சொர்க்கம் உன்னருகில் 5

   சுஜி  காலை உணவை பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் நால்வரும் பள்ளிக்கு கிளம்பியாக வேண்டும். மதியத்துக்கு சாதம், கத்தரிக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ், ரசம் என செய்து முடித்து, நால்வருக்கும் டப்பாகளில் போட்டு, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி லஞ்ச் பேக்கில் வைத்தாயிற்று. மாமனார், மாமியாருக்கு ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்துவிட்டு பாத்திரங்களை கழுவியும் வைத்தாயிற்று.

      காலை உணவாக இட்லி, தக்காளி சாம்பார், தேங்காய் சட்னி டைனிங் டேபிள் மேல் சாப்பிட வருபவர்களுக்காய் காத்திருந்தன. தோசை கல் அடுப்பின் மீது நானும் ரெடின்னு சொல்லும் விதமாக தயார் நிலையில் இருந்தது.

     சுஜி ஹாலை பார்த்தாள், வெறிச்சோடி இருந்தது. சற்றுமுன் வரை அங்கிருந்த மாமனாரையும், மாமியாரையும் காணோம். தினமும் இது ஒரு கூத்து. “வீடு எங்களது, ஆனா நாங்க இங்க விருந்துக்கு வந்திருக்கோமுன்னு” இதுங்க ரெண்டும் பண்ற அடாவடி இருக்கே தாங்க முடியல, என்று மனசுக்குள் புலம்பியபடி தனது அறைக்கு தானும் குளித்து தயாராக சென்றாள்.

    இதுநாள் வரை அவர்கள் பின்னாலே சென்று “வாங்க சாப்படலாம். சாப்பாட்டை ரெடி பண்ணி வைச்சிட்டேன். ஆறி போயிடும்” ன்னு தினமும் வெத்தலை பாக்கு வச்சி உறவுகாரங்கள விஷேச வீட்டுல கூப்பிடுற மாதிரி கூப்பிடனும். கூப்பிட்டு தங்கம் தங்கமா தாங்கினாலும் “அது சரியில்ல இது சரியில்ல நாங்க பாத்த பொண்ண கட்டியிருந்தா”ன்னு குறைசொல்ல வேண்டியது என வாழ்க்கை நகர்ந்தது.

     “சுஜியும் அவர்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்னு அமைதியாதான் இருந்தா. ஆனா சாது மிரண்டா…. காடு கொள்ளாது…. என்பதை அந்த அப்பாவிகள் அறியவில்லை..

     சுஜி வர கவியும் “அம்மா ஜடை போட்டு விடுங்க” என்று வந்தாள். யோகனும், கவியும் சீருடையுடன் வர “தங்கம் இட்லி போடவா? தோசையா? “ என சுஜி கேட்க, இருவரும் கோரஸாக “இட்லி போதும். நீங்களும் எங்களோட உக்காந்து சாப்பிடுங்க. எங்களுக்கு நல்லா சாப்பிடனுமுன்னு கிளாஸ் எடுக்குறீங்க. ஆனா டைம் இல்லன்னு நீங்க சாப்பிடாம ஸ்கூல் போறிங்க. வாங்க சாப்பிடலாம்” என்றனர்.

      “நீங்க சாப்பிடுங்க. நான் குளிச்சிட்டு வரேன்” என்று சுஜி திரும்ப

     பரமசிவம் அவர்கள் அறையில் இருந்து எட்டிப்பார்க்க, “இட்லி இருக்கு. தோசை வேணுமுன்னா சுட்டு சாப்பிட்டும். தோசை சுடக்கூட தெரியாதா? நீங்க என்ன சமையல்காரியா? போங்கம்மா. நாளைக்கு அப்பா ஏதாவது பணம் நகைன்னு குடுத்தாதான் அவங்க வயிறு நிரம்பும்.”என்றான் யோகன்.

