விலகிச்செல்வது ஏனோ..?? -17
அனைவரும் சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர்..நந்து வருவிடம் தனது கல்லூரி வாழ்க்கை பற்றியும்,அவனது போலீஸ் பயிற்சி பற்றியும் பேசிக்கொண்டு இருந்தான்…
நந்து பேசியதை கேட்டுகொண்டு இருந்த வருவிடம் ஹ்ம்ம்..என்ற ஒரு பதிலை தவிர வேறேதும் இல்லை…சிறிது நேரம் இதை கவனிக்காமல் தன் பாட்டில் பேசிக்கொண்டே சென்ற நந்து ஒரு நேரத்தில் வருவிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக,”டேய்ய்ய்….வரு….என்னடா என்ன ஆச்சு…ஏன் ஒரு மாதிரி இருக்க…”என நந்துவின் உலுக்கலில் அவனை பார்த்தவன் பேந்த பேந்த விழித்தான்…
“என்னடா…என்ன…”என்று வரு நந்துவினை பார்த்து கேட்க,நந்து அவனை ஒரு மாதிரி பார்த்துவைத்தான்…நந்துவின் பார்வையில் தடுமாறியவன் “என்னடா…என்ன அப்படி பாக்குற….ஏதோ புதுசா என்னை பார்க்குற மாதிரி…”என்றான் சற்று திணறலோடு..
“என்னமோ தெரியில…நீயும் இன்னைக்கு உன் நடவடிக்கையும் எனக்கு புதுசா தான் தெரியுது…”என்றான் அவனிடம் மெதுவாக…நந்து அப்படி சொல்ல வருவின் கண்கள் ஜெயஸ்ரீயினை நோக்கின…இதை கண்டுகொண்ட நந்து “ஓ…கதை அப்படி போகுதா…என் அத்தை மகளே என் நண்பனை இப்படி பைத்தியம் பிடிக்க வச்சிட்டியே…ரொம்ப மோசக்காரி நீ…”என உள்ளுக்குள் குதூகலித்தான்…
நந்துவிற்கு வருவினை பற்றி நன்றாகவே தெரியும்,வரு கோவப்பட்டு அவன் பார்த்ததே இல்லை…நந்து,வரு,பிரபு மூவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்…பிரபு மதுரைகாரனாக இருந்தாலும்,பிரபு அவனின் அம்மா வழி பாட்டியின் வீட்டில் இருந்து தான் அவனது பள்ளி வாழ்க்கையினை முடித்தான்…
மூவரும் எப்போதும் ஒன்றாய் பள்ளிக்கு செல்வதும்,வருவதுமாய் இருக்க அவர்களுக்குள் நல்ல ஒரு நட்பு உருவானது…அவர்களுக்குள் எப்போதுமே பொறாமை,சண்டை என்பதே என்றும் கிடையாது..அப்படியே நடந்தாலும் அதனோட ஆயுட்காலம் என்னவோ ஒரு மணிநேரம் மட்டுமே…
நந்துவும்,பிரபுவும் படிப்பில் அவ்வளவு கெட்டிகாரர்களாய் இல்லை என்றாலும்,அவர்கள் ஓர் அளவிற்கு படிக்க கூடியவர்களே..ஆனால் வரு நன்றாக படிக்ககூடிய மாணவன்..அது அவனது அம்மா ஆசிரியை என்பதால் கூட இருக்கலாம்…
மூவரும் பள்ளி பருவத்தினை முடிக்க,பிரபு பொறியியல் படிக்க அவனது சொந்த ஊரு மதுரைக்கும்,நந்து போலீஸ் ஆக அருகிலே உள்ள பயிற்சிக்கும்,வரு B.C.A படிக்க அவனும் அருகிலே உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்தான்…
நாளுக்கு நாள் பிரபு மற்றும் வரு,நந்து இடையிலான தொடர்பு குறைந்தது…ஆனால் வரு மற்றும் நந்து இடையிலான தொடர்பு எப்போதும் போல் எந்த தங்கு தடையும் இன்றி தொடர்ந்து கொண்டு இருந்தது அன்று முதல் இன்று வரை…
ஜெயஸ்ரீயிடம் இருந்து தன் கண்களை கஷ்டப்பட்டு நந்துவின் பக்கம் திரும்பியவன் “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைடா,நான் எப்பவும் போல தான் இருக்கேன்..ரூம்க்கு ப்ரிண்ட்ஸ் வந்து இருப்பாங்க,அவங்க என்னை தேடுவாங்களோன்னு நினைச்சேன் வேற ஒன்னும் இல்லை..”என்றான் அவனுக்கு சமாதானமாய்…
“நீ சொன்னதை எல்லாம் நம்பிட்டேன்..”என்றான்…”நந்து…”என அவனது அம்மா அழைக்க “இதோ வரேன் மா….”என்றவன் “இங்கவே இரு,அம்மா கூப்பிடறாங்க..என்னன்னு கேட்டுட்டு வந்துட்றேன்…”என்று அவனிடம் சொல்லிக்கொண்டு அவனது குடும்பத்தினரை நோக்கி சென்றான்…
வரு தன்னை கட்டுபடுத்தி கொள்ள முடியாமல்,ஒரு முறை மட்டும் அவளை பார்க்கலாம்,என எண்ணி திரும்பி அவளை பார்க்கவும்,ஜெயஸ்ரீ இவனை பார்க்கவும் சரியாய் இருந்தது…சட்டென்று ஜெயஸ்ரீயும் பார்ப்பாள் என எண்ணிராத வரு பட்டென்று முகத்தினை திருப்பிக்கொண்டான்…
அதை கண்ட ஜெயஸ்ரீயின் முகம் சுருங்கியது..”நான் என்ன செஞ்சேன்..எதுக்கு என்னை பார்த்ததும்,இப்படி பேயை பார்த்தது மாதிரி அலறி அடிச்சிகிட்டு திரும்பனும்…இந்த சுபா பண்ணதுக்கு எல்லாம் நான் என்ன பண்ணுவேன்…”என அவள் மனம் சிணுங்கியது..
