Advertisement

பின்பு இருவரும் கோவில்  பிரகாரத்தை சுற்றி வந்து அங்கிருந்த மகிழ மரத்தின் கீழ் அமர்ந்தனர். 

சந்தியா அமைதியாய் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

 சிறிது நேரம் கழித்து கண் விழித்து அவள் அவனைப் பார்க்க அவன் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

திடீரென்று அவனும் அவளைப் பார்க்க அவள் அவனிடம் கிளம்பலாமா ? என்று கேட்க அவனும் சரி என்று கூறிவிட்டு வெளியே வந்தனர். 

அப்போது அவள் நீங்கள் போய் வாருங்கள். நான் ஆட்டோ பிடித்து போய் கொள்கிறேன் என்றவளை முறைத்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணி ஹாரன் கொடுக்க அவளும் அமைதியா ஏறிக்கொள்ள பைக் அவள் வீட்டின் முன் நிற்க அவள் இறங்கிக் கொண்டதும் பைக் விர் என்று பறந்தது.

அவளுக்குத் தெரியும் அவன் கோபமாய் செல்கிறான் என்று இருப்பினும் அமைதியாய் சென்றுவிட்டாள்.

 பிறகு வீட்டிற்கு வந்ததும் அமைதியாய் அவன் அறைக்கு சென்று விட்டான். 

சிறிது நேரம் தூங்கியவன் திடீரென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டவுடன் எழுந்து சென்று கதவைத் திறக்க அங்கு  சாப்பாட்டுடன் மீனாட்சி நின்றிருந்தார். 

அவன் எனக்கு வேண்டாம் என்று கூற அவர் அமைதியாய் உள்ளே சென்று அமர்ந்தார். 

பின்பு அவனும் அவள் அருகில் சென்று அமர அவர் தன் மகனுக்கு ஊட்டி விட அவனும் சிறு குழந்தை போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 அவன் சாப்பிட்டதும் அவர் மடியிலேயே தூங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலையில் அர்ஜுன் ரஞ்சித்தின் வீட்டிற்கு வந்தான்.

என்னடா, அதிசயம்!   நீ இந்த வீட்டு பக்கம் வந்து இருக்க?  என்று மீனாட்சி கேட்க, இன்றைக்கு அன்னையர் தினம் இல்ல! அதான் உங்களை தரிசனம் பண்ண  வந்தேன் அம்மா என்று சிரித்துக்கொண்டே கூறியவனின் கன்னத்தைக் கிள்ளி விட்டு இப்படி சிரித்து எஸ்கேப் ஆயிடுற! ராஸ்கல் என்று கூறி விட்டு சமையலறையினுள் புகுந்து விட்டார். 

அர்ஜுன் ரஞ்சித்தின் அறைக்கு  வந்தான்.  அங்கு அவன் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க அந்த நிலையிலேயே அவனுக்கு மூன்று உதை கொடுக்க கோபமாய் கண்விழித்த ரஞ்சித் அவனை அந்த கோலத்தில் பார்க்க சிரித்து விட்டான்.

 அவ்வளவு தான், ஏற்கனவே இருந்த கோபத்தில் அவன் சிரிப்பதைப் பார்த்த அர்ஜூன் கையில் இருந்த பில்லோவை எடுத்து கொண்டு அவனை அடிக்க   அவன் அங்குமிங்கும் ஓட சிறிது நேரம் கழித்து  இருவரும் சோர்ந்து, உட்கார்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள அடக்க முடியாமல் சிரித்து விட்டனர். 

சிரித்து முடித்த உடன் ரஞ்சித் அவனிடம் என்னடா ஆபீஸ் போகலையா? என்று கேட்க அவன் மீண்டும் முறைத்து விட்டு இன்னைக்கு என்ன நாள் என்றான்.

 அதற்கு அவன் இது என்னடா லூசு தனமான கேள்வி! இன்னைக்கு டியூஸ்டே  என்று சொல்லும்போதே அவன் தலையில் ஒரு குட்டு வைத்து விட்டு அவனிடம் இன்று அர்ச்சனாவின் பிறந்த நாள் என்றான்.

