Advertisement

Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி

 

அத்தியாயம் – 3

 

நெஞ்சமது உன்னிடமோ

நீயில்லாதது நானல்லவோ

உன் நினைவே எனது

உயிரோ..

உனது துடிப்பே  எனது

இதய துடிப்போ..

 

மாலை வேளை மணி ஐந்தை நெருங்க ,முகத்தை அலம்பிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்…

 

அவள் டூயூட்டி செய்த வார்டில் அவளுக்கு சீனியர் ஒருவர் உடன் இருக்க அவரிடம் நிலைமை எடுத்து சொல்லி விட்டு வந்திருந்தால் ,அவரும் அவளின் நிலைமையை புரிந்துக்கொண்டு “அனைத்தையும் தான் பார்த்து கொள்வதாக கூறி அவளை அனுப்பி வைத்திருந்தார்…

 

பார்வையாளர் நேரம் என்பதாலும், அவளும் அங்கே பணி செய்வதாலும் மருத்துவமனையில் அவனை காண அவளால் எளிதாக போக முடிந்தது…

 

ஐசியூ வார்டிற்கு செல்ல அங்கு சுரேஷ் இல்லை…எங்கோ சென்றிருப்பான் போலும்…ராபின் இருந்த அறையில் அவனையும் சேர்த்து மொத்தம் மூன்று நோயாளிகள் இருந்தனர்..

 

அது மிகப்பெரிய அறை…ஒவ்வொரு நோயாளிகளுக்கும் இடையில் தடுப்பு திரை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது…மற்ற நோயாளிகளின் உறவினர்கள்  வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தனர்….

 

கண்ணாடியின் வழியே அவனை கண்டவள் ,பின் உள்ளே இருக்கும் செவிலியரை சைகையால் வரும்படி அழைக்க,அவரும் இவள் அழைப்பதை கண்டு வந்தார்…

 

“என்ன கனி…எதுக்கு கூப்பிட்ட….” என்றபடி வந்தார் அவர்…

 

ராபினை காட்டியவள் “இவங்களை அட்மிட் பண்ணவங்க இல்லையா…” என விசாரித்தாள்…

 

“அவங்க வெளிய போய் இருக்காங்க…இப்போ வந்துடறேன்னு சொல்லிட்டு போய் இருக்காங்க…ஏன் “என்றார் அவர்…

 

“இல்ல கா…அவங்க மட்டும் தான் இருந்தாங்க…வேற யாரும் இல்லை…வந்த போது காணால.. அதான் கேட்டேன்..என்றவள் சில நிமிடம் கழித்து “கண்ணு முழிச்சாங்களா அக்கா..”என ராபினை பற்றி  விசாரித்தார்…

 

“ஹ்ம்ம்…ரெண்டு முறை முழிச்சார்…அப்புறம் அப்படியே தூங்கிட்டார்…ட்ரிப்ஸ் ஏறுது இல்ல..அதனால அப்படி தான் இருக்கும் ..” என்றவர்

 

“இவங்க உனக்கு சொந்தமா…”என்க…

 

“ஆமாம் …”என்பதை போல தலையை அசைத்தவள் “நான் அவரை பார்க்கலாமா அக்கா…” என்றாள் தயக்கத்துடன்…

 

“டாக்டர் வந்தா கத்துவார் கனி…”என்றவர் ,பின் அவளை பாரத்து என்ன நினைத்தாரோ  “சீக்கிரம் பார்த்துட்டு வா கனி…டாக்டர் பார்த்தா.. என் சீட்டு கிழிஞ்சிடும்…” “உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை…எந்த டிஸ்டர்பும் பண்ணாம பாரு…பக்கத்துலையும் பேஷண்ட் இருக்காங்க…” என்றவர் அவள் உள்ளே போக கதவினை திறந்து விட்டவர் …பின் வெளியில் காத்திருந்தார்…

 

நகர மறுத்த கால்களை கஷ்டப்பட்டு நகர்த்த ,அவனை கண்டவளுக்கு ஏ. சி அறையில் அவளின் உள்ளங்கைகள் சில்லிட்டு போனது…

