Advertisement

அவள்,”ஆனந்தத்தில் கூச்சலிடுவாள்! ஆச்சரியத்தில் விழி உயர்த்தி அவனைப் பார்ப்பாள்” என்று எதிர்பார்த்த அவனுக்கு அது ஏமாற்றமாக அமைந்தது.

 அதை கவனித்த ரஞ்சித் அவனின் தோளை தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றான். 

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் அர்ச்சனாவின் குரல் கேட்டு  தன் நிலைக்கு வந்தான். 

நரேன்,” உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டுமென்றாள்”. 

அவன் அவளின் விழிகளை நேராய் பார்க்கவும் அவள் தலையை தாழ்த்திக்கொண்டாள். 

நரேன் அமைதியாய்,” அவளிடம் எனக்கு சம்மதம்” என்று கூறியதும் அவள் அவனை விழிகள் விரிய பார்த்தாள்.

அவள் மனதை படித்தார் போல் அவன்,” இது கனவில்லை அர்ச்சு, நிஜம் தான்”

” நான் உன்னுடையவன். என் குடும்பம் நீ மற்றும் உன் அம்மாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியவனை கட்டியணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள். 

அவளை ஆதரவுடன் அணைத்து கொண்டவன் ,”எனக்குத் தெரியும் அர்ச்சு, அம்மாவின் மேல் நீ உயிரையே வைத்திருப்பது” என்றவனிடம் அதை தான் நீங்கள் மாற்றி விட்டீர்களே என்று கூறிவிட்டு அவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

 அர்ச்சு,” வேண்டாம். இது ஆபீஸ் அப்புறம் நான் ஏடாகூடமா ஏதாவது பண்ணி வெச்சுடுவேன் பார்த்துக்கோ” என்றான். 

“அந்த பயம் இருக்கட்டும் என்று ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு விரலால் அவனை எச்சரித்தவளை துரத்த அவள் வெளியே ஓடிவிட்டாள்”.

 அவள் ஓடி வரவும், அவளை எதேச்சையாக பார்த்த ரஞ்சித், “என்ன மேடம் பிராப்ளம் சால்வுடா” என்று கேட்டுவிட்டு,” நரேன் கிடைப்பதற்கு அரிய பொருள்.பத்திரமாக பார்த்துக்கொள் “என்று கூறினான். 

அதற்கு அவள் பதில் ஏதும் கூறாமல்,” நீ உன்னைப் பற்றி என்ன யோசித்து வைத்திருக்கிறாய்” ரஞ்சித்? என்று கேட்க அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவன் எதையோ பறிகொடுத்தவன் போல் ஆகிவிட்டான். 

அவனை அப்படியே விட மனமில்லாமல் ரஞ்சித்,” அம்மாவின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பார்த்தாயா”?

 ரஞ்சித்,” அவர்களும் எவ்வளவு நாள்தான் அவர்களின் சோகத்தை முகமூடி போல் திரை போட்டு மூடி வைக்க முடியும்”. 

இப்போது,” நீ உன் தங்கையின் மகள்  யாழினியின் தாய்மாமன் ஆகிவிட்டாய்”. ஆனால்,” நீ இன்னும் கணவனாகவில்லை என்பதை மறந்து விடாதே!”

“இதுவரை உனக்காக உன் குடும்பம் செய்த தியாகம் போதாதா!” என்று வரிசையாக கேள்விகளை கேட்டு தள்ளினாள் அவள். 

அவன்,” அவளிடம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றான். 

“உனக்கு ஒரு மாதம் நேரம் தருகிறேன், நீயாய் ஒரு பெண்ணைப் பார்த்து ஓகே சொல்லணும்”

 இல்லனா,” உன் அம்மா சொல்ற பொண்ணுக்கு தாலி கட்டணும் ஓகேவா?” என்று நிறுத்த சரி என்று ரஞ்சித் தலையசைத்தான். 

அன்று மாலை ஆபீஸ் முடிந்ததும் நேராக வீட்டிற்கு செல்லாமல் ஷாப்பிங் பண்ணலாம்னு நினைத்து போத்தீஸ் சென்றவன் பட்டுப்புடவைகள் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றான்.

