Advertisement

“மனம் முழுவதும் வலித்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நிர்சலனமான முகத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மஹதி”…   
               “காதலின்  காயங்கள்  சற்று  ஆழமாகவே  இருந்தது..  சிறு  வயதிலிருந்தே தான் நேசித்த  ஒருவன்  இன்று  வேறு  ஒருத்தியின். கணவனாக  பார்க்க  மனம்  சற்று  முரண்பட்டே  நின்றது”…  
               வீட்டிற்கு வந்ததும் தஞ்சமடைந்தது காவேரியின் மடியில் தான்… தன் மடியில் விழுந்து அழுது கரையும் பேத்தியின் துன்பத்தை கண் கொண்டு பார்க்க இயல முடியவில்லை.
       
                “என்ன மஹிக்குட்டி என்னாச்சி?? ஆதி உன்னை வேணும்னே ஏமாத்திட்டான்னா சொல்லு?? அவனை ஒரு வழி பண்ணிறலாம்??… என்ற  காவேரியை கண்களில் வலியுடன் பார்த்தவள்.. அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தாள்
            “அதான் ஆச்சி.. நான் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகலாம்னு இருக்கேன்… என்னால முடியல ஆச்சி.. இங்க உள்ளவங்களை எந்த முகத்தை வச்சிட்டு ஆச்சி நான் பார்ப்பேன்… எல்லாரும் கேலி கிண்டல் பேசுவாங்க ஆச்சி.. அதை தாங்கிக்கிற சக்தி எனக்கில்லை”.. என்று கேவிக்கேவி அழுதவளை முறைப்பாக ஒரு பார்த்தவர்.. 
             “என்னத்துக்கு நீ ஊரை விட்டுப் போகணுங்கிற?? நீ தப்பு பண்ணிய்யா??”.. “இல்லை” என வேகமாக தலையாட்டினாள்.. 
             “அப்புறம் எதுக்கு கண்ட நாய்ங்க ஏதாவது பேசும்னு நீ ஊரை விட்டு கிளம்புறேங்குற??.. உன்னை எவனாவது ஏதாவது பேசின பேசிற நாக்கை அறுத்து எரிங்குறேன்.. அதை விட்டுப்பபுட்டு சவளைப்புள்ள மாதிரி அழுதுக்கிட்டு திரியுறவ”…. 
               “இங்க பாரு மஹி.. இந்த உலகம் ரொம்ப பெருசு… நாம ஒவ்வொருத்தர் நாக்குக்கும் பயந்து ஓடிட்டு இருந்தோம்னு வையேன்.. உலகம் நம்மளை விடாம தொரத்தும்ல.. எதிர்த்து நில்லு.. மொதல்ல வலிக்கும்.. நீ திருப்பி கொடுக்க ஆரம்பிக்கும் போது.. உன்னை எதிர்த்து நிக்கிறவன் பயப்படுவான்”.. 
            உனக்கு ஒரு வருஷம் டைம் தர்றேன்.. அதுக்குள்ள ஒம் மனச மாத்திக்க… அப்புறம் நாங்க பாக்குற மாப்ளையே கல்யாணம் பண்ணிக்கிறே”.. என்றதும சரி சரி என சிறுபிள்ளை போல் தலையாட்டியவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்… 
               ஆனாலும் ஆதியின் மேல் கோபம வந்தது காவேரிக்கு..  ஜீவிக்கு  வருத்தம்  இருந்தாலும்  ஆதி ஒன்றும்  திட்டமிட்டு  ஏமாற்றவில்லையே… சூழ்நிலை  எதிராக  அமைந்து  விட்டது  என  நினைத்தாலும்..  தன்  அண்ணன். மகனுக்கே. கட்டிக்  கொடுக்க  வேண்டும்  என  ஆசைப்பட்டாள்… 
                 காயத்ரி திருநெல்வேலி செல்வதற்கான அத்தனை வேலையையும் பார்த்தான் சர்வா.. அக்னி அதை மேற்பார்வை பார்த்தானே ஒழிய.. காயத்ரியிடம் பேச வேண்டுமென அவனுக்கு தோன்றவில்லை… சாதாரண முகத்தை வைத்து காயத்ரி  புறப்படும்  போது  “டேக் கேர்  மாம்” என சம்பிராதயமாக  பேசும்  மகனை  சற்று  வருத்ததுடன்  பார்த்தார்.. 
