கீதா , ஜெய் கல்யாணத்திற்கு முன் சுஜியிடம் தான் பேசியதாகவும் சுஜி எதுவும் பேசாமல் வைத்து விட்டாள்., பின்னாளில் அவள் ஜெய்யை பிரிந்தால் அவன் வாழ்வு பணமின்றி வீணாகாமல் தடுக்கவே இப்படி செய்ததாக சொல்ல, சூலாயுதம் ஏந்திய காளியாய் மாறினாள் சுஜி.
“ஏய் இதுக்குமேல ஒரு வார்த்தை நீ பேசினாலும் மறுபடியும் பேச வாய் இருக்காது பாத்துக்க. நீயெல்லாம் மனுஷ ஜென்மமா? நீ அததான் பேசினியா? ச்சை உன் முகத்தில முழித்தாலும் பாவம்தான் சேரும். ஒரு ஒழுக்கமானவங்க பேசற பேச்சையா இந்தம்மா பேசினா இவகூட திரும்பி பேச.” சுஜி கோபத்தில் கொந்தளிக்க
“என்ன மரியாதை இல்லாம பேசற? நான் என்ன தப்பா பேசிட்டேன். என் கொழுந்தன் வேற ஒரு பொண்ண லவ் பண்ணினான். அவள விட்டுட்டு உன் கட்டிக்கிறான் பாத்து இருந்துக்க. இததான சொன்னேன்.” கீதா சொல்ல
“என் தம்பி உங்கிட்ட எப்ப கடைசியா பேசினான்?” விஜயன் கேக்க
“அவன் கல்யாணத்துக்கு முன்னிருந்தே என்கிட்ட பேசல. என்னை மதிக்கல. நீங்க ஏன்னு கேக்கவே இல்ல?” இப்பவும் புகார் படிக்க
“உன்னை என் தம்பி தப்பா பாத்தானா? உங்கிட்ட தப்பா நடந்துகிட்டானா? எங்கப்பா தப்பா பேசினாரா?” விஜயன் விசாரிக்க
“ஐய்யோ இது என்னங்க இப்படி சொல்றீங்க? உங்க தங்க கம்பிதான் என்னை திரும்பிகூட பாக்க மாட்டானே. உங்கப்பா எனக்கும் அப்பாதானே. எப்படி தப்பா பேசுவாரு? யாரு இப்படி உங்ககிட்ட அபாண்டமா பழி போட்டது? இவளா நான் அப்பவே சொன்னேன் யாரு கேட்டா?” கீதா அப்பாவியாய் கேக்க
“உன் ரீலு அந்து ரொம்ப நாளு ஆச்சி கீதா. என்ன பாக்கிற இப்ப மாமா சொன்னதெல்லாம் நீ என்கிட்ட எங்க கல்யாணத்திற்கு முன்னால சொன்னது.” சுஜி திருப்பி குடுக்க
“நானெங்கே அப்படி பேசினேன்? இவ நம்மள பிரிக்க இப்படி பொய் சொல்லறாங்க. நீங்க நம்பாதிங்க” கீதா பதறி சொல்ல
“நான் சொன்னத நல்லா கேக்கலியா நீயி? உன் ரீலு அந்துபோச்சி. புரியலியா? நீ இத சொல்லறப்போ இவங்களோட நான் ப்ரஸ்ல பத்திரிக்கை மாடல் பாத்துக்கிட்டு இருந்தேன். நீ பேசுனதை இவங்க ரெண்டு பேரும் கேட்டாங்க. ஆனா ஜெய்யை கேவலப்படுத்தறேன்னு உன்னை நீயே கேவலபடுத்திக்கிட்ட அன்னைக்கு. அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேருமே உன்னை திரும்பிகூட பாத்திருக்க மாட்டாங்களே?” சுஜி கேக்க
தன்னை விஜயன் நெருங்காத காரணம் தெரிய அதிர்ந்து போனாள் கீதா. ஒவ்வொரு முறையும் ஏதேனும் காரணம் கூறியிருக்க கீதாவுக்கு அனைவரின் முன்னும் நிற்கவே சங்கடமாக இருந்தது.
