Advertisement

ஆனால் அர்ஜுன் சமையலறைக்கு சென்று அஞ்சலியிடம் பேச்சுக் கொடுத்தான். 

அம்மா உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா என்று கேட்க அவரோ என்ன என்ன என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வர அது சீக்ரெட் யாருக்கும் சொல்லக் கூடாது என்றான். 

அவன் காதை திருகிபிறகு அவர் அவனிடம் அர்ச்சுக்கு நல்ல பையனா பாருடா.

என்ன விட்டா அவளுக்குன்னு சொந்தம்னு சொல்லிக்க நீயும் ரஞ்சித்தும் மட்டும் தாண்டா. 

எனக்கு ஏதாவது ஆகுறதுக்கு முன்னாடி அவளோட கல்யாணத்தை முடிச்சு என்று கூற அவனும் அஞ்சலியை கட்டிக்கொண்டு அம்மா நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருப்பீங்க. அப்புறம் நீங்க மூணு பேரோட குழந்தைங்க கூடவும் விளையாடுவிங்க  என்று கூற, போடா போக்கிரி என்று  செல்லமாய் திட்டிவிட்டு டைனிங் ஹாலுக்கு உணவுடன் வர அர்ச்சனா ப்ரெஷ்ஷாகிவிட்டு வந்து அவர்களுடன் சேர்ந்துக்கொண்டாள்.

  பின்பு இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தான். அங்கு அவனுடைய அக்கா அபிநயா வந்திருந்தார்.

அவனுக்காக வாசலில் காத்திருந்த தமக்கையை எண்ணிக் பூரித்துக் கொண்டே அவளிடம் நலம் விசாரித்தான். 

அவள் சிரித்துவிட்டு அவனுடைய மாமாவுக்கு ஹரி இங்கு ஒரு வாரம் வரை இருப்பதால் அவளும் அவருடன் சேர்ந்து இங்கு வந்ததாக கூறினார்.

 அவன் சித்ரா குட்டி எங்கே கா?  என்று வினவ அவளோ அவனை முறைத்துவிட்டு அவள் தூங்கி விட்டாள். இப்போது மணி என்ன தெரியுமா? என்றாள். 

அவன் சாரிக்கா. அர்ச்சனா வீட்டிற்கு போயிருந்தேன். 

அம்மா ரொம்ப நேரம் பேசிட்டு இருந்ததுல டைம் கவனிக்கல என சொல்ல, அவள் அம்மா அர்ச்சு எப்படிடா இருக்காங்க? என்றாள்.

 அவளிடம் சிறு புன்னகையுடன் உன்னைத்தான் அவர்களும் கேட்டார்கள் என்றான்.

ஓகே அர்ஜுன் நீபோய் தூங்கு. நான் நாளைக்கு அர்ச்சு வீட்டுக்கு போயிட்டு வரேன் என்றாள். 

பின்பு இருவரும் உறங்கி  விட்டனர்.

 காலையில் ஆபீஸ் உள்ளே நுழையும்போதே ஒரு சிரிப்பு சத்தமாய் இருக்க என்னவென்று கேட்க ஸ்ரீராம் அவனிடம் மேரேஜ் இன்விடேஷன் கொடுக்க அவன் அசையாமல் அப்படியே நின்றான். 

இது எப்ப டா என்று கேட்க நேத்து டாஎன்று சொல்ல ,நான் இரண்டு நாள் லீவு போட்டதற்காக கல்யாணம் வரைக்குமா

நான் ஒரு வாரம் லீவ் போட்டு இருந்தா என்ன உன்னோட பசங்க மேரேஜ்க்கு கூப்பிட்டு இருப்பியா இன்று சீரியஸா கேட்க அர்ச்சுவும் ரஞ்சித்தும் அவனிடமிருந்து பாஸ் இன்னொரு மேட்டரும் இருக்கு என்றனர். 

அவன் இன்னிக்கு இது போதும் என்றான்.

