Advertisement

சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 5
சம்யுக்தா போனில் உரையாடிக்கொண்டு இருந்தாள் என்பதை விடத் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தாள் என்பதே மிகச் சரியாக இருக்கும்.
“உனக்கு போன் பண்ணா எடுக்கத் தெரியாதா?”
“என்னமோ தினமும் போன் பண்ற மாதிரி குதிக்கறிங்க?”
“நீ பண்ண தப்புக்கு நான் போன் பண்ணுவேன்னு உனக்கு நினைப்பா?
“நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்?”
“என் பேச்சை மீறி அங்க போனது தப்பில்லாம வேற என்ன?”
“நான் எதுக்கு இங்க வந்தேன்னு உங்களுக்கேத் தெரியும், தெரிஞ்சும் என்னையேக் குற்றம் சொல்லறீங்க?”
“ஆமா தப்பு தான்… இப்ப நீங்க அங்க போயி உட்கார்ந்து இருக்கறது ரொம்பப் பெரிய தப்பு”
“இப்ப உங்களுக்கு தப்பா தெரியலாம், பின்னாடி உங்களுக்கு சரியாப்படும். பாருங்க”
“நீ இப்படியே பேச்சை மாத்தாத, லைசென்ஸ் கூட இல்லை, அப்புறம் எதுக்கு நீ வண்டியை எடுத்த?”
“இன்னிக்கு ஒரு சர்ஜரி இருந்துது”
“நிறுத்துடி…. ரிலாக்ஸா போக நினைச்சு நீ வண்டியை எடுத்தது சரி, ஒரு லைசென்ஸ் இல்லை, இன்னும் உனக்கு அங்க டிரைவிங் ரூல்ஸ் புரிஞ்சு இருக்காது…இதெல்லாம் யோசிக்க வேண்டாமா, இப்ப பாரு எவ்ளோ பெரிய ரிஸ்க்.. நீ என்ன சொல்லிட்டு அங்க போன?”
“அதான் தப்பிசுட்டேனே…”
“வந்தேன், வாய்ல ஒரு பல்லு இருக்காது…”
“நான் பல் செட் கட்டிக்குவேனே…..”
“வாயாடாம சொல்றதை மட்டும் செய், ஒழுங்கா கார்ல போ… கார்ல வா… நீ கேட்ட கணக்குல இன்னும் ஐஞ்சு மாசம் தான் பாக்கி, இப்படியே நீ இருந்தா, அடுத்த பிளைட்டுக்கு டிக்கெட் புக் பண்ணிடுவேன்”
“முடியாது… நாளைக்கும் நான் ஸ்கூட்டி தான் எடுப்பேன்…”
“இருந்தாதானே முதல்ல எடுப்ப”
“ஏன்? வீட்டு முன்னாடி தான் இருந்துச்சு, நான் பார்த்தேன்”
“இருந்துச்சுன்னு நீயே சொல்லிட்டயே”
“இங்க பாருங்க… நாளைக்கு ஸ்கூட்டி இல்லாட்டி நான் சாப்பிடவே மாட்டேன்”
“பட்டினி கெட”
“அப்ப நான் உங்களுக்கு முக்கியமே இல்லையா?”
“நீ தான்டி, என்னை விட வேற வேலை முக்கியம்ன்னு அங்க போயி உட்கார்ந்து இருக்கற”
“இன்னும் கொஞ்ச நாள், நாங்க வந்துடுவோம்”
“கொஞ்சமும் கிடையாது, நஞ்சமும் கிடையாது…. ஸ்கூட்டில கையை வைச்ச அவ்ளோதான், உனக்கு அதிகபட்சம் ஒரு மாசம் டைம், ஒழுங்கா கிளம்பி வர்ற”
“எடுத்த காரியம் முடியும் வரை சம்யுக்தா வர மாட்டா…” என்று நாடக பாணியில் அவள் சொன்னாலும்,
அதுவரை, கோபத்தில் மட்டுமே வெளிப்பட்டுக்கொண்டு இருந்த பவித்ரனின் குரல் நலிந்து சற்று ஆற்றாமையுடன் சேர்ந்து ஆழ் மனதில் இருந்து ஒலித்தது,
“உனக்கு என்னை விட நிறையா விஷயம் முக்கியமா போய்டுச்சு, இல்லையா யுக்தா?” என்று.
