Advertisement

சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 6
சிறு பிராயத்தில் இருந்த சிவாவை, அச்சில் வார்த்தது போல, சிவாவின் சாடையைக் கொண்டிருந்த பையனைக் கண்ட இருவரும் அதிர்சியுடன் ஒருவர் முகத்தை, ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சிவாவின் குழந்தைப் படத்தை நேரில் பார்த்தது போல இருவருக்கும் தோன்ற, கீழிருந்து பார்த்த நித்தியாவுமே ஒரு நொடி அதிர்ந்தது உண்மை. சிவாவின் பெற்றோர் அறையில் இருந்த சிவாவின் குழந்தைப்படம் அவள் கண்ணில் நிழலாடியது.
வந்த சிறுவனோ, நிமிர்ந்த நடையுடன், சற்று கர்வத்துடன் மேலே வந்து நின்றான்.
இந்த அதிர்ச்சியை விட, சிவா சந்தித்த மிகப்பெரிய அடுத்த அதிர்ச்சி, அந்த மேடையில் வந்து நின்ற அடுத்த நபர்கள் தான்.
அந்த சிறுமி மற்றும் சிறுவனின் பின்னே, சம்யுக்தாவும், பரத்தும் மேடையில் ஏறி இருந்தனர்.
சிவா சம்யுக்தாவின் சாயலை அந்த சிறுமியிடம் நொடியில் கண்டு கொண்டார், ஆனால் அந்த சிறுவன் தான் அவர் மண்டையைக் குடைய ஆரம்பித்தான்.
ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொன்றாக இருக்க,
தொகுப்பாளர் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார்,
“அனைவரும் மதி மயங்கிக் கேட்ட “குறை ஒன்றும் இல்லை” என்ற இறைப்பாடலைப் பாடியவர் இந்த மாணவி தான். இந்த ஆண்டில் மூன்றாம் வகுப்பிற்கான மற்றும் ஐந்தாவது வகுப்பிற்கான பாட்டு, பரதம், மேற்கத்திய நடனம், மாறுவேடப்போட்டி, தமிழ், ஆங்கில வழிக் கட்டுரைப்போட்டி, இந்தி கட்டுரைப்போட்டி, மும்மொழியிலும் கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி என அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசு பெற்ற மாணவி மற்றும் மாணவன் இவர்கள் தான். இது தவிர இந்த வருடம் நடந்த அனைத்து  மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றுள்ளனர்… ஒவ்வொரு போட்டிக்குமான முதல் பரிசு மற்றும் ஏற்கனவே பெற்ற பரிசுகளுக்கு, வழக்கமாக நம் பள்ளியில் நாம் தரும் கவுரவப் பரிசு இரண்டுடனும், பள்ளியில் படிப்பில், ஒழுக்கத்தில், நேர்மையில், நேரம் தவறாமையில், ஒரு குழுத் தலைவரின் செயல்பாட்டில் என அனைத்திலும் முதலாக வந்ததற்கும், சில சிறப்பு பரிசுகளும் இப்பொழுது வழங்கப்படுகின்றன. இந்த பரிசுகளை வழங்க, பவித்ரா மேடம், ஈஸ்வர் சார் மற்றும் மாண்புமிகு சிறப்பு விருந்தினர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்”
“இன்றைய இந்த மாகா விழாவின் வேள்வியில் உதித்த ஜுவாலை தான் இந்த ஜுவாலா. பரிசுகளை மாணவி ஜுவாலாவுடன் சேர்ந்து வாங்க அவர்களது அன்னை மற்றும் தாத்தாவை உடன் அழைக்கின்றோம்”
அதிர்ச்சியில் உறைந்து கிடந்த இருவரின் அருகே பரிசு நீட்டப்பட, ஜுவாலா வெற்றி பெற்ற ஒவ்வொரு போட்டியாக தொகுப்பாளர் அறிவிக்க, மூவரும் அவளுக்கு பரிசுகள் வழங்கினர். ஜுவாலா வாங்க மற்ற மூவரும் உடன் இருந்தனர், அவள் ஒவ்வொன்றாக வாங்கிக்கொண்டு அருகில் நின்ற அவளுடைய சகோதரனிடம் தர, அவன் அன்னையிடம் தந்து கொண்டிருந்தான். கழுத்தில் விழுந்த மெடலைக் கூட அடுத்த நொடி கழட்டி, தன் அண்ணனின் கழுத்தில் தான் போட்டாள் அந்த சிறுமி.