 அவன் ஒரு நிமிடம் அவனைப் பார்த்துவிட்டு மொபைலை எடுக்க அர்ஜுன் அவசரமாக ஓடிவந்து மொபைலை வாங்கி கொண்டு மீண்டும் அவன் தலையில் குட்டு வைத்து விட்டு அவளுக்கு சர்ப்ரைஸ் ஏதாவது கொடுக்கலாம்னு பார்த்தா  நீயே காரியத்தை கெடுத்து விடுவ போல என்று சொல்ல ரஞ்சித் சாரி டா என்றான்.

பின்பு இருவரும் பேசிக்கொண்டே கிளம்பி வர, அங்கு மீனாட்சி மார்னிங் டிபன் எடுத்து வைக்க இருவரும்  சாப்பிட்டுவிட்டு ஆபிஸ் கிளம்பி சென்றனர். 

அங்கு அர்ச்சனா மிகவும் சோர்வுடன் இருந்தாள்.

 அதை கவனித்த அர்ஜுன் என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்க நாம, ரஞ்சித் யாருமே விஷ் பண்ணல இல்ல, நம்ம மேல ஏதாவது கோபமா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 பின்பு அர்ஜுன் ரஞ்சித்திடம் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூற அவன் தலையசைத்துவிட்டு தன் கேபினுக்குள் சென்றான். 

அங்கு அவன் ஏதோ ஒரு பைலை தேடிக்கொண்டிருக்க அப்போதுதான் சந்தியா அவனின் முன்பு வந்து நின்றாள்.

 அவன் வேண்டுமென்றே தன் வேலையை கவனிக்க அவளும் வேண்டுமென்றே செருமினாள்

அவன் அவளை முறைக்க அமைதியாய் அவன் பார்வையை எதிர் கொண்டாள். அதன் பிறகு அவள் சாரி என்றாள் .

அப்போதும் அவன் கோபம் குறையாததால் அவள் தன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு ப்ளீஸ் என்று கேட்க அவன் சிரித்து விட்டான்.

 அவ்வளவுதான் சந்தியாவும் சிரித்துக் கொண்டே,” ஏன் இவ்வளவு கோபம் அதுவும் என் மேல்” என்று கேட்க, அவன் நேற்று நீ என்ன செய்தாய் ? உன்னை உன் வீட்டின் பாதுகாப்பாய் விட்டு செல்வதில் எனக்கு என்ன கஷ்டம்?  நீ ஏன் வ்வளவு நேரம் ஜாலியா இருந்தவள் உரிமையுடன் பேசியவள் ப்போது மட்டும் ஏன் அப்படி செய்தாய் என்று கேட்டான். 

சரி விட்டுவிடுங்கள் தெரியாமல் பேசி விட்டேன். இனி இப்படி நடக்காது என்று கூறி விட்டு  செல்லும்போது அவள் அர்ச்சுக்கு என்ன கொடுக்கப் போறீங்க என்று கேட்க அதற்கு அவன் சஸ்பன்ஸ் என்றான்.

அவளும்  நடத்துங்க நடத்துங்க என்று சொல்லிவிட்டு சென்றாள்.

 அப்போது மீண்டும் அவனை யாரோ முதுகில் தட்ட ரஞ்சித் திரும்பி பார்க்க அங்கே நரேன் நின்று கொண்டிருந்தான்.

அர்ஜுன் உன்னிடம் ஒரு பத்து நிமிடம் தனியாக பேச வேண்டும்.

 கேன்டீன் போகலாமா என்று கேட்டான்.

 ரஞ்சித் ஓகே என்று சொல்ல இருவரும் கேன்டீனை நோக்கி பேசிக்கொண்டே சென்றனர். 

அங்கு இரண்டு  காபியை ஆர்டர் கொடுத்துவிட்டு நரேன் ரஞ்சித்திடம் எனக்கும் அர்ச்சனாவுக்கும் சண்டை என்றான். 

அதை எதிர்பார்க்காத ரஞ்சித், என்ன சொல்கிறாய்?  நரேன் என்றான்.

நரேன் அவனிடம் வெளியில் இருவரும் சகஜமாய் பழகுவது போல் நடிக்கிறோம்.

மற்றபடி துவும் இல்லை.நானும் அவளும் பேசி 1 மந்த் ஆகுது என்றவனை பரிதாபமாய் பார்த்தான் ரஞ்சித்.

