Advertisement

மீட்டிங் முடித்து விட்டு வந்தவனை கண்களால் மயக்கி காதல் வலை வீசி, தான் அணிந்திருந்த அல்ட்ரா மாடர்ன் டிரெஸ்ஸின் முன்பாகத்தை சற்று இறக்கி விட்டபடி, அடர்நிற லிப்ஸ்டிக் போட்டு வந்த ஷ்ரேத்தாவை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் கடந்து சென்றான்… 
            “ஹாய் தி கிரேட் அக்னி சார்”… என்ற தேன் ஒழுகும் குரலில் அழைக்க… அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவள் அழைத்ததையும் காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தான்… 
                அருகில் நின்றிருந்த சர்வா க்ளுக்கென ஒரு சிரிப்பை உதிர்க்க.. அவனின் கேலிச்சிரிப்பில் அவனை கோபமாக முறைத்தவளின் அருகில் சென்றவன்.. 
              “என்ன லுக் ஹனி.. அண்ணா தான் அப்பவே அவரோட முடிவை சொல்லிட்டாரு.. உன்னை புடிக்கலைன்னு.. அப்புறம் ஏன் பேபி அவர் பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ற” என்றவனை சொடக்கிட்டு அழைத்தவள் திமிருடன்.. 
            “உங்க அண்ணா அவ்ளோ பெரிய ஆளா??…. உங்க அண்ணாவை மடக்கிட்டா என்னடா பண்ணுவ??”… என்ற அகங்காரமாக பேசியவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்.. 
              “ஏற்கனவே அண்ணாவோட ஹார்ட்ல அந்த க்யூட்டிபை லவ் அம்பை விட்டுட்டாரு… அண்ணாவோட இதயத்தை ஒரு பொண்ணு அலுங்காம குலுங்காம கையோட எடுத்துட்டுப் போயிட்டா??.. என்றதும் முகம் கருக்க நின்றிருந்தாள்.. 
       .      “இவன் லவ் பண்றானா”  இருக்காது இவன் பொய் சொல்லுவானா இருக்கும் என நினைத்தவள்,  “பாக்குறேண்டா இவன் கூட அப்படி எந்த பேரழகி வாழப் போறான்னு??” என கோபத்தில் கருவியவளை கண்டுகொள்ளாமல், 
            “எனக்கொரு கேர்ள் ப்ரெண்ட் வேணுமடா.. 
              கேர்ள் ப்ரெண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா” என இரண்டு லைனையும் மாற்றி மாற்றி பாடியவனை கண்டு ஒற்றைப் புருவத்தை உயர்த்தி பார்த்தவன்.. “என்ன வேணும்” என்றதும் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டான் சர்வா… 
                 “நீங்களும் அண்ணியை கண்ணுல காட்ட மாட்டேங்குறீங்க??.. எனக்காவது கேர்ள் ப்ரண்ட் அமையுமான்னு பாக்குறேன்.. எவளும் கிடைக்க மாட்டேங்குறாளுக??.. ஏன்ணேன் நாட்டுல பொண்ணுங்களுக்கு எவ்ளோ பஞ்சம் பாருங்களேன்” என புலம்பியவனை கண்டு முறைத்தவன். 
              “வண்டியில ஏறுடா முதல்ல.. எப்போ பார்த்தாலும் ஏதாவது தொணதொணன்னுக்கிட்டு”.. என சிடுசிடுத்தவனை, 
              “இவரும் கல்யாணம் பண்ண மாட்டாரு.. என்னையும் பண்ண விடமாட்டாரு.. பேசாம நீ இமயமலைல போய் உக்கார்ந்துக்கோ.. அதுதான் நாளைய உன் நிலைமை போல”… என புலம்பியவனை பொருட்டாக கூட மதியாமல் வேகமாக வண்டியை ஆபீஸிற்கு சென்றான்.. 
                   அங்கிருந்த அனைவரின் வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டு நேராக உள்ளே சென்றவன் நேராக சென்றது ஆபீஸில் இருந்த அவன் பெர்சனல் ரூமிற்கு… யாராவது வந்து பண்ணுவதை பார்த்தால் கூட இவனுக்கு அவள் நியாபகம் வந்து விடும்… 
               உள்ளே சென்று கோர்ட்டை கழட்டி வீசியவன்.. அங்கிருந்த ஒரு ரூமிற்கு செல்ல.. அந்த அறை ஆறடியில் ஒரு போட்டோவை மாட்டி வைத்திருந்தான்… அதன் அருகில் ஒரு ஓவியம் இருந்தது..