                காயத்ரியின்  வருத்தத்தை  பார்த்த  சர்வாவிற்கும் கஷ்டமாக  இருந்தது…. “அம்மா நீங்க  இப்படி  அண்ணன். முகத்தையே பார்த்துட்டு  அதுல  ரியாக்சன்  வருமா ?? வராதான்னு  எதிர்பார்த்தா கண்டிப்பா  வராது..  ஏன்னா  அண்ணா  எப்பவும்  அப்படி தான்ம்மா.. 
                 “நீங்க நல்லபடியா ஊருக்குப்  போயிட்டு  அண்ணா  மனசுக்குள்ள  நினைச்சிருக்கிற  பொண்ணே  கல்யாணம்  பண்ணனும்னு வேண்டிக்கிட்டு  வாங்க” என்ன  சரியா??.. 
               சர்வா  பேச ஆரம்பித்ததுமே  தன்  கவலைகளை  மறந்த  காயத்ரி,  “ஆமாடா  கண்டிப்பா  வேண்டிக்கனும்.. அவனுக்கு  கல்யாணம் நடந்தா  உனக்கு  மொட்டை  போடுறேன்னு  வேண்டிக்கிறேன்” என  அவன் தலையை  கோதி  விட்டவரை  கண்டு  ஜெர்க்கானவன்..  
             “ஏதுதுது??  அவருக்கு  கல்யாணம்  நடந்தா  எனக்கு  மொட்டை  அடிப்பீங்களா??  அடிப்பீங்க?? அடிப்பீங்க??  யாராவது  என்  தலையில  கை வைக்கட்டும்  காதை  கடிச்சி  துப்பிர்றேன்”… என்ற  தன்  போக்கில். சபதம்  இட்டவனை, 
               அங்கிருந்த  ஏர்ஹோஸ்டஸ் பைத்தியம் என்ற  ரேஞ்சில்  அவனை மேலும். கீழும் பார்த்தவாறே  சென்றாள்..   
              
             வீட்டின்  மொட்டை  மாடியில்  நின்றிருந்த  ஆதிக்கு  மனதே  ஆறவில்லை..  வாழ்க்கையின் முதன்  முறையாக  தன்  தந்தை கை  நீட்டி அடித்திருக்கிறார்… அதன்  வலியின் தாக்கமே  அவனுக்கு  கண்ணீரை  வரவழைக்கும்  போல்  இருந்தது..  
             ஆனாலும்  ஆண் மகன்  அழக்கூடாது என  கட்டுப்படுத்தினாலும்…  தந்தை  அடித்ததே  தன். மனக்கண்ணில். மீண்டும் மீண்டும்  தோன்றி  இம்சித்தது..   
              தன்  ப்ரெண்டுக்காக  செய்த  ஒரு  செயல்  தன்  வாழ்க்கையை புயலடித்து  ஓய்ந்த இடம்  சின்னாபின்னமாகி கிடப்பதை  என்ன  செய்வதென்றே  அறியாமல்  நின்றிருந்தான்..   