 அப்போதுதான் அர்ச்சனாவின் சோகத்திற்கு காரணம் புரிந்தது அவனுக்கு.

 நரேன் மீண்டும் அவனிடம் இதை  நான் ஏன் உங்களிடம்/உன்னிடம் சொல்கிறேன் தெரியுமா ரஞ்சித்? என்று வினவ ,அவன் தெரியாது என்று தலையசைக்க நரேன் மீண்டும் தொடர்ந்தான். 

அர்ஜுன் ரொம்பவும்  அவசரக்குடுக்கை நான் என்ன சொல்ல வரேன்னு முதல்ல கேட்க மாட்டான். 

அதுவும் இல்லாம அவன் அர்ச்சனாவுக்கு ரொம்ப க்ளோஸ்.

 அதனால அவன் அந்த ஆங்கல்லையே தான் யோசிப்பான் நான் அர்ச்சனாவோட தனியா ஒரு அஞ்சு நிமிஷம் பேசினால் கூட போதும்.

 அவளுக்கு என்ன புரிய வைச்சிடுவேன்.

 இன்னைக்கு அவளோட பர்த்டே இன்னமும் நான் அவளுக்கு விஷ் பண்ணல. 

லவ் சொல்லாத அப்பவே லைஃப் நல்லா இருந்துச்சு. இப்ப ரொம்ப கொடுமையா இருக்கு பாஸ். 

நான் அர்ச்சனாவை உண்மையா  அவளுக்காகவே லவ் பண்றேன். 

அதனால தான் என்னால அவள மிரட்டவோ  கட்டாயப்படுத்தவோ முடியல என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டான்.

அவனின் உணர்வுகளை புரிந்து கொண்ட ரஞ்சித், ஒரு நிமிடம் யோசித்தான்.

 பிறகு சரி நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான். 

பிறகு அவன் கைகளை பிடித்துக் கொண்ட நரேனை ரஞ்சித் தட்டிக் கொடுத்துவிட்டு யோசித்துக்கொண்டே தன் கேபினுக்குள் செல்ல. அங்கு அர்ஜுன் அவனுக்காக காத்திருந்தான்.

அர்ஜுன் அவனிடம் உன்னிடம் ஒரு முக்கியமான மேட்டர் பேசனும். அதுவும் நம்ம அர்ச்சுவ பத்தி தான் என்றான்.

 ரஞ்சித் அவனை ஆச்சரியமாக பார்க்க அவன் இப்பதான்  அர்ச்சனாவுடன் பேசிவிட்டு வரேன். அவளுக்கும் நரேனுக்கும் சண்டை .

அதுவும் ஒரு சின்ன மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்னால டா. நாம தான் இத சரி பண்ணனும்.

அதுவும் இன்னைக்குள்ளே என்றவனிடம் ,அர்ச்சு என்னடா உன்கிட்ட சொன்னா என்று ரஞ்சித் கேட்க அவன் விளக்கமாக கூற ஆரம்பித்தான்.

நரேன் ரஞ்சித்திடம் பேசிக் கொண்டிருந்த அதே சமயம் அர்ச்சு அர்ஜுனிடம் பேசிக்கொண்டிருந்தாள். 

அவன் நரேன் ஒன்றும் உண்மையாக நேசிக்கவில்லை என்றும் கண்டிப்பாக இந்த திருமணம் நடந்தால் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்றும் அதனால் அவரவர் வழியில் அவரவர் சென்று விடலாம் என்று நரேனிடம் கூற வேண்டுமென்று  அவன் கூறியதை ரஞ்சித்திடம் கூற அவனும் நரேன் கூறியதை அவனிடம் கூறினான். 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். 

அவர்களின் சிரிப்பில்  இருவருக்கும் கச்சேரி தான் என்ற வாக்கியம் தெரிந்தது. 

அவர்களின் திட்டப்படி அர்ஜுன் இரண்டு மணி நேரம் பர்மிஷன் கேட்டு விட்டு அர்ச்சனாவிடம் மீராவைப் பற்றி பேசவேண்டும். கோவிலுக்கு போகலாம் என்று கூறி அவளையும் அழைக்க அவளும் அவனுடன்  கோயிலுக்கு சென்றாள்.

