Advertisement

மஹதிக்கு போன் வந்த சில மணி நேரத்தில் முகிலனின் வீட்டில் அனைவருமே கூடியிருந்தனர்.. சிவ்வு தீபியைத் தவிர… சிவ்வுக்கு குஜராத்தில் டிரான்ஸ்ஃபர் என்பதால் அவனால் வரமுடியவில்லை… 
            ஆனாலும் தங்கை மகளை பற்றிய வேதனை ஆழமாக தன் நெஞ்சில் பதிந்தது…   அவ்வளவு பெரிய சோபாவில் ஆளாளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருக்க… அனைவரின் விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து மனதில் கவலையும் வேதனையும் அதிகரித்தது… 
         
                 மஹதியின் கண்களில் கண்ணீர் வழிந்ததே தவிர.. கத்திக்கூச்சல் போடவில்லை… ஜீவியோ தன் அண்ணன் என்ன முடிவு எடுப்பான் எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்… வாழ்க்கையில்  சில  தருணங்கள்  நம்  சொந்தமே  நம்மை  திசை  திருப்பும்… அப்பேற்பட்ட  சூழ்நிலையில்  தான் அனைவருமே  இருந்தனர்..  
  
              சிறு  வயதிலிருந்தே  ஆதியின்  மேல்  தீரா  காதல்  கொண்டிருந்த மஹதியால்  சட்டென  அவனின் முடிவை  ஏற்க  முடியவில்லை… இதயத்தில் சிறு  வயதிலிருந்தே  சுமந்திருந்த  காதலின்  வலியால்  முதன்  முறையாக வாழ்வின்  என்ன  முடிவு  எடுக்க  என்று தெரியாமல்  நின்றிருந்தாள்…  
               இவ்வளவு  கலவரத்திற்கு  காரணமானவன்  சில நிமிடங்களில்  வந்து  நின்றான்…  சட்டென  வீட்டு  வாசலில்  காரை  நிறுத்தும்  சத்தம்  கேட்டு  வெளியே  வந்த  முகிலனும்  குயிலும்  இரண்டு  வருடங்கள்  படிக்க சென்ற மகனை ஓடிச்சென்று  ஆரத்தழுவும்  நிலையில்  அவர்கள்  இல்லை.    
      
              அவனைத் தொடர்ந்து  பின்னால்  இறங்கினாள் பல்லவி…. ஆம்..  ஆதிரனுக்கும் மஹதிக்கும் திருமணம் பேசியிருக்கும்  நிலைமையில்  ஆதிரன் வேறு  ஒரு  பெண்ணை   வந்த  போன்  காலே  அது…  
               மாநிறத்திற்கு  சற்று  குறைவான  நிறத்தில்  குழந்தை  போல்  மலங்க  மலங்க  விழித்தவள் அங்கு  சுற்றி  நின்றிருந்த அத்தனை  பேர்களையும் பார்த்த  பின்  பயத்தில்  கை  கால்கள்  எல்லாம்  நடுங்க  ஆரம்பித்தது…  
              அவளின்  பயத்தை  உணர்ந்தவன்  அவளின்  கைகளை  இறுக்கமாக  பற்றியபடி  முன்னே  சென்றவனுக்கு  வேண்டா  வெறுப்பாக  வந்து  ஆராய்த்தி  எடுத்தார் கங்கா…  அவரால்  சிறிதும்  ஏற்றுக்  கொள்ள முடியவில்லை…  
               இவர்களின்  கல்யாணமே  ஒரு  புதிராக  இருக்கும் நிலையில்… பல்லவியை  பார்க்க  பார்க்க  தன்  பேரனுக்கு  இவள்  இணையா என்னும்  கோபம்  பல  மடங்கு  இருந்தது..  மஹதியின்  கண்ணீருக்கும்  இவள்  தான்  காரணம்  என  இரு  கோபத்தையும்  அவளின்  மேல்  போட்டு  அவளை  பார்வையாலே  ஒரு  முறை முறைத்தவர்  தோள்களை  சட்டென “ஹூக்கும்” என்று குலுக்கிக்  கொண்டு போனவரை  பார்த்து  கை  கால்கள்  வெளிப்படையாகவே  நடுங்கியது…  
              பல்லவியின் நிலைமையறிந்தவன்  மெதுவாக  அவளின் கை கோர்த்தவாறே  உள்ளே  சென்றான்…  அங்கு  சோபாவில் அமர்ந்திருந்த  ப்ரணவீக்கு கூட பல்லவியை  சுத்தமாக. பிடிக்கவில்லை…  
               மஹதி  இதுவரை  எதற்கும்  தலை  குனிஞ்சதே  இல்லை… ஆனால்  இன்று  யாரையும் ஏறிட்டுப்  பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தவளை கண்டு  அனைவருக்கும் சுருக்கென  வலித்தது..  
  
