Advertisement

அதைப்பார்த்து அவள் அவர்களை மிரட்டவும் அவர்கள் நரேனை பார்க்க,

நரேன்,”அர்ச்சனாவை தன் கண்ணசைவால் கட்டுப்படுத்தினான்”. 

மீரா பெரும்பாலும் யாரோடும் பேசாமல் தனிமையிலேயே இருந்து கொண்டாள். 

அதைப் பார்க்கும் அர்ஜுனுக்கு மனம் வலித்தது.

அதை அவன் வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அர்ச்சனாவும் சந்தியாவும் அவனை கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

 திருமணம் முடிந்ததும் உறவினர்களை கவனித்துக் கொண்டிருந்த குந்தவி  திடீரென மயக்கமாய் உணரவும் தனியாய் தன் அறைக்கு வந்தவள் வழியிலே மயங்கி விழந்தார்.

 அப்போது தான் அறையை விட்டு வெளியே வந்த மீரா  ஓடி வந்து அவரை மடியில் தாங்கி கொண்டு அவரின் கை கால்களைத் தேய்த்து விட்டு தண்ணீர் கொடுத்தாள்.

 மிக மெதுவாக தன் கண்களைத் திறந்தவர் மீராவை பார்த்ததும் கை எடுத்து கும்பிட அதை தடுத்த மீரா அவரின் கால்களில் விழவும்,”நல்லா இருமா! உனக்கு எந்த குறையும் வராது” என்றார்.

சிறிது நேரம் கழித்து “உன் பேர் என்னம்மா?” என்று கேட்கவும்” மீரா” என்று கூறினாள்.

 பின்பு மீரா குந்தவியை ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு மீனாட்சியிடம் முதலில் கூறிவிட்டு பின்பு அர்ஜுனை தேடிப் போனாள். 

அவன் அங்கிருந்த மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு தன் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தான்.

 அவள் அமைதியாய் சென்று அவனின் பின்புறம் நின்று பார்க்கவும் அங்கு அவள் கைகளை ஆட்டியவாறு நின்றிருந்த புகைப்படத்தை தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவளுக்கும் அவனைப் பார்க்க கஷ்டமாகத்தான் இருந்தது.

அவள் அர்ஜுன் என்று அழைக்கவும் திரும்பியவன் மீராவை பார்த்ததும் ஓடி வந்து அணைத்துக்கொண்டு “சாரி மீரா மா என்னோட கடமைய செய்றேன்னு சொல்லி உன்ன ரொம்பவும் நோகடித்து விட்டேன் என்ன மன்னிச்சிடு”. 

“அர்ச்சு கல்யாணம் முடிந்ததும் நான் வந்து உங்க வீட்ல பேசறேன் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோடா” என்று கூறி அவள் தலை வருடினான்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழியவும் அவன் அவசரமாய் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

அவள் அவன் கையில் தன் இதழ் பதித்து விட்டு “என்ன தவம் செய்தோமோ இப்படி ஒரு காதல் கிடைக்க” என்று அவள் கூறவும்,” அதான் இத்தனை நாள் என்ன தவமிருக்க வச்சுட்டியே” என்று அவன் கூறிக் கொண்டிருந்தான். 

அப்போது அர்ஜுன் என்ற அவனது அம்மாவின் குரல் கேட்கவும் அவன் அவசரமாய் எழவும் மீரா அவன் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

 திரும்பி அவன் பார்க்கவும் அங்கு வேதிகா  நின்றுகொண்டு  சிரிக்கவும் அவன் “ஏய் உன்னை”… என்று அவளைத் துரத்திக் கொண்டு செல்ல மீரா பயமில்லாமல் வீட்டினுள் சென்றாள். 

“அர்ச்சனாவும் நரேனும் அர்ச்சனாவின் வீட்டு மொட்டை மாடியில் நின்று அர்ஜுனை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்”.

 சந்தியா அர்ஜீனிடம் குந்தவி அழைப்பதாய் கூறவும் உள்ளே சென்றவன் அங்கு அவர் படுத்திருப்பதைக் கண்டு பயந்து விட்டான். 

அதற்கு அவர் “ஒன்றும் இல்லை கண்ணா திடீரென மயக்கம் வந்துடுச்சு நல்லவேளை அந்த மீரா பொண்ணு தான் காப்பாற்றினாள்” என்று கூறவும் ஆச்சரியத்துடன் தன் தாயைப் பார்த்தான்.

அவர் ஏதே சொல்ல வருவது போல் தெரியவும்,” அர்ஜுன் அவர் கைப் பிடித்து சொல்லுங்க மா!” என்றான்.

“மீராவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா!” என்ற அவரின் இரு கன்னத்திலும் முத்தம் இட்டுவிட்டு ,”எனக்கும் மா”  என்றான். 

அர்ஜுன் அப்ப சரிடா கண்ணா.” அக்காவுக்கு சொல்லிடு நாளைக்கே நாம அவங்க வீட்டுல பேசலாம்” என்றார்.

” சரி” என்று கூறிவிட்டு அவசரமாய் வந்தவனை வழியிலேயே தடுத்து நிறுத்தி “என்ன ப்ரோ இவ்வளவு அவசரம்!  வேணும்னா ஆம்புலன்ஸ் கூப்பிடவா”? என்று வேதிகா கேட்கவும் அவள் தலையில் குட்டு வைத்து காதை திருகி விட்டு “ஏய் வாலு உனக்கும் காலம் வரும்ல அப் பார்த்துக்றேன் இரு” என்று சொல்லவும் “அப்படி ஒரு காலம் வந்தா பார்த்துக்கலாம்”என்று கூறிவிட்டு அவள் திரும்பவும் பிரசன்னா வீட்டினுள் நுழையவும் சரியாய் இருந்தது.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதை கவனித்தும் கவனியாது போல் வந்தவன் நேராய் சந்தியாவிடம் சென்று ஏதோ கூற அவள் “வாவ்” என்று கத்திவிட்டு  “எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குனு தெரியுமா” ? என்று கூறியவள்,” சரி அண்ணா நான் போய் ரஞ்சித்திடம் கூறிவிட்டு அவரையும் கூட்டிட்டு போறேன் என்னை விட அவர் தான் அவளுக்கு நல்லா சொல்லி புரிய வைப்பார்” என்று கூறிக் சென்றாள். 

அவள் ரஞ்சித்திடம் இதை கூறவும் அவன் அவளைத் தூக்கிக்கொண்டு “ஏய் நான் கூட வேதிகாவுக்கு என்ன பண்ண போறோம்னு” ரொம்பவும் யோசிச்சிட்டு இருந்தேன். 

ஆனா “உன்னோட அண்ணன் ரொம்பவும் கில்லாடிதான், அமைதியா என்னோட தங்கச்சிய அப்படியே அள்ளிட்டு போய் விட்டார்” என்றான். 

அவர்கள் சிரித்துக் கொண்டே வரவும் அவர்களைப் பார்த்த மீரா என்னவென்று கேட்கவும் அவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு,” நானும் உங்களுடன் வருகிறேன் “என்று சொல்ல,” சந்தியா  தன் செய்கையால் அர்ஜீன் எங்கே ?”என்று கேட்க “தெரியாது “என்றாள்.

அனைவரும் வேதிகாவா தேடிச் செல்ல,” அவளோ ஒரு பட்டாம்பூச்சியின் பின் ஓடிக் கொண்டிருந்தாள்”.

அவளைப் பார்க்க அனைவருக்கும் பொறாமையாக இருந்தாலும் அவளை வாழ்த்தி விட்டு அவளின் பின்னால் சென்றனர். 

அவர்களும் அவளைப் பின் தொடர்ந்து செல்ல அவர்களுக்கு சோர்வுதான் மிச்சமானது. 

ஆனாலும் அவள் பட்டாம்பூச்சியின் பின் ஓடிக்கொண்டே இருக்க,” சந்தியா அவள் கை பிடித்து நிறுத்தினாள்”.

அவள் திரும்பிப் பார்க்க அங்கே ரஞ்சித்தும் மீராவும் மரத்தடியில் நின்றிருந்தனர்.

அவள் சிரித்துக் கொண்டே சந்தியாவை பின் தொடர்ந்தவள் அவளிடம் “என்ன அண்ணி இந்த நேரத்துல ஏன் அண்ணா எக்சர்சைஸ் பண்ணாரு! பாருங்க  ப்படி மூச்சு வாங்குவது” ? என்று கேட்க கேட்டதும் அவளை முறைத்துக் கொண்டே சென்று ரஞ்சித்தின் அருகில் அமர்ந்தாள்.

 மீரா முதலில் அவளிடம் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் அவளிடம் “ஏன் வேதிகா இந்தக் கல்யாணம் ஆனவங்க தொல்லை தாங்கல இல்ல”? என்று கேட்கவும் அவள் சந்தியா- ரஞ்சித்தை பார்த்துவிட்டு,” ஆமாம்” என்றாள்.