     ஜெய் வந்தவன் சுஜியை தேடிக் கொண்டே“ ஆயா தாத்தா சாப்பிட்டாச்சா கவி?” என்க, “ அவங்க ரூம்லதான் இருக்காங்கப்பா. போய் கேட்டுட்டு வாங்க. இவ்வளவு நேரம் இங்க டேபிள்ல உட்கார்ந்து ஊர பரஞ்சிங்க. நீங்க உள்ள போயிட்டு வர பத்து நிமிஷத்துல என்ன ரகசியம் பேச ரூம் போனாங்க? இட்லி சாம்பார், சடனி எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து வச்ச பின்னாடி புதின்கிட்டையும், டிரம்ப்கிட்டையும் பேச போனாங்களா? வயசுக்கு தகுந்த மாதிரி நடக்க தெரியாதோ? காலையில அம்மா இவங்களுக்கு சமைச்சி வைக்கறது பத்தாதா? வந்து சாப்பிட கெஞ்சனுமா?” என கத்திவிட்டு

     “நேத்து எங்க ஸ்கூலுக்கு டிஎஸ்பி வந்தாரு. குடும்ப வன்முறை பத்தி சொல்லி போன் நம்பர் குடுத்திருக்காரு. ரொம்ப ஓவரா பண்ணிங்க நானே போன் போட்டு அவருக்கு சொல்லிடுவேன் அம்மா அமைதியா போன உங்களுக்கு இளக்காரமா இருக்கா?” என்றான் அழுதுகொண்டே.

      ஜெய் அவன் தோளை தொட தட்டி விட்டான் யோகன்.

       “ஏன்டா பொடி பயலே! என்னடா உங்கம்மா என்ன படிமானம் சொல்லிக் குடுத்திருக்கா?” என்று பரமசிவம் சொல்ல

      “எங்கம்மா எங்கள நல்லாத்தான் வளத்திருக்காங்க. இப்படி ஒட்டுண்ணியா அடுத்தவங்க உழைப்பை சுரண்ட கூடாதுன்னு சொல்லித்தந்திருக்காங்க. “ என்ற கவி “ அண்ணா ஒட்டுண்ணிகள் பத்தி நீங்க சொன்னது சரிதான். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம மாசத்துல இருபத்தஞ்சி நாள் இங்க டேரா போட்டுட்டு கீதாக்கிட்ட கேட்டா கேட்டது கிடைக்குமாம். அப்பா…. இந்த தடவை ஏதாவது பணமோ நகையோ குடுத்திங்க நடக்கறதே வேற. ஒன்னும் கொண்டு போகலன்னா கீதா கவனிப்பு எப்படின்னு பாக்கட்டும் “ என்றாள்.

     சத்தம் கேட்கவும் வேகமாக சேலையை சுற்றி கட்டியபடி வந்த சுஜி “டைம் ஆச்சி கவி, யோகன். சாப்பிட்டாச்சின்னா பேக் எடுத்துட்டு கிளம்புங்க. தோ ரெண்டே நிமிஷம் வந்துடுறேன். என்னோட பையையும் எடுத்து வைங்க.”என்று தலைவாரச் சொன்றாள்.

    “அம்மா நீங்க சாப்பிட போறிங்களா? இல்லையா? நீங்க நல்லா இருக்கப்பவே இந்த ஆட்டம் போடறாங்க. உங்களுக்கு உடம்பு முடியலன்னா அவ்வளவு தான்.” என்றான் யோகன்.

    “நான் ப்ரேக்பாஸ்ட் எடுத்துக்கிட்டேன். கவலைபடாதே நான் ஸ்கூல்ல போய் சாப்பிட்டுபேன்.” என சுஜி பையுடன் வெளியே வண்டி எடுக்க செல்ல

     “ஜெய் கண்ணு நாங்க இன்னைக்கு சாயந்திரம் ஊருக்கு போயிட்டு வர்றோம்பா. பசங்க கண்ணுக்குள்ளயே இருக்காங்க. ஒரு வாரத்துல வந்திடறோம்” என சுசிலா பேச

     சுஜியுடன் கவியும், யோகனும் வண்டியில் ஏறி கிளம்பினர். வண்டி நகர்ந்ததை கவனித்த சுசிலா “என்னடா? பொண்டாட்டி, புள்ளைங்கள பேச விட்டு வேடிக்கை பார்க்கறயா? கீதாவுக்கு பணமோ நகையோ குடுக்க முடியுமா முடியாதா?” என்று திட்ட

     “இவனே அவ கால்ல விழுந்துகிடக்கான். அவங்கிட்ட போய் வேதம் ஓதிக்கிட்டிருக்க. டேய் அவள வீட்டவிட்டு துரத்தியடி. அப்பமூட்டுல பத்து நாளைக்கு இருக்கறதுக்குள்ள அவ அண்ணன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லி தொரத்தியடிக்க சொல்லுவோம் அப்புறம் கம்முனு பேசாம கிடப்பா. “ பரமசிவம் பேச

    ஜெய் திருதிருவென விழித்தபடி வாசலை பார்க்க உள்ளே வந்த சுஜி அங்கே இருந்த பையை எடுத்துச் சென்றாள்.