               “அப்பா” என்று சற்று  கலங்கிய  குரலில்  கூப்பிட்ட  மகனை  சிறிதும்  கண்டுகொள்ளாமல்,  
                “ஏன்??  எப்படி??  என்னாச்சின்னு நான் கேட்கப்போறதில்லை… உன்னால  நாங்க  யாரும்  பாதிக்கப்படலை… இதோ இவ  தான்..  உன்  மேல  சின்ன​  வயசிலருந்து  ஆசைப்பட்டவ  இவளோட  ஆசைக்காக  தான்  உங்களுக்கு  கல்யாணம்  பண்ணலாம்னு  எல்லாரும்  யோசிச்சாங்க…  அப்போ  கூட  உங்க  ரெண்டு  பேர்கிட்டையும் சம்மதம்  கேட்டேனா???  இல்லையா??? ” சற்று  கடினமான  குரலில்  சொல்ல…  மற்றவர்கள்  எப்படியோ  பல்லவிக்கு  அவனின்  குரலும்  அவன்  சொன்ன  அழுத்தமான வார்த்தைகளும்  உள்ளுக்குள்  கிலி பரவச்  செய்தது..  
      
              சற்று  தலைகுனிந்தவாறே,  “இவுங்க  மேலே  எந்தத்  தப்பும்  இல்லை…  என்னோட  வாழ்க்கை நல்லா  இருக்கனும்னு  அவுங்க  ஆசையெல்லாம்  மனசுக்குள்ள  போட்டு  புதைச்சிட்டு  எனக்கு  இத  கட்டுனாரு ” என  கழுத்தில்  மஞ்சள் கயிற்றில்  கட்டிய  தாலியை  தூக்கிக்  காட்டினாள்…  
              அவள்  பேச  ஆரம்பித்ததும். மஹதிக்கு  கூட  அவளின். மேல்  இரக்கம்  சுரந்தது..  பல்லவியோ  அங்கிருந்த  யாரையும் கவனிக்காமல்,  “என் மாமா  உயிரோட  இருந்திருந்தா  என்னை. கூப்பிட்டு  போய்  நல்லா  வாழ  வைச்சிருக்கும்..  ஆனா இப்போ என்  மாமாஹ்… மாமாஹ்” என  ஏங்கி  ஏங்கி  அழுதவளை அன்னம்  பார்கவி  குயிலு  அனைவரும்  அவளை  அணைத்துக் கொள்ள,  
                  அவர்களின் தோள்களில்  சாய்ந்து. அழுதவள்…  சற்று  நிமிடத்தில்  தெளிந்து,  “நான்  உங்க  எல்லார்கிட்டையும் மன்னிப்பு  கேட்டுக்கிறேன்…  என்னைக்  காப்பாத்துறதுக்கு  அப்போ  இவங்களுக்கு  வேற  வழி  தெரியல்ல.”… 
              என். மாமாவோட ப்ரண்ட்  தான்  இவுங்க.. என்  கல்யாணத்துக்காக அரசம்பட்டிக்கு  வந்திருந்தாங்க..  விடிஞ்சா  கல்யாணம்  அப்படிங்குற  நிலைமையில்  தான்  என் மாமாவும்  இவுங்களும்  பேச்சிலர்  பார்ட்டின்னு குடிக்கிறதுக்காக  போயிருக்காங்க”.. 
