Advertisement

சொர்க்கம் 4

கோபி வித்யாவை பார்க்க அவள் அவனை பரிதாபமாக பார்த்துவிட்டு உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் என்றதும் அவன் மேல் ஐஸ் ஃபேக்டரியை யாரோ வைத்தது போல் இருந்தது அவனுக்கு.

தன்னுடன் சிரித்துக்கொண்டே வருபவனை பார்த்துக்கொண்டு கேன்டீனுக்கு சென்று இரண்டு காபியை ஆர்டர் செய்து விட்டு அவனிடம் திரும்பி, கோபி எனக்கு எங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் .

எனக்கும் அவரை பிடித்து விட்டதால் வரும் ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் என்றாள். அவ்வளவுதான் காற்று போன பலூன் போல ஆகிவிட்டான் கோபி. 

 அதற்குப் பிறகு இருவரும் எதுவும் பேசாமல் காபியை குடித்து விட்டு தங்கள் வேலைக்குத் திரும்பினர். 

அதற்கு அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் கோபி வித்யாவிடம் பேசுவதைக் கூட தவித்தான். அவளும் நிம்மதி என இருந்தாள்.

 இங்கு ரஞ்சித்தை பார்க்க வந்த அர்ச்சு அப்படியே அதிசயப்பட்டாள். நேத்ரா அவனுக்கு ஜூஸ் மற்றும் மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்து கொண்டு இருந்தாள்.

 அவனும் இருந்த களைப்பில் அப்படியே உறங்கி விட்டான். அர்ச்சனா சப்தம் ஏதும் செய்யாமல் அர்ஜுன் கேபினை நோக்கி துள்ளி ஓடிவர, நரேன் திடீரென தன் அறையிலிருந்து வெளியே வந்ததால் அவள் அங்கேயே நிற்க ,அவன் நேத்ரா என்று அழைத்துக் கொண்டே செல்ல அர்ச்சனா நரேன் என அழைத்தாள்.

அந்த வார்த்தைக்கு தான் எவ்வளவு மதிப்பு! நரேன் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றுவிட்டான்

அவள் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தவளாய் தன் தலையில் குட்டி கொண்டாள். நரேன் திரும்பி அவளிடம் என்னவென்று கூப்பிட்டாய் என கேட்க,

இல்லை சார். நேத்ரா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் தலைவலினு சொன்னாங்க. 

அவள் பதட்டத்திலிருந்து அவளை கண்டு கொண்டவனாய்  ஓகே அர்ஜுன் எங்கே ? என்று கேட்க நானும் அவனை தான் தேடுகிறேன் என்றாள். சரி வா  என்று அவன் அழைக்க அவளோ எங்கே என்றாள். 

ம்ம்ம்… தோடா பயப்படாதே அர்ச்சனா. அர்ஜுனுடைய கேபினுக்கு தான் என்று கூறி விட்டு அவன் முன்னே செல்ல அவள் அவனை பின்தொடர்ந்தாள்.

 அர்ஜுன் அவனது கேபினில் தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அர்ஜுன் என்றழைத்தாள்.

அவனோ நரேனை கவனியாது சொல்லு ஆச்சி  என்று கூற அவள் கோபமாய் முறைத்துக் கொண்டே அவன் மண்டையில் குட்டு வைக்க 

அவன்,” ஏய் டெவில்! எப்ப பாரு சின்ன புள்ளத்தனமா அடிச்சிட்டு இருக்கியே உன்ன நரேன் எப்படித்தான் சமாளிக்க போறானோஎன்றதும் அதுவரையில் சிரித்துக் கொண்டிருந்தவளின் முகம் ரோஜாவாய் சிவக்கஅவன் மீண்டும் எல்லார் முன்னாடியும் நாங்க உங்க பின்னாடி சுத்தி கெட்ட பேர் வாங்கணும்.

 நீங்க மட்டும் நல்ல பொண்ணா இருந்துட்டு சமத்துனு பேர் வாங்குவிங்க நாங்க இருக்கற/கிடைக்கிற எல்லா பட்டத்தையும் சுமக்கனும் அப்படித்தானே என்றான்.

 அவள் எதுவும் பேசாமல் நிற்க அவனோ அதிசயபட்டவனாய் என்ன ஆச்சு அர்ச்சு உனக்கு? ஏன் இப்படி நிற்கற? என்று கேட்கும் போதே   என்னால்தான் என்ற நரேனின் குரல் ஒலித்தது.

