Advertisement

சுடும் நிலவு

அத்தியாயம் – 1

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசிக்குக் காரில் திரும்பும் வழியில், பிரபாகரின் செல் அழைத்தது. அவனின் சித்தப்பா சிதம்பரம் அழைத்தார்.

சொல்லுங்க சித்தப்பா…”

நீ இப்ப எங்க இருக்க?”

இப்பத்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கிளம்பி இருக்கேன். ஏன்?”

மம்சாபுரத்தில ஒரு கேத வீடு போயிட்டு வந்திடு.”

என்னது நானா? அங்கேயா?”

ஆமாம். நானும் இப்ப கிளம்பி வர முடியாது. சோமுவும் வேற வேலையா வெளிய போயிருக்கான். ரொம்ப முக்கியமானவங்க நீதான் போகணும்.” என்றவர், யார் என்ற விவரம் சொல்ல….

ஐயோ ! அங்கேயே…’ என நினைத்தவன், அவரிடம் சரியென்று சொல்லிவிட்டு வைத்தான்.

அடுத்த இருபது நிமிடத்தில் அவன் சித்தப்பா சொன்ன இடத்திற்குச் சென்றிருந்தான். காரை ஓரமாக நிறுத்தியவன், இறங்கி உள்ளே செல்லஅவனைப் பார்த்ததும், அந்த வீட்டின் முன்பு இருந்தவர்கள் வந்து, அவனை உள்ளே அழைத்துச் சென்றனர்.

பெரிய ஹாலில் கிடத்தப்பட்டு இருந்த பெரியவருக்கு மரியாதை செய்தவன், அவர் அருகில் நின்ற அவரது மகனிடம் விசாரித்து விட்டு, உடனே கிளம்பினால் நன்றாக இருக்காது என அங்கேயே ஒருபக்கம் ஓரமாக நின்றான்.
அப்படி நிற்கும் வேளையில், அவனது பார்வை அந்த வீட்டில் இருந்தவர்களைச் சுற்றி வந்தது. அப்போது அவன் பார்வை வட்டத்தில் ஒரு நடுத்தரப் பெண்மணி விழுந்தார்.

அவர் அங்கே வந்திருப்பார் என அவனுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அவரும் அதே ஊர்தான். அதுவும் நெருங்கிய உறவினர்களும் கூட…. அதனால் தான் அவன் அங்கு வரத் தயங்கியதே….

முதலில் அவன் கவனிக்கவில்லைபிறகுதான் அவர் மடியில் படுத்திருந்தவளை கவனித்தான். அவனது பார்வை அங்கேயே தங்கிவிட…. ‘வந்த வேலை முடிஞ்சிடுச்சு இல்லைஒழுங்கா கிளம்பு…’ என்ற மனதை அடக்கி…. மேலும் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

பவி எந்திரிஎவ்வளவு நேரம் படுத்திருப்ப? உள்ளே போய்க் கொஞ்சம் காபி வாங்கிக் குடி போ…” என்ற தாயின் பேச்சிற்குக் கட்டுப்பட்டுப் பவித்ராவும் எழுந்தாள். அவளுக்குமே பசி வயிற்றைக் கிள்ளியது.

அப்படி என்ன மகாராணிக்கு துக்க வீட்லயும் தூக்கம்?’ என நினைத்த பிரபாகர், அவள் எழுந்து நின்ற போதுதான், அவளின் மேடிட்டிருந்த வயிற்றைப் பார்த்து அதிர்ந்தான்.

எப்படியும் எட்டு மாதம் இருக்கும். வயிறு அவ்வளவு பெரிதாக இருந்தது. மெதுவாகச் சமையல் அறை நோக்கி சென்றவள், அங்கிருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள்.

அருகிலிருந்த பெண் அவளிடம் கொடுத்த காப்பியை அங்கேயே ஓரமாக நின்று மெதுவாக அருந்தியவள், இன்னும் பிரபாகரை பார்க்க வில்லை.