                அப்போ  இவுங்க  போதையில  நடந்து  வரும்  போது தெரியாம  பாம்பை  மிதிச்சிட்டாங்க..  அது  இவுங்களை  கொத்துறதுக்குள்ள  என்  மாமா  குறுக்கே  விழுந்திடுச்சி…  கடிச்சது  கட்டுவிரியன்  பாம்பு  அதுனால என் மாமா காலையில  இறந்திட்டாங்க “… என்றதும்  மஹதி  அவளின் மேல்  இரக்கமே  வந்தது… 
                “என்  மாமா  இறந்து  ஒரு  மணி  நேரம்  கூட  ஆகலை…  மாமாவோட  பொணத்தை  புடிச்சி  வச்சிக்கிட்டு… என்னைக்  கல்யாணம்  பண்ணி வச்சாதான் மாமாவை  எடுக்க  விடுவேன்னு  தகராறு  பண்ணான்  வட்டிக்காரன்…. அவனுக்கு  ஆள்  பலம்  அதிகம்  எங்க  ஊர்ல  அதுனால  யாராலையும்  எதுவும்  செய்ய  முடில… அந்தாளுக்கு  56 வயசாகுது..  அவருக்கு  என்னைக்  கல்யாணம்  பண்ணி  வைக்க ஊரே. முடிவு  பண்ணிடுச்சி…  
             இவுங்க  எவ்ளோ  சொல்லிப்  பார்த்தாங்க காசு எல்லாத்தையும்  நானே  கொடுக்கிறேன்னு…  ஆனா  அங்கிருந்த  யாரும் அதை கண்டுக்கவேயில்லை..  எனக்கு  வலுக்கட்டாயமா  தாலி  கட்ட  வரும். போது இவரு  என்னைக்  காப்பாத்துறதுக்கு  வேற  வழியில்லாமல் எனக்கு  தாலி  கட்டிட்டாரு”.. 
                 நீங்க  எல்லாரும்  என்  மேலே ரொம்ப. கோபமா இருப்பீங்கன்னு  தெரியும்…  எனக்கு  என் மாமன்னா  உசிரு…  அவரை  என் புருஷனா தான்  மனசுக்குள்ள  நெனைச்சி  வாழ்ந்திட்டு  இருந்தேன் “… 
            ” என்னால. எம் மாமனை  மறக்க  முடியாது…  நீங்க  இவுங்களுக்கு  அந்த  அக்காவை  கல்யாணம்  கூட. பண்ணி  வைங்க…  நான்  எதுலையும்  தலையிட  மாட்டேன்…  நான்  இந்த  வீட்டுல  கூலி  வேலை  பார்த்தாவது  எம்  பொழப்பை பாத்துக்கிறேன்.” என்றவளின்  வெள்ளந்தி  மனது  அனைவரையும் வாயடைக்க செய்தது…  
            இதில்  யாருக்கும்  யாரின்  மேல்  குற்றம்  சொல்ல  என்று  தெரியவில்லை.. முடிவு எடுக்க  வேண்டியவள் அமைதியாக  இருந்தாள்..  முகிலனாவது  ஏதாவது  சொல்வான்  என  எதிர்பார்க்க  அவனின்  வாய்ப்பூட்டை  அவன்  திறப்பதாக யாருக்கும்  தெரியவில்லை “… 
             சிறிது நேரம்  அமைதியில்  கழிய,  ” என்ன அண்ணா  முடிவெடுத்துருக்க??? “… என்ற தங்கையை  ஏறிட்டுப்  பார்த்தவன்…  
             “இதுல  நான்  சொல்றதுக்கு  எதுவும்  இல்லை…  இதுல  சம்பந்தப்பட்டவங்க  மூணே  மூணு  பேர்…  அவுங்க  தான்  அவுங்க  வாழ்க்கையை  டிசைட்  பண்ணனும்.”…. 
  