“ அப்போ உனக்கு காரியம் ஆக யாரோடவும் உன்னை சேத்துவச்சி நீயே பேசிடுவ இல்ல?” என்ற கீதாவின் தங்கை, தன் கணவன் கோபாலிடம்
“இனிமே இவ நம்ம வீட்டுக்கு வந்த நீங்க வெளிய போயிடுங்க. கொஞ்சம் ஏமாந்தா நீங்க அவ கைய புடிச்சி இழுத்ததா சொன்னாலும் சொல்லுவா” சொல்ல
“நான் அவ்வளவு மோசமானவளா? நீயே இப்படி பேசினா என் கொழுந்தன் பொண்டாட்டி என்னென்ன பேசுவா? அவ சொன்னா நீ நம்பிடுவியா? நான் அப்படிபட்டவளா?” கீதா கேக்க
“ அப்ப எங்க வீட்டு ஆம்பளங்க அப்படியா? நீ பேசுனதை நானும் கேட்டுட்டேன்னு சுஜி சொல்லியும் நீ பசப்பற. கவின் நீ ஊருக்கு போகிறபோது இவளையும் கூட்டிட்டு போயிடு ஆனா எதுக்கும் நீ ஜாக்கிரதையா இருந்துக்க. உங்கம்மா உன்னையும் யார்கூடவாவது சேத்துவச்சி பேசிடபோறா? அப்புறம் தர்மசங்கடமா போயிடும்” விஜயன் சொல்ல
கீதாவுக்கு அவமானமாய் இருந்தது. இவ்வளவு நாள் தான் சொன்ன பொய்கள், செஞ்ச தில்லுமுல்லுகள் யாருக்கும் தெரிய வராது. தன் கணவன் தன்னை நம்புவான். தான் பணம், நகையென நிறைய கொடுத்திருப்பதால் தன்னை தாங்குவான். அவனை வைத்து கொழுந்தனை சமாளித்தால் போதும். மாமனார், மாமியாரை வழக்கம் போல தலையாட்ட வைத்திடலாம். சுஜி சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள். தன் ஆதிக்கமே கடைசிவரை தொடருமென நினைத்திருந்தாள். ஆனால் இதை சுஜி தகர்த்திருந்தாள். எப்படி? ஏன்?
“சுஜி முதலிலேயே இவளபத்தி தெரிஞ்சும் எப்படி அமைதியா இருந்த? விஜி அண்ணாவுக்கு தெரிஞ்சும் ஏன் கம்முன்னு இருந்தாங்க? நீ கொஞ்சம் முன்ன சொன்னியே உங்க வார்த்தைக்காக இத்தனை நாள் பொறுமையா இருந்தேன்னு, அதுக்கு என்ன அர்த்தம்? கேட்ட காயு
“இங்கிருக்கிற யாராவது அந்தம்மாவுக்கு மரியாதை தர சொன்னாங்களா? சொன்னவங்கள கூட்டிட்டு போக சொல்லு அந்தம்மாவ.” விஜயன் சலிப்புடன் சொல்ல
“அந்த போன் பேச்ச கேட்ட மாமா அது உண்மையில்லன்னு உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ மா. நான் உங்கள தனியா அனுப்பிடுறேன். முடிஞ்ச அளவு உன் விசயத்துல நேரடியா தலையிடாம பாத்துக்கிறேன்னு சொன்னாரு. அவர் சொன்னதுக்காக இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்” என்றாள் சுஜி.
