Advertisement

அவள் தயங்கவும், “உள்ளே எதுவும் வெடிகுண்டு எல்லாம் இல்ல” அதனால,” நீ பயப்படாம வாங்கலாம் அர்ச்சனா” என்று அர்ஜுன் கூறினான்.

” நரேன் கண்ணசைத்து சம்மதம் தெரிவித்து விட, அதை வாங்கிக் கொண்டாள்”. 

இப்போது குந்தவையும் “மருமகளே அந்த கிப்ட் கொஞ்சம் பிரிச்சு காட்டும்மா இவனுங்க என்னதான் சர்பிரைஸ் வச்சிருக்காங்கன்னு பார்ப்போம்” என்றார். 

“சரி” என தலையசைத்து விட்டு நரேனின் உதவியுடன் பிரித்தவளுக்கு அவ்வளவு சந்தோஷம் உள்ளே இருந்தது “கார் கீ”. 

அவள் ஓடிச்சென்று வெளியில் பார்க்க ,அவர்கள் வீட்டின் முன் அழகாய்  “ப்ளாக் கலரில் ஹூண்டாய் கார்” நின்று கொண்டிருந்தது.

 அவள் அதை தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க அர்ஜுன் & ரஞ்சித்,” அவளிடம் பிடித்திருக்கிறதா?” என்று வினவ அவள் அவர்களிடம் “ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சிறு குழந்தையை போல் கூறினாள். 

சிறிது நேரம் கழித்து அனைவரும் கிளம்பி சென்றுவிட்டனர். 

ஆனால் அர்ச்சனா மட்டும் ரஞ்சித்தை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தாள். 

அவளுக்கு தெரியும். ரஞ்சித்திற்கு ஏற்ற பெண்,” சந்தியா தான்” என்று ஆனால் இது புரிய வேண்டியவனுக்கு புரிய மாட்டேங்குதே என்று மிகவும் கவலை பட்டவளுக்கு அப்போதுதான்,” அதைப் பற்றி அர்ஜுனிடம் பேச வேண்டும்” என்று தோன்றியது. 

உடனே அவள் அர்ஜுனுக்கு  கால் பண்ண அவனின் மொபைல் ‘சுவிட்ச் ஆஃப்’ என்று கூறியது. 

சரி நாளை ஆபீஸில் பார்த்துக்கொள்ளலாம் என்று உறங்கி விட்டாள். 

வீட்டிற்கு வந்த ரஞ்சித் அங்கு அவன் தங்கை வந்திருப்பதை கவனித்தவன், அனைவரிடமும் நலம் விசாரித்து விட்டு தன் அறைக்கு சென்றான்.

அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஒவ்வொரு முறை சரண் வீட்டிற்கு  வரும்போதெல்லாம் தன் வீட்டில் பரவும் சந்தோஷம் நிரந்தரமாக  நிலைக்க அவன் வேண்டிக் கொண்டிருந்தான். 

முக்கியமாக அவன் அம்மா மீனாட்சியை நினைத்து மிகவும் வருத்தப்பட்டவன் ஏற்கனவே இருந்த அயர்வில் அப்படியே உறங்கி போனான் அவன். 

மாலையில் சரண் கையில் காபியுடன் கதவை தட்டியபோது தான் கண் விழித்தான் அவன்.

 “குட் ஈவினிங் அண்ணா” என்றவளிடம் “குட் ஈவினிங் சரண்” என்று கூறிவிட்டு எப்படி இருக்கிற சரண்? எதுவும் பிரச்சனை இல்லையே? என்றான்.  

அதெல்லாம் ஒன்றுமில்லை நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். ஆனால் அம்மா தான் மிகவும் கவலைப் படுகிறார்கள் என்றாள்.

 அவன் பேச்சை மாற்றும் விதமாக “யாழினி” என்ன பண்றாள்?  சரண்  என்று கேட்கவும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. 