 அர்ஜீ அவனிடம் நீ எப்போது வந்தாய் நரேன் என்றான். நீ எனக்காக பரிதாபப்படும் போதே வந்து விட்டேன் என்றான். 

ஓ, அதான் அம்மணி  பல் புடுங்குன பாம்பாட்டம் நிற்கிறாங்ளா? இல்லனா நான் பேசின பேச்சுக்கு  ஜெனிவால மீட்டிங் போட்டு இருப்பாங்க என்றான்.

 அர்ச்சு அவளுடைய கேபினுக்கு சென்றுவிட நரேன் அவனிடம் ஆடிட்டிங் பார்ட்டி பற்றி  பேசிக்கொண்டிருந்தான். பின்பு அர்ச்சனா தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று கேட்டான்.

 அதற்கு அவன் நீங்கள் அர்ச்சனாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ தையேதான் அவள் நினைக்கிறாள் என்றான்.

 அவன் கைகளை பிடித்துக்கொண்டு தேங்க்ஸ் அர்ஜுன் என்றான். நரேன் அர்ச்சனாவை சீக்கிரமாய் பெண் கேட்டு செல்லுங்கள். அவள் அம்மா இப்போதே கவலைப் படுகிறார்கள் என்றான்.

 இரண்டு மாதத்திற்குள் கம்பெனியில் ப்ராஜெக்ட் எல்லாம் முடிஞ்ச  உடனே எங்களோட கல்யாணம் என்றான்.  நரேன் மீண்டும் அவனிடம் திரும்ப ,இப்ப என்ன பாஸ்? என்றான்.

 நீ யார்கிட்டயாவது மாட்டிக் கொண்டாயா என்று கேட்க, போய் வேலையை பாருங்க சார் அப்புறமா பேசிக்கலாம். 

ம்ம்ம்ம்… என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்கு சென்றவன் அங்கு அவனுக்காக நேத்ரா காத்துக் கொண்டிருந்ததை  கண்டு ஹாய் நேத்ரா! என்று   கூறிவனுக்கு ஹாய் நரேன் என்று கூறிவிட்டு தான் பெங்களூர் பிரான்சுக்கு டிரான்ஸ்பர் வாங்கி  விட்டதாக கூறினாள்.

 அவன் ஏன் என்று கேட்கும் முன்னே தனக்கு அங்கு வேலை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாளைய கனவு என்றாள்.

 அவன் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் சரி என்றான். பின்பு அவளிடம் ஆடிட்டிங் வரைக்கும் இங்கு இருக்கும் படி என்று கேட்டுக்கொண்டான்.

 அடுத்த நாளிலிருந்து மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டான் ரஞ்சித். வீட்டில் ஷாப்பிங், கேட்டரிங் என்று சரண்&வானதியின் கல்யாண வேலைகளில் தன் தந்தைக்கு உதவினான்.

 அடுத்தநாளே அர்ச்சனா மற்றும் அர்ஜுன் வந்துவிட வீடே கலகலப்பானது. ன்று இரவு ரஞ்சித் வந்தபோது மிகவும் சோர்ந்து இருந்தான்.

 அவனைப் பார்த்துக் கொண்டே வந்த சரண் அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு  சென்று முகம் கழுவச் சொல்லிவிட்டு அவளே அவன் முகத்தை துடைத்து விட்டு அவனை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

 அங்கு மேசையில் சாப்பாடு வைக்கப்பட்டு இரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு சேரில் அவனை உட்கார வைத்துவிட்டு அவனுக்கு ஊட்டி விட எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் திடீரென நினைவு வந்தவனாய் சரண்  சாப்பிட்டாயா? என்றான்.

 நான் அம்மாவோட சாப்பிட்டுக் கொள்கிறேன். நீ சாப்பிடு என்றாள். அவன் சிரித்துக்கொண்டு கன்னத்தில் தட்டி விட்டு ஊட்டி விட ஆரம்பித்தான்.

