Advertisement

த்தியாயம் : 11

 

உன் ஒற்றை இதழ்

புன்னகையில்..

என் உயிர் சிக்கி

தவிக்குதடி

என் குறிஞ்சி பூவே ..!!!

 

“அ….அவ…அவளுக்கு …”எப்படி தெரியும் என்றான் திணறலுடன்..கேட்டு முடிப்பதர்குள் நா வறண்டுவிட்டது அவனுக்கு…குறிப்பாக அன்னைக்கு தெரிந்துவிட்டதோ என்ற பதற்றம் அவனுக்குள்..

 

என்ன முயன்றும் வார்த்தை திணறிவிட்டது அவனிடம். அன்னை கண்டுவிடக் கூடாதே என்ற பயம் மனதில்..முகத்தை அமைதியாய் வைத்திட வெகுவாய் சிரமப்பட வேண்டியதாயிற்று….நெஞ்சுக்கூடு நடுங்கிடவே தொடங்கிவிட்டது அவனுக்கு  அன்னையின் பதிலை கேட்கும்வரை..

 

“அதெல்லாம் நான் கேட்கலை.. இப்படின்னு சொல்லவுமே எனக்கு கையும் ஓடல காலும் ஓடல..பஸ் புடிச்சி இங்க வரத்துக்குள்ள போதும் போதும்ம்னு ஆகிடுச்சு…இதுல அவகிட்ட நான் கேள்வி கேட்டுட்டு உட்கார்ந்து இருக்க முடியுமா…செய்தியை கேட்டதும் கிளம்பிட்டேன்…” என்றார் பதிலாக.

 

பின் “ஆமா அவளுக்கு எப்படி தெரியும் ,நீங்க எதுவும் சொல்லலையா …?? “ என தனது சந்தேகத்தை கேட்க..அன்னையின் கேள்வியில் தோன்றிய அதிர்ச்சியுடன் மனதிற்க்குள்ளே எச்சிலை கூட்டி விழுங்கியவன் சுரேஷினை பாவமாய் பார்த்தான்…”காப்பாத்து டா அண்ணா …” என்று…

 

நம்பிராஜனின் அவஸ்தை மனதிற்குள் சிரிப்பை வரவழைத்தாலும் ,அவன் இருக்கும் நிலை எண்ணி “அது…து..அது வந்து மா….ஹ்.. ஹா….இவனை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகும் போது அந்த பொண்ணு கிட்ட இருந்து போன் வந்தது.. அப்போ நான் தான் எடுத்து பேசினேன்…இவனுக்கு உடம்புக்கு முடியலைன்னு நான் தான் சொல்லி வச்சிட்டேன்…” என்றவன் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிக்க..நம்பிராஜன் இவனை “..ஞே…” என்றப்படி முழித்து பார்த்துக்கொண்டு இருந்தான்..

 

நம்பிராஜனின் விலா எலும்பில் தனது முழங்கையால் லேசாய் இடித்தவன்,திலகவதியினை கண்டு மென்னகைத்தான்..அவர்களின் நல்ல நேரமோ என்னவோ “அந்த பொண்ணு எதுக்கு இவனுக்கு போன் பண்ணனும்னு..” மேற்கொண்டு எந்த ஒரு கேள்வியும் கேட்காது ஊரில் இருந்து எடுத்து வந்த பொருட்களை எடுத்துவைக்க ஆரம்பித்தார்…

 

இருவருக்கும் என இட்லி பொடி, புளியோதரை பொடி, பூண்டு ஊறுகாய், வத்தல்…முறுக்கு என அனைத்தும் கொண்டு வந்திருந்தார்…பொடி வகைகளும் ஊறுகாய் வகைகளும் முன்னரே வீட்டில் செய்து வைத்திருந்ததை எடுத்து வந்திருந்தவர், முறுக்கை அவர்களின் ஊரில் செய்யும் ஒருவரிடம் செய்து கொடுக்கசொல்லி வாங்கி வந்திருந்தார்…

 

அன்னை அந்தப்பக்கம் சென்றதும்ரொம்ப தேங்க்ஸ் அண்ணாஅம்மாகிட்ட மட்டிப்போமோன்னு ரொம்ப பயந்துட்டேன்.. நல்ல வேளை நீ சமாளிச்சிட்ட…” என்றான் நிம்மதி பெருமூச்சுடன்..