அவனது குரலில் கண்கள் கலங்கிவிட,
“உங்களுக்கேத் தெரியும் எனக்கு யார் முக்கியம்ன்னு?”
“தெரிஞ்சும் நீ என்னை விட்டு விலகி இருக்கற? இல்லையா?”
“உங்களை விட்டு இந்த உடல் வேணா விலகி இருக்காலம், ஆனா என் உயிர் உங்களை மட்டுமே சுத்தி வரும்”
“செண்டிமெண்ட் டயலாக் அடிக்காதடி…”
“என் செல்லம்ல, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஐஞ்சு மாசம் முடிஞ்சு தான் உங்ககிட்ட  ஓடி வந்துடுவேன்னு இல்லை, என் வேலை எப்ப முடியுதோ அப்பவே உங்ககிட்ட வந்துடுவேன்”
“உனக்கு ஒரு மாசம் தான் டைம், நீ கிளம்பி வர்ற”
“அதுக்குள்ள முடிக்க முயற்சி பண்றேன்… சரி நீங்க சாப்பிட்டீங்களா?”
“சாப்பிடாம அத்தை விடுவாங்களா?”
“மாமாவை ரொம்ப திட்டினீங்களா?”
“பின்ன? ஸ்கூட்டி வாங்கிக்குடுத்து உன்னை கெடுத்து வைச்சா,  திட்டாம கொஞ்சுவாங்களா?”
“பாவம் அவர்… நான் தான் கம்பல் பண்ணி, ஐஸ் வைச்சு வாங்கினேன்”
“எங்கிட்ட கேட்க வேண்டியதுதானே? கேட்காம ஏன் வாங்கித்தந்தார்?”
“இங்க பாருங்க, நான் ஆக்சிடென்ட் பண்ணியா இப்படி ஆச்சு? நான் ஒழுங்கா தானே டிரைவ் பண்ணேன்?”
“இங்க பாரு யுக்தா நடந்தத விடு, போயி சாப்பிட்டுட்டு தூங்கு”
“என்கிட்ட போன் பேசக் கூட இஷ்டம் இல்லையா?”
“நீ என்கிட்ட வந்து சேர், விடிய விடிய நேர்லையே பேசறேன்”
“போடா… நான் ரொம்பக் கோபமா இருக்கேன்”
“கோவிச்சுக்கோ… உன்னை விட நான் தான் அதி பயங்கர கோபத்துல இருக்கேன்”
“நேர்ல வந்து உன்கிட்ட பேசாம ஒரு வருஷம் ஓட்டலை? நான் சம்யுக்தா இல்லைடா”
“ஒரு வருஷம்லாம் வேண்டாம், நீ நேர்ல என்கிட்ட ஒரு நிமிஷம் பேசாம ஓட்டிடு… உனக்கு ஒரு டைமன்ட் நெக்லஸ், இல்ல இல்ல, பத்து டைமன்ட் நெக்லஸ் வாங்கித்தரேன்”
“யாருக்கு வேணும் உங்க டையமண்ட் நெக்லஸ்?”
“அப்ப நல்லதா போச்சு… அந்த காசுல ஏதாவது பிசினஸ் ஆரம்பிச்சுடுவேன்”
“ஹல்லோ… என்னையவா சீண்டறீங்க? பாருங்க, பத்து நெக்லசையும் உங்ககிட்ட இருந்து நான் வாங்காம விடமாட்டேன்”
“அப்ப சரி… ஒரு பந்தயம், நீ மட்டும் ஜெயிச்சா உனக்கு நான் பத்து நெக்லஸ் வாங்கித்தரேன், ஒரு வேளை நான் ஜெயிச்சா?”
“பத்து நெக்லஸ்லாம் வாங்கித்தர முடியாது, என்ன பண்ணலாம், ஆங்.. பத்து முத்தம் வேணாத் தரேன்…”
“ஏன்டி? உன் புருஷன் கோடிக்கணக்குல பணம் போட்டு உனக்கு நெக்லஸ் வாங்கித்தரனும், நீ மட்டும் பத்து கிஸ்ல மேட்டரை முடிச்சுகிட்டு போயிகிட்டே இருப்ப? என்னடி உன் லாஜிக்?”