     ஜெய் தன் பையை எடுத்துக் கொண்டு “சுஜி அவங்க ஏதோ பேசிட்டு போறாங்க. நீ மனசுல ஒன்னும் வச்சிக்காத. அவங்களுக்கு வயசாயிடுச்சி அதனால தாது கெட்டுப்போச்சி. எதை பேசனும் எதை பேசக்கூடாதுன்னு தெரியாம பேசறாங்க. நீங்க மூணுபேரும் இல்லாம நானில்லை. அது அவங்களுக்கு புரியல. ரெண்டு பேரும் சாயங்காலம் ஊருக்கு போறாங்களாம். நீ எப்பவும் போல  வந்துடு.” என பேசியவாறு வர சுஜி ஒரு நிமிஷம் நின்னு நேரா ஜெய்யை பார்த்துட்டு எதுவும் பேசாமல் வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்தாள்.

   ஜெய்  “கவி, யோகா வாங்க. இன்னைக்கு நான் உங்கள  ஸ்கூல்ல விடறேன்.” சுஜி தலையசைக்க ஜெய் வண்டியில் ஏறினர் இருவரும்.

     “ஏன் கவி என்கூட வரக்கூட அம்மாகிட்ட பர்மிசன் வாங்கனுமா?” மக்களை பார்த்துக்கொண்டே ஜெய் கேட்க

     “உங்கள நம்பி வந்த அம்மாவை சந்தோசமா நீங்க பாத்துக்கிற மாதிரி எங்களையும் பாத்துக்குவிங்கன்னு நாங்க நம்பறோம்பா” என்றான் யோகன்.

     கவியோ “ இப்ப உங்கம்மா இவங்கள எல்லாம் விட்டுட்டு வந்துடுன்னு கூப்பிட்டா போயிடுவிங்களாப்பா? உங்க வீட்ல அதைதான் எதிர்பார்க்கறாங்க. பாசத்தை காட்டி மோசம் பண்ணாதிங்கப்பா”. என்றாள்

    “அப்பா அப்படியா நடந்துக்கிறேன்? உங்க மேல பாசமில்லாமையா நீங்க கேட்டதெல்லாம் வாங்கி தர்றேன். தாத்தா, பாட்டி வயசானவங்க. அவங்கள நாம தான பாத்துக்கனும்? அதுக்கு போய் நீங்க கோவப்படறிங்க.”

     “எப்படியெப்படி எனக்கு எங்கம்மா பர்த்டேக்கு வாங்கித் தந்த செயின வாங்கி அந்த பொறம்போக்கு கீதாவுக்கு குடுக்கறதுதான் பாசமா? அப்ப பெரியப்பா வாங்கின நிலத்தை அண்ணணுக்கு அவங்ககிட்ட இருந்து வாங்கிக் குடுங்க பாக்கலாம்? வரவர நீங்க கூட எங்கள ஏமாத்த பாக்கற மாதிரிதான் தெரியுது. அம்மாதான் இன்னுமும் உங்கள நம்பறாங்க. என் பிரண்ட் அப்பா லாயர். இதுவரை எந்த கேசிலயும் தோத்ததில்லையாம். நான் அவர் நம்பரை வாங்கி வச்சிருக்கேன்.” கவி கூற ஜெய்யின் உலகமே இருண்டது.

     சுஜி எதையும் குழந்தைகளிடம் சொல்லாமலே இவ்ளோ கோபம் இவர்களிடம். இன்னும் நடந்ததெல்லாம் தெரிந்தால் கொஞ்சநஞ்ச பாசமும் பறந்துவிடும். ஜெய்யின் நிலையோ அந்தோ பரிதாபம்!!!