 

போடாநீயும் உன்னோட தேங்க்ஸும் ,அம்மா மேற்கொண்டு கேட்டு இருந்தா ஆந்தை போல நான் தான் முழிச்சிட்டு இருந்து இருப்பேன்.. எப்படியோ கிரேட் எஸ்கேப் ரெண்டு பேருமே…” என நிம்மதி பெரு மூச்சுடன் நம்பிராஜனின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்

 

உள்ளே வேலை செய்துக்கொண்டு இருக்கும் அம்மாவினை ஒரு முறை எட்டி பார்த்தவன்அண்….ணா உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்..” என்றவன் மீண்டும் அன்னை வந்துவிடுவாரோ என எண்ணி திரும்பி பார்த்த்துக்கொண்டே கேட்க..

 

என்ன ராஜாஇப்படி பம்மற.. என்ன விஷயம்..” என்றவன் நம்பிராஜனின் முகத்தை யோசனையோடு பார்த்துக்கொண்டு இருந்தான்..

 

இந்த கனிமொழி ஏண்ணா என்னை பார்க்க வரல…” என்றான் தயங்கிக்கொண்டே..

 

நம்பிராஜனின் கேள்வி மனத்திர்குள் வியப்பை அளித்தாலும், அதனை மறைத்துஇதை நீ அவகிட்ட தானே கேட்கணும் ராஜா.. என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்..” என்றவன் திலகவதியின் வருகையை உணர்ந்துஎதுவா இருந்தாலும் நாம அப்புறமா பேசிக்கலாம், அம்மா வராங்க கொஞ்சம் அமைதியா இரு..’ என்றவன் திலகவதி வரவும் மரியாதை நிமித்தத்துடன் எழுந்து நின்றுக்கொண்டான்..

 

நீ எதுக்கு பா எழுந்து நிக்கிற, நான் இன்னும் மூணு இல்ல நாலு நாள் இங்க இருப்பேன்,நான் வர அப்போ எல்லாம் நீ எழுந்து நிற்பியா..??..நானும் உன்னோட அம்மா போலன்னு சொல்லிட்டு ,இப்படி பண்றியே உனக்கே இது நல்லா இருக்கா..’ என கோவத்துடன் கூறியவர் நம்பியிடமும்நீ சொல்ல மாட்டியா..?? ‘ என்று சண்டைக்கு தயாராக.

 

அண்ணா  நீங்க உட்காருங்க ,அம்மாக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது, மரியாதை மனசுல இருந்தா போதும்..” என்றவன் சுரேஷின் கையை பிடித்து இழுத்து அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தான்

 

அதன் பின் திலகவதி நம்பிராஜனுக்கு அரிசி கஞ்சி கொடுத்தவர் அவன் உண்டு முடித்த பின்பு அவருக்கும் சுரேஷிற்கும் உணவு சமைக்க ஆரம்பித்தார்

 

அன்னை சென்றதும் சுரேஷிடம் பேசலாம் என எண்ணி இருந்த நேரம்ராஜா எனக்கு ரொம்ப டையார்ட்டா இருக்கு ,இன்னைக்கு நைட் வேலைக்கு போகணும்..நான் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கட்டுமா..?? “ என கேட்க.

 

மனதில் இருப்பதை கேட்காது விடுத்துசாரிண்ணா நான் கொஞ்சம் கூட உங்களை பத்தி யோசிக்கவே இல்ல,நீங்க போய் தூங்குங்க எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம் அண்ணாநீங்க போங்க.. ‘  என்றான் அவரிடம் விடையளிப்பது போல

 

இரவு நேர வேலையை செய்ய செல்ல வேண்டி இருப்பதால் ,அவனின் உடலும் ஓய்விற்க்கு கெஞ்ச ,நம்பிராஜனிடம் சொல்லிவிட்டு சென்றான்

 

