Advertisement

மண்ணில் ஓர் சொர்க்கம் 

சொர்க்கம் 2:

அஸ்வந்த் அவனிடம் திரும்பி அத்தையும் மாமாவும் வந்திருக்கிறார்கள்.

 நம்மை வரச் சொல்கிறார்கள் என்றான். 

ஓ… அப்படியா சேதி என்று ரஞ்சித் கூற அவன் அசடு வழிந்தான். 

வீட்டிற்கு வந்த உடனே தன் அத்தை மாமாவான வசந்தா-மணியிடம் நலம் விசாரித்து விட்டு உள்ளே சென்றவனுக்கு ஒரே அதிர்ச்சி. 

காரணம் வானதி அங்கு நின்றுகொண்டு பூ பறித்துக் கொண்டிருந்தாள். தன் பின்னால் வந்து நின்ற சரண்யாவை அவன் கவனிக்கவில்லை. அவன் ஓர் அடி எடுத்து வைக்கும் முன்னே ரஞ்சித் வானதியிடம்  சென்று ஏதோ கூறிக் கொண்டிருந்தான்.

 அவளும் அதற்கு பதில் கூறிக் கொண்டிருக்கும் போதே சரண்யா அங்கு சென்று தன் அண்ணனை அழைத்து வர அப்போதுதான் நிம்மதியாயிருந்தது அஸ்வந்திற்கு

அவன் மெதுவாக ஓசை எழுப்பாமல் வானதியின் பின்னால் நிற்க அவளோ “திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே” என்ற பாடலை முழுவதுமாய் பாடி முடித்து விட்டு திரும்பும் போது தெரியாமல் காலை பாசியயில் வைக்க அது வழுக்கி விட அஸ்வந்த் அவளைத் தாங்கிப் பிடிக்க பூமழை அங்கு பொழிய இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித் சரண் இருவரும் சிரிக்க அந்த சத்தத்தில் இருவரும் விலகி நிற்க அவன் முகம் பார்க்க முடியாமல் அவள் தலையைக் கவிழ்த்துக் கொண்டே ‘சாரி’ அத்தான் என்றாள். 

அவனோ ‘தேங்க்ஸ்’ சொல்ல இடையில் புகுந்த சரண்யா என்ன அண்ணா என்ன சொல்றா,என் அண்ணி என்று கூறவும் வானதி அங்கிருந்து ஓடி விட்டாள் . 

பின்பு சிறிது நேரம் மூவரும் பேசிவிட்டு வீட்டிற்குள் செல்ல அவளோ வானதியின் நினைவில் தன் பக்கத்து அறையில் சென்று விட்டாள்.

 அங்கு வெறும் பனியன் மற்றும் கைலியில்  இருந்தவனை பார்த்ததும் ஒர் இனம் புரியாத துடிப்பு அவளுள் ஏற்பட்டது. 

அதே நிலைதான் அவனுக்கும். அழகாய் காட்டன் புடவையில், பட்டாம்பூச்சி கண்களுடன் நீண்ட முடியுடன் இருந்த அவளைப் பார்த்தவன் அப்படியே நின்று விட்டான். 

அப்போது,டேய் செந்தில் என்னடா பண்ணிட்டு இருக்க என்று குரல் கேட்கவும் தன் உதட்டின் மேல் விரல் வைத்து கையசைத்துவிட்டு கதவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். 

அவள் (சரண்). உள்ளே வந்த வசந்தா அவனை பார்த்து சிரித்துவிட்டு என்னடா பேய் அடித்தது போல் உள்ளாய் என்று வினவவும் தன்னிலைக்கு திரும்பியவன் இன்னும் பத்து நிமிடங்களில் கீழே வருகிறேன் அம்மா என்றான். 

அவர் சென்றதும் வேகமாய் சென்று கதவை அடைத்தவன் அவளிடம் திரும்பினான். அவளோ அவனை ஒரு மார்க்கமாய் பார்த்துவிட்டு “சாரி” அத்தான் என்றவள் வெளியே சென்று விட்டாள். 

அவனோ குழப்பமாக கீழே வர  அங்கு எல்லோரும் வானதியை வைந்து கொண்டிருந்தனர். 

முக்கியமாய் அவருடைய அம்மாவான வசந்தா  தான் மிகவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.