 அவள் கண்களில் நீர் வழிய பயந்துபோய் என்னடா புரை ஏறிருச்சா என்று கேட்க, இல்லை அண்ணா, கல்யாணத்துக்கு அப்புறமா நான்  இன்னொருவரின் மனைவி அப்புறம் நீயும்  இன்னொருத்தவங்களின் புருஷன் ஆயிடுவ அப்புறம் இந்த அரட்டை அன்பு எல்லாம் இருக்குமான்னு தெரியல. அதான் இன்னைக்கு உன்னோட இருக்கணும்னு தோணுச்சு என்றாள்.

 நானும் இதையேதான் பேசிட்டு யோசிச்சிட்டு இருந்தேன் சரண் ஆனா இதுதான் லைஃப். சோ போகப் போக பழகி விடும் என்று கூறிக்கொண்டே தன் கையிலிருந்த கிப்ட்டை அவளிடம் நீட்ட எனக்கு இதெல்லாம் வேண்டாம் அண்ணா என்றாள்.

 பிரித்துப் பார் என்றான். அதைப் பிரித்தவள் அப்படியே அதிசயித்தாள். அவளுடைய ஒவ்வொரு வயதிலும் எடுத்த அனைத்து போட்டோக்களையும் சேர்த்து ஆல்பம் ஆல்பமாய்  செய்திருந்தவன் கடைசி பகுதியில் தன் குடும்ப போட்டோவை போட்டு இருந்தான். தேங்க்ஸ் அண்ணா என்றாள் .

அவள் ,அம்மா அப்பாவை பத்திரமா பார்த்துக்கோ என்று கூறினாள்.பின்பு அவனையும் ஒழுங்கை கவனித்துக் கொள்ளும்படி கூறினாள்.

  இவர்களைத் தேடிக் கொண்டிருந்த அர்ஜூனும் அர்ச்சனாவும் மாடிக்கு வர தன் மடியில் தன் தங்கையை தாய்போல தாங்கிய அவனைப் பார்த்ததும் நெகிழ்ந்து போய் அவர்கள் கீழே வந்து விட்டனர்.

அடுத்த நாள் திருமணம் என்பதால் கோதாவரி குடும்பமும் வசந்தியின் குடும்பமும் அர்ஜூனின் குடும்பம் அர்ச்சனாவின் அம்மா ரஞ்சித்  நண்பர்கள் என மீண்டும் திரண்டது பட்டாளம்.

புதுமண தம்பதிகளாக அஸ்வத் வானதி வலம் வர மீரா- அர்ஜுன் அர்ச்சனா-நரேன் சைலஜாஅவின் கோபி -வித்யா ஸ்ரீராம் -வனஜா ரஞ்சித்- நேத்ரா நந்தினி- கோகுல் என காதல் ஜோடிகள் கைகோர்க்க திருமண விழா களைகட்டியது.

திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் பொறுப்பை செழியன் சுப்பு மற்றும் மணி கவனித்துக்கொள்ள ,அதே சுபதினத்தில் மங்கள இசை ஒலிக்க  செந்தில் சரண்யாவின் கழுத்தில் தாலிகட்ட வானதி நாத்தனார் முடிச்சு போட்டாள்.

அனைவரும் விருந்திற்கு செல்ல செழியன் தன் மகனிடம் ,”டேய் மகனே நீயும் எங்களுக்கு ஒரு மருமகளை கண்ணில் காட்டி விட்டால் எங்கள் வேலை முடிந்துவிடும்” என்றார்.

 அதற்கு அவன் அவ்வளவு எளிதாக உங்களுக்கு ரெஸ்ட் கிடையாது என்றான் சிரித்துக்கொண்டே. பின்பு அவரிடம் மீராவின் திருமணம் முடிந்ததும் தன்னைப் பற்றி யோசிக்கலாம் என்றான்.

 சரி வா என்று கூறிக்கொண்டே இருவரும் வெளியே வர அங்கு யாருடனோ நின்று பேசிக்கொண்டிருந்த நேத்ராவை பார்த்தவர் அவனைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டார்.

 அனைவரும் மணமக்களை மகிழ்ச்சியுடன் மறு வீட்டிற்கு அனுப்பி விட்டு வந்தனர்.அடுத்தடுத்த இரு திருமணங்களால் சற்று சோர்வடைந்திருந்த அனைவரும் ஓய்வெடுக்க சென்று விட்டனர். 

மற்ற நண்பர்கள் அனைவரும் கிளம்ப , மீரா அர்ஜுனுக்கு ப்ரியா விடை கொடுத்தாள். அதை கவனித்த அர்ச்சனா சிரித்தாள்.