  அடுத்து அவின் அவனிடம் வந்து என்னோட ரூட் கிளியர் என்று ஷைலஜாவை பார்த்துக்கொண்டே கூற அவன் இன்னும் நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார அங்கு வந்த நரேன் என்னவென்று விசாரிக்க நடந்ததை அனைவரும் கூற சிரித்துவிட்டு இன்னைக்கு இன்னொரு சர்ப்ரைஸ் என்றான்.

அதற்குள் அர்ஜுன் ஒரு மனுஷன சர்ப்ரைஸ் பண்ணியே கொல்றிங்களேடா, இதெல்லாம் உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் முடியும் என்றான்.

 சரி ஓகே நான் எதுவும் வாயை திறக்கவில்லை என்று நரேன் கூற, டேய் சொல்லித் தொலைடா. 

இல்லைன்னா என்னோட மண்டை காய்ந்து விடும் என்றான் அர்ஜுன்.  அவன் இன்னிக்கு எம்டியோட பிறந்த நாள் என்றான்

அனைவரும் நேத்ராவை  தேட அதை கவனித்த நரேன் இன்னிக்கு அவங்க லீவ்.நாம அவங்க வீட்டுக்கு போய் சர்ப்பபிரைஸ் கொடுக்கிறோம் என்றான்

அனைவரும் ஓகே சொல்லிவிட்டு பிளான் போடத் தொடங்கினர்.  

ன்று அனைவரும் சீக்கிரமாக வீடு திரும்பி பார்ட்டடிக்கு ரெடியாகி வந்தனர். 

ரஞ்சித் ஒரு அழகான ஒரு பெண் தனியாக நடந்து செல்ல ள் காலடிகளை (பாதச் சுவடுகளை) பின்பற்றி வரும் ஒரு ஆண், அவள் சோர்ந்து தன் கடந்த பாதையை பார்க்கிறாள், அப்போது அவள் தோள் தட்டி முன்னே பார்க்கச் சொல்வது போன்ற  ஒன்றை பரிசளிக்க வாங்கிக் கொண்டு வர அங்கு தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த செந்தில் அவனை நோக்கி வரவும் அவன் அதை பார்சல் பண்ண சொல்லிவிட்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.

 அவன் ரஞ்சித்தின் பதட்டத்தை கவனியாது போல் கவனித்துக்கொண்டு விடைபெற்றான். 

அப்போது ரஞ்சித் அவனை வீட்டிற்கு அழைக்க இன்னொருநாள் வருவதாக கூறிவிட்டு சென்றான் .

அடுத்து அவன் செல்லை எடுத்து ஹலோ என்று கூற அங்கு அர்ஜுன் அவனை திட்டிக் கொண்டிருந்தான். 

சீக்கிரம் கிளம்பி வாடா நானும் அர்ச்சுவும்வெயிட்டிங் என்றான். ஓகே வந்துட்டே இருக்கேன். 

எங்கே வரணும் அர்ச்சு வீட்டுக்கா? என்றான்

ஆமாம் என்று அவன் சொன்னதும் போனை வைத்துவிட்டு கிப்ட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினான். 

கார் அர்ச்சுவின் வீட்டின் முன் நிற்க அஞ்சலி அவனிடம் இரண்டு வார்த்தைகள் பேசி கொண்டிருக்கும் போதே…

 அர்ச்சு தன் அம்மாவிடம் வரும் போது அவனை வீட்டிற்கு கூட்டி கொண்டு வருகிறேன். பாச மழையை அப்போது வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு காரை எடுக்கச் சொன்னாள்.

அவர்களோடு பாதிவழியில் அனைவரும் சேர்ந்து கொள்ள அனைவரும் சேர்ந்து நேத்ராவின் வீட்டிற்கு சென்றனர்.

 காலிங் பெல்லை அழுத்தியதும் கதவைத் திறந்த நேத்திரா, பூங்கொத்துடன் நின்றிருந்தவர்களைக் கண்டு அதிர்ச்சியானாலும் சமாளித்துக் கொண்டு உள்ளே  அனைவரையும் உள்ளே வர சொன்னாள்.