அவளுடைய சுற்று முடிந்ததும் சிறுவனின் சுற்று ஆரம்பமானது.
“ஜுவாலாவைப் போலவே அவளுடைய அண்ணன் சர்வேஷ்வரும் பரிசுகளை அள்ளிக்கொண்டு செல்லப்போகிறார். இவர்தான் சற்று முன்னர் முகமூடி அணிந்து கொண்டு படம் வரைந்த மூன்று சிறுவர்களில் ஒருவர், நமது பவித்ரா மேடம் மற்றும் சிவா சாரை வரைந்தது இவர் தான். இவரிடம் உள்ள ஒரு தனிச்சிறப்பு, வண்ணங்கள் இன்றி, வெறும் பென்சிலைக் கொண்டே அழகிய ஓவியங்களை வரையும் திறமை. இவர் பரிசு வாங்குவதற்கு முன்னர், இவர் வரைந்த ஓவியத்தை நம்முடைய பவித்ரா மேடம் மற்றும் சிவா சாருக்கு பரிசாக வழங்கப்போகிறார்.” என்று அவர் சொல்லி முடிக்க, சர்வேஷ் வரைந்த ஓவியத்தைச் சுருட்டி, ஒரு கலர் ரிப்பனில் கட்டி, ஒரு தட்டில் வைத்து அதைக்கொண்டுவந்து அவனிடம் நீட்டினர், அவன் அந்த ஓவியத்தை இருவருக்கும் வழங்க, பவித்ரா கண்களில் நீர் மல்க அந்த சிறுவனின் கன்னத்தை வருட, சிவா கை குலுக்கினார்.
அடுத்ததாக, அவன் பரிசுகள் ஒவ்வொன்றாக வாங்கி அன்னையிடம் சேர்த்தான். மேடையில் இருந்து கீழிறங்கும் முன்னரே, அனைத்து மெடல்களும் சம்யுக்தாவின் கழுத்தில் தான் கிடந்தன. கேடயங்களும், கப்புகளும் பாதி சம்யுக்தாவின் கையிலயும், பரத்தின் கையிலும் என்றால் மீதியை ஆசிரியர் ஒருவர் வாங்கி ஒரு கவரில் போட்டுக்கொண்டு இருந்தார், இவற்றுடன் சான்றிதழ்கள் வேறு இருந்தது.
“மேடம், உங்களுடைய குழந்தைகளின் சாதனையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எங்களுடன் பேச உங்களை அன்புடன் அழைக்கின்றோம்”
கண்களில் நிறைந்த நீரைத் துடைத்துவிட்டு, கைகளில் இருந்த பரிசுக்கோப்பைகளை அருகில் இருந்த ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு நேராக மைக்கை நோக்கிச் சென்றவள்,
“அனைவருக்கும் வணக்கம், என்னோட பசங்க இன்னிக்கு இவ்ளோ சாதிச்சு இருக்கறதை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோசம், இவர்கள் வளர்ந்த சூழலே வேறு, இருவரும் இந்தியா வந்து ஒரு பத்து மாதங்களுக்குள்ளாகத் தான் இருக்கும். எனக்கு இங்கு வரும் போது ரொம்ப கவலையா இருந்துச்சு. அங்க இருந்த சூழல் வேற, இங்க இருக்கற சூழல் வேற, எப்படி எடுத்துப்பாங்களோன்னு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா இவங்க ரெண்டு பேரும் அந்த சூழலை அப்படியே இங்க உருவாகிக்கிட்டாங்க.”