அவர்களுக்கு முன்பே ரஞ்சித் நரேனை தன் நண்பருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறி அழைத்து வந்தான். 

இருவரின் மனமும் சலனமாக இருந்ததால் கோவில் என்றதும் வந்துவிட்டனர். 

கோவிலின் கருவறையில் சென்று வணங்கி விட்டு பிரகாரத்தை சுற்றி வந்து ஒரு தூணின் அருகில் அமர்ந்தனர் அர்ச்சுவும் அர்ஜுனும்.

அவர்களின் தூணிலிருந்து இரண்டாவது தூணின்  அருகில் ரஞ்சித்தும் நரேனும் அமர்ந்து இருந்தனர். 

அப்போது அர்ஜுன் வேண்டுமென்று அர்ச்சனாவிடம் நரேனை பற்றி பேச்சு கொடுத்தான்.

அதற்கு அவள் இந்த பேச்சு இப்போது வேண்டாமே நாம் மீராவைப் பற்றி பேசலாம் என்று பேச்சை திசை மாற்ற முயல அர்ஜுன் விடாமல் அவளின் இல்லை அர்ச்சு நரேனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து விட்டார்களாம்.

அவனும் ஓகே சொல்லியாச்சாம்.

வரும் புதன் கிழமை நிச்சயதார்த்தம் என்று அவன் கோபியிடம் கூறிக்கொண்டிருந்தான்.கோபி அதை என்னிடம் கூறினான்.

எவ்வளவு மோசமானவன் இந்த நரேன்! அவனை மாதிரி ஒரு ரோக்கை நான் பார்த்ததே இல்லை.

அவன் சரியான…  என்று  கூறும் போதே கன்னத்தில் அர்ச்சனாவின் கை அறைந்தது. அதை அவன் சிறிதும் பொருட்படுத்தாமல்  இன்னும் அவனை பற்றி உயர்வாகப் பேசுவதால் அடிக்கிறாய்.

 அவன் அதை விட மோசமானவன் என்று கூறும்போதே அர்ச்சனா எழுந்து விட்டாள்.

 அவள் கண்கள் சிவந்து உடலின் வெப்பநிலை உச்சகட்டத்தை அடைந்திருந்தது. 

பின்பு அவனிடம் திரும்பி உன்னைப்போய் என் நண்பன் என்று கூறிக் கொண்டு இருந்தேன். 

ஆனால் நீ தான் மாறிவிட்டாய் அர்ஜுன். நரேன் மாறவில்லை. 

அவரைப்போல கண்ணியமான கட்டுக்கோப்பான ஆண்மகனை பார்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை. 

எல்லோருக்கும் தான் கோபம் வரும். அந்த கோபத்தில் தான் அவர் என்னிடம் வேறு யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்டுவிட்டார். 

அதற்காக அவரை நீ என்னவெல்லாம் பேசுவாய். நானும் ஆமாம் என்று தலையாட்டுவேன் என்று நினைத்தாயோ! 

என் வாழ்வில்  எப்போதும் நரேன் மட்டுமே என்னுடையவன். அவன் திருமணமாகி போனாலும் அவனை நான் தொந்தரவு செய்யாமல் என் வாழ்வை தொடர்வேன். 

தெரியாமல் யாரை பற்றியும் பேசாதே அர்ஜுன். 

நான் ஏற்கனவே பாதி செத்துட்டேன். 

என்னோட கடமைக்காக வாழுறேன் அவ்வளவுதான் என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே நரேன் அவளின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான். 

அவள் அதிர்ச்சியில் மயங்கி விட்டாள். 

அவளை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு இருக்கும்போதே அர்ஜுன் அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க ரஞ்சித் கால்களைத் தேய்த்து விட்டான்.

அவள் பயந்து போய்  எழ முயல அவளை அப்படியே அவன் அருகில் உட்கார வைத்தான் அவன். 

அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க அர்ஜுனனும் ரஞ்சித்தும் சிரித்துக் கொண்டனர்.

அப்போது நரேன் அவளிடம் என்னை மன்னித்து விடு என் மனமே!