“ஒரு காலத்துல, ஒரு கிஸ்க்கு நாயா பேயா அலைஞ்ச மனுஷன் தான நீங்க! அதை மறந்துடாதிங்க”
“இங்க பாரு இந்த பத்து கிஸ்லாம் வேண்டாம், ஜாலியா ஒரு ஹனி மூன் டிரிப் போயிட்டு வரலாம்… என்ன டீல் ஓகேவ்வா?”
“அடப்பாவி? என்னடா புலி பதுங்குதேன்னு பார்த்தேன்!”
“புலி பதுங்கறது எதுக்குன்னு உனக்குத் தெரியாது?”
“ஐயா சாமி, ஒழுங்கா சண்டை போட்டுக்கிட்டு போனை வைங்க, அப்புறம் நான் விடிய விடிய அழ ஆரம்பிச்சுடுவேன்”
“அவ்ளோ அன்பு வைச்சு இருக்கறவ எதுக்குடி போன? சரி சரி, பாய்ண்டுக்கு வரேன், ஒழுங்கா கார்ல போ… அடுத்த மாசம் டிக்கெட் புக் பண்றேன்”
“நீங்க சரியா ஐஞ்சு மாசம் கழிச்சு புக் பண்ணிடுங்க, அன்னிக்கு கண்டிப்பா நான் வருவேன்”
“சரி சரி… அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம், இப்ப போய் தூங்கு…”
“எனக்கு போனை வைக்க மனசு வரலை, வழக்கம் போல பாடுங்க தூங்கறேன்”
“எந்த சிங்கர் வீட்டுலையும் இந்த கொடுமை இருக்காது”
“உங்க சிங்கர்ஸ் சர்கிள்ல கேட்டு பார்த்துட்டு சொல்லுங்க… ஒரு நிமிஷம், படுக்க ரெடியாகிக்கறேன்”
ஓரிரு நிமிடங்களுக்குப் பின்,
சுட்டும் விழிச் சுடர் தான்
கண்ணம்மா சூரிய சந்திரரோ…
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக்கருமை கொலோ…
பட்டுக் கருநீலப் புடவை பதிந்த
நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடீ…
என்று சம்யுக்தாவின் காதில் மாட்டி இருந்த இயர் போன் வழியாக பாட்டு கசிந்து கொண்டிருக்க,
அந்த காந்தக் குரலில் தன்னை மறந்து சம்யுக்தா உறக்கத்தைத் தழுவத் தயாரானாள்.
விடியல் பொக்கிஷமாய் காத்திருக்க,
ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தில் கண் விழித்தனர்.
வாக்கிங் போய்விட்டு வந்த பரத் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து அன்றைய தினசரியைப் புரட்டிக்கொண்டே காபி குடிக்க, அவர் எதிரில் காபிக்கோப்பையுடன் வந்து சம்யுக்தா அமர்ந்தாள்.
“குட் மார்னிங் மாமா”
“குட் மார்னிங்மா”
“இன்னிக்கு உங்களுக்கு என்ன ப்ரோக்ராம்?”
“நத்திங்…. நேத்து என் பையன் என்ன சொன்னான்?”
“சரி டோஸ்… அப்புறம் பேசிப்பேசி கொஞ்சம் கரைச்சு வைச்சிருக்கேன், டிக்கெட் புக் பண்ணறேன்னு சொன்னார்… என்ன பண்ணப்போறார்ன்னு தெரியலை?”
“எப்ப கிளம்பனும்?”
“ஐஞ்சு மாசம் கழிச்சுன்னு நான் சொன்னேன், அவர் ஒரு மாசம் சொன்னார்…”
“சோ உனக்கு இன்னும் ஒரு மாசம் தான் டைம்”
“மே பீ… அதுக்குள்ள பேசிப்பேசி கவுத்துட மாட்டேன்…”
“இன்னிக்கு உனக்கு என்ன பிளான்?”
“ரெகுலர் தான் மாமா”
“சரி அந்த மனிஷா எப்படி இருக்கான்னு கேளு?”
“இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் மாமா…”
“மறக்காம கேளு…”
“ம்ம்.. மாமா நேத்து ஒரு கேஸ் பத்தி கேள்விப்பட்டேன், உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன், அதை பார்த்தீங்களா?”
