற வேலை இல்ல…”என பின்னால் விஜய் கத்துவது அவளின் காதில் தெளிவாய் விழுந்தது..

 

“முறைக்கிறதே இப்போ எல்லாம் பொழப்பா வச்சு இருக்கா..கொஞ்ச நேரத்துல எப்படி எல்லாம் உயிரையை எடுத்துட்டா…நான் மட்டும் பார்க்காம நேரா போயி இருந்தா,என்ன ஆகுறது…அந்த ஆட்டோகாரன் பேச்சும்,பார்வையும் கூட சரியில்ல…எப்படி தான் அவனை நம்பி போக தயாரானாளோ…தேவுடா…இவளை வச்சிட்டு எப்படி தான் சமாளிக்க போறனோ..காப்பாத்து..”என வேண்டியவனுக்கே தெரியவில்லை அவளை தான் ஏன் சமாளிக்க வேண்டும் என்று…

 

என்னதான் ஜெயஸ்ரீ கோவமாய் போனாலும்,தானும் அவள் பின்னால் வரமாட்டேன் என்று சொன்னாலும்,அவள் ஹாஸ்டல் சென்று சேரும்வரை தன்னால் நிம்மதியாய் ரூமில் இருக்க முடியாது என்ற நிதர்சனம் உரைக்க,அவளின் பின்னே சற்று இடைவெளிவிட்டு சென்றான்…

 

ஒரு வளைவில் திரும்பியவள்,பின்னாலே விஜய் வருவது தெரிய மென் சிரிப்போடு ஹாஸ்டல் உள்ளே சென்று பெப்பியினை நிறுத்தினாள்…வளைவிலேயே தனது வண்டியினை நிறுத்தியவன்,

ஜெயஸ்ரீ உள்ளே போகும் வரை அங்கேயே நிற்காலானான்..   

 

வண்டியை நிறுத்திய ஜெயஸ்ரீ,கேட்டை மூட வருவதை கண்டு சட்டென்று தனது முகத்தை திருப்பிக்கொண்டான் விஜய்…5 நிமிடம் கழித்து அவள் உள்ளே சென்று இருப்பாள் என எண்ணி நிமிர்ந்தவன் முன் சிரிப்போடு அவனையே பார்த்துக்கொண்டு இருந்த ஜெயஸ்ரீயினை கண்டு அசடு வழிய சிரித்தான்…

 

விஜய் “என்ன ஸ்ரீ நீ இங்க என்ன பண்ற…”என ஒன்றும் தெரியாதது போல கேட்க…அவனை ஏற இறங்க பார்த்தவள் “அதை நான் கேட்கணும்…லேடீஸ் ஹாஸ்டல் முன்னாடி உங்களுக்கு என்ன வேலை…”என நக்கலாய் கேட்க…”ஒஹ் இது லேடீஸ் ஹாஸ்டல்லா,நீ இங்க தான் தங்கி இருக்கியா,நான் என்னோட ப்ரண்ட் இங்க தான் இருக்கான்..அதான் பார்த்துட்டு போலாம் அப்படின்னு வந்தேன்,எந்த வீடுன்னு தெரியல..அவனுக்கு போன் பண்ணனும்”என்றுவிட்டு தனது மொபைலை எடுத்து சில எங்களை அழுத்த போக,அவனிடம் இருந்து போனை பறித்தவள் “எவ்ளோ தான் நடிப்பீங்க ஜெய்,நடிச்சது போதும்,ரொம்ப நாள் நடிப்பை யாராலையும் தொடர முடியாது…அதை புரிஞ்சிக்கோங்க..”என அவனை பார்த்து அழுத்தமாய் சொன்னவள்,

அவனின் கையில் அவனது மொபைலை திணித்துவிட்டு சென்றாள்..

