Advertisement

பழைய அர்ச்சுவாக இருந்திருந்தால் இந்நேரம் அவனை வந்து ஒரு வழி பண்ணி இருப்பாள் என அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் முன்பு பூங்கொத்து ஒன்றை நீட்டியது இரு கரங்கள். 

நிமிர்ந்து பார்த்தவனிடம் கம்பெனியின் சார்பாக சிறு அன்பளிப்பு “வெல்கம் பேக் டு அவர் கம்பெனி சார்” என்றாள். 

அவளைப் பார்த்தவன் சிறிது தடுமாறினாலும் சிறு புன்னகையுடன் வாங்கிக்கொண்டான். 

பின்பு அனைவரும் உள்ளே சென்றனர்.

 இப்போது நரேன் தான் எம்.டி மற்றும் மேனேஜராக இருந்தான். 

ரஞ்சித் வந்தபின்பு மேனேஜர் பொறுப்பை அவனிடம் தந்து விட்டான். 

அதை வேண்டாம் என்று மறுத்தவனிடம் வேறு யாருக்கும் ‘பாரின் எக்ஸ்பீரியன்ஸ்’ இல்லை என்று கூறியதால் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டான். 

அவனை அவன் அறைக்கு அனுப்பி விட்டு தன் வேலையை பார்த்தான் நரேன்.

முதலில் அர்ஜுன் வந்து வாழ்த்து கூற பின்பு வித்யா ,கோபி,சைலஜா, ஸ்ரீராம்,சந்தியா மற்றும் அர்ச்சனா வாழ்த்துக் கூறினர்.

அப்போது வித்யா ரஞ்சித் சார் ‘ட்ரீட்’ எப்போ? என்று கேட்க அவன் அவளிடம் திரும்பி கொடுக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது என்று கூற அனைவரும் அவனை பார்க்க அவன் சிரித்துக்கொண்டே யாரும் என்னை இனிமேல் சார் என்று கூப்பிட கூடாது என்றும் பழையபடியே பழகும்படி கேட்டுக் கொண்டான்.

 வித்யாவின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்க அவள் ரஞ்சித்திடம் நீ எங்கே மாறிவிட்டாயோ என்று நினைத்தேன் ரஞ்சித். 

ஆனால், நீ மாறவில்லை நான்தான் உன்னை சந்தேகித்து விட்டேன்.

 என்னை மன்னித்து விடு என்றாள்.

அப்போது தான் அர்ச்சனா பேசினாள். 

அதெல்லாம் மன்னிக்க முடியாது தண்டனை நிச்சயம் என்று சொல்ல அனைவரும் அவளையே பார்க்க அவளோ ரஞ்சித்தின் காதில் ஏதோ கூற அவன் பயங்கரமாய்  சிரிக்க அனைவரும் அர்ச்சுவை முறை அவள் சரி ஓகே ஓகே சொல்றேன் பா.

 வித்யா ,கோபியை பார்த்து ஒரு ரொமாண்டிக் லுக் விடனும். அவ்வளவுதான் டீல்! என்னப்பா எல்லாருக்கும் ஓகேவா? என்று கேட்க அனைவரும் டபுள் ஓகே என்றனர்.

கோபி வித்யாவை பார்க்க அவளோ அவனை ஏதோ லூசு பாக்குற மாதிரி பார்த்து வைக்க அர்ச்சனா அர்ஜுனிடம் திரும்பி ‘டேய் நீதான் எக்ஸ்பர்ட் ஆச்சே’ அவளுக்கு சொல்லிக் கொடுக்கலாமே என்று சொல்லி முடிக்கும் முன்னே  அறுந்த வாலு நில்லுடி உன்னை என்ன பண்ணறனு பாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே நரேன் ரஞ்சித்தின் அறையிலிருந்து வெளியே வருவதை பார்த்தவன்  வேண்டுமென்றே ஒரு பைலை எடுத்துக்கொண்டு சென்று அவனிடம் நரேன் உன்னிடம் அர்ச்சு தனியாய் பேசவேண்டும் என்று  சொன்னாள் என்று கூறிவிட்டு அந்த பைலை கொடுத்து விட்டு சென்றுவிட்டான். 

அவனும் அவனை நம்பி அர்ச்சனாவின் கேபினுக்கு சென்றான்.

 அவர்கள் சண்டைக்கு பிறகு இப்படி அவன் வந்ததில்லை.

அவனைப் பார்த்ததும் என்ன சார் வேண்டும் என்றாள்.