அதேநேரம் சந்தியா தன் தோழியுடன் அங்கு வந்திருந்தாள். சுஜாதாவும் சந்தியாவும் சிறுவயது முதல்  இணைபிரியா தோழிகள்.

 ஆனால், அவர்கள் சந்தித்துக் கொள்வது அபூர்வம் தான்.

 அதனால் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது இது போல் வெளியில் வருவார்கள். 

ரஞ்சித் இருந்த மனநிலையில் அவனால் புடவையை தேர்வு செய்ய முடியவில்லை. அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

 சந்தியாவும் சுஜாவும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு பில் கவுண்ட்டருக்கு சென்றனர்.  

அங்கு,” எதிர்பாராத விதமாய் குழந்தை ஒன்று படிக்கட்டில் விளையாடிக்கொண்டிருந்தது, கால் தவறி கீழே விழும் நேரத்தில் ரஞ்சித் அந்தக் குழந்தையைத் தாங்கி பிடித்தான்”. 

கணநேரத்தில் நிகழ்ந்து விட்டதால் குழந்தையின் பெற்றோருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்!

 அவன்,” குழந்தையை அவர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு திரும்பவும் சந்தியா அவனிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டவும் சரியாய் இருந்தது”. 

அவன், அவளை அதிசயமாய் நோக்க! அவள் சிரித்துக்கொண்டே ஷாப்பிங் பிரண்டோட வந்தேன் என்று அவனிடம் கூறினாள். 

பின்பு அவள் சுஜாவை அழைக்க அவளோ கண்டுகொள்ளாமல் அங்கு ஒரு ஆன்ட்டியிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தாள். 

ஒரு வழியாய் அவள் வந்ததும் அவளை அவனுக்கு அறிமுகம் செய்து வைக்க,” அவள் சும்மா இல்லாமல் அவர் யார்?” என்று கேட்டு வைத்தாள். 

என் மணவாளன் என்று கூறத் தொடங்கிய வாயை அடக்கிக்கொண்டு,” ஆபீஸ்ல உடன் பணிபுரிபவர்” என்று ஒரு எளிமையாய் கூறினாள். 

அவனிடம்,” என்ன சார் இந்த பக்கம் வந்திருக்கீங்க? யாரோட வந்தீங்க? “டூ  யூ நீட் எனி ஹெல்ப்  பிரம் ஹஸ்” என்ற நேரடியான கேள்வியில் அவளை ரஞ்சித்திற்கு  பிடித்துப் போய்விட்டது. 

அவனும் சிரித்துக் கொண்டே,” எனக்கு நீங்கள் இரண்டு புடவைகள் செலக்ட் பண்ணி தரனும்” என்றான். 

“யாருக்குனு நாங்க தெரிஞ்சிக்கலாமா சார்?” என்று சுஜா கேட்கவும்,

 அவன்,” அதற்கு கண்டிப்பாக ஆனால் அதற்கு  முன் ஒரு கண்டிஷன்!” என்றான். 

இருவரும் என்னவென்பது போல பார்க்க “இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம்”

” நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம்!” என்று கூறிவிட்டு அவர்களைப் பார்த்தான். 

“ஓகே! ரஞ்சித் நாங்க செலக்சன் ஸ்டார்ட் பண்றோம்”

” நீங்க போய் வேற ஏதாவது வாங்கணும்னா வாங்குங்க” என்றாள். 

சரி என்று கூறி அவன் செல்லும் போது,” அவனிடம் என்ன பட்ஜெட்டில் எடுக்கணும்?” என்று சந்தியா கேட்டு வைத்தாள். 

அவன் அமைதியாய் புன்னகைத்து விட்டு ,”நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்”.

” நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று  கூறிவிட்டுச் சென்றான். 

“அவன் சென்றதும் இருவரும் தங்கள் செலக்சனை தொடர்ந்தனர்”.

 20 நிமிடம் கழித்து அவன் வந்த போது,” அழகிய கடல் நீல நிறத்தில் கண்ணனின் லீலைகள் பதித்த புடவை ஒன்றும் , அரக்கு கலரில் ஒரு பட்டுப்புடவையும் எடுத்து வைத்திருந்தனர்”.

