Advertisement

முகிலனுக்கும் குயிலுக்கும் மூன்று குழந்தைகள்.. சஷ்டிகா தேவி, ஆதிரன், கிருத்திகா தேவி.. 
                    ஆல்பர்ட்டுக்கும் அன்னத்துக்கும் மூன்று குழந்தைகள்.. தான் ஒற்றை பிள்ளையாய் பிறந்ததாலோ என்னவோ ஆல்பர்ட்டுக்கு இரண்டு குழந்தைகள் போதுமென்று தோன்றவில்லை… மூத்தவன் நரசிம்மன், அடுத்ததாக ஆத்மிகா தேவி, மூன்றாவதாக மயூரன்… 
நரசிம்மன் 
                  சரணுக்கும் ஜீவ தாரணிக்கும் இரண்டு குழந்தைகள்.. ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்… மூத்தவள் மஹதி, அடுத்ததாக தீக்ஷன்… 
மஹதி 
              கார்த்திக் தன்யாவிற்கு இரண்டுமே பெண்.. ஸ்ருதிகா, தான்விகா… 
                 சிவ்வுக்கும் தீபிக்கும் இரண்டுமே ஆண் குழந்தை இரட்டை வாலுங்க ரெண்டும்… சாத்வீகன், ரித்வீகன்
               விக்கிக்கும் பார்கவிக்கும் ஒரு பெண் குழந்தை பிரணவீகா தேவி… அனைவருக்கும் இளையவள்…. வீட்டின் கடைக்குட்டி.. ரெட்டை வாலுங்களுடன் இவள் செய்யும் சேட்டையில் வீடே ரெண்டு படும்.. முகிலனின் செல்லக்குட்டி… 
முதல் அத்தியாயம் 
                இலங்கையில் உள்ள கொழும்பு மாகாணத்தில்  பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் பகுதி அது… கிட்டத்தட்ட இருபது ஏக்கர் பரப்பளவில் இருந்த நான்கு மாடியில் இருந்த பங்களா.. ம்ஹும்ம் பங்களா என்று சொல்ல முடியாத அளவிற்கு பெரிய பேலஸ் என்றே சொல்லலாம்.. 
             அந்தளவிற்கு பெரியதாக தரையெங்கும் வெள்ளை நிறத்தை கொட்டியதைப போல் பளிங்குத்தரை பளபளவென மின்னியது..  ஹாலின் உள்ள அலங்கார பொருட்கள் பிரேத்தியகமாக பல நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டது.. அதன் அழகே அதன் விலையையும் தரத்தையும் நிர்மாணித்தது…
              ரெட் கார்பெட் படிகளில் அலங்கரிக்கப்பட்டு வீட்டின் இருபக்கமும் படிகளில் செல்வதற்கு ஏதுவாக இருந்தது.. உள்ளே வலது புறத்தில் தங்கியிருந்தார் காயத்ரி.. வி.கே.குரூப்ஸ் கம்பெனியின் ஒன் ஆஃப் த பார்ட்னர்.. 
             இவர்களுக்கு ஏகப்பட்ட தொழில்கள்… நறுமணப்  தயாரித்து ஏற்றுமதி செய்வது… தரமான துணிகளை நெய்வது ஏற்றுமதி செய்வது… இதைத்தவிர விவசாயம் செய்தார்கள்.. ஆர்கனிக் விதைகளால் விதைக்கப்பட்ட பழங்கள் காய்கறிகள் உள் நாட்டில் நல்ல வரவேற்பில் இருந்தது..  வி.கே.. காலேஜ்… வி.கே.. ஹாஸ்பிடல் என பல கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் கட்டி தரமான கல்வியையும் மருத்துவத்தையும் கொடுத்து வருகின்றனர்… 
              அந்தத்தளம் முழுவதும் அவருக்காக ஒதுக்கி விடப்பட்டது.. இரண்டாவது தளம் முழுவதும் விருந்தாள்கள் வந்தால் தங்குவதற்கு என ஒதுக்கப்பட்டிருந்தது.. மூன்றாவது தளமும் நான்காவது தளமும் பிரேத்தியேகமாக அமைக்கப்பட்டது அவன் ஒருவனிற்காக.. 
