Advertisement

“நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றினாலும் உண்மை எனும் போது சந்தியாவால் நம்ப முடியவில்லை”. 

அப்படியே அவர்கள்  செல்ல,” விசாலம் வேதிகாவை தன்னுடன் படுக்குமாறு அழைக்கவும் அவளும் அங்கே நின்றுவிட்டாள்”. 

சந்தியா நேராய் சென்று கட்டிலில் அமர்ந்துகொண்டு அழவும், ரஞ்சித்தினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

அவன், அவள் அருகில் நின்று கொண்டு  இரவில் நமக்கு இதைவிட பாதுகாப்பாக வேறு இடம் கிடைக்காது.

அதிலும்,” வேதிகாவை காப்பாற்றுவது முக்கியம் “என்றாள். 

அவள் அமைதியாய் இருக்க,” அவளிடம் சரி படுத்து தூங்கு என கூறிவிட்டு வெளியில் சென்று விட்டான்”. 

சந்தியா படுத்தவள் அழுதுகொண்டே உறங்கிவிட்டாள்.

“அவள் உறங்கியதை நிச்சயப்படுத்திக் கொண்டு அறையினுள் வந்தவனுக்கு ஏனோ மனம் வலித்தது”. 

அவனும் அமைதியாய் உறங்கிவிட்டான். 

அடுத்த நாள் காலையில்,” அவர்களை தன் காரிலேயே பஸ்ஸ்டாண்டில் இறக்கி விட்டார்” பாண்டு. 

அந்த ஒரு நாள் இரவிலேயே வேதிகா அனைவருடனும் நன்றாக பழகி விட அவரிடம் போய் வருகிறேன் அப்பா என்று சொல்லியவளை ஆதரவுடன் அணைத்துக்கொண்டார் பாண்டு. 

பின்பு மூவரும் சென்னை செல்லும்  பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சிறிது நேரத்தில் பேருந்தும் கிளம்பி விட்டது.

 மாலை 5 மணிக்கு சென்னை வந்தவர்கள்,” நேராய் எங்கு செல்வது என்று யோசிக்கும் போது ரஞ்சித் தீர்மானமாய் தன்னுடன் வருமாறு இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்”.

 “அவனிடமிருந்து எந்த தகவலும் வராததால் கலவரமடைந்திருந்த மீனாட்சியின் மனம் அவனைப் பார்த்ததும் தான் நிம்மதியாக இருந்தது”. 

அவன் அவர்களை உள்ளே அழைத்து வந்து நடந்ததைக் கூறியதும் எந்த கேள்வியும் கேட்காமல் செழியன் மீனாட்சியிடம் சரணின் அறையில் சந்தியாவையும் வேதிகாவையும் தங்க வை என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். 

அவர்களின் அறையைக் காட்டி விட்டு கீழே வந்த மீனாட்சி,” தன் கணவரிடம் நேராய் சென்றவள் அவரிடம் விரைவில் திருமணம் நடத்தவேண்டும் என்று கூற அவரும் அதை ஆமோதித்தார்”

பின்பு அவர் அர்ஜுனுக்கு கால் செய்து நடந்ததை கூற அவன் உடனடியாக வருவதாக கூறினான். 

மாலையில் அர்ச்சனாவும் அர்ஜுனும் கையில் பூங்கொத்துடன் ரஞ்சித் அறையின் வெளியில் நின்று கதவை தட்டிக்கொண்டிருந்தனர்.

அவன் கதவைத் திறந்ததும் “வாழ்த்துக்கள் மச்சான்” என்று அர்ஜுன் கூற அர்ச்சனா உள்ளே சென்று யாரையோ தேட அர்ஜுன் அவளிடம் 

“ஏ லூசு யாரை தேடுற”? என்று கேட்க அவளோ “டேய் மாப்பிள்ளை இங்க இருக்கான்” ஆனா, “புது பொண்ணு எங்கே”? என்று கேட்கவும் தான் அர்ஜுனுக்கு ஞாபகம் வந்தது போல் ,”ஆமாம் இல்லை!” என்று கூறி ரஞ்சித்தைப் பார்த்தான்.