இதைக் கொஞ்சம் அங்க இருக்கிறவங்களுக்குக் கொடுத்திடுறியா…” என அவளிடம் நீட்டப்பட்ட காபி டம்ளர்கள் இருந்த தட்டை வாங்கியவள், அதை எடுத்துக்கொண்டு மெதுவாக ஹாலிற்கு வந்தாள்.
ஏற்கனவே பெண்கள் பகுதியில் வேறு ஒரு பெண் காபி கொடுத்துக் கொண்டிருந்ததால்….. ஆண்கள் பக்கம் சென்று இவள் கொடுக்க ஆரம்பித்தாள்.

எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே வந்தவள், பிரபாகரின் எதிரே வந்து நின்று, அவனிடமும் தட்டை நீட்டஅவன் எடுத்துக்கொள்ளவில்லை.

அப்போது தான் யாரு இது என நிமிர்ந்து பார்த்தவள், பிரபாகரை பார்த்ததும், ஏற்கனவே வெளுத்திருந்த அவள் முகம் மேலும் ரத்த பசை இல்லாமல் வெளுத்தது. அவள் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது.
 
பிரபாகர் அவளையும், அவளின் நிறைமாத வயிற்றையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான். அதில் கடுப்பானவள், அங்கிருந்து உடனே விலகி நடந்தாள்.

எதிரில் வந்த சிறுமியிடம் தட்டை கொடுத்தவள், தன் அன்னையிடம் சென்றுவாம்மா வீட்டுக்கு போகலாம்.” என அழைத்தாள்.

இப்போதே போவதா எனத் தயங்கியவர், மகளின் நிலையை மனதில் கொண்டு, அவரும் உடனே கிளம்பினார். பவித்ரா முன்னால் செல்லஅவள் அன்னை அவளைப் பின்தொடர்ந்தார்.

வெளிவாயிலை நெருங்கும் போதுதான், அவர் பிரபாகரை கவனித்தார். அவனைப் பார்த்ததும் அவர் தயங்கி நிற்கஅவனே சென்று அவரிடம் பேச்சுக் கொடுத்தான்.

எப்ப வந்தீங்க?”

காலையிலேயே வந்திட்டோம்.” என்றவர், “நீங்க மட்டும் தான் வந்தீங்களா?” எனக் கேட்கஅவன் ஆமாம் என்ற போதே… “அம்மா வாங்க.” எனப் பவித்ரா அழைக்க…. பிரபாகரை தயக்கமாகப் பார்த்தவர், மகளை நோக்கி சென்றார்
அவர்கள் இருவரும் செல்வதையே பிரபாகர் பார்த்திருந்தான். தானும் கிளம்பலாம் என அவன் நினைக்கும் போது.. அவனின் அருகே ஒரு பெருயவர் வந்தார். அவர்தான் அவர்கள் இருவரின் திருமணத்தையும் உடனிருந்து நடத்தி வைத்தவர்.
எதோ சின்னச் சண்டைநீங்களே வந்து கூடிட்டு போயிடுவீங்கன்னு நினைச்சோம். ஆனா இப்படி இவ்வளவு நாள் விட்டுடீங்களேஉங்களுக்குத் தெரியாதது ஒன்னும் இல்லை. சீக்கிரம் நல்ல முடிவா எடுங்க.” என்றார்.

கட்டின பொண்டாட்டியை வச்சுக் குடும்பம் நடத்த துப்பில்லைஆனா ஊருக்குள்ள பெரிய குடும்பம்ன்னு பேரு மட்டும் இருந்து என்ன ப்ரோஜனம்?” என அங்கிருந்த ஒருவன் சத்தமாக முனங்க….

டேய் ! மார்த்தாண்டம், இது அவங்க குடும்ப விஷயம். பவித்ராவோ, அவங்க அம்மாவோ நம்மகிட்ட வந்து எதுவும் சொல்லலைஅப்ப நாம அதுல தலையிடக் கூடாது.”

