Advertisement

ஜுவாலாவின் கழுத்தில் இருந்த பவியின் செயினை, சம்யுக்தா பரத்திடம் கொண்டு வந்து தந்திருந்தாள். அதை நினைவு கூர்ந்து அமர்ந்திருந்தார்.
“இந்தாங்க மாமா அத்தையோட செயின்”
“எதுக்குமா என்கிட்டே தர்ற?”
“வைச்சு இருங்க மாமா, அப்புறமா வாங்கிக்கறேன், என்னோட நகையோட மிக்ஸ் ஆகிடும்”  என்று சொன்னவள், அவருடைய கையில் அதை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறப் போனாள்.
வெளியேறும் முன் திரும்பி நின்று அவரைப் பார்த்தவள்,
“மாமனார் மருமகளுக்கு, இது உங்க அத்தையோடதுன்னு நகை ஏதாவது ஏதாவது ஒரு சந்தர்பத்துல தருவாங்க, நீங்க இதுவரை எனக்கு எதுவுமே தர முடியலை, இந்த ஒன்னையாவது எனக்கு வைச்சிட்டு போங்க மாமா” என்றவள் பிசிறடித்த குரலுடன் அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
பேரப்பிள்ளைகளுக்கு தெரியாமல் அறையில் மறைத்து வைத்திருந்த பவித்ராவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தவர் அந்த செயினை கையில் வைத்துக்கொண்டு கண்கள் கலங்க ஆரம்பித்தார்.
“ஏன் பவி… உனக்கு என்னை கொஞ்சம் கூட நினைவுக்கு வரலியா?” என்று மனமுருகி கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தார்.
அதே இரவில்,
மானவ் டெல்லியை நோக்கிப் பயணமாக, பிரித்வி திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தான். இன்னொரு பக்கம் சோகமே உருவாக ஹோட்டல் அறையின் பால்கனியில் அமர்ந்து வெளியே ரோட்டில் செல்லும் வாகனங்களை மனிஷா பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
மறுநாள் காலை அழகாகப் பொழுது புலர, 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அன்றைய ஓட்டத்திற்கு தயாராக,
தனது தினசரி ஓட்டத்தை தவிர்த்துவிட்டு, யோசனையுடன் ஹாலில் அமர்ந்திருந்தார் சிவா. அவரது யோசனை படிந்த முகத்தைக் கண்ட பவி,
“என்னங்க யோசிக்கறீங்க?” என்று அவரது அருகில் வந்து அமர்ந்தாள்.
“சம்யுக்தாவை எப்படி வீட்டுக்கு வர வைக்கிறதுன்னு யோசிக்கறேன்”
“புரியலைங்க”
“சம்யுக்தாவையும், பசங்களையும் இங்க வர வைக்கனும், அதுதான் எப்படின்னு யோசிக்கறேன்”
“வரவைச்சு?”
“பவி தொடர்ந்து சில மணி நேரங்கள் அவ நம்ம கூட இருந்தா, அவகிட்ட அவளோட அப்பா, அம்மா பத்தி, பரத், பரத் மனைவி பற்றி, சம்யுக்தா புருசனைப் பத்தி கொஞ்சம் கொஞ்சமா விசாரிச்சா இந்த சிக்கலோட நூல் நுனி தெரிஞ்சுடும்.
“இதுதான் பிரச்சனையா? நெக்ஸ்ட் பிரைடே வீட்ல ஹோமம் ஏற்பாடு பண்ணி இருக்கேன், அப்ப வரச் சொல்லி இன்வைட் பண்ணுவோம், ஆனா எனக்கு சர்வாவை நேர்ல பார்க்கனும் போல இருக்கு, இன்னிக்கு நேர்ல போயி இன்வைட் பண்ணிட்டு வருவோமா?”
“நீ வேண்டாம் நான் மட்டும் போறேன்”
“இல்லைங்க நானும் வரேன்… பிளீஸ்ங்க”
“சரி கிளம்பி ரெடியாகு, போய் கூப்பிட்டுட்டு வரலாம்”
“சரிங்க, நீங்க முதல்ல போன் பண்ணி வரலாமான்னு கேட்டுக்கோங்க”
சிவா போனை எடுத்து சம்யுக்தாவை அழைத்தார்.