                ஏதோதோ  யோசனையில்  உழன்றவனுக்கு  தலைவலி  கூடியதே  தவிர  சிறிதும் குறையவில்லை… திடீரென்று  தன் தோளில்  ஒரு கரம்  விழவும்  திடுக்கிட்டு  திரும்பி  பார்த்தவனுக்கு, அங்கு  நின்றிருந்த  தந்தையை  சிறிதும்  எதிர்பார்க்கவில்லை… 
                   முகிலனோ  ஆதியின். கன்னத்தில்  படிந்த  தன்  கை  விரல்களின் அச்சைப்  பார்த்துக்  கொண்டிருந்தான்…  வெள்ளை  நிறத்திலிருக்கும்  ஆதியின்  கன்னத்தில்  சிவப்பாக  தடித்து அது  பாதி  தாடிக்குள் மறைந்தும்  மறையாமலும்  காட்டிக்  கொடுத்தது…  முகிலனின். அரக்கத்தனத்தை..  
                  “ரொம்ப  வலிக்குதா ஆதி?? ” என்று சற்று  கலங்கிய  குரலில். கேட்ட முகிலனை ஏறிட்டுப்  பார்த்தவன்..  
                “இல்லைப்பா.. நான்  தப்பு  பண்ணதுனால  தான  நீங்க  அடிச்சிங்க.. பரவால்லப்பா” என்றாலும்  முகிலனின்  கைகள்  அவனின்  கன்னத்தை  வருட,  தன்  தந்தையின்  ஸ்பரீசத்தில் தானாக கண்ணீர் பொலபொலவென  கொட்ட… முகிலனை இறுக்கமாக  அணைத்துக்  கொண்டான்… 
               “ஐயம்  சாரிப்பா..  ரியலி  சாரிப்பா…  என்னோட  விளையாட்டால  ஒரு  உயிர்  போகும்னு நான்  நினைச்சிக்  கூட  பார்க்கலைப்பா… என்னால் முடியலப்பா..  அவனோட  கடைசி  ஆசையே பல்லவியை நான் கல்யாணம் பண்ணிக்கனுங்கிறது  தான்”…  
               “என்னாலையும் மறுத்து  பேச  முடியலப்பா.. மரணத்தோட  போராடுற  ஒருத்தன்  என்  கிட்ட  பிச்சையா கேட்குறேன்னு  சொல்லும்  போது எனக்கு  எதுவும்  தோணலப்பா..  மஹதியோ நம்ம  குடும்பமோ. எதுவுமே  நியாபகத்துக்கு  வரல்லப்பா”…  
              “என்னைக்  காப்பாத்துறதுக்கு  ஒருத்தன்  உயிரை  கொடுத்துருக்கான்…  அவனோட  கடைசி  ஆசையே  பல்லவியை நல்லா வச்சிக்கணுங்கிறது  தான்…. அதான்  யோசிக்காம  கல்யாணம்  பண்ணிட்டேன் ” என  சிறுபிள்ளை  போல்  தேம்பி  அழுபவனை  ஆறுதல்  படுத்தியவன் திரும்பிப்  பார்க்க… 
                அங்கே  மொழிதான் நின்று  கொண்டிருந்தாள்… அவளின் கண்கள்  கலங்கியிருந்தாலும்  கண்ணீரை  முறைத்தவாறே,  “ஆச்சி  உங்க  ரெண்டு  பேரையும்  கூப்பிட்டாக” என ஆதியிடம்  ஒரா. வார்த்தை  கூட  பேசாமல்  சென்றவளைப் பார்க்க  மனது  கனத்தாலும்,  
              இதில்  தான்  தலையிட வேண்டாம்  என  ஒதுங்கியே  இருந்தான்..  இருவரும்  கீழே  செல்ல  அங்கு பல்லவியை  சுற்றி  ஆளாளுக்கு  ஒன்றொன்று  சொல்லியபடி  கத்திக்  கொண்டிருந்தனர்..  
              
              சற்று  நேரத்திற்கு  முன்பு  வீட்டில் தனியாக நின்று  கொண்டிருந்த  பல்லவியை ரெஸ்ட் எடு என சொல்லி ஆதியின் ரூமில்  விட்டு சென்றாள் அன்னம்.. 