அவள் வெளியில் காட்டிக் கொள்ளாமல்,” நீ பிரெஷ் ஆகி கீழே வா” என்று கூறிவிட்டுச் சென்று விட்டாள். 

அவள் சென்றதும் தன் கண்களை மூடிக்கொண்டு,  என்னால எத்தனை பேருக்கு தான் துன்பம் “எங்கே எனக்கான தேவதை? விரைவில் உன்னைக் கண்டு பிடிப்பேன்” என்று சபதம் எடுத்து கொண்டிருந்தான்.

செந்தில் ,”சரண் எனக்கு என்னவோ உன்னோட அண்ணி 

 நம்ம கூடவே இருந்தாலும் கூட நமக்கு தான் அவங்கள அடையாளம் தெரியல என நினைக்கிறேன்” என்றான். 

எனக்கும் அப்படித்தான் தோனுது.

 ஆனா யாருன்னு தான் தெரியமாட்டேன்கிறது என்றவளை தன்னுடைய கைகளில் ஏந்திக் கொண்டு தன் அறைக்குள் சென்று  அவளை உறங்க வைத்துவிட்டு கீழே வந்தான். 

அவனுக்கு தெரியும், அவள் இந்த இரண்டு நாட்களாக சரியாக உறங்கவில்லையென்று.

 அதனால்தான் அவளை உறங்க வைத்து விட்டு வந்தான். 

அவன் நேராக தோட்டத்திற்கு செல்லவும் அங்கு யாருடனோ செல் போனில் பேசிக் கொண்டிருந்த ரஞ்சித் செந்திலை பார்த்ததும் அவனிடம் வந்தான். 

என்ன,” மாப்பிள்ளை! இந்த பக்கம்” என்று ரஞ்சித் கேட்க,” ஒன்றும் இல்லை மச்சான்!”

” சும்மா காத்து வாங்க வந்தேன்” என்று செந்தில் கூறினான்.

 ஓகே! நான் நேராகவே பேசுறேன் என்றவன்,” செந்திலிடம் என் தங்கை எப்படிடா இருக்கா?” என்று கேட்டான். 

அதற்கு செந்தில் “என் மனைவி ரொம்ப பொறுப்பா நடந்துக்கறா! இன்னும் சொல்ல போனா, அவ கிட்ட நாம கிளாஸ் போகலாம் அந்த அளவுக்கு தேறிட்டா” என்றவனிடம் நீதான் செந்தில் அவளைப் பார்த்துக்கணும் என்றான் ரஞ்சித்.

அவனின் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு,” நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் செந்தில். 

இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு பின்பு வீட்டிற்குள் வந்தனர்.

அங்கு மதிய உணவு அறுசுவையோடு தயாராகி இருந்தது. அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு விட்டு உறங்கி விட்டனர். 

இங்கு ,”சந்தியா தன் டைரியில் எப்போதும் போல தன் நினைவுகளை பதித்துக் கொண்டிருந்தாள்”. 

“அவனை அவள் காதலித்த நாளிலிருந்து இன்றுவரை அவனின் நினைவுகளை சேகரித்து வைத்திருந்தாள்”. 

ஆனால் அவன் அதை அறியாவிட்டாலும் அவன்  அருகாமையே அவளுக்கு இதம் தர அதைத் தன் டைரியில் பதிவு செய்தாள். 

“உன்னருகில் நானிருந்தும்

 என்னை  நீ இன்னும்

கண்டுகொள்ள வில்லை

 ஆனாலும் இதயம் இறுகாமல்

இதமாய் தோன்றும் இந்த உணர்ச்சி தான் காதலா?”

 அடுத்தநாள் அனைவரும் அவரவர் தன் வேலையில் மூழ்கி விட அர்ச்சனா மட்டும் அர்ஜுனிடம் ரஞ்சித் பற்றி தன் கவலையைத் தெரிவித்துக் கொண்டு இருந்தாள்.

அவளிடம்,” சந்தியா தான் ரஞ்சித்தின் தேவதை” என்பதில் எனக்கும் எந்தவித மாற்றமும் இல்லை. 