நீங்க மட்டும் பேசலாமா?”

நான் வயசுல பெரியவன், எதோ கேட்டா…. நீயெல்லாம் பேசக்கூடாது.”

ஆமாம், இப்படியே எல்லார் வாயையும் அடச்சிடுங்க. ஒன்னு வச்சு வாழணும், இல்லைனாபஞ்சாயத்து கூட்டி அத்து விடணும். அந்தப் பிள்ளையாவது வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழும்ன்னு சொல்ல வந்தா…”

மார்த்தாண்டம் பேசிக்கொண்டிருக்கும் போதேபிரபாகர் அங்கிருந்து கோபமாக வெளியேறிவிட்டான்.

உண்மையைச் சொன்னா துறைக்குக் கோபம் வருதோ…. இங்க என்ன வேடிக்கை? போய் ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.” வேட்டியை மடித்து இருகைகளிலும் பிடித்தபடி மார்த்தாண்டம் சொல்ல

இவன் ஒருத்தன் இருக்கிற நிலைமை தெரியாம…” என அந்தப் பெரியவர் தலையில் அடித்துக்கொண்டு சென்றார்.
 
தங்கள் வீட்டிற்கு வந்ததும், தாயும் மகளும் பின்கட்டு வழியாக வீட்டிற்குள் சென்றனர். காலையில் செல்லும் போதே.. திரும்ப வந்து குளிக்கத் தேவையான உடைகளை எடுத்து வைத்துவிட்டே சென்று இருந்தனர்.

முதலில் பவித்ரா குளிக்க. அவள் குளித்து முடித்து வெளியே வந்ததும், “உள்ளே காலையில செஞ்ச இட்லி இருக்குஅதை ரெண்டு சாப்பிடு. நான் குளிச்சிட்டு வந்து உலை வைக்கிறேன்.” என்றபடி கனகா குளிக்கச் சென்றார்.

அவர் குளித்துவிட்டு வந்து, ஒரு பக்க அடுப்பில் சோற்றையும், மற்றொன்டில் குழம்பையும் வைத்துவிட்டு வந்து பவித்ராவை பார்க்கஅவள் தரையில் படுத்து இருந்தாள்.

பவி, முதல்ல எந்திரிஇது என்ன தலை கூடத் துவட்டாம படுத்திருக்க? தலையில நீர் கோர்த்து தலைவலி வரப்போகுது.” என்றவர், மகள் எழுந்ததும், தலையைத் துவட்டி விட்டார்.

உன் புருஷன் வந்து, இங்க கொஞ்ச நாள் இருக்கட்டும்ன்னு சொல்லி விட்டுட்டுப் போனார். ஆனா…. மாசம் எட்டு ஆகுது, இன்னும் திரும்ப வந்து கூப்பிடவே இல்லை. அன்னைக்குப் பிறகு இன்னைக்குதான் அவரைப் பார்த்திருக்கேன்.”

என்ன தாண்டி உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை? நீயும் சொல்ல மாட்டேங்கிறஎன்னையும் அவங்க வீட்ல போய்ப் பேச விட மாட்டேங்கிற…” என மகளின் தலையைத் துவட்டிக்கொண்டேஅவர் புலம்ப….
 
எங்க ரெண்டு பேருக்குள்ளையும் எந்தப் பிரச்சனையும் இல்லைமா…. நாம வசதி இல்லாத வீடுஅதனாலதான் எதோ காரணம் சொல்லி விரட்டி விட்டுடாங்க.” என்றாள் பவித்ரா.

ஹான்.. அது எப்படி? நாமா அவங்களைத் தேடி போனோம். அவங்க தானே நம்ம வீட்ல வந்து சம்பந்தம் பேசினாங்க.” என்றவர், முன்பு நடந்ததை நினைத்து பார்த்தார்.