 அவர்கள்,அவளிடம் இன்று ஒரு நாள் மட்டும் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்றனர்.

அவள் ஓகே என்று சொல்ல அனைவரும் மகிழ்ச்சி கரகோஷம் எழுப்பினர்.

 பின்னர் நேத்ராவின் கண்களைக் கட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு அனைவரும் வீட்டை அலங்காரம் செய்ய தொடங்கினர்.

 சரியாக ஒரு மணி நேரம் கழித்து  கண்ணை கசக்கிக் கொண்டே திறந்த நேத்ரா,சிறுபிள்ளை போல் குதித்துக் கொண்டு வா ஃபேண்டஸ்டிக் என்றாள்.

 செயற்கை விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் அறை முழுவதும் ஏற்றி வைக்கப்பட்டு மெலடி சாங் போடப்பட்டிருந்தது.

 அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கு பலன்களும் கட்டப்பட்டிருந்தன. மேசையின் மேல் இரவு உணவுகளும் காய்கறியில் அவள் பெயர் பொறிக்கப்பட்டு ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு காய் மற்றும் பழத்தை செதுக்கி வைத்திருந்தனர்.

 அதுமட்டுமில்லாமல் வீட்டிலிருந்து தோட்டத்திற்குப் பூக்களால்  ஒரு பாதையை அமைத்து வைத்திருந்தனர்.

 அந்த பாதை ஒரு கூடாரத்தின் வாயிலை அடைந்ததும் முடிந்தது. அந்த கூடாரமானது வண்ண காகிதங்களாலும் மின்னும் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கூடாரத்தின் மையத்தில் ஓர் இதய வடிவிலான பலூன் தூங்கி கொண்டிருந்தது

அதன் கீழே ஒரு மேசையில் அழகான வட்ட வடிவத்தில் அவள் முகம் சிரித்துக் கொண்டிருந்த கேக் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஹாப்பி பர்த்டே நேத்ரா என்று எழுதி அதன் மூலைகளில் மெழுகுவர்த்தி கொடுக்கப்பட்டிருந்தது.

 நடுவில் இருந்த  மெழுகுவர்த்தி மட்டும் இதழ் மூடிய தாமரை போல் இருந்தது.  அனைவரும் ஹாப்பி பர்த்டே நேத்ரா என்று பாட சுற்றியிருந்த மெழுகுவர்த்திகளை அணைத்த பின்பு நடுவில் ஏற்றி அந்த இதழ் மூடிய தாமரை அழகாய் மலர்ந்த அதே சமயம் மேலே இருந்த பலூனில் இருந்து பூ மழை பெய்தது.

 அவள் கேக் கட் பண்ணி யாருக்கு கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அனைவரும் கையில் ஒரு சிறு துண்டு கேக் உடன் அவளைத் துரத்த ஆரம்பித்தனர்.

 அவள் எங்கு ஓடியும் முடியவில்லை. அர்ச்சு முதலில் பூ பின்பு அனைவரும் கேக்கில் நலங்கு வைத்தனர். ரஞ்சித் மட்டும் யாருக்கும் தெரியாமல் அவள் முகத்தில் இருந்த கேக்கில் ஹார்ட் வரைந்தான்.

 பின்பு அவளை மேலே அனுப்பி விட்டு இவர்கள் கீழே வீட்டை கிளீன் செய்து கொண்டிருக்க, கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவள் பயந்துவிட்டாள்.

 அழகாய் வரையப்பட்டிருந்த ஹார்ட் தான் அதற்கு காரணம்.  திருட்டு ராஸ்கல் என்று திட்டி  விட்டு முகத்தை கழுவி விட்டு கீழே வந்தவள், யாரும் இல்லாததைக் கண்டு பயந்து விட்டாள்.

 அவள் வெளியே சென்று பார்க்க அங்கு கார் ஸ்கூட்டர் எதுவும் இல்லாததால் கவலையுடன் திரும்பியவளுக்ககு மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி.