 அவர்கள் அனைவரும் ரஞ்சித்திடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றனர்.அவர்கள் சென்றதும் மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கினான்.

  நாட்கள் உருண்டோடரு நாள்  திடீரென வானதி மயங்கி விழ அஸ்வந்த் மிகவும் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள்  முகத்தில் தண்ணீரை வாரி இறைத்தான். அவள் எழுந்ததும் அவனிடம் எனக்கு ஒன்றும் இல்லை அத்தான் என்றாள்.

அவன் அவளைத் தூக்கிக்கொண்டு காரின் அருகில் செல்ல அவள் அவனிடம் இருந்து கீழே இறங்கி விட்டு அத்தான் உங்கள் மகனுக்கு பசிக்கிறதாம்! நான் செல்கிறேன் என சொல்ல, அவனோ மகிழ்ச்சியில் கத்த அங்கு வந்த கோதா என்னவென்று  கேட்க அவன் கூறியதும் பெரியவர்கள் அனைவரும் ஆசீர்வதித்தனர். 

அடுத்த ஒரு வாரம் அவன் ரஞ்சித் விடுமுறை எடுத்துக் கொண்டான்.அந்த இடைவேளையில் நேத்ரா அவளுடைய பேக்கிங் வேலைகளை முடித்துக் கொண்டாள்.

அதேநேரம் ஸ்ரீராம் வனஜா திருமண நாளும் வந்தது. அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக்கினர்.ஆனால் நேத்ரா மட்டும் வரவில்லை. அவள் அன்று பெங்களூர் சென்று அவள் தங்கும் விடுதி மற்றும் வேலைக்கான ஆபீஷியல் அக்ரிமெண்ட் வேலைகளை முடித்தாள்.

அதேசமயம் ரஞ்சித்தின் நண்பனான தீபக் அவனுடைய தங்கையின் திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தான். ஸ்ரீராம் திருமணத்திற்கு வந்திருந்த அவின்ஷைஜாவிற்கு அவனை ரஞ்சித் அறிமுகம் செய்து வைக்க, அங்கு தன் அம்மாவிடம் சண்டையிட்டுக் கொண்டே வந்த அணுவைப் பார்த்தவன் ரஞ்சித்திடம் திரும்பி யார் இந்த வாயாடி என்று கேட்க, அவனோ டேய் அவ என்னோட தங்கச்சி அனு என்றான். அதான் நல்லா தெரியுதே டா.  

ஆளப்பாரேன் சண்டக்கோழியாட்டம் என்று கூறியவனிடம் 

தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு ரஞ்சித்திடம் திரும்பி அர்ச்சனா அழைத்ததாக கூறிவிட்டு சென்றாள் அணு.ரஞ்சித் அவனை அழைத்துக்கொண்டு அர்ச்சனாவை தேடி சென்றான்.

அங்கு அவளைக் காணாததால் செல்போனில் அவள் நம்பரை அழைத்தான். அடுத்த முனையில் செல் சுவிட்ச் ஆப் எனக் கூறியது. 

னோ அவனுக்குள் ஓர் பயம் தோன்ற அர்ச்சனாவின் வீட்டிற்குப் போன் செய்தான். அங்கு அஞ்சலிதான் எடுத்து பேசினார்.

வரும் அர்ச்சனாவை சீக்கிரமாய் வீட்டிற்கு வரச் சொல்லுப்பா என்றதும் இன்னும் அதிகமாக அவன் இதயம் துடிக்க ஆரம்பித்தது.

 அதற்குள் அவனைத் தேடி வந்த அர்ஜுன் அவர்கள் இருவரையும் அவசரமாக அழைத்துக் கொண்டு அருகில் இருந்த அன்னை ஹாஸ்பிடலுக்கு சென்றான்.

 அங்கு நரேன் வெளியில் நின்றிருந்தான். ரஞ்சித்தை பார்த்ததும் ஓடி வந்து கட்டி அழுதவன், அவனை  உள்ளே அனுப்பினான்.

அர்ஜுன் ,தீபக் இருவரும் வெளியே நின்றனர். அவன் உள்ளே வந்ததும் அர்ச்சனா நேத்ராவின் கைகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்து விட்டாள்.

 நேத்ராவின் கண்கள் அவன் கண்களை சந்தித்தன. 