                அன்னம் சென்றதை உறுதிபடுத்தியவர்கள் தடாலென அந்த அறைக்குள் நுழைய பயத்தில் வார்த்தை கூட வர மறுத்தது பல்லவிக்கு… 
              சஷ்டிகா, கிருத்திகா, ஸ்ருதிகா, தான்விகா, ஆத்மிகா, ப்ரணவிகா என ஆறுவர் சுற்றி வளைத்து நின்றனர்.. அவர்களை பார்த்ததும் பயத்தில் உள்ளுக்குள் ஜுரமே வந்தாலும் வெளியே அவர்களை பார்த்து சிரித்தவளை பார்த்து, சம்பிரதாயமாக சிரிக்க, 
                “ராகிங்ன்னா என்னன்னு தெரியுமா??” என்ற கிருத்திகாவிடம் தெரியும் என்பதைப் போல் தலையாட்டினாள்.. 
             “ம்ம்ம்.இப்போ நாங்க எல்லாரும் உன்னை ராக்கிங் பண்ணப் போறோம்” என்ற கிருத்தியை சற்று பயத்துடன் பார்த்தவள், 
              “உன் பேர் பல்லவின்னு சொன்ன முழுப்பேர் அதானா??”.. என்ற ஸ்ருதியிடம் 
           “இல்லை” என தலையாட்டியவள் அனுபல்லவி என்றாள்.. 
            ” ம்ம்ம… நல்ல பேர் தான்.. உன் வயசென்ன??”… 
            ” ம்ம்.. பதினெட்டு ஏன்டி பார்த்தாலே தெரியல்ல ஒரு இருபத்திரண்டு வயசு இருக்கும்”.. 
  
             “இல்லை அக்கா.. என் வயசு பதினெட்டு தான்”… அணுகுண்டை பத்த வைத்து அசால்ட்டாக கையாலே தூக்கி அனைவரிடமும் வீசியே விட்டாள்… 
              “ஏஏஏதுதுது பதினெட்டா??? என நெஞ்சைப் பிடித்தவாறே விழப்போன ஆத்மியை அணைத்த ஸ்ருதி”.. 
            “இவ ஒருத்தி பெரிய சிவாஜின்னு நினைப்பு ஆளப்பாரு . ஆக்ட்டிங்க குறைடி”.  
           “உனக்கு நிஜமாவே பதினெட்டு தானா”.. 
              “ஆமா அக்கா”… 
               “நீ என்ன வேணும்னாலும் சொல்லு தாயீ.. ஆனா அக்கானு மட்டும் சொல்லாத.. தாங்க முடியல்ல”… என்று  நெஞ்சை  பிடித்து  வசனம்  பேசியவர்களை  கண்டு  சிரிப்பு  தான்  வந்தது…  
                  “பதினெட்டு  வயசில  கல்யாணம் பண்ணுவாங்களா??” என  ஆச்சர்யமாக  கேட்ட  சஷ்டியை 
             “ஆமா அக்கா..  பண்ணுவாங்க..  மைனர்  பொண்ணை  கல்யாணம்  பண்ணா  செயில்ல தூக்கிப்  போட்ருவாகன்னு.. இப்போல்லாம்  பதினெட்டு  வயசுப்  பொறந்ததும்  கட்டிக்  கொடுத்துருவாக”.. 
             ஆமா..  ஒம்  மாமேன்  படிச்சவன்  தானே  அவேன்  ஏன்  இந்த  சின்ன  வயசில  உன்னை  கல்யாணம்  பண்ணனும்னு  நினைச்சான்..  
               அதுவா அக்கா…  எங்க  சித்தி  எனக்கு  ரொம்ப  கொடுமைப்படுத்திச்சா  அதான் மாமா  என்னைக்  கட்டிட்டு  மெட்ராஸுக்கு கூட்டிப்  போய்  நல்லா  படிக்க  வைக்கிறேன்..  
