Advertisement

சொர்க்கம்-3

மீரா, சரண்யாவை கூப்பிடு என்றான் ரஞ்சித்.

 ரஞ்சித் அழைத்ததும் ஓடி வந்த சரண்யா, செந்திலை பார்த்தாலும் தயங்கிக்கொண்டே ‘என்ன அண்ணா’ என்றாள்.

அவன் பரிமாற சொன்னதும் ‘சரி’ என்று தலையசைத்து விட்டு மீராவிடம் சென்றாள். அவள் மீரா,நந்தினி, கோகுலிடம் சாப்பாடு பற்றி விசாரித்துவிட்டு வந்தாள்.

பின்பு இருவரும் சென்று பரிமாற தொடங்கும் போது அவர்களின் தோள்களில் தோழமையுடன் இருகைகள் விழுந்தன. 

திரும்பி “ஹாய் அர்ச்சு கா” என்றாள்.

” ஹாய் சரண்” என்று கூறிவிட்டு சரண் நீயும் மீராவும் பந்தியில் உட்காருங்கள் நான் பரிமாறுகிறேன் என்றாள்.

உடனே அர்ஜுன் சென்று பந்தியில் அமர்ந்தான். 

அதைப் பார்த்த நரேன் சிரித்துக்கொண்டே “மீரா நீங்கள் உட்காரலாமே” என்று அவன் கூற “அங்குதான் இடம் இல்லையே என்றாள்”. 

வேறு வழியின்றி அவள் அர்ஜுன் அருகில் அமர  இங்கு சரண், செந்தில் அருகில் மாட்டிக் கொண்டாள். 

இப்போது நரேன், அர்ச்சு,நேத்ரா பரிமாற இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது வேண்டுமென்றே அர்ஜூனின் கைகளில் சூடான சாம்பாரை அர்ச்சு ஊற்ற அவனோ, அய்யோ! அம்மா! என்று அலற மீரா பதறிக்கொண்டு அவன் கைகளைப் பற்றி தன் லையில் கை கழுவி விட்டு, ஓடிச் சென்று பேண்டேஜ் எடுத்து வந்தாள். 

இதை எதிர்பார்க்காத அனைவரும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து விட்டனர் (ரஞ்சித்தும் கூட). 

அந்த சமயத்தில் நரேன் அர்ச்சுடம் வந்து “நல்ல காரியம் செய்தாய் நல்ல வேளை நான் தப்பித்தேன்” என்று கூற அவள் சாம்பார் வாளியை காட்ட  அவன் வாய் மேல் கை வைத்து பயப்படுவது போல் நடித்தான். 

சிறிது நேரம் கழித்து தன்னிலைக்கு வந்த மீரா அனைவரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து தன் அறைக்கு சென்று விட்டாள். 

இதுவரை அமைதியாய் இருந்த சரண் அவளை பின்தொடர முயல அவளை நிறுத்தினான் செந்தில். 

அவள் அவனை முறைக்க அவனும் அதை அலட்சியம் செய்து விட்டு உட்கார்ந்து சாப்பிடு என்றான். 

அர்ஜுன் .திரும்பி சாரி அர்ஜுன் தெரியாம பட்டுடிச்சி என்று கூறும்போதே, இட்ஸ் ஓகே அர்ச்சு நீ தான ஊத்துன , உனக்காக இதுகூட பண்ண மாட்டேன் என்று கேட்கவும் அவள் சூடான ரசம் நிறைந்த வாளியை கொண்டு வர அவன் எழுந்து  ஓட அவன் பின்னாலே துரத்திக் கொண்டிருந்தார்.

 அப்போது ரஞ்சித் எழுந்து செல்ல நேத்ரா அவனைத் தடுத்தாள். 

நீங்கள் இன்னும் சரியாய் சாப்பிடலை  ரஞ்சித் என்று கூற அவன் இல்லை, எனக்கு போதும் என்றான். 