அவன் அவளிடம் என்னை விட்டு செல்லாதே நேத்ரா, உன் இழப்பை என்னால் தாங்க முடியாது என்று கூறி அழ அவள் அவனை அருகில் அழைத்து அவன் லைமுடியினை கோதி கொண்டே அவளைப் பற்றி அவனிடம் கூற ஆரம்பித்தாள். 

அவள் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் செல்லப் பெண் என்றும் ஒருநாள்  திடீரென ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் அவருடைய பெற்றோர்கள் இறந்து விடவும் உறவினர்கள் அனைவரும் சொத்துக்களைப் பறித்துக் கொண்டு அவளை வெளியில் துரத்தி விட்டனர்.

 அவள் அழுது கொண்டே சாலையில் நடந்து போகும்போது ஒரு கிறிஸ்துவ பாதர் அவளை அழைத்துக் கொண்டு சென்று ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டார். 

அங்கு இருந்து கொண்டு தான் ஆறாம் வகுப்பிலிருந்து  காலேஜ் வரையில் படித்தாள். 

படித்தவுடன் இங்கு வேலை கிடைத்ததாகவும் ஆனால் தனக்கு பிளட் கேன்சர் இருந்ததால் சில காலம் சிகிச்சை எடுத்து விட்டு வந்ததால் கம்பெனியில் சேர லேட் ஆனது என்றும் கூறினாள். 

அவளோட சேலரியில் பாதியை ஆசிரமத்திற்கு அனுப்பிவிட்டு மீதியில் தன்னுடைய சிகிச்சையை பார்த்துக்கொண்டு இருந்தாள். 

மேலும் அவள் ரஞ்சித்  உங்களை பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஆனால் 

நான் இருக்கப்போகும் கொஞ்ச காலத்திற்காக எல்லோருடைய மனதையும் வதைக்க மனம் இல்லை.

 அதனால் தான் உங்களை விட்டு விலகி இருந்தேன். நீயும் அர்ஜுன் அர்ச்சனா எல்லோரும் சேர்ந்து சிரிக்கும் போது உங்களுடன் சேர்ந்து சிரிக்க ஆசைதான், அதே போல் வலிக்கும் போது உங்கள் தோல் சேர ஆசைப்பட்டேன். 

ஆனால் அதை விட அதிகமாக நீங்கள் எனக்கு உங்கள் அன்பைக் காட்டி விட்டீர்கள். அந்த சந்தோஷம் ஒன்றே எனக்குப் போதும் ரஞ்சித் என்றவள் மேலும் விடாமல் எனக்கு தெரியும் ரஞ்சித் இன்னும் கொஞ்ச நாளில் இறந்து விடுவேன் என்று அதனால்தான் பெங்களூர் பிரான்சுக்கு ட்ரான்ஸ்பர் வாங்கினேன்.

 ஆனா விதி உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்தி தான் நான் சாகணும்னு இருக்கு போல என்று கூறிவிட்டு அவனிடம் தன் கையை நீட்டினாள்.

 அவன் அவளைப் பார்க்க அவள் எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுங்கள் ரஞ்சித் என்றாள்.

 அவனும் செய்து கொடுக்க அவள் அவனிடம் நீங்கள் வேறொரு திருமணம் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நான் கண்டிப்பா உங்களோட மகளா பிறப்பேன்.

 ரஞ்சித் நான் ஆசைப் பட்ட எல்லா சந்தோஷத்தையும் அனுபவிப்பேன். என்று உங்களுடன் நீண்டநாள் வாழ வேண்டுமென்றாள்.

அவன் உனக்காக செய்கிறேன் என்ற அவனின் வாய்பொத்தி, இல்லை இது ஒரு பெண்ணின் வாழ்க்கை என்றாள்.

பின்பு அவனிடம் அனைவரையும் அழைத்து வரச் சொல்ல நரேன் அர்ச்சனா அர்ஜுன் உள்ளே வர அவள் என்னை மன்னித்துவிடுங்கள். 

உங்களுடன் என்னால் நீண்ட நாள் வாழ முடியவில்லை என்றாள்

அர்ச்சனா அவள் கையை பிடித்துக் கொண்டு அவளை வருடிக்கொடுத்தாள். பின்பு நரேனிடம் அவளை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அர்ஜுனிடம் திரும்பி எனக்கு ஒரு ஆசை என்றாள்.

