Advertisement

 மனதிற்கு நெகிழ்ச்சியான தருணம் அது

 தன்னை புரிந்து கொண்ட

 ஒருவரை தேடும் தேடலில் 

வெற்றி பெறுவது 

என்பது 

எளிதான  காரியம் இல்லைதான் 

ஆனாலும் 

அவர்களுக்கு ஆதரவாய் 

இத்தனை பேர் இருக்கும்போது

 அவர்கள்

 வானத்தில் கூட 

தங்கள் காதலை 

வரையலாம் வானவில்லாய்!

“பெரியவர்களின் விருப்பபடி இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து திருமணம் நிகழ உள்ளது என்பதைக் கேட்டதும் தான்  ரஞ்சித்திற்கு நிம்மதியாய் இருந்தது”. 

அடுத்தடுத்த திருமணங்களால் அலுவலகத்தில் அதிகமாக வேலைகள்  இருக்கவும் நரேனின் வேண்டுகோளின்படி சந்தியாவும் வேலையில் சேர்ந்தாள். 

அனைவரும் இரவு பகல் பாராமல் உழைக்கவும் ஓரளவுக்கு அவர்கள் வேலை குறைய ஆரம்பித்தது. 

“திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அர்ஜுனுக்கு விடுமுறை கொடுத்து விட்டான் நரேன்”. 

அதேபோல் பிரசன்னாவும் அந்த ஒரு வாரம் முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தான். 

அன்று, “சண்டே காலையிலேயே இருவரும் (பிரன்னாவும்,வேதிகாவும்) கிளம்பவும் அனைவரும் ஆச்சரியமாய் பார்க்க தன்னுடைய மேலதிகாரியின்  வீட்டில் இன்றைக்கு மார்னிங் டிபன்” என்றதும் அனைவரும் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். 

“அவர்கள் கிளம்பி நேராய் பீச்சுக்கு சென்றனர்”

அங்கு அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கவும் வேதிகாவின் மாமா அங்கு வந்தார். 

அவரை பார்த்ததும் கோபமாய் சென்றவள் அவர் கையில் அந்த பத்திரங்களை கொடுத்து , “நான் என்னுடைய பெயரில் உள்ள எல்லா சொத்துக்களையும் உங்களுக்கு தானமாக அளிக்கிறேன்” என்றாள்.

 அவர் “வாயைப் பிளந்து” கொண்டு நிற்கவும் அவள் அவரிடம்,” பயந்து போய் கொடுக்கவில்லை மாமா”.

” அதை எப்படியும் இல்லாதவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்” என்று நினைத்தேன்.

 “அதையே தான் இப்போதும் செய்தேன்”. 

இனி நான் தனி வேதிகா இல்லை.

 “மிஸஸ் பிரசன்னா ஆகப்போகிறேன்” என்று கூறி அவன் கைகளை பிடித்துக்கொண்டாள். 

அதுவரை அமைதி காத்த பிரசன்னா இப்போது அவரிடம் எங்கள் திருமணம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

“உங்களுக்கு நேரமிருந்தால் வந்துட்டு போங்க” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவர் விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார்.

 இருவரும்  கிளம்பி வீட்டிற்கு சென்றதும் பிரசன்னா முதலில் அனைவரையும் அழைத்து வேதிகாவை பற்றி அனைத்து உண்மைகளையும் கூறி விட்டான். 

அவன் கூறி முடித்ததும் மீனாட்சி வேதிகாவை கட்டிக்கொண்டு “நீ கவலைப்படாதேம்மா” 

உனக்கு ,”உன்னுடைய சொந்தமா கடைசி வரைக்கும் நாங்க இருப்போம்” என்றவரின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினாள். 

அன்றைய மாலைப்பொழுதில் அனைவரும் “ஷாப்பிங்” சென்று தேவையானவற்றை வாங்கிக் கொண்டு “ஹோட்டல்” சென்று சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் விளையாடி விட்டு வந்தனர். 

அடுத்த நாள் காலையில் வீடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது”

ரஞ்சித்தும் சந்தியாவும் “ஆபிஸ்” கிளம்ப சரண்யாவும் வானதியும் மணப்பெண்களை “பியூட்டி பார்லருக்கு” கிளப்பிக் கொண்டிருந்தனர்.

 அதேபோல் அஷ்வந்தும் செந்திலும் தங்களது வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்க, பெரியவர்கள் அனைவரும் கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். 

இன்னும் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கவும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டனர்.

நரேன் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு கல்யாண நாள் அன்னைக்கு மட்டும் “ஃபுல் டே” விடுமுறை அளித்தான். 

நவீன், ஷைலு, ஸ்ரீராம், கோபி, வித்யா என அனைவரும் சேர்ந்து சந்தியாவையும் அர்ச்சனையும் வார ரஞ்சித்தும் நரேனும் உதவுவதுபோல் வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்ள இருவரையும் முறைத்தாள் அர்ச்சனா. 