ஆனால், “இருவரும் இதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?” என்றான். 

அவன் பேசி முடிக்கவும் நரேன் வரவும் சரியாக இருந்தது.

 அவன் எழுந்து செல்ல முயல நரேன் அவனை தடுத்தான்.

 நான் எதுக்கு பா நீங்க கண்டினிவ் பண்ணுங்க என்றவனிடம்,” அது இல்ல மச்சி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

நம்ம கம்பெனியோட ‘பெங்களூர் பிராஞ்ச்’ ல ஏதோ ‘ப்ராப்ளம்’ போல. அதனால “அந்த டூர் பிளான கேன்சல் பண்ணிட்டு இங்கிருந்து ரெண்டு பேர மட்டும் கூப்பிடுறாங்க!”.

” நீயும் ரஞ்சித்தும் போயிட்டு வரீங்களா?”  

“எனக்கு இங்க நெறைய வேலை இருக்கு” என்று அர்ச்சனாவை  பார்த்துக்கொண்டே கூறவும் ,”அர்ச்சனா  அவனை தன் கண்களால் மிரட்டினாள்“.

அர்ஜுன்,  அதை கவனித்தும் கவனிக்காதது போல் இருந்து கொண்டான். 

அதன் பிறகு அவன்,” நரேனிடம் எனக்கு முக்கியமான வேலைகள் இருக்கு “

நரேன் ,”நீ ஏன் சந்தியாவை  அனுப்பக்கூடாது?”

 அவள்,” ஃப்ரீ தானே” என்று கேட்க,” ஆமாம் இல்ல! நான் மறந்துட்டேன்” என்றவனிடம் ,”சரி நான் போய் அவர்களிடம் கூறி விடவா?” என்று அர்ஜுன் கேட்க “சரி” என்று கூறினான் நரேன்.

அர்ஜுன் நேராய் ரஞ்சித்திடம் சென்றான். 

தன் வேலையில் மூழ்கி இருந்தவன் தன் நண்பனை பார்த்ததும் ‘ஹாய் டா மச்சான்’ என்றான்.

“ஓய்! ட்ரீட் கொடு”

 “வா, கேன்டீன் போகலாம்” என்று அர்ஜுன் கூற,” என்னடா? எதுக்குடா ட்ரீட்?” என்று ரஞ்சித் கேட்டான்.

 நீ பெங்களூர் போகப்போற டா என்றான். 

பல குழப்பங்களில் இருந்த ரஞ்சித்திற்க்கும் கொஞ்ச நாள் மனமாற்றம் தேவை என்பதால் அவனும்,” சரி” என்றான். 

அதேபோல் இங்கு அர்ச்சனா சந்தியாவிடம் கூறிக்கொண்டு இருந்தாள்.

 முதலில் முடியாது என்றாள். பிறகு ஓகே என்றாள். 

மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் அர்ச்சனா கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு அர்ஜுனுக்கு சந்தியாவின் சம்மதத்தை தெரிவிக்க ,”அவனும் ரஞ்சித் சம்மதித்து விட்டதை அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்”.

 இருவரிடமும் மற்றவர்   வருவதை கூறவில்லை. 

அவர்கள் இன்றிரவே கிளம்ப வேண்டும் என்பதால் அர்ச்சு சந்தியாவிற்கும் அர்ஜுன் ரஞ்சித்திற்க்கும் ‘ஹெல்ப்’ பண்ணி ஒரு வழியாக ‘ட்ரெயின்’ ஏற்றி விட வந்தனர்.

 இருவருக்கும் எதிரெதிர் ‘சீட் புக்’ பண்ணி வச்சது அர்ஜுன் தான். 

ட்ரெயின் கிளம்பும் நேரத்தில் தான் ரஞ்சித்தும் சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். 

இருவரையும் டிரெயின் ஏற்றிவிட்டு அர்ஜுனும் அர்ச்சுவும் கிளம்பி விட்டனர். 