 அவன் என்னவென்று அருகில் வந்து கேட்க அவன் இரு காதையும் பிடித்து அவள் திருக அவன் வென்று கத்த அர்ச்சு அவன் தலையில் குட்ட அவன் இன்னும் பயப்படுவது போல் நடிக்க நரேனும் முதுகில் சாத்த அவன் எழுந்து ஓட அவர்கள் துரத்த என்று அந்த இடத்தை பார்த்து சிரித்தவள் சத்தம் கேட்டு உள்ளே வந்த ரஞ்சித் அவளை இமைக்காமல் பார்த்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவள் சிரிப்பு நின்று விட்டது. அவள் அவனை விட்டு பிரிந்து விட்டாள். 

அவன் அப்படியே உறைந்து நிற்க, அப்போதுதான் மீனாட்சி தன் குடும்பத்தோடு அங்கு வந்தாள்.

 தீபக் ரஞ்சித்தை அழைத்துக் கொண்டு வெளியே வர, அர்ச்சனா மீனாட்சியை சமாதானப்படுத்தினாள்.

 இந்த நிகழ்விற்கு பிறகு ரஞ்சித் மிகவும் மாறி போனான். யாரிடமும் அவ்வளவாய் பேசுவது சிரிப்பது இல்லை.

 அவனை மாற்ற அர்ச்சுவும் அர்ஜுனும் நரேனிடம் பேசி வெளிநாட்டு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தனர்.

 மீனாட்சியும் செழியனும் அவனிடம் மென்மையாய் பேசி அவனை கனடாவிற்கு அனுப்பி வைத்தனர்.

 அவ்வப்போது  அர்ச்சுவும் அர்ஜுனும் வந்து மீனாட்சியை பார்த்துக்கொண்டனர். இடையில் அவின்-சைலஜா திருமணம் நிச்சயமானது.

 அதற்கும் ரஞ்சித் வரவில்லை .வேலை அதிகம் என்று கூறிவிட்டான் .

எப்போதாவது தன் அம்மாவிடம் மட்டும் பேசுவான்.

மற்றபடி  அர்ச்சுவிற்கும் அர்ஜுனனுக்கும் கூட மெயில் கான்டக்ட் தான்.

அவன் சென்று முழுதாய் ஒரு வருடம் கழித்து அவன் வருவதாக ஒப்புக் கொண்டான். 

அந்த இடைவெளியில் அஷ்வந்த் வானதிக்கு அஸ்வின்  பிறந்தான். 

 அதைக் காரணமாகக் கொண்டு அர்ஜுனனும் அர்ச்சனாவும் மீராவின் வீட்டிற்கு சென்றனர்.

 அங்கு நடந்த ஒவ்வொன்றிலும் தன்னை மறந்து விட்டிருந்த அர்ஜுனுக்கு  அர்ச்சனா தான் மீராவை நினைவூட்டி அழைத்து  வந்தாள்.

 மீரா அவனிடம் விலகியே இருந்தாள்

அவள் அம்மா கொடுத்துவிட்ட காபியை கூட அர்ச்சனாவிடம் தர சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

 அதனால் மனம் சோர்ந்த அவனை அர்ச்சனா தான் சமாதானப்படுத்தினாள்

இத்தனை நாள் பிரிவு துயரம் இருக்கத்தானே செய்யும். நீதான் மென்மையாக எடுத்துக் கூற வேண்டுமென்றாள்.

 ஆனால் அதற்கு அவன் வாய்ப்பே கொடுக்காமல் மறுத்தால் எப்படிக் கூற முடியும் என்றான்.

 ஆனால் அர்ச்சனா மீராவை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்

அவள் சின்ன பெண்  என்றும் உன் மேல் உள்ள உரிமையில் சண்டையிடுகிறாள் என்று சொல்ல அவன் சமாதானம் ஆனான்.

 அவள் அடுத்து மீராவிடம் சென்று நடந்ததை அனைத்தையும் கூற அவளும் சமாதானத்தோடு மன்னிப்பும் கேட்டாள்.

அதன்பிறகு இருவரும் இயல்பாய் பேச ஆரம்பித்தனர். அடுத்து ஆபீஸ் ஆடிட்டிங் பார்ட்டி நடந்தது.

அப்போதுதான் நரேன் அர்ச்சனாவிடம் நீண்ட நாட்கள் கழித்து பேசினான். அவளும் அவனுடன் இயல்பாய் பேச ஆரம்பித்தாள்.