கையில் அவன் அம்மா கொடுத்த ஜூஸ்களை கொண்டுவர முடியாமல் நந்து கொண்டு வர,அதை கண்ட ஜெயஸ்ரீ அவனுக்கு உதவும் பொருட்டு அவனின் கையில் இருந்த ஜூஸ்யினை வாங்கிக்கொண்டாள்…
தனக்கும் சுஜாக்கும் அவள் எடுத்துக்கொண்டு அங்கு இருந்து நகர,பெரியவர்கள் சிறிது தூரம் தள்ளி இருந்ததால் யாருக்கும் கேட்கா வண்ணம் “என்ன ஸ்ரீ…உன் ப்ரண்ட்க்கு நீ எடுத்துட்டு போற,ஏன் நான் உன் ப்ரண்ட்க்கு கொடுக்கமாட்டேனா…நான் உன் ப்ரிண்டை
கவனிச்சுக்குறேன்..நீ என் ப்ரிண்டை கவனி…”எனவும், “இல்லை…
மாட்டேன்..”என அவள் மறுப்பாய் தலையை அசைக்கவும்…”யாரும் பார்க்க மாட்டாங்க…எல்லோரும் பிஸியா பேசிட்டு இருக்காங்க…
நானும் உன் பின்னாடியே வரேன்…அவன் ரொம்ப டிஸ்டர்பா இருக்கான்..அவன் கிட்ட சாரி சொல்லிட்டு வந்திடு…”என நந்து மீண்டும் சொல்ல,சிறிது நேரம் நின்றவள் அவன் சொல்வதும் சரி எனப்பட,அவனிடம் மன்னிப்பு கேட்கும் நோக்கோடு வருவினை நோக்கி சென்றாள்…
கையில் இருந்த ஜூஸ் கீழே சிந்தும் அளவிற்கு கைகள் நடுங்க,ஜுஸ்னை வருவின் முன் நீட்டினாள்…தன் முன்னால் நடுங்கும் கையோடு நிற்கும் ஜெயஸ்ரீயினை கண்ட வருவினுள் வந்து போன உணர்வு என்னவென்று வரையறுக்க முடியாத ஒன்றாய் இருந்தது…
அவளை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டோமே என்ற குற்றுணர்வா,இனிமேல் இந்த மாதிரி அவளை தன் அருகில் பார்ப்போமா என்ற எண்ணமா ஏதோ ஒன்று அவனை வதைத்தது…
அவளை நோக்கியவன் “தேங்க்ஸ் …”என்ற ஒரு சொல்லோடு அவளின் கையில் இருந்து அவள் முகம் பார்க்காமல் வாங்கிக்கொண்டான்..