ஹாலில் காபி குடித்துகொண்டு இருந்த சம்யுக்தா போன் அழைக்கவும், அதை எடுத்து பார்த்தது திகைத்தாள்.
“மாமா சிவா அங்கிள் கால் பண்றார், ஏதாவது பிராப்ளமா இருக்குமா?”
“பேசுவார்ன்னு நினைச்சேன்… பேசு”
அவரது பதிலில் புருவம் சுருக்கியவள்,
“பேசுவார்ன்னு நினைச்சிங்களா?”
“ம்ம்… நீ முதல்ல பேசு. அப்புறம் நான் சொல்றேன்”
போனை அட்டென்ட் செய்தவள்,
“குட் மார்னிங் அங்கிள்… சொல்லுங்க…”
“குட் மார்னிங்ம்மா… நீ பிரீயா இருக்கியா?”
“எஸ் அங்கிள் சொல்லுங்க…”
“வீட்ல ஒரு பூஜை, அதுக்கு உன்னை இன்வைட் பண்ண வரலாம்ன்னு கேட்கத்தான் போன் பண்ணேன். இப்ப காலைல வந்தா பார்க்கலாமா?”
“கண்டிப்பா அங்கிள்… நீங்க பிரேக்பாஸ்ட்க்கு இங்க வந்துடுங்க”
“இல்லைம்மா… ஜஸ்ட் ஒரு காபி போதும்”
“நோ வே அங்கிள்… உங்களுக்கு இங்கதான் பிரேக்பாஸ்ட்…”
“ஓகேம்மா… நானும் ஆன்ட்டியும் தான் வர்றோம்”
“வாங்க அங்கிள்…”
“பைம்மா” என்று போனை அணைத்தவர்,
“சம்யுக்தாகிட்ட சொல்லிட்டேன் பவி, நீ கிளம்பு” என்றவர் தானும் அங்கு கிளம்பத்தயாராக ஆரம்பித்தார்.
இங்கு போனை வைத்த சம்யுக்தா,
“மாமா அடுத்த வாரம் ஏதோ பூஜையாம், நம்மை இன்வைட் பண்ண இப்ப இங்க வர்றாங்களாம்”
“ஓகே”
“பிரேக்பாஸ்ட் இங்க தான்னு சொல்லிட்டேன்”
“ஓகே”
“அத்தையும் வர்றாங்களாம்”
“ஓகே”
“என்ன ஓகே? ஓகே? நான் என்ன மொக்கை ஜோக்கா சொல்றேன்”
“மத்ததெல்லாம் அப்புறம், இப்ப நீ என்ன பண்ற, சமையலைப் பார்கிற, நான் வெளிய கிளம்பறேன்”
“ஏன் மாமா? நேத்தே அத்தையைப் பார்த்துட்டீங்க, இன்னிக்கு என்ன?”
“சிவா நேத்து சர்வாவைப் பார்த்ததுமே முகம் மாறிடிச்சு… ரெண்டாவது போட்டோகிராபர் கூட எதுவோ பேசிக்கிட்டு இருந்தார். சோ இங்க வர்றது, உன்னை இன்வைட் பண்றது எல்லாமே சந்தேகமே”
“இப்ப என்ன மாமா பண்றது?”
“நான் இருந்தா கேள்விக்கு விளக்கம் சொல்லனும், நான் பசங்களைக் கூட்டிக்கிட்டு நம்ம பண்ணை வீட்டுக்கு கிளம்பறேன். நீ அவங்களை பார்த்துட்டு எனக்கு கால் பண்ணு.”
“சரி மாமா”
பரத் காரில் பசங்களுடன் பண்ணை வீட்டுக்குச் சென்ற அரை மணி நேரத்தில் சிவாவின் கார் பரத்தின் வீட்டில் நுழைந்தது.