நீங்கள் என்னை அழைத்து வரச் சொன்னதாக அர்ஜுன் கூறினான் என்றான்.

 அவள் உள்ளுக்குள் அர்ஜுனை திட்டிக்கொண்டே நான் மறந்துவிட்டேன்.

உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு ஒரு பைலை எடுத்து டேலி ஆகாத சில அக்கவுண்ட்ஸை அவள் காட்டினாள்.

அவனும் அதை இரு முறை பார்த்துவிட்டு இதோட இன்னொரு காப்பி என்னிடம் இருக்கு. அதில் ஒருவேளை நமக்கு தேவையானவை இருக்கலாம் நான் போய் எடுத்து வருகிறேன் என்றான். 

அவள் அவனிடம் இல்லை சார் ஒன்றும் அவசரமில்லை என்றாள்.  

அவனும் சரி என்று தலையசைத்து விட்டு சென்றான். 

அர்ச்சனா எழுந்து கோபமாய் அர்ஜூனை தேடி செல்ல அங்கு ஏதோ ஒரு சந்தேகம் என்று சந்தியா வர அர்ச்சு அவளை ரஞ்சித்தடம் விரட்டினாள். 

அவளும் சரி என்று கூறிவிட்டு ரஞ்சித்தின் அறையை மெதுவாய் தட்டினாள்.

 உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால் கதவை திறந்தவள் அதிர்ச்சியில் நின்று விட்டாள். 

அங்கு ரஞ்சித் மயக்கத்திலிருந்ததோடு மட்டுமில்லாமல் கையில் வேறு அடிபட்டு இருந்தது. 

அவன் விழுந்து இருக்கும் நிலையில் இருந்தே அவன் நாற்காலியில் கால் இடறி தெரியாமல் விழுந்து இருக்கவேண்டும் என்று யூகித்து விட்டு இன்டர்காமில் நரேனை அழைத்தாள். 

அதற்குள் அவனை நிமிர்த்தி உட்கார வைத்துவிட்டு முகத்தில் தண்ணீர் இறைக்க அவனிடமிருந்து வெறும் முனகல் மட்டுமே வந்தது.  

அப்போது அங்கு வந்த நரேன் அவனை தாங்கி நிற்க வைக்கும் போது அர்ஜுன் உள்ளே ஓடிவந்தான்.

 பின்பு அனைவரும் சேர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 

அது சிறிய காயம் என்பதால் அர்ச்சனா  மீனாட்சியிடம் கூற வேண்டாம் என்று கூறிவிட்டாள். 

அர்ஜுன் அருகில் இருந்து கவனித்துக் கொள்வதாக கூறியதும் மற்றவர்கள் வீடு திரும்பினர். 

அடுத்த நாள் காலையில் அர்ச்சனா மற்றும் நரேன் முக்கியமான மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டி இருந்ததால் அவர்களால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை.

அர்ச்சனா காலை உணவோடு பிரசாதம் எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்று அர்ஜுனை ஓய்வு எடுக்கச் சொன்னாள். 

அவனும் சரி என்று கூறிவிட்டு சென்றான். 

அதுவரை மயக்கமாய் இருந்த ரஞ்சித் அப்போதுதான் தன் சுய நினைவிற்கு வந்தான். 

மெதுவாய் கண் திறந்ததும் அவன் பார்த்தது சந்தியாவை தான் ஜன்னலைத் திறந்து விட்டுக் கொண்டிருந்தாள். 

அவன் ‘சந்தியா’ என்று அழைக்க ஓடோடி வந்தாள். 

அவன் தனக்கு என்ன ஆச்சு என்று கேட்க அவள் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளன என்றாள். 

அவன் என்னவென்று யோசிக்கும்போதே அழகாய் அவள் சாதத்தை மசித்து அதில் ரசம் ஊற்றி ஒரு ஸ்பூன் போட்டு கொடுத்தாள். 

அவன் அம்மா எங்கே என்று கேட்க அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று அர்ச்சனா கூறியதை கூறினாள். 

அவனும் அதை சாப்பிட்டு விட்டு அடுத்து அவள் கொடுத்த மாத்திரைகளையும் விழுங்கினான். 

பிறகு   அவள் நடந்த அனைத்தையும் கூற கேட்டு கொண்டவன் ‘தேங்க்ஸ்’ என்றான். 

அவள் ‘வெல்கம்’ என்று கூறிவிட்டு நாவல் படிக்க ஆரம்பித்துவிட்டாள்.  