அவன் அவளிடம் திருமணம் பற்றி பேசியதும் அவள் அமைதியா இருக்க ,அவனுள் இருந்த கோபம் வெளியில் சூறாவளியானது. 

அந்த வேகத்தில் வேறு யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்டுவிட்டான்.

அவ்வளவுதான் ,”தேங்க்ஸ் பார் யுவர் க்ரேட் ஒப்பினியன் ஆன் மீ ” என்று கூறிவிட்டு எழுந்து சென்றவள் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.

பின்பு அனைவரும் விருந்திற்கு செல்ல நரேன் தானே சென்று அனைவருக்கும் பரிமாறினான்.

அர்ச்சு அதைத் தவிர்க்கும் பொருட்டு அவள் தனக்கு தலைவலி என்று கூறிவிட்டு வெறும் ஜூஸ் மட்டும் குடித்தாள்.

 அர்ஜுன் சீக்கிரமாய் சாப்பிட்டுவிட்டு கிளம்பலாமா என்று கேட்க அவன் தலையசைத்து அனைவரிடமும் கூறிக்கொண்டு புறப்பட்டனர்.

 புறப்படும் முன் நரேனை ஒருமுறை பார்த்தாள். அந்தப் பார்வையில் நீ இவ்வளவு தானா? என்ற கேள்வி தெளிவாய் இருந்தது.

 அதனால் அவன் மனம் ஏனோ பாதிக்கப்பட்டது. அதற்கு அடுத்து வந்த நாட்களில் அர்ச்சனாவும் நரேனும் அவ்வளவாய் பேசிக்கொள்வதில்லை.

ஆனால் வெளியில் மட்டும் எப்போதும் போல இருக்க, யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

அந்த சமயம் தான் ரஞ்சித் அர்ச்சனாவுக்கு கால் பண்ணி அவன் வருகையை தெரிவிக்க அவளோ தன் கவலைகள் அனைத்தையும் மறந்து விட்டு தன் தோழனின் வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பிதத்தாள்.

 அவன் பேசி முடித்த உடனே அவள் அர்ஜுனிடம் அதைத் தெரிவித்தாள்.அவனும் உண்மையான மகிழ்வுடன் அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

 அவன் வெளிநாடு சென்ற இடைவெளியில் அவனிடத்தில் சந்தியா வேலையில் சேர்ந்து இருந்தாள். அவள் வந்த கொஞ்ச நாளிலேயே அனைவரிடமும் பழகிவிட்டாள்

முக்கியமாய் அர்ச்சனா மற்றும் அர்ஜுனிடம் மிகவும் நெருக்கமாக பழகியதால் அவர்கள் மூலம் ரஞ்சித்தை பற்றி தெரிந்து கொண்டவள்  அவளை அறியாமல் அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

 ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. நாளை மனதிற்கினியவன்  வரப்போகிறான்.

உள்ளுக்குள் இருந்த ஆவலை கட்டுப்படுத்திக் கொள்ள ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தி அடக்கி வைத்தாள்

அர்ச்சனாவை பார்த்ததும் இன்னும் பீறிக் கொண்டு வந்த வார்த்தைகளுக்கு அணை போட்டு விட்டு அவளிடம் இயல்பாய் பேசினாள்.

 இன்னும் பத்து நிமிடங்களில் அவர்கள் வந்து விடுவார்கள் என்று அர்ச்சனா கூறிக்கொண்டே பூங்கொத்தை அவளிடம் நீட்டினாள்.

 அவள் என்ன என்பது போல் பார்க்க, கம்பெனி சார்பில் நீதான் அதை அவனிடம் கொடுக்க வேண்டுமென்றாள்.

 அவள் நீயே கொடுத்துவிடு என்று கூற, அர்ச்சு அவளிடம் நாங்க கொடுத்தா அவனை பிரிச்சு பார்க்கிற மாதிரி இருக்கும். ஆனா நீ, அவனுக்குப் புதுசு இல்லையா அதனால் தான் என்றாள்.

 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அர்ச்சுவின் செல் ஒலிக்க, அதை பார்த்தவள் இந்த ராஸ்கல் ஏன் இப்ப போன் பண்றான் என்று திட்டிக்கொண்டே  ஹலோ என்றாள்.