எனக்காக ப்ளீஸ் என்று அவள் கொஞ்ச அவன் மீண்டும் பந்தியில் உட்கார்ந்தான். மீனாட்சி சரண்யாவை தேடிக்கொண்டு வர அங்கு ஓடி விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே திரும்பியவள் ரஞ்சித்தின் நேத்ராவையும் பார்த்ததும் மனதிற்குள் இந்த இரண்டு ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறதே கடவுளின் வழி என்று வேண்டிக் கொண்டார்

அதன் பிறகு அவர் சரண்யாவிடம் சென்று வானதிக்கு உணவைக் கொண்டு செல்லும்படி கூறினார்.

அப்போது செந்தில் சாப்பிட்டீர்களா அத்தை என்றான். 

ஆச்சு மாப்பிள்ளை என்று அவளும் பதில் போடு போட்டார்

சரண் சாப்பிட்டுவிட்டு வானதிக்கு உணவை எடுத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றாள். 

அவளோ சோமாய் அமர்ந்திருக்க அவளை பார்த்தவளுக்கு மனம் தாங்கவில்லை. 

அவளை என்னோடு வா வானதி என்று அவளை ஷ்வந்தின் அறைக்கு அழைத்துச் சென்றவள் அறைக்கதவை தட்டினாள். 

உள்ளே இருந்து எந்த சத்தமும் இல்லை. அப்போது சரண் வானதி போல் பேசவும் கதவு திறக்கபட்டது. 

அவன் கண்கள் வானதியை தேட , அவள்  சரணின் பின்னால் நின்றிந்தாள். என்ன சரண் என்றான் எரிச்சலுடன். 

அவள் அண்ணா சாப்பிட்டீங்களா? என்றாள்.

இல்லை என்றான் அவன். 

அதற்குள் வானதி,” ஏன்? அத்தான் ,இன்னும் சாப்பிடவில்லை” என்றாள்

அவனுக்குள் ஒரு புதுவித மாற்றம் அவளையே கண் கொட்டாமல் பார்க்க சரண் நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு வாங்க நான் மீரா ரூம்ல இருக்கேன் என்று கூறிவிட்டு சென்றாள்.

அவள் மீராவின் அறையை நெருங்கும்போதே ஏதோ சத்தம் கேட்டு நிற்க அப்போதுதான் அந்த உரையாடல் அவள் காதில் விழுந்தது. 

பந்தியில் இருந்து பாதியில் ஓடிவந்த மீரா, தன் அறையில் சென்று கட்டிலில் விழுந்து தேம்பி தேம்பி அழுதாள். 

அவள் பின்னாலேயே வந்த அர்ஜுன் ஒரு நிமிடம் நின்றாலும் அதற்கு மேல் அவள் அழுகையை தாங்க முடியாதவனாய் அவள் அருகே சென்று அவள் முடி கோதினான். 

அதில் அவள் நெகிழ்ந்து போய் அவன் மார்பில் முகம் புதைத்தாள். 

அவன் அவளிடம் அடுத்த மாதமே நான் உங்கள் வீட்டில் பெண் கேட்டு வருகிறேன் என்றான். 

அவளோ ம்ம்ம்… ஐயாவுக்கு ஆசையைப் பாரு, என்று கூறிவிட்டு முதலில் நான் என் அண்ணாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி விட்டு உங்களிடம் சொல்கிறேன் என்றவள் அதுமட்டுமில்லை சரணுக்கும் ஒரு நல்ல இடத்தில் வரண் அமையட்டும். 

அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றாள்

பின்பு அர்ஜுன் தான் கொண்டு வந்த உணவை எடுத்து ஊட்டிவிட  நானே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றாள். 

என்னடி வாய் நீளுது, ஒழுங்காய் சாப்பிடு என்றவனை பார்த்து என்னது டி யா?? ஆமாம்டி  அதற்கென்ன இப்ப என்றான்.

 அவளோ எல்லாம் என்னோட நேரம் என்று சொல்ல, அவன் தட்டை அவளிடம் கொடுத்துவிட்டு செல்ல ,அவள் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்

அவளின் முகத்தை தன் ஒரு விரலால் நிமிர்த்திவன்  அதிர்ந்தான். “ஏன், மீரா அழுகிறாய்? உனக்கு என்னை பிடிக்கவில்லையோ” என்று தான் விலகினேன் என்று அவன் கூற அவளோ அவன் வாய் பொத்தி உங்களை முதல் முறை நான் போட்டோவில் பார்த்த போதே ஆல்-அவுட் என்றாள். அவன் என்னது போட்டோவா என்றான்.