 

போகும் அவளையே பார்த்தவன் மனதில் அந்த ஒரு நாள் மட்டும் தன் வாழ்க்கையில் வராமல் இருந்து இருந்தால் என எண்ணி ஏக்கம் கொண்டான்…ஏக்கம் மட்டும் தான் அவனால் பட முடிந்தது,துணிந்து ஜெயஸ்ரீயிடம் அந்த நாளை பற்றி எடுத்து சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை…தன்னை சந்தேகித்தவளா,தன்னிடம் நெருங்கி வருகிறாள் என்று அவனுக்கும் புரியாத புதிராய் இருந்தது..

 

அதன்பின் அங்கவே நிற்பது சரியில்லை என எண்ணியவன்,தனது அறைக்கு செல்ல புறப்பட்டான்..தனது அறையில் இருந்து ஜன்னல் வழியாய் விஜயினை பார்த்துக்கொண்டு இருந்த ஜெயஸ்ரீக்கு நெஞ்சம் விம்பி தவித்தது என்றும் போல,அவனுடனே அவன் மேல் தோளில் சாய்ந்துகொண்டு பயணப்பட அவள் மனமும்,அவளின் உடலின் ஒவ்வொரு அணுவும் ஏங்கியது…

 

ஆனால் நெருங்கவே விடாதவனின் அருகில் அமர்ந்து அவன் தோள் சாய்ந்து பயணப்படுவது என்பது முடிகிற காரியம் இல்லை என்பது அவளுக்கு தெள்ள தெளிவாய் விளங்கியது…அவளின் வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருந்தனர்..அது வேறு அவளுக்கு சொல்ல முடியாத வேதனையை அவளுக்கு தந்தது…

 

அவள் அப்பா கேட்கும் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை..எவ்வளவு நாள் தான் அவளும் ஏதாவது காரணம் சொல்லி வரனை தட்டி கழிக்க முடியும்…எப்படி விஜயினை அணுகுவது என்று புரியாமல் குழம்பி தான் போனாள்…  

அவனிடம் சென்று எனக்கு என்னோட வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க அப்படின்னு சொன்னா,அவனிட பதில் என்னவா இருக்கும்,அதிர்ச்சியா என்னைய பார்ப்பானா,இல்ல அப்படியா சந்தோசம் வாழ்த்துக்கள் அப்படின்னு வாழ்த்துவானா,இல்ல அது எதுக்கு என்கிட்ட சொல்ற அப்படின்னு எடுத்தெரிஞ்சி பேசுவானா, என அவனின் செயல் என்னவாய் இருக்கும் என எண்ண தொடங்கியவள்,

இதற்கு எல்லாம் சீக்கிரம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என முடிவு செய்தாள்…

 

அதன் பின் மறுநாள் வேலைக்கு சென்றவர்கள்,எந்த பிரச்சனையும் இல்லாமல் தத்தம் வேலையினை சுலபமாய் முடித்துக்கொண்டு இருந்தனர்…எப்பவும் போல அன்றும் வேலை செய்து கொண்டு இருந்த பிரதீப்,தன் அருகில் யாரோ நிற்பது போல இருக்க திரும்பி பார்த்தவனின் கண்ணில் தயக்கமாய் நின்றுகொண்டு இருந்த வீணாவினை கண்டு புருவத்தை உயர்த்தி தனது ஆச்சிரியத்தை காட்டியவன்,எதுவும் பேசாமல் என்ன வேண்டும் என்பது போல அவளை பார்த்தான்…

 

அவனது பார்வையில் ஆச்சரியத்தையும்,என்ன வேண்டும் என கண்களால் கட்ட விதத்தையும் கண்டு “என்ன அப்படின்னு வாயை தொறந்து கேட்க முடியாதா,அப்படி தொறந்தா வாயில இருக்குற முத்து உதிர்ந்திடுமா என்ன..??..”என உள்ளுக்குள் கொதித்தாள் வீணா….