  வயசுப் பிள்ளை சரியாய் பூவை கூட பறித்து வர  தெரியவில்லை இவளை எல்லாம் எந்த புண்ணியவான் கட்டிக்கொண்டு அழப்போகிறானோ என்று கூற சரண்யாவும் ரஞ்சித்தும் சிரித்தனர். 

அப்போது செந்தில்-சரண்யாவையும் அஸ்வந்த்-வானதியையும் ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 பின்பு திருவிழாவிற்கு அனைவரும் கிளம்பி சென்றனர். அங்கு சிறிது நேரம் மற்றவர்களுடன்  பேசிவிட்டு வீடு திரும்பினர். 

அப்போதுதான் அவனுக்கு நேத்ராவின் நினைவு வந்து இதயத்தை தாக்கத் தொடங்கின. 

அதே நினைவில் உறங்கிவிட்டான். காலையில்   அனைவரும் எழுந்து  கடற்கரை சென்றனர். 

அங்கு அனைவரும் ஜாலியாய் விளையாடும்போது வேண்டுமென்றே பெண்களை கிண்டலடிக்க  ஓர் இடத்தில் தாங்கமுடியாமல் அவர்களும் விரைந்து சென்று அலையில் விளையாட துவங்கினர். 

அப்போது வேண்டுமென்றே அஸ்வந்த்-வானதியிடம் வம்பிழுக்க வானதியும் பதிலுக்கு வம்பிழுக்க அதைப் பார்த்த பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஓர் முடிவெடுத்தனர். 

அதன்படி அன்று இரவு நேர சாப்பாட்டின் போது கோதா அந்த முடிவை கூறினார். அதாவது, அஷ்வந்திற்கு  திருமண ஏற்பாடு செய்திருப்பதாகவும் பெண் நம் குடும்பத்திற்கு ஏற்ற பெண் என்று கூறவும் சரண்யா ,ரஞ்சித் ,மீரா ,செந்தில் ,வானதி என இளைய பட்டாளம் அமைதியானது. வானதியின் கண்கள் மட்டும் கலங்கின.

 அவள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லையே தவிர அவளும் அஸ்வந்தை காதலித்தாள்

அவர்களின் சோர்ந்த முகத்தை பார்த்த மீனாட்சி அவர்களிடம் பெண்ணின் பெயரை கூறவும் வானதி தன் சித்தியை கட்டி கொண்டாள்.

சரண்யா எழுந்துசென்று அனைவரின் கன்னத்திலும் முத்தமிட அவள் அருகில் வந்த செந்தில் தன் கன்னத்தை காட்ட அதில் ஒரு அடி கொடுத்து விட்டு சென்றாள். 

மீரா தன்  அண்ணனிடம் திரும்பி  வானதி ரொம்ப பாவம் என்று கூறவும் அவன் தன் தங்கையை துரத்த ரஞ்சித் அவளைக் காப்பாற்றி விட்டு அஸ்வந்திடம்  வாழ்த்துக் கூறினான். 

பின்பு அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பும்போது கோதா கண்கலங்கிதை பார்த்ததும் சரண்யா அவசரமாய் சென்று அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு எப்போ பெரியம்மா நிச்சயதார்த்தம்? விட்டா இவன் இப்போதே கில்லி விஜய் மாதிரி எங்கேயாவது தூக்கிட்டு போய்ட போறான் எனக் கூற அனைவரும் சிரித்தனர்.

 அதன்  பின்பு அனைவரும் பிரிய மனமில்லாமல் கிளம்பி  சென்றனர்.

 வரும் வழியெல்லாம் மீனாட்சி தன் கணவரிடம் அஷ்வந்தை பற்றி பேசிக்கொண்டே வந்தார்.

களைப்பினால் சரண்யா உறங்கிவிட ரஞ்சித் நேத்ராவின் நினைவில் மூழ்கி இருந்தான். 

அடுத்த நாள் காலையில் அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதை அவன் முகம் நன்றாக எடுத்துக்காட்ட அனைவரும் அதிசயத்தில் இருந்தனர். 

காரில் செல்லும்போது சரண்யா அவனிடம் என்ன அண்ணா இன்னிக்கு உன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுது என்று கேட்க அவனோ சிரித்துக்கொண்டே ஈவினிங் பேசலாம் சரண் என்றான். 