 அவர்கள் அனைவரும் அவள் பின்னால் சிரித்துக்கொண்டே நின்றிருந்தனர். பின்பு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தங்களுடைய பரிசுகளைக் கொடுத்து விட்டு கிளம்பினர்.

 அவர்கள் கிளம்பும்போது அழுவது போல் இருக்க அர்ச்சனா மட்டும் அவளுடன் தங்கி இருப்பதாக கூறினாள்.

 அதன் பிறகு அனைவரும் கிளம்ப நேத்ரா அர்ச்சுவிடம் தான் இது போல் சந்தோஷமாக இருந்ததே இல்லை என்றும்  உங்களுக்கெல்லாம் என்ன  கைம்மாறு செய்யப் போகிறேன் என்று கூற,அவள் அவளின் முதுகை வருடிக் கொண்டே எப்போதும் எங்களுடன் இருங்கள் அது போதும் என்றாள்.

 அவள் மெதுவாக நேத்ராவை பற்றி கேட்க அவள் தன்னை பற்றி கூற எதுவுமில்லை என்றும் தான் அனாதையாக ஆசிரமத்தில் தங்கி படித்ததாகவும் அதன்பிறகு இந்த கம்பெனியில் சேர்ந்ததாகவும் கூறினாள்.

 அர்ச்சு அவளிடம் தன்னைப் பற்றியும் மற்றவர்கள் பற்றியும் கூறி விட்டு எப்போதும் அவளுக்காக தாங்கள் இருப்பதாகவும் கூறினாள்.

 அடுத்தநாள் இருவரும் கிளம்பி ஆபீஸ் வரும்போது நேத்ராவின் மனம் லேசானது. அங்கு அர்ஜுன், ஸ்ரீராமையும் ஷைஜாவையும் கேள்வி கேட்டுக் குறுக்கு விசாரணை நடத்திக் கொண்டிருந்தான். 

ஸ்ரீராம் அவனது அத்தை மகளான வனஜாவை பற்றிக் கூறிக் கொண்டிருந்தான். சிறுவயதில் இருந்தே அவனுக்கு பிடிக்கும் என்றும் அவன் ஆபீஸ் வந்த பின்பு நான்கு வருடம் கழித்து ஒரு நாள் தன் குடும்பத்துடன் சென்றவன் அங்கு அழகாய் நின்றிருந்தவளை பார்த்தான்.

 அவளோ அவனை கவனிக்காமல் வேறு எதையோ பார்க்க அவனுக்கு கோபம் வந்தது. கோபம் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவளிடம் பேச விரும்பினான் அதற்கான சந்தர்ப்பம் கோவிலில் அமைந்தது. 

அவள் கோவிலுக்கு சென்றுவிட்டு குளத்தங்கரையில் அமரவும் அருகில் அமர்ந்தவனைப் பார்த்தவள் ஷாக் ஆனாலும் வெளிக்காட்டாமல் அப்படியே அமர்ந்திருக்க அவனே பேச்சை ஆரம்பித்தான்.

 எப்படி இருக்க வனு என்று கேட்க? அவள் பதில் ஏதும் கூறாமல் அவன் முகத்தைப் பார்க்க அதில் தெரிந்த பிரிவுத் துயரம் அவனை வாட்டியது.அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவளை அழைத்துக்கொண்டு தன் அம்மாவிடம் சென்றவன் அம்மா இவள் தான் உன் மருமகள் என்று அவள் கைகளில் திணிக்க, அவள் சிரித்துக்கொண்டே குங்குமம் ட்டு வாழ்த்தினாள்.

 அடுத்து சைலஜாவை கேட்க, அவள் அவினை பார்க்க அவன் நானே சொல்றேன் என்று சைகை பண்ணிட்டு கூறலானான்.

ஒருநாள் ஆபிசில் இருந்து வீட்டிற்கு போகும்போது சைலஜாவின் ஸ்கூட்டி ரிப்பேர் ஆயிடுச்சு.