             கதிரவன் தன் வேலையை முடித்து செல்லவும் நிலவு மகள் தன் வேலையை செவ்வென செய்து கொண்டிருந்தாள்.. கிங் சைஸ் பெட்டில் ஷார்ட்ஸ் மற்றும் டீஷர்ட்டில் படுத்திருந்தவனின் உடல் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தது.. 
            அந்த அறையில் ஓடிக் கொண்டிருந்த ஏசியையும் மீறி வேர்த்து ஒழுகியது.. “அப்ப்ப்பாஆஆஆ” என்று அலறியவாறே எழுந்தமர்ந்தவனுக்கு இருபது வருடத்திற்கு முன்பு நடந்தது இப்பொழுதே நடப்பது போல் கண் முன்னே தோன்றி இம்சித்தது.. 
             இன்று நேற்றா இவ்வாறு நடக்கிறது.. கிட்டத்தட்ட இருபது வருஷமாக தன் நெஞ்சினில் பகையை சுமந்து கொண்டிருக்கிறான்.. அவனை அழிக்கும் வரை என்றும் ஓயப்போவதில்லை என்ற வெறியுடன் இருக்கிறான்.. 
            கனவிலிருந்து விழித்தவனுக்கு அடுத்து தூக்கம் வருவதாக தெரியவில்லை.. ரஜாயை தூக்கி எறிந்தவன் நேராக சென்றது நான்காவது மாடியில் இருக்கும் நீச்சல் குளத்திற்கு தான்.. டீஷர்ட்டை கழட்டி எறிந்தவன் தொப்பென நீச்சல் குளத்தில் இறங்கினான்.. 
            இரண்டு மணி நேரம் நீச்சல் குளமே தஞ்சமென இருந்தான்.. எழுந்து வந்தவனுக்கு அடித்துப் போட்டது போல தூக்கம் வர, அப்படியே தன் உடையை கூட மாற்றாமல் படுத்து விட்டான்..  அவனின் நெஞ்சில் எரிந்துக் கொண்டிருக்கும் பகையின் முன்னால் இந்தக்குளிர் என்ன செய்யும் என்ற எண்ணமே இருந்நது..      
                 
              காலையில் ஐந்து மணியளவில் அன்றும் இன்றும் தன் மன்னவனின் நெஞ்சமதில் தஞ்சமான மொழி முதலில் எழுந்தாள்.. தன்னை அணைத்தவாறே படுத்திருந்த தன்னைவனைப் பார்த்ததும் முகம் முழுவதும் ஜொலிக்க.. சிரித்தவாறே அவன் நெற்றியில் முத்தமிட்டு எழுந்தவள் குளித்து முடித்து வெளியே வர.. அப்பொழுது தான் தமயந்தியும் வெளியே வந்தார்..
           “ஆச்சி” என்ற சொல்லில் திரும்பி பார்த்த தமயந்தி.. “என்னாத்தா இன்னைக்கும் நீதான் சிக்கீரம் முழிச்சியாக்கும்.. உன் தங்கச்சிக எல்லாம் இழுத்துப் போத்திட்டு தூங்குறாளுவளாக்கும்.. இப்படியே நீயும் ஒம் புருஷனும் செல்லங் கொடுத்திங்கன்னு வச்சிக்கோங்க.. அதுக எல்லாம் உருப்புட்ட மாதிரி தான்” என திட்டிக் கொண்டே,  பூஜையறைக்கு சென்றவர் அங்கிருந்த முருகனை கூம்பிட்ட பிறகே வேலையை ஆரம்பித்தார்.. 