ஆனால் இங்கு ரஞ்சித்தும் சந்தியாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நிற்க,” அங்கு வந்த பெரியவர் என்னவென்று விசாரிக்க, தன்னிலைக்கு வந்தவர்கள் அவர்களின் இருக்கையை தேடி இருவரும் எதிர் எதிரில்  அமர்ந்து கொண்டனர். 

முதலில் ரஞ்சித் சந்தியாவிடம்,” நீ எப்படி இங்கு?” என்று கேட்கவும் அவள் அவன் முகம் பார்க்காமல் “பெங்களூர் பிராஞ்ச் ப்ராப்ளம்” என்று கூறவும் அவன் அவளிடம், “என்னிடமும் இதையே கூறினார்கள்” என்றான். 

அவள் விழி விரிய ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.

 அவன் சிரித்து விட்டு,” ஓகே! இப்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்” என்று கூறிவிட்டு படுத்துக் கொண்டாள்.

 அவள் சிறிது நேரம் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள்.

 அவளைப் படுத்துக் கொண்டே பார்த்தவனின்  மனதில்,” முதல் முறையாக ஒரு இனம் புரியாத தவிப்பு!”

” அவன் சரியாய் கண்களை மூடவும் சந்தியா அவனை பார்க்கவும் சரியாக இருந்தது”.

 பின்பு அவளும் படுத்துக் கொள்ள இருவரும் உறங்கிவிட்டனர். 

ஒரு மணி நேரம் கழித்து விழித்த ரஞ்சித் முதலில் சென்று முகத்தை கழுவிவிட்டு வந்து பார்க்க,” அங்கு சந்தியா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்”. 

அவளை எழுப்ப மனமில்லாமல் அவன் சென்று “நைட் டின்னர்” வாங்கி வந்தான். 

இப்போது ,”அவள் அங்கு இல்லை, எங்கு சென்றாள்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் வருவது தெரிந்ததும் தான் நிம்மதியாய் இருந்தது அவனுக்கு”. 

அவள் வரும் வரை சீட்டின் விளிம்பில் அமர்ந்திருந்தவன் அவள் வருவது தெரிந்ததும் உள்ளே நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். 

அவள் வந்து அமர்ந்ததும் அவன் அவளிடம் சாப்பிடலாமா? என்று கூறி இருவரும் சாப்பிட அமர்ந்தனர். 

அவர்கள் சாப்பிடும் போது செல்போன் ஒலிக்க அதை  எடுத்துப் பேசியவள் “ஹலோ சுஜா சொல்லுடி” என்றாள். 

அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு போனை வைக்கும் முன் “கங்கிராட்ஸ் சுஜா” என்றாள். 

“அவள் பேசி முடிக்கும் வரை, சாப்பிடாமல் காத்திருந்தவனைப் பார்த்ததும் அவள் கண்கள் கலங்கி விட்டன”. 

சுதாரித்துக்கொண்டு நீங்கள் சாப்பிட்டிருக்கலாமே! என்றாள்.

அவன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு,” இதில் என்ன இருக்கிறது ?”என்றான். 

பிறகு மீண்டும் இருவரும் சாப்பாட்டை தொடர ,”திடீரென ரஞ்சித்துக்கு புரை ஏறவும் சந்தியா பதறிப்போய் அவன் தலையை தட்டி விட்டு தண்ணீர் குடிக்க வைத்தாள்”. 

அவன் அவசரமாய் குடிக்கவும் அவன் கழுத்தில் தண்ணீர் கொட்டி விட அவசரமாய் தன் முந்தானையால் துடைத்து விட்டவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 அவள் அவனை கவனிப்பதிலேயே குறியாய் இருக்க இவன் அவளை பார்ப்பதை குறியாய் வைத்திருந்தான். 

திடீரென,” ஏதோ ஒரு உந்துதலில் அவன் முகத்தைப் பார்த்தவள் அப்போதுதான் அவன் தன்னைப் பார்ப்பதை அறிந்தாள்”. 