அவளும் ஓகே அண்ணா என்று கூறிவிட்டு காலேஜ் சென்றாள்

அங்கு அவளின்  தோழிகளான மீரா,வானதி மற்றும் நந்தினி காத்திருந்தனர். அவர்கள் உறவினர்கள் என்பதால் அனைவரையும் ஒரே கல்லூரியில் சேர்த்து இருந்தனர். 

அங்கு படித்தவர்கள்தான் ரஞ்சித் ,செந்தில் ,அஸ்வந்தும் கூட .உள்ளே நுழைந்ததுமே நந்தினி அவளிடம் என்னடி உன் வீட்ல விசேஷம் நீங்கள் எல்லாரும் திருவிழாவிற்கு போயிருந்தீங்க போல என்று  வானதியிடம் கேட்டுவிட்டு  மீராவிடம் கண்களால் பேச அவள் முகம் சிவந்துவிட்டது .

மீரா நந்தினியிடம் திரும்பி அவள் காதில் ஏதோ கூற அவள் வாவ் கங்கிராட்ஸ் வானதி என்றாள். 

பின்பு தோழிகள் அனைவரும் வகுப்புக்குள் நுழைந்தனர்.

 அப்போது அங்கு வந்த கோகுல் அனைவரிடமும் காலேஜ் கல்ச்சுரல்ஸ் பற்றி கூறிவிட்டு செல்ல நந்தினி அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனும் அவன் நண்பர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான். 

அதை கவனித்த சரண் அவளை வார இப்போது முகம் சிவப்பது அவர் முறையாகிவிட்டது.

ரஞ்சித் அலுவலகத்தில் நுழைந்ததுமே அர்ச்சனாவும் அர்ஜுனும் அவனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களுடைய கேபினுக்கு சென்றுவிட்டனர். 

அப்போது அவனுடைய இன்டர்காம் அலறியது எடுத்து ஹலோ என்றான். பதிலுக்கு நரேன் பேசுறேன் ரஞ்சித் , புது ப்ராஜக்ட் விஷயமா உங்களோட டிஸ்கஸ் பண்ணனும். 

என்னோட கேபிளுக்கு வரிங்களா என்றான் அவன். ஓகே நரேன் என்றவன் அவளுடைய கேபினுக்குள் நுழைய அங்கு அவனுக்கு முன்னால் அர்ஜுன்,அர்ச்சு ,கோபி ,வித்யா, ஸ்ரீராம் ,சைலஜா,வின் நின்றுகொண்டிருந்தனர்.

அவன் பலதரப்பட்ட புதிய சாஃப்ட்வேர் பற்றி பேசிவிட்டு நீங்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து என்னோட கீழ் 4 பேரும் நேத்ராவின் கீழ்  4 பேரும் புராஜெக்ட் பண்ணனும் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அர்ஜுன் அர்ச்சனாவிடம் ,”அர்ச்சு நீ ப்ராஜெக்ட் ஒர்க் பண்றியா இல்லையோ “ஆனால் … என்று இழுக்க அவள் அவன் கையைக் கிள்ள அவன் அமைதியாகி விட்டான்.

 இப்போது நான் யார் யார் எந்தெந்த குரூப் என்று சொல்றேன்னு சொல்லி ஒரு லிஸ்ட்டை வாசிக்க அதில் அர்ச்சசு, அர்ஜுன், கோபி, வித்யா அனைவரும் நரேனிடமும் ரஞ்சித், ஸ்ரீராம் ,அபின், சைலஜா அனைவரும் நேத்ராவிடமும் வஞ்சித்ததிற்கு வானத்தை தொட்டு விட்ட சந்தோஷம். 

லஞ்ச் டைம்ல எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அவின் மட்டும் அமைதியாக இருக்க அவனை குறுக்கு விசாரணை செய்யும் வக்கீல் போல்  கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

 அவனால் அவனை அப்படியே விட முடியாமல் அவன் சைலஜா விடம் கூற அவள் மெதுவாக அவனிடம் கேட்க அவனோ விட்டால் அழுது விடுவான் போல தோன்ற அதற்கு மேல் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டாள்.  

ஈவினிங் டீ டைம் அவனே அவளிடம் வந்து, இல்ல சைலஜா லஞ்ச் டைம்ல மூட் சரி இல்ல. அதான் சொல்ல முடியல.

