Advertisement

அவன் அவளைப் பார்த்து ஒளிந்துகொள்ள அவள் ,”உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு” என்று பாடிக்கொண்டே அதற்கேற்ப ஆடிக் கொண்டும் வந்தாள். 

அவளைப் பார்க்க அவனுக்கு அப்படியே “குறும்பு தேவதை” போல் தோன்றினாள். 

வந்தவள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூட, அவன் அதற்கான காரணம் தெரியாமல் விழிக்கும் போது அவளோ  “நான் இப்போ டிரஸ் சேஞ்ச் பண்ண போறேன் எல்லாரும் கண்ண மூடுங்க” என்று சொல்ல அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

 அவன் அவசரமாக எழுந்து போக முயல  கதவையும் சாத்தி வைத்திருந்தாள். 

அவன் வேறு வழியே இல்லை என்று எண்ணி மெதுவாய் அவள் பின்புறம் அவன்  நின்றான்.

 ஏதோ ஒரு உந்துதலில் அவள் திரும்பவும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

 அவன் அவளை வேதிகா என்று அழைக்கவும் தன்னிலைக்கு வந்தவள்,

 அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நீங்க எப்படி இங்க என்று கேட்கவும் அதற்காகவே காத்திருப்பது போல் பிரசன்னா அவளிடம் நைட் “10 ஓ கிளாக்” மொட்டை மாடிக்கு வந்துடுங்க எல்லாத்தையும் விளாவாரியா சொல்றேன். 

இது,” உங்க பர்சனல் மேட்டர் சோ தனியா வர ட்ரை பண்ணுங்க” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். 

அவள்,” என்னவாக இருக்கும்! என்று  யோசித்துக் கொண்டே போய் படுத்து விட்டாள்”. 

இரண்டு நாட்களில் கல்யாணம் என்பதால் வீடு ஒரே உறவினர்களால் நிரம்பியிருந்தது. 

இரண்டு நாட்களாக சரியான வேலை இருந்ததால் சந்தியா ரஞ்சித்தின் கண்களில் படவே இல்லை. 

அவன் மனதில், “ராட்சசி  கொஞ்சமாவது என்ன புரிஞ்சுக்கறாளாப் பாரு!” 

இதுல வேற,” இவ என்னை ‘லவ்’ பண்றாலாமாம்” என்று நினைத்துக் கூட இருக்கமாட்டான், அதற்குள் சந்தியா அவன் முன் நின்றாள்.

ஒரு வினாடி தடுமாறியவன் பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு “இப்பதாண்டி உன்ன பத்தி நெனச்சன்  நீயே வந்துட்ட” என்றான்.

 என்ன!  இந்த ராட்சசி நம்மள கண்டுக்கவே மாட்டேங்கறானு நினைச்சிங்களா? என்றாள்.

 சீச்சீசீ…

அப்படி எல்லாம் நான் உன்ன நெனப்பேனா “நீ என்னோட தங்கம்” இல்ல என்றவனிடம் “ரொம்ப வழியுது தொடச்சிக்கோங்க” 

 நாம ,”இன்னைக்கு யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்துக்கு போக போறோம் “

“சரியா அரை மணி நேரத்துல நான் கார் பார்க்கிங் வந்து விடுறேன்” என்று கூறிவிட்டு அவன் கன்னங்களை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

 அவன் கன்னத்தை தடவிக் கொண்டே நிற்க அங்கு வந்த வேதிகா அவனிடம் “டேய் அண்ணா இப்பவே கனவா” என்று கேட்டதும் சிரித்து கொண்டே சென்று விட்டான். 

மீனாட்சி உறவினர்கள் அனைவரையும் மண்டபம் மற்றும் ஹோட்டலில் தங்க வைத்து இருந்தார். 

வசந்தியின் குடும்பங்கள் இங்கு இவருக்கு உதவியாய் வீட்டில் தங்கியிருந்தனர்.

மீரா “எக்ஸாம் எழுதி விட்டு