இரண்டாவது முறையாக ஜெயஸ்ரீயின் மனம் சுருங்கியது…வந்தது முதல் என்றும் மென் புன்னகையோடு தன் கண்களுக்கு காட்சி தந்தவன்,அன்றாவது ஓர் நாள் என் மேல் வந்த கோவத்தில் திட்டியவன்,பிறகு அடுத்த 5-வது நிமிடம் சிரித்து பேசியவன்,கோவம் என்ற ஒன்றை சிறிதும் மற்றவருக்கு காட்டிறாதவன் என்று நந்துவினால் புகழப்படும் வரு…இன்று முதன் முதலாய் தன் முகத்தினை பார்க்க பிடிக்காதது போல திருப்பிக்கொண்டது அவளுக்கு மிகவும் வேதனையாய் இருந்தது…
என்னவென்று சொல்லமுடியாத பாரம் அவளினுள்…ஏன் என்று தெரியாமல் அவனின் பாராமுகம் அவளினை வதைக்க,கண்களில் கண்ணீர் உற்பத்தியாகிகொண்டு இருந்தது..ஒரு துளி கண்ணீர் அவனின் கை மேல் பட்டுதெரித்தது…அவனின் முன் தன் பலவீனத்தினை காட்ட விரும்பாமல்,அழுகையுடனே அவ்விடத்தினைவிட்டு அகன்று சென்றாள் ஜெயஸ்ரீ…
தன் கையின் மேல் பட்ட கண்ணீர் துளியினை கண்டு அவளை நோக்க நிமிர்ந்தவன் கண்ணில்,போகும் ஜெயஸ்ரீயே தெரிந்தாள்..போகும் அவளையே வெறித்துக்கொண்டு இருந்தவன் இதற்குமேல் அங்கு இருந்தால் இருவருக்கும் நல்லது இல்லை என எண்ணி நந்துவிடம் சொல்லிக்கொண்டு புறப்படலாம் என நினைத்து அவனை தேடினான்…
நந்துவோ வருவிடம் இருந்து புறப்பட்டு வந்த ஜெயஸ்ரீயின் கண்களை நோக்கிகொண்டு இருந்தான்…அவளது கண்ணில் இருந்த கலக்கம் அவனுக்கு புரியவே செய்தது..வருவிடம் பேசினால் எல்லாம் சரிவரும் என எண்ணியவன்,ஜெயஸ்ரீயினை நோக்கி புன்னகைத்தான்…நந்து தன்னை நோக்கி புன்னகைக்கவும்,கஷ்டப்பட்டு தனது துக்கத்தை எல்லாம் உள்ளுக்குள் விழுங்கியவள்,அவனை நோக்கி ஒரு உயிர்ப்பு இல்லாத புன்னகை புரிந்தாள்…நந்துவிற்கும் புரியத்தான் செய்தது அவளின் கஷ்டம்…சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என உறுதி கொண்டவன்,ஜெயஸ்ரீயினை சிரிக்கவைக்கும் பொருட்டு “ஸ்ரீ…உன் ப்ரண்ட் செம ஷார்ப்,விட்டா நான் இப்பவே இவளை இழுத்துட்டு ஓடி போயிடுவேன்..எனக்கு அவ்வளவு பிடிச்சு இருக்கு இவளை..நீ தான் எப்படியாவது நம்ப வீட்ல பேசி சம்மதிக்க வைக்கணும்…ப்ளீஸ்..என்னால இவ இல்லாம இனி ஒரு நொடி கூட வாழமுடியாது…”என வசனம் பேசவும்…
அவனின் செய்கையை கண்டு நிஜமாய் சிரிப்பு வர “நம்ப வீட்ல எதுக்கு நந்தி..அவ வீட்ல சம்மதிக்கவச்சா போதும்..வேற எதுவும் தேவையில்ல..ஆனா இதுல ஒரே ஒரு கஷ்டம் மட்டும் இருக்கு…அது மட்டும் நீ சரி பண்ணா சுஜா உனக்கு தான் அதுல எந்த ஒரு மாற்றமும் இல்லை…”எனவும்
“எந்த ஒரு கஷ்டத்தையும் என் சுஜாக்காக நான் தாங்கிக்கிறேன்…நீ சொல்லு…”என்றவன் “என்ன சுஜாலு நான் சொல்றது சரி தான…”எனவும் அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு ஆமாம் ஆமாம் என்று தலையை ஆட்டினாள்…
“ஹ்ம்ம்..பாரு ..”என ஜெயஸ்ரீயை நோக்கி சொல்லியவன் “நீ சொல்லு என்ன கஷ்டம் இருக்கு..இவளோட அப்பா அம்மாவை எல்லாம் நான் என்னோட பேச்சாலே மயக்கிடுவேன்..அவளுக்கு மாமா யாராவது இருந்தா அவனை தூக்கி மிதிச்சிட்டு வருவேன்…வேற யாரு பிரச்சனை..ஹ்ம்ம்..சொல்லு..சொல்லு…யார்ன்னு…கம் ஆன்….”என பரபரக்கவும்…