 அம்மா என்னை ரொம்பவும் கட்டாயப்படுத்தறாங்க கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க.

 ஆனா எனக்கு யாரையும் பிடிக்கல. அவங்க அதையே நெனச்சுக்கிட்டு படுத்த படுக்கையாகிட்டடாங்க.

பூரணி இன்னும் காலேஜ் முடிக்கல. அதுக்குள்ள நான் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறேன்? அதான் வேற ஏதும் இல்லை என்று கூற அவன் மேல் மிகுந்த மரியாதை உண்டாயிற்று சைலஜாவிற்கு

உங்களுக்குப் பிடித்த பெண்ணை பார்த்ததும் சொல்லுங்க நானே அம்மாவிடம் பேசறேன் என்றாள்

அதைக் கேட்டதும் சிரித்தவன் திரும்ப எத்தனிக்கும் போது ஸ்ரீராம் அங்கு நின்று கொண்டிருந்தான். 

அவனை சமாதானப்படுத்த முயல அவனோ பிழைச்சிப்போ என்றான். பின்பு சைலஜா அனைத்தையும் அவனிடம் கூறினாள். 

அவனோ அவளிடம் ஆல் தி பெஸ்ட் என்று கூறி விட்டு சென்று விட்டான். அதன் பின்பு அனைவரும்   புராஜெக்ட் வொர்க்கில் மூழ்கினர்.

 நரேன் அர்ச்சசுவை விட்டு ஒரு நிமிடமும் பிரிவதில்லை.அடுத்த ஞாயிற்றுக்கிழமை அஸ்வந்த்- வானதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

அவரவர் அவர்களின் நட்பு வட்டாரத்தை அழைக்க ரஞ்சித்தும் அர்ச் ,அர்ஜுன் ,நேத்ரா ,நரேன், கோபி, வித்யா ,ஸ்ரீராம் என அனைவரையும் அழைத்தான். 

அன்றுதான் புராஜெக்ட் வொர்க்கை முடிக்க கடைசி நாள் என்பதால் ஆபீஸில் அனைவரும் நைட் டியூட்டி  பார்த்தனர்

ஆனால் வித்யா,ஸ்ரீ,அவி,கோபியால் நைட் டியூட்டி செய்ய முடியாததால் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். 

அப்போது அந்த அறையில் ரஞ்சித் மற்றும் நேத்ரா மட்டுமே இருந்தனர். 

அப்போது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. 

அந்த மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த பூச்செடி பீப்பாயில் இருந்து ஒரு கரப்பான் பூச்சி வெளியில் வர அதை பார்த்த நேத்ரா கத்திக்கொண்டே சென்று எதிரே வந்த ரஞ்சித்தின் மீது மோதினாள்.

அதை எதிர்பார்க்காத ரஞ்சித் அப்படியே நின்றுவிட்டான்

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் கழித்து தன் நிலைக்கு வந்தவள் திடீரென்று விலகி நின்றாள்.

அதை பார்த்த அவன் சிரித்துக்கொண்டே அவளை நெருங்கி செல்ல அவள் பயத்துடன் சுற்றும் முற்றும்  பார்க்க தொடங்கினாள். 

அதைப் பார்த்தவன் இன்னும் பலமாய் சிரித்துவிட்டு அவளிடம் சென்று உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்றான்.

 அவள் அவனிடம் திரும்பி இது நீடிக்காது, விட்டு விடுங்கள் என்றாள். அதற்கு மேல் அவளை எதுவும் கேட்காமல் ப்ராஜெக்ட் பற்றி அவன் பேசியதும் அவளும் அதை ஏற்றுக்கொண்டு அதனை ஒருமுறை சரிபார்த்துவிட்டு ஓகே  இட்ஸ் ஓவர்வ் யு ஆர் ப்ரீ என்றாள்

அவனும் தலையசைத்துவிட்டு ரிசப்ஷன் செல்ல அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த அர்ஜுன் அவனை பார்த்து சிரிக்க அவனும் சிரித்து விட்டு, “நீ எப்போது இங்கு வந்தாய்” என்று கேட்க அவனும் பாஸ் வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது. 

