சுசிலாவும், பரமசிவம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர். தூக்கம் எப்படி வரும். சுசிலா தனக்காக பணம் நகையென கொஞ்சம் தனியே எடுத்து வைத்திருந்தார். எல்லாம் போச்சி.
“ஏங்க எப்படி எல்லாமும் விஜிக்கு தெரியும்? இந்த கடங்காரி சொல்லியிருப்பாளா? அவ வந்த நாளா அவள அடக்க நா தலையால தண்ணீ குடிக்கறேன் முடியல. விஜி எல்லாத்தையும் அவன் நெனச்சது போல முடிக்கட்டும். அப்புறமா நா யாருன்னு அவளுக்கு காட்றேன். ஜெய் அவள கொஞ்சிகிட்டு வச்சிருக்கான்னு ரொம்ப தான் குதிச்சிகிட்டிருக்கிறா. அப்படியில்ல அவன் உனக்கு முன்னாடியே ஒரு புள்ளய காதலிச்சான். அவள எனக்காக விட்டுட்டு உன்ன கட்டிகிட்டான். எனக்காக தான் உன்ன கட்டினான் அப்படின்னு நாளுபேரு முன்னாடி சொல்லி ரெண்டு பேரையும் சண்டை போட வைக்கிறேன்” என கொக்கரிக்க
பரமசிவம் “ சுசிலா இத இன்னும் சிக்கலாக்க பாக்குற.. ஜெய்யாவது கண்டும் காணாம கொஞ்ச நாள் இருந்தான். ஆனா விஜிக்கு தெரிஞ்சது உனக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சிடும் பாத்து நடந்துக்க. உனக்கது தேவையில்லாதது.” என பொறுமையா சொல்ல
“இதுல நீங்க தலையிடாதிங்க. உங்க பென்ஷன் பெரிய மருமவளுக்கு, பூர்வீக சொத்து சின்ன மருமவளுக்கு அப்ப நானு என்ன ஏமாளியா? எனக்கு என்ன குடுத்தீங்க?” சுசிலா சண்டைக்கு நிற்க
“உனக்கு ரெண்டு நல்ல பசங்க கிடைச்சும் தக்க வச்சிக்க தெரியல. நீ ஒழுங்கா இருந்திருந்தா கீதாவ மட்டும்தான் பகைச்சிருப்ப. மத்த மூணு பேரும் உன்னைய தங்கமா தாங்கியிருப்பாங்க.
நாயிக்கு முழுத்தேங்காய் கிடைச்சா தானும் திங்க முடியாது அடுத்தவங்க திங்கவும் விடாது. அதுமாதிரி நீ பண்ணின வேலையில இப்ப ஜெய் பொண்டாட்டி மொத மாசம் குடுத்ததில இருந்து விஜயன் கணக்கு போட்டு செட்டில் பண்றான். இதுல அந்த பொண்ணு ஆடினாளா? நீயும் அந்த உதவாக்கரை கீதாவும் ஆடின ஆட்டத்துல கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சி. கடைசியில விஜயனோட உழைப்பும் வீணா போச்சி” என அவர் கோபமாக பேச சுசிலா திரும்பி படுத்து தூங்குவது போல நடிக்க ஆரம்பித்தார்.
பரமசிவம் விஜயன் என்ன செய்ய நினைச்சிருக்கான்னு தெரியலையேன்னு யோசிச்சபடி புரண்டு கொண்டிருந்தார்.