“என்ன சுஜா சொல்லலாமா…வேண்டாமா…??”என சுஜாவிடம் அவள் அனுமதி கேட்க சுஜாவும் “பார்த்தா பாவமா இருக்கு,ஆனா கேட்ட பிறகு உன் அத்தை மகனோட முகம் எப்படி இருக்குன்னு காண நான் ஆவலாய் இருக்கேன்…நீ சொல்லிரு..”என சுஜாவும் அனுமதி வழங்க…
“ஹே என் அத்தை மகன் பாவம்டி…நந்தி வேண்டாம் பா…இது கேட்டா நீ ஷாக் ஆகிடுவ..வேண்டாமே விடு…ப்ளீஸ்…”என தனது அத்தை மகனை காப்பாற்ற அவள் போராட..அவனோ அதை புரிந்து கொள்ளாமல் “எல்லாமே எனக்கு ஜூஜூபி…நீ சொல்லு…நான் பார்த்துக்குறேன்…”எனவும்
ஜெயஸ்ரீயும் உன்னை இந்த கண்டத்துல இருந்து யாரு காப்பாத்த முடியும்,நல்லா கேட்டுக்கோ நான் சொல்றதை என்றவள் “சுஜாவோட கணவர் இதுக்கு சம்மதம் கொடுக்கணும்..அவர் மட்டும் கொடுத்துட்டா..உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல…அதுவும் இல்லாம சுஜாக்கு அப்பா அம்மா யாரும் இல்லை என்று வருத்தமாக நந்துவினை பார்த்து சொல்ல…
கேட்ட நந்துவின் முகம் அதிர்ச்சியை வெளிப்படையாகவே காட்டியது…அவன் சத்தியமாய் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் பார்ப்பதிலே தெரிந்தது…
சிறிது நேரம் அவகாசம் எடுத்துக்கொண்டு தெளிந்தவன் “என்ன என்ன சொன்ன..ஹே…நீ பொய் சொல்ற….”என பரபரப்புடன் அவன் கேட்க ஜெயஸ்ரீக்கு எங்காவது போய் முட்டிகொள்ளலாம் போல் இருந்தது…
எவ்வளவு சொல்லியும் அவர்கள் சொல்லியதை பொய் பொய் என நந்தி கூப்பாடு போட,ஒரு நேரத்தில் கோவமடைந்த சுஜா,தன் கழுத்தில் இருந்த சைன்யில் தொங்கிய தாலியினை எடுத்து அவன் முன் காண்பித்து, “ இதோ ஆதாரம்…இதுக்கு மேல நீ நம்பலனா..
என்னோட புருஷன் போன் நம்பர் தரேன் போன் போட்டு கேளு…” என சொல்ல,தன் கண் முன்னால் இருந்த தாலியினையும்,சுஜாவையும்,
ஜெயஸ்ரீயையும் மாறி மாறி அவன் கண்ணை கசக்கிக்கொண்டு பார்க்க அவனது செயலில் மற்ற இவர்களும் இறுக்கம் குறைந்து வாய்விட்டு சிரித்தனர்…
இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராத நந்து சுஜாவினையும்,ஜெயஸ்ரீயினையும் பார்த்து “இது எப்போ நடந்தது…”என நம்பாத குரலில் அவன் கேட்கவும் அங்கே மீண்டும் மௌனமே ஆட்சி புரிந்தது..
சிறிது பெருமூச்சு எடுத்து தன்னை நிலைபடுத்திக்கொண்டவள் “1 ½ வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்கு கல்யாணம் ஆச்சு…அவர் எங்க ஊர்ல இருக்குற தோல் பேக்டரில மேனேஜரா இருக்கார்…அவர் பேர் சதீஷ்…எங்களுக்கு நடந்தது ஒரு அவசர கல்யாணம்…என்னோட அப்பா சிவாவும், அவரோட அப்பா சொக்கனும் அதே தோல் பேக்டரில தான் வேலை பார்த்தாங்க..இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்..
என்னோட அப்பாக்கு தோல் பேக்டரில இருந்து வர கெமிகல் ஒத்துக்காம அவருக்கு தோல் வியாதி வந்துடுச்சு..எங்களோட எந்த சொந்த பந்தமும் இல்ல..வயித்து பொழப்புக்காக காரைக்குடி வந்தோம்,,அப்பா அம்மா ரெண்டு பேருமே அனாதை தான்..அப்பா முன்னாடி இருந்த ஊர்ல ஒரு வீட்ல அம்மா வேலை செஞ்சிட்டு இருந்து இருக்காங்க..அங்க டிரைவர் வேலைக்கு போன அப்பாக்கு அம்மாவை பிடிச்சு போச்சு…அம்மாக்கும் அப்பாவை பிடிச்சு போச்சு..ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க..இது அந்த வீட்டு காரங்களுக்கு பிடிக்கல..வேலையைவிட்டு தூக்கிட்டாங்க..