 அதனால அவ அந்த கேப்சி ஷாப் முன்னாடி தள்ளிட்டு வந்தாளா,அப்ப நான் என்னோட ஃபேமிலியோட அங்க ட்ரீட்டுக்கு வந்திருந்தோமா, அம்மா நாங்க எல்லோரும் பேசிக்கிட்டே சாப்பிட்டிட்டு இருந்தோம்.

அப்ப தான்  அணு வள பாத்துட்டு என் கிட்ட காட்டினா,  சரி நான் போய் என்னானு பார்த்துட்டு வரேன். அது வரைக்கும் நீங்க அம்மாவோட பேசிட்டு இருங்கனு நம்பி விட்டுட்டு போனா, மொத்த குடும்பமும் என் பின்னால வந்தாச்சு.

  என்னை யாருமே கவனிக்கல, அவ்வளவு இன்ட்ரஸ்டா பேசிட்டு இருந்தாங்க. உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும் வெளியே கோபமா முகத்தை வச்சிட்டு நிற்கிறேன், என்ன பார்த்து முதல்ல சிரிச்சது இவதாண்டா.

 நான் அங்கேயே  போல்டு. நைட் அம்மா என்கிட்ட வந்து எனக்கு  ஷைலாவ ரொம்ப பிடிச்சிருக்குடா. உனக்கு ஓகேவானு? கேட்டதும்  நான் அவங்கள தூக்கி சுத்த ஆரம்பிச்சசுட்டேன்.அப்புறமா அணு வந்து அடிச்சி தான் அம்மாவை இறக்கி விட்டாள்.

 அடுத்த நாள் அம்மா அவங்க வீட்டில பேசிட்டாங்க. சோ பிராப்ளம் சால்வ் என சொல்லவும், அப்போது கோபி இதில் எங்கு நீங்க ப்ராப்ளம் பேஸ் பண்ணிங்க என சொல்ல முடியுமா? என்றான்.

அதைக் கேட்டதும் டேய் என்னடா இப்படி கேக்குற ?ஸ்கூட்டி ரிப்பேர் ஆனது ஒரு பிராப்ளம் இல்லையா ?என்று வினவ ரஞ்சித் அவன் முதுகில் குத்தினான்.

அனைவரும் வாழ்த்துச் சொல்ல ஷைலு முகம் சிவந்துவிட்டது. பின்பு நேத்ரா அனைவரிடமும் ஆடிட்டிங் பார்ட்டி வர இருக்கிறது என்று கூறிவிட்டு அதற்கான வேலைகளை பார்க்கும்படி நரேனிடம் கூறினாள்.

ஓகே நேத்ரா என்று அவன் சொல்ல அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்றனர். அப்போது கோபி, ரஞ்சித்திடம் ஒரு பைலை வாங்க வந்தவன் அவன் சோகமாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவன் தன் நண்பனின் தோளில் கை வைத்தான்.

 அந்த தொடுகையினால் திரும்பியவன் என்ன கோபி என்று கேட்க ,அவன் அதை நான் கேட்க வேண்டும் என்று சொல்ல, இல்லடா டயர்டா இருக்கு. மனசு சரியில்லை என்றான்.

 ஓகேடா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. எனக்கு அந்த சர்வீஸ் ஃபைல் வேணும் என்றான். ரஞ்சித்திடம் அதை  வாங்கிக் கொண்டு நேராக அர்ச்சனாவிடம் கேபினுக்கு சென்றான்.

அங்கு  அர்ச்சனாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த வித்யா அவனை பார்த்ததும் செல்ல, அர்ச்சு அவளை தடுத்தாள்.

 என்ன கோபி காத்து  இந்தப் பக்கம் வீசுது எனக் கேட்க ,அவன் ரஞ்சித் ல்லா இருக்கான். என்னனு தெரியல நீ போய்க் கொஞ்சம் பேசுனினா  அவன் பெட்டரா பீல் பண்ணுவானு  நினைக்கிறேன் என்றான். 

வித்து நான் போய் பாத்துட்டு வரேன் டி. நீ இதைக் கொஞ்ச நேரம் ன்ட்ரி  போட்டுட்டு இரு என்று கூறிவிட்டு சென்றாள்.

Advertisement