அவன் அதற்கு பதில் கூறாமல் எதிர் அறையைப் பார்க்க அவனைப் பார்க்க இருவருக்குமே பரிதாபமாக இருந்தது.

அர்ச்சு வேகமாக அவன் காட்டிய அறைக்குள் சென்றாள். 

அங்கு ,”சந்தியா வேதிகாவை உறங்க வைத்துக்கொண்டிருந்தாள்”. 

அர்ச்சனாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள் சந்தியா. 

“அவளது அன்பில் நிகழ்ந்த அர்ச்சனா அவளை சமாதானப் படுத்திக் கொண்டே அவளை மாடிக்கு அழைத்துச் சென்றாள்”. 

அதே நேரம் கீழே அர்ஜுன்,” ரஞ்சித்திடம் பேசிக்கொண்டிருந்தான்”. 

சந்தியாவிடம்,” அர்ச்சனா ரஞ்சித் நல்லவன் தான் இருந்தாலும் அவன் உன்னை புரிஞ்சுக்க கொஞ்சம் டைம் ஆகும்”. 

“அதான் இவ்வளவு நாள் காத்திருந்த இல்ல , இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ சந்தியா” என்றவளை ஆச்சரியமாய் பார்த்தாள் சந்தியா.

அவளிடம் அர்ச்சனா,” எனக்கு தெரியும் சந்தியா ரஞ்சித்த நீ பாக்குற பார்வையிலே உன்னோட லவ் நல்லா தெரியும்” 

ஆனா,” அப்புறமாதான் தெரிஞ்சுது ரஞ்சித்தும் உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சது”. 

அதனால தான்,” நாங்க உங்க ரெண்டு பேரையும் பெங்களூர் அனுப்பி வெச்சோம்”. 

ஆனா ,”நீங்க இவ்ளோ பாஸ்ட்டா  இருப்பீங்கன்னு நினைக்கல” என்றாள். 

அதற்கு சந்தியா,” இது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் எடுத்த முடிவு “என்றாள். 

அப்போ,” உனக்கு இதில் இஷ்டம் இல்லையா? என்று கேட்க பதில் சொல்லாமல் வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்”. 

சந்தியா அப்போ நான் போயி ரஞ்சித்திடம் சொல்லிடறேன் என்று கூறிவளைத் துரத்திக் கொண்டே வரும்போது ஒரு நிமிடத்தில் கால் தடுக்கி கீழே விழ இருந்தவளை தாங்கிப் பிடித்தான் ரஞ்சித்.

ஒரு நிமிடம் தான் இது நடந்தது. அடுத்த நொடி அவனிடமிருந்து  விலகி நின்றாள் சந்தியா.

 அப்போது அங்கு வந்த மீனாட்சி,” அனைவரையும் ஹாலுக்கு அழைக்க அங்கே செழியன் ஐயர் உடன் பேசிக்கொண்டிருந்தார்”. 

பின்பு அவர் தன் மகனிடம்,” நீ செய்ததை தப்பென்று நாங்கள் சொல்ல மாட்டோம்”ரஞ்சித். 

ஆனால் சொந்தக்காரர்கள் இடமும் தெரியப்படுத்தனும் இல்ல. நாள பின்ன மத்தவங்க ஒரு வார்த்தை தப்பா சொல்ல நாம் அனுமதிக்கக் கூடாது.

 அதனால் வர புதன்கிழமை நாள் நல்லா இருக்கு அன்னிக்கு முகூர்த்தம் வச்சிடலாமா? என்று கேட்கவும் அவன் சந்தியாவை பார்த்து விட்டு சரிப்பா என்றார். 

அவர் திருமண வேலைகளை கூறவும் அர்ச்சனாவும் அர்ஜுனும் குறிப்பு எடுத்துக் கொண்டிருக்க சந்தியா வேகமாய் மாடிக்கு சென்று விட்டாள். 