               இவன் கையால் பரிசு வாங்கி முகம் கொள்ளா புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் சஷி என இவனால் அழைக்கப்படும் சஷ்டிகா தேவி..
           ஆறு வருடங்களுக்கு முன் கொழும்புவில் இண்டர்நேஷனல் அளவில் ஓவியப்போட்டி நடைபெற்றது… அது வி.கே.கல்லூரியில் நடைபெற்றதால் இவன் தான் அனைத்தையும் பொறுப்பற்று நடத்திக் கொண்டிருந்தான் அக்னி.. முதலில் விருப்பமில்லை என்றாலும் போக வேண்டிய கட்டாயம் என்பதால் சென்றான்… 
                ஒரு சிலருக்கு அவார்ட் கொடுக்கும் போது உம்மென்று உட்கார்ந்திருந்தவன்… முதல் பரிசை தட்டிச் செல்லும் ஓவியம் இதோ என பெரிய எல்இடி ஸ்கீரினில் போட… பார்த்தவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது..  
                ஒரு ஆண் பிரசவ அறையில் ஒரு குழந்தையை ஏந்தி நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை அவ்வளவு தத்ரூபமாக வரைந்திருந்தாள்… இவனுக்கே ஓவியத்தை பார்த்ததிலிருந்து கண்ணை விட்டு அகலாமல் இருந்தது.. அந்தப் படத்திற்கு கீழ் இரண்டே வரிகள் இருந்தது…
           “பெண்களின் தாய்மை மார்பில் சுரக்கும்
             ஆண்களின் தாய்மை இதயத்தில் சுரக்கும்”
           என எழுதி அதில் சஷி என கையெழுத்திட்டுருந்தாள்… அதைப் பார்த்தவனின் இதழ்கள் “சஷி” என மென்மையாக சொல்லிப் பார்த்தது.. 
               முகிலனின் ஓவியத்திறமையையும், குயிலின் பயத்தையும் ஒருங்கே பெற்றவள்.. யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவாள்… கொஞ்சம் தத்திப்பிள்ளை.. 
               அவளுக்கு பரிசு கொடுக்க சென்றவன் அங்கு மஞ்சள் நிற சுடிதாரில் அழகாக தலை பின்னி அதில் மல்லிகைப்பூ வைத்திருந்தவளை ரசனையுடனும் காதலுடனும் பார்த்தான்… பல பெண்கள் மாடல் டிரெஸ் என்ற பெயரில் அரையும் குறையுமாக திரிந்து கொண்டிருக்கும் பொழுது… எந்த வித கவர்ச்சியில்லாமலேயே இவனை சுண்டி இழுத்தாள்.. 
                பரிசு வாங்கியதும் பல பேர் வாழ்த்தையும் கைத்தட்டலையும் பெற்றவள்… சிரித்து கொண்டே சந்தோஷத்தில் வேகமாக வெளியே சென்றவள் நேராக அங்கு நின்றிருந்த ஆதியை அணைத்துக் கொண்டாள்… 
                சஷ்டி வெளியே செல்லவும் இவனும் பின்னாடியே சென்றான்.. சஷியை தேடி வந்தவனுக்கு அவள் யாரையோ அணைப்பது கோபத்தை தான் கொடுப்பது… 
                ஆதியை தூக்கிப் போட்டு மிதிக்கலாம் என கோபத்தில் விறுவிறுவென சென்றவன் அவர்கள் போட்டுக் கொண்டிருந்த சண்டையில் கால்கள் தானாக நின்றது… 
               “தாங்க்ஸ் அண்ணா” என சஷியை முறைத்து நின்ற ஆதி.. “நான் உனக்கு அண்ணா இல்லை தம்பி.. நீதான் முதல்ல பொறந்த.. நான் அப்புறம் தான் பொறந்தேன்.. சோ நீ தான் எனக்கு அக்கா” .. என அவள் கன்னங்களை பிடித்து கிள்ள… அதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவன் கையை உடைக்க மாட்டோமா என இருந்தது… 
                 “இதெல்லாம் செல்லாது நீதான் என் அண்ணா.. செல்ல அண்ணா.. பட்டு அண்ணா.. ஜ்ஜ்ஜுஜுஜு” என நாய்க்குட்டியை போல் கொஞ்சியவளை சின்ன சிரிப்புடன் பார்த்தவன்.. ஆதி டெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன் என்று சென்றான்…. 
  