வீட்டின் முகப்பில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருந்தாலும், வீடு அப்படியே இருந்தது.
கார் சத்தம் கேட்டு வந்த சம்யுக்தா, “வாங்க அங்கிள்… வாங்க ஆன்ட்டி…” என்று முகம் மலர வரவேற்க,
இருவரும் புன்னகையுடன் உள்ளே சென்றனர்.
சிவா மட்டும் வீட்டைச் சுற்றி பார்வையிட,
“என்ன அங்கிள் அப்படி பார்க்கறீங்க?”
“ஏற்கனவே வந்ததுக்கும், இப்போதைக்கும் வீடு ரொம்ப மாறிடுச்சு, அதான் பார்த்தேன், ஆனா மத்தபடி அதே மாதிரி தான் இருக்கு”
“அதுவா அங்கிள், இதெல்லாம் நான் பார்த்த வேலை, நிறையா சேஞ்ச் பண்ண ஆசை தான் நோ டைம், கூடவே தாத்தா பாட்டி இருந்த வீடு. அதான் அப்படியே விட்டுட்டேன்”
“சிவா நீங்க எப்ப வந்தீங்க?”
“அது… அது ரொம்ப வருஷம் அகிடுச்சும்மா அதான் தெரியலை”
“உட்காருங்க அங்கிள்… உட்காருங்க ஆன்ட்டி…”
இருவரும் அமர இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள்.
“தேங்க்ஸ்ம்மா”
“இந்தாம்மா…” என்று பவித்ரா குடுத்த கவரில் பழங்களும், இனிப்புகளும், பிஸ்கட்டுக்களும் இருந்தன.
“வாங்க அங்கிள் பிரேக் பாஸ்ட் சாப்பிடலாம்” என்றவள் இருவரையும் அழைத்துச் சென்று டைனிங் டேபிளில் அமர வைத்தாள்.
இருவருக்கும் பரிமாற ஆரம்பிக்க, 
“எங்கம்மா பசங்களைக் காணோம்”
“அவங்க வெளிய போயிருக்காங்க ஆன்ட்டி”
“எப்ப வருவாங்க?”
“சன்டே தான் ஆன்ட்டி”
“சன்டேவா?”
“மாமா கூட ஒரு ஜாலி டிரிப் போயிட்டாங்க ஆன்ட்டி, ஊர் சுத்த தான் ரெண்டுக்கும் இஷ்டம்…”
“பசங்க அப்படித்தான் இருப்பாங்கம்மா, பார்க்கலாம்ன்னு நினைச்சேன், முடியாம போய்டுச்சு”
“ஒரு நாளைக்கு நானே வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரேன் ஆன்ட்டி”
“இட்ஸ் ஓகே ம்மா… பசங்க வந்ததும் கூட்டிக்கிட்டு வா…”
“சாரி அங்கிள்… சாரி ஆன்ட்டி… நீங்க சொன்னதும் உடனே என்னால இட்லி, சப்பாத்தி தான் ரெடி பண்ண முடிஞ்சது, டோன்ட் மிஸ்டேக் மீ”
“எங்கம்மா வேற சாப்பிட? எனக்கு கொலஸ்ட்ரால் இருக்கு, அங்கிள் வயசாக ஆக மருந்து மாத்திரைக்கு பயந்து, அவரே கன்ட்ரோல் பண்ணிகிட்டார்”
“ஹெல்த் ரொம்ப முக்கியம் இல்லையா ஆன்ட்டி?”
“ஆமாம்மா. உங்க ஆன்ட்டிக்கு ரொம்ப கவலை, நான் ஒழுங்கா சாப்பிடறதில்லைன்னு…”
“அவர் இப்படித்தான்ம்மா… உனக்கு நன்றி சொல்லனும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். நேரமே கிடைக்கலை”
“நன்றியா? எதுக்கு ஆன்ட்டி?”