 அவன் அதைப் பார்த்துவிட்டு,” நைஸ் “என்றான்.

 அவன் பில்லை பே பண்ணிட்டு வந்ததும்,” அவர்கள் அனைவரும் லன்ச்க்கு ஹோட்டல் சென்றனர்”.

லன்ச் முடிந்து  சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் வீடு திரும்பினர். 

L

அடுத்தநாள் அர்ச்சனாவை பெண் பார்க்க வருவதாக கூறி இருந்தான், நரேன்! என்பது நினைவுக்கு வர,” அர்ஜுனுக்கு கால் பண்ணி ஞாபகப்படுத்தினான்”. 

அர்ஜுன், ரஞ்சித்திடம் “அவளுக்கு ஏதாவது சர்ப்ரைஸ் கிப்ட் தரனும் டா” என்று சொல்ல,” சரி பிளான் சொல்லுடா, அப்படியே பண்ணிடலாம்” என்றான்.

 ரஞ்சித் அவனிடம்,” மீரா எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டு வைத்தான்.

 இதுதான் சமயம் என்று,  “இந்த அத்தானோட நெனப்புலயே இருக்கா போல” ஒழுங்காய் சாப்பிடுவதும் இல்லையாம்!

 அவள் கூட போன்ல பேசற அப்போ ,”என்னோட மாமியார் திட்டியதை கேட்டேன்”. 

இதைவிட காமெடிய கேளுடா ரஞ்சித்

ன்னடி,”எதையாவது பார்த்து பயந்திட்டியா! மந்திரித்து தாயத்து கட்டி விடவானு கேட்கறாங்க”

இன்னும் கூட அவங்களுக்கு டவுட் வரலை!  என்னோட மாமியார் ரொம்ப நல்லவங்கடா!!! என்று கூறி முடித்தான்.

கொஞ்சம் பொறுத்துக்கோடா அர்ஜுன்.

 அர்ச்சு “மேரேஜ் ஃபிக்ஸ்”ஆகிவிடட்டும் என்று கூறியவனிடம்,”எனக்குனு ஒரு சில கடமைகள் இருக்கு அதை எல்லாம் முடிச்சுட்டு தாண்டா மேரேஜ்”. 

“உங்க சிஸ்டர் கிட்ட கூட பேசி சம்மதம் வாங்கியாச்சு” என்றான். 

“எனக்கும் சொல்லுடா! உன்னோட கடமை என்னு பார்க்கலாம்” என்று ரஞ்சித் கேட்க,” உனக்கும் ஒரு கால் பூட்டு ரெடி பண்றது தான் டா”

” எனக்கும் அர்ச்சுக்கும் முதல்வேலை” என்று கூற ,”அதெல்லாம் எதுவும் இப்ப வேணாம் டா”. 

“என்னால இன்னும் நேத்ராவை முழுசா மறக்க முடியல”

மறக்க  முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன்” என்றான். 

இதற்குமேல் பேசினாலே மூட் அவுட்  ஆகி விடுவான் என்பதால் அவனும் அவனைப் பற்றி மட்டும் பேசிவிட்டு போனை வைத்தான். 

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கெல்லாம் அர்ச்சனாவின் வீடு பரபரப்பாக இயங்கியது. 

ஒருபுறம் வீட்டுவேலைகளை மீனாட்சியும்  குந்தவியும் பார்க்க மற்ற வேலைகளை அர்ஜுனும் ரஞ்சித்தும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வர செழியனும் செல்வநாதனும் சென்றனர்.

“சரியாக 10 மணிக்கு நரேன் தன் வீட்டாருடன் அவள் வீட்டிற்கு வந்தான்”. 

பெரியவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க,” நரேன் மட்டும் தன் கண்களாலேயே அர்ச்சனாவை தேடிக்கொண்டிருந்தான்”. 

அதை கவனித்த குந்தவி ,”பெண்ணை அழைத்து வரச் சொன்னாள்”. 