ஆனாலும் இடையிடையே அவனை கவனித்துக் கொள்ளவும் தவறவில்லை. 

ஈவினிங் அனைவரும் வர அவள் ரஞ்சித்திடம் கூறிக்  கூறிக்கொண்டு கிளம்பினாள். 

அனைவரும் சிறிது நேரம் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் பின்பு அர்ஜுன் மட்டும் அவனுடன் இருக்க மற்றவர்கள் சென்றுவிட்டனர். 

அடுத்த ஒரு வாரத்தில் பூரணமாக குணமாகி விட்டான் ரஞ்சித்.

அடுத்து வந்த நாட்களில் அவன் ஓரளவு இயல்பாய் சந்தியாவிடம் பேச ஆரம்பித்தான்.

 மீண்டும் ப்ராஜெக்டை தொடங்க இம்முறை இரண்டு இரண்டு பேராக ப்ராஜெக்ட் செய்தார்கள்.

 அதில் ரஞ்சித்- சந்தியா அர்ச்சனா- அர்ஜுன் டீம் மேட்டாக வந்தனர். 

முதலில் சந்தியா பயந்தாலும் பின்பு அதையே சந்தோஷமாக மாற்றிக் கொண்டாள்.

ஒரு நாள் ப்ராஜெக்ட் பைல் ஒன்றை வாங்க ரஞ்சித் சந்தியாவை செல்லில் அழைத்தான்.

 அன்று சண்டே என்பதால் அவள் அவளது அப்பார்ட்மெண்டில் ஜாலியாய் தூங்கிக்கொண்டிருந்தாள். 

செல்லை எடுத்து பேசியவள் அதிர்ச்சியாய் அழைப்பை  அணைத்துவிட்டு வேறு உடைக்கு மாறி விட்டு வீட்டை சுத்தம் செய்வதற்குள் காலிங்பெல்  அழைக்க போய் திறந்தவள் அப்படியே நிற்க ரஞ்சித் உள்ளே வரலாமா ?  என்றான்.

மீண்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனை உள்ளே அழைத்து உட்கார செய்துவிட்டு திரும்பியவள் அப்போதுதான் டிவியில் போகோ சேனல் ஐ பார்த்துவிட்டு அவசரமாய் அணைத்து விட்டு கிச்சனில் நுழைந்து காபி கோப்பை ஒன்றை எடுத்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு பைல்  எடுத்து வருவதாக கூறி விட்டு வந்தாள். 

அப்போதுதான் அவளுக்கு அது நினைவுக்கு வந்தது.

 அன்று அர்ச்சனா ஏதோ சந்தேகம் என்று கூறி அந்த பைலை வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தாள் அதை வாங்க மறந்துவிட்டது.

இப்போதுதான் நினைவுக்கு வர தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள். 

அவள் சென்றதும் வீட்டை கவனித்த அவனுக்கு அவள் அவசரமாய் வீட்டை சுத்தம் செய்தது முதல் அனைத்தும் தெளிவாய் தெரிய சிரித்து விட்டு வெளியில் சென்று சிறிது நேரம் வேடிக்கை பார்த்தான்.

அதற்குள் வீட்டு வாசலில் அர்ச்சனா ஸ்கூட்டியில் இறங்க ஆச்சரியமாய் அவளைப் பார்த்தான். 

அவள் மெதுவாய் வந்து கதவை தட்ட சென்று கதவைத் திறந்தான்.

 வீட்டைப் பார்த்துவிட்டு வெளியில் சென்று ரூம் நம்பரை பார்த்தாள். 

பின்பு அவனிடம் பைல் கொடுக்க அவன் இன்னும் குழப்பமாய் அவளை பார்த்தான். 

சந்தியா என்னிடம் செல்லில் இந்த பைல் இப்போதே வேண்டும் என்றும் இதற்காக ரஞ்சித் ன் வீட்டில் வெயிட் பண்ணுகிறார் என்று சொன்னா டா அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் என்றாள்.

அவளுக்கும் ஒரு கப் காபியை நீட்டினாள் சந்தியா.

அதற்கு அர்ச்சு’நான் இந்த டெஸ்ட்கு ரெடி இல்லை’ என்று கூறி ரஞ்சித்தை பார்க்க அவன் காலி டீ கப்பை காட்டினான்

பின்பு அவள் வாங்கி குடித்துக் கொண்டே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். 

அதற்குப் பின் மூவரும் கிளம்பினர். 

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழித்து ரஞ்சித் வீட்டிற்கு வந்தான். மீனாட்சி அவனை கடிந்து கொண்டார்.