               அவருக்கு செய்வதற்கென்று பெரியதாக எந்த வேலையும் இல்லை.. ஆனாலும் காலையில் எழுந்தே பழக்கப்பட்டவருக்கு எழாமல் இருக்க முடியவில்லை.. இந்த வயதிலும் அவர் ஆரோக்கியமாக தான் இருந்தார்…
               கங்காவும் மீனாவும் மதியம் இரவு சமையலை பார்த்துக் கொள்வார்கள்… காலை சமையல் மட்டுமே குயிலு பார்த்துக் கொள்வாள்.. ஸ்கூலில் மொத்த பொறுப்பும் இவளும் அன்னமும் எடுத்துக் கொண்டதால்… 
                 முகிலனோ ஆல்பர்ட்டோ அந்த பக்கமே செல்வதில்லை… அப்படியே சென்றாலும் அது அவர்களை பிக்கப் செய்வதற்காக மட்டுமே… ஆனால் குழந்தைகள் அனைத்தும் இங்கேயே தான் வளர்ந்தது… 
             தன் பெற்ற பிள்ளை மாற்றான் பிள்ளை என எந்த பாகுபாடு இல்லாமல்… எந்தப் பிள்ளை தப்பு செய்தாலும் அதை ஒருவர் கண்டித்தால் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள்… முகிலனின் முன்னால் குழந்தையை யாராவது அடித்தால் அவ்வளவு தான் தன் பார்வையால் அவர்களை சுட்டெரித்து விடுவான்…  அதில் பலியாகுவது சரணும் விக்கியும் தான்.. 
               அதற்குள் இட்லி ஊற்றி வைத்தவள், ஒரு அடுப்பில் பருப்பை வேக வைத்து, ஒரு அடுப்பில் காஃபி போடுவதற்காக பாலை வைத்தவள்.. தேங்காயை கீழே அமர்ந்து துருவிக் கொண்டிருந்தாள்.. 
             “ஆச்சி அவுக யாரும் சும்மா இல்லையே… தன்யா பாவம் ஆச்சி… சென்னை கோயம்புத்தூர் திருச்செந்தூர்னு மாத்தி மாத்தி அலையுறா.. நிம்மதியா சாப்பிடுறாளான்னு கூட தெரியல்ல… அலைச்சல் தான் அதிகம்.. அதுல குழந்தையை வாரத்துல இங்க இருக்கிற ரெண்டு நாள் தான் பாத்துக்கிறா.. இங்கேயாவது நிம்மதியா தூங்கட்டுமே ஆச்சி”…. 
     
                சிவ்வுக்கு எந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர் அவனுக்கே தெரியல்ல.. அவனை தனியா விடவும் நம்மளால முடியல… அதுனால தான தீபியையும் அவனுக்கு துணையா அனுப்பி வைக்கிறோம்… 
          “சரி யாத்தா நீ சொன்னது எல்லாம் ஒத்துக்கிறேன்… இன்னும் ரெண்டு பேர் இருக்காளுகளே.. வாயாடி கழுதைங்க.. அன்னமும் பாருவும் அவளுக ரெண்டு பேத்துக்கும் என்னங்குற” என திட்ட கொண்டிருந்தவரை சமாதானப்படுத்தும் நோக்கில் திரும்பியவள் எதிரே ஒருவரின் மேல் ஒருவர் சாய்ந்து தோள்களைப் பிடித்தபடி நின்றிருந்த அன்னத்தையும் பார்கவியையும் பார்த்ததும் பக்கென சிரித்து விட்டாள்.. 