அழகாய் பச்சை நிற பட்டுப் புடவையில் தேவதை மாதிரி அமர்ந்திருந்தவளை எழு சொல்லி அர்ஜூனும் ரஞ்சித்தும் திருஷ்டி கழித்து விட்டு அவளின் இருபுறமும் அர்ஜுன் மற்றும் ரஞ்சித் நின்று கொண்டு அவளை வெளியே அழைத்து வர நரேன் அவளை பார்த்ததும் இமைக்க மறந்து விட்டான்.

 குந்தவி,” இப்போது அர்ஜுன் ரஞ்சித் இங்கே வந்து உட்காருங்க” என்று சொல்ல அதற்கு ரஞ்சித்,” அம்மா அர்ச்சு தனியாய் நிற்க பயப்படுவாள்” என்றான். 

“நான் என் மருமகளை தனியாய் பார்க்க வேண்டும்” என்று குந்தவி சொல்ல “தேவையா இது?” என்பது போல் அர்ஜூன் ரஞ்சித்திடம் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் வந்து அமர்ந்து கொண்டனர்.

 அனைவருக்கும் காபி மற்றும் ஸ்வீட் கொடுத்து விட்டு செல்லும் போது,” நரேன் மட்டும் அவள் கையை லேசாக உரசி விட அவள் முகம் புதிதாய் மலர்ந்த ரோஜா போல் ஆகிவிட்டது”. 

பின்பு செல்வநாதனிடம் குந்தவியிடம் கண்களாலேயே பேசிவிட்டு தங்கள் வீட்டாரின்  சம்மதத்தை தெரிவித்தார்

அதன்பின் அர்ஜூனும் ரஞ்சித்தும் தங்கள் அரட்டையை ஆரம்பித்தனர்.

 அர்ஜுன் முதலில்,”மாப்பிள்ளைக்கு பாட தெரியுமா?” என்று கேட்டான்.

 அவன் குறும்பை கவனித்த செல்வநாதன் தன் மகன் பாடுவான் என்றார். 

இப்போது அர்ச்சனா அவனை பார்க்க, அவன் அவளை பார்த்து கண்டித்துவிட்டு “அர்ஜுனிடம் என்ன பாட்டு என்று நீங்களே  சொல்வீர்களா இல்லை என்னோட சாய்ஸா?” என்று கேட்டாள்.

 உடனே,”ரஞ்சித் உன் காதலை மறைமுகமாக கூறுவது போல் இருக்கும் ஒரு பாட்டை பாடு” என்றான்.

 சரி என்று தலையசைத்துவிட்டு “என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்” என்று பாட அனைவரும் “வாவ்” என்றனர். 

உடனே குந்தவி,” அர்ச்சனா நீ ஒரு பாட்டு பாடுமா” என்று கேட்க அவள்,” இல்லை வேண்டாம்” என்று மறுக்க நரேன் அவளை கண் செய்கையாலே பாடச் சொன்னாள். 

உடனே அவள் “யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ” இவன் என்று பாட ஆரம்பிக்கும்போது அர்ஜுனன் ரஞ்சித்தும்,” பென்டாஸ்டிக்” என்றனர். 

இவ்வாறு சிறிது நேரம் சென்றுகொண்டிருக்க பிறகு,” நரேனையும் அர்ச்சனாவையும் தனியே பேச அனுமதி தந்து அனுப்பினார்கள்”. 

நரேன் முன்னே செல்ல பின்னால் சென்ற அர்ச்சுவிடம் ,”அர்ஜுனும் ரஞ்சித்தும் “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்ல அவள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் “சீ போங்கடா!” என்று சிணுங்க அர்ஜுன்,” அவளிடம் பாருடா நம்ம அர்ச்சு வெட்கப்படுகிறாங்களாம்!” என்றான்.

உடனே அவள்,” அவன் தலையில்  ஒரு குட்டி குட்டு வைத்து விட்டு ஓடிவிட்டாள்”. 

அவளுக்காக அங்கு நரேன் காத்துக் கொண்டிருந்தான்.