             “இந்தப்  பொண்ணு  சொல்ற  மாதிரி  மஹியை  ஊரறிய  கல்யாணம்  பண்ணி  வைக்கணும்னாலும்  எனக்குச்  சம்மதம்”… என்றதும்  தான்  தாமதம்  “மாமாஆஆ”” என்று கத்தியவாறே  எழுந்து நின்றவள்.. 
            “நான்  காதலிச்சது  என். மச்சான்…  உங்க  பையனைத்  தான்…  இன்னொருத்தியோட  புருஷனை இல்ல..  அந்தளவுக்கு தரம் தாழ்ந்து  போக  மாட்டா  இந்த மஹதி…  வலி தான் சின்ன  வயசிலைருந்து  காதலிச்சது  வலிக்க  தான்  செய்து…  ஆனாலும்  நான். இப்படியே  இருந்து  எல்லாரையும்  கஸ்டப்படுத்த  மாட்டேன்….  
              கொஞ்ச  நாள் எனக்கு  டைம்  வேணும்…  நான்  எல்லாத்தையும். மறக்குறது…  சோ  நான் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு  எங்கேயாவது. போகலாய்னு இருக்கேன்”.. என்னால யாருக்கும்  கஷ்டம்  வேண்டாம்  மாமா…  என்று  நிமிர்ந்தவாறே  சென்றவளை  புன்னகையுடனே  பார்த்து  நின்றான்…  
              இவளிடம்  பிடித்ததே இந்த  தைரியம் தான்…  எதற்கும்  அஞ்சாமல். யாருக்கும்  பாதகம்  இல்லாமல்  நடைமுறை  வாழ்க்கையை  ஏற்று  வாழ்பவள்  தான்  மஹதி.. காவேரியின்  வாரிசு  அல்லவா… 
              சரணும்  ஜீவியும்  மஹதி  பின்னாடி  சென்று  விட்டனர்.. எந்தக்  கலவரமும்  இல்லாமல்  ஒரு  பிரச்சனையை  சுலபமாக  முடிந்தது என  அனைவரும்  அவரவரின்  வேலையை  பார்க்க செல்ல… சப்பென  அறையும்  சத்தத்தில்  அனைவரின். நடையும்  அப்படியே  நின்றது…  
              திரும்பி  பார்த்தவர்களுக்கு  நம்பவே  முடிவில்லை… முகிலன் ஆதியை  அடித்ததை… எப்பொழுதும்  பிள்ளைகளை  அடிக்கவே  மாட்டான்… அப்படிப்பட்டவன்  இன்று  ஆதியை அறைந்ததை  நம்ப  முடியாமல்  பார்த்து  நின்றனர்…  
                “சோ…  நீ  ஃபாரின்ல இருந்து  ஒரு  வாரத்துக்கு  முன்னாடியே  ஊருக்கு வந்துருக்க… ஆனா எங்க  யாருகிட்டையும்  போன்  பண்ணி  ஒரு  வார்த்தை  சொல்லணும்னு தோணலை” என்று  சற்று  கடினமான  குரலில்  கேட்டவனைக் கண்டு இப்பொழுது  ஆதிக்கு  குளிர்  ஜூரமே  வரத்  தொடங்கியது.. 
                “இல்லைப்பா…  உங்களுக்கெல்லாம்  சர்ப்ரைஸ்  பண்ணலாம்னு” என. இழுத்தவனைக்  கண்டு  சிரித்தவன்..  
             “ஆமாம்மா..  பெரிய  சர்ப்ரைஸ்  தான்  நாங்க  யாரும் இதை  எதிர்பார்க்கவே இல்லை..  குடிக்கிறேன்னு நீ  மட்டும்  அந்தப்  பையனை  வெளியில  கூப்பிட்டு போகாம  இருந்திருந்தா… இவ்வளவும்  நடந்திருக்கவே  நடந்திருக்காது ” என  இன்னொரு கன்னமும்  முகிலன்  கைபட்டு  சிவந்தது…  
              பல்லவி  பயந்த  சுபாவம்  இல்லையென்றாலும்  இவர்களின் தோரணையான  பேச்சும்  இவர்களின். பணக்காரத்தன்மையும்  அவளை  சற்று  அல்ல  ரொம்பவே  மிரள  வைத்தது..  
          முகிலன்  மாடியேறும்  பொழுது  குயிலுக்கு  கண்ணைக்  காட்டினான்..  பொறுப்பை  தன்  கையில் எடுத்தவள். பல்லவியை  தனியாக  அழைத்து  அவளை  புடவை. மாற்றி  வர  சொன்னாள்…  
                தன்னிடமிருந்த  நகைகள்  சிலவற்றை  கொடுத்தவள்  சாமியறையில்  விளக்கேற்ற  வைத்தாள்.. இருவரும்  சாமி  கும்பிட்டாலும்  அவர்களின்  வேண்டுதல். ஒன்றே. ஆகும்…  “இருவரும்  பிரிய. வேண்டும்” என்பதே…

Advertisement