              நல்லா பாத்துக்குவேன்…  எனக்குப்  புடிச்சதெல்லாம்  வாங்கித்  தரேன்னு  சொல்லிச்சி..  எனக்கு  நீங்க  யாரும்  வேணாம்  நான் என்  மாமா  கூடையே போறேன்…  
               உங்க  யாரையும்  எனக்குப்  புடிக்கலை.. என  கத்தியவாறே  வேகமாக  சென்றவள்..  தடதடவென  படிகளில்  இறங்கி  ஓடியவளின்  பின்னால். அனைவரும்  “புடிங்க…  புடிங்க..  அவளை  யாராவது  புடிங்க” என்ற  கூச்சலில்  வீட்டில்  உள்ளவர்கள்  அனைவரும்  ஒன்று  கூட..  
                 பல்லவியை  புடித்து  நிப்பாட்டி  வைப்பதற்குள் எல்லாருக்கும்  வேர்த்து  விறுவிறுத்து  ஒழுகியது.  ப்ரணவீகாவுக்கே  டஃப்  கொடுத்தாள்  பல்லவி…  
                வேண்டா  வெறுப்பாக  உட்கார்ந்திருந்த  பல்லவிக்கு  கண்களில்  கண்ணீர்  ஆறாக  பெருகியது..  இதை  ஆதி  தான் சரி  செய்ய  வேண்டுமென  ஆதியையும்  அழைத்து  வர  சொல்லியவர்..  அப்படியே  முகிலனையும்  கூப்பிட்டு  வர  சொல்லினார்… 
              தன் வீட்டின் நான்காவது அறையில் அவனுக்காக உருவாக்கப்பட்ட பப்பில் உட்கார்ந்திருந்து கண்ணாடி  குவளையில்  ரெட் ஒயினை ஊற்றி சிப் சிப்பாக அருந்திக் கொண்டிருந்தனர்  அக்னியும் சர்வாவும்… 
              அண்ணா.. நான் உங்க கிட்ட ஒன்னு கேட்பேன் மறைக்காம உண்மையை மட்டும் சொல்லணும் என்றவனை ஒரு புருவத்தை ஏற்றி இறக்கிய வாறே, 
  
           “ம்ம் எனக்கு பதில் சொல்லணும்னு தோணிச்சின்னா சொல்லுவேன்.. இல்லை சொல்ல மாட்டேன்”.. 
            “நீங்க  ஏன்  அண்ணா  யார்  கூடேயும்  ஒட்டாம  இருக்கீங்க??.. இன்னைக்கு  அம்மா  ஊருக்கு  போனாங்க..  ஆனா  நீங்க  ஏதோ  பக்கத்து  தெருவுக்கு  போற  மாதிரி  ரொம்ப  கேஷுவலா  இருக்கீங்க??”.. 
                “ஏன் அண்ணா. உங்க  உண்மையான  தோற்றத்தை  மறைச்சிட்டு  போலியான  ஒரு  முகமூடியை  போட்டுருக்கீங்க?? “.. என்றவனின்  கேள்வியில்  இருந்த உண்மை  அவனையும்  சுட்டது..  
             “வாழ்க்கை இப்படித்தாண்டா..  நான்  இப்படி  வாழணும்னு  நான்  தீர்மானிக்கிறதை  நான்  தீர்மானிக்கலை..  என்னை  தீர்மானிக்க  வச்சான்  ஒருத்தன்..   அவனுக்காக  மட்டும்  தான் இப்போ  நான்  இருக்கேன்.. அவன்  உயிர்  என்னைக்கு  என்  கையால  போகுதோ  அப்ப  நான்  நிம்மதியா சிரிப்பேன் ” என்றவனின்  நெருப்பை  கக்கும்  வார்த்தையில், 
              தான்  அடித்த  போதே கூட இறங்கி  வயிற்றில்  ஜில்லென்று  உணர்வில்  பாத்ரூமிற்கு  ஓடிச்சென்றான் சர்வா..  அவனின்  கண்களில்  இருந்த  பழிவெறியும்  குரோதமும்,  இதுவரை  பார்க்காத  அக்னியை  பார்த்தான்..