அவன் உறங்க சென்றதும் மனம் மொழியினை நினைக்க துவங்கி இருந்தது..என்னை பற்றி அவளுக்கு எப்படி தெரியும்..என்னை கண்காணிப்பாளோ..??..எப்படி ..??..எப்படி தெரிந்திருக்கும்..??..அவள் என்னிடம் பேசி எப்படியும் பல வருடங்கள் ஆகி இருக்கும்..பிறகு எப்படி என்னை பற்றி தெரிந்து இருப்பாள்யார் அவளுக்கு சொல்லியது..சுரேஷ் அண்ணாவா ..?? என அவன் மனம் நினைக்க மறுநொடியே அதற்க்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு என்பதால் அவன் மனம் சிந்திக்க துவங்கியது

 

திலகவதி சமைத்து முடித்தபின் கைகளை புடவையின் நுனியில் துடைத்துக்கொண்டே வந்தவர் நம்பிராஜன் நாற்காலியில் அமர்ந்திருந்தவனை கண்டு அவனிடம் சென்றார்

 

ஏன் ராஜா உட்கார்ந்துட்டே இருக்க,போய் தூங்கலாம் இல்லஎன்றவர் பின் நினைவு வந்தவராகமாத்திரை எல்லாம் சாப்பிட்டியா..’ என்றார்..

 

அவன் ஆம் என்பதாய் தலையசைக்க, அவரின் கண்கள் சுரேஷினை தேடியது, அதனை கண்டவன்அண்ணா தூங்குறார் மா..ரொம்ப டையார்ட்டா இருக்கும் போல..’ என சொல்ல,

 

‘…ஓஹ்..’ என்றவர்பாவம் பா சுரேஷ் ,உனக்கு எவ்ளோ ஹெல்ப்பா இருந்தான்,ஒரு வாய் சாப்பிட்டு தூங்கி இருக்கலாமே..’ என்றவர் பின்னும்சாப்பிடாம பட்டினியா படுத்துடுச்சு புள்ள,நான் வேணும்ன்னா எழுப்பவா ராஜா, ….’ என கூறிக்கொண்டு இருந்தவரை ஒரு நொடி இமைக்காது நோக்கினான்

 

நான் ஒரு முட்டாள் சட்டுன்னு சமைக்காம ,மணி கணக்குல சமையல் செஞ்சுட்டு இருந்தா ,பாவம் சுரேஷ் என்ன பண்ணும்.. அப்படியே போய் தூங்கிடுச்சு போல..’ என அவரின் புலம்பல் தொடர.. நம்பிராஜன் தான் பெரும் முயற்சி எடுத்து அப்படியில்லை என அன்னையை சமாதானம் செய்து ,அவரின் மனவருத்தம் போக சமன்படுத்த துவங்கினான்….

 

தன் வயிற்றில் பெற்றெடுக்காத பிள்ளையாயினும் அவன் பட்டினியாய் படுத்தது திலாகவதியினை  கஷ்டத்திற்க்கு உள்ளாக்கியதுநம்பிராஜனின் பசியினை போக்கிய நாம் சுரேஷினை பட்டினியாய் விட்டது அவரின் மனதை உறுத்த துவங்கியது….சுரேஷினை தனது மகன் போலவே எண்ணினார்..

 

பெற்றேடுக்காத பிள்ளையாயினும் அவர் மனம் சற்றே வேதனைப்பட்டதுஇது தான் தாய் பாசமோ..!!! ஐந்தறிவு கொண்ட மிருகங்களே மேன்மையாய் இருக்கும் போதுஆறறிவு கொண்ட மனித இனம் மனிதத்தை தொலைத்து பணத்தினை சேகரிக்க ஓடிக்கொண்டு இருக்க.. திலகவதி போல் சிலர் இவ்வுலகில் இருக்கவும் தான் செய்கின்றனர்

 

அன்னையின் நிலையை புரிந்துக்கொண்ட நம்பிராஜன் ,’அம்மாமோஸ்டலி இந்த மாதிரி டையார்ட்டா இருக்கும் போது தூங்கி எழுந்திட்டு தான் சாப்பிடு வாங்க.. அதுனால நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க..அவர் தூங்கி எழட்டும் ,அப்புறமா சாப்பிடுவார்…’ என்க..