 

இப்போதும் சுவாச குழாய் பொருத்தப்பட்டு இருக்க,செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இருந்தது… ஒரு புறம் இடதுகையில் ஊசி குத்தப்பட்டு இருக்க,அதன் வழியே ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது…

 

“ஏன் ராபின் இப்படி பண்ண…கொஞ்சம் கூட உனக்கு உன்னோட அம்மா நியாபகம் வரலையா….பாவம் அவங்க…உனக்கு இப்படி ஆகிடுச்சுன்னு தெரிஞ்சா.. எவ்ளோ நொந்து போவாங்க…”

 

“சீக்கிரம் கண்ணை முழி ராபின்…எனக்கு உன்கூட நிறைய பேசணும்…நிறைய சாரி கேட்கணும்…கோடி முறை சாரி கேட்கணும்….எனக்கு என்னவோ நான் திட்டினதுனால தான் இப்படி பண்ணிட்டியோன்னு மனசு தவியா தவிக்குது…”

 

“ப்ளீஸ் சீக்கிரம் கண்ணை முழி ராபின்…என்னோட குற்ற உணர்ச்சியில இருந்து என்னை வெளிய கொண்டு வா….”என மனசுக்குள் மன்றாடியப்படி அவனுடன் மானசீகமாக பேசியவளின் கண்ணீர் கன்னங்களில் இருந்து பட்டு தெறித்து அவனின் கையின் மேல் விழுந்தது…

 

அதை துடைத்தவளின் பரிஷமோ அல்லது அவளின் சில்லிட்ட கையின் குளிரின் பரிஷமோ ஏதோ ஒன்று அவனின் விழி கருமணிகளை அசைக்க வைத்தது…

 

பிரித்தெடுக்க முடியாத படி ஜோடியாக ஒட்டிக்கொண்ட இரு இமைகளை பிரிக்க முயன்றான்…இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருக்க,அவனால் கண்ணை விழிக்க முடியவில்லை…

 

அவனின் கண்ணின் அசைவுகளை கண்டு ,உடனே அருகில் இருந்த பஞ்சினை தண்ணீர் கொண்டு நனைத்து மென்மையாக அவனின் கண்ணின் இமைகளை துடைத்தாள்…

 

சில சமயங்களில் நோயாளிகளுக்கு இப்படி தான் ஆகும்…எனவே அந்த சமயங்களில் கண்ணை பஞ்சை வைத்து துடைத்தால் ஓர் அளவிற்க்கு அவர்களுக்கு சிரமம் குறையும் என எண்ணி அப்படி அதையே ராபினுக்கும் செய்தாள்…

 

அவன் கண் விழிக்கவும்,பணியில் இருந்த செவிலியர் வரவும் சரியாய் இருந்தது…”கண்ணு முழிச்சிட்டங்களா கனி..நீ இவங்க பக்கத்துல இரு…நான் டாக்டர்கிட்ட சொல்லிட்டு வரேன்…”என்றவள் வெளியில் விரைந்தாள்…

 

“சரி..”என்பது போல அவளை பார்த்து தலை அசைத்தவள் “இப்போ பரவாயில்லையா…” என்றாள் ராபினை பார்த்து…

 

“ஹ்ம்ம்..” என்று முனகியவன் வேறெதுவும் பேசவில்லை…அமைதியாகிட அவனிடம் கேட்க வேண்டும் என நினைத்தது எல்லாம் அவனின் அமைதியை பாராமுகம் என எண்ணி தன்னால் தான் அனைத்தும் என எண்ணி மருகினாள்…

 

நேர்காணலுக்கு போகாமல் விட்டதற்கே காச் மூச் என்று கத்தினாள்…இதற்கு இன்னும் எந்த கத்து கத்துவாளோ என எண்ணி அவன் அமைதியாகிட அவள் அதற்கும் தப்பானதொரு அர்த்தத்தை எடுத்து கொண்டாள்…

 