             ஏனெனில் பார்கவி அப்படியே ஆச்சியைப் போல் சைகை செய்து… வாயை அசைத்துக் கொண்டிருந்தாள்… 
     
              
                   குயிலுவின் சிரிப்பில் திரும்பி பார்த்த தமயந்தி… அங்கிருந்த இருவரையும் கழுத்தை நொடித்து திரும்பியவர்… “வந்துட்டாளுக ஜாடிக்கேத்த மூடி.. மூடிக்கேத்த ஜாடி மாதிரி.. எம் பேரனுக இதுக கிட்ட சிக்கிக்கிட்டு என்ன பாடுபடுறானுகளோ… முருகா.. நீதான் இதுக வாயை கொஞ்சம் அடக்கணும் முருகா” என்றவரை பார்த்து சிரித்தவாறே, 
              “ஆச்சி.. ஒம் பேரனுக நிலைமையை நான் வேண்ணா வீடியோ எடுத்து அனுப்புறேன்.. பாக்கீயலா??”… என்ற பாருவை முறைத்துக் கொண்டு சென்றார்.. 
               குயிலின் அருகில் சென்றவர்கள்.. ஆளுக்கொரு வேலையை செய்தனர்.. காலை சமையலை விரைவாக முடித்தவர்கள்.  பால் சூடேற, அனைவருக்கும் காஃபி போட்டு வைத்தாள்.. 
          .       ஜாக்கிங் செல்லும் இளையவர்களுக்கு சத்து மாவு கஞ்சியையும் காய்ச்சி வைத்தவள் அனைவரையும் எழுப்புவதற்குள் படாதபாடு தான் பட்டாள்.. 
          ஒரு வழியாக அனைவருக்கும் காஃபி கொடுத்தவள்.. தன் வேலைகளை பார்த்தபின்பு எட்டு மணியளவில் தன்னுடைய ரூமிற்கு சென்றவள்..  அங்கு முகிலன் இல்லை.. இந்நேரத்திற்கு அவன் எங்கிருப்பான் என தெரிந்தவள்.. 
               நேராக ரூமின் பால்கனிக்கு சென்றவள்… கீழே தோப்பில் பார்க்க.. அங்கே தான் டம்பிள்ஸ் துக்கிக் கொண்டிருந்தான்… அவனை சிறிது நேரம் ரசித்தவளுக்கு ஸ்கூலுக்கு செல்ல நேரமானதால் வேகமாக குளியலறைக்கு சென்றாள்… 
             அதுவரை வீட்டில் இருந்த சாதாரண சேலையை மாற்றியவள்.. ஸ்கை ப்ளூ நிற காட்டன் புடவையில் நீண்டிருந்த கூந்தலை அழகாக பின்னி கொண்டை போட்டு கவ்வி கிளிப்பில் அதை அடக்கியவள்… காதில் எப்பொழுதும் நர்த்தனமாடும் ஜிமிக்கி இன்று அங்குமிங்கும் நடனமாடியபடி இருந்தது.. இடது கையில் ப்ரௌன் நிற வாட்சும் வலது கையில் இரண்டு காப்புகளை அணிந்தவள்..
               “கழுத்தில் தாலியும் முகிலன் முதன் முதலில் மாட்டிய செயினை தவிர எல்லாம் வேறு எந்த நகையும் போடவில்லை”…. 
             “மடிப்பு கலையாமல் கீழே இறங்கி வந்தவளை அனைவரும் சிறு மதிப்புடனும் பயத்துடனே பார்த்தனர்.. ஒருவனின் கண்கள் மட்டும் ரசனையுடன் பார்த்தது.. அவனின் ரசனை கலந்த காதல் பார்வையை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியில் சாதாரணமாக முகத்தை வைத்திருந்தாள்”… 
               முகிலனும் குயிலும் இளையவர்கள் முன்பு அதிகமாக பேசிக் கொள்ள மாட்டார்கள்… தேவைக்கு தான் பேசுவர்.. அதில் கொஞ்சல் பேச்சுக்கள் என்பது சிறிதும் இருக்காது… 
                  வெளியே வந்தவளை பார்த்து இதழ்களில் சிறிய புன்னகையுடன் பார்த்தவன்… “சிம்மா” என்ற குரலில் ஓடி வந்தான்.. நரசிம்மன்.. ஆல்பர்ட் வடநாட்டு சாயலில் இருந்தான்.. ஆனால் நரசிம்மனோ ஆல்பர்ட்டின் தந்தையை உரித்து வைத்திருந்தான்… 
                  “ஆங்… சொல்லுங்க பெரியப்பா” என வேகமாக வந்தவன்.. 