விஜயன் மகேஷூடன் போட்ட திட்டங்களை யோசித்துக் கொண்டிருந்தான். ஜெய்யிடமும், சுஜியிடமும் கருத்து கேக்கலாமா என நினைத்தபடி இருக்க, கதவு மிக மெதுவாக தட்டப்பட்டது. விஜயன் கதவை திறக்க, ஜெய்யும் சுஜியும் சுசிலா இருந்த அறையை பார்த்துக்கொண்டே உள்ளே வந்தனர்
“அண்ணா நீ ஏதோ ப்ளான் பண்ற அது என்ன? சொல்லு” என்க
“ஜெய் புதுசா வாங்கின நிலத்தை உன் பெயருக்கு மாத்தலாமுன்னு இருக்கேன். அத நான் ரெண்டு கோடிக்கு வாங்கினேன். உங்கிட்ட அவங்க வாங்கினது அதற்கான வட்டி எல்லாம் கணக்கு போட்டா அதை தாண்டி வரும், அதான் அதை உன் பேருல மாத்தலாமுன்னு இருக்கேன்.” என விஜயன் குற்ற உணர்வுடன் சொல்ல,
உடனே சுஜி, “ மாமா அவங்க என்னை எப்படி நினைச்சாங்களோ எனக்கு தெரியாது. ஆனா நான் யோகன் வேற கவின் பவன் வேறன்னு இதுவரை நினைச்சதில்லை. நான் நினைச்சிருந்தா இத எப்பவோ தடுத்திருக்க முடியும். கவின், பவனுக்கு கொடுக்கறதுல எனக்கு வருத்தமில்ல. உங்க பல வருச கனவு அது, அந்த நிலத்தை வாங்கனுமுன்னு கனவோட இருந்திங்க. ஸோ அது உங்ககிட்டயே இருக்கட்டும். என் நகையை மட்டும் திருப்பி தந்துடுங்க. அது கவிக்கும் யோகனோட மனைவிக்குமான என்னோட வாழ்நாள் சேமிப்பு. அத மட்டும் திருப்பி கொடுத்துடுங்க ப்ளீஸ். ஒன்னொன்னும் பாத்து பாத்து, இவிங்ககிட்ட குடுத்தது போக மீதியை கஷ்டப்பட்டு சேத்துவச்சி வாங்கினது…. அதுமட்டும் வேணும்.” என்க
“சாரி சுஜி நான் எல்லாம் தெரிஞ்சும் நீயா என்னிடம் சொல்லாம எதுவும் செய்யக்கூடாது அப்படின்னு வீம்பா இருந்துட்டேன். “ என்றான் விஜயன்.
“சுஜி சொல்ற மாறி செஞ்சிடுண்ணா. நீதான் விவசாயம் பாக்கிற. உன்கிட்ட அந்த நிலமிருந்தா நீ பயிர் பண்ணுவ. எங்கிட்ட இருந்தா கரம்பா கெடக்கனும், இல்ல குத்தகைக்கு விடனும். நீயே பயிர் பண்ணலாம்தான் ஆனா சுசிம்மாவும், உங்க வீட்டம்மாவும் விடமாட்டாங்க. நகை மட்டும் போதும். கவினும், பவனும் நான் தூக்கி வளர்த்த பசங்க. அவங்க அத வச்சியிருக்கிறது எனக்கு சந்தோசம் தான்.” ஜெய் சொல்ல,
“ ஜெய் நீங்க என்னை கஷ்டப்படத்தக் கூடாதுன்னு இப்படி சொல்லாதிங்க. உங்க பணத்தை வீட்டு மனையா குடுத்துடவா? பணமாவோ, சொத்தாவோ குடுத்துதான் ஆகனும்.” என விஜயன் சொல்ல,
“இது நீயா நானா போட்டி இல்ல மாமா. நீ செஞ்சா திருப்பி நானும் செய்வேன்னு செய்ய. கொஞ்சம் யோசிங்க. கவின் பிஜி பண்ண ரெடியா இருக்கான், பவன் இப்போ காலேஜ் சேந்திருக்கான். நீங்க எல்லாத்தையும் கொடுத்தா எப்படி சமாளிப்பிங்க? கீதா அம்மாவீட்டு சைடும் ப்ரஸர் கொடுப்பாங்க? இதெல்லாம் தேவையா? யோசிச்சி முடிவெடுங்க.” சொல்லிய சுஜி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
“ஜெய் நா யோசிக்காம செய்யல உங்கிட்ட இருந்தா நாளைக்கு நம்ம அப்பாம்மாக்கு, எனக்கு, யாருக்கு ஒரு தேவைன்னாலும் உதவி கிடைக்கும்,நீயே இல்லாம போனாலும்…ஆனா என் வீட்ல என்ன வேணுமுன்னாலும் நடக்கும். நானே காணாம கூட போகலாம் இந்த பணத்தால. பசங்க கீதா வளர்ப்பு. என்னால இப்ப யாரையும் நம்ப முடியல.” என வலி மிகுந்த குரலில் சொல்ல,
“அண்ணா உன்ன அப்பாவாதான் நான் பாக்கறேன், நினைக்கிறேன். அதனால தான் நானும், சுஜியும் இதபத்தி பேசல. மகன் அப்பாக்கிட்ட சம்பள பணத்தை குடுக்கிறதுதான் முறை. ஸோ நீ இத திருப்பி கொடுக்க உன்ன வருத்திக்காத. சுஜியும் தப்பா நினைக்கமாட்டா. என்னை பேச கூட்டிட்டு வந்ததே அவதான். அப்பா இடம் எழுதறது சரி. நீ உன்கிட்ட இருக்க பணத்துல பேங்க்ல இருக்க சுஜி நகையை திருப்பி கொடு அது போதும்” என்றான் ஜெய்.