              குடிபோதையிலும் கால்கள் சிறிது கூட தள்ளாடாமல் வேகமாக மூன்றாவது தளத்திற்கு சென்றவன்.. அங்கிருந்த ஒரு அறையை திறந்தான்… அதில் எந்த பொருட்களும் இல்லாமல் வெறுமையாக இருந்தது… 
                அதில் நேராக சென்றவன் அங்கிருந்த கண்ணாடியில் தன் கைவிரலை பதித்தான்… சட்டென அந்த அறையின் பக்கவாட்டில் ஒரு கதவு திறந்தது… கதவின்  வழியே  நேராக  சென்று  கொண்டிருந்தவளுக்கு,  நீண்ட வழிதான் வேகமாக சென்றவன்… அங்கிருந்த லைட்டை உயிர்ப்பித்தவனின் கண்களில் இருந்த குரோதமும் வன்மமும் இதுவரை யாரும் அறியாதது.. 
                  அந்த அறையின் இருந்த புகைப்படங்களை பார்த்தவனுக்கு இரத்தமெல்லாம் சூடேறி எதிரில் நிழலாய் இருப்பவனின் இரத்தத்தைக் எப்பொழுது தன் கையில் ஏந்துவோம் என இராட்சஷனாய் இருபது வருட தவம் இருக்கிறான்.. அவனை எதிர்க்கும் நாளிற்காக… 
                  அங்கிருந்த டேபிளில் இருந்த சிறு கத்தியை எடுத்து பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்தவன் ஒரு கண்களை மூடி எதிரில் இருந்த போட்டோவினை குறி வைத்து எறிய.. அந்த சிறு கத்தி நேராக சென்று நிழல் உருவமாய் இருந்த கார்முகிலனின் நெஞ்சில் சொருகியது… 
              “தட்ஸ்  மை  பாயிண்ட்” என்றவனின் இதழ்களில் குரோதப் புன்னகை ஒன்று  அரும்பியது… 
               கிட்டத்தட்ட அங்கிருந்த எல்லா கத்தியையும் எடுத்து போட்டோவை நோக்கி வீசினான்.. அது ஆங்காங்கே சொருகி நின்றது… அனல் கக்கும்  பார்வையை மட்டும் சுமந்தவாறே அதன் அருகில் சென்றவன்… 
              “ஒரு நாள் இதே போல் உன்னை நேர்ல குத்துவேன் கார்முகில்ல்லாஆஆ”.. என்றவனின் பழி வெறியும் வன்மமும் பல மடங்கு கூடியது.. கண்கள் சிவப்பேறி கை நரம்புகள் ஒன்று கூடி ஒரே இடத்தில் இரத்தம் புது வேகத்தில் கூட… 
               “ஆஆஆஆஆஆஆ” என  ஆக்ரோஷமாக  கத்தியவனின் சட்டை கூட கிழிந்தது.. அவனின் அகன்ற  தோள்களும்  இறுகிய  மார்பும்,  படிக்கட்டு தேகமும், முறுக்கேறிய புஜங்களும் அவன்  வயிற்றில் ஒட்டியிருந்த  எய்ட்  பாக்கும்  அவனை  இராட்சஷனாக  காட்டியது..  
           “உன்னை தேடி உன் ஊருக்கு வர்றேன். உன் ஊர்லையே உன்னை சம்ஹாரம் பண்றேன்… அப்படி நான் பண்ணல்லை நான்  “இரணிய்யகர்பன்” (இதுதான் என்  ஹீரோ பேரு) இல்லைடா”… என கர்ஜித்தவனின் கர்ஜனையில் அவன் வார்த்தைகளை சுவற்றில் மோதி எதிரொலித்து அந்த அறையை அதிர வைத்தது… 

Advertisement