             சஷ்டியும் முகிலனிடம் போன் பேசிக் கொண்டிருந்தவள் எதேச்சையாக திரும்பி பார்க்க அங்கே நின்று கொண்டிருந்த அக்னியின் மேல் ஒரு பெரிய கல் ஒன்று விழ பார்த்தது.. 
               என்றும் எச்சரிக்கையாக இருப்பவன் இன்று சஷ்டியை பார்த்ததிலிருந்து அவளின் மேல் பித்தாகி சுத்திக் கொண்டிருந்தவனால்  தன்னை நோக்கி வரவிருக்கும் ஆபத்தை உணராமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்… 
            சட்டென அவனை தள்ளிவிடலாம் என வேகமாக சென்றவள் தள்ளிவிடுவதற்குள்.. அவன் கோட் பட்டனில் இவளின் ப்ரைஸ்லெட் மாட்டி அவளையும் சேர்த்து இழுத்து விட்டது… அது சற்று சரிவான பகுதி என்பதால் இருவரும் சேர்ந்தே உருள ஆரம்பித்து விட்டனர்… 
            பக்கத்தில் கிட்டத்தட்ட நாற்பது கிலோ எடையுள்ள கல் வேகமாக விழுந்து “டக்கென்று” சத்தத்தில் அந்தத்தரையை பெர்த்தெடுத்தது.. அது மட்டும் அக்னியின்.விழுந்தால் அக்னிக்கு மரணம் நிச்சயம்.. 
           தன்னைக் காப்பாற்றியவளை மெதுவாக திரும்பி பார்க்க… அவளோ பயத்தில் இறுக்கமாக காதை ரெண்டையும் பொத்தியவாறே அவனின்.மேல் விழுந்து கிடந்தாள்… 
             அவளின் ஜடை இருவரின் கழுத்தையும் சுற்றி பின்னி கிடந்தது… சஷ்டியை இவ்வளவு அருகாமையில் பார்த்தவனுக்கு மாநிறமாக இருந்தாலும் வில் போன்று புருவம் வளைந்து, பளபளவென இருந்த மூக்கில் சின்னதாக வைரத்தில் மூக்குத்தி மின்னியது.. இதழ்கள் ரோஸ் நிறத்தில் இருந்தது.. அதுவே அவளுக்கு அவ்வளவாக மேக்கப் செய்து பழக்கமில்லை என்பதை பறை சாற்றியது..
              சின்னதாக செயினில் ஓம் டாலர் வைத்து போட்டிருந்தாள்.. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்தில் அனைத்தையும் தன் கண்ணில் நிறைத்து வைத்தான்… மிகவும் சிரமப்பட்டு அவனிடமிருந்து பிரிந்தவள்… 
  