“அங்க சிறு வயது முதலே பிள்ளைகள் அவர்களுடைய தனித்திறமையை வளர்த்துக்கும் சூழல் இருக்கு, அது இவங்களுக்கு பேருதவியா இருந்தது, கூடவே நாங்க எங்க பசங்க இதைதான் செய்யனும், இப்படித்தான் செய்யனும்னு சொன்னதே இல்லை. அவங்களா விருப்பப்பட்டுக் கேட்டா, அந்த கோச்சிங்ல சேர்த்து விடுவோம். அவங்க திறமைகளுக்கு உறுதுணையா நின்றோம், சாதிச்சது அவங்க தான்.” 
“இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல், இவன் மகன் என்நோற்றான் கொல் எனும் சொல் அப்படின்னு சொல்லறதுக்கு ஏத்த மாதிரி பெற்றோராகிய நாங்களும் இவங்களுக்கு பெருமை சேர்த்து இருக்கோம், இவங்களும் எங்களுக்கு பெருமை சேர்த்து இருக்காங்க.”
“எங்களுக்கு அப்புறம் எங்க பொண்ணை அதிகம் பார்த்துகிட்டதுங்கறத விட வளர்த்தது எங்க மகன் சர்வேஷ் தான். ஒவ்வொரு நாளும் அவன் கிளாஸ் முடிஞ்சதும் நேரா அவளைப் பார்த்து கூட்டிக்கிட்டுத் வருவான், சில நேரம் வெயிட் பண்ணி கூட்டிகிட்டு வருவான், அந்த பொறுப்பு இங்கயும் இருக்கறதை நினைக்கிறப்ப சந்தோசமா இருக்கு, இன்னிக்கு அவ வாங்கின பரிசு, மெடல் எல்லாமே அவளுக்கு கிடைக்க உறுதுணையா இருந்த சரிவேஷ்க்கு அவ உடனே குடுத்தது, அவளோட அன்பின் வெளிப்பாடு.”
“ஆக மொத்தம் எங்க மகனோட வெற்றிக்கு அவனே முழு பொறுப்பு, நாங்க வெறும் கருவி தான், எங்க மகளோட வெற்றிக்கு அவள் மட்டுமே பொறுப்பு, எங்கள் கூட, என் மகனும் அதுக்கு ஒரு கருவி தான்”
“பசங்க குறும்பு பண்ணுவாங்க, ஆனா உங்க பசங்க குறும்பு பண்ணி இங்க நாங்க பார்த்தது இல்லை, வீட்ல எப்படி மேடம்?”
“பொதுவா குழந்தைங்க குறும்பு பண்ணக் காரணமே, நாம அவங்களை கவனிக்கனும்ன்னு தான். எங்க வீட்ல எப்பவுமே யாராவது ஒருத்தர் பசங்களை கவனிச்சுக்கிட்டேயிருப்போம், ஒவ்வொரு நாளும் அவங்களுக்கு நாங்க ஒதுக்கற நேரம் எந்த காரணத்தை முன்னிட்டும் இதுவரை மாறினது இல்லை. ஆரம்பத்துல இருந்தே பொறுப்புகள் தந்து தான் குழந்தைகளை வளர்த்தினோம்.”
“இன்பாக்ட் ஜுவாலா பிறக்கும் போது சர்வேஷ் இரண்டு வயது பையன். ஆனா அவன் எதையும் மிஸ் பண்ணது இல்லை, நாங்களும் அவனைக் கவனிக்காம விட்டது இல்லை. நாளாக நாளாக அவனுக்கு ஜுவாலாவோட பொறுப்பைக் குடுக்க ஆரம்பித்தோம். லைக், அழுதா தொட்டில் ஆட்டறது, பொம்மை எடுத்து தர்றது, சாப்பாடு ஊட்டி விடறது, தலை வாரி விடறது, குளிக்க வைக்கிறது, இந்த மாதிரி அவ வளர வளர பொறுப்புகளும் சர்வாக்கு அதிகமாச்சு… அப்படியே அந்த அக்கறை முழுசா அவள் மேல படிப்படியா அவனுக்கு வந்துடுச்சு.”