அதுக்கு அப்புறம் தான் பொழைப்பு தேடி காரைக்குடி வந்தாங்க..தோல் பேக்டரிக்கு வேலைக்கு போனாங்க…தோல் நோய் வந்தபோது அவர் அதுக்கு எந்த ஒரு மருந்தும் ஒழுங்கா எடுத்துக்காம அவரே ஏதோ ஏதோ இலை எல்லாம் வச்சு வைத்தியம் பார்த்துகிட்டார்…நானும் அம்மாவும் எவ்வளவு சொல்லியும் அவர் ஹாஸ்பிடல் போகல…நாளுக்கு நாள் அது அதிகமாகி அவரால நடக்க முடியாத அளவுக்கு பக்கவாதம் வந்துச்சு…ரெண்டும் சேர்த்து அவர் ரொம்ப ஒடுங்கி போய்ட்டார்…
அதுக்கு பிறகு அம்மா கூலி வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க..அப்பாக்கும் வைத்தியம் பார்த்துட்டு எனக்கும் படிப்புக்கு செலவு பண்ண அம்மா ரொம்ப தினறுனாங்க,,ஆனா அப்பா ஒரு வாரத்துலே எங்களை எல்லாம் தவிக்கவிட்டு அவர் நிம்மதியாய் போய் சேர்ந்துட்டார்…
ஒரு நாள் அம்மா இல்லாத அப்போ வீட்ல தனியா இருந்தேன்,என் வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு பொறுக்கி என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான்..அப்போ தான் சொக்கன் மாமா அப்பாவோட இறப்புக்கு வந்த பணத்தை எங்ககிட்ட கொடுத்துட்டு போலாம்னு வந்து இருக்கார்..நான் கத்தியதை கேட்டுட்டு உள்ளே வந்தவர் அந்த பொறுக்கியை தன்னோட இடுப்புல இருந்து பெல்ட்ல அடிச்சு துவைச்சு எடுத்துட்டார்…
அடிச்சு துவைச்சி எடுத்துட்டார்…வீட்டுக்கு வந்த என்னோட அம்மாக்கு விஷயம் தெரியவந்து அவங்க அழுட்டே இருந்தாங்க..சொக்கன் மாமா தான் என்னை டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போய் கீழ விழுந்து அடிபட்டுடுச்சுனு சொல்லி வெளிகாயத்துக்கு எல்லாம் மருந்து போட்டு வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தார்…இந்த விஷயம் எங்களுக்கு தவிர வேற யாருக்கும் தெரியாது…அன்னைக்கு பக்கத்து ஊர்ல தேர் இழுக்குறது இருந்ததுனால எல்லோரும் அங்க போய் இருந்தாங்க…அந்த தைரியத்துல தான் அவன் என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்து இருக்கான்…”என சொன்னவள் குரல் அன்றைய நினைவில் கமிறியது…கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன…
ஜெயஸ்ரீ அவளை அழுத்தி ஆறுதல்படுத்த,சுஜா அவளை பார்த்து புன்னகைத்தவள் மீண்டும் தொடர ஆரம்பித்தாள்…
நந்துவோ “ போதும் சுஜா,நான் சும்மா தாமசுக்கு தான் அப்படி நடந்துகிட்டேன்…ஒவ்வொருத்தரோட சிரிப்புக்கு பின்னாடி எவ்வளவு சோகமான விஷயங்கள் எல்லாம் இருக்குன்னு நான் நினைச்சுகூட பார்த்தது இல்ல…ஒவ்வொரு மனுஷனும் தன்னோட சோகங்களை மறைச்சிட்டு,வெளியில சந்தோசமா இருக்குற மாதிரிதான் நடிக்கிறாங்க..நமக்கு வேணும்ன்னா வெளியில பார்க்கறவங்களை பார்க்கும்போது வாழ்ந்தா இவங்களை மாதிரி எப்பவும் சந்தோசமா வாழணும் அப்படின்னு நினைப்போம்…ஆனா அவங்களுக்குள்ள இருக்குற சோகத்தை அவங்க மறைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படின்றது இன்னைக்கு நான் உணர்ந்துட்டேன்…உனக்கு ஏற்பட்ட பழைய கொடுமை எல்லாம் கிளறிவிட்டதுக்கு சாரி சுஜா..இனிமேல் நான் இப்படி பண்ண மாட்டேன்…” என அவன் வருந்தி சொல்லவும்…
சுஜா “ஹே என்ன பா இது இப்படி சோக கதையை பிழியிறீங்க…என்னால முடியல..”என சிரித்தவள் “நந்து நீங்க நினைக்குறது கொஞ்சம் சரி தான்..ஆனா சோகம் இருக்குறவங்க எல்லாம் அதை மறைச்சிட்டு வாழல..அதுல இருந்து வெளியில வந்து அவங்களோட வாழ்க்கையை தைரியமா எதிர்த்து போராட்றாங்க.”