ஏதாவது திட்டுவாள், பேசுவாள், சகட்டுமேனிக்கு கத்துவாள் ,என்ன சொல்லி சமாளிப்பது  என்றபடி யோசனையில் இருந்தவன் அவளிடம் எதுவும் பேசினான் இல்லை…

 

அவளும் சிறு பிள்ளை தனமான எண்ணத்துடன் “அதாங்க , தான் திட்டியதற்கு இப்படி ஒரு முடிவோ..” என எண்ணி பேசாமல் அமைதியானாள்…

 

அவள் ஒண்ணும் அவன் தவறான முடிவெடுக்கும் அளவிற்க்கு எதையும் சொல்லிடவில்லை என்பது நிச்சயம் என்பதாகினும், அவனின் இம்முயற்சிக்கு தானும் காரணமோ என எண்ணி கலங்குகிறதே….

 

இது இயல்பாய் அனைவருக்கும் உள்ள ஒரு உணர்வே…எதர்ச்சையாய் ஏதாவது சொல்வோம், கடைசியில் அவர்கள் அழுதாலோ, அல்லது கஷ்டப்பட்டாலோ தாம் சொல்லிய பிறகு தான் அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் ,அப்படியானால் நமது பேச்சு ஏதோ ஒன்று அவர்களை பாதித்துள்ளது என நினைப்பது சகஜம்…

 

இருந்தும் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசிட வேண்டும்..இல்லையெனில் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீராது…அது கனிக்கு புரியவில்லை…

 

அடுத்த பத்து நிமிடத்தில் டாக்டர் ஜோசப் ஜெயினுடன் செவிலியர் உள்ளே நுழைய..இவள் ஒரு ஓரமாய் நின்று கொண்டாள்…அவனை பரிசோத்தவர் அவனிடம் அவனது உடல் நலம் குறித்து  விசரித்துக்கொண்டார்…

 

அதற்க்குள் சுரேஷும் வந்திட,கனிமொழி வெளியில் வந்து சுரேஷின் அருகே நின்று கொண்டாள்…”என்ன கனி ராஜன் கண்ணு முழிச்சிட்டானா…டாக்டர் என்ன சொல்றாங்க கனி..”என்றான் அவளிடம்..

 

“ஹ்ம்ம் முழிச்சிட்டாங்க அண்ணா…டாக்டர் செக்  பண்ணிட்டு இருக்காங்க அண்ணா…இன்னும் எதுவும் சொல்லல…” என்றவள் “நீங்க வேணும்னா ரூம்க்கு போயிட்டு ப்ரஷ் ஆகிட்டு ,தேவையான திங்ஸ் எடுத்துட்டு வந்துடுங்க அண்ணா…அது வரையும் நான் பார்த்துக்குறேன்..” என்றாள் அவன்   முகத்தில் தெரிந்த அலுப்பை கண்டு..

 

மறுப்பேதும் சொல்லாமல் “ஹ்ம்ம் சரி மா..டாக்டர் வரட்டும் அவர் என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு, ராஜனை பார்த்துட்டு போறேன்…”என்றவன் அவர் வெளிவர காத்திருந்தான்…

 

உள்ளே அவனின் நாடி துடிப்பு, இதய துடிப்பை பார்த்தவர்,சில மருந்துகளை சீட்டில் எழுதி செவிலியரிடம் தந்தவர் ராபினை கூர்ந்து நோக்கினார்…

 

செவிலியரை வெளியேறும் படி பணிந்தவர் பக்கத்தில் இருந்த நாற்காலியினை அவனின் அருகில் இழுத்து போட்டுக்கொண்டு அமர்ந்தார்..

 

என் பேரு ஜோசப் ஜெயின்…!!..இங்க காஸ்ட்ரோ என்டேரோலோஜிஸ்ட் (குடல் நிபுணர்) என தன்னை அறிமுகம் செய்து கொண்டார்..

 

“உங்க பேரு நம்பிராஜன் ரைட் என்றார் அவன் முகம் நோக்கி…

 

ஆம் என்பது போல தலை அசைத்தான், அவரின் முகம் காணாது…அவனால் ஓர் அளவிற்க்கு ஊகிக்க முடிந்தது எதற்காக தன் அருகில் அமர்ந்துள்ளார் என..