 “அவள் வந்ததை கூட கவனிக்காமல் யாருடனோ அவன் செல்லில் பேசிக்கொண்டிருக்க அர்ச்சனாவிற்கு ஏனோ மனம் வலித்தது”.

“அவள் அமைதியாக சென்று தோட்டத்தில் உள்ள பூக்கள் மீது தன் கோபத்தை காட்டிக்கொண்டிருந்தாள்”. 

திடீரென,” அவன்  அருகாமையை உணர்ந்தவள் போல் திரும்பி பார்க்க அங்கே நரேன் சிரித்த முகத்துடன் நின்றிருந்தான்”. 

அவனிடம் கோபப்பட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனைப் பார்த்ததும் மறைந்துவிட்டது. 

உள்ளுக்குள் “உன்னை பார்த்த பின்பு நான் நானாக  இல்லையே” என்று மனம் பாடத் துவங்கியது.

 நரேன்,” இரண்டடி முன்னே எடுத்து வைக்கவும்” அர்ச்சனா,” இரண்டு அடி பின்னே எடுத்து வைக்கவும் சரியாய் இருந்தது”. 

இன்னும் இரண்டு அடியில் மரம் இருப்பதை அறியாமல் அவள் பின்னே வந்து  கொண்டிருக்க மரத்தின் மீது மோதி நின்றாள். 

அதற்குள் நரேன் அவளை இருபுறமும் தன் இருக்கைகளை ஊன்ற “அவளுள் ஒரு மின் அதிர்வு தோன்றியது” அதை கவனித்த நரேன் அவளின் முகத்தை நிமிர்த்தி அவளிடம்,” ஏன் என்னைப் பார்த்தால்  மட்டும்  பயப்படுகிறாய்?” என்று கேட்டான். 

அவள் எதுவும் சொல்லாமல் இருக்க,” அவன் மீண்டும் என்னை உனக்கு பிடித்திருக்கிறதா?” என்று கேட்கவும் அர்ச்சனா மெல்லிய குரலில் “உள்ளம்! கொள்ளை போகுதடா! உன் அருகில், உன் சிரிப்பில், என்னை மறந்தேன் நானடா!” என்று அவள் பாடியதும் அவன் அசந்து விட்டான். 

அவளை அப்படியே தூக்கியவன் “ய் நீ இப்படியெல்லாம் உசுப்பேத்தினா எப்படி டீ??? அப்புறம்  இப்பவே இங்கேயே தாலி கட்டிடுவேன்” என்றவனிடம் அதனால் தானே இத்தனை நாள் பாடவில்லை நான்.

 அப்புறம் “நீங்க விடற லூட்டியெல்லாம்  தாங்க முடியாதே!”

 ஏற்கனவே,” உங்களைப் பார்த்ததும் பாகாய் உருகும் என் மனதை அமைதி படுத்த என்னால் முடியவில்லை” என்று கூறினாள்.

 “அவளை  தன் தோளின் மேல் சாய்த்துக் கொண்டே அது எனக்கும் நன்றாகவே தெரியும் அர்ச்சு”. 

“உன்ன முதல்ல பார்த்தப்போ ஏனோ என்னால மத்தவங்க போல ஈசியா எடுத்துக்கிட்டு பேசி சிரிக்க முடியல”.

உன்ன பார்த்ததுல இருந்தே நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டேன்.

அப்புறம் தான் உன்னையும் நோட் பண்ண ஆரம்பிச்சேன்.

 எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுற நீ ,”என்கிட்ட பேசறப்ப மட்டும் தயக்கம், பயம், வெட்கம் போன்ற எல்லாத்தையும் மாத்தி மாத்தி பண்ணியா!” அங்கேயே 50% என்னோட லவ் கன்ஃபார்ம். 

அதுக்கு அப்புறம்,”உன்னோட சைலண்ட் கேரக்டர், ரஞ்சித் அர்ஜுனுடன் நீ பழகிய விதம், அம்மா மேல உனக்கு இருக்கிற அன்பு! இதெல்லாம் இல்லாம என்மேல வச்சிருக்கிற உண்மையான காதல்” இவையெல்லாம் தான் என்னோட 100% லவ்வுக்கு காரணம் என்றவனிடம் எனக்கு ஒரே ஒரு காரணம்தான் நரேன்,”நீங்க என்ன பார்க்குறப்ப மட்டும் தான் அந்த செய்தி இருக்கும்”. 