பிறகு சரண்யாவின் வளைகாப்பு வரும் செவ்வாய்க்கிழமை வைக்கலாம் என்று வசந்தி கூறியதாகக் கூற உங்களிஷ்டம் என்றான். 

புராஜக்ட் முடிய இன்னும் ஒரே நாள் தான் என்பதால் மீண்டும் வீட்டு வேலைகளை கவனிக்கவே அவனுக்கு நேரம் சரியா இருந்தது.

மீனாட்சி அர்ச்சனாவிடம் இதைக் கூற அவள் சந்தியாவையும் தன்னுடன் அழைத்து வந்தாள்.

 ஊரிலிருந்து அஸ்வந்த் தன்  குடும்பத்துடனும் செந்தில் தன் குடும்பத்தாருடனும் வந்திருந்தார்கள். 

மீரா  அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். 

அப்போது அங்கு வந்த அர்ஜுனின் அம்மா குந்தவிக்கு மீராவை  மிகவும் பிடித்துவிட்டது.

 அவளைப் பற்றி கேட்க ஆளை தேட அவருக்கு உதவி செய்வது போல் வசந்தி அங்கு வந்தாள். 

அவளிடம் எதேச்சையாய் அவள் அர்ஜுனை பற்றி கூற வசந்திக்கும் சரி எனப்பட்டது. 

பின்பு அவரிடம் தன் வீட்டில் பேசி விட்டு கூறுகிறேன் என்று சொல்லும் போது தான் அவர் மீராவின் அம்மா என்பதையே கவனித்தார். 

சரண்யாவின் வளைகாப்பு நல்ல படியாக முடிய அனைவரும் கிளம்ப ஆரம்பமாகும் போது தான் அர்ஜுன் வளைகாப்புக்கு வந்தான்.  

அவர்களிருவரும் (மீரா அர்ஜுன்) மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்க அங்கு அவளை தேடி வந்த வானதி மீராவின் முகம் மகிழ்ச்சியில் இருப்பதை கவனித்து விட்டு கீழே வந்து விட்டாள். 

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பின் அனைவரும் கிளம்பும்போது வானதி அர்ஜுனிடம் மீராவை பெண்கேட்டு வருமாறு கூறினாள். 

அவன் அவளை ஆச்சரியமாய் பார்க்க அவள் எனக்கு தெரியும் அண்ணா நீங்க மீராவை காதலிப்பது என்றாள். 

அவன் அவளிடம் பெண் பார்க்க வருவதற்கு முன் மீராவின் வீட்டாரிடம் பேசிவிட வேண்டும் என்றான். 

சிரித்துவிட்டு மீராவின்  மேல் உயிரை வைத்திருப்பவர்கள் நாங்கள் அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றாள்.

அவன் தங்கச்சி நீங்கதான் எங்களுக்கு உதவி பண்ணனும் என்று வேண்டுகோள் விடுக்க அவள் ‘அது அடியாள் பாக்கியம்’ என்று கூறும்போதே அவளைத் தேடிக்கொண்டு அஸ்வந்த் வந்துவிட்டான். 

அர்ஜுனைப் பார்த்து அவன் நேரமாச்சு நான் கிளம்புறோம் என்றான். 

அதற்கு அர்ஜுன் நீங்க கவலைப்படாதீங்க இனிமேல் தான் அடிக்கடி சந்திக்க போறோம் என்றான்.

 அவனும் அதன் அர்த்தம் புரியாமல் தலையசைத்து செல்ல அதைப் பார்த்த வானதியும் அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். 

அனைவரும் கிளம்பிய பின் தானும் கிளம்புவதாக கூறிக்கொண்டே சந்தியா  அப்போதுதான் வரவேற்பறையில்  இருந்து வீட்டினுள் வந்தாள். 

அவளைப் பார்த்த அர்ச்சனா அவளை முகம் கழுவி வரச் சொல்ல அவளும் சரி என தலையசைத்து விட்டு சென்றாள். 

அப்போது திடீரென மேகம் கருத்து மழை வர தொடங்கியது அதை பார்த்து அவளுக்கு மொட்டை மாடிக்கு செல்ல வேண்டும் என்று இருந்தது.

 அவள் மாடிக்கு சென்றாள். சிறிது நேரம் அனைத்தையும் மறந்துவிட்டு குழந்தை போல் தண்ணீரில் காலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள்.

காற்று பலமாய் வீச அவள் மனதுக்கு மட்டும் இதமாய் இருக்க அவள் மீண்டும் குழந்தையானாள். 