“அப்புறம் இன்னும் ஒண்ணு சொன்னீங்களே..எனக்கு நடந்த கொடுமை எல்லாம் கிளறிவிட்டதுனு…நான் எப்பவும் அதை மறக்கவே மாட்டேன்…அது என்னோட ஒரு கறுப்பு தினம் அவ்வளவு தான்…அந்த கறுப்பு தினத்தை நான் பல்வேறு நல்ல தினங்களை கொண்டாடுவதிலும், என்னோட வாழ்க்கையை பார்த்துக்குறதிலும், என்னோட படிப்பிலும் நான் அதைவிட்டு வெளியில வந்து ரொம்ப நாள் ஆகுது…இதுக்காக நீங்க வருத்தபடவே வேண்டாம்…” என்றாள் மென்மையாக…
நந்து “சுஜா உன்னை பார்த்தா எனக்கு பெருமையா இருக்கு…நீ என்னைவிட சின்ன பொண்ணா தான் இருப்ப,ஆனா உனக்கு இருக்குற இந்த தைரியம் எங்களுக்கு யாருக்குமே இல்ல…நிஜமாலும் உனக்கு நான் தலை வணங்குறேன்…”என அவன் அவளுக்கு மரியாதையை செலுத்த சுஜாவோ “அய்யோ என்னது இது யாராவது பார்த்தா தப்பா நினைக்க போறாங்க…”என்றாள் பதட்டமாக…
“அவங்க என்ன நினைச்சா எனக்கு என்ன”என்றவன் ஜெயஸ்ரீயின் புறம் திரும்பி “ஆமா உனக்கு எப்போ இதுல்லாம் தெரியும்…”என்றான்..
ஜெயஸ்ரீ “ஒரு நாள் இவ குளிச்சிட்டு வெளிய வந்து,ரெடி ஆகிட்டு இருந்தா,அப்போ தலையை காயவைக்க தலையை துவட்டிக்கிட்டு இருந்த துண்டுல இவளோட செயின் மாட்டி இருந்தது,,,நான் ரூம்க்கு போனப்போ அதை எடுக்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருந்தா,நான் ஹெல்ப் பண்ணேன்..ஆனா அவ என்னை எடுக்கவிடல..கடைசில நான் எடுக்கும் போது என் கண் முன்னாடி இருந்தது வெறும் சையின் இல்ல..தாலியோட இருந்த ஒரு செயின்…நான் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன்…அவ கிட்ட என்னனு கேட்டபோது தான் எல்லா உண்மையும் சொன்னா…”என்றாள் நந்துவிடம்…
நந்து”இது எல்லாம் ஓகே சுஜா..நீ எப்படி சதீஷை கல்யாணம் பண்ண…”என்றான்..
“நானும் அம்மாவும் தனியா இருந்தா ஏதாவது எங்களுக்கு பிரச்சனை வரும்,அதே போல வயசு பொண்ணை இனி எப்படி தனியாய் விடமுடியும்…எப்பவுமே அம்மா எனக்கு காவலுக்கு இருக்க முடியாதே..எங்களோட வயித்துக்கு பொழப்பையும் பார்க்கணும் அப்படின்னு,சொக்கன் மாமா தான்..அவரோட பையனை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க…சதீஷ் மாமாக்கு அப்போ 22 வயசு தான்,எனக்கு 17 வயசு,ரெண்டு பேருக்குமே அது ஒரு அதிர்ச்சியான விஷயம்…ஆனா சொக்கன் மாமா எதையும் நினைக்காம,ஊர் மக்கள் என்ன பேசுவாங்க அப்படின்னு பார்க்காம கல்யாணத்தை கோவில்ல முடிச்சார்..”
ஆனா சதீஷ் மாமா என்கிட்டே ஒரு நண்பனை போல தான் பழகுனார்…இன்னுமும் பழகிட்டு இருக்கார்…அவரால தான் நான் இந்த நிலமையில இருக்கேன்..அவர் அதிகம் படிச்சவர் இல்ல தான்..அதிக அனுபவமும் இல்ல தான்…ஆனா அவர் எனக்கு கொடுத்த ஆதரவு,என்னை அவர் கையாண்ட விதம் எல்லாம் ரொம்ப மென்மையா தான் இருக்கும்,சில சமயம் என்னை அடிக்ககூட தயங்கமாட்டார்…அவரால தான் நான் அந்த கறுப்பு தினத்தையே மறந்தேன்னு சொல்லலாம்…”என்றவள் “இது என்னோட வாழ்க்கையின் சுருக்கபகுதி..”என்றாள் சிரிப்போடு…
மற்ற இருவருக்கும் கண்களில் கண்ணீர் கலங்கியது…நான் இவ்வளவு கஷ்டபட்டேன் என்று சொல்லலாம்,நான் இவ்வளவு தான் கஷ்டப்பட்டேன்,அது எல்லாம் எனக்கு ஒன்றும் இல்லை,எனக்கு என் வாழ்வில் என் மாமா சதீஷ் இருந்தால் எல்லாமே எனக்கு தூசி தான் என்று அவள் சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது..