    
               மொழி தயாராகி இருப்பதை பார்த்ததுமே.. ஓஹ் ஸ்கூலுக்கு ரெடியாகிட்டாங்களா… “பெரியம்மா.. இதோ ஒரு நிமிஷம் பைக் சாவி எடுத்துட்டு வந்துடுறேன்” என ஓடியவனை பார்த்து புன்னகைத்தவாறே திரும்பியவனை, 
            “ம்ம்.. ஆம்பளைப் பையன் காலையில எந்திரிச்சி குளிச்சி முடிச்சிட்டான்.. ஆனா இந்த மூத்தக் கழுதையை பாத்தீங்களா??.. இன்னும் தூங்கிட்டு இருக்குது… அதுக்கு துணையா கோவேரிக் கழுதை மாதிரி… அந்த கிருத்தி வேற… இதுங்க ரெண்டும் எப்போதான் உருப்புட போகுதுகளா??”…
              மொழியின் இந்த பாராட்டுக்கெல்லாம்  சொந்தக்காரிகளான சஷ்டிகாவும் கிருத்திகாவும் ஒருவரின் மேல் ஒருவர் கால் போட்டு அணைத்தவாறே படுத்திருந்தனர்… 
                 “மொழி.. பசங்களுக்கு தெரியும் எப்போ எந்திரிக்கனும்னு.. நேத்து சஷ்டிக்கு ஆபீஸ்ல ரொம்ப ஓர்க் அதிகம்.. கிருத்தி அந்த கேஸ்க்காக ரொம்ப அலைஞ்சிட்டு இருக்கா… அதுனால பசங்க காலையில கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கட்டும் ஒன்னும் பிரச்சினையில்லை.” என மகள்களுக்காக போர்க்கோடி தூக்குபவனை பார்த்து உதட்டை சுழித்தவள்… 
              “இவிய எப்போ அவியலெல்லாம் விட்டுக் கொடுத்துருக்காவ… இப்படியே செல்லங் கொடுக்க வேண்டியது. நான் ஏதாவது சொல்லிட்டா போதும். உடனே ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சிற வேண்டியது. நல்ல அப்பா நல்ல பொண்ணுக உருப்புட்ட மாதிரி தான்”… என அங்கலாய்த்து நரசிம்மனின் பின்னால் சென்றாள்… 
                ஒரு தெரு கூட தாண்டியிருக்க மாட்டாள்.. காலையில் ஒரு பையனை போட்டு வெளுத்து எடுத்துக் கொண்டிருந்தாள் மஹதி… மாநிறமாக இருந்தாலும் முகம் முழுவதும் கலையாக இருப்பாள்… 
               அவள் அடிப்பதை பார்த்த சிம்மா, “பாத்தீங்களா பெரிம்மா எவனையோ வெளுத்து வாங்ஙிட்டு இருக்கா… ஏன் பெரிம்மா ஊர்ல ஒருத்தனை விட மாட்டேங்குறா… எவேன் கண்ணுல பட்டாலும் அவனுக்கு அன்னைக்கு சனி தான்… அடில வெளுத்து வாங்கிறா.. இது பொண்ணா இல்லை பிசாசான்னு தெரியல்ல.. வர்றா.. வர்றா பெரிம்மா.. நான் சொன்ன எதையும் அவகிட்ட சொல்லிராதிய”… என்று சற்று பம்மியவாறு பேசியவனை புன்னகையுடன் பார்த்தவள்… 
               “அத்தே… எப்படி இருக்கீய??.. மச்சான் ஏதும் போன் போட்டாவளா??… எல்லாரும் சேர்ந்து ஆதி மச்சான பாரின்க்கு போய் படிச்சா  தான் ஆச்சின்னு அனுப்பி வைச்சிட்டிக” என கழுத்தை நொடித்தவளின் செய்கை அப்படியே காவேரியை ஒற்றுப் போய் இருந்தது.. 
