Advertisement

இது எப்போடா நடந்துச்சி என்று ரஞ்சித் கேட்க, அஸ்வந்த் திருமணத்தின் போதுதான் அவளை முதலில் பார்த்தேன். 

அப்பவே அவளை ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஆனா வீட்ல இதுபற்றி இன்னும் பேசல.

மீரா தான் ரொம்பவும் பீல் பண்றாடா.

 நீ தான் ஹெல்ப் பண்ணனும்  இப்போ என்று அவன் கூற,

 ம் ம்… மீராக்கண்ணு வரப்ப மட்டும் பிரண்ட்ஸ் ஞாபகத்துக்கு வராங்க. 

மீராவ சின்ன பொண்ணு தானனு நெனச்சிட்டேன் டா. 

அவளுக்கும் ஆசை இருக்கும் இல்ல, அத எப்படி நாங்கள் மறந்தோம் என்று பேசிக் கொண்டே அவனிடம் எங்க சைடு எந்த பிரச்சனையும் வராது டா.

இப்ப உங்க வீட்ல தான் சரி செய்யணும் என்றான். 

அவர்கள் இருவரும் அங்கு பேசிக் கொண்டிருக்க அங்கு அர்ச்சுவும் நரேனும் ரஞ்சித்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். 

அவர்கள் கோவிலை ஒருமுறை சுற்றி வந்து வணங்கி விட்டு வெளியில் வந்தனர். 

நரேன், ரஞ்சித், அர்ஜுன் மூவரும் அர்ச்சனாவை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். 

அர்ச்சு  வீட்டில் காலடி எடுத்து வைக்கவும் அவள் வீடு முழுவதும் மெழுகுவர்த்தி தீபங்கள் ஏற்றப்பட்டு இதமான ஆங்கில பாட்டு ஒன்று ஓடிக்கொண்டிருக்க பேன் காற்றில் ஆங்காங்கு கட்டப்பட்டிருந்த பலூன்கள் காற்றில் பறந்து கொண்டிருக்க அவள் மீது மலர்கள் தூவப்பட்டு ஹாப்பி பர்த்டே என்று பாடும் பல குரல்கள் கேட்டு அவள் பார்க்கும் போது விளக்குகள் அனைத்தும் ஆன் செய்யப்பட்டது.

அங்கு அவரின் நண்பர்கள் கூட்டம் கையில் பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்களுடன் நின்றுகொண்டிருந்தனர். 

அவள் அழகாய் ஒரு சிறு தலை அசைவுடன் அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டாள்.

 பின்பு அவர்கள் கேக் வெட்டி அவள் பிறந்த நாளை கொண்டாடி விட்டு அர்ச்சனா அம்மாவின் கைவண்ணத்தில் இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் கிளம்பினர். 

அவர்களின் இந்த கொண்டாட்டத்தில் சந்தியா பங்கேற்காததை அனைவரும் மறந்து விட்டனர். 

அடுத்தநாள் அனைவரும் ஆபீஸ் வந்தனர்.

எப்போதும் போல் சந்தியா அவள் வேலைகளை கவனிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தாள். 

அங்கு வந்த அர்ஜுன் அவளிடம் என்ன மேடம் உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்குதா? நான்தான் அர்ஜுன் என்றான். 

அவள் அதை கேட்டு விட்டு சிரித்துக் கொண்டே அப்படி ஒரு பெயரை இதுவரை கேட்டதே இல்லையே! நீங்கள் ஆள் மாற்றி கேட்கறீங்கனு நினைக்கிறேன் என்றாள்.

 அதற்கு அர்ஜுன் பதில் கூறும் முன்பே அப்படியா நான் யார் என்று தெரிகிறதா என்று குரல் கேட்டவுடன், அவள் மனம் இது உன் பரிட்சைய குரல் அல்லவா என்று எண்ணிக்கொண்டே திரும்பியவள் ஒரு நிமிடம் அவள் வசம் அவள் இல்லை.  

அவள் திரும்பிப் பார்த்த திசையில் சுவரின் மீது சாய்ந்து கொண்டு தன் ஒரு கையை சுவரிலும் மற்றொன்றை இடுப்பிலும் வைத்துக்கொண்டு சிரித்த முகத்துடன் நின்றிருந்தான். 

அவள் பதிலேதும் சொல்லாமல் இருக்க அவன் மீண்டும் அவளிடம் என்ன பேச்சை காணோமே என்று வினவ அவள் அமைதியாய் நீங்கள் என்னுடைய பாஸ் ஆச்சே!

உங்களை மறந்தாலும் என் வேலைகளை எப்படி மறக்க முடியும். அதனால் உங்களை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமே என்றாள். 

அதற்கும் அவன் கிண்டலாக அப்படியாவது உன் நினைவில் நான் இருந்தால் சரி என்றான். 

அவளுள் ஓராயிரம் பட்டாம்பூச்சி பறக்க அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் இன்னும் என் மனம் உனக்கு புரியவில்லையா? என்ற கேள்வி இருந்தது. 