பேசாம வீட்டுக்காவது போய்  போயிருப்பேன் என்ன பிடித்து உட்கார வச்சுட்டு  அங்க ஒரு “பொன்னியின் செல்வன்” லவ் ஸ்டோரி ஓடுது என்றான்.

 அதற்கு அவன் சிரித்து  வைக்க மீண்டும் அர்ஜுன் அங்கு நடந்ததை கூறத் தொடங்கினான்.

அவர்கள் மூவரும்(அர்ச்சனா, அர்ஜுன், நரேன்) அனிமேஷன்களை சரி பார்த்துக் கொண்டிருக்க அப்போது திடீரென அர்ச்சனா மயங்கி விழ அவளை தாங்கி பிடித்த அர்ஜுன் நரேனை அழைக்க அவனும் பதறிப்போய் அவளை எழுப்ப  அர்ஜுன் தலையில் அடித்துக்கொண்டு நரேனை  தண்ணீர் கொண்டு வரச் சொல்ல அவனும் ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளிக்க அவள் மெதுவாக கண் விழித்தாள்

அதை பார்த்ததும் தான் நரேனுக்கு உயிர் வந்தது. பின்பு  அர்ச்சனா எழுந்து கொண்டு அவர்களிடம் தனக்கு தலைவலி என்று கூறிக் கொண்டிருக்கும் போது நரேன் இன்டர்காமில் காபி ஆர்டர் பண்ணி கொண்டிருக்க அர்ஜுன் அவளை பார்த்துக் கண் சிமிட்டினான் . 

அர்ஜுனை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு அர்ச்சனாவிடம் இந்த ஒர்க்கை சரி பார்த்து விட்டு நீங்களும் செல்லலாம் என்றான். 

தற்கு மேலும் நான் அங்கே இருக்க நான் என்ன மாங்கா மடையனா டா மச்சான் என்றான்.

 அதன் பின்பு இருவரும் உறங்க செல்ல அப்போதுதான் நேத்ராவும் அர்ச்சனாவும் பேசிக் கொண்டு வருவது தெரிந்தது. 

அந்த களைப்பில் இருவரும் உறங்கிவிட்டனர். காலையில் நேத்ரா எழுப்பும் வரை தூங்கி கொண்டிருந்தவர்கள் அவளைப் பார்த்ததும் தான் எழுந்தனர்.

 பின்பு இருவரையும் வீட்டிற்கு செல்ல அனுமதி கொடுத்து விட்டு அவள்  உள்ளே சென்று விட்டாள். 

அப்போது அர்ஜுன் எப்படி டா இந்த பொண்ணுங்க மட்டும் இப்படி சுறுசுறுப்பா இருக்காங்களோ என்று கூறி முடிக்கவும் அர்ச்சனா வரவும் சரியாக இருந்தது.

அர்ச்சு, ” எப்ப சார் கிளம்பறிங்க? அவனோ புரியாமல் விழிக்கவும் சிறிது நேரம் கழித்து அர்ஜுன் டேய் உன்னோட அண்ணன் கல்யாணம் நாளை மறுநாள் இல்லை என்றான்.

 ஆமாண்டா மறந்தே போயிட்டேன்.சரி நீங்க எல்லாரும் வர ஒரு  மினி பஸ் அரேஞ்ச் பண்ணி இருக்கு மறக்காம வந்துடுங்க என்ன சரியா என்றான்

அவளும் சிரித்துக்கொண்டே தன் தோழனின் தோள்களைத் தட்டிக் கொடுத்தாள். அடுத்த நாள் மீனாட்சி தன் குடும்பத்தோடு கோதாவின் வீட்டிற்கு சென்றார்..

அங்கிருந்து அனைவரும் மண்டபத்திற்கு செல்ல அங்கு ஏற்கனவே வந்திருந்த வசந்தி குடும்பம் இவர்களே முகம் மலர வரவேற்றனர்

ஷ்வந்தின் கண்கள் மட்டும் வானதியை தேடி அலைய அதை கவனித்த மற்றவர்கள் அவனிடம் ,வானதி மாடி அறையில் இருக்கிறாள்” என்றனர். 

அனைவரையும் மறந்துவிட்டு அவன் வேகமாய் மாடிப்படி அவன் பின்னால் மீராவும் சரண்யாவும் சென்றனர். 

