Advertisement

அர்ஜுன் மீராவை தேடிச்செல்ல நரேன்  அர்ச்சனாவையும் ரஞ்சித் சந்தியாவையும் தேடிச் சென்றனர். 

இவர்களை கண்டும் காணாமல் மற்ற திருமணமான ஜோடிகளான செந்தில்-சரண் ,அஷ்வந்த்-வானதி இருந்தனர். 

அங்கு அப்படியிருக்க இங்கே,” சாப்பிட்டவுடன் வேதிகா படுக்க சென்றுவிட்டாள்”

ஆனால்,” பிரசன்னா அவளுக்காக மொட்டை மாடியில் காத்துக் கொண்டிருந்தான்”

அவளுக்கு லேசாக உறக்கம் வரும் சமயம் பார்த்து மீனாட்சி கையில் பால் டம்ளர் உடன் வந்தார்.

 அவள் எழுந்து சென்று அவரிடம் இருந்து பாலை வாங்கிக் கொண்டு அவர்ன்னத்தில்  முத்தமிட்டுவிட்டு “குட் நைட் மா” என்றவளிடம் “போடி போக்கிரி இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல”.

 சரி ,”நீ பிரசன்னாவை பார்த்தியா ரொம்ப நேரமா ஆளையே காணோமே!” என்றவரிடம் ,” நீங்க குடுங்க மா நான் போய் குடுக்கறேன்” என்று கூறிவிட்டு பாலை கையில் எடுத்துக் கொண்டு தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். 

அவள் ,”மெதுவாய் பூனை நடை நடந்து அவன் பின்னால் சென்று நிற்க, அவனுக்கு சிரிப்பாய் வந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் நின்றான்”. 

அவன் முன்னால் சென்று பாலை நீட்டி நிற்க, அவனுக்கு இப்போது சிரிப்பாய் வர சிரித்து விட்டான். 

அவள் அவனை முறைக்க பால் தம்ளரை கையில் வாங்கிக் கொண்டான்.

 அவள் தன்னுடைய தம்ளரை எடுத்துக் கொண்டு சுவரின் மேல் அமர்ந்து காலை தொங்கவிட்டுக் கொண்டு பாலை குடிக்க ஆரம்பித்தாள். 

அவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். 

“எப்படி இவளால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது?” என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே “என்ன சார்? பால் வேண்டாமா?” என்ற குரல் கேட்டு திரும்பியவன் தன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தவளிடம்,” சரி வா இப்படி உட்கார்ந்து பேசலாம்என்றதும் அவளும் சென்று அவன் எதிரே அமர்ந்தாள்.

அவன் அவளிடம் உன்னுடைய வயது என்ன? என்று கேட்டதும் அவனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு,” நீங்க என்ன சொல்ல போறீங்கனு எனக்கு தெரியும். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது 

“சோ நீங்க வேற பொண்ண பாத்துக்கோங்க உங்க அழகுக்கு உங்களுக்கு நிறைய பொண்ணு கிடைக்கும்” என்றவளை வழிமறித்து “என்ன நீ மட்டும் பேசிக்கிட்டே இருப்பியா? கேட்கிறவன் என்ன ஆவான் கொஞ்சமாவது கவலை இருக்கா உனக்கு?”

“ஆளப் பாரு” என்றவனிடம் “எனக்கென்ன குறைச்சல்”  என்றாள் வேதிகா.

 “எதுவும் கம்மியா இல்லை எல்லாமே அளவுக்கு அதிகமா இருக்கு அதான் பிராப்ளம்” என்றான். 

ஒரு பத்து நிமிடம் உன்னோட  வாய்க்கு பூட்டு போட்டா,” நான் பேச வந்ததை பேசிட்டு போய் விடுவேன்” என்றான். 

அவள் தன் வாயில் ஒரு விரல் வைத்து உட்காரவும் “அவளுக்கே அது ஓவரா தான்  இருந்தது”. 

அவன் சிரித்துவிட்டு உன்னை எனக்கு ஏற்கனவே தெரியும். 

“நான் தான் உன்னோட கேசை டீல் பண்ற மிலிட்டரி ஆபீஸர்”. 

நான் ,”உன்னோட வீட்டுக்கு ஏற்கனவே 2 முறை வந்து இருக்கேன்”. 

அதனால் உன்னை எனக்கு தெரியும். 

ஆனா ,”நீ என்னை திரும்பி கூட பார்த்தது இல்லை”. 

இப்ப ஓரளவுக்கு “கேஸ்” நம்ம கையில இருக்கு.

 அதுக்கு உன்னோட “ஹெல்ப்” வேணும்.

 அத பத்தி பேச தான் உன்னை இங்க வரச்சொன்னேன். 

ஆனாலும் உனக்கு இந்த அளவுக்கு கற்பனை பண்ண கூடாது  என்றவனை பார்க்காமல் தரையையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் வேதிகா. 

அவள் அமைதியாக இருக்கவும் அவன் அவளிடம் “இப்ப நீ பேசலாம் பர்மிஷன் கொடுத்தாச்சு” என்றான்.  