பவித்ராவின் தந்தை வேணு…. சிவகாசியில் ஒரு பதிப்பகத்தில் தான் வேலை பார்த்தார். அது மிகப்பெரிய நிறுவனம். அவர்களுக்கு இதைத் தவிர இன்னும் சோடா கம்பெனி, சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் எனப் பல தொழில்கள் உண்டு. சிவகாசியில் எஸ். கே நிறுவனங்கள் என்றால் யாரை கேட்டாலும் சொல்லி விடுவார்கள்.

தந்தையின் பெயரில் அவரின் மூன்று மகன்களும், அந்த நிறுவனங்களை நடத்தி வந்தனர். தொழிலை போலவே குடும்பமும். ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். அதில் மூத்தவர் ராமநாதனின் மகன்தான் பிரபாகர்.

அவனின் தந்தை இப்போது உயிரோடு இல்லை…. அவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. அவருக்குப் பிறகு பிரபாகர் தந்தையின் இடத்தில் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ள…. தொழிலும், குடும்பத்திலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சென்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒருநாள் பவித்ராவின் தந்தை வேலை நேரத்தில் மாரடைப்பில் இறந்து விட…. திடிரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில், அவர் குடும்பம் செய்வது அறியாமல் நின்றது. அதனால் பிரபாகரே உடனிருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டான்.

பவித்ராவுக்கு ஒரு அக்கா உண்டு, அவளைச் சென்னையில் திருமணம் செய்து கொடுத்து இருக்கின்றனர். இருந்த சேமிப்பு எல்லாம் போட்டு அவளின் திருமணத்தை முடித்து இருந்தனர். அதனால் பவித்ரா திருமணதிற்கு இனிதான் சேர்க்க வேண்டும் என்கிற நிலை

வேணு மறைந்த போதுஅவர் வேலை பார்த்த நிறுவனத்தில் ஒரு தொகையைக் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த பணத்தோடு வீட்டையும் விற்று பவித்ராவின் திருமணத்தை முடித்துவிடலாம் என்றால்பிறகு, கனகா மருமகன்களை அண்டி வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார். அவர்களது வீடு சிறியதுதான்.

அவர் என்ன செய்வது எனத் தெரியாமல் திணறியபோது…. “இதை உங்க பேர்ல பாங்க்ல போட்டு வட்டி வர ஏற்பாடு பண்றேன். வாடகை இல்லை…. அதனால உங்க ரெண்டு பேர் செலவுக்குத் தாரலாமா போதும்.”

பவித்ரா படிப்பு முடிச்சதும், அவளுக்கு எங்க கம்பெனியில வேலை போட்டு தரோம். அவ சம்பள பணத்தைச் சேர்த்து வைங்கஅப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சுக் கல்யாணம் பண்ணலாம்.” எனப் பிரபாகர் யோசனை சொல்ல…. அவர்கள் வீட்டின் மூத்த மாப்பிள்ளை சரணும் அதே சரியென்றான்.

நாங்களும் இப்பத்தான் வீடு கட்டினோம். ரெண்டு வருஷம் கழிச்சுன்னாஎன்னாலையும் பவித்ரா கல்யாணத்துக்குப் பணம் கொடுக்க முடியும்.” என்றான்.

பவித்ரா அப்போது கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்தாள். தந்தையும் இல்லாத நிலையில், தன் பொறுப்பை உணர்ந்து நன்றாகப் படித்தாள்.

இறுதி வருடம் படிப்பு முடித்துத் தேர்வு முடிவுகள் வந்ததும், தனது சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு பிரபாகரை பார்க்க சென்றாள். அவளின் தந்தை இறந்த நேரம் அவனைப் பார்த்ததுதான். அவள் அவனைச் சந்திக்க அனுமதி கேட்டுக் காத்திருக்க…. உடனே அனுமதியும் கிடைத்தது.

தலைக்குக் குளித்து, புதுச் சுடிதார் அணிந்து, நெற்றியில் திருநீறும் குங்குமமும் வைத்து பார்க்க அழகாக இருந்தாள்.