“மனிஷா பத்தி சரியான சமயத்தில் சொன்னதுகும்மா”
“ஹோ.. அதுக்கா, அதுக்கு எத்தனை தடவை சொல்வீங்க, மனிஷா எனக்கு ஒரு பிரெண்ட்… அவங்க வாழ்க்கை நல்லா இருந்தா எனக்கும் ஹேப்பி தான்…”
“சரியான நல்லா இருக்கும்… சரியாகற வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியலை”
“ஏன் ஆன்ட்டி? இன்னும் அப்படியேதான் இருக்காங்களா?”
“ஆமாம்ம்மா. ஏதோ முதல்ல இருந்ததுக்கு கொஞ்சம் பரவால்ல. முழுசா சரியாக என்ன பண்றதுன்னு தெரியலை”
“நான் ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன் ஆன்ட்டி”
“உங்க அத்தை எங்கம்மா? ஆளையேக் காணோம், அவங்களும் கூடவே போயிருக்காங்களா?” என்று அதுவரை வீட்டையும், அவளையும் ஆராய்ந்து கொண்டே உணவருந்திக்கொண்டு இருந்த சிவா கேள்வியெழுப்பினார்.
“அவங்க, அவங்க நேட்டிவ்ல இருக்காங்க… அங்கிள்…”
“உன் வீட்டுகாரர் வர்றாரா?”
“அவர் இந்த மன்த் என்ட் வர்றேன்னு சொன்னார், எப்படியும் சீக்கிரம் வந்துருவார் அங்கிள்… பசங்களைப் பார்க்காம இருக்க முடியலையாம்”
“அவர் என்ன பண்றார்?”
“அவர் ஒரு கர்னாட்டிக் சிங்கர் அங்கிள்.”
“பைன்ம்மா… பசங்க ரெண்டு பேரும் இங்க சிட்டிசன் ஷிப்பா இல்லை கனடியன் சிட்டிசன் ஷிப்பா?”
“அவங்க கனடியன் சிட்டிசன் ஷிப் அங்கிள்… நாலு பேருமே அங்க தான், இப்ப இங்க டெம்பரவரியா விசால வந்து இருக்கோம், இந்த இயர் முடிஞ்சதும் கனடாவே போகலாம்ன்னு ஒரு ஐடியா”
“ஏம்மா?”
“பசங்களுக்கு இங்க இஷ்டம் இல்லை ஆன்ட்டி, அவங்க பிறந்ததில இருந்து அங்க பழகின இடத்தை விட்டு இங்க வர அவங்களுக்கு மனசில்லை, எனக்காகத்தான் வந்தாங்க, குறிப்பிட்ட ரூல்ஸ்ல வாழ்ந்துட்டு இப்ப இங்க டோட்டலா மாறி இருக்கறது அவங்களுக்கு பிடிக்கலை, கூடவே அவங்க அப்பா இல்லாதது ரொம்ப வருத்தம்”
“ரெண்டு பேருமே அப்பா பசங்களா?”
“ஆமா ஆன்ட்டி, பையன் அம்மா செல்லம்ன்னு சொல்லிக்கலாம், பட் அவன் சுத்துறது முழுக்க அவங்க அப்பா கூடவாத்தான் இருக்கும், லீவு நாள்ல அவருக்கு முன்னாடி அவர்கூட போக கிளம்பி இருப்பான். அங்கிள் உங்களுக்கு இன்னொரு சப்பாத்தி?”
“போதும்மா… பேசிக்கிட்டே சாப்பிட்டதில் எக்ஸ்ட்ராவே சாப்பிட்டேன்”
சிவா சொல்லி முடிக்கவும் பவித்ராவின் செல் அழைக்கவும் சரியாக இருந்தது.
“எக்ஸ்கியுஸ் மீ அங்கிள்” என்றவள் கிட்செனில் இருந்த அவளுடைய செல்போனை நோக்கிச் சென்றாள்.
அவள் வெளியே வரவும் சிவாவும், பவித்ராவும் கைகழுவிவிட்டு ஹாலுக்குச் செல்லவும் சரியாக இருந்தது. 
“என்ன அங்கிள், என்ன ஆன்ட்டி அதுக்குள்ள கைகழுவிட்டீங்க?”