 

அவனை சில நொடி பார்த்தவர் அவனின் முக மாறுதல்களை கண்டு“சில் மை கூல் பாய்…நீங்க நினைக்கிற மாதிரி அட்வைஸ் எல்லாம் பண்ண மாட்டேன்…ஸ்டே ரிலாக்ஸ்…” என்றார் மென்னகையுடன்…

 

அவர் தன்னை கண்டு கொண்டாரே என்ற எண்ணவோட்டத்துடன் அவன் அவரை பார்த்து கொண்டு இருக்க ,என்னுடைய அனுபவத்தில் எத்தனை பேரை பார்த்திருப்பேன் என்றது அவரின் பார்வை …

 

எப்படியும் வயது அறுபதிற்க்கும் மேலே இருக்கும்சாந்தமான  முகம்அதே வேளையில் ஆளுமை தன்மை நிறைந்த பார்வை

 

சாரி சார் என்றான் மெல்லிய குரலில்….

 

“ஹே….நோ சாரி யங் மேன்….சும்மா பேசணும்ன்னு தோணுச்சு அதான் அப்படியே உட்கார்ந்துட்டேன்… மத்தபடி ஒண்ணும் இல்ல…” என்றவர் அவனை மென்னைகையுடன் பார்த்தவர்…பின் அவனின் வேலையை பற்றி விசாரித்தார்…

 

அவனின்  வேலையை பற்றி அவரிடம் பகிர்ந்தவனை “அவனுக்கு பிடித்தது,பிடிக்காதது, நண்பர்கள்,கல்லூரி வாழ்க்கை…” என குறைந்தது பதினைந்து நிமிடம் அவனிடம் இயல்பாய் பேசி அவனையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருந்தார்…

 

பின் “சரி என்ன பிரச்சனை சொல்லு…இத்தனை கஷ்டம் தாங்கினப்போ கூட வராத,இந்த எண்ணம்…இப்போ எதுக்கு வந்தது…” என்றார் அவனிடம் நேரடியாக…

 

அவரின் கேள்வியில் தன் தலையை குனிந்தவன் சில நிமிடம் மௌனமாக இருந்தான்…அவனாகவே சொல்லட்டும் என அவரும் சில நொடி மௌனித்தார்…

 

தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன் “பயம்  சார்… எதில் இருந்தோ தப்பித்து ஓடும் எண்ணம்.. பிரச்சனையை எதிர்கொள்ள பயம்..வாழ்க்கையை வாழ பயம்…தன்னால் முடியுமா என்ற ஒரு கை அறுந்த நிலை…” என்றான் எங்கோ பார்வையை வெறித்துக்கொண்டு….

 

தனது நோயாளியை தெளிவான மனதுடன் வீட்டிற்க்கு அனுப்ப வேண்டும்…,மீண்டும் இது போன்ற ஒரு தவறு நிகழ்ந்து விடக்கூடாது என்ற அதீத அக்கறையுடன் இருந்தது அவரின் இச்செயல்..

 

அவரால் எல்லாரையும் திருத்த முடியுமா என்பது சாத்தியமில்லை என்பது சத்தியமே…இருப்பினும் தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் பயணிக்கும் ஒருவரை அந்நிலையில் கண்டு அவரால் விடவும் முடியவில்லை….

 

தன்னால் அவனின் மனம் தெளிந்து, வாழ்க்கையில் அவன் இது போன்ற முடிவினை எடுக்காமல் இருந்தாலே அவருக்கும் வெற்றி தானே…இதனால் அரசு ஒன்றும் அவருக்கு பாராட்டு விழா நடத்தி ,விருது ஒன்றும் வழங்கிட போவதில்லை…

 

இருப்பினும் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலின் பேரியிலே  அவரின் நோயாளிகளை மன அழுத்தத்தில் இருந்து விடுவித்து கொண்டு இருக்கிறார்…

 

அவருக்கு நன்கு  புரிந்தது நம்பிராஜன் மிகவும் மன அழுத்தத்தினாலே இப்படி ஒரு தவறான முடிவை எடுத்துள்ளான் என்று….ஆனால் அதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்….

