Advertisement

அத்தியாயம் – 4 (1)

அன்று மாலை சிவா லாயருடன் ஸ்டேஷனில் ஆஜராக, மானவ் அழுது களைத்திருந்த மனிஷாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தான். பரத் சம்யுக்தாவுடன் வந்திருந்தார்.

பரத் சொன்னதை மனதில் வைத்திருந்த சிவா, மானவையும் மனிஷாவையும் கவனிக்கத் தவறவில்லை. அவர் இருவரையும் கண்காணிப்பதை பரத் கவனிக்கத் தவறவில்லை.

மனிஷாவைப் பார்த்ததும், சம்யுக்தாவின் கால்கள் தானாக அவளிடம் தான் சென்றது, ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த மரத்தடியில் இருந்த சிமென்ட் பெஞ்சில் மானவ்வின் அருகில் அமர்ந்திருந்த மனிஷாவிடம் சம்யுக்தா சென்ற அடுத்த நொடி, மனிஷா அவளையும் அறியாமல் எழுந்து சம்யுக்தாவை அணைத்துக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்து இருந்தாள்.

“மனிஷா… பிளீஸ் கண்ட்ரோல் யுவர் ஸெல்ப்…”

“முடியலை மேடம்… எத்தனையோ ரேப் கேஸ் பார்த்திருக்கேன். பட் இது… ரியலி ஐ கான்ட்…”

“நீங்க அழறதால போன உயிர் திரும்பி வராது, தென் அப்படியே அந்த பொண்ணு பிழைச்சு வந்தாலும் டேக் இட் ஈசின்னு போக இங்க உயர்ந்த உள்ளங்களும் இல்லை, தப்பு செஞ்ச அந்த பொறுக்கிங்களை விட அந்த ஜீவன் தான் அதிகமா துயரம் அனுபவிச்சுக்கிட்டு இருக்கும். கூடவே உடல் உபாதைகளும் இருந்து இருக்கும்”

“புரியுது மேம், எனக்கு அந்த பாப்பாவை பார்க்கும் போது, தனு நியாபகம் தான் வருது”

“லிசன் எனக்கும் உங்க நிலமை புரியுது, பட் இப்ப நீங்க ரொம்ப எமோஷனலா இருக்கீங்க, பீ ரிலாக்ஸ் அண்ட் கண்ட்ரோல் யுவர்செல்ப்”

மெல்ல அழுகையைக் குறைத்தாலும், “நான் எவ்வளோ காப்பாத்த டிரை பண்ணேன் மேடம், எவ்வளோ போராடினேன், முடியலை” என்று புலம்ப ஆரம்பித்த மனிஷாவின் கண்ணீரைத் துடைத்து அவளது அருகே அமர்ந்து அவளை மடியில் சாய்த்துக்கொண்டாள்.

மெல்ல ஹேன்ட் பேகை எடுத்து அதில் இருந்து ஒரு நோட் பேடை எடுத்தவள், அதில் தூக்கம் வருவதற்கு உண்டான ஊசி மருந்தை எழுதியவள், அருகில் இருந்த மானவ்விடம் தந்து, வாங்கி வருமாறு சைகை செய்தாள்.

“மாமா கார்ல பீபி அப்பாரெட்டஸ் இருக்கும், கொஞ்சம் எடுங்களேன்”

பரத்தும் எடுத்து வர,

“மனிஷா ஜஸ்ட் பி.பி. செக் பண்ணிக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே பரத்திடம் பி.பி. செக் செய்யச் சைகை செய்தாள்.

மானவ்வும் அதே நேரம் அருகில் இருந்த மெடிக்கலில் மருந்து வாங்கி வந்து தர,

பிபி பரிசோத்தித்து முடித்திருந்த பரத், அதை வாங்கிக்கொண்டு ஊசி போட ஆயத்தமானார்.