அவனை ஏறிட்டுப் பார்த்த அவளின் கண்கள் கலங்கி இருந்தன. 

அவளை பார்த்ததும்,” ஏனோ பிரசன்னாவுக்கு அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு முடி கோதி ஆறுதல் சொல்லவேண்டும் போல் இருந்தது”. 

அவள் அமைதியாய் கண்களைத் துடைத்துக்கொண்டு,” நீங்க என்ன கேட்டாலும் செய்கிறேன்” என்று கூறிவிட்டு நடக்க அவன் அவளிடம்,” நீ எப்போதும் போல் இரு இதில் கவலைப்பட ஒன்றுமில்லை” என்றான் .

அவள் பதிலேதும் சொல்லாமல் சென்றுவிட்டாள். 

அவனும் சிறிது நேரம் யோசித்து விட்டு படுக்கச் சென்றுவிட்டான்.

 அடுத்த நாள் காலையிலேயே அனைவரும் மண்டபத்திற்குச் சென்று விட்டனர். 

மாப்பிள்ளைக்கு நலங்கு என்று எல்லாச் சம்பிரதாயங்களையும் நிறைவாய் முடிக்க அடுத்த நாள் சுபமுகூர்த்தத்தில் ரஞ்சித் சந்தியாவின் கழுத்தில் தாலி கட்டினான். 

அக்கினியை வலம் வரும்போது சந்தியாவின் கண்களில் நீர் ததும்ப,” அவன் அவளின் விரல்களை ஆதரவாய் அழுத்தினான்”. 

அடுத்து மறு வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்பதால் திருமணம் முடிந்தவுடன் மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றுவிட்டான் பிரசன்னா. 

அனைவரும் கிண்டலும் கேலியுமாக இருக்க,” வேதிகா மட்டும் பிரசன்னாவை காணோமே என்று தேடிக் கொண்டிருந்தாள்”. 

அப்போது செந்திலை தேடி வந்த சரண்யா அவளைப் பார்த்துவிட்டு “என்ன மேடம் யாரைத் தேடுகிறாய் “?என்று கேட்கவும் வேற யாரை தேட போறேன்!

 இந்த வீட்டு “சிபிசிஐடி”யை தான்!  என்னோட சேஃப்டி பின்னை காணோமா!அதான்  கம்ப்ளைன்ட் பண்ண போறேன்” என்றவளின் காதை திருகி விட்டு “உனக்கு இருந்தாலும் இவ்வளவு திமிர் கூடாது” என்று சொல்லிவிட்டு  பிரசன்னா மறுவீட்டுக்கான ஏற்பாடுகளை செய்ய போயிருக்கார் என்றாள். 

“ஓகே” என்று அவளிடம் சொல்லிவிட்டு திரும்பிய சரண்யா அதற்குள்  அங்கு நரேன் அர்ச்சனாவை பார்வையாலேயே விழுங்கி கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு “வேண்டுமென்றே வேதிகாவை அங்கு அனுப்பி விட்டு சென்றுவிட்டாள்”.

 வேதிகா அவன் முன்பு வந்து நிற்கவும் கோபமாய் திரும்பியவன் அவளைப் பார்த்ததும் சிரித்துவிட்டான். 

அவ்வளவுதான் வந்ததே கோபம்!

இப்ப பாரு ,என்றவள் நேராய் அர்ச்சனாவிடம் சென்று “அக்கா உன்னைய அந்த ஆள் ரொம்ப நேரமா உன்னையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கான்”.

” என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு” என்றவளிடம்

” ஏய் நீ சும்மா இருடி” என்றாள் அவள்.

 “பயப்படாத நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்” என்றவளின் தலையில் குட்டு வைத்து விட்டு ” ஏய்! அவரு உன்னோட மாமா தான் அடுத்த வாரம் எங்களுக்கு கல்யாணம்” என்றதும் அமைதியாய் அங்கிருந்து நகர்ந்து மண்டபத்துக்கு வெளியில் வரவும் அங்கு நரேன் சிரித்துக்கொண்டே நின்று இருந்தான்.

 அவள் தன் கைகளை பிசைந்து கொண்டு நிற்கவும் அவள் அருகில் வந்தான்.

 “என்ன மேடம் உங்க அக்கா என்ன சொன்னாங்க” என்றவனிடம் “போங்க அத்தான்” என்று கூறிவிட்டு உள்ளே போகவும் அவன் அவளை விரட்டுவது போல் நடிக்கவும் இன்னும் வேகமாய் ஓட அவளின் சேலை முந்தானை கதவில் மாட்டிக்கொள்ளவும் என்ன செய்வதென்று தெரியாமல் கதவில் சாய்ந்தவாறு நின்று கொண்டு யாரைக் கூப்பிடுவது என்று யோசிக்கும் போதுதான் பிரசன்னா அவளை நோக்கி வந்தான். 