 

எனவே அவனிடம் பேச்சு கொடுத்தார் ..அவரின் கேள்விக்கு அவன் சொன்ன பதில் “பயம்…” எதை பற்றி என்ற கேள்விக்கு அவனின் பதிலில் அவனை நான்கு அரை கன்னத்தில் பலாரென்று வைக்க வேண்டும் என்று தான் அவருக்கு தோன்றியது…

 

இதை விட மோஷமான காரணத்தை எல்லாம் சொல்லி தற்கொலை செய்து கொண்டு எத்தனையோ பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர்…இருப்பினும் இவனின் மேல் என்ன தனி கரிசனை என்று கூட உங்களுக்கு தோன்றலாம், தோன்றி இருந்தாலும் அதில் தவறொன்றும் இல்லை….

 

சிலரை காணும் போது இவர்களுக்கு தன்னால் ஆன  உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்…அப்படித்தான் அவருக்கும் தோன்றியது…

 

சில நிமிடம் மௌனித்துவிட்டார்…அவனது பதிலில்…”பயமாம்…அவனுக்கு.. அதுவும் வாழ்க்கையை பற்றி..”

 

அப்படி என்ன வாழ்க்கை வாழ்ந்துவிட்டான் இவன்…

 

உலகில் துன்பத்தையே வாழ்வாய் கொண்டு வாழ்பவர்களை காணும்போது ,நாளை விடியலில் உயிருடன் இருப்போமா என்று எண்ணி வாழும் என் இன ஈழத்தமிழர்களை காணும் போது,கடலின் அலையையும் தாண்டி கேட்கும் ஓலமாய் அவர்களின் அழுகுரலை கேட்கும்போது, எந்நேரமும் சுட்டு பொசுக்க காத்திருக்கும் எதிரியின் முன் நெஞ்சை நிமிர்ந்து காட்டி எல்லையோர காவலில் இருக்கும் என் ராணுவ வீரர்களை காணும் போது…உன்னுடைய கஷ்டமெல்லாம் ஒரு தூசி போல ,பனி போல என்று கத்த வேண்டும் போல இருந்தது…அவன் கஷ்டம் என்ன என்பது அறியாத போதும்….

 

தேவையில்லாமல் எதையும் பேசி அவனை காயப்படுத்தக் கூடாது  என்ற எண்ணியவர்…

 

“சரி உன்னோட வாழ்க்கை பயத்தை பத்தி சொல்லு…அதுல என்ன இருக்குன்னு பார்க்கலாம்…”என்றார் அவனிடம்…

 

“நொண்டியா இருக்கேனேல்….இதுவே என்னுடைய வாழ்க்கை பயம் தான் சார்…” என்றான் சற்று ஆதங்கம் மற்றும் வேதனையுடன்…

 

“நம்பிராஜன் உங்களோட வேதனை புரியுது…அதுக்கு போய் தற்கொலை பண்ணிக்கணுமா…மருத்துவ துறை இப்போ எவ்ளோவோ தொழில்நுட்ப ரீதியா வளர்ச்சி அடைஞ்சு இருக்கு…அப்படி இருக்குறப்போ நீங்க இதுக்காக பண்ணேன்னு சொல்லும்போது சில்லியா இருக்கு…என்றார் அவர்…

 

அவரை சலனமில்லாத ஒரு பார்வை பார்த்தவன் “ஆனா எந்த துறை வளர்ச்சி அடைஞ்சாலும், ஏழையின் கஷ்டம் மற்றும் தேவை எப்பவுமே அப்படியே தான சார் இருக்கு..”

 

எனக்குள்ள தற்கொலை செய்யணும் அப்படின்ற எண்ணம் முன்னாடி எல்லாம் வந்தது இல்லை சார்…அப்பாவை இழந்து, என்னோட காலை இழந்த பின்னாடி கூட நான் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்த்து போராட தான் செஞ்சேன் சார்..