“சரிப்பா கவினு நீ எங்கிட்டையும் காலேஜ் பீஸ், மெஸ் பீஸ், செலவுக்கு பணம் வாங்கின. உன் சித்தப்பாகிட்டையும் வாங்கின. உங்கம்மாவும் உனக்குன்னு வாங்கினா. அப்ப யாரு பணத்தை காலேஜ்ல கட்டின? எங்கிட்ட வாங்கினதையா? ஜெய்கிட்ட வாங்கினதையா? இல்ல உங்கம்மா வாங்கினதையா? சொல்லுப்பா சொல்லு” என விஜயன் கேக்க
“அது அப்பா…சித்தப்பா பணம்தான் எனக்கு. மத்ததெல்லாம் அம்மா வாங்கிக்குவாங்க. கேட்டா இன்னும் பாகம் பிரிக்கல. உங்கப்பா காட்டுல விளையறதெல்லாம் பொதுவுல வைக்கறாரில்ல, அது போல அவங்க சம்பளமும் பொதுன்னு சொல்லுவாங்க. அதனால அவர்கிட்ட வாங்கினேன்” என கவின் கூனிக்குறுகி சொல்ல
“டேய் கூமுட்டைகளா… உங்களுக்கு ஒன்னு சொல்லட்டா? எனக்கு உங்கம்மா பண்ற மொல்லமாரித்தனம் எல்லாம் பவன் பிறந்தப்பவே தெரியும். ஆனாலும் இப்ப நீ சொன்னயே விட்டுகுடுக்கக் கூடாதுன்னு அந்த கருமத்துக்காகதான் பொறுத்து போனேன். ஆனா இவ ஆணவத்துல அளவுமீறி போறதாலதான் இப்பவும் இதை எல்லாரு முன்னாலயும் சொல்றேன்.” விஜயன் கோபமாக சொல்ல
“எப்படியெப்படி அவங்க சம்பளம் பொது அதுல உங்கம்மா சொத்து சேத்தா அது உன்னது. இந்தலட்சணத்துல கொள்ளையடிச்ச உங்கம்மா நியாயஸ்தி! நான் அநியாயம் பண்றேன். நல்லா வளத்திருக்காடா உங்கம்மா உன்னைய” விஜயன் புலம்ப
“அப்பா சித்தப்பா குடுத்தத வட்டி போட்டு நாம குடுத்திடலாம். என்கிட்ட சொத்து, பணம் பத்தி யாரும் பேசினதில்லை அம்மா பேசவும் அவங்க சொன்னதெல்லாம் உண்மையின்னு நம்பிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்றவன்
“அவங்க அனாதையா நிக்கிறதுபோல தோணுச்சி அதான் உங்ககிட்ட அப்படி கேட்டுட்டேன். அவங்க எப்படியோ, ஆனா என்னால அவங்க பொய்யா போனத நம்பமுடியல, ஏத்துக்கவும் முடியல. எங்கமேல வச்சிருந்த அன்பால இப்படி செஞ்சிருப்பாங்களா?” கேள்வி எழுப்பினான் கவின்.
“நம்ம வீட்ல இருக்கிற மளிகை, ஸ்நேக்ஸ், டிரஸ், வாராவாரம் நாம தின்ன கறிகூட அவங்க உழைப்புல வாங்கி வந்தது. ஆனா அவங்க வந்தா என்ன சாப்பிட இருக்குமுன்னு உனக்கு தெரியாதா? நீ இதயெல்லாம் எங்க பாத்த? நீ திருந்திட்டையா? அப்பா இவன் குணம் அம்மாமாதிரி. இவனும் காரியம் ஆகனுமுன்னா பகல்வேசம் போடுவான். இவன நம்பாதிங்க” என்றான் ஓரமாய் நின்றிருந்த பவன். நியாயவாதி அவன்
பவன்தான் பாதிக்கு பாதி நடந்து கொண்டிருக்கும் விசயங்களை கண்டுபிடித்தவன். தன் தந்தைக்கு துணை நிற்பவன்.
“பவன் யாரிந்தாலும் நம்ம அம்மா போல நமக்கு வராது. நம்ப அம்மா நமக்கு நல்லதுதான் செய்வாங்க. நாம நம்ம அம்மா பக்கம்தான் நிக்கனும்.” கவின் அடுக்கிக்கிட்டே போக
“அதுக்கு அவங்க நல்லவங்களா யாருக்கும் துரோகம் பண்ணாதவங்களா இருக்கனும். நானும் எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து இன்னைக்கு திருந்திடுவாங்க, நாளைக்கு திருந்திடுவாங்கன்னு நம்பி நம்பி ஏமாந்ததுதான் மிச்சம்.”
“ சுஜிமா கல்யாணம் முடிந்து வந்தபோது நீ ஸ்கூல் போயிடுவ இங்க நடந்ததெல்லாம் எனக்கு மட்டுமே தெரியும். கீதாமாவும் ஆயாவும் சேந்து கொஞ்சமா கொடுமை செஞ்சாங்க?”
“ நாளைக்கு உன் வொய்ப்க்கும் இதே கதிதான். இத்தனை நாள் சித்தப்பாவை, சித்தியை சுரண்டியது போல உன்னையோ இல்ல என்னையோ பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இப்போ இந்த பிரச்சனை வர திடீர் காரணம் எது தெரியுமா?”