“பார்த்துட்டேன் மா”
“என்னோட பேஷன்ட் தான் அந்த பொண்ணோட அப்பா… அந்த பொண்ணுக்கு நாம ஏதாவது உதவ முடியுமா?”
“கண்டிப்பா சம்யு… நீ உன் புருஷன்கிட்ட சொல்லி, அவன் டிரஸ்ட் மூலமா பேப்பர்ஸ் மூவ் பண்ண சொல்லு, நானே நம்ப ஹாஸ்பிட்டல்லையே ஆபரேசன் பண்றேன்”
“ஆனா ஆபரேட் பண்ணா அந்த பொண்ணு கோமாக்கு போகவும் வாய்ப்பு இருக்கறதா ரிபோர்ட்ல இருக்கு”
“கண்டிப்பா… இங்க அந்த மாதிரி ஆபரேஷன் ரொம்ப கம்மி… சோ சொல்லி இருக்காங்க, சான்ஸ் இருக்கு, பட் நினைவு திரும்பி எழுந்து நடமாடவும் வாய்ப்பு இருக்கு”
“சரி மாமா நான் அந்த பேஷண்டை இன்னிக்கு வரச் சொல்லறேன், நீங்க ஒரு தடவை பார்த்துடுங்க”
“சரிம்மா…”
இவர்கள் இங்கு பேசிக்கொண்டு இருக்க, இன்னொரு வீட்டில்,
“சிவா… இந்தாங்க காபி” என்று பவித்ரா காபியுடன் வந்தார்,
“தனு எங்கம்மா?”
“ஷ்.. மெதுவா பேசுங்க.. தூங்கறா…”
“நித்யா காபி குடிச்சாளா?”
“குடிச்சுட்டா.. தனுக்கிட்ட உட்கார்ந்து இருக்கா…”
“எங்க உன் பையன்?”
“ரெண்டு பேருமே இன்னும் வரலை”
“எனக்கு டிபனுக்கு சப்பாத்தி வேணும்மா… சைட் டிஷ் ஜாம் போதும்”
“சப்பாத்தி தான் இன்னிக்கு, ஜாம் வேண்டாம் குருமாவே வைச்சு இருக்கேன், சரி இன்னிக்கு நீங்க என்ன பிளான் வைச்சு இருக்கீங்க?”
“ஆபிஸ் தான், நீ எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் கொடைக்கானல் அனுப்பி வை”
“சரிங்க… மனிஷா பத்திக் கவலை இல்லை, உங்க பையனை தான் சமாளிக்கனும்”
“நான் ஹெல்ப் பண்றேன், அப்புறம் மானு போன் பண்ணினா, ரெண்டு மாசம் கழிச்சு வர்றா, பெரிய மாப்பிள்ளை கூட்டிக்கிட்டு போக மட்டும் வருவார், மான்வியும் அவ வரும்போது வந்துடுவா, சின்ன மாப்பிள்ளையும் கூட்டிக்கிட்டு போகத்தான் வருவார், மானு நேரா மும்பை போயி அங்க இருந்து தான் வருவா, ரெண்டு பேரும் ஒன்னா வர்றாங்களாம்.”
“சரிங்க… நீங்க காபி குடிச்சுட்டுக் கிளம்புங்க, நான் பார்த்துக்கறேன்…”
“குட் மார்னிங் மா… குட் மார்னிங் பா” என்ற மானவ்வின் குரலில் இருவரும் அவன் பக்கம் பார்த்தனர்,
“மனிஷா எப்படிப்பா இருக்கா?”
“எழுந்துட்டாம்மா… குளிச்சுக்கிட்டு இருக்கா”
“அவளை அப்படியே விட்டுட்டு வந்துட்ட, திடீர்ன்னு தலை சுத்தி விழுந்துடப்போறா”
“ஷீ இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட்… ஸ்டெடியா இருக்கா, எழுந்து வழக்கம் போல யோகா முடிச்சுட்டா”
“சரி வா காபி தரேன்”
“அப்பா இன்னிக்கு நான் அந்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட் விசிட் முடிச்சுட்டு வந்துடறேன்… நீங்க கிளம்புங்க”
“இல்லை மானவ்… இன்னிக்கு அம்மா உனக்கு ஒரு முக்கியமான வேலை வைச்சு இருக்கா?”