ஆனால் அவன் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அர்ஜுனிடம் என்னடா இப்படி பார்த்திட்டு நிற்கிறே!  டேய் வேலைய பாரு என்று கூற அதற்கு அவன் ஆமா இல்ல சிவபூஜையில் கரடி மாதிரி நான் எதுக்கு என்று கூறிக் கொண்டே கிளம்ப அவன் முதுகில் ஒரு அடி அடித்தான் ரஞ்சித்.

அர்ஜுன்,” ஐயோ! ஆள விடு டா சாமி” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

 பிறகு சந்தியா அவனிடம் ப்ராஜெக்டில் சில சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தாள்.

 அவனும் அதற்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான்.

 அதே சமயம் அங்கிருந்து வந்த அர்ஜுன் அர்ச்சனாவை தேடி செல்ல அவள் நரேனுடன் பேசிக்கொண்டிருந்தாள். 

அவன் அமைதியாய் சென்று தன் கேபினுக்குள் அமர்ந்தான். 

அவன் மனதில் ஓராயிரம் கேள்விகள் யோசித்துக் கொண்டே இருந்தவன் நன்றாகத் தூங்கி விட்டான். 

அவன் அறையின் கதவு தட்டும் ஓசை கேட்டதும் எழுந்து அவனின் நெற்றியில் கை வைத்து பார்த்தாள் அர்ச்சு.  என்ன ஆச்சு அர்ஜுன் கதவு தட்டியும் திறக்கல.

 ஏன் ரொம்ப டென்ஷனா இருக்க? ஏதாச்சும் ப்ராப்ளமா என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல, அவன் அதெல்லாம் எதுவும்  இல்லை. 

 தலைவலி அதுவும் லைட்டா அவ்வளவுதான் என்றான். இருவரும் கிளம்பி லஞ்சுக்கு சென்றனர்.

 அங்கு அனைவரும் இவர்களுக்காக காத்திருந்தனர். அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தனர். 

ஆனால் சந்தியா மட்டும் எதையோ பறிகொடுத்தவள் போல் இருந்தாள். அதை அர்ச்சு கவனித்துவிட்டாள். 

சாப்பிட்டு முடித்து விட்டு வரும்போது மென்மையாய் அர்ச்சனாவிடம் பேச ஆரம்பித்தாள். 

என்ன சந்தியா இப்பல்லாம் வீட்டுக்கு நீயும் வரவில்லை என்னையும் கூப்பிடுவது இல்லை. 

ரொம்ப பிசியா அப்படி என்ன பண்ற நீ? என்று கேட்டாள். 

அதற்கு அவள் ஒரு ரெடிமேட் புன்னகையை உதிர்த்துவிட்டு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அர்ச்சனா.

இன்னும் அப்ப வந்த பீவரோட எபெக்ட் இன்னமும்  இருக்கு. சீக்கிரமா டயர்டாயிடறேன்.   ரொம்ப நேரம் பேசவும் முடியறது இல்லை என்றாள்.

 அவள் முடியை கோதி விட்டு சரி உடம்ப நல்லா பாத்துக்கோ சந்தியா என்று கூறி விட்டு சென்றாள்.

 அர்ச்சு தன் கேபினுக்குள் செல்லவும் அங்கு அவள் இன்டர்காம் ஒலிக்க அதை எடுத்துப் பேசியவள் வியர்வையுடன் நரேனிடம் போய் நிற்கவும் அதை எதிர்பார்த்தது போல் நரேன் கையில் ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து நீட்டினான். 

அதை வாங்கியவள் ஒரே மூச்சாய் குடித்து விட்டு என்னவென்று கூறுங்கள் என்று கேட்க, அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்க, அவள் சரி நீங்கள் பேசும் உத்தேசத்தில் இல்லை போல நான் கிளம்புகிறேன் என்று சொல்வதற்கு ஒரு அடி எடுத்து வைக்க அவள் கை பிடித்து நிறுத்த அவள் கையை பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அப்படியே அவள் மேல் சரிந்து விட்டாள். 

அவள் அவசர அவசரமாய் எழ முயல யாரோ இழுப்பது போல் தோன்றவும் அவள் நரேன் இது ஆபீஸ் ஒழுங்கா என்னை விடுங்கள் என்றாள்.

 அவன் சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பியவள் தன் தலையில் தானே குட்டிக்கொண்டு துப்பட்டாவை மேசையின் அடிப்பகுதியில் இருந்து எடுத்து விட்டாள். 

அவன் அவளிடம் அர்ச்சு நாம பெங்களூர் பிராஞ்சுக்கு ஒரு தடவை போயிட்டு வரணும் இது ஒரு சின்ன டூர் மாதிரி தான்.

எல்லார்கிட்டயும் சொல்லிடு கண்டிப்பா எல்லாரும் வரணும். தேதி வர மண்டே ஈவினிங் 5.30க்கு ஆபீஸ்ல இருந்து ஒரு டிராவல் பஸ்ல கிளம்புறோம் என்றான். அவள் தலையசைத்து விட்டு சென்றாள்.