 

அவளின் மனதில் கொதிப்பது உணர்ந்தோ என்னவோ “ “என்ன..”என்றான் அவளிடம் பொறுமையாய்…நீண்ட நாட்கள் கழித்து அவளிடம் அவன் பேசும் முதல் வார்த்தை…வீணா பிரதீப்பினை பார்க்காமல் “என்னன்னு தெரியல,கோட்(CODE) ரன் பண்ணா,எர்ரர் (ERROR) வருது,நானும் எத்தனையோ முறை ட்ரை பண்ணிட்டேன்,

ஆனா என்னால எங்க தப்புன்னு கண்டுபிடிக்க முடியல..நீங்க கொஞ்சம் வந்து பார்க்க முடியுமா..”என தான் செய்யும் வேலையில் ஏற்படும் பிரச்சனையை சொன்னவள், அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்..

 

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன் பின் நீங்க போங்க,நான் வரேன்..என்று அவளை அனுப்பி வைத்தான்..வீணாவும் அவனை ஒரு முறை பார்த்துவிட்டு சென்றாள்…  

 

அவள் சென்ற பிறகு ஒரு பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சாய் குடித்து முடித்தவன்,தன்னை சமன்படுத்திக்கொண்டு அவளது கேபின்க்கு சென்றான்…

 

அவனுக்குள் ஏனோ ஒரு புதுவிதமான பதற்றம்,நடுக்கம் முதன் முறையாய்…ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை..ஏன் என்று அவன் யோசித்து அதற்கு விடை காணும் முன்பே,வீணாவின் கேபின் வந்துவிட அதற்கு மேல் அதனை சிந்திக்காமல் அப்படியே கிடப்பில் போட்டவன்,வீணாவின் சிஸ்டம் முன் அமர்ந்து என்ன பிரச்சனை என்பதை பார்க்கலானான்..

 

சிறிது நேரம் அதற்குள் எதையோ செய்தவன் “இப்போ சரி ஆகிடுச்சு,வேற ஏதாவது வேல்யு குடுத்து ரன் பண்ணி பாருங்க,

கரெக்ட்டா வரும்..”என சொல்ல,அதனை ஒரு மெல்லிய தலை அசைப்போடு கேட்டுக்கொண்டவள்,”தேங்க்ஸ்..”என்ற ஒரு வார்த்தையோடு தான் விலகி அவனுக்கு வழிவிட்டுவிட்டு,தனது இருக்கையில் அமர்ந்தாள்…

 

அவளின் பின்னால் நின்று சிறிது நேரம் அவள் செய்வதை பார்த்தவன்,”வீணா..”என்று ஏதோ சொல்ல வர,அவனின் அழைப்பை கேட்டு அவனை பார்த்தவள்,அவன் என்ன சொல்ல வருகிறான்,என கேட்க ஆவலோடு திரும்ப,பிரதீபோ எதுவும் சொல்லாமல் “இப்போ கரெக்டா வருதுல்ல,இனி எந்த பிரச்சனையும் வராது,அப்படி வந்தா சொல்லுங்க,நான் என்னோட கேபின் போறேன்..”என்றவன் அவளிடம் சிறிது தயக்கத்துடனே வந்த தலை அசைப்பை கண்டுவிட்டு வெளியேறினான்…

 

தனது அறைக்கு வந்தவனுக்கு,ஏனோ மனம் முழுக்க பாரத்தோடு இருப்பது போன்ற பிரம்மை உண்டானது…வீணாவிற்கோ ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்து அவளின் நெஞ்சில் வைத்தது போன்ற உணர்வு அவளுக்குள்..ஏன் இப்படி தவித்து போகிறோம் என்று அறியாமல்,இங்கே இருந்தால் எங்கு தன் சுயநினைவை எல்லாம் இழந்து தினம் தினம் தவித்து போவோமோ என்று பயந்தவள்,செய்யும் ப்ராஜெக்ட் முடிந்து அவளின் அண்ணனை பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவு எடுத்தவள்,அவளின் அண்ணன் மாதவனுக்கும் போன் செய்து தான் அங்கு வந்து 4 நாட்கள் தங்குவதை சொன்னாள்..