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் தங்களை சந்தித்துக் கொண்டதில் அனைவருக்கும் சந்தோஷம் தான்.

இப்போது அனைவரும் ரஞ்சித்தின் வீட்டில் குவிய ,”வீடே கல்யாண களை பெற்றது”. 

அனைவரும் பேசிக் கொண்டிருக்க வீட்டின் முன்பு “கார்” சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தால் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி.

அங்கு கையில் பலகையான தட்டு வரிசைகளுடன் வேதிகாவின் மாமாவான “விநாயகம்” நின்றிருந்தார்.  

அனைவரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவசரமாய் ஓடி சென்று கோதா அவரை வரவேற்றார். 

அவர் உள்ளே வந்து அமர்ந்ததும் முதலில் “அனைவருக்கும் நன்றி” கூறி விட்டு பின்பு “வேதிகாவிடம் மன்னிப்பு” கோரி விட்டு தன் கையில் இருந்த நகை பெட்டியை அவளிடம் கொடுத்தார்.

 அதை வாங்கி திறக்கவும் உள்ளிருந்த “வைர நெக்லஸ் தன் ஒளியை அந்த அறையையும் தாண்டி வீசியது”. 

மேலும் அவர் இது உன்னுடைய “பரம்பரை நகை” உன் அம்மாவுக்கு பின் உனக்கும் உனக்கு பின் உன் சந்ததிக்கும் சேரவேண்டியது என்றார்.

 அதுமட்டுமில்லாமல் அவரின் மகன் ஏதோ “கிப்டை” கொடுக்கவும் வாங்கிக் கொண்டவர் பிரித்துப் பார்க்காமல் அப்படியே வைத்து விட்டு தன் அறைக்கு சென்று விட  சிறிது நேரம் வீடே அமைதியாய் இருந்தது. 

ஆனால் சிறிது நேரத்தில்  மீண்டும் வீட்டில் கல்யாணக் களை வந்துவிட்டது.  

அமர்க்களமான அடுத்த நாள் “பிரம்ம முகூர்த்தத்தில் மங்கல இசை இசைக்க” மணமக்கள் இதயங்கள் இணைய அனைவரின் ஆசியுடனும் ஒரே நேரத்தில் இரு மேடையில் இருந்த  அந்த இரண்டு ஆண் பறவைகளும் தங்களின் பெண் பறவைகளை தன்னுடைய துணைளாக்கிக் கொண்டனர்”. 

பிரசன்னாவின் மேலதிகாரிகளும் வேதிகாவின் நண்பர்கள் மற்றும் அர்ஜுன் மற்றும் மீராவின் பிரண்ட்ஸ் என  மண்டபத்தை அடைத்துக்கொண்டு நின்றது உறவினர் மற்றும் நண்பர்கள் கூட்டம். 

திருமணம் முடிந்தவுடன் அனைவரையும் ஜோடியாய் நிற்க சொல்லவும் அனைவரும் விழிக்க செழியன் அனைவரிடமும் ரஞ்சித்-சந்தியா, அர்ச்சனா -நரேன், அர்ஜுன்-மீரா, பிரசன்னா-வேதிகா, செந்தில்-சரண்,அஷ்வந்த்-வானதி ஒரு கவரைக் கொடுத்தனர்.

பிரித்துப் பார்த்தவர்கள் அனைவரின் முகங்களும் பிரகாசமாய் இருந்தது.

கவரில் இருந்தது “ஹனிமூன் டிக்கெட்”

ஹே மச்சி  ஹனிமூன் டிக்கெட் டா!

அதுவும் ஒரே வீட்ல எல்லாருக்கும் டிக்கெட் புக் புண்ணி போக போறாங்க!

  இப்படி ஒரு ,”ஃபேமிலி எல்லாருக்கும் கிடைச்சுட்டா அப்புறம் என்ன நமக்கு வாழ்க்கையில சாதிக்க வேண்டி கிடக்கு” என்ற அர்ஜூனிடம் ஓவரா பேசுன டிக்கெட் கேன்சல் என்றாள்  அர்ச்சு.

அடுத்து வந்த நாட்களில் ரஞ்சித் அர்ஜுன் நரேன் மூவரும் கம்பனியின் சார்பாக வெளிநாட்டில் பணிபுரிய அனுப்பப்பட்டனர்.

பிரசன்னா ஒரு வருடம் டில்லியில் பணிபுரிந்தான்.அதன் பின்பு பெங்களூருக்கு மாறினான்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு அன்று அனைவரும் அந்த ஓட்டலின் முன்னால்  நின்று கொண்டு யாரையோ  வரவேற்க காத்துக்கொண்டிருந்தனர். 

“அது வேற யாரும் இல்லப்பா, நம்ம கதையோட ஹீரோக்களான ரஞ்சித் அர்ஜுன் நரேன் தான்!”

” புது கம்பெனி ஓப்பன் பண்றது பத்தி பேசிட்டு இன்னைக்குதான் பாரின்ல இருந்து ரிட்டன் வந்தாங்க” 

அந்தப் “பார்ட்டிக்கு தான் எல்லோரும் வெயிட்டிங்”.