இயற்கையின் விளையாட்டை அறையின் ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித்திற்கு அப்போதுதான் அந்த இயற்கை காட்சி கண்ணை பறித்தது. 

அந்தி மாலை நேரம் அழகாய் ஆதவன் தொழிலுக்குச் செல்ல இரவு தேவதை அவள் குழந்தைகளை தாலாட்ட கிளம்பினாள்.

சிறு வெயிலில் மழைத்துளிகள் உதிர அதை பூமி என்னும் சிற்பி சேகரித்துக் கொள்ள அழகிய வானவில்லானது குடை போல் விரிந்து அந்த வானத்தின் அழகை மேலும் கூட்டிக்கொண்டிருந்தது. 

அதை பார்த்தவன் இயல்பாய் இயற்கையை ரசிக்க மாடிக்குச் சென்றான். 

அங்கு மழையில் முழுவதும் நனைந்து வந்து கொண்டிருந்த சந்தியா அவனைக் கவனிக்காமல் துள்ளி ஓடி வர வேகத்திலேயே வழுக்கி விழும் நேரத்தில் மூர்ச்சையாகி விட்டாள். 

அவளை ஒரு கையில் தாங்கியவாறு அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான் அவள் கண் திறக்கவும் அவளைத் தன் கையிலிருந்து விடுவித்து சுவரின் மீது சாய்த்தான். 

அவள் கண் விழித்துப் பார்த்ததும் அவளின் முன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த ரஞ்சித் தான் அவள் கண்களுக்குத் தெரிந்தான். 

அவசரமாய் அவள் எழுந்து நிற்க அவன் மயக்கம் தெளிந்து விட்டதா ? என்று கேட்க அவள் சிறு வெட்கத்துடன் தலையசைத்து விட்டு செல்ல அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

கீழே வந்தவள் அப்போதுதான் இருட்டிவிட்டதை கவனித்தாள்.  

அர்ஜுன் சந்தியாவை தேடிவிட்டு அவரை காணாததால் அவர்களும் கிளம்பிச் சென்று விட்டனர். 

மீனாட்சி அப்போதுதான் சமையல் அறையை விட்டு வெளியே வந்தவள் சந்தியாவை பார்த்தாலும் அவரிடம் என்னம்மா எங்கே  போயிருந்தாய்? என்று கேட்க அவள் முகம் சிவந்தாலும் வெளியில் மாடிக்கு சென்றிருந்தேன் என்றாள்.

பின்பு அவரிடம் சென்று வருகிறேன் அம்மா என்று கூற அவள் ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு ரஞ்சித்தை தேடி சென்றாள்.

சரியா 10 நிமிடம் கழித்து ரஞ்சித்தும் மீனாட்சியும் வர அவள் இதயம் ஏனோ அதிகமாய் துடிக்க ஆரம்பித்து விட்டது. 

அதற்கேற்றார் போல் மீனாட்சி சந்தியாவிடம் நீ தனியாய் செல்வது நல்லது இல்லை அதனால் ரஞ்சித்தையும் உடன் அனுப்புவதாக கூற அவளிடம் மறுப்புத் தெரிவிக்க முடியாமல் அவனுடன் சென்றாள்.

அடுத்த இரு நாட்களுக்கு சந்தியா ஆபீஸ் வரவில்லை. 

அவள் அவனுடைய ப்ராஜெக்ட் பார்ட்னர் என்பதால் அவனுக்கு நிறைய வேலைகள் வந்துவிட்டன. 

அவன் ஓரளவுக்கு வேலைகளை முடித்து விட்டு அன்று மாலை சந்தியாவின் வீட்டிற்கு அவளை நலம் விசாரிக்கச் சென்றான். 

அப்போது அவள் வீடு திறந்தே இருக்க அவன் உள்ளே பார்த்துக் கொண்டே நுழையவும் உள்ளே ஒரு அறையிலிருந்து காய்ச்சலில் முனகும் சந்தியாவின் குரல் வந்து கொண்டிருப்பதை கவனித்தான். மெதுவாய் அறை கதவை தட்டினான்.

அவன் அறைக் கதவை மீண்டும் தட்ட முயல அதற்குள் சந்தியா வந்து கதவை திறந்தாள். 

அவள் அவனை எதிர்பார்க்காததால் அவள் அப்படியே வெறித்து நின்று விட்டாள். 

கண்கள் கலங்கி சோர்வாய் கலைந்த முடியில் நைட்டியில் இருந்தவளை பார்த்தவனின் மனம் ஏனோ வலித்தது. 