என்னதான் ஜெய்யும், சுஜியும் விஜயனுக்காக விட்டுக் கொடுத்தாலும் எல்லாம் கீதாவிற்கு சொந்தம் ஆயிடும். கீதா செய்தது சரி என்பது போல ஆயிடும். நாளைக்கு கவினோட மனைவியோ, பவனோட மனைவியோ இதைபோல செஞ்சா, என்ன செய்யறது? இதுமாதிரி செஞ்சிட்டு “அப்ப அவங்களுக்கு என்ன குடுத்தீங்க.? எல்லாத்தையும் நீங்களேதான வச்சிக்கிட்டீங்கதானே. அப்ப இனிமே நான் வாங்கல. ஆனா வாங்கினத கொடுக்கமுடியாதுன்னு சொன்னா என்ன செய்ய முடியும்?”
“கீதாவோட பேராசைக்கும் முற்றுப்புள்ளி வச்சி ஆகுனும். அந்த நிலத்தை அவதான் வாங்க சொன்னா. அது ஏன்னு தெரிஞ்சிக்கனும். இதுல மாற்றமில்லை. நிலத்தை எழுதி வைக்கறது உறுதி. நகையையும் மீட்டு குடுக்கனும் என யோசித்துக் கொண்டிருந்ததில் விடிந்ததே தெரியல.
கவி தன் விஜிப்பாவுக்கு காபி கொண்டு வந்தாள். “ விஜிப்பா பிரஷ் பண்ணிட்டு வாங்க. காபி சாப்பிடலாம். நைட் நீங்க தூங்கலியா? உக்கார்ந்தே இருக்கிங்க,” என்றாள்.
“கீதாம்மாலாம் ஒரு ஆளுன்னு சோகமா இருக்கிங்களா? காயு அத்தை சொல்ற மாதிரி அவங்க எல்லாம் சப்ப மேட்டர் சால்ட் வாட்டர். குப்பை மாதிரி தூக்கி போட்டுட்டு வாங்க.” எனவும் சொல்ல
சுஜியின் வளர்ப்பை எண்ணி வியக்காமல் இருக்க முடியல விஜயனால். பணம், நகையை விட தன்னை தேற்ற அவர்கள் முயலுவது பெறும் மனவுளைச்சலை தந்தது..
காலை உணவை சுஜி தயார் செய்து டைனிங் டேபிள் மேலே வைத்தாள். சுசிலா முகத்தை சிலுப்பிக்கொண்டு தனதறைக்கு சென்றார். யோகனும் விஜயனும் வந்தமர அவர்களுக்கு சூடான பூரியும் சிக்கன் குருமாவும் வைத்தாள். ஜெய் வந்தவன் தட்டை எடுத்து அவனே பரிமாறிக்கிட்டு உக்காந்து சாப்பிட ஆரம்பித்தான்.
“யோகா அப்பாவை போய் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வர சொல்லு. எல்லாம் ஆறி போயிடும்” என்றாள் சுஜி.
“ஏன் எட்டு மணிக்கு மேல ஆயிடுச்சே? அவங்களே சாப்பிட வர மாட்டாங்களா?” என விஜயன் கேக்க
“விஜிப்பா நீங்க இன்னும் அலர்ட்டா இருக்கனும். இது பத்தாது. எத்தனை முறை இங்க வந்திருக்கிங்க? இத நீங்க கவனிச்சதில்லையா? சமைக்கிற வரை, சமைச்சத எடுத்து வைக்கிற வரையும் கூட இங்க இருக்கறவுங்க, உடனே உள்ள போயி படுத்துப்பாங்க. எங்கம்மா போயி வாங்க சாப்பிடலாமுன்னு வருந்தி அழைக்கனும்…. ட்ரெயினிங் யாருகிட்ட கீதாம்மாகிட்ட இல்ல” என கவி கிண்டலடித்தபடி வர
வேகமாக எழுந்த விஜயன், “காசு, நகை எல்லாம் எடுக்கறப்போ உங்க வீடு, இப்ப நீங்க இங்க ஒரம்பரையா? உங்க வயித்துக்கு திங்ககூட பேண்ட் வாத்தியம் வச்சி வரவேற்கனுமோ? வந்து சாப்பிட்டு கிளம்புங்கப்பா” என்றான்.
முகம் வாட வந்து உட்கார்ந்து சாப்பிட்டனர் இருவரும்..
மதிய உணவையும் சமைத்து, டேபிள் மேலே வைத்தவள், கவிக்கு ஊட்டிக்கொண்டே சாப்பிட்டாள்.