“அது மட்டும் தான் என்னை உங்களை திரும்பி பார்க்க வைத்தது” என்றாள். 

அவன் அவளிடம் “சரி, ஓகே! மிஸ்ஸஸ் நரேன்”  போகலாமா என்று வினவ அவனின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டு இருவரும் வீட்டின் ஹாலுக்கு வந்தனர். 

அவர்கள் வருவதை கவனித்து,” அர்ஜுன் ஒரு பிளாஸ்டிக் பல்லியை அர்ச்சுவின் மேல் வீச அவள் அலறிக்கொண்டு நரேனை கட்டிக்கொண்டாள்”. 

அதேபோல் ரஞ்சித்,”வாசலில் இருந்த மேட் அடியில் நெல்லைக் கொட்டி வைத்திருந்தான்“.

 அதை கவனியாமல் இருவரும் ஒரே நேரத்தில் காலை வைக்கவும் இருவரும் சறுக்கி விட்டு கீழே விழுந்தனர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த பெரியவர்கள் அனைவரும் அவர்களைப் பார்த்து சிரிக்கவும் அர்ச்சு அவசரமாய் எழுந்து உள்ளே சென்று விட்டாள். 

பின்பு ரஞ்சித் மற்றும் அர்ஜுன்,” நரேனிடம் என்னடா! மச்சான் காலையிலேயே கனவா? கீழே பார்த்து வரக்கூடாதா?” என்று கேட்டனர்.

அதுவரை  பேசட்டும் என்று விட்டு விட்டான்.

 ஆனால், இனியும் பொறுமை காக்கவும் முடியாமல் போகவே,” டேய்! செய்வதையும் செய்து விட்டு இப்போ ரெண்டு பேரும் பேசுறீங்களா?” என்று அவர்களைத் துரத்த மூவரும்  தோட்டத்துப் பக்கம் ஓடி விட்டனர். 

உள்ளே தன் அறையில் அர்ச்சனா நரேனின்  நினைவில் மூழ்கி இருந்ததால் உள்ளே வந்த குந்தவியை  கவனிக்கவில்லை.

குந்தவி  அமைதியாய் அவள் முடி கோதி விட தன்னிலைக்கு வந்தவள்,” அத்தை என்று கூறிக்கொண்டே எழ முயல அதை தடுத்து விட்டார் குந்தவி”.

” நீ கவலைபட வேண்டாம் அர்ச்சனா”

” நான் உன்னை என் மகளாக நினைக்கிறேன்” அது மட்டுமல்லாமல்,” உன் அம்மாவையும் நம்முடன் தங்க வைத்துக் கொள்ள எங்களுக்கு முழு சம்மதம்” என்றார். 

அவரை கட்டிக்கொண்டு “தேங்க்ஸ் அம்மா” என்றாள் அர்ச்சனா. 

அர்ச்சனாவை தேடி வந்த அஞ்சலா,” அண்ணி! நீங்க இங்கதான் இருக்கீங்களா? கீழே உங்க ரெண்டு பேரையும் தேடுறாங்க!” என்றார். 

மூவரும் கீழே இறங்கி வந்ததும் அர்ஜுன் நரேனிடம், “பாஸ் உங்க ஆளோட சேர்ந்த மாதிரி நில்லுங்க” என்றான்.

நரேனும் எதுவும் கேட்காமல் அர்ச்சனாவின் பக்கத்தில் நிற்க அர்ச்சனாவோ, “இப்ப என்ன பண்ண போறாங்களோ? இந்த தடிமாட்டு தாண்டவராயன்கள்” என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 

அர்ஜுனும் ரஞ்சித்தும் ஒரு “கிப்ட் பாக்ஸ்” ஐ அவர்களிடம் நீட்ட ,”இது என்ன?” என்பது போல் பார்க்க எங்களால் முடிந்தது, “மிஸ்ஸஸ் நரேன்” வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர்.

Advertisement