இருவரின் முகமுமே மிக நெருக்கமாக இருக்க,” இருவரின் கண்களிலும் ஏதோ ஓர் இனம் புரியாத பாம்”.

தன்னிலைக்கு வந்த சந்தியா தன் இடத்தில் அமர்ந்து விட்டாள். 

அதன் பிறகு இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

 காலையில்  நான்கு முப்பது மணிக்கு ட்ரெயின் பெங்களூரை அடைந்தது. 

இருவரும் டிரெய்னை விட்டு இறங்கி சிறிது தூரம் நடக்கவும் ஒரு வாலிபன் ரஞ்சித்திடம் தன் ஐடி கார்டை காட்ட அவன் அந்த வாலிபனிடம் தங்கள் “லக்கேஜ்ஜை” கொடுத்தான். 

அவன் கொண்டு சென்று காரில் வைத்து விட்டு அவர்கள் அமர கார் கதவைத் திறந்துவிட்டான்.

 பின்பு ரஞ்சித் அவனிடம் ,”நாம் எங்கு போகிறோம்?” என்று கேட்க “உங்களுக்கு ஹோட்டலில் ரூம் புக் பண்ணி இருக்காங்க சார்” என்றான்.

 கார் ஹோட்டலின் முன்பு நின்றது. டிரைவர் ரஞ்சித்திடம் ,”நீங்க எங்க போகணும்னாலும் என்னை கூப்பிடலாம், து என்னோட நம்பர் xxxxxxxxxxx”  என்று கூறினான்.

இருவரும் உள்ளே சென்று தங்களின் வருகையை பதித்துவிட்டு தங்களின் அறைக்குச் சென்றனர். 

சிறிது நேரம் கழித்து சந்தியாவை  ரஞ்சித்  செல்லில் அழைத்தான். 

அவள் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே,” ஹலோ” என்றாள். 

மறுமுனையில் ,”பத்து நிமிடத்தில் நான் ரெடியாகி விடுவேன்”

” நீயும் 15 நிமிடம் கழித்து ரிசப்ஷன் வந்து விடுகிறாயா?” என்றான். 

அவனிடம்,” சரி” என்று கூறி போனை அணைத்தாள். 

அவள் ரிசப்ஷன் செல்ல அங்கு அவளுக்காக காத்திருந்த ரஞ்சித் அவளை பார்த்து புன்னகைத்து விட்டு இருவரும் கம்பெனிக்கு சென்றனர்.

 அங்கு கம்பெனி எம்டி யான “ஆனந்த்” வர்களை இன்முகத்துடன் வரவேற்றான். பின்பு மூவரும் பேசி கொண்டிருந்தனர். 

ஆனந்த் ,”அவர்களுக்கு கம்பெனியை சுற்றிக் காட்டினான்”. 

பிறகு அவர்களிடம் ,”இங்கு வேலை முடிந்ததும் நீங்கள் விரும்பினால் சுற்றுலா செல்லலாம் “என்றான்.

 அவன் கூறியதைக் கேட்டதும் சிரிப்பு வர சிரித்து விட்டான் ரஞ்சித். 

“என்ன ரஞ்சித்?” என்று ஆனந்த் கேட்க ,”நாங்கள் என்ன ஹனிமூனா வந்திருக்கோம், டூர் போக” என்றவுடன் அவனும் சேர்ந்து சிரிக்க சந்தியாவின் முகம் செவ்வானமாய் மாற அதைப் பார்த்தவனுள் “செவ்வானம் சேலையை கட்டி வந்தது வீதியிலே” என்று பாட அவன் மனம் துள்ளியது. 

இப்போது,” ரஞ்சித்திற்க்கு 100% சந்தியா தன்னை காதலிக்கிறாள்” என்பது புரிந்தது. 