முகம் தெரியாத சதீஷ் மேல் மூவருக்கும் அதிக மரியாதையை தோன்றுவித்தது ஒன்று ஜெயஸ்ரீ,மற்றொன்று நந்து,இன்னும் ஒருவனோ வரு…ஆம் வருவே தான் நந்துவிடம் சொல்லிக்கொண்டு அப்படியே ஜெயஸ்ரீயினை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லலாம் என வந்தவன் சுஜா சொல்ல சொல்ல சிலையாகி அப்படியே நின்றான்…
இப்படி கூட ஒரு பெண் தன்னை மேம்பத்திக்கொண்டு,அனைவருக்கும் முன்னோடியாய் இருப்பாளா என தான் அவனுக்கு தோன்றியது…சுஜாவிற்கு நடந்த கொடுமை யாருக்கும் தெரியாது என்பது கவுள் செயலாய் தான் இருக்கும் என தோன்றியது..
எல்லோரும் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவார்கள் என சொல்லமுடியாது..அப்படி எடுத்துக்கொள்ளவும் அவர்களுக்கு தைரியம் வேண்டும்…
ஆனால் சுஜா ஒன்றும் அவளாய் வெளிவரவில்லை தான் ஆனால் அவளுக்கு துணைவனாய் சிறு வயதிலே பதவி ஏற்றதுபோல,சிறு வயதிலே அவளை தன் சரிபாதியாய் ஆக்கிக்கொண்டவன்,சுஜாவினை சிறிதும் வேதனைக்கு உள்ளாக்காது,அவளுக்கு தகுந்தாற்போல் அவன் நடந்துகொண்டது எவ்வளவு பெரிய விஷயம் என்று தான் அவனுக்கு தோன்றியது…
நந்துவிடம் சொல்லிக்கொண்டு செல்லலாம் என்று வந்தவன்,எதுவும் சொல்லாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றான்…ஆனால் போகும் அவனின் மனதில் இனி ஜெயஸ்ரீயினை எக்காரணம் கொண்டும், பார்க்கவும்,பேசவும் செய்யகூடாது என எண்ணிக்கொண்டான்…
அவன் எண்ணியது போலவே எல்லாம் நடக்கிறது என்பது போல் இருந்தது அவனுக்கு…அது பிரம்மையா இல்லை உண்மையா என்பது அவனுக்கும் விளங்கவில்லை…
அன்று ஜெயஸ்ரீயினை பார்த்ததோடு சரி,அதன்பிறகு அவன் ஜெயஸ்ரீயினை அக்கல்லூரி வளாகத்தில் எதற்சையாய் எங்கும் பார்க்கமுடியவில்லை…
இன்றோடு ஜெயஸ்ரீ கல்லூரி சேர்ந்து 6 மாதங்கள் கடந்து இருந்தது…முன் போல் இல்லாமல் சுபா,சுஜாவுடனும்,ஜெயஸ்ரீயுடனும் நன்றாகவே பழகினாள் என்பதைவிட பழகுவது போல் நடித்தாள்…மூவரும் ஒன்றாய் கல்லூரிக்கு செல்வதும்,ஒன்றாய் வருவது,ஒன்றாய் ஒரே நேரத்தில்.ஒரே இடத்தில் அமர்ந்து உண்பதும் என ஒன்றாகவே சுற்றினர்…அதுவும் அவர்களுது சீனியர்கள் எல்லோரும் அவர்களை முத்தேவிகள் என அழைக்கும் வண்ணம் இருந்தது அவர்களுது நட்பு…இன்று தான் முதன்முதலாய் அவர்களுக்கு தேர்வு இருப்பதால் மூவரும் நடுக்கத்துடனே அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தனர்…
அதே சமயம் இன்றும் முதுகலை படிப்பவர்களுக்கு செய்முறை பயிற்சி இருப்பதால் வருவும் அதனை எப்படி செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என நண்பர்களுக்கு புரியும் வண்ணம் விளக்கிக்கொண்டு இருந்தான்…சொல்லிக்கொண்டு இருந்தவன் அலைபேசியில் மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்கவும் யாராய் இருக்கும் என எண்ணி அதனை பார்த்தான்…