“சோ எங்க வீட்ல குறும்பு கிடையாது, ரெண்டு பேருக்கும் பொறுப்பு தான் இருக்கு, அதே நேரம் எல்லா கலாட்டாவும் நடக்கும், சில நேரங்கள்ல ரூமா இதுன்னு கேட்கத் தோன்றும், பட் அடுத்த அஞ்சு நிமிசத்துல அது கிளீன் ஆகிடும், இதுவரை குறும்புன்னு எங்களுக்கு பெரிசா தெரியலை…, இந்த வயசுக்கு உண்டான விளையாட்டு, சில கலாட்டாக்கள் இருக்கும்.”
“இவங்க அப்பா இந்த நேரம் இங்க இருந்தா என்ன சொல்லி இருப்பார்?”
“இங்க தான் இருக்கார், ஐ மீன், அவர் உயிரும் உள்ளமும் இந்த நிமிஷம் எங்களைச் சுத்திதான் இருக்கு. கண்டிப்பா அவர் ரொம்ப சந்தோசப்பட்டு இருப்பார்.”
“அவர்  “டியர் பிரின்ஸ் அன்ட் டாலி, ஒன்ஸ் அகைன் யூ ராக்ட்… ஐம் ரியலி ப்ரவுட் போத் ஆப் யூ கிட்ஸ்” அப்படின்னு சொல்லி இருப்பார். கூடவே அவங்க வெற்றிக்கு எங்க சார்பா என்ன கிப்ட் வேணும்ன்னு கேட்டு இருப்பார்?”
“அதுக்கு இவங்க ரெண்டு பேரும் என்ன சொல்வாங்க மேம்?”
அதுக்கு உடனே “அப்பா ஷல் வீ கோ எ டிரிப்?” ன்னு கோரஸ் பாடி இருப்பாங்க. காஸ் ரெண்டு பேருக்கும் வித்தியாசமான கல்ச்சர், வித விதமான மனிதர்கள், மொழிகள், உணவு வகைகள், பூக்கள், கைவினைப்பொருட்கள் இந்த மாதிரி விசயங்கள்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட்”
“கேட்கறதுக்கே இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு, இப்ப கேட்க நேரம் அதிகம் இல்லை, உங்களை ஒரு நாள் தனியா மீட் பண்ணி கேட்டுக்கிறேன், தேங்க்ஸ் மேம்… தேங்க்ஸ் சார்…”
“தேங்க்ஸ் மேம்” என்று சொல்லிவிட்டு அனைவரும் கீழிறங்கிச் செல்ல முயற்சிக்க, பவித்ரா,
“குட்டிம்மா” என்று ஜுவாலாவை அழைத்தாள்.
“சொல்லுங்க மேம்”
“நீ அழகா பாடின இல்லையா, அதான் உனக்கு ஒரு சின்ன கிப்ட்” என்றவர் அவரது கழுத்தில் கிடந்த டாலர் செயின் ஒன்றைக் கழட்டி அவளின் கழுத்தில் போட்டுவிட்டார்.
“அம்மா…” என்று சம்யுக்தாவை திரும்பிப்பார்த்த மகளை, 
“ஆன்ட்டி? எதுக்கு இதெல்லாம்?”
“இருக்கட்டும்மா… அவளோட குரல் அந்த மாதிரி”
“இருக்கட்டும் சம்யுக்தா, பாப்பாவோட குரல் அவ்ளோ இனிமையா இருந்துச்சு.”
“சிவா இது நம்ம மனிஷாவைக் காப்பாத்தின பொண்ணா?”
“ஆமாம் பவி”
“ரொம்ப நன்றிம்மா” என்று அவளுடையக் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
“இருக்கட்டும் ஆன்ட்டி, உயிரைக் காப்பாத்தறது டாக்டரோட கடமை”
“இன்னிக்கு எங்க வீட்டு பொண்ணு உயிரோட இருக்கக் காரணமே நீ தானேம்மா”
“இட்ஸ் ஓகே ஆன்ட்டி… ஓகே அங்கிள் பை…” என்றவள் கீழிறங்க, ஜுவாலாவின் கையைப் பிடித்துக்கொண்டே சர்வேஷ் கீழிறங்கினான். அவனது தோளில் கைபோட்டுக்கொண்டே சம்யுக்தா இறங்கினாள். தங்கை இறங்கியதும் அன்னை இறங்குவதற்கு கை நீட்டிய சர்வேஷை அனைத்து கண்களும் கண்டு ரசித்தன.