         “சாரி சாரி சார்.. நான் வேணும்னே உங்களை தள்ளி விடலை… அதோ அந்த கல்லு உங்க தலை மேலே விழ பார்த்துச்சி.. அதான் உங்களை தள்ளிவிடப் பார்த்தேன்… பை ஷிலிப் நானும் விழுந்துட்டேன்.. சோ சாரி சார்” என்றவாறே சற்று பயந்தவாறே பேசியவளை, 
             “சஷ்டி.. ப்ளைட்க்கு டைமாச்சி வா போகலாம். சித்தப்பா சென்னை ஏர்போர்ட்ல பிக்கப் பண்ணீப்பாங்களாம்” என்றவாறே வேகமாக கையை இழுத்துக் கொண்டு சென்றதில் அவள் கையிலிருந்த ப்ரெஸ்லேட் அறுந்து அவனின் கோட்டில் மாட்டியிருந்தது… 
           
               அவள் செல்வதை பார்த்தவனுக்கு இதழ்கள் தானாகவே பாடல் ஒன்றை முணுமுணுத்தது… 
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் 
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் 
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள் 
கொடி தான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடி தான் 
என் எண்ணம் என்னவோ 
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி தான் உன்னை கொஞ்சும் எண்ணமோ
           
            என்றவாறே பாடிக்கொண்டிருந்தவனுக்கு ஏனோ அன்று நாள் முழுவதும் சந்தோஷத்தில் தான் சுற்றிக் கொண்டிருந்தான்… 
அவளுக்கு எந்த வித உணர்ச்சியோ காதலோ எதுவுமே இல்லை..  ஒருவரை காப்பாற்றி விட்டோம் என மட்டுமே நினைத்துக் கொண்டாள்… அதன் பிறகு அவன் நினைவு அவளுக்கு வரவேயில்லை… 
            ஆனால் இவனுக்கோ அவளின் தேகம் தந்த உணர்வுகள் அவனுக்குள் இருந்த​ காதல் ஹார்மோன்களை தட்டி எழுப்பியது…  அவள் சென்றும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன்… ப்ரோக்ராமில் பரிசு வாங்கி அவள் இறங்குவதை படமாக பிடித்திருந்த போட்டாகிராபரிடம் அதை வாங்கி இவன் வீடியோவாக மாற்றி எடிட் செய்து அவனுக்குப் பிடித்த பாட்டை வைத்திருந்தான்… 
               அவன் எப்பொழுதெல்லாம் தனிமையை உணறுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனின் ஆறுதல் ஸ்வீம்மிங்ஃபூலும், இந்த வீடியோவும் தான்… 
             ஒருவன் தன்னை ஆறு வருடமாக காதலிப்பதோ.. தன் புகைப்படத்துடன் வாழ்வது என எதுவுமே தெரியாமல் சஷ்டி சிம்மாவுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தாள்… 
           ” அப்புறம் கேஸ் என்னாச்சிடி??”….  என்ற சஷ்டியிடம்.. 
           கட்டை விரல் ஒன்றை தூக்கி தூக்கி காட்டியவள்… “சக்ஸஸ்” என்றதும் சின்ன சிரிப்புடன் பார்த்தவள்… 
             “ஆமா இப்போ நாம மூணு பேரும் எங்க போறோம்”.. என்ற சஷ்டியை பார்த்து கண்ணடித்தவாறே, “ரொம்ப சீக்ரெட்டான இடத்துக்கு” என்ற கார் திருநெல்வேலியை நோக்கி சென்றதும் அங்கு சூடாக போட்டிருந்த அல்வாவையும் வாங்கிக் கொண்டு, வந்து நின்றது “தாரணி பொட்டிக்”குக்குத் தான்..
              உள்ளே சென்றவர்கள் அங்கு நின்றிருந்த பெண்களுக்கு இன்ஸ்ட்ர்கஷன் கொடுத்து கொண்டிருந்த ஜீவியின் பின்னால் “அத்தை” என கூவியபடி மூன்று பேரும் ஒன்று போல் கத்த, பயத்தில் “ஆஆஆ” என அலறியே விட்டாள்.. 
               “பாவிங்களா.. நீங்க மூணு பேரும் தானா.. ச்சே.. கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன்.. ஏன்டா இப்டி இருக்கீங்க” என்ற ஜீவியை கட்டியணைத்து முத்தம் ஒன்றை வைத்தவாறே அவளுக்கு அல்வாவை ஊட்டி விட்டாள் சஷ்டி.. 
            “ச்சோ. ஸ்வீட் அத்தை நீங்க” … என்பதற்குள் 
              “ஹைய்யோ ஹைய்யோ.. இதெல்லாம் யாருக்காவது அடுக்குமா..??” என்ற கூக்குரலில் திரும்பி பார்க்க அங்கு சரண் தான் நின்று வாயில் அடித்தவாறே கத்திக் கொண்டிருந்தான்.. 
          அவனைப் பார்த்ததுமே நரசிம்மன் வேண்டுமென்றே ஜீவிக்கு ஊட்ட.. “அடப்பாவி டேய்.. அத்தைக்கு மட்டும் மாறி மாறி ஊட்டுறீங்களே.. எனக்கு யாராது ஊட்டுறீங்களா??”.. என்றதும் எல்லாரும் அவனை அல்ப்பமாக ஒரு பார்வை பார்க்க… 
            ஜீவியோ “த்த்தூதூ” என்றதும் அதை துடைத்து போட்டவன்.. “நீங்க எல்லாரும் கொடுக்காட்டி என்ன நானே சாப்பிட்டுக்கிறேன்” என்றவாறே வாங்கிட்டு வந்த அல்வாவை புல்கட்டு கட்டியவன்… 
                அங்கிருந்த கடைப்பையனிடம் ஒரு பார்சலை எடுத்துட்டு வர சொல்லியவன்.. என் கார்ல வச்சிருப்பா” என்றதும் வேலை செய்யும் பையன் சென்று விட… 
                “இதுல இப்போ வந்திருக்கிற நியூ கலெக்சன் டிரெஸ் எல்லாம் இருக்கு.. முக்கியமா சின்னக்குட்டிக்கு இருக்கு.. என் காரை எடுத்துட்டு போங்க..நான் உங்க பைக்ல வந்துர்றேன்” என்றதும் எல்லாருமே சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினர்… 
    
               மஹதி அந்த ஊரின் விஏஓ வாக இருக்கிறாள்.. ஊரில் எந்த பிரச்சினை என்றாலும் அதை ஸ்பெஷலாக கவனிப்பதே அவள் தான்..  அன்றும் வேலைப்பளுவிற்கு நடுவில் போன் ஒன்று வர, ஆதி என வந்தது.. 
                “ஹைய்.. மச்சான் கூப்பிடுறாங்க??”… என்றவள் சந்தோஷமாக போனை எடுத்து அட்டென்ட்   பண்ணியவளுக்கு எதிர்முனையில் வந்த செய்தி தலையில் இடியை இறக்கியது…. 

Advertisement