அதற்கு சந்தியா “உங்களுக்கு ஏம்மா பொறாமை” என்று கேட்கவும் மீரா அளிடம் “எங்களுக்கென்ன பொறாமை வேண்டிகிடக்கு,இப்பவே கல்யாணம்ணாலும் எங்களுக்கு ஆள்ரெடி” என்று கூறி வேதிகாவை பார்க்கவும் அவள் ,”ஆமாம் “என்று தலையசைத்து விட்டு சந்தியாவிடம் “உங்களுக்கு எங்க அண்ணன் மாதிரி ஒரு கேனையன் கிடைக்கும்போது எங்களுக்கும் கிடைக்க மாட்டானா”? என்று கூறி சிரிக்கவும் மற்ற மூவரும் அமைதியாய் அவள் முகத்தையே பார்த்தனர்.

 அவள் அவர்களைப் பார்த்து என்னவென்று கேட்கவும் மீரா அவளிடம் “பிரசன்னா ஒரு பொண்ண லவ் பண்றாரு ஆனா அந்த லூசு பொண்ணுக்கு தான் இன்னும் அது புரியல” என்று கூறவும் அதற்கு வேதிகா,” அய்யா சொல்லி புரிய வைக்க வேண்டியது தானே!”  என்றாள். 

அனைவரும் அமைதியாய் தங்களுக்குள் பேசிக்கொண்டு பின்பு,” அவளிடம் அவருக்கு பயமாய் இருக்கிறதாம்” என்று கூறவும் அவள் அவர்களிடம்,” சரி விடுங்க நானே அவர்கிட்ட போய்  பேசி அவருக்கு புரிய வைக்கிறேன் “என்றாள்.

 அனைவரும் சிரித்துக்கொண்டே சென்று விட அவள் பிரசன்னாவை தேடி சென்றாள். 

அங்கு வீட்டினுள் குந்தவி கோதாவிடம் தன் மகனுக்காக பெண் கேட்டு கொண்டிருந்தார்.

கோதா தன் தங்கையை நோக்க அவர் தன் அக்காவிடம் எனக்கு அர்ஜுனை பற்றி நன்கு தெரியும்.

 அவனும் ,”எனக்கு மகன் தான்”.

 இந்தத் திருமணம் என்னை பொறுத்தவரையில் “100 சதவீத மேட்ச்” என்றார்.

அவர்கள் அனைவரும் தங்களின் கணவருடன் பேசிக்கொண்டு இருந்தனர். 

பிரசன்னா தன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான். உள்ளே வந்த வேதிகா அவனின் அருகில் சென்று நிற்கவும், 

அவன் லேசாய் கண் விழித்தபோது அவளை பார்த்து எழுந்தான்.

அவள் தன் வாயில் ஒரு விரல் வைத்து மிரட்டிவிட்டு ஜன்னலின் ஓரம் சென்று நின்றாள்.

அவனும் அவள் பின்னால் சென்று நிற்க அவள் திரும்பி அவனிடம், “நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள்”? என்று  

வினவவும் அவன் சிறிது தடுமாறி விட்டு பின்பு “ஏன்? நீ எங்கள சேர்த்து வைக்கப் போறியா”? என்று கேட்டான்.

அவள் திரும்பி அவனை பார்த்து விட்டு,”என்னால் முடிந்தால் கண்டிப்பாக செய்வேன்” என்றாள். 

அவன் அவளை மேற்பார்வை பார்த்து கொண்டு “ஐ லவ் யூ வேதிகா” என்றான். 

அதை எதிர்பார்க்காத அவள் அவனிடம் நான் “அனாதை” என்றாள்.

 அதற்கு அவன் ,”உனக்கு நான் இருக்கும் போது நீ எப்படி அனாதையாவாய்?” என்றான். 

இல்லை “உங்களுக்கு என்னால் தொல்லை தான் மிஞ்சும்” என்றாள். 

அவனோ “நீ என்னுடையவள்” எனும்போது உன்னுடைய துன்பங்களையும் நான் சமாளிக்கத் தயார் என்றான். 

“உங்க அளவுக்கு என்னால் உங்களை காதலிக்க முடியாது”

 ஏனென்றால் “என்னையே எனக்கு நேசிக்க தெரியாது” என்றவளின் வாய் பொத்தி “நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்” என்றான்.

 அவள் அமைதியாய் மௌனத் கண்ணீர் வடிக்கவும் அவளை தன் புறம் திருப்பி அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டான். 

அவள் தேம்பி தேம்பி அழவும் அவளை சமாதானப்படுத்தி அவன் அவளிடம்,” தன் லவ் ஸ்டோரியை கூற ஆரம்பித்தான்”. 

உன்னை முதல் முறை உன் வீட்டில் பார்த்த போதே ஏனோ என் மனம் சஞ்சலப்பட்டது.  