“போதும்மா, நிறையாவே சாப்பிட்டோம்”
“கால் ஹாஸ்பிட்டல்ல இருந்து அங்கிள், எமர்ஜென்சி, சாரி அங்கிள் நான் உடனே கிளம்பனும். டோன்ட் மிஸ்டேக் மீ”
“ஓகேம்மா நோ பிராப்ளம், எங்க வீட்டிலையும் மூனு டாக்டர் இருக்காங்க, கூடவே உயிரோட மதிப்பும் தெரியும்மா, நீ கிளம்பு”
“சரிம்மா, வர்ற வெள்ளிக்கிழமை வீட்ல பூஜை ஏற்பாடு பண்ணி இருக்கோம், வீட்ல எல்லாரையும் கூட்டிக்கிட்டு வெளிக்கிழமை வீட்டுக்கு வந்துடும்மா”
“கண்டிப்பா ஆன்ட்டி?”
“எத்தனை மணிக்கு பூஜை?”
“ஈவ்னிங் ஆறு மணிக்கு”
“கண்டிப்பா ஆன்ட்டி…”
“சரி… கிளம்பு… சம்யுக்தாக்கு லேட் ஆகுது”
“வர்றோம்மா” என்று இருவரும் கிளம்ப, 
அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, சம்யுக்தா பரபரப்பாக கேப் புக் செய்து, மருத்துவமனைக்கு கிளம்பினாள்.
மருத்துவமனைக்குள் நுழைந்து அவசர சிகிச்சைப் பிரிவை அடைய, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரைப் பரிசோத்தித்து விட்டு அவருக்கு வேண்டிய சிகிச்சை அளித்து, அவரைக் காப்பாற்றிவிட்டுத்தான் ஓய்ந்தாள்.
ஓய்ந்து போய் அவளறைக்குச் சென்று அமர்ந்தவளின் அறைக்கதவை யாரோ தட்ட,
“எஸ் கமின்” என்றவள் உள்ளே நுழைந்தவரைப் பார்த்து கோபத்தில் முகம் சிவக்க ஆரம்பித்தாள்.
“ஹாய் டார்லிங்”
“———————————————–“
“என்னம்மா இவ்ளோ டயர்டா இருக்க? காலைல சாப்பிட்டியா? சாப்பிடலையா? இப்ப மணி என்னத் தெரியுமா? வா சாப்பிட போலாம்”
“————————————————“
“என் மேல கோபம் ஓகே… அதை சாப்பிட்டுகிட்டே ஒரு நாலு திட்டு வழக்கம் போலத் திட்டு… எழுந்திரி”
“ஒழுங்கா என் கண் முன்னால நிற்காம எழுந்து போயிடு. இல்லை நடக்கறதே வேற…”
“என்ன பண்ணுவ? போலீஸ் கம்ப்ளைன்ட் குடுப்பியா? எங்க குடு பார்க்கலாம்? கமிஷனர் நம்பர் கூட இருக்கு தரட்டா?”
“இது ஹாஸ்பிட்டல்… அதுவும் என் ஹாஸ்பிட்டல்… அதானால கொஞ்சம் அடக்கி வாசிச்சா, ரொம்ப பண்ற? எங்கிட்ட உன் வேலையெல்லாம் காட்டாத, அப்புறம் இங்கேயே உன்னை அட்மிட் பண்ற அளவுக்காகிடும்”
“நோ பிராப்ளம், டிரீட்மென்ட்க்கு உன் கை என் மேல படும்ல, அதுக்காகவே அட்மிட் ஆகிக்கறேன், நீ என்ன பண்ணு, எனக்கு ஒரு அட்மிஷன் சிலிப் போடு பார்க்கலாம்”
“யூ… ராஸ்கல்” என்று அவள் பல்லைக்கடிக்கும் போதே, 
“எக்ஸ்கியுஸ் மீ மேம்” என்று கதவைத் திறத்து கொண்டு ஒரு செவிலிப்பெண் உள்ளே வந்தார்.
