Advertisement

அழகான மலர் ஒன்று காற்றில் அசைந்தாடும் அனுபவத்தை அவன் உணர்ந்தான்.

அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பி சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன சந்தியா முடிந்ததா என்று இருபொருள்பட கேட்க அவள் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது. அவனும் அவள் முகத்தை ரசித்துக் கொண்டே  நான் வேலைகளை சொன்னேன் சந்தியா என்றான். 

அவள் அவன் முகத்தை பார்க்காமல் வேகமாக சென்று விட்டாள். அன்று அனைவரின் புராஜெக்டை முடித்தாக வேண்டும். அதனால் அனைவரும் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தனர். 

அர்ஜூனின் மாமா அவன் வீட்டிற்கு வந்திருப்பதாக அவன் அம்மா கூற அவனும் சீக்கிரமாக சென்று விட்டான். 

கடைசியில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பிய சந்தியா அப்போதுதான் மணியை பார்க்க அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

அப்போது மணி 10 அவள் அவசர அவசரமாய் தன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போதுதான் அர்ச்சனா இன்னும் ஆபீசில் இருப்பதை பார்த்து அவளிடம் சென்றாள். 

அவளின் வரவை உணர்ந்த அர்ச்சனா திரும்பி சந்தியாவிடம் நீ இன்னும் போகலையா சந்தியா? என்று கேட்க அவள் அமைதியாய் இதை நான் உன்னிடமும் கேட்கலாம் என்று சொல்லவும் இருவருமே சிரித்து விட்டனர்.

 சரி ஒரு நிமிடம் பொறு இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு கம்ப்யூட்டரை ஆப் செய்தாள். 

இருவரும் பேசிக்கொண்டே வெளியில் வரவும் அவர்களிடம் வாட்ச்மேன் ஏதோ கேட்க இவர்களும் பதிலளித்துக் கொண்டிருந்தனர். 

அதேசமயம் நரேனும் ரஞ்சித்தும் அனைவரின் ரிப்போர்ட்களையும் சரி பார்த்து விட்டு கிளம்பி வெளியே வந்தனர். 

வந்தவர்கள் இருவருக்குமே ஆச்சரியம் இன்னும் அர்ச்சுவும் சந்தியாவும் அங்கு இருப்பதை கண்டு ரஞ்சித் நரேனை செய்கையினால் அமைதியாக இருக்கும்படி சொல்லி விட்டு அர்ச்சனாவிடம் சென்று இன்னும் நீ கிளம்பாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் அர்ச்சு என்றான். 

அதற்கு அவள் எனக்கு இப்படி ஒரு வேண்டுதல் ரஞ்சித் உனக்கு எப்படி? நீ ஏன் இன்னும் செல்லவில்லை என்றாள்.

அவன் சிரித்து விட்டு ஓகே லீவ் இட் நீங்க ரெண்டு பேரும் எப்படி போவதாக உத்தேசம் என வினவ அர்ச்சு அவனிடம் நீ எதற்கு இருக்கிறாய் ரஞ்சித் எங்களைக் கூட்டிக்கொண்டு போய் விட மாட்டாயா, என்ன?என்றாள். 

அவன் இப்போது என்னால் ஒருவரைத்தான் கூப்பிட்டு கொண்டு செல்ல முடியும். அது ஏனோ நான் இன்னைக்குன்னு பார்த்து பைக்கில் வந்து இருக்கேன் என்றான். 

அப்போது அர்ச்சு கவலையாய் முகத்தை வைத்துக்கொண்டு இப்போது என்ன செய்வது என்று யோசிக்கும்போதே யாமிருக்க பயமேன் என்ற நரேனின் குரல் கேட்டு திரும்பியவள் ரஞ்சித்தை பார்த்து முறைத்தாள். 

அவனோ ஒன்றும் அறியாத பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தான். 

அதற்கு மேலும் விளையாட நேரம் இல்லை என்று எண்ணிய நரேன் ரஞ்சித்திடம் சந்தியாவை அவள் வீட்டில் விடும்படி சொல்லிவிட்டு அர்ச்சுவிடம் திரும்பி சரி கிளம்பு போகலாம் என்று சொல்ல அவளோ ஐயோ! என்று அலற, அவன் உன்னை உண்மையா காதலிக்கிறான் அவனை நம்பலாம். 

இப்போது நீ அவனுடன் செல்லவில்லை என்றால் அது அவனை நீ நம்பாததற்கு சமம். இதில் நானும் தலையிட முடியாது. புரிந்து நடந்து கொள் என்றான். 