 உனக்கு இத்தனை பெரிய லட்சியம் இருக்கும் என்று நான்  எதிர்பார்க்கல என்று கூறிவிட்டு அவள் கையை பிடித்து அர்ஜுன் மற்றும் ரஞ்சித்திடம் ஒப்படைக்க, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அவர்களைவிட அர்ச்சனா மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். 

அவர்களை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காமல் அவன் அர்ச்சனாவிடம் திரும்பி நீ இப்போது திருமணம் வேண்டாம் என்பது இவர்களுக்காக தானே!

 அதை என்னிடம் நீ நேரடியாக கூறி இருக்கலாம்.

இருந்தாலும் சரி. நீ உன்னுடைய  பிரண்ட்ஸோட வாழ்க்கைக்காக என்னை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.

இருந்தாலும் எப்போது ஒருவர் ஒருவரை காதலிக்கிறார்களோ அப்போதே அவர்கள் இருவரும் சரிபாதி.

 அதற்குமேல் அவர்களுக்குள் நான், நீ என்ற வேறுபாடு இல்லாமல் நாம் என்ற ஒற்றுமை தான் இருக்க வேண்டும். 

நான் உன்னைத் தவிர வேறு ஒருத்தியை கனவில் கூட நினைத்ததில்லை. 

அர்ச்சனா வீட்டில் அம்மாவோட டார்ச்சர் எப்படா என்னோட மருமகள கூட்டிட்டு வரப்போறனு.

அந்த கோபத்தில் தான் நான் அன்னிக்கு அப்படியொரு கேள்விய கேட்டுட்டேன்.

சாரி டா அர்ச்சு.

நீ எனக்கு என்னோட பழைய அர்ச்சுவா வேணும் என்று கூறிவிட்டு எழுந்து செல்ல முயல, அர்ச்சு அவன் கையைப் பிடித்து தடுத்தாள். 

பிறகு அவனிடம் நம்முடைய வாழ்க்கை நல்ல படியாக அமைந்தது.

 அதேபோல அர்ஜுன் மற்றும் ரஞ்சித்தின் வாழ்க்கையும் அமைய வேண்டும்.

அதுவரை மட்டும் நீங்கள் காத்திருந்தால் போதும் நரேன் என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போது ரஞ்சித் அவளிடம் வந்து அர்ச்சு எனக்காக உன் வாழ்க்கையே வீணாக்காதே.  

நான் வெறும் மணல் என்ன வெச்சு எதுவும் செய்ய முடியாது.

 யாருக்கும் நான் உபயோகப்பட மாட்டேன். புத்திசாலித்தனமா நடந்துக்கோ என்றான். 

அதற்கு அர்ச்சு சிரித்து விட்டு, நீ வெறும் மணலாய் இப்போது இருக்கலாம்.

 ஆனால் சிமெண்ட் என்ற பசையுடன் உன்னை சேர்த்து தானே எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கட்டுவார்கள்.

நீ உன்னையே தாழ்த்திக்கொள்ள பார்க்கிறாய் ரஞ்சித். 

உன்னை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். கடவுள் வழி காட்டுவார். கவலைப்படாதே!

நாங்கள் எப்போதும் உன்னுடன் இருப்போம் என்றாள். 

அர்ஜுன் அவர்களிடம் நேரமாச்சு கிளம்பலாமா? என்று கேட்க அர்ச்சு,  அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே  ரஞ்சித்திடம் ரஞ்சித் அர்ஜுன் லவ் பண்றான் டா.

பொண்ணு யாருனு உனக்கு தெரியுமா ? என்று அவள் கேட்கும் போதே அவன் அவள் வாயை பொத்தினான்.  

நரேனும் ரஞ்சித்தும் அதிர்ச்சியாய் அவனை நோக்க , இல்லடா நானே சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன். 

ஆனால் டைம் கிடைக்கல சாரிடா என்றவனிடம், உன் சாரிய நீயே வச்சுக்கோ.

 பொண்ணு யாருன்னு சொல்லு என்று அவர்கள் கேட்க அவன் எப்படி சொல்வது என்று தயங்கி  கொண்டிருக்கும் போது, அர்ச்சனா அவர்களிடம் நம்ம மீரா தான் பொண்ணு என்றார்.

Advertisement