ஊசி போட அவள் அருகில் குனிந்தவர், பின் யோசனையாக நிமிர்ந்து சிவா அருகில் சென்றார்,

“மனிஷா ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க, இப்போதைக்கு தூங்க இன்ஜக்சன் போடறது நல்லது, பி.பி ஹையா இருக்கு, இன்ஜெக்சன் போட்ட கொஞ்ச நேரத்தில தூங்கிடுவாங்க, அவங்களை வீட்டுக்கு அனுப்பி வைச்சிடுங்க, மத்ததை அப்புறம் பேஸ் பண்ணிக்கலாம்.” என்று சொல்லிவிட்டு மனிஷாவின் கையில் ஊசி போட வந்தவர், மெல்லத் திரும்பி சிவாவைப் பார்த்தார். அந்த பார்வையில் ஊசி போடவா என்ற கேள்வி இருந்தது.

சிவாவின் தலை அவர் ஊசி போடுவதற்கு சம்மதமாக ஆடியது.

சம்யுக்தா மெல்ல அவளைத் தட்டிக்கொடுக்க, ஊசி போட்டது கூடத் தெரியாமல் மனிஷா புலம்பிக்கொண்டே இருந்தாள்.

ஊசி போட்டதும், “மனிஷா வாங்க கார்ல உட்கார்ந்துக்கலாம்” என்று சொல்லி அவளைக் காருக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து, அவளும் அருகில் உட்கார்ந்து, அவளைத் தன் மடியில் சாய்த்துக்கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் மனிஷா உறங்கிவிட, சம்யுக்தா கீழே இறங்கி மானவ்விடம் வந்தாள்.

“அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க, ஏனோ தெரில இந்த சம்பவம் ரொம்ப அவங்களை பாதிச்சு இருக்கு, மே பீ இதுக்கு முன்னாடி இருந்த ஸ்ட்ரெஸ் எல்லாம் ஒன்னு சேர்ந்து கூட இப்படி ஆகி இருக்கலாம். சோ இப்போதைக்கு அவங்களுக்கு ரெஸ்ட் ரொம்ப முக்கியம்,  நல்லா தூங்கட்டும், ஒரு வாரத்துக்கு வீட்ல இருக்கற டைம் அதிகமா இருந்தா பெட்டர்.”

“ஓகே மேடம்”

“டாக்டர் சம்யுக்தா, ஒரு நிமிஷம்” என்று சிவா இடையிட்டார்.

“சொல்லுங்க சார்”

“ஐ வான்ட் டூ டால்க் வித் யூ பெர்சனலி”

“யா ஸ்யூர்”

“மானவ் நீ சம்யுக்தாவை வீட்டுக்கு கூட்டிட்டு போ, தென் நீ கூட இருந்து பார்த்துக்கோ, அம்மாவையும், அத்தையையும் பாப்பாவை பார்த்துக்கச் சொல்லு”

“சரிப்பா…”

மானவ் கிளம்ப,

சிவா சம்யுக்தாவின் அருகில் வந்தார்.

“உட்காருங்க சார்” என்று அவரை அமரச் சொல்லிவிட்டு அருகில் அமர, பரத், “சம்யு நான் போயி உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன், அண்ட் சிவா? உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?”

“எனக்கு எதுவும் வேண்டாம்…”

“என் மருமக நீங்க சாப்பிடலைன்னா ஒன்னும் சாப்பிட மாட்டா, என் பையன் இவ எதுவும் சாப்பிடலைன்னு தெரிஞ்சா என்னை ஒரு வழியாக்கிடுவான், சோ உங்களுக்கு என்ன வேணும்?”

“எஸ் சார்… நீங்க எனக்கு கம்பெனி குடுத்தே ஆகனும்”

“சம்யுக்தாக்கு வாங்கறதே எனக்கும்”

அவர் சொல்லி முடிக்க, மற்ற இருவரும் சிரித்தனர்.

“அவளுக்கு வாங்கறதை நாம சாப்பிட முடியாது”

“ஏன்?”