இருவரிடமும் விடை பெற்று கொண்டு நரேனுடன் கிளம்பினாள் அர்ச்சு.

அவர்கள் கிளம்பியதிலிருந்து பத்து நிமிடம் வரை இருவருமே ஏதும் பேசிக் கொள்ளவில்லை. நரேனே பேச்சை ஆரம்பித்தான்.

 நான் கூப்பிட்டும் ஒரு மரியாதை கூட இல்லாமல் ரோட்ல போறவன் கூப்பிடுற மாதிரி அலர்ற நானும் அவனும் ஒன்றா  என்று கேட்க அவளோ அவனையே இமைக்காமல் பார்த்தாள். 

அந்த பார்வையில் மயங்கியவன் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவளை பார்க்க அவளோ தலையை தாழ்த்திக் கொண்டாள்.

 அர்ச்சு கிளம்பலாம் டைம் ஆச்சு அம்மா தேடுவாங்க என்றாள். சரி என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விடு என்று கேட்க அவன் என்ன  கேட்கப் போகிறான் என்று அவளுக்கு புரிந்து விட்டது. 

அவள் பரிதாபமாய் அவனை பார்க்க அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அர்ச்சு நான் எப்போது உன்னை பார்த்தேனோ, அப்போதே   உன்னை என் மனைவியாய் தான் நான் பார்த்தேன். 

அதனால் என்மீது உனக்கு எந்தவித தயக்கமும் வேண்டாம். நானே சந்தியாவை அவள் வீட்டில் விட்டு இருக்கலாம். ஆனால் அது அவளுக்கும் சரி உனக்கும் சரி நன்மையாய் முடியாது.

 அதனால்தான் நான் உன்னை உரிமையுடன் அழைத்தேன் என்று கூற அவனைப் பார்க்க முடியாமல் சரி நரேன் என்னை மன்னித்து விடுங்கள் நான் உங்கள் அளவுக்கு காதலிக்கிறேனா தெரியல ஆனா நீங்க இல்லாம நான் இல்லை அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும் என்றவளின் கேசம் கோதி விட்டு உன்னை நம்புகிறேன் அர்ச்சு. 

இந்த குழந்தை தனத்தை தான் அதிகமாய் ரசிக்கிறேன் என்றதும் அவனை பொய்யாக முறைத்து விட்டு அவன் கையை கிள்ளினாள்.

பிறகு இருவரும் கிளம்பிவிட்டனர். இங்கு சந்தியா அமைதியாய் நிற்க வேறுவழியின்றி ரஞ்சித் அவளிடம் போகலாமா? என்று கேட்டான். 

அவள் மனதில் இதமாக உணர்ந்தாலும் வெளியில் நான் பஸ்ல இல்ல ஆட்டோல போகிறேன் “தேங்க்ஸ் பார் யுவர் கேர் ஆன் மீ “ என்றவளிடம் அது சரிவராது.

 அது மட்டுமில்லாமல் பாதுகாப்பும் இல்லை.  என்னால் உனக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது என்றான்.

 நான் என்றும் உங்களை அப்படி நினைத்ததில்லை என்றாள். உங்களை யார் என்று மற்றவர்கள் கேட்டால் என்ன சொல்வது என்று கேட்டவளை ஆழமாய் பார்த்தான்.

அவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால் புரியவில்லை.

 அவளிடம் ஏனோ அதற்கு மேலும் ஆர்க்யூமன்ட் பண்ண அவன் விரும்பவில்லை.

 சரி இனி உன் இஷ்டம் என்று கூறிவிட்டு அவன் கிளம்பி விட்டான். 

அவளது விழியில் காவிரி உடைந்து அவள் உடலெங்கும் பரவ தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாய் காத்திருந்தவள்  சோர்ந்தது தான் மிச்சம். 

அவளது கண்கள் தூக்கத்தில் மூழ்க ஆரம்பித்துவிட்டன. அவள் சாலையை பார்த்துக் கொண்டிருக்க அங்கு நான்கு ஆண்கள் கையில் பாடல்களுடன் தள்ளாடிக் கொண்டே வந்து இருந்தனர்.

 அவர்களை பார்த்ததும் ரவுடி போன்ற தோற்றத்தை கொண்டிருப்பதை தெருவிளக்கின் வெளிச்சத்திலேயே கண்டுபிடித்துவிட்டாள். 

சந்தியா இப்போது அவள் அவசரமாய் ஓட்டமும் நடையுமாய் செல்ல அதைப் பார்த்த அந்த நால்வர் அவளை பின் தொடர ஆரம்பித்தனர். 