விஜயன் போன் எடுத்து கண்ணனுக்கு அழைத்து, “ கண்ணா, நீயும் காயுவும் இங்க வாங்க. காயுவை இன்னைக்கு லீவு போட்டுட்டு வரச் சொல்லு.” என்றுவிட்டு பரமசிவத்தை பார்த்து
“உங்க ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு எல்லாம் எடுத்து குடுத்துட்டு சீக்கிரம் கிளம்பி வாங்க. பேங்க் பாஸ்புக், லாக்கர் சாவியும் வேணும்.உங்க வீட்டம்மா சொல்லறதை எல்லாம் வந்து கேட்டுக்கலாம். சீக்கிரம் வாங்க” என்றான்.
சுசிலா “எப்பா விஜி அந்த வீட்ட மட்டும் விட்டுடேன். அதுக்கு பதிலா மாசாமாசம் கீதாவுக்கு குடுத்த மாதிரியே இருபதாயிரம் அப்பா பென்ஷன்ல எடுத்துக் குடுத்திடேன்.” என்க
“எதுக்கு? இல்ல எதுக்குன்னு கேக்கறேன்? இத்தனை நாளா ஒத்த பைசா குடுக்காம இவங்க காசை புடுங்கிகிட்டு கெத்தா சுத்துனீங்க இல்ல. இப்ப பென்ஷன் தவிர எதுவுமே இல்லாம உங்க பாசக்கார மருமவகிட்ட கொஞ்ச நாளைக்கு இருங்க. உங்க கீதா நீங்க கேட்டா கேட்டத வேகமா சூடா செஞ்சி பக்கத்துல இருந்து பாசமா பரிமாறுவா….உங்களுக்கு எதுக்கு சொத்து, பணமெல்லாம்? ஆமா அந்த வீடே ஆவாதே உங்களுக்கு. அத சொன்னா வேற அவமானமா இருக்குமே, அப்புறம் அது இருந்தா என்ன? போனா என்ன?” என்றான் விஜயன்.
“அதப்பத்தி தெரிஞ்சவுடன் ஊருலயும் இங்கேயும் வீட்டுக்கு உள்ளே கேமரா வைக்க சொல்லிட்டேன். அதுல அவன் பாத்திருப்பான்.” என விஜயன் விளக்க இருவரும் மௌனமாயினர்.
கண்ணனும் காயுவும் வர, எல்லோரும் வரவேற்றனர். சுஜி அனைவருக்கும் காபி கொடுத்தாள்.
விஜயன் கண்ணனிடம், “கண்ணா சுஜியையும், அப்பாவையும் கூட்டிட்டு போ. அங்க இருக்கிற என்னோட ப்ரெண்டுகிட்ட ஏற்கனவே சொல்லி ரெடி பண்ணிட்டேன். இவங்க ரெண்டு பேரோட ஐடீ கார்டு ஜெராக்ஸ் போட்டுட்டு போ. வேலையை முடிச்சிட்டு எனக்கு கூப்பிடு”, என்க
“என்ன இவ பேருலயா எழுத போறீங்க? நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். ஜெய் பேருல எழுதுங்க,” சுசிலா கத்த,
“உங்ககிட்ட நான் ஐடியா கேக்கல நான் சொல்லறதை செய்யுங்க. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்காப்பா?” விஜயன் கேக்க
“யாரு பேருல எழுதினா என்ன? நான் மருமவ மேலயே எழுதி குடுத்துடறேன்.” என்றார்.
கண்ணனின் காதில் ஏதோ சொல்லி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு சுசிலாவிடம் திரும்பி “அம்மா நானும், ஜெய்யும் வெளியே போறோம். வரும் வரை காயுவை விட்டுட்டு போறோம். கேமரா எல்லா ரூமுலயும் இருக்கு. பாத்துட்டு தான் இருப்பேன். பசங்ககிட்ட, காயுகிட்ட பிரச்சனை பண்ணாம அமைதியா இருங்க…எதையும் எங்கையும் தேடாம இருங்க. காயு உன் போன் கொடுக்காத.”
“எனக்கு இவ காவலா? டேய் என் மேல சந்தேகமா?” சுசிலா முகமாற
விஜயன், “பசங்களுக்கு காவல். உன்னால ஏதும் ஆயிடகூடாதுனு” என்றான்.
ஜெய் வண்டி எடுக்க விஜயனும் அவனுடன் கிளம்பினான்.
கிரயம் நடக்குமா? சுசிலா அமைதியா இருப்பாரா? விஜயனின் திட்டம் தான் என்ன? அறிந்து கொள்ள காத்திருப்போம் தோழிகளே.