அவன் உள்ளே சென்றதும் கதவை வெளியில் பூட்டிவிட்டு அவனிடம் அண்ணி கீழே இருக்கிறார்கள் அண்ணா. 

ஆனாலும் இவ்வளவு வேகம் கூடாது கண்ணா, காலை வரை பொறுத்திரு என்று இருவரும் கூறி விட்டு வந்தனர். 

அதேபோல் இங்கு வானதியின் கண்களும் அவனைத் தேடிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் ரஞ்சித்தின் நண்பர்கள் வர அவர்களை தன் குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

 அர்ஜூனை பார்த்ததும் மீனாட்சி என்ன அர்ஜூ இப்பதான் இந்த  அம்மாவோட ஞாபகம் வந்ததா? என்று கேட்க அவனோ அவரின் கழுத்தில் தன் கைகளைப் போட்டுக்கொண்டு இல்லை அம்மா ஆபீஸில் கொஞ்சம் ஒர்க் அதிகம் அதான் இந்த பக்கம் தலையை காட்ட முடியல என்றான். 

அடுத்து நேத்ராவைப்  பார்த்ததும் அவளுக்கு திருஷ்டி கழித்துவிட்டு ,பின்பு தான் பேசவே தொடங்கினார்.

 அவரின் அன்பில் மகிழ்ந்த நேத்ரா அவரிடம் ஆசி வாங்கினாள். பின்பு இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

மீரா அவளது  நட்பு வட்டாரமான நந்தினி கோகுல் மற்றும் நண்பர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, சரண்யா உறவினர்களை வரவேற்று கொண்டிருந்தாள்

அப்போது மீராவை அழைத்த ரஞ்சித் மாடி அறையை காட்டச் சொல்லி நேத்ரா மற்றும் அர்ஜுனுடன் அனுப்ப அவள் அர்ஜூனை கவனிக்காமல் நேத்ராவிடம் இயல்பாக பேசிக்கொண்டே முன்னே செல்ல அவள் பின்னல் அசைவின் பின்னே அவன் னம் சென்று கொண்டிருக்க திடீரென்று அவள் திரும்பி யாரையோ காட்டும்போது தான் அவன் முகத்தைப் பார்த்தவனுள்,” யார் இந்த தேவதை” பாடல் தானாய் இசைக்கத் துவங்கியது. 

பின்பு அவன் அறையை தேட அதை பார்த்த மீரா என்ன மிஸ்டர் என்ன தேடுறீங்க என்றாள்

திரும்பி அவளைப் பார்த்தவனைப் பார்த்ததும் மயங்கி விழு இருந்தவள் சமாளித்துக் கொண்டு சுவரைப் பிடித்துக் கொண்டாள்

அவனோ மிகவும் மென்மையாய் யாரை பார்த்து பயப்படுகிறீர்கள்? பேயையா?இங்கு எதுவும் என் கண்களுக்கு தெரியவில்லையே என்றான்.

அவள் எதுவும் கூறாமல் செல்ல அவன் அவள் கை பிடித்து நிறுத்தினான்.

அவளோ அவனை பார்வையாலேயே எரித்து விடுவது போல பார்க்க, கையை விட்டுவிட்டு என்னுடைய அறை எங்கே என்று நீங்கள் கூற மறந்து விட்டீர்கள் என்றான்

அவள் அவசரமாய் சென்று ஒரு அறையை திறந்து விட்டாள். அவன் தேங்க்ஸ் என்று கூறினான். 

இவள் து எதுவும் காதில் விழாதவாறு வந்து கொண்டிருக்க அவளைப் பார்த்த நந்தினி ஏதோ சொல்ல வர சரண் அவளின் காதை திருகினாள்.

மீராவோ மாடி அறையில் ல்லி என் மேல் விழ இருந்தது அதான் பயந்திட்டேன் என்றாள்.

 சரி என்னோட வா என்று சரண் அவளை அழைத்துச்செல்ல நந்தினி மீனாட்சியிடம் சென்றாள்.

 பின்பு இருவரும் சேர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை இரவு விருந்துக்கு அழைக்க ஒவ்வொரு அறையாக சென்று அழைத்தனர். 