                 “இன்னும் ஒரு மாசத்துல படிப்பை முடிச்சிட்டு வர்றான்… அவன் வந்ததும் உன் கையில ஒப்படைச்சிர்றோம்.. அப்புறம் நீயாச்சி அவனாச்சி… என்ன சந்தோஷமா??” என வெட்கத்தில் சிவந்த கன்னங்களை மறைப்பதற்காகவே ஓடி விட்டாள்… 
                   ஆதிரனுக்கு மஹதிக்கும் பெரியவர்களால் பேசப்பட்டிருந்தாலும்… சிறியவர்களின் சம்மதம் தெரிந்த பின்பே இருவரின் கல்யாணத்திற்கும் சம்மதித்தான் முகில்… ஆதி படிப்பை முடித்து வந்ததும் கல்யாணம் என பேசப்பட்டது..  இன்னும் ஒரு மாசத்தில் கல்யாணம் என கோவிலில் வைத்து முடிவாக்கப்பட்டது.. 
                குயிலு  ஸ்கூலுக்கு சென்றதும் முகிலன் நேராக சென்ற இடம் சஷ்டியின் அறைக்கு தான்… “சஷ்டி.. சஷ்டி” என கதவை தட்டுவதற்குள்… “ஆங்.. அப்பா வர்றேன்” என சோம்பல் முறித்தபடி எழுந்தவள் பக்கத்திலிருந்த கிருத்தியை எட்டி ஒரு மிதித்து விட்டு வெளியே ஓட பார்த்தவளின் ஜடையை ஒரே இழுவில் இழுத்து கட்டிலின் மேல் போட்டவள்.. அவளை ஓங்கி ஒரு மிதித்தாள்… 
              “ஹேய்.. என்னையே… மிதிக்கிறிய்யா???”… 
            “நீ மட்டும் என்னை மிதிச்ச என்றவள் வேகமாக சென்று கதவை திறந்தாள்.. அங்கு நின்றிருந்த முகிலனின் பின்னால் பதுங்கியவாறே நின்றவள்.. அப்பா.. அப்பா.. அடிக்க வர்றாப்பா”… என முகத்தை மட்டும் பாவமாக வைத்து எட்டிப் பார்த்து சொல்ல… 
           “அப்பா.. அவதான் என்னை மிதிச்சிட்டு வந்தாப்பா”. .. 
             “நீதாண்டி முதல்ல மிதிச்ச”.. 
              “நீதாண்டி”… 
               “நீதான்”…. 
               “நீதான்”… 
             இரண்டு பேருமே வாலுப்பசங்க தான்… இப்போ ரெண்டு பேரும் கிளம்புனா தான் வேலைக்கு போக முடியும்.. கிருத்தி நீ கோர்ட்டுக்குப் போக முடியும்… இன்னைக்கு பத்து மணிக்கு .ஹீயரிங் சொன்னல்ல… 
இருக்கு 
             ஆமாப்பா… மறந்தே போயிட்டேன்… இதோ கொஞ்ச நேரத்துல ரெடியாயிடுறேன்… 
இருவரும் கிளம்பவும் இன்னோவா காரை வெளியே எடுத்தவன் அவர்களை கோர்ட்டிலும் ஆபீஸிலும் இறக்கி விட்ட பின் தன் ஆஸ்தான இடமான ஹார்பருக்கு சென்றான்… 

Advertisement