அதன் பின்பு உனக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடியை பார்த்தபோது உன்னை என்னுடன் அழைத்து வந்துவிட வேண்டும் போல் இருந்தது.

 ஆனால்,” உன்னை என்ன உறவு என்று சொல்வேன்?” என்று யோசிக்கும் போது தான் நான் இந்த முடிவிற்கு வந்தேன் என்றான். 

“என்னால் மட்டுமே உனக்கு நீ விருப்பப்படும் வாழ்வை தரமுடியும்” என்று தோன்றியது. 

அதனால்தான் என்றவன் அவளிடம் “உனக்கு சம்மதமா”? என்று கேட்டதும் அவன் முகத்தில் தன் இதழ் பதித்தாள் வேதிகா. 

அவன் ஏதும் சொல்லாமல் அவள் முகத்தையே பார்க்க,” அவள் நாணத்தில் தலை குனிந்து கொண்டாள்”. 

அதற்கு அவன் “பாருடா ஏய் வேதிகா நீ கூட வெட்கப் படுவாயா”? என்று கேட்டதும் கட்டிலில் தலையணையை தூக்கி அவன் மேல் விட்டெறிந்தாள். 

அவன் அவளிடம் “நம்ம மேரேஜ் ப்போ வச்சுக்கலாம்”? என்று கேட்டதும் அவனைப் பார்த்தவள் “ஏன் இவ்வளவு அவசரம்” என்றாள். 

அவனோ பதில் ஏதும் சொல்லாமல்,”நீ தனியாய் கஷ்டப்படுவதை இனியும் என்னால் தாங்க முடியாது” என்றான்.

 மீண்டும் சிறு குழந்தை போல் அவனை கட்டிக்கொண்டு அவள் அழவும்,” அவன் சிரித்து விட்டு இல்ல வேதிமா எனக்கு இன்னும் ஒரு மாதம் தான் லீவ் மிச்சம் இருக்கு அப்புறம் எப்படினு சொல்ல முடியாது” என்றான்.

 பின்பு அவளிடம் சரி “டைம் ஆச்சு நீ போய் தூங்கு”

“நாளை காலையில பேசலாம்” என்றான். 

அவளும் சென்றுவிட படுத்தவனுக்கு தான் உறக்கம் வரவில்லை. 

“எப்படியும் எதிர்காலத்தில் வேதிகாவின் மாமா பிரச்சனை பண்ணுவார்”

” என்ன செய்வது?” என்று யோசித்துக் கொண்டே உறங்கிவிட்டான். 

காலையில் அனைவரும் ஜாலியாய் பேசிக்கொண்டிருக்க நரேனும் அர்ச்சனாவும் வந்தனர். 

அவர்களை நலம் விசாரித்து விட்டு பின்பு அனைவரும் தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தர்.

 சந்தியா-ரஞ்சித்,அர்ச்சனா-நரேன், சரண்-செந்தில்  என காதல் திருமண ஜோடிகள் வீட்டை அலங்கரித்து கொண்டிருக்க உள்ளே விருந்து ரெடியாகி கொண்டிருந்தது. 

வாசலில் ஆண்கள் ய்யருடன் பேசிக் கொண்டு அவரை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தனர். 

மீனாட்சி அனைவரையும் சென்று ரெடியாகி வரச் சொல்லவும் உள்ளே சென்ற “வேதிகாவை” சந்தியாவும் அர்ச்சனாவும் கிளப்ப “மீராவை” சரண்யாவும் வானதியும் தயார் செய்தனர். 

அதேபோல் இங்கு “அர்ஜுனை” ரஞ்சித்தும் நரேனும் இம்சை செய்ய செந்தில் மற்றும் அஷ்வந்த் “பிரசன்னாவை” தயாராக்கினர்.

 ஒரு மணி நேரத்தில் பெரியவர்கள் அனைவரும் அமர இளம்வயது பட்டாளம் நின்றுகொண்டிருந்தது. 

அய்யர் சில மந்திரங்களை ஓதி முடித்த பின்பு  நிச்சயதார்த்த பத்திரிக்கையை வாசிக்கவும் “வேதிகாவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி” 

அதே போல் தான் “மீராவுக்கும்”.

 அனைவரும் சிரிக்கவும்,”மீராவும் வேதிகாவும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டனர்” 

அனைவரும் வாழ்த்துக்கள் கூற,” அர்ஜுன் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு ரஞ்சித்தை கட்டிக்கொண்டான்”.

 அதேபோல் பிரசன்னா,” சந்தியாவை நன்றியுடன் பார்க்க அவள் ஓடி வந்து வேதிகாவை அணைத்துக்கொண்டாள்”.

Advertisement