 

அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது,அதனை அவனும் வெளிபடுத்தினான்…”நிஜமா வீணா,எப்போ வர,நீ சொன்னதை கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு..”என சொல்ல,

 

வீணாவும் சந்தோசமாக “நிஜம் தான் அண்ணா,நான் சொல்றத நம்ப மாட்டீங்களா…”என சிணுங்களோடு கேட்க,அவளின் சிணுங்களை கேட்டவன்,சிரிப்போடு “என்னோட தங்கச்சி சொல்றதை நான் நம்பமாட்டேனா,அதை விட வேற என்ன எனக்கு வேலை இருக்கு சொல்லு,சரி டா எப்போ வர நீ..??”என கேட்டான்..

 

வீணா“நியூ ப்ராஜெக்ட் போயிட்டு இருக்குணா அது இன்னும் கொஞ்ச நாள்ல முடிஞ்சிடும்,நான் இன்னும் லீவ்க்கும் சொல்லல,ப்ராஜெக்ட் முடிஞ்சா தான் லீவும் குடுப்பாங்க,பேசிட்டு எப்போ வரேன்னு சொல்றேன்னா…”என்றவள் சிறிது நேரம் அவனிடம் பேசிவிட்டு வைத்தவள் வேலையில் மூழ்கினாள்…

 

அனைவரும் செய்த வேலைகளை எல்லாம் ஒன்றாய் ஒரே சிஸ்டமில் பதிவு செய்த விஜய்,அதனை கிளைன்ட்டிற்கு காட்ட வேண்டிய பிரசென்டேசன் அனைத்தும் தயார் செய்ய வேண்டிய வேலையில் இறங்கி இருந்தான்…

 

அனைவரும் ஓர் அளவிற்கு வேலையை முடித்து இருக்க,ஜெயஸ்ரீயின் வேலை மட்டும் பாதியிலையே இருந்தது..

 

அவளால் முடிந்த அளவிற்கு அவள் செய்தாலும்,விஜய் அவளுக்கு கொடுத்து இருந்த வேலை இரு ஆள் செய்யக்கூடிய வேலை என்பது அவனுக்கும் சரி,அவளுக்கும் சரி தெரிந்த ஒன்றே…இருந்தும் என்ன செய்ய வேலை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வேலையை பகிர்ந்தவனுக்கு ஜெயஸ்ரீக்கு அதிக பாரம் கொடுத்தது கஷ்டமாய் தான் இருந்தது…அப்படியாவது வேலையின் காரணம் காட்டி ஆவலுடன் சிறிது நேரம் செலவழிக்க ஆசை கொண்ட அவன் மனம்,அவள் அறியா வண்ணம் அவளின் ஒவ்வொரு அசைவையும்,சிறு கோவத்தையும்,

எரிச்சலையும்,சிணுங்கலையும் உள்ளுக்குள் ரசித்தது…  

 

பிரசன்டேசன் செய்து கொண்டு இருந்தவனுக்கு பாதி வேலை முடிந்து இருக்க,மீதி முடிக்க ஜெயஸ்ரீ செய்த வேலையை அதனுடன் இணைக்க வேண்டியதாய் இருந்தது…அவள் இன்னும் முடிக்காத பட்சத்தில் அதனை இணைப்பது என்பது கஷ்டம் என்பது புரியவே எப்போ அவள் வேலை முடியும் என அறிய அவளை அழைத்தான்…

 

உள்ளே வந்தவள் “என்ன ஜெய்,எதுக்கு கூப்ட்டீங்க..”என்ற கேள்வியோடு வர,அதில் எரிச்சல் அடைந்தவன் ,”என்னன்னு சொல்லதானா கூப்ட்டேன்,அத சொல்லாம எங்க போக போறேன்..”என சிடுசிடுத்தவன்,”எப்போ மீதி வேலையை முடிப்பீங்க,நீங்க முடிச்சுட்டு ரிப்போர்ட் குடுத்தா தான் என்னால பிரசன்டேசன் முடிக்க முடியும்…”என சொல்ல..