அங்கு அவளை விட அவன் வேகமாக ஹே லூசு என்ன கண்ண தொறந்துட்டே  தூங்கறியா இல்ல பக்கத்துல நரேன் இருக்கிறானா என்று கிண்டல் அடித்துவிட்டு நாங்க ரஞ்சித் வீட்டுக்கு போயிட்டு அப்புறமா தான் ஆபீஸ் வருவோம் என்றான் அர்ஜூன்.

மேலும் அவன் அர்ச்சு இன்னைக்கு செம கட்டு கட்ட போறேன்.

வேணும்னா நீயும் வாயேன் என்றான்.

 அவள் கோபமாய் பற்களை கடித்துக் கொண்டு போனை வை டா மடையா என்று கூறிவிட்டு காலை கட் பண்ணிவிட்டு சந்தியாவிடம் திரும்பி அவர்கள் வர நேரமாகும்.

நீ வா நாம் போய் நம் வேலையை பார்க்கலாம் என்றாள். வெளியிலிருந்து உள்ளே வர இருந்த நரேனும் அவர்களுடன் சேர சந்தியா நரேனிடம் ப்ராஜெக்ட் பற்றி பேசிகொண்டே வர நரேனுக்கு எரிச்சலாகவும் அர்ச்சனாவுக்கு இதமாகவும் இருந்தது.

 இவர்களை பார்த்த ஸ்ரீராம் கோபி வித்யா மற்றும் புதுமண தம்பதிகளான வின் சைலஜா அனைவரும் ரஞ்சித்தைப்பற்றி விசாரித்தனர்.

அவர்கள் அனைவரும் அங்கே பேசிக்கொண்டிருக்க, இங்கு மீனாட்சி தன் மகனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று ன் மகனைக் கட்டிக் கொண்டு உள்ளே அழைத்து செல்ல, அங்கு சோபாவில் சரண் தூங்கிக்கொண்டிருந்தாள்.

 அருகில் செந்தில் அமர்ந்திருந்தான். அவனிடம் பேசிவிட்டு தன் தங்கையின் முடியை கோதினான். அந்த உணர்வில் விழித்தவள் அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

 பின்பு அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அவன் தன் தங்கையை பார்த்துக் கொண்டிருந்தான்.

 சிறு பெண்ணாய் தெரிந்தவள், இந்த இரு வருடங்களில் மிகவும் மாறிப் போய் அழகாய் தாய்மைக்கே உரிய பண்புகளுடன் அவன்  கண்களில் தென்பட்டாள்.

  அதை கவனித்த செந்தில், என்ன மச்சான் உன் தங்கச்சி எப்படி இருக்கா? என்று கேட்க அப்போது தான் சுய நினைவு பெற்றவனாய் செந்திலை பார்த்து சிரித்துவிட்டு சாப்பிட தொடங்கினான்.

 இப்போது தான் அவனுக்கு நாக்கின் இருப்பிடமே தெரிந்தது. பின்பு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஆபீசுக்கு கிளம்பி வந்தார்கள்.

ரஞ்சித் வரும் வழியெல்லாம் அர்ஜுனிடம் வெளிநாட்டிலுள்ள அவர்களுடைய கம்பெனியைப் பற்றி கேட் அவனும் சொல்லிக்கொண்டே வந்தான்.

 திடீரென்று இரஞ்சித் அர்ஜுனிடம் என்ன என்னோட சீட்  இத்தனை நாளா காலியாகவா இருந்தது? என்று கேட்க அவன் சிரித்துக்கொண்டே இல்லை நீ போன அடுத்த நாளே சந்தியா  வந்து விட்டாள் என்றும் அவன் வைத்திருந்த பெண்டிங்  வொர்க் எல்லாம் அவள்தான் முடித்தாள் என்று கூற அவன் அவளுக்கு மனதிற்குள் நன்றி கூறினான்.

 அவர்கள் கம்பெனியை அடையவும் எல்லோரும் வெளியில் வந்து அவனை வரவேற்றனர். அப்போது அர்ச்சனா அழுததை ரஞ்சித் கவனிக்கத்தான் செய்தான்.

அவனுக்கு அவள் மாறி போனவளாய் தெரிந்தாள். பழைய அச்சுவா இருந்தால் இந்நேரம் அவனை வந்து ஒரு வழி பண்ணி இருப்பாள்.

Advertisement