அதில் “ALL THE BEST..DO IT WELL….” மற்றும் ஒரு ஸ்மைலியோடு ஜெயஸ்ரீயிடம் இருந்து மெசேஜ் வந்து இருக்க அதை பார்த்தவனுக்கோ,சந்தோசத்திற்கு பதிலாக கோவம் தான் வந்தது…அவனும் கடந்த 6 மாதங்களாக அவளை பார்க்க முயற்சி செய்கிறான்…ஆனால் அவனால் அவளை ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை…இருவருக்கும் கல்லூரி தொடக்க நேரம் வேறாய் இருப்பதால் அவனால் காலையில் அவளை பார்க்கமுடியாது…மதியம் சாப்பிட போதும் சரி,மாலையில் வரும் போதும் சரி எல்லாமே அவர்களுக்கு வித்தியாசமாய் இருக்கும்…அங்கிருக்கும் ஆயிரம் மாணவ,மாணவிகளில் இவளை கண்டுபிடிப்பது பெரும் பாடாய் இருந்தது…
ஆனால் ஒவ்வொரு பயிற்சிக்கும் அவளிடம் இருந்து தவறாமல் “ALL THE BEST..DO IT WELL…”என்ற வாசகம் மட்டும் தவறாமல் வரும்..வருவிற்கும் அவளிடம் பேச எந்த ஒரு விருப்பமும் இல்லை…அவள் அனுப்பு மெசேஜ்ற்கும் இவன் எந்த ஒரு பதிலும் அனுப்பமாட்டான்…அவளும் இவன் அனுப்பமாட்டான் என தெரிந்தும் வருவிற்கு எக்ஸாம் இருக்கும் போதெல்லாம் மெசேஜ் அனுப்பிவிடுவாள்…
வருவிற்கு குழப்பமாய் இருக்கும்,”இவளுக்கு எப்படி என்னோட எக்ஸாம் டேட் எல்லாம் தெரிஞ்சி இருக்கு..”என்று ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று அவனை கண்காணிக்க அவள் ஒரு ஸ்பை வைத்து இருக்கிறாள் என்று…
ஜெயஸ்ரீக்கு சில நாட்களிலே புரியத்தான் செய்தது…வரு தன்னிடம் வேண்டும் என்றே அன்று முகத்தை திருப்பியது..அவளும் அதன்பிறகு அவனிடம் பேச முற்படவில்லை..கல்லூரியில் அவனின் கண்ணுக்கு எப்போதும் எத்ற்சையாய் கூட தென்படமாட்டாள்..எப்போதும் காலையில் நேரத்தில் செல்பவள்,வரு தன்னிடம் முகம் திருப்பியதில் இருந்து சிறிது தாமதமாக கல்லூரிக்கு சென்றாள்..அதுவும் இல்லாமல் இருவருக்கும் கல்லூரி நேரம் வேறாக இருந்தது அவளுக்கு மிகவும் வசதியாய் போனது…
முன்பெல்லாம் சாப்பிட போகும் போதாவது அவனை வழியில் பார்ப்பவள்,அதன் பிறகு அதையும் தவிர்த்தாள்…இதில் எல்லாம் பாதிக்க பட்டது வரு மட்டுமே..என்னதான் அவளை பார்க்க கூடாது என அவனுக்கு உறுதி இருந்தாலும்,அவனது மனமோ அவளை பார்க்க வேண்டும் என ஏங்கி தவித்தது..சில சமயம் கண்ணில் படாத ஜெயஸ்ரீயை திட்டிதீர்க்கவும் செய்தது..
ஒருவன் தன்னால் தவிப்பது தெரியாமல் முதல் முறை தான் எழுத போகும் தேர்விற்கு தண்ணி தயார்படுத்திக்கொண்டு இருந்தாள் அந்த பேதை..
என்னவளே எந்தன் கண்னில்
உந்தன் பிம்பம்..
உன்னை பார்க்க துடிக்கிறது
எந்தன் கண்கள்..
உன்னிடம் பேச விளைகிறது
எந்தன் மௌனம்..
என்ன இது புதுவிதமான
வலி என்னுள்..
ஏன் இந்த வேதனை
எனக்கு மட்டும்..
நானாக இருந்த என்னை
வேறாக மாற்றிவிட்டாய்..
மாறிதான் போனனேன் நானும்
உந்தன் செய்கையால்..
மனம் எனும் கூடு
உன்னை சிறை பிடிக்க
தவிக்கிறது..
மறுக்காமல் சிறை பட வேண்டும்
எந்தன் நெஞ்சில்…
உன் மன்னவனாக
ஆக வேண்டும் நான்..
என் இதய ராணியாய்
ஆக வேண்டும் நீ…
உன்னோடு நான் இருந்தால்
என் வாழ்வு வசந்தமாகுமே..
வசந்தத்தை தர வா
வானவில்லே…
விலகல் தொடரும்…