அவனும் அவள் பின்னால் செல்ல இருந்தான். அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அன்று அவனுக்கு முக்கியமான கம்பெனி மீட்டிங் இருந்தது. அவன் அவசரமாய் அதற்கு ரெடியாகினான். 

வெளியில் வந்த அர்ச்சு அர்ஜுனைத் தேடிச் சென்றாள். அவள் எதையோ யோசித்துக் கொண்டே அவன்  அறையை கடந்து செல்ல,  அவள் முன்னால் வந்து நின்று கை தட்டினான். 

கனவு கலைந்து திரும்பியவள் போல் அவள் விழித்தாள். அவனோ என்ன மேடம் இப்போது ஏன் இந்த மாதிரி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே நிக்குற! மந்திரிக்க நரேன் சாமியை கூப்பிடவா என்றான்.

 அவள் டேய் போக்கிரி உனக்கு ஏன் புத்தி இப்படி போகுது. மீரா என்னதான் பண்ணி உன்னைத் திருத்த போறாளோ? பாவம்டா அவ. சின்ன பொண்ணுக்கு போய் இப்படி ஆயுள் தண்டனை கொடுத்துட்டியே! நியாயமா டா என்று  கேட்க அதற்கு அவன் உனக்கு அவள் எவ்வளவோ பரவாயில்லை அர்ச்சு. 

நரேனிடம் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விடு என்றான். டேய் உன்னோட எஃப்எம் ஆஃப் பண்றியா இல்ல நான் சொல்ல வந்ததை சொல்ல மாட்டேன் என்றாள். 

அவளை ஒரு தடவை பார்த்துவிட்டு என்னனு சொல்லு அர்ச்சு என்று மிகவும் பணிவாக கேட்க அவள் நாம டூர் போறோம் அர்ஜுன். 

இததான் நரேன் சொல்லிவிட்டார் என்று அவனிடம் கூறி இதை நீயே போய் எல்லார்கிட்டயும் சொல்லிடு அர்ஜுன். எனக்கு நிறைய வேலை இருக்கு என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். 

அவனோ அப்பாடா இப்போவாவது டூர் கூட்டிட்டு போறாங்க நல்லா என்ஜாய் பண்ணனும் என்று யோசித்துக்கொண்டே ரஞ்சித்தைத் தேடி சென்றான்.

 ரஞ்சித் அன்றைய வேலைகளை ஒரு முறை சரி பார்க்குமாறு போனில் யாரிடமோ கூறிக் கொண்டிருந்தான். 

அவன் பேசி முடித்ததும் அர்ஜுன் டூர் செல்வதை கூற அவன் அதற்கு மறுப்பு தெரிவித்தான். 

அதுமட்டுமில்லாமல் அது சரணின் பிரசவ நேரம் என்பதால் தான் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்றதும் அவனை பரிதாபமாக பார்த்தான்.

அவன் மனமோ இப்படி ஒரு நண்பன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

 அவன் வாழ்க்கையில் மீண்டும் அந்த அழகான வசந்த காலத்தை ஏற்படுத்துவது தன் கடமை என்று எண்ணிக்கொண்டான். 

பிறகு அவனிடம் யோசித்து நல்ல முடிவா சொல்லு டா என்று சொல்லி விட்டு திரும்பியவன் சந்தியா இங்கு வந்து கொண்டிருப்பதை கவனித்து விட்டு அப்படியே நின்றான்.

ரஞ்சித் அவனிடம் என்ன என்று கேட்க ஒன்றும் இல்லை என்று சொல்லி முடிக்கவும் சந்தியா வரவும் சரியாய் இருந்தது.

 ஹாய் சந்தியா என்று சொல்ல அவளும் பதிலுக்கு ஹலோ அர்ஜுன் என்றாள். அவன் அவளிடம் சந்தியா டூர் என்று ஆரம்பிக்கவும் அர்ஜுன் என்னால் வர முடியாது எனக்கு வேறு ஒரு முக்கியமான வேலைகள் இருக்கு என்றாள்

அர்ஜுன் முதல் முறையாய் சந்தியாவையும் ரஞ்சித்தையும் ஒரே கோணத்தில் வைத்து யோசிக்கலானான்.

அவனை  ஒருமுறை உலுக்கி தலையில் ஒரு குட்டு வைத்த ரஞ்சித்தை அர்ஜுன்  ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு வேகமாக சென்று விட்டான்.

 ரஞ்சித் சிரித்துக் கொண்டே என்னடா ஏதோ கோழி திருடன பார்க்கிற மாதிரி பாத்துட்டு போறான் நான் என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கிறேன் என்று பழைய டயலாக்கை சொல்லிக்கொண்டே திரும்ப அங்கு சிரிப்பை அடக்கி வைத்திருந்த சந்தியா அவன் முகத்தைப் பார்த்ததும் சிரித்துவிட்டாள்.

மற்ற நேரமாக இருந்தால் ரஞ்சித் அவளை வம்புக்கு இழுத்து இருப்பான். ஆனால் நீண்ட நாள் கழித்து அவள் சிரிப்பை பார்த்தவன் அப்படியே அவளை இமைக்காமல் பார்த்தான். 

Advertisement