அவள் பின்னாலேயே வந்த ரஞ்சித்  அவளின் தோள் மீது கை வைக்கவும் திரும்பியவள் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டு” ஐ லவ் யூ மை ஸ்வீட் ஏஞ்சல்” என்றான்.

அவளும் அவன் முகம் பார்க்காமல் “ஐ லவ் யூ டூ மை ஸ்வீட் ராஸ்கல்” என்றாள். 

அவன் அவள் முகம் பார்க்க அந்த கண்களில் தெரிந்த தாபத்தை பார்த்தவன் “சாரிடா” ரொம்பவும் தவிக்க விட்டு விட்டேன் என்று கூறி அவளை அப்படியே தூக்கி சுற்றவும் “அவளுக்கு அப்படியே வானத்தில் மிதப்பது போன்ற உணர்வு”. 

சிறிது நேரம் கழித்து அவளை இறக்கிவிட்டு அவன் “ஹனி” உன்னோட அண்ணன்கிட்டயும் சொல்லனும் இல்ல, உன்னோட அண்ணா நம்பர் குடு நான் பேசுகிறேன் என்றான். 

அதற்கு,” அவள் முதலில் நான் பேசிவிட்டு உங்களிடம் தருகிறேன்” என்றாள். 

அந்தசமயம் பார்த்து “வருண பகவான் தன் ஆசீர்வாதத்தை அளிக்க” அவன் அவளை நெருங்க அவள் அவனிடம்  “ஐய்யோ அர்ஜுன்”என்று கூற எங்கே என்று அவன் பார்க்கவும் அதற்குள் அவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

 உன்னை அப்புறம் பார்த்துக்றேன் “டார்லிங்”என்று மனதில் சொல்லாமல் திட்டி விட்டு தன் அறைக்கு சென்றான்.

அர்ச்சனா மீனாட்சியுடன் இங்கு ரஞ்சித் சரணுடனும் மற்றும் சந்தியா தன் அண்ணனான பிரசன்னாவுடன் பேசிக்கொண்டிருக்க வேதிகா அனைவரையும் பார்த்து சிரித்துக் கொண்டாள். 

“இந்த காதல் தான் ஒரு மனிதனை என்ன பாடு படுத்துகிறது? என்று தனக்குள் யோசித்து கொண்டாள்”

” என் உயிரில் பாதி நீயடா     

 உன் மூச்சு காற்றே நானடா

 கனவிலும் உன்னை  பிரியேன் என்று 

கன்னி அவள் காத்திருக்க 

உன் நினைவில் பூத்திருக்க 

இங்கு கண்ணன் அவன் 

ராதை நினைவில் கசிந்துருக 

இதயம் இணையும் 

இந்த தருணம்

இதயங்கள் இடம் மாறும் உணர்வுகள்

எத்தனை இன்னல்களையும் இனிதாய் தாங்கும்

இவர்களின் முன்னே 

 இமயம் கூட கடுகளவு தான் போல!”

 “இந்த உணர்வை தான் இவர்கள் உயிர் என நினைக்கிறார்களா?” ஏதோ ஒன்று நம்மை விட்டால் சரி! என்று நினைத்துக் கொண்டு கீழே வரவும் அங்கு அர்ச்சனா  அவளுக்காக காத்திருந்தாள். 

அவளைப் பார்த்ததும் ஒரு நிமிடம் தயங்கியவள் பின்பு அவளிடம் நான் அண்ணியை அனுப்புகிறேன் என்று கூறி நகர ,”அவளை தடுத்தது உங்களிடம் நான் பேச வேண்டும் என்ற அர்ச்சனாவின் குரல்”

அவள் அவளை ஆச்சரியமாய் பார்க்க அர்ச்சனா அவளிடம் நான் அர்ச்சனா ரஞ்சித் சந்தியாவின் “பிரண்ட்”& “கொலீக்” என்றவள் ,”நீதான் என்னுடைய ஷாப்பிங் மற்றும் மற்ற வேலைகளை கவனிக்க ஹெல்ப் பண்ண வேண்டுமென்றாள்”.