இப்போது சந்தியாவிற்கு தன் மீது கோபமாய் வந்தது. பேசாமல் ரஞ்சித்துடன் போயிருக்கலாமே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த ரவுடிகள் அவள் முன் வந்து நின்றனர்.

 அதில் ஒருவன் துணை இல்லை என்றால் எங்களிடம் கூறியிருக்கலாமே ஏன் நாங்கள் கூட வந்து இருப்போமே என்று கேட்டான். 

அவள் வழியை விடுங்கள் என்று கூறி விட்டு நகர முயல அவள் கையைப் பிடித்து இழுப்பது போலத் தோன்ற திரும்பிப் பார்த்தவள் ஸ்தம்பித்து விட்டாள். 

அவளைத் தன் தோளின் மேல் சாய்த்து அவள் கையைப் பிடித்து இருந்தவன் ரஞ்சித். அவள் அறியாமல் அவள் மயங்கி விட்டாள். 

அவன் அவளைத் தன் தோளின் மேல் சாய்த்துக் கொண்டே சண்டையிட்டான். கடைசியில் அந்த ரவுடிகள் அனைவரும் ஓடி விட்டனர். 

ஆனால் ரஞ்சித்தின் கையில் கத்தி ஒன்று ஆழமாய் இறங்கி இருந்ததால் அவனால் அந்த கையை அசைக்க முடியவில்லை இருப்பினும் அவளை பைக்கில் முன் புறம் உட்கார வைத்துக் கொண்டு சென்றான். 

அப்படியே  அவன் செல்லும் போது அவள் முழுவதுமாய் அவன் மேல் சாய்ந்து இருந்தாள்.

 அவர்கள் வீட்டை நெருங்கும் சமயத்தில் சந்தியா கண் விழித்தாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

 இப்போது தன்னை தாங்கிக் கொண்டிருப்பவர் ரஞ்சித் என்று. அவள் அவசரமாய் அவனை விட்டு விலக முயல அவன் இப்போது அவளைப் பார்த்தான். 

அவள் தலையை தாழ்த்திக் கொண்டாள். அவர்கள் வீட்டை அடைந்ததும் சந்தியா இனிமேல் நான் போய் கொள்கிறேன் ரஞ்சித் இப்போதாவது நீங்கள் கிளம்பலாமே நேரம் ரொம்ப ஆயிடுச்சு என்றவளிடம் குடிக்க ஏதாவது கிடைக்குமா என்று கேட்க அவள் அவசரமாய் மறந்து விட்டேன் என்று  கூறிக்கொண்டே அவனையும் உடன் அழைத்துச் சென்றாள்.

அவள் வீட்டை திறந்து உள்ளே சென்று லைட்டை ஆன் செய்யவும் ரஞ்சித் வரவும் சரியாய் இருந்தது. அவன் கையை பார்த்தவள் அப்படியே ஒரு நிமிடம் துடித்துவிட்டாள்.

 பின்பு முதலுதவி பெட்டியை எடுத்து வந்து செய்ய வேண்டியதை செய்து விட்டு அவனுக்கு இரவு உணவை தயார் செய்தாள். 

அவர்கள் இருந்த சோர்வில் ரஞ்சித் சிறிது நேரம் உறங்கி விட்டான். அந்த நேரத்தை அவள் சமைக்க பயன்படுத்திக் கொண்டு அவள் சென்று பிரஸ் ஆகி வந்து அவனை எழுப்பினாள். 

முதலில் அவளைப் பார்த்ததும் யோசித்தவன் மீண்டும் தன் நிலைக்கு வந்தான். அவள் சாப்பிட அழைத்ததும் அவனோ பரவாயில்லை என்றான்.

 அவள் எனக்கு பசிக்கிறது என்று சொல்ல அவனும் அவளுடன் சென்று சாப்பிட்டான். அப்போதுதான் அவனுக்கு நாள் முழுவதும் சாப்பிடவில்லை என்ற உணர்வு வந்தது. 

அவன் சாப்பிட்டு முடித்ததும் அவனிடம் அவள் அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற  கெஸ்ட் ரூமில் தங்கிக் கொள்ளுமாறு கூற அவன் மறுத்துவிட்டான். 

அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டன. இருப்பினும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் வழியனுப்பி வைத்தாள்.

 ரஞ்சித் வீட்டிற்கு வந்ததும்  நேராய் அவன் அறைக்குச் சென்று உறங்கிவிட்டான். அடுத்த நாள் காலையில் மீனாட்சி அவனை எழுப்பி அவனிடம் காபியை நீட்டி அவனின் முடி கோதிவிட்டாள். 