“பிட்ஸா, சான்விட்ச், பர்கர் இதைத்தான் மேடம் சாப்பிடுவாங்க, இது பக்கம் எட்டிப்பார்க்ககூடாதுன்னு என் பையன் ஆர்டர்… அவன் இங்க இல்லைன்னு இந்த ஆட்டம், அவன் வந்தா சரியாகிடும்”

“சரி நீங்க ஏன் வாங்கித்தறீங்க?”

“மருமகள் மட்டும் இல்லை மகளும் இவள் தான், செல்லமா  கேட்கும் போது மனசு எங்க கேட்குது, உடனே சரின்னு சொல்லிடறேன், உங்க மானஷா மாதிரி தான் இந்த மேடம் எனக்கு”

“மாமா… எனக்குப் பசிக்குது… போயி சீக்கிரம் ஏதாவது வாங்கிட்டு வாங்க”

“நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் உங்களுக்கு ஸ்நேக்ஸ் மாதிரி வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிக்கொண்டே பரத் விடை பெற,

“நாம கார்ல உட்கார்ந்து பேசுவோமாம்மா?”

“ஸ்யூர் சார்”

இருவரும் சிவாவின் காரில் ஏறினர்,

“சொல்லுங்க சார் என்ன விஷயம்?”

“மனிஷா பத்தி பேசனும்”

“சொல்லுங்க சார்”

“ஏன் இந்த மாதிரி பீகேவ் பண்ணா? இதுக்கு முன்னாடி கூட அவ ரேப் கேஸ் பார்த்து இருக்கா, பட் அப்ப இந்தளவுக்கு அவ ஸ்ட்ரெஸ் ஆனது இல்லை, ஆனா இப்ப ஏன் இப்படி?”

“இந்த ஒரு கேசுக்கு மட்டும் இப்படி இருக்காங்களா?”

“ஆமாம் மேடம்…”

“மேடம் வேண்டாமே சார்… நீங்க என்னை சம்யுக்தான்னே கூப்பிடுங்க, தென் நீங்க வாங்கல்லாம் வேண்டாம்… மனிஷா எனக்கு நல்ல பிரண்ட்… சோ என்னையும் அப்படியே டிரீட் பண்ணுங்களேன்…”

“சம்யுக்தா என்னை சார்ன்னு கூப்பிடாத வரைக்கும் ஓகே”

“ஸ்யூர் அங்கிள்…”

“இந்த கேஸ்ல மட்டும் தான் இஸ்யூ, ஆனா இன்னொரு விஷயம் இருக்கு, எந்த கேசா இருந்தாலும், எந்நேரமா இருந்தாலும் ஓடுவா, வகேசன் போனாக் கூட எமெர்ஜென்சி கேஸ் இருக்குன்னு வந்துடுவா, அந்தளவுக்கு அவ டியூட்டில இன்வால்வ்மென்ட் இருக்கு, ஆனா அதாலையே இப்பெல்லாம் வர வர ஒரு ரோபோ மாதிரி இருக்கறதா எனக்கு ஒரு பீல்…”

“அங்கிள்… எனக்கு என் ஹஸ்பன்ட் வகேசன் கூட்டிகிட்டு போனா, நான் வகேசன் முடியும் வரை டாக்டர் போஸ்ட்டை மறந்துடுவேன், ஈவன் எனக்கு பெஸ்ட் டாக்டர் அவார்ட் கிடைச்சிருக்கு, எனக்கும் இந்த தொழில் உயிர் மூச்சு தான்… அவரும் அப்படித்தான், ஆனா நானும் சரி, என் கணவரும் சரி எந்த வொர்க் இருந்தாலும் எங்களுக்குன்னு ஒதுக்கற நேரத்தை என்ஜாய் தான் பண்ணுவோம், அதை எந்த காரணத்தை முன்னிட்டும் மிஸ் பண்ண மாட்டோம், கூடவே எங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் முன்னேற்பாடும் செஞ்சு வைச்சு இருப்போம்”

“———————————————“

“மனதளவில் ரொம்ப நாளா மனிஷாக்கு எதோ பிராப்ளம் இருக்கு, எனக்கு அவங்களை முதல் முறை பார்க்கும் போதே தோணிச்சு, அவங்க பேசறப்ப கூட ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தாங்க. எப்பவுமே, எதிலையுமே இன்டிரெஸ்ட் காட்டமாட்டாங்க, அவங்களுக்கு ஹெல்த் இஸ்யூ ஏதாவது இருக்கலாம், மே பீ இப்ப ப்ரெக்னன்ட்டா இருந்தாலும் இந்த மாதிரி மூட் சேஞ் ஆக வாய்ப்பு இருக்கு.”