      அங்கே வீட்டிலே சுசிலா பரமசிவத்திடம் “ கொஞ்சம்கூட அக்கம்பக்கம் பாக்காம இப்படித்தான் பேசறதா? ஜெய்கிட்ட எப்பவும் பேசற மாதிரி அவ இருக்கறப்ப பேசிட்டிங்க. அந்த குட்டி சாத்தான்களும் கேட்டுடுச்சிங்க. ஒரு ரெண்டு மூணுநாளு ஆறப்போட்டு பேசுவோம்.” என்க

      “இரு அவசரபடாத, யோகன் பங்குக்கு அங்கையும் நிலம் பிரியும்.. இங்கையும் பக்கத்துல இருக்க வீட்டை வாங்குனா நாளைக்கு பவன், கவின விட இவன் பல மடங்கு சொத்துகாரனா ஆயிடுவான். அதனால ஜெய்கிட்ட விடாம பேசிக்கிட்டே இருந்தாதான் காரியம் நடக்கும். இப்போ வா சாப்பிடலாம்”. என்ற பரமசிவம்

    “ அவ வந்ததும் ஜெய் வர்றதுக்குள்ள அவன்கிட்ட சொல்லாம நாம கிளம்பி ஊருக்கு போயிடலாம். அவங்கிட்ட ஒரு நாலு நாள் பேசாத. உங்கிட்ட பேசாம அவனால இருக்க முடியாது. அவன் சமாதானப்படுத்த வரும்போது குறைந்தது இருபது பவுன் இல்லை இருபது லட்சமாவது யேன் சாவு மொதலா வைச்சிட்டு போவதான் கேக்கறேன்னு கண்ணு கலங்கி சொல்லு. நீ சொல்லறதெல்லாம் அவன் கேப்பான்”, என்றும் சொல்லி தன் மகனின் நலவாழ்வுக்கு குழிதோண்டினார் அந்த நல்ல? தகப்பன்.

      “சுஜி உள்ள வராம செல்போன்ல என்ன பாத்துக்கிட்டு இருக்க?” காயு கேட்டுக்கொண்டே வர

       “காயு ஜெய்யை ஏதோ சொல்லி கார்னர் பண்றாங்க. அதான் அதை பற்றி ஏதாவது பேசறாங்களான்னு பாத்தா…. ஆத்தி இவங்க எங்கள நடுத்தெருவில் தான் நிறுத்துவாங்க போல. இப்போ வாங்க வேண்டிய தொகையை முடிவு பண்ணிட்டாங்க போல. இருபது பவுன் அல்லது இருபது லட்சம்,” சுஜி வெறுப்புடன் சொல்ல

       காயு “யார் முடிவு செஞ்சாங்க சொர்ணக்காவா? மிக்சர் பார்ட்டியா?” என்றவள்

     “சிசி காமிராவை வச்சதை ஜெய் உனக்கு இன்னும் சொல்லலியா? நீ இதை பாக்கறது தெரியுமா?” என்க

      “என்னோட யூகம் சரின்னா அதை பற்றின நினைவே ஜெய்க்கு இல்லை. இன்னைக்கி என்ன நடக்குமோ? யாரு யாரு மண்டைய உடைப்பாங்களோன்னு பயந்துகிட்டே இருக்க மாதிரி தான் தெரியுது.” என்றவள்

      “நம்ம டீச்சர் டிரைனிங் படிக்கும் போது அவங்க பிரெண்ட்ஸ் கூட ஜாலியா இருந்த ஜெய் இல்ல இப்ப. எப்பவும் ரெஸ்ட்லெஸ்ஸாவே இருக்காரு.”என்றாள்.

      மாலையில் யோகனையும், கவியையும் கூட்டிக்கொண்டு  தங்கள் வீடிருக்கும் தெரு கடந்து செல்ல “அம்மா! நம்ம வீடு இங்க இருக்கு”, கவி சொல்ல “அம்மா காயு அத்தை வீட்டுக்கு போறோமா? ஐ ஜாலி! நிலா அக்கா வந்திருப்பாங்களா? நைனோ கிளாக் வரைக்கும் இங்க இருந்துட்டு போலாம்மா” என்றான் யோகன்.