“மேம் உங்களுக்கு பிட்ஸா வந்திருக்கு”
“கொண்டு வரச்சொல்லுங்க”
டெலிவரி பாய் கொண்டுவந்த பிட்சாவிற்கு கைப்பையில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தவள், பிட்சாவையும், தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு அவள் இருக்கையை விட்டு எழுந்தாள்.
“வெல்… இங்க நான் ஓவர் ரியாக்ட் பண்ணி, ரெண்டு பேரோட பெயரும் ஓவர் டேமேஜ் ஆக நான் விரும்பலை, சோ கிளம்பு” என்று அவள் வெளியேற முயற்சிக்க,
அவளது கரம் பற்றி இழுத்து அவன் மடிமீது அமர்த்தி அவள் எழுந்திருக்கா வண்ணம் ஒற்றைக்கையால் இறுக அணைத்தவன், மற்றொரு கையால் பிட்ஸா பெட்டியைத் திறந்து, அதிலிருந்த துண்டுகளில் ஒன்றை எடுத்து சுவாதீனமாக உண்ண ஆரம்பிக்க,
“டேய்… இப்ப விடப்போறியா இல்லியா?”
“இரு செல்லம், எப்பப்பார்த்தாலும் இதையே சாப்பிடறியே அப்படி இதுல என்ன இருக்குன்னு பார்க்கறேன்”
அவன் உண்பதில் கவனமாக, அந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அவளது கரங்களை இறுக்கிப்பிடித்திருந்த அவனது கையைக் குனிந்து கடித்துவிட்டிருந்தாள். அதில் அவன்,
“ஸ்… ராட்சஸி…” என்று முனங்கிக்கொண்டே கைகளை எடுத்துவிட,
அவன் மடியில் இருந்து துள்ளி எழுந்தவள், பிட்சா பாக்சையும், தண்ணீர் பாட்டிலையும் நொடியில் எடுத்துக்கொண்டு அறைக்கதவைத் திறந்திருந்தாள். வெளியே சென்றவள் உள்ளே எட்டிப்பார்த்து,
“எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் கையை வைச்சதுக்கு என் பனிஷ்மென்ட் இது, இது வெறும் சாம்பிள் தான், அப்புறம் ரத்தக்களறி ஆகிடும் ஜாக்கிரதை… ரொம்ப ஆடாத, இன்னும் ஒரு மாசம் தான், அப்புறம் தெரியும் நான் யார்ன்னு”
அவனோ புன்னகைத்துக்கொண்டே,
“ஒரு மாசம் தான்… அப்புறம் தெரியும், நீ இந்த பிரித்வியோட சம்யுக்தா மட்டும்தான்னு… முடிஞ்சா என்னை விட்டு ஒரு செகன்ட் விலக முடியுமான்னு யோசி” என்று எழுந்து கொண்டே அவளருகே வந்து சொன்னவன், 
“தேங்க்ஸ் பார் யுவர் பிட்ஸா” என்று சொல்லிவிட்டு அவளுடைய புடவைத்தலைப்பில் கையை துடைத்துக்கொண்டு சிறு புன்னகையுடன் அவளைத் தாண்டிச் சென்றான்.
அவனது செயலில் மேலும் கடுப்பான சம்யுக்தா, சுற்றிலும் பார்க்க, அவளது அறைக்கு வெளியே இருந்த செவிலிப்பெண் ஒருத்தர் அவளையே பார்ப்பதைக் கண்டதும், அவளுக்கு சர்வ நிச்சயமாக புரிந்து போனது, அவன் அவளது புடவை முந்தானையில் கையைத் துடைத்ததைப் பார்த்திருப்பாளென்று.
ஒரு நொடி அவனை மனதிற்குள் திட்டியவள், அந்த பெண்ணைப் பார்த்து, “என் ரூம்ல லைட் மட்டும் ஆப் பண்ணுங்க, கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்றவள் அங்கிருந்த அவளுடைய தனிப்பட்ட அறைக்குச் சென்றாள்.
ராகம் இசைக்கும்…

Advertisement