எங்கள் ஊர் திருவிழாவுக்கு ரஞ்சித் அண்ணா  வந்திருந்தார்.

அவர் செல்லை எடுத்து நோண்டிக் கொண்டிருக்கும் போது தான் நீங்க அர்ச்சு அண்ணா மூணு பேரும் நின்று இருந்த போட்டோவை பார்த்தேன். 

அப்பவே உங்கள பிடிச்சிருந்தது

ஆனா அப்புறம் உங்கள நான் இங்கே எதிர் பார்க்கலை என்றாள்.  

அதான்  தெரிஞ்சதே என்னைப் பார்த்து பேய் படம் ரேஞ்சுக்கு அலறினியே! எப்படி மறக்க முடியும் என்றான். 

பின்பு அவளை படுக்க வைத்து விட்டு லைட் ஆஃப் செய்துவிட்டு அறையை மூடி விட்டு வெளியே வந்தவன் அதிர்ந்தான்.

 அங்கே கண்களில் நீரோடு எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்.  

அர்ஜுன் மென்மையாக சரண் என்றான். 

அவள் கண்களை துடைத்துக்கொண்டு சாரி ணா,நான் மீராவுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன். வந்த இடத்தில் என்று தடுமாற ,அவன் ஒன்றும் தப்பில்லை சரண்.

 நானே உன்னிடம் கூற வேண்டும் என்றிருந்தேன் என்றான். 

அவள் அப்படியானால் சரி  யாமிருக்க பயமேன் என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு அவரவர்  அறைக்கு சென்று விட்டனர். 

ஆனால் சரண் மட்டும் தூங்கவில்லை. மீராவின் பாசத்தை நினைத்து நெகிழ்ந்து போனாள். 

அடுத்தநாள் சுபமுகூர்த்தத்தில் அஷ்வந்த் வானதியின் திருமணம் நடந்தது. 

பின்பு அதே நாளில் சரண்யா செந்தில் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. 

இதை எதிர்பாராத சரண் தன் பெரியம்மாவை கட்டிக்கொள்ள அவர் தன் மகளின் முடி கோதிக்கொண்டே செந்தில் என்னிடம் கூறினான்

நான் எல்லோரிடமும் பேசினேன் என்றார். 

பின்பு அனைவரும் கிளம்ப அப்போது மீனாட்சி நேத்ரா, அர்ச்சனா, நந்தினி, சைலஜா, வித்யா ஆகியோருக்கு பட்டுப் புடவை ,மஞ்சள், குங்குமம், பூ என்று வைக்கப்பட்டிருந்த தட்டை நீட்ட அவர்கள் மீனாட்சி வசந்தி மற்றும் கோதாவின் கால்களில் விழுந்து வணங்கினார்.

இந்தப்பக்கம் செழியன், சுப்பு மற்றும் மணி ஆகியோர் ஸ்ரீராம், அர்ஜுன்,கோபி,நரேன்,ஸ்ரீராம் ஆகியோருக்கு பட்டு வேஷ்டியை வழங்க அர்ஜுன் சிரித்துக்கொண்டு இதை எல்லாம் எப்படி தான் கட்டி கொள்கிறார்களோ என்று கூறி மேலும் வம்பிழுக்க அவனிடம் வேஷ்டியை கட்டிக் கொண்டு வாடா என்றார்.

அவனோ என்னது? என்று கேட்டுவிட்டு எனக்கு வேஷ்டி கட்ட தெரியாதுப்பா என்று கூற நான் கட்டிவிடுகிறேன் மகனே என்று கூறி அவனை உள்ளே அழைத்துச் சென்றார். 

ஒரு பத்து நிமிடம் மண்டபமே அமைதியாக இருக்க திடீரென்று விசில் பறக்க மாடியிலிருந்து  வேஷ்டியை கையில் பிடித்துக்கொண்டு பதுங்கி பம்பி அர்ஜூன் நடந்து வர அனைவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு  சிரித்தனர்.