 இப்ப நான் நம்ம பழைய பிரண்ட்ஸ் எல்லாரையும் அடையாளம் காட்டறேன் உங்களுக்கு.

ஏன்னா “நாலு வருஷம் ஆயிடுச்சி இல்ல”. 

இது நம்ம ரஞ்சித்-சந்தியா

இப்போ அவங்களுக்கு நவீன்,நேத்ரன்னு ரெண்டு மகன்கள் இருக்காங்க. 

நம்ம அர்ஜுன்-மீராக்கு ஒரு மகன் (ஷியாம்), ஒரு மகளும்(சீமா) இருக்காங்க. 

நம்ம பிரசன்னா-வேதிகாவுக்கு ஒரு மகனும் (மித்ரன்) ,ஒரு மகளும் (காயத்ரி) இருக்காங்க. 

செந்தில்-சரண்யாவுக்கு ஒரு மகள் (யாழினி), ஒரு மகனும்(ஆனந்த்)  இருக்காங்க. 

ஷ்வந்த்-வானதிக்கு இப்போ ஒரு மகன்(அஸ்வின்), ஒரு மகளும் (ஷாலினி)  இருக்காங்க.

இடையில நம்ம ஆனந்த்-சுஜாதா, தீபக்-அணு,கோகுல்-நந்தினிக்கு மேரேஜ் முடிஞ்சிடுச்சு. 

“கோச்சுக்காதீங்க கூப்பிடலனு” அப்ப நம்ம “ஹீரோஸ்” இங்க இல்ல பா.

 அதான் உங்ககிட்ட சொல்ல முடியல.

இப்ப நம்ம ஸ்ரீராம்-வனஜாவுக்கு ஒரு மகன் (ஸ்ரீதரன்),ஒரு மகளும்(சுவேதா)  இருக்காங்க. 

நம்ம கோபி-வித்யாக்கு ஒரு மகள் (பிருந்தா), ஒரு மகன் (பிரவீன்) இருக்காங்க. 

நம்ம அவின்-சைலஜாக்கு இரு மகள் (அணு,அபி)  இருக்காங்க. 

நம்ம ஆனந்த்-சுஜாவுக்கு இரு மகன்கள் (ஆகாஷ்  அர்ஜுன்) இருக்காங்க. 

நம்ம நந்தினி-கோகுலுக்கு (நவீன்) ஒரு மகனும்,(தீக்க்ஷிதா) ஒரு மகளும் இருக்காங்க.

“எல்லாரும் அவங்க பேமிலியோட இருக்கிறாங்கபா!”

இப்ப நம்ம ரஞ்சித்,அர்ஜுன்,நரேன் மூணு பேரும் “பார்ட்னராக சேர்ந்து ஒரு புது கம்பெனி ஆரம்பிக்க போறாங்கன்னு சொன்ன இல்ல அது கன்ஃபார்ம் ஆயிடுச்சு” 

அதேபோல பிரசன்னாவுக்கும் இங்க சென்னையிலேயே இருக்க சொல்லி மாத்திட்டாங்க. ஆனாலும் அங்க எப்ப  கூப்பிட்டாலும் போகணும். 

அந்த ஓட்டலின்  மையப்பகுதியில் இருந்த புல்வெளி மைதானத்தில் அமர்ந்து கொண்டு தங்களின் வாழ்க்கை பயணத்தை பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்க  குழந்தைகளும் ஏதோ “சுட்டி டிவியில் ப்ரோக்ராம்” பார்ப்பதைப் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

“என்னதான் அறிவியல் வளர்ந்தாலும்

 இங்கிருந்தே ஆகாயத்தை அளந்தாலும்

 ஒரு மனிதனின் மகிழ்ச்சி

 என்பது 

அவன் மனதில் உள்ளது. 

அந்த மகிழ்ச்சி

 என்பது 

அவன் பிறரை மதிக்கும் போது,

 உதவும்போது

 என பல்வேறு இடங்களில்

 பல்வேறு வகைகளில் வெளிப்படும். 

ஒரு மனிதனுக்கு தன் குடும்பம் தன்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று புரியும் &தெரியும் போது அவனுக்கு இந்த பூமிதான் சொர்க்கம் அவன் “வீடுதான் ஆண்டவன் குடியிருக்கும் ஆலயம்”. 

இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் மண்ணில் அதற்கென தனி பொறுப்பு உண்டு.

அதே போல் மனிதர்களாகிய நாமும் நம் பூமியை சொர்க்கமாக மாற்ற முயற்சி செய்வோம். 

பூமியில் சொர்க்க வாழ்க்கை வாழும் இவர்களை வாழ்த்திவிட்டு நாமும் விடை பெற்றுக் கொள்வோம்.

      

                                                  சுபம்

உங்கள் அன்புள்ள 

மோகனா தனஞ்செழியன் 

Advertisement