 

தயக்கமாய் அவனை நோக்கியவள் “இன்னும் கொஞ்சம் இருக்கு ஜெய்,திங்கட்கிழமை காலையில முடிச்சிடறேன்..”என சொல்ல,அவனுக்கு கோவம வந்தாலும்,அவனால் சரி என்பதை தவிர அவளிடம் வேறதும் சொல்ல முடியவில்லை…

 

பின் “எவ்ளோ சீக்கிரம் முடிக்க முடியுமோ,அவ்ளோ சீக்கிரம் முடிங்க…இன்னும் கொஞ்ச டேட்டா வீணாகிட்ட இருந்தும்,

பிரதீப்கிட்ட இருந்து வரவேண்டியது இருக்கு…அது வந்ததும் எல்லாத்தையும் சேர்த்து வேலையை முடிக்க வேண்டியது தான்,உங்க கிட்ட இருந்து தான் கொஞ்சம் அதிகமான டேட்டா வேணும்..அதுனால எவ்ளோ சீக்கிரம் முடிக்க முடியுமோ முடிங்க…”என சொல்ல சரி என சொன்னவள்,வேற எதுவும் பேசாமல் அவளது கேபின்க்கு சென்றுவிட்டாள்…

 

ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் விதவிதமாய் விடிந்தது…அன்றைய பொழுது தனக்கு என்ன மாதிரியான விடியலை வைத்து இருக்கிறது என்று தெரியாமல் விழித்தனர் விஜயும்,ஜெயஸ்ரீயும்…

 

காலையில் தலைக்கு குளித்துவிட்டு,தலைமுடியினை துண்டால் கட்டிக்கொண்டு சமையலறையில் பரபரப்பாய் மிருணா சமைத்துக்கொண்டு இருக்க,அவளின் பின்னால் இருந்து அவளை அணைத்து “மிரு..”என பிரபு வாசம் பிடிக்க…”மிபு…”என்னது இது விடுங்க..நான் சமைக்க வேண்டாமா…”என கெஞ்சலோடு அவனிடம் இருந்து விலகியவளை இழுத்து தன் கைக்குள் கண்டு வந்த பிரபு அவளின் முகத்தில் தன் விரல்களால் கோலமிட்டான்…

 

விரல்கள் கன்னங்களில் இருந்து இடம் பெயர்ந்து அவளின் உதட்டில் நின்றது…அவளின் செவ்விதழ்கள் அவனை சுவைக்க தூண்ட அதனை நோக்கி குனிந்தவனை கலைத்தது வீட்டின் அழைபேசி அழைப்பு…

 

மிருணா “மிபு காலிங் பெல் அடிக்குது..போய் யாருன்னு பாருங்க…”என சொல்ல…

 

பிரபு “அது அடிச்சா அடிக்கட்டும்..விடு மிரு..”என்றவன் அவளை நோக்கி இன்னும் குனிந்தான்..காலிங் பெல் விடாமல் அடிக்க,தன்னிலை இருந்து வந்த மிருணா பிரபுவை தள்ளிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்…வந்தவர்களை மனதிற்குள் திட்டியவாறே கதவினை திறந்தவன் அதிர்ந்து போய் நின்றான்..

 

கனவே கலையாதே
கண்ணை விட்டு நீங்காதே
உன்னிடம் பேசிய வார்த்தைகள்
எல்லாம் எனக்கு என்றும்
இனிய நினைவுகள் தான்
நீ பேசாமல் இருந்தால்
உந்தன் மௌனமே என்னை
அணுஅணுவாய் கொல்கிறது..
பேசி பழகிய நாட்கள்
எல்லாம் எந்தன் கண்
வந்து போகிறது…
எனக்காய் உன் இதயம்
துடிக்கிறதா..??
இல்லை உனக்காய்
என் இதயம் துடிக்கிறதா..??
அறியமுடியவில்லை எனக்கு
மௌன பார்வையை எந்தன்
மீது வீசி சென்றாய்
நான் யாரென்றே
தெரியாதது போல..
மனதிற்குள் இனம் புரியா
பாரம் அந்நொடி முதல்..
உந்தன் காதல் பார்வையை
சுமந்த எனக்கு உந்தன்
கோவ பார்வையை சுமக்க
முடியவில்லை…
உந்தன் அருகாமையில்
எந்தன் மனம் பஞ்சானது..

 

விலகல் தொடரும்…