ஆனால் மீரா மட்டும் அதை தன் செல்லில் பதிவு செய்து கொண்டிருந்தாள்.

ரஞ்சித் அர்ச்சு நரேன் மீரா என அனைவரும் அவனைப் பார்த்து,”நாட்டாமை சொம்பு மிஸ்ஸிங்” என்று கூற அவன் இன்னும் கொஞ்சம் நேரம் அங்கு இருந்தால் தன் நிலைமை மோசமாகிவிடும் என்று எண்ணி திரும்ப அங்கு நின்றிருந்த மீனாட்சி கோதா வசந்தி அனைவரும் சிரிக்க மீனாட்சி மட்டும் அவனுக்கு திருஷ்டி கழித்து நெற்றியில் திலகமிட்டார்

பின்பு அனைவரும் ஊருக்கு திரும்பினர்.

அடுத்த இரு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டான் அர்ஜுன். 

அந்த நாட்களில் அர்ஜுன் அர்ச்சனாவிடம் பீச்சில் தன் லவ் மேட்டரை ஓபன் பண்ண அவளோ அவன் முகத்தைத் திருப்பி திருப்பி இருமுறை பார்த்தவள் வயிற்றை பிடித்து சிரித்துக்கொண்டே உன்னை எப்படிடா மீரா ஓகே சொன்னா? அவ அழகுக்கு நீ  ரொம்ப ஓவர்தான்.

என்னோட ஃப்ரெண்ட்  என்கிற ஒரே ரீசனுக்காக ஹெல்ப் பண்றேன்னு  சொன்னவளை பார்த்தவன் பதிலுக்கு சிரித்துக்கொண்டே உன்னோட நரேன் என்ன பண்றார் என்று வினவ அவள் முகம் சிவந்து விட்டது.  

வீட்ல மேரேஜ் மேட்டர் ஸ்டார்ட் ஆயிடுச்சு என்ன பண்றதுன்னே தெரியல என்றாள்

அதற்குள் அவன் உனக்கு நரேனை பிடித்து இருக்கா என்று கேட்க அவள் ரொம்ப பிடிக்கும் என்றாள்

பாருடா ஆனா வெளில மட்டும் முறைப்பு ,உள்ளுக்குள்ள சிலிர்ப்பா என்று கேட்க அவளோ அவர் மேனேஜர். 

ஆனா நான் ரொம்ப சிம்பிள் என நிறுத்த, அது ஒரு ரீசன் அப்புறம் எனக்கு லவ்ல நம்பிக்கை இல்லை.  

அதுவும் இல்லாமல் வீட்டில் பேச பயம் என்று கூறும்போதே கண்கலங்கியவளை பார்த்ததும் ஏனோ அவனுக்கு மனம் வலித்தது.  

எப்போதும் தோழமையுடன் பழகும் தன் தோழி அழுவதை அவனால் பொறுக்க முடியாமல் தலையை கோதினானன்

அவள் தன் தோழனின்  தோளில் சாய்ந்து அழுதாள். பின்பு இருவரும் வீட்டிற்கு சென்றனர். 

அங்கு அவளுக்காக காத்திருந்த அர்ச்சனாவின் அம்மா அஞ்சலா அர்ஜூனை பார்த்ததும் வாப்பா அர்ஜுன் எவ்ளோ நாளாச்சு நீ வந்து என்று பேசிக்கொண்டே அர்ச்சனாவிடம் திரும்பி நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்

நான் போய் சாப்பாடு ரெடி பண்றேன் என்று கூறிவிட்டு சென்றார்.

 அர்ச்சனாவுக்கு அப்பா சங்கர் இல்லை. 

அவள் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கும்போது அவர் இறந்துவிட்டார். 

அதனாலே ரஞ்சித்தும் அர்ஜுனும் அவளிடம் மிகுந்த பாசத்துடன் பழகினர். அவனிடம் டிவி பார்க்க சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றுவிட்டாள்

Advertisement