     “தங்கம் எத்தனை நாளைக்கு இப்படி அத்தை வீட்ல ஒளிஞ்சிக்க முடியும்? அத்தை இன்னைக்கு ஸ்பெஷல் டின்னர் பண்றாங்க. நிலாக்காவும், நித்து  அண்ணாவும் வந்திருக்காங்க. இப்போ அஞ்சு மணி ஏழு மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடணும்.. ஓகே?” கேட்ட சுஜியிடம்

      “யெஸ் மா, ஷார்ப்பா செவனுக்கு கிளம்பிடுவோம்’ என்றனர் கோரஸாக.

    நிலாவும், நித்து (நித்திலா, நித்திலன்)இருவரும் காயுவின் வாரிசுகள். இருவரும் ஐஐடியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

     சுஜி வீட்டிலோ சுசிலாவும், பரமசிவமும்  முடிந்தவரை தேவையானதை??? எல்லாம் பேக் செய்து விட்டு சுஜிக்காக காத்திருந்தனர். சுஜியிடம் சொல்லிவிட்டு போவதற்கில்லை அவள் வாங்கி வரும் ஸ்நேக்ஸூக்கு காத்திருந்தனர்.

    சுஜி சமையலறையில் காயு உடன் சமைத்துக்கொண்டிருந்தாள். மரவள்ளி கிழங்கை கண்டு நால்வரும் “வடை போட்டுத்தாங்க ப்ளீஸ்” என்க

    “இட்ஸ் சச் எ லாங் பிராஸஸ். பருப்பை ஊற வச்சி ஆட்டி? நவ் ஐ கான்ட்” என காயு சலிக்க

    “சுஜிமா இருக்க பயமேன்” என்ற கவி “நித்துணா நீங்க இந்த கிழங்க பட்டையை உரிச்சி கழுவி வைங்க. நிலாக்கா நீங்க இதை பீட்ரூட் துருவியில தூளா துருவுங்க. அத்தை பெரிய வெங்காய டிரேவை இங்க தந்துட்டு மாமா கூப்பிட்டாங்க போங்க” என்றாள்

    காயு வெளியே வர யோகன் “கவி அனுப்புனாளா உங்கள? நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். அம்மாவுக்கு இப்போ ரொம்ப டார்ச்சர் குடுக்கறாங்க ரெண்டு இம்சைகளும். அம்மாவும் கம்முன்னு இருக்காங்க. எங்களால முடியல. அம்மாவுக்கு தெரியாம ஏதாவது பண்ண முடியுமா? ப்ளீஸ் ஹெல்ப் அஸ்” என்றான் கண்ணீருடன்.

    “ஓகே! பிளான் பண்ணி சம்பவம் பண்ணலாம். இப்போ வடை போடலாம் வா.”

    எண்ணெய் வாணலியில் காய்ந்து கொண்டிருக்க வடை மாவு தயாராகிக் கொண்டிருந்தது. நிலா கிழங்கை துருவித்தர அதனுடன் நறுக்கிய வெங்காயம், சோம்பு, அரைத்த இஞ்சி போதுமான அளவு கடலைமாவு, மிளகாய் தூள், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்த சுஜி வடையாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து கொடுத்தாள்.

     “யோகன் உங்கிட்ட ஹெல்ப் கேட்டானா? எதை தின்னா பித்தம் தெளியும் ங்கிற நிலையில அவன வச்சிருக்கோம். ஓகே நாங்க கிளம்பறோம்” என்றாள் சுஜி.

    காயு பலகாரத்தை மட்டும் பையில் போட்டு கொண்டு வர “ காயு நாங்க இங்கையே  சாப்பிட்டுட்டோம். வேணாம். இந்த வடையை ப்ரிட்ஜில் வைத்து நாளைக்கு சாப்பிடலாம். பசங்களுக்கு கொடு.” எனச் சொல்லி வண்டி எடுக்க யோகனும் கவியும் “பை கய்ஸ், வீ வில் மீட் சூன்” எனக் கிளம்பினர்.

   ஊருக்கு போனாங்களா சுசிலாவும் பரமசிவமும்? கீதாவின் வரவேற்பு, கவனிப்பு எப்படி? காயு, யோகனின் திட்டம் வெற்றி பெற்றதா?  சிசிடீவி பூட்டேஜ் பார்த்தபின் ஜெய்யின் முடிவுதான் என்ன? வரும் நாட்களில் காணலாம் வாருங்கள்.