அனைவரையும் விட கீழிறங்கிச் சென்ற சர்வேஷிடமே பவித்ரா மற்றும் சிவா இருவரின் கண்களும் நிலைத்து நிற்க, சுற்றி இருந்த ஆசிரியர்கள் தான் அவர்களைக் கலைத்தனர்.
தமிழில் தேசிய கீதம் ஒளிபரப்பாக அனைவரும் எழுந்து நின்றனர்.
“அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் உணவருந்திவிட்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்” என்று தொகுப்பாளர் முடிக்க, 
நேராக கீழே பள்ளியின் பிரத்தியேக போட்டோகிராபரிடம் சென்ற சிவா, “எனக்கு அந்த சர்வேஷ் போட்டோ வேணும், உடனே,எனக்கு வாட்சப் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு உணவருந்தச் சென்றார்.
உணவருந்தும் இடத்தில், பப்பே முறையில் வட்ட வட்ட டேபிள்களும், நீண்ட டேபிள்களும் போடப்பட்டு இருந்தன. தேவைக்கு ஏற்ப அனைவரும் அந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டு உணவருந்த ஆரம்பித்தனர்.
ஒரு வட்ட டேபிளில் பரத் குடும்பத்துடன், கார் டிரைவர் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிர் டேபிளில் தான் சிவா குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.
சர்வேஷ், “அம்மா… இட்ஸ் வெறி ஹாட் ட்டுடே…” என்று சொல்லிக்கொண்டே அவனுடைய பிளேசரைக் கழட்டினான். அவன் டையை லூஸ் செய்து கழட்டுவதைக் கண்ட சிவாவும் பவித்ராவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“கூட்டம் அதிகம்ல கண்ணா, ஏர் சர்க்குலேஷன் இல்லை”
“அம்மா வாட் அபவ்ட் திஸ் வகேசன்?”
“யூ ஜஸ்ட் புட் எ பிளான், மீ அன்ட் டேட் வில் டிஸ்கஸ் இட்”
“அம்மா… இந்த தடவை நாம கேரளா போலாம்மா” என்று இருவரின் பேச்சிற்குள் ஜுவாலா இடையிட்டாள்.
“ஜுவா நாம இந்த தடவை ராஜஸ்தான் போகலாம்”
“அங்க ஒரே டெசர்ட்… நோ வே”
“அங்க நிறையா கல்சுரல் திங்க்ஸ் இருக்கும்… எனக்கு ரொம்ப யூஸ் ஆகும்”
“ஷ்… நீயும் அப்பா மாதிரியே இருக்க, ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி, பிளான் ரெடி பண்ணி எனக்கும் அப்பாக்கும் மெயில் பண்ணுங்க, நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்”
“சர்வா… சாப்பிட்டு கிளம்பனும், நாளைக்கு லீவ் தான, நாளைக்கு நீ அப்பாவை கூப்பிட்டு பேசு, வகேஷன் ஆரம்பிக்க டேஸ் இருக்கு”
“ஓகே தாத்தா, வீ ஹேவ் நோ டைம், டிக்கெட் புக் பண்ணனும், ஹோட்டல் அரேன்ஜ் பண்ணனும்…”
“சர்வா… அப்பா அதெல்லாம் ரெடி பண்ணிடுவாங்க… உனக்கு எதுக்கு டென்ஷன்? ஒழுங்கா சாப்பிடு”
“ஓகே ம்மா”
“மாமா உங்களுக்கு வேற என்ன வேணும்?”
“போதும்மா… உனக்கு என்ன வேணும்?”
“எனக்கு ரெண்டு சப்பாத்தி அண்ட் குருமா”
“சர்வா உனக்கு என்ன வேணும்?”