“என்னம்மா வேலை?” என்று காபி கொண்டு வந்த அன்னையைப் பார்த்துக் கேட்டான்.
“குல தெய்வம் கோயிலுக்கு போய் ரெண்டு வருஷம் ஆகிடுச்சு, என்னால டிராவல் பண்ண முடியாது, இன்னிக்கு நீயும் மனிஷாவும் போய்ட்டு வாங்க”
“அம்மா… ஏற்கனவே தொழில்ல போட்டி சரியா போய்க்கிட்டு இருக்கு, இதுல என்னால இங்க இருந்து கொஞ்சம் கூட மூவ் பண்ண முடியாது”
“டேய்… உங்கப்பா பிஸினஸ் ஜாம்பவான், அவரால எல்லாமே முடியும், நீ நான் சொல்றதை செய்”
“மானவ் கண்ணா, அதான் அம்மா சொல்றாங்கல்ல, போயி மனிஷாட்ட சொல்லிட்டுக் கிளம்பு”
“இன்னிக்கு ஒரு நாள் தான், இனிமே ஏதாவது வேண்டுதல் இருந்தா, கோவிலுக்கு போகனும்ன்னா, என்னைக் கேட்டு முடிவு பண்ணுங்க”
“டேய், அப்படியே நம்ம எஸ்டேட்டைப் போயி ஒரு தடவை பார்த்துட்டு வா”
“இப்பதானப்பா போய்ட்டு வந்தேன்”
“இன்னொரு தடவை போறதுல தப்பு இல்ல… புரிஞ்சுதா…”
“சரிப்பா…”
“மனிஷா வேற ரொம்ப டிப்ரஸ்ட்டா இருக்கா, ஒரு சின்ன டிரிப் மாதிரி போய்ட்டு வா.. போயி மனிஷாவை ஒன் வீக்க்கு டிரெஸ் எடுத்து வைக்கச் சொல்லு”
“என்னது ஒன் வீக்கா?”
“என்னடா சும்மா குதிக்கற? ஒழுங்கா போயிட்டு வா… இவன் தான் இந்த பிசினஸ் எல்லாத்தையும் கைக்காசைப் போட்டு ஆரம்பிச்சவன் மாதிரி பேசறான், எல்லாத்தையும் என் புருஷன் பார்த்துப்பார், நீ ஒழுங்கா போய்ட்டு வா”
“அம்மா.. என்னதான் எங்கப்பா பிஸினசா இருந்தாலும், இப்ப பாதி பிஸினஸ் நான் மட்டும் தான் மேனேஜ் பண்றேன்… நியாபகத்துல வைங்க”
“அதெல்லாம் என் புருஷன் பார்த்துப்பார்… நீ கிளம்பு… மனிஷாவை பேக்கிங் முடிச்சுட்டு வரச் சொல்லு…”
“சரி பாப்பா எங்க?”
“அவ தூங்கற… அப்புறம் இந்த டிரிப் நீங்க ரெண்டு பேரும் தான் போறீங்க, அவ வரலை”
“அம்மா… ஏம்மா? அவ வந்தா அவளுக்கும் டூர் போன மாதிரி இருக்கும்ல”
“உங்கக்காவும் தங்கச்சியும் வந்ததும் போகலாம்… அப்ப அவளைக் கூட்டிக்கிட்டு போ… இந்த கிளைமேட் எப்படியும் பாப்பாக்கு ஒத்துக்காது… இரு மனிஷாக்கு ஹார்லிக்ஸ் தரேன், அதையும் கொண்டு போயி குடுத்துடு”
“அம்மா நீங்க சொல்ற எதை வேண்ணா ஒத்துக்கறேன், மான்வி எனக்குத் தங்கைன்னு சொல்லாதிங்க”
“டேய்.. அவளை உனக்கு அப்புறம் தான் எடுத்தாங்க… சோ தங்கை தான்”
“அப்பா… மறுபடியும் அவளுக்கு சப்போர்ட் ஆரம்பிக்காதிங்க, நான் கிளம்பிட்டேன்…” 
“இது நல்ல பையனுக்கு அழகு”
“சரிப்பா எனி எமர்ஜென்சி, கால் பண்ணுங்க…”
“சரிப்பா…”

Advertisement