அவளிடம் சரியாய் கேட்டீங்க போங்க,” நான் கண்டிப்பா உங்க கூட வருவேன்” என்று கூறியவளை நன்றியுடன் பார்த்தாள் அர்ச்சனா. 

 இருவரும் பேசிவிட்டு அர்ச்சனா கிளம்பிவிட்டாள். 

“அடுத்த நாள் காலையிலேயே பிரசன்னா வந்துவிட அவர்களை தங்கள் வீட்டில் அறிமுகப்படுத்தினாள் சந்தியா”

அவர்களும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவன் போன் ஒலிக்க அதை அட்டென்ட் பண்ணி பேசிக்கொண்டே தோட்டத்தின் பக்கம் சென்றான். 

அங்கே தோட்டத்தில் ஊஞ்சலில் ஊஞ்சலாடிக் கொண்டே “சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை” என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தாள் வேதிகா. 

“அவன் போன் பேசிக்கொண்டு இருந்ததால் சரியாய் அவள் குரல் அவனுக்கு கேட்கவில்லை “.

“அவன் பேசி முடித்ததும் வீட்டின் உள்ளே செல்ல இருந்தவனை வேதிகாவின் குரல் தடுத்தது”. 

அவனும் பாட்டு வரும் திசையை நோக்கி நடந்தான்.

 அங்கு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த அவளை பார்க்க அவனுக்கு ஒரு சின்ன குழந்தை போல் தோன்றியது. 

அவன் அவளுக்கு பின்னால் இருந்து அவளை பார்ப்பதால்  அவள் முகம் அவனுக்கு தெரியவில்லை. 

அவள் ஊஞ்சலில் இருந்து இறங்கி வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டாள். 

அங்கு அனைவரும் பேசிக் கொண்டே  சாப்பிட அமரவும் கோதா, சுப்பு, அஷ்வந்த்,அஷ்வின் ,மீரா செந்தில், வானதி, வசந்தி, மணி என உறவினர் பட்டாளம் வந்து சேரவும் சரியாக இருந்தது. 

வந்தவர்களை கவனிக்க சரணும் மீனாட்சியும் சென்று விட இங்கு சந்தியா பரிமாற ஆரம்பித்தாள்.

 ரஞ்சித் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,” அவளோ கண்களாலேயே மிரட்டிக் கொண்டிருக்கும் போதுதான் வேதிகா அங்கு வந்தாள்” 

சிரித்த முகத்துடன் அவளை பார்த்து ரஞ்சித்தும் சந்தியாவும் ,”ஏன்  வேதுமா இவ்வளவு நேரம்?” 

 நேரத்திற்கு சாப்பிடுவது இல்லையா என்று கேட்கவும் அவள் சிரித்துக்கொண்டே “சிவபூஜையில் கரடி எதற்கு” என்றாள்.

ப்போது தான் அவளை பார்த்தான் பிரசன்னா.

“ஒரு நிமிடம் அதிர்ச்சி தான் இருந்தாலும் அடுத்த வினாடியே தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டான்”

 அவளும் அவனை அப்போது தான்  முதல்முறை பார்க்கிறாள். 

ஆனால் இதற்குமுன் எங்கோ பார்த்தது போல் தோன்றவும் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அதை பார்த்த சந்தியா பிரசன்னாவை அவளுக்கும் வேதிகாவை அவனுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

அவர்களும் ஆளுக்கு ஒரு “ஹாய்” போட்டு விட்டு தங்கள் வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டனர். 

“சாப்பிட்டு முடிந்ததும் அவரவர் தங்கள் அறைக்குச் செல்ல பிரசன்னா மட்டும் வேதிகாவை தேடிச் சென்றான்”. 

அவளின் அறையை தட்டிய போது கதவு தானே திறந்து கொண்டது. 

உள்ளே அவள் எங்கே  இருக்கிறாள் என்று அவன் தேடி கொண்டிருக்க ,அவளோ வெளியிலிருந்து அப்போதுதான் உள்ளே வந்துகொண்டிருந்தாள்.

Advertisement