 

சரிஎன்பது போல் தலையசைத்தவர்நான் இருக்கற துணி எல்லாம் துவைச்சி காயப்போட்டு வந்துற்றேன்அது வரைக்கும் நீயும் கொஞ்சம் நேரம் தூங்கி எழு..’என்றவர் அவனை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு செல்லஅன்னைக்காக படுக்கையில் சாய்ந்திருந்தவன் எண்ணங்கள் பின்னோக்கி பயணிக்க துவங்கி இருந்தன

 

பல முறை சத்தியத்திற்க்கு பிறகு ஒருவாறு அவனை விட்டவர்கள்இனிமேல் எங்ககிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாது..எங்களோட சபாவுல நீயும் ஒரு உறுப்பினர்சோ அதுக்கான பொறுப்புணர்வோடு நீ செயல்பட்டு ,நமது சபாவின் பெருமையை இந்த உலகறிய செய்வாயாக..!!! ‘ என விக்ரம் நடிப்புடன் சொல்ல சேகரும் நம்பிராஜனும் அவனின் பேச்சில்  சிரித்தனர்

 

இது பெரிய கலை சபாஇதனோட புகழை எல்லாம் உலகறியச் செய்யபோடா டேய் போடா…’ என்ற சேகர் நம்பிராஜனின் புறம் திரும்பினான்மென்னகையோடு இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தவன் சேகரின் பார்வையை உணர்ந்து அவன் புறம் திரும்ப..

 

இப்போது விக்ரமும் சேகரும் நம்பிராஜனை தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்என்ன என்பது போல இருவரையும் காணஒன்றுமில்லை …’ என்பது போல இருவரும் ஒரே போல் தலையை அசைத்தனர்

 

சரிநான் என்னோட வேலையை பார்க்கிறேன்…’ என்றவன் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு,இருவரிடமும் தலையசைத்து விட்டு கிளம்பினான்

 

டேய்இவன் என்ன மாதிரியான டிசைன் டாசத்தியமா எனக்கு கொஞ்சம் கூட புரியலமண்டையே வெடிச்சிடும் போல …’ என விக்ரம் புலம்பிக்கொண்டு இருக்க,சேகர் தீவிர யோசனையில் இருந்தான்

 

என்னடா நான் பாட்டுக்கு தனியா இங்க லூசு மாதிரி புலம்பிட்டு இருக்கேன்நீ என்னடான்னா ஏதோ தீவிரமான யோசனையில இருக்க…’ என்றான் விக்ரம்

 

அதான் உன்னை பத்தி உனக்கே தெரியுதே அப்புறம் என்னத்துக்கு என்கிட்ட கேட்டுட்டு இருக்க …’ என்று சேகர் கேட்க

 

என்ன பத்தி என்ன எனக்கே தெரியுது…’ என்றான் விக்ரம்

 

நீ ஒரு லூசுன்னு நீயே கண்டுபுடிச்சிட்ட அப்பறம் ஏன் என்னைய நோண்டிட்டு இருக்க…’ என்ற சேகர் ,

 

பின் விக்ரமின் முறைப்பை கண்டுஎல்லாம் நம்பிராஜன் பத்தி தான்எவ்ளோ இழுத்து பிடிச்சாலும் என்னவோ அவன் நம்மகிட்ட இல்ல ,யார்கிட்டயும் அவ்ளோவா ஒட்டவே மாட்டேன்றான்என்னன்னு தெரியல.. இனிமேல் எப்படி இருக்கான்னு பார்ப்போம்…’ என்றவன் படிக்க துவங்கினான்

 

விக்ரமோ சேகர் சொன்னதை காதில் பாதி வாங்கியும் வாங்காமலும் ‘,சிறு தோள் குலுக்களுடன் சென்றான்நடப்பது நடக்கட்டும் என்று

 

நடந்தது அனைத்தும் நடந்தது அவர்கள் எதிர்பார்த்தது..!!! எதிர்பாராதது…!!! என அனைத்தும்அவர்களால் தான் ஏனோ.. அதனை ஜீரணிக்க முடியாமல் திணறிபோயினர்..

 

இருதயப் பூவின் மொழி தொடரும்

Advertisement