அவனும் சமத்து பிள்ளையாய் அமர்ந்திருக்க அவன் கையிலிருந்த காயத்தைப் பார்த்து மீனாட்சி துடித்துப் போய் விட்டாள். 

அவனும் எவ்வளவோ சமாளித்தும் அவள் சமாதானம்  அடையவில்லை. அதனால் வருத்தப்பட்ட அவன் , பிறகு தன் தாயிடம் ஆபீஸ் செல்லவில்லை என்று கூறியதும் அவள் முகத்தில் பிரகாசம் பரவியது.

 அவள் எழுந்து கொண்டு அவனை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அவன் விட்டத்தை பார்த்து அமர்ந்திருக்க அவன் செல் ஒலித்தது.

 எடுத்து ஹலோ என்றதும் அவனிடம் ரஞ்சித் உங்களுக்கு இப்போது எப்படி இருக்கிறது?  சாரி என்னால் தானே உங்களுக்கு இந்த வேதனை என்ற சந்தியாவின் குரல் ஒலிக்க, மனதுக்கு இதமாய் உணர்ந்தான்.

 அவள் மீண்டும் சாரி என்று சொல்ல இதை விட்டால் வேறு பேசமாட்டாயா? எனக்கு ஒன்றும் இல்லை. அம்மா சொன்னாங்க அதான் லீவு போட்டுவிட்டேன்.

 எனக்கு உன்னோட ஹெல்ப் வேணுமே என்றான். சொல்லுங்கள் என்றாள் அவள் சிறு மன வருத்தத்துடன் .அவனுக்கும் அது புரியத்தான் செய்தது. 

அவன் என்னோட மெயில் செக் பண்ணி  பதில் அனுப்பி விடுங்கள். ஏதாவது டவுட் னா எனக்கு ஒரு கால் பண்ணுங்க என்றவனிடம் சரி உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு வைத்தாள். 

சந்தியாவின் நினைவுகள் எல்லாம் இங்கே ரஞ்சித்தை வலம் வர அவள் அங்கு உயிரில்லா சிலை போல் அமர்ந்திருந்தாள்.

 அர்ச்சு  அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். நரேன் சந்தியாவை அழைத்ததால் அவள் அவசரமாய் எழுந்து செல்லும் போது அவளது சுழல் நாற்காலியில் இடித்து கீழே விழுந்து விட்டாள். 

சத்தம் கேட்டு ஓடிவந்த வித்யா அவளை தூக்கி விட எழுந்து நின்ற அவளின் வலது கையில் ரத்தம் வடிந்து கொண்டு இருந்ததைக் கண்டு பயந்து விட்டாள்.

 என்னாச்சு சந்தியா? என்று கேட்டதும் ,ஒன்றும் இல்லை என்றவளை முறைத்துவிட்டு அவளை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றாள்.

 அங்கு டாக்டர் லேசான காயம்தான். ஆனால் கையை இரண்டு நாட்களுக்கு அசைக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். 

அதனால் அவளை அழைத்து நாளை ஆபீஸ் வர வேண்டாம் என்று கூறி அவளை அவள் அப்பார்ட்மெண்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் அர்ச்சு. 

அதே சமயம் இங்கு அர்ஜுனிடம் ரஞ்சித் ஏனோ என் மனம் சரியில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

 அவனை சரிப்படுத்துவதற்குள் அர்ஜுனுக்கு ஒரே தலைவலியாய் போய்விட்டது. ஓரளவு அவன் சமாதானம் அடைந்ததும் அவன் மீனாட்சியிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

 அடுத்த நாள் ஆபீஸ் வந்து ரஞ்சித் சந்தியாவிற்காக வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தான். 

ஆனால் அவள் வராததால் அர்ச்சனாவிடம் கேட்க அவள் நடந்ததை கூறி விட்டு அவள் நாளை வந்து விடுவாள் என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். 

நரேன் அர்ச்சனாவை பார்க்க வந்தவன் அங்கு ரஞ்சித் இருந்ததும் அவனிடம் நலம் விசாரித்துவிட்டு அர்ச்சனாவிடம் நாளை மறுநாள் தான் பெண் பார்க்க வருவதாகவும் அப்பா அம்மாவிடம் திருமணத்துக்கு சம்மதம் வாங்கி விட்டதாகவும் கூறியவனிடம் சரி என்று மட்டும் தலையசைத்தாள்.

Advertisement