ஆனால்,” இது எப்போது?  எங்கே? என்று தான் அவனுக்கு தெரியவில்லை”. வேலைகளை முடித்துக்கொண்டு ஹோட்டல் திரும்பினர்.

சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு சந்தியா பால்கனியில் நடை பயில சுஜா போன் செய்தாள்.

அவளிடம்,” தான் பெங்களூரில் இருப்பதை தெரிவித்தாள்”. 

அவள்,” உடனே நான் கிளம்பி வந்து உன்னை வீட்டிற்கு அழைத்து போகிறேன்” என்று கூற அவளிடம்,” இல்லை சுஜா நான் ஆபீஸ் விஷயமா வந்து இருக்கிறேன் வேலை முடிந்ததும் நானே வீட்டிற்கு வருகிறேன்” என்றாள். 

பின்பு அவளிடம் “உன்னவரின் பெயர் என்னடி?” என்று கேட்க அவளோ,” ஆனந்த்” என்றாள். 

“சூப்பர் பெயர் டி, ஆள் எப்படி உனக்கு ஏத்தவரா?” என்று கேட்க மறுமுனையில் “சீ போடி” என்று கூறிவிட்டு போனை அணைத்து விட்டாள்.

அவள் பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு உள்ளே கதவு தட்டும் ஓசை கேட்க திறந்தவள் அப்படியே அசந்து விட்டாள். 

அங்கு நின்றிருந்தது அவளின் அண்ணன் பிரசன்னா தான். 

சிறு வயதில் தாய் தந்தையரை இழந்தவளுக்கு அனைத்துமாய் இருந்து  வளர்த்தவன் பிரசன்னாதான்.

ரயில் பயணத்தின்போது ஒரு தடவை சந்தியா தொலைந்து விட,” அவன் இரவு முழுவதும் அந்த ‘பிளாட்பார்மில்’ வெளியே நின்றிருந்தவன்.

”  எவ்வளவோ பேர் சொல்லியும் கேட்காமல் என் தங்கை என்னை தேடி வருவாள் என்று கூறி காத்திருந்த தமையன்”. 

அவள் படித்து முடித்து வேலைக்கு செல்வதாக கூறியதும்,” சரி ” என சொல்லி அவளுக்கு தைரியம் கொடுத்தவன். 

அவனும் இராணுவத்தில் உயர் பதவியில் இருப்பவன். 

இப்போது அவனை சற்றும் எதிர்பார்க்காத சந்தியா அவனை கட்டிக்கொண்டு சிறுபிள்ளை போல அழ ,அவன் அவளை சமாதானப்படுத்தினான். 

தான் இங்கு ஒரு ‘கேஸ்’ விஷயமா வந்ததாகவும் அப்போது தான் இந்த அறைக்குள் நீ நுழைவதைப் பார்த்தேன். 

நேராக இங்கு வந்து விட்டேன் என்றான். 

பிறகு இருவரும் சிறிது நேரம் தங்களின் கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

 பிறகு அவளிடம்,” இன்னும் ஒரு மாதம் தான் அப்புறம் எனக்கு மூன்று மாதங்கள் விடுமுறை சந்தியா, அப்போதே உனக்கு மேரேஜ் பண்ணலாம் என்று யோசிக்கிறேன்”. 

அதுவும் உன் விருப்பப்படி தான் என்றான். 

அப்போது கதவு மீண்டும் தட்டபட்டது.

சந்தியா சென்று கதவை திறக்க,”  இப்போது ரஞ்சித் அங்கு நின்று கொண்டிருந்தான்”. 

அவன் எதையோ கேட்க வாய் அடுத்தவன்,” உள்ளே இருந்த பிரசன்னாவை பார்த்தவன் சாரி அப்புறம் வருகிறேன்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். 

அவனைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

பிரசன்னா தங்கையிடம் விடைபெற்று கிளம்பி விட்டான். 

அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் அவளும் ரஞ்சித்தை தேடிச் சென்றாள்.