“ சித்தி கவிக்கு ஒரு பச்சைகல் ஆரம் வாங்கிட்டாங்க. அவங்க பொண்ணுக்கு அவங்க காசுல வாங்குன ஆரம் கீதாமா கண்ணை உறுத்தி அத தானே போட்டுக்கனும் அப்படின்னு பேராசை தலை விரிச்சாடிச்சி, அதுக்கு ஆயா, தாத்தாவை மிரட்டி அந்த நகையை வாங்கிக்கிட்டு வந்தே ஆகனுமுன்னு கட்டளை போட்டாங்க. அந்த மிரட்டல், இவங்களோட அநாகரிக பேச்சு இதெல்லாம்தான் இவங்க இத்தனை நாள் மறைச்சதெல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துடுச்சி.” என்ற பவன்
“சுஜிமாவை நான் நாலாவதோ, அஞ்சாவதோ படிக்கறப்போ கேட்டது எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. யோகனுக்கு தாத்தாவீடு போட்ட எல்லா நகையும் கீதாமா வாங்கி அவங்க பீரோல வச்சிக்கிட்டாங்க.. இனி இது என்னோடதுன்னு. சுஜிமாவ பாத்து எனக்கே அழுகையா வந்துச்சி. சுஜிமா ஏன் அதை குடுத்திங்க அது யோகனுக்கு போட்டதுன்னு நான் கேக்க, அத நீ போட்டா என்ன யோகன் போட்டா என்ன ரெண்டும் ஒன்னுதான்னு. நீ வேற யோகன் வேறையா எனக்கு அப்படின்னு கேட்டாங்க. இதுதான் எங்க சுஜிமா. உன்னபோல ஆளுங்களுக்கு எப்படி அவங்க அருமை புரியும்? நக்குற நாயிக்கு தெரியுமா செக்கு எது சிவலிங்கம் எதுன்னு?” என்றான்.
“பவன் விடுப்பா. இங்கேயே நம்ம முடிவ சொல்லிடலாம். நான் புதுசா வாங்கின நிலத்தையும் வீட்டு மனைகளையும் ஜெய் பேருல எழுதிட்டேன். இது இவ வாங்கின பணத்துக்கு ஈடா கொடுத்தது.” விஜயன் விளக்க
“என்ன இவன் அஞ்சும், பத்துமா குடுத்ததுக்கு நிலமும் மனையுமா?” கீதா வேகமாக எழுந்துவர
“பவன் நான் சொன்னதை எத்தனை காப்பி ஜெராக்ஸ் போட்ட? போட்டதை எடுத்து ஆளுக்கு ஒன்னா குடு. படிக்க தெரிஞ்சவுங்க இங்கியே பாக்கட்டும். இல்ல வீட்டுக்கு போயி யாரிடமாவது கொடுத்து தெரிஞ்சிகட்டும். இது கீதாவோட பேங்க் ஸ்டேட்மண்ட். கணக்குபோட்டா நானு முழு சொத்தையும் குடுக்கனும். மாசாமாசம் சுஜி, ஜெய் அக்கவுண்ட்ல இருந்து வந்த பணத்தை கூட்டி பாருங்க” என விஜயன் சொல்ல
“அடியே நீ கம்முனு குடுக்கும்போதே நான் யோசிச்சிருக்கனும். குடுக்கறது போல குடுத்து இப்ப மொத்தத்தையும் புடுங்கீட்டையே. நீ நல்லா இருப்பையா?” கீதா சாபமிட
“அப்பா மேல நீங்க கோபப்பட்டு உங்கம்மா வீட்டுக்கு போயிட்டா சொத்தும் இல்லாம நீங்களும் இல்லாம அப்பா கஷ்டப்படக் கூடாதுனு நாந்தான் இந்த ஐடியா குடுத்தேன்மா” பவன் கூற கொலைவெறியுடன் அவனை பார்த்தாள் கீதா.