“நான் போறேன்ம்மா”
“வா போகலாம்”
“நீங்க இருங்கம்மா, நான் போறேன், ஜுவா உனக்கு என்ன வேணும்?”
“நானும் வரேன்ண்ணா”
“ரெண்டு பேரும் பத்திரமா போங்க? டிரைவர் அண்ணா… உங்களுக்கு என்ன வேணும்?”
“நான் பார்த்துக்கறேன் மேடம்”
“மாமா… எனக்கு ரொம்ப ஹெட் ஹேக்க்கா இருக்கு… போனதும் படுத்துக்குவேன்… அவர் போன் பண்ணா சொல்லிடுங்க”
“சரிம்மா… நீ வாய்ஸ் மெசேஜ் ஒன்னு போட்டுடு”
“சரி மாமா”
உணவு வாங்கிக்கொண்டு வந்து, அன்னைக்குத் தந்துவிட்டு, முழுக்கைச் சட்டையை முழங்கை வரை மடித்து மேலேற்றிவிட்டுக் கொண்டான்.
அவன் சாப்பிட்ட விதத்தையும், அவன் கண்கள் அவ்வப்போது சுற்றிலும் நோட்டம் விட்டதையும் கண்ட பவித்ராவும் சிவாவும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். நித்யாவும் இதைத்தான் செய்தார். 
கிளம்பும் நேரம் கூட, அனைவருக்கும் முன்பாக டிரைவருடன் நேராக காருக்குச் சென்றவன், காரைச் சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டான். அதன் பின்னர் கார் கதவைத் திறந்துவிட்டு தாத்தாவை ஏறச் சொன்னவன், அவருக்கு கதவைச் சாத்திவிட்டு, பின் பக்க கார் கதவை அன்னைக்குத் திறந்துவிட்டான். சம்யுக்தா ஏறி முடித்ததும் ஜுவாலாவை எற்றிவிட்டவன், காருக்குள் ஏறும் முன் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான் உள்ளே ஏறினான்.
அவனது செய்கையைப் பார்த்த இருவரும் ஒருவகை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடனேயே நித்யாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
அவர்களின் மனமெங்கும் பல்வேறு குழப்பங்கள் இருக்க, சிவாவின் கைப்பேசிக்கு சர்வாவின் போட்டோ வந்து சேர்ந்தது.
காரை விட்டு இறங்கியதுமே, சிவா செய்த முதல் வேலை, அவனது செல்லை எடுத்துக்கொண்டு, அவனது பெற்றோர் அறைக்குச் சென்றதுதான். யாரும் பயன்படுத்தாமல் இருந்த அறையை, சுத்தம் செய்து, அதில் அனைவரின் புகைப்படங்களும் சிறு வயது முதல் மாட்டப்பட்டு இருந்தது. அன்னையின் மடியில் படுக்க விரும்பும் நேரங்களில் சிவா அந்த கட்டிலில் சில நிமிடங்கள் படுத்து எழுந்து வருவார்.
அங்கு மாட்டப்பட்டு இருந்த சிவாவின் போட்டோ முன் நின்றவர், சர்வாவின் போட்டோவை அதன் அருகில் வைத்துப் பார்க்க முயற்சிக்க, இரண்டும் ஒன்றே என்ற உண்மை அவருடைய பொட்டில் அறைந்தது போல இருந்தது.
சர்வாவை வேறு யாருடன் பார்த்து இருந்தாலும் அவர் சந்தேகித்து இருக்க மாட்டார், பரத்துடன் பார்த்த நொடி எதுவோ ஒன்று அவருக்கு இடித்தாலும், அது கண்டிப்பாக அவருடைய பேரன் என்று முழு மனதாக நம்பினார்.
அவர் பின்னே வந்து நின்ற இருவருக்குமே, இரண்டு போட்டோக்களைப் பார்த்து அதிர்ச்சிதான் ஏற்பட்டது.
“சிவா? என்ன இது?”