 அவள் சென்று கதவை தட்டலாமா வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டு நிற்கும் போது தான் யாருடனோ போனில் அவன் பேசிக்கொண்டிருப்பதை கேட்கவும் திரும்பச் செல்ல இருந்தவளை கதவு திறக்கும் ஓசை தடுத்தது.  

அவள் திரும்பாமல் நிற்கவும் அவனே,” அவளிடம் என்ன சந்தியா என்னை பார்க்க வந்தீர்களா? என்று கேட்டவனிடம் “ஆமாம் “என்று அவள் கூறியதும் ” சரி” உள்ளே வா “என்று அழைத்து சென்றான். 

அவள் அமைதியாய் அவனை பின்தொடர்ந்து சென்றாள். 

அவன் அவளை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று இரண்டு டம்ளரில் பழச்சாறு கொண்டு வந்தான். 

அவனிடம் மறுக்க முடியாமல் பழச்சாற்றை வாங்கிக் கொண்டவள் அவனிடம்,” அவர் என்னோட அண்ணா பிரசன்னா”. 

“ஒன் இயர் கழிச்சு இப்பதான் பார்க்கிறோம்” என்றாள்.

“அது குறித்து நான் எதுவும் உன்னிடம் கேட்கவில்லையே” என்று சொல்லவும் “சொல்வது என் கடமை ” என்றாள் சந்தியா. 

“அவளை ஊடுருவிப் பார்த்தவாறு சொல்ல வருவதெல்லாம் சொல்லி விடுகிறாயா?”என்று கேட்டான்.

 இதைக் கேட்டதும்,” ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டாலும், மீண்டும் இறுக்கமான முகத்துடன் இல்லை” என்றாள். 

அதற்கு மேலும் அவளை விடாமல் அவளிடம் கம்பெனியில் மெயில்களை செக் பண்ண சொல்லிவிட்டு அவன் ஏதோ சில டாகுமென்ட்ஸ் படித்துக் கொண்டிருந்தான். 

இருவரும் சேர்ந்து வேலைகளை செய்து கொண்டிருக்க,” திடீரென  சொலுஷன் கண்டுபிடிச்சாச்சு சந்தியா” என்று கூறிக்கொண்டு அவளிடம் நெருங்க அவள் பயந்து அவனைப் பார்த்தாள். 

அவன்,” சாரி! பழக்கதோஷம்” என்றான். அவள் அவளையே திட்டிக்கொண்டே இருந்தாள். 

“எவ்வளவு கண்ணியமானவர்”. 

அவரிடம்,” ஏன் இப்படி நடந்துகொள்கிறாய் ” என்று எதிர் கேள்விகளை சகிக்க முடியாமல் கண்மூடித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அவளின் நிலையை பார்த்து அவனுக்கு ஏனோ மனம் வலித்தது. அவன்,” அவளிடம் நீ போய் ரெஸ்ட் எடு சந்தியா நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். 

சந்தியாவும் எப்போது அறையை விட்டு வெளியேறுவோம் என்று காத்திருந்தவள் போல தலையசைத்துவிட்டு சென்றாள். 

சரியாய் அவனை கடக்கும் போது அவனைப் பார்த்துக் கொண்டே படியிறங்கியதால்  கால் தவறி கீழே விழுந்து விட்டாள். 

அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன்,” எப்படி அங்கு வந்தோம் “என்று கூட தெரியாமல் அவன் அவளை தூக்கி விட முயன்றான். 

ஆனால் விழுந்த அதிர்ச்சியில் அவள் மயக்கத்தில் இருந்ததாள். அவன் என்ன சொல்லியும் எந்த பதிலும் வரவில்லை. 

அவள் இடைக்குக் தன் கையை கொடுத்து அவளை தூக்கி சென்று படுக்கையில் படுக்க வைத்துவிட்டு,” அவசரமாய் ஹோட்டல் மேனேஜரிடம் கூற, அவர் மருத்துவரை  அவனுடன் அனுப்பிவைத்தார்”.

Advertisement