 

ஆனா என்னோட கால் பலவீனம் ஆக ஆக எனக்குள்ள இருந்த தன்னம்பிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சி போச்சு சார்…என்னால என்னோட கடைசி காலத்துல என் அம்மாவுக்கோ அல்லது வேறு யாருக்கோ தோளில் சுமையாய் இருக்க விரும்பல…

 

என்னோட கால் இன்னும் எத்தனை வருஷத்துக்கு என்னோட சுமையேயே தாங்கும்ன்னு சொல்ல முடியாது போல..அப்படி இருக்க..என்னால எப்படி நிம்மதியா வாழ முடியும்…

 

வலி மற்றும் மன வலி இரண்டும் என்னை உள்ளுக்குள்ளே என்னோட கழுத்தை நெருக்க ஆரம்பிச்சிடுச்சு….வலி குறைய மாத்திரை எடுத்த நான்…இரண்டு, நாலு,எட்டு,பத்து,இருபது ன்னு அட்டையில் இருந்த எல்லா மாத்திரையையும்  விழுங்கிட்டேன்…

 

என்னோட வலி என்னோடவே போகட்டும்ன்னு நினைச்சேன்…ஆனா என்னோட கெட்ட நேரம் உயிர் பொழச்சிட்டேன் என்றான் வேதனையுடன்…

 

என்ன சொல்ல முடியும் ஜோசப் ஜெயினால்…ஒவ்வொரு நாணயத்திற்கும் மறு பக்கம் என்ற ஒன்று தானே…அவனளவில் அவன் செய்தது சரி….

 

இந்த நிலையில் இருக்கும் யாருக்கும் வரும் நினைப்பு தான்…அதை தப்பென்று சொல்லிவிட முடியாது…இதனை  வேறுவழியில் தான் தீர்க்க வேண்டும் என எண்ணினார்…

 

“யூ ஸீ நம்பிராஜன்….உங்களோட வேதனை எனக்கு நல்லாவே புரியுது…ஆனா பாருங்க,நீங்க இல்லாமல் உங்க குடும்பம் நிம்மதியா இருக்குமா…அதை விட இப்போ மருத்துவ துறையில குணப்படுத்த முடியாதுன்னு எதுவும் இல்லை…எனக்கு தெரிஞ்ச டாக்டரை நான் உங்களுக்கு ரெபெர் பண்றேன்…நீங்க அவங்களை போய் பாருங்க…எல்லாம் சரி ஆகும்…இப்படியே எல்லாரும் சாவு தான் பிரச்சனைக்கு தீர்வுன்னு நினைச்சா ,உலகத்துல முக்காவாசி பேர் அந்த முடிவை தான் எடுக்கணும்…”

 

“ப்ளீஸ் தயவுசெய்து இனிமேல் இப்படி ஒரு முடிவு எடுக்காதீங்க…முட்டாள்கள் தான் இப்படி ஒரு முடிவு எடுப்பாங்க…நீங்க முட்டாளா இருக்க கூடாதுன்றது ,இந்த ஜோசப் ஜெயினோட எண்ணம் மற்றும் ஆசைன்ணு கூட சொல்லலாம்…  

 

இனிமேல் இப்படி பண்ண மாட்டீங்க தான …என்ற உறுதிமொழியை பெறும் வரை அவர் அவனை விடவில்லை…

 

பின்பு வெளியே வந்தவர் சுரேஷ், கனியிடம்  “ஹீ இஸ் ஓகே…நாளைக்கு சாயந்திரம் டிஸ்சார்ஜ்  பண்ணிடலாம்,எதுவும் காரமா சாப்பிட குடுக்க வேண்டாம்…வயிறு புண்ணு ஆறணும்..கொஞ்சம் பழச்சாறு அதிகம் குடுங்க…மாத்திரையை கரெக்ட்டா குடுங்க…சீக்கிரம் சரியாகிடும்…என்றவர் அவர்களின் நன்றியை ஏற்றுக்கொண்டு கிளம்பினார்….

 

                                  இருதயப் பூவின் மொழி தொடரும்….

Advertisement