“எங்கப்பா வாங்கின நிலத்தை ரெண்டா பிரிச்சி எனக்கும் ஜெயனுக்கும் எழுதிக்கிட்டோம். இனி என்னோட அப்பாவும் அம்மாவும் என்னோடதான் இருப்பாங்க. ஜெய் பதினேழு வருசம் அவங்கள பாத்துகிட்டான். இனி அவங்க கடைசி காலம் வரை என்கூடயே இருக்கட்டும். கீதா எங்கம்மாகிட்ட வாங்கிய எங்கம்மா நகைகளை அவளே வச்சிக்கட்டும். அப்பாகிட்ட வாங்கின அவரோட பென்ஷன் காசும் அவளுக்கே. அது அவளோடவே கடைசிவரைக்கும் இருக்கட்டும். இனி அப்பாவோட பென்ஷன் பணம் பொதுவுல கணக்கு காட்டப்படனும். கீதா என்னை பெத்தவங்ககிட்ட வாங்கின பணத்துக்கு, நகைக்கு ஈடா எங்கப்பாவோட பூர்வீக வீடூ சுஜிக்கு எழுதி கொடுத்தாச்சி.” விஜயன் முடிக்க கீதாவின் சொந்தம் எல்லோரும்
“விஜிப்பா, விஜிப்பா எல்லாருக்கும் ஐஸ்கிரீம் கொண்டுவர சொல்லவா? நித்துண்ணா கேட்டாங்க.” கவி கோவிலுக்கு வெளியிலிருந்து ஓடி வர
“கவிமா, நில்லு மெதுவா போ. விழுந்துடபோற” கத்திக்கொண்டே யோகன் பின்னால் வேகமாக வர, அவனுடன் நிலா, நித்து, கீதாவின் தங்கை குழந்தைகள், தம்பி குழந்தைகள் இன்னும் சில உறவினரின் வாரிசுகளும் வந்தனர்
இவ்வளவு நேரம் இவர்கள் எங்கிருந்தனர் அனைவரும் திகைத்தனர்.
“நாங்க இங்க இருக்க கடைகளை சுத்திப் பாத்துட்டு வந்தோம். ஐஸ்கிரீம் கடையும் இருக்கு. உங்கள விட்டுட்டு நாங்க மட்டும் எப்படி சாப்பிட? உங்க எல்லாருக்கும் கொண்டுவர சொல்லலாமா? விஜிப்பா சொல்லுங்க..” சுஜியை பார்க்காமல் கவி கேக்க
“உங்க சுஜிமாவை கேளுங்க கவி. பணம் உங்கம்மாகிட்டதான் வாங்கனும். கேளு கவி” என விஜயன் சொல்ல
விஜயனின் காதில் கவி “அம்மா நார்மலா இருந்தா இந்நேரம் அவங்களே இதெல்லாம் வாங்கி தந்திருப்பாங்க. இப்ப வேணாம் சொல்லிட்டா….. நோ… அதான் நீங்க இருக்கிங்களே சொல்லுங்க விஜிப்பா எத்தனை கொண்டு வரச்சொல்ல?”
“நித்து இங்க கொண்டு வர்றேனு சொன்னாங்களா?” சுஜி கேக்க
“அத்தை சின்ன மேடம் போய் விசாரிச்சிட்டு வந்துட்டாங்க. நாங்க அங்க ஆடியன்ஸா நின்னோம். எண்ணிக்கை சொன்னா கொண்டு வருவாங்க” என நித்திலன் சொல்ல
அதற்குள் “நித்தண்ணா ஐம்பது பேர் இருக்கோம்.. நாலு ப்ளேவர் இருக்கு சொன்னாங்க. நாங்க குட்டீஸ் பத்து பேர் இருக்கோம். ஸோ ஒவ்வொரு ப்ளேவரிலும் பதினைந்து சொல்லுங்க. வந்து அப்பாகிட்ட பணம் வாங்கிக்க சொல்லுங்க.” கவி உத்தரவிட விஜயன் தலையாட்ட நித்து கடைக்காரரை அழைத்து ஐஸ்கிரீம் கொண்டு வரச்சொன்னான்.
“ஜெய் எங்களுக்கு ட்ரீட் வைக்கனும். இப்பவும் நாங்க இல்லாம நீயா சொல்லல. சுஜிமா நீங்க தனியாஇருக்கும் போதாவது பேசறானா? அங்கேயும் மௌனவிரதமா?” நண்பர்கள் ஜெய்யை கிண்டல் செய்தனர்.
சுஜியிடம் ஜெய் தரும் வாக்குமூலத்துடன் ஓரிரு நாளில் சந்திப்போம் தோழமைகளே.