அவள் சான்றிதழ்களை ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்கபிரபாகர் அதைப் பார்க்க கூட இல்லை…. வாங்கி மட்டும் வைத்தான்.

எனக்குக் கம்ப்யூட்டர் கூடத் தெரியும். ஒரு வருஷம் டிப்ளமா கோர்ஸ் முடிச்சு இருக்கேன்.” பவித்ரா சொல்லஅப்படியா என்பது போலக் கேட்டுக்கொண்டான்.

அவள் கொண்டு வந்த எல்லாவற்றையும் அவனிடம் கொடுத்து விட்டு, அவன் முகத்தை ஆவலாகப் பார்க்க…. அவன் ஒன்றும் சொல்லவில்லை.

எங்கே தனக்கு வேலை தரமாட்டானோ எனப் பவித்ராவுக்குக் கவலை வந்துவிட்டது.

எப்போ இருந்து சார் வேலைக்கு வரட்டும்?” பவித்ரா கேட்டே விட…. பிரபாகர் மெலிதாகப் புன்னகைத்தான்.

சொல்றேன், இன்னும் ஒருவாரம் எனக்கு டைம் கொடுப்பியா…” அவன் கேட்க…. டைம் எதுக்கு? என அவனைப் புரியாமல் பார்த்தவள், சரியென்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு எழுந்து சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்திருந்த பிரபாகர், அவள் சென்றதும், அவளின் விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டான்.

மூன்று நாட்கள் சென்று, அவர்கள் ஊர் பெரியவர் ஒருவர் வீட்டுக்கு வந்து கனகாவிடம் பேசினார். “எஸ். கே குடும்பத்தில, அவங்க மூத்த பையன் பிரபாகருக்கு நம்ம பவித்ராவை கேட்கிறாங்க.” என்றதும், தாயுக்கும் மகளுக்கும் நம்பவே முடியவில்லை.

அவர்கள் இருவரும் திகைத்து போய் விழிப்பதை பார்த்த பெரியவர், “அவங்க பணத்தைப் பெரிசா நினைக்கலை…. பொண்ணு அழகா இருக்கனும்ன்னு நினைக்கிறாங்க. நம்ம பக்க பொண்ணுங்கள்ள பவித்ரா போல அழகு வேறு யாருக்கும் இல்லையே….”

அவர் சொல்வது உண்மைதான். பால்போல் வெள்ளை நிறமும், இடையைத் தாண்டிய கருநீள கூந்தலும், மற்ற பெண்களைக் காட்டிலும் இன்னும் சற்று உயரமாக என்று… அவர்கள் இனத்தில் மிகவும் அழகான பெண் பவித்ரா. இருந்தாலும், இவ்வளவு பெரிய இடம் நமக்குச் சரிபட்டு வருமாஎனக் கனகா தயங்க….

நாம ஒன்னும் அவங்களைத் தேடி போகலையேஅவங்களே வலிய வரும்போதுகொடுக்கிறதுக்கு என்ன? உன் மகளுக்கு விருப்பாமான்னு மட்டும் கேட்டுக்கோ…” என்றார் அந்தப் பெரியவர்.

பிரபாகர் கருமை நிறம் தான். ஆனால் மிக உயரமாக, கம்பீரமாக, ஆள் பார்க்க லட்ச்சனமாக இருப்பான். பவித்ராவுக்கு அவனைத் திருமணம் செய்வதற்கு விருப்பம் தான். அதை அவள் முகமே காட்டிக்கொடுக்கஅதைப் பார்த்த கனகா திருமணதிற்குச் சம்மதித்தார்.

அந்தப் பெரியவர் சென்றதும், பவித்ரா அப்போதே கனவு உலகத்தில் மிதக்க ஆரம்பித்தாள். அவளுக்குத் திடிரென்று இந்த உலகமே அழகாக மாறிவிட்டது.