அப்போது அவள் சிறிது நேரம் இங்கு உட்காருங்கள் என்று சோபாவை காட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள். 

பின்பு ஒரு 15 நிமிடம் கழித்து அவள் அரக்கு பட்டுப் புடவையில் அழகாய் சிரித்துக் கொண்டே கையில் காபியை எடுத்துக்கொண்டு வந்தாள். 

அவன் இப்போதுதான் அவள் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்  கொண்டிருந்தவள் எப்படி இப்படி எல்லாம் செய்கிறாள் என்று யோசித்துக் கொண்டிருந்தான். 

அவள் அவனிடம்  காபியை குடிக்கச் சொல்லி விட்டு உள்ளே சென்று வீட்டை சுத்தம் செய்தாள். துணிகளை மடித்து வைத்தாள், பாத்திரங்களை அடுக்கி வைத்தாள், பிரிட்ஜை கிளீன் செய்து தண்ணீர் ஊற்றி வைத்தவள் துவைக்க வேண்டிய துணிகளை எடுத்து தனியாக வைத்து விட்டு மீண்டும் சென்று பூஜை அறையில் விளக்குகளை சுத்தம் செய்து வைத்துவிட்டு விளக்கேற்றினாள்.

 அதன் பின்பு வந்து சோபாவில் அவனுக்கு எதிராய் அமர்ந்தாள். 

அவன் அதற்கு மேலும் அமைதியாக இருக்கக் கூடாது என்று கருதி இப்போது ஏன் இவ்வளவு வேலை செய்கிறாய் நாளை பார்த்துக் கொள்ளலாம் இல்லையா? ஏற்கனவே நீ சோர்வாய் காணப்படுகிறாய் என்றவனை இடைறித்து தேங்க்ஸ் என்றாள். 

அவன் புரியாமல் ஏன் என்று கேட்க இந்த இரண்டு நாளும் யாருடனும் பேசாமல் இருந்தேன்.

 ஏதோ தனிமையான உணர்வு இப்போது தான் இந்த உலகிற்கே வருகிறேன் என்றாள்.

அவன் சரி நான் போய் வருகிறேன். நேரமாச்சு ஓய்வெடுத்துக் கொள் என்றவனிடம் என்னை கோவிலில் விட்டுட்டு செல்கிறீர்களா? இன்று வெள்ளிக்கிழமை நான் கண்டிப்பாய் செல்ல வேண்டுமென்றாள். 

அவன் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னுடன் பைக்கில் வரலாம் என்றான். 

அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு உங்களுக்கு தொந்தரவு ஏதும் இல்லையே எனக் கேட்க அவன் இல்லை என தலையசைத்து விட்டு இருவரும் வீட்டை விட்டு கிளம்பி வெளியே வரும்போது அவள் திடீரென ஞாபகம் வந்தது போல் உங்களுக்கு நிறைய வேலை கொடுத்து விட்டேன். 

நாளையிலிருந்து சரியாய் வேலையை கவனித்துக் கொள்கிறேன் என்றாள். 

அதற்கு அவன் அப்படி ஒன்றும் வேலை அதிகமா இல்லை.

 நீ இல்லாததுதான் ரொம்ப போர் என்றான். 

அதற்கு அவள் நான் அப்படி ஒன்றும் உங்களுக்கு உதவியாய் இருக்க மாட்டேனே பின்பு, எப்படி உங்களுக்கு போர் அடித்திருக்கும் என்று கூற அதற்கு அவன் உபத்திரமாகவும் நீ இருந்ததில்லை என்றான். 

இருவரும் கோவிலை நெருங்கி விட அமைதியாக பைக்கில் இருந்து இறங்கினர். 

அவள் அவனை திரும்பி பார்க்க அவன் பயபக்தியுடன் கும்பிட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தான். 

அவள் முன்னே சென்று அர்ச்சனை தட்டை வாங்க அப்போது அங்கு வந்த ரஞ்சித் அவரிடம் ஐந்து சரம் மல்லிகை பூவை நீட்டினான். 

அவள் நானே மறந்து விட்டேன் தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு பூவை அர்ச்சனை தட்டுடன் வைத்து எடுத்து கொண்டு உள்ளே சென்று பூஜை செய்தார். 

அதுவரை தனியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ரஞ்சித் இப்போது அவனும் வந்து அவளருகில் நின்று கொண்டு பிரசாதம் வாங்கினான் .

Advertisement