அப்போதுதான் சரண் நேத்ராவை முதன்முறையாக பார்த்தாள்

அவளிடம் சரண் அனைத்தையும் கூற  நேத்ராவை அணைத்துக் கொண்டு உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றாள்

பின்பு அவர்கள் அர்ஜுனின் அறையை நோக்கி நடந்தனர். அப்போது சரண்யாவை கோதா  அழைக்க அவள் சென்றுவிட்டாள்.

 மீரா எப்படி கூப்பிடுவது என்று தெரியாமல் அறையின் முன் நிற்க அப்போது தான் குளித்துவிட்டு வந்த அர்ஜுன் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. 

கைகளை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தவளை பார்த்தவன் சிரித்துக் கொண்டே வந்து கதவை திறக்க இதை எதிர்பார்க்காத மீரா ஒரு நிமிடம் மயங்கி  விழ அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு அவள் மீது நீரை தெளிக்க  லேசாய் விழி  திறந்தவள் கத்த முயல அவன் அவள் வாயை பொத்தி விட்டு நடந்ததை கூறினான்.

பின்பு அவசரமாக நிற்க மீண்டும் அவளுக்கு லேசாய் தலைசுற்ற ஆரம்பித்தது. அவள் தடுமாறி மீண்டும் கட்டிலில் சரிய அவன் சென்று ஜூஸ் மற்றும் மாத்திரை வாங்கி வந்து அவளிடம் தர அவளும் வேறு வழியின்றி ஜூஸ் குடித்துவிட்டு மாத்திரை போட்டுக் கொண்டாள்

அதன் பிறகு அவளிம் ஹாய் மீரா ஐ அம் அர்ஜுன் என்றான்.

அவளோ தன் பெயர் எப்படி அவனுக்குத் தெரியும் என்று யோசிக்கும் போதே ஒருவேளை ரஞ்சித் அண்ணா சொல்லியிருப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஐயோ மணி என்ன என்று  வாட்சை பார்த்தவள் அவனிடம் திரும்பி நீங்கள் சாப்பிட்டீர்களா? என்று கேட்க அவன் சிறு புன்னகையுடன் இல்லை என்றான்

நான் உங்களுக்கு சாப்பாட்டை உங்க அறைக்கு கொடுத்து அனுப்புகிறேன் என்றாள்

அவனோ,” இல்லை நானே வருகிறேன்” என்று கூற அவள் சரி என்று கூறிவிட்டு சென்றாள்

ங்கு பந்தியில் ரஞ்சித் அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

 அப்போது அங்கு வந்த அர்ஜுன் அவனை அதிசயமாய் பார்ப்பது போல் பார்க்க அவனோ சாப்பிட்டாயா என்று கேட்க அவன் அவனை இன்னும்  அளவெடுக்கத் தொடங்கினான். வேட்டியை அழகாய் மடித்துக் கட்டிக் கொண்டு கைகளை மடக்கி விட்டு கொண்டு அழகாய் தலைமுடி கலைந்திருந்த   நண்பனை பார்த்தவனுக்கு இவன் நம்ம ரஞ்சித் தானா? என்று சந்தேகம் வர அதை அப்படியே வாய்விட்டு கேட்டுவிட்டாள் அர்ச்சனா.

அர்ஜூன்  ஓடி  வந்து அர்ச்சனாவிடம் எப்படி அர்ச்சு நான் நெனச்ச நீ கேட்டுட்டே என்று கூறிவிட்டு இருவரும் கைகளை தோழமையாய் முட்டிக் கொண்டனர்

அதற்கு ரஞ்சித் பதில் கூறாமல் தடுமாற, நரேன்  உதவிக்கு வந்தான். 

அர்ஜுன் இது ஒன்றும் அதிசயம் இல்லையே! பெண்களுக்கு எப்படி புடவையில் ஒரு தனி அழகோ (அர்ச்சனாவின்பக்கம் திரும்பிக் கொண்டு) அதே போல் ஆண்களுக்கு வேட்டி ஒரு தனி அழகு என்று கூறினான். 

அப்போதுதான் நேத்ரா ரஞ்சித்தை கவனித்தாள். பின்பு அவர்கள் அனைவரும் எழுந்து கை கழுவ சென்றனர். 

அப்போது அங்கு வந்த செந்தில் வாடா மச்சான் சாப்பிடலாம் என்று அழைக்க,”யாருடா பரிமாறுவது” என்று அவன் கேட்கவும் தன் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினான் செந்தில்.

Advertisement