“ப்ரெக்னன்ட்டா இருக்கற மாதிரி எனக்கு தெரியலை. வீட்ல தெரிஞ்சு இருந்தா சொல்லி இருப்பாங்க”

“மே பீ ஆன்ட்டிக்கே தெரியாம இருக்காலம், ஏன் மனிஷாவே இன்னும் ஐடென்டி பண்ணாம இருக்கலாம். தென் உங்க பையன் அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணுவாரா? ஐ மீன் ஷாப்பிங் போறது, ஜஸ்ட் டின்னர்க்கு போறது, உடம்பு சரி இல்லைன்னா கேர் பண்ணிக்கறது, குழந்தைக்கு உடம்பு சரி இல்லைன்னா பார்த்துக்கறது இந்த மாதிரி?”

“எனக்கு தெரிஞ்சு பண்ணி இருக்கான், ஆனா…” என்று யோசிக்க ஆரம்பித்த சிவாவை இடையிட்டவள்,

“ஆனா? ஆனா என்ன அங்கிள்?”

“பாப்பாவைக் கேர் எடுத்து பார்த்துக்குவான்… அந்தளவுக்கு மனிஷாக்கு பண்ணி இருக்கானான்னு எனக்குத் தெரில”

“———————————————-“

“மோஸ்ட்லி ஆன்ட்டி தான் பார்த்துப்பாங்க, இல்லையா மனிஷா அம்மா வந்து பார்த்துப்பாங்க… இவன் பிசினஸ் பின்னாடி தான் சுத்துவான், அது அவளுக்கும் தெரியும், அவ்ளோ ஏன் டெலிவரிக்கு கூட மனிஷா அவனைத் தேடவே இல்லையே”

“என்ன அங்கிள் சொல்றீங்க?”

“ஆமாம்மா… நார்மல் டெலிவரி தான், அவ டியுட்டீல இருக்கும் போதே பெய்ன் வந்துடுச்சு… பட் குழந்தை பிறக்கும் வரை மானவ் பத்தி கேட்கவே இல்லை… அதுக்கு அப்புறம் ஒரு தடவை கேட்டா, அந்த நேரத்துல மானவ் மும்பைல இருந்தான்… விஷயம் கேள்விப்பட்ட உடனேயே வந்துட்டான்.”

“அந்த நிலைமைல கூட டியூட்டி பார்த்தாங்களா?”

“வீட்ல போர் அடிக்குதுன்னு போனாம்மா… அதுவும் இல்லாம அவளுக்கு டியூ டேட் வேற இருந்துச்சு…”

“மானவ்க்கு எப்ப இன்பார்ம் பண்ணீங்க?”

“பெய்ன் வந்ததுமே அவ அங்க வொர்க் பண்ற டாக்டர்கிட்ட போயிட்டா, தென் அவங்க உடனே எனக்கு சொல்ல, நான் மானவுக்கு சொன்னேன். அவனுக்கு அன்னிக்கு ஈவ்னிங் தான் பிளைட், அதுல கிளம்பி வர மிட் நைட் ஆகிடுச்சு”

“ஏன் அங்கிள், மே பீ ஆன்ட்டிக்கு லேபர் பெய்ன்ன்னு நான் போன் பண்ணி இருந்தா, நீங்க அந்த சூழ்நிலைல என்ன பண்ணி இருப்பீங்க?”

“உடனே கிளம்பி, இருக்கற பிளைட் பிடிச்சோ, இல்லை சாட்டர் பிளைட் புடிச்சோ வந்துருப்பேன்”

Advertisement