“கண்டிப்பா சர்வா நம்ம பேரன்”
“எப்படிங்க? அந்த பையனுக்கு பத்து வயசு இருக்கும்”
“இல்ல பவி… எப்பையோ எங்கையோ ஏதோ தப்பு இருக்கு?”
“எங்க என்ன தப்பு இருக்கப்போகுது? அப்படின்னா அந்த சம்யுக்தா நம்ம பொண்ணா? இல்லை அவ புருஷன் நம்ம பையனா?”
“தெரியலை பவி…”
“அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்”
“சொல்லும்மா”
“ஒரு வேளை உங்களுக்கு அண்ணா, தம்பி யாராவது இருந்தா?”
“இல்லைம்மா… எனக்கு நூறு சதவிகிதம் நிச்சயம், சர்வா எங்க பேரன்… அது எப்படின்னு தான் இனி கண்டு பிடிக்கனும்”
“எனக்கு தலையே சுத்துதுங்க, அவன் நடந்து வர்றது, சாப்பிடறது, அந்த சர்ட்டை முழங்கை வரை மடிச்சுவிட்டு அவன் உட்கார்ந்திருந்த விதம், அவன் பிளேசர் கழட்டிய விதம், கடைசியா கார்ல ஏறிப்போனது… எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு”
“நீ வீணா டென்ஷன் ஆகாத, என்னை நம்பி விட்டுடு… நான் பார்த்துக்கறேன்… அதுவரை இந்த விஷயம் நம்ம மூனு பேருக்குள்ள மட்டும் இருக்கட்டும். இந்த போட்டோவை எடுத்து எங்கையாவது ஒளிச்சு வை”
“ஏங்க? இதை ஏன் மறைச்சு வைக்கனும்?”
“நம்ம பேரன்னு தெரிஞ்சிடுச்சு, இனி நம்மகிட்ட கூட்டிக்கிட்டு வர்ற வேலையைப் பார்க்கனும். இந்த ரூம்க்கு அதிகமா நம்மதான் வருவோம், பசங்க வந்ததில்லை, எங்கையாவது நம்ம சர்வாவை பார்த்தா, இந்த போட்டோவை வந்து கண்டிப்பா பார்ப்பாங்க, என்னதான் இங்க வர்றதில்லைன்னாலும் கண்டிப்பா அவங்களுக்கு சந்தேகம் வரும்”
“சரிங்க, இப்பதான் உங்களுக்கு வயசாகிடுசுல்ல, இந்த போட்டோவை பார்த்தா மட்டும் தான் சந்தேகம் வரும், அதுக்கு  நான் போட்டோவை ஒளிச்சு வைக்கிறேன், இங்க அண்ணாவோட சின்ன வயசு போட்டோ இதே வயசுக்கு கிடைச்சா அதை எடுத்து இந்த மாதிரி ரெடி பண்ணி வைக்கிறேன்”
“குட்… நான் நம்ம பேரனையும், நம்ம பசங்களையும் இங்க வரவைக்க முயற்சி பண்றேன்… நீ நிம்மதியா இரு, உன் ஹெல்த் ரொம்ப முக்கியம்”
“சரிங்க… அப்ப அந்த குட்டி பொண்ணு? அது நம்ம பேத்தியா இருக்குமா?”
“என் கணிப்புப்படி உறுதியா அவ நம்ம பேத்தியா தான் இருப்பா”
“எனக்கு அந்த நொடி என்ன செய்யறதுன்னு தெரியலை, செயினைக்கழட்டி அவ கழுத்தில் போடத்தான் தோணுச்சு”
“இரத்த பாசம் பவி, அதுதான் உன்னைத் தூண்டி இருக்கு, நீ போய் வேலையைப் பார், நான் மத்ததை பார்த்துக்கறேன்”
“சரிங்க… நீங்க வாங்க, நாங்க போயி பாப்பாவை தூங்க வைக்கிறோம், நீங்க நேரமா தூங்குங்க”
அன்றைய இரவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனக்குழப்பத்தில் கழிய, துக்கம், சந்தோசம் இரண்டும் கலந்த மன நிலையில் பரத் இருந்தார்.

Advertisement