.. இதை மனசுல வச்சிக்கிட்டுதான். அன்னைக்கு வேலை கேட்டு போகும் போதுஒழுங்காவே பதில் சொல்லலையா….” என நினைத்தவள், எப்போதும் முகத்தில் புன்னகையுடன் வளைய வந்தாள்.

கனகாவிற்கு மகளைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது

அந்த வார ஞாயிற்றுக்கிழமையே, பிரபாகர் வீட்டில் பெண் பார்க்க வந்தனர். அவர்களே பெரிய குடும்பம் என்பதால்…. வேறு யாரையும் அழைத்து வரவில்லை…. கனகா தன் மூத்த மகள் தாமரையை மட்டும் அழைத்து இருந்தார். அவளும் தன் கணவன் மற்றும் மகளுடன் வந்திருந்தாள்.

பெண் பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள் என நினைத்தால்அவர்கள் அன்றே பவித்ராவுக்குப் பூ வைத்தனர். வரும் போதே புடவை மற்றும் தங்கத்தில் பெரிய ஆரம் கொண்டு வந்து இருந்தனர்.
பெண்கள் மட்டுமே வீட்டிற்குள் இருக்க…. அதற்கே வீடு நிறைந்து விட்டது. ஆண்கள் வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தனர்.

வந்த அரைமணி நேரத்திற்குள், பவித்ராவை புடவை மாற்ற வைத்து, பூ வைத்து முடித்து, இவர்கள் வாங்கி வைத்த சிற்றுண்டியை பேருக்கு கொறித்து விட்டு, உடனே புறப்பட்டு விட்டனர்.

பவித்ரா பிரபாகரை பார்க்க கூட இல்லை. அவனாவது தன்னைப் பார்த்தானா எனத் தெரியவும் இல்லை.

என்னடி இது?” என அவர்கள் சாப்பிடாமல் வைத்துவிட்டுச் சென்ற தட்டை காட்டி, தன் மூத்த மகளிடம் கனகா கேட்க….

அம்மா, அவங்க வீட்ல யாருக்கும் பெரிசா இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கிற மாதிரி தெரியலைஇவ வீட்டுக்காரர்தான் பிடிவாதமா இவளை கட்டணும்ன்னு சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன்.”

தாமரை சொன்னதைக் கேட்டுக் கனகா கவலையுடன் மகள்களைப் பார்க்க… “அம்மா, இதெல்லாம் எல்லார் வீட்லயும் இருக்கிறதுதான் கண்டுக்காதீங்க. முதல்ல முறைச்சிட்டு இருந்தாலும், கல்யாணம் ஆனா சரியாகிடும்.”

நாங்க வெளிய விசாரிச்சோம். பிரபாகருக்கு அந்த வீட்ல நிறைய மரியாதை உண்டு. அவர் பிஸ்னஸ்குள்ள நுழைஞ்சதும்தான், வெளிநாட்டு ஆர்டர் எல்லாம் பிடிச்சுக் கொண்டு வந்து, வியாபாரத்தை இன்னும் பெரிசாக்கினாராம்.”

அதனால அவர் குடும்பத்தில அவரை அனுசரிச்சுப் போகத்தான் நினைப்பாங்க. இல்லைனாஅவர் பாட்டுக்கு சொத்தை பிரிச்சிட்டுத் தனிக்குடித்தனம் கிளம்பிட்டா….நஷ்டம் யாருக்கு?”

இனி உன்னோட சாமர்த்தியம்தான் பவித்ராநீதான் உன் புருஷனை கைக்குள்ள போட்டுக்கணும். அப்பத்தான் உனக்கு அந்த வீட்ல மரியாதை இருக்கும்.”

தன் அக்கா சொல்லபுரிந்தும், புரியாமலும் பவித்ரா தலையாட்டி வைத்தாள். கைக்குள் அடங்கும் ஆளா பிரபாகர்…. அவனைப்பற்றி விரைவிலேயே தெரிந்து கொண்டாள்.

Advertisement