அவள் அமைதியாய் நின்று இருப்பதை கண்டு சிரித்து விட்டு,” உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என்னுடன் வா” என்று அவன் கூற ,”அவள் நான் அப்புறமா வரேன்” என்றாள்

 அதற்கு அவன் “இப்ப என்ன நேரம் சரி இல்லையா என்று கேட்க , நிலைமைதான் சரியில்லை” என்று அவள் முணுமுணுத்தது அவனுக்கு நன்றாகவே கேட்டது. 

அவன் மீண்டும் இப்பவே டைமாச்சு கிளம்பு என்று கூற அவள் அமைதியாய் திரும்பி நிற்கவும் அப்போது தான் அவனுக்கு புரிந்தது  

அவன் அமைதியாய் சென்று அவள் சேலையின் முந்தானையை எடுத்து விட்டான்.

“தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு அவனுடன் சென்றாள். 

அவன் சென்று மணமக்களை அவர்களது காரில் ஏற்றி விட்டு அவன் தன் காரில் அமரவும் அவனுடன் வேதிகாவும் அமர்ந்தாள். 

ஒருவழியாய்  எல்லா சம்பிரதாயங்களும் முடிந்தது. 

அன்று இரவு “கையில் பால் டம்ளருடன் தேவதைபோல்” அறையினுள் நுழைந்தவளைப் பார்த்து  புன்னகைத்தான் ரஞ்சித். 

அவளும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு அவன் கால்களில் விழவும் ,” அவசரமாய் அவளை தூக்கியவன் இதெல்லாம் நமக்குள் எதற்கு?” என்றான். 

அதற்கு ,”அவனிடம் நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள்.

அவன்,” சரி சொல்லு” என்றதும் “எனக்கு கொஞ்ச நாள் அவகாசம் வேணும் ரஞ்சித்” என்றாள்.

அவளைத் தன் பக்கம் இழுத்து அவன் அவளின் முடி கோதி விட்டு நானும் இதையேதான் சொல்லணும்னு நெனச்சேன். 

ஆனா நீயே சொல்லிட்ட “எப்படிமா? உன்னால இப்படி எல்லாம் முடியுது” என்று கேட்க அதற்கு அவள் எல்லாம் உங்க மேல இருந்த  காதல் தான் காரணம் அப்புறம் உங்க பிரெண்ட்ஸ் குடும்பம்” 

அதான் நான் இப்ப இந்த முடிவெடுப்பதற்கு காரணம் என்றாள். 

நம்மால் எந்த அளவுக்கு சீக்கிரம் முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு சீக்கிரமா அர்ஜுன் கல்யாணத்தையும் முடிக்கனும் என்றாள். 

கண்டிப்பாக “யாமிருக்க பயமேன்” என்று கூறிவிட்டு ரஞ்சித் தலையணையை எடுத்து கொண்டு சோபாவிற்கு சென்றுவிட இங்கு சந்தியாவும் படுத்துக்கொண்டாள்.

 அடுத்து வந்த நாட்கள் வேகமாக சென்றன. 

மாமியாரின் வேலைகளை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவருக்கு “ரெஸ்ட்” கொடுத்துவிட்டாள்.

 ரஞ்சித்,” அர்ச்சனாவின் திருமண வேலைகளை உடனிருந்து கவனித்துக் கொண்டான்”. 

இடையிடையே அலுவலகம் சென்று வந்தான்.

 இப்படியே நாட்கள் செல்ல ,”பிரசன்னா வேதிகாவை அவ்வப்போது வெளியில் அழைத்துச் சென்று அவள் மாமாவிடம் இருந்து அவளது சொத்துக்களை மீட்டுத் தந்தான்”. 

“அதுமட்டுமல்லாமல், அவள் விருப்பம் போல் எதுவும் செய்யவும் சட்டப்படி வழி வகுத்துக் கொடுத்தான்”. 

முதல் முறையாய் அவனை ஓர் வித உண்மையான நன்றியுடன் பார்த்தவளிடம்,” இது என்னுடைய கடமை ” என்று கூறியவனை ஏனோ அவளால் நேராய் பார்க்க முடியவில்லை. 

அடுத்து அர்ச்சனா திருமண நாளும் ந்தது “ஆண்டவனின் அருமையான படைப்பில் பிரம்மாவின் கலைத்திறனும் சேர்ந்து அழகோவியமாய் அவள் அமர்ந்திருக்க மங்கள நாதஸ்வரம் முழங்க அனைவரின் வாழ்த்துக்களுடன் நரேன் தன் காதலியை  மனைவியாக்கிக் கொண்டான்”.

அர்ச்சனாவின் அம்மா ஆனந்த கண்ணீரை பொழிய ,”ரஞ்சித்தும் அர்ஜூனும் அவரின் இருபுறமும் சாய்ந்துகொண்டு அர்ச்சுக்கு  அழகு காட்டினர்”.  

அதைப்பார்த்து அவள் அவர்களை மிரட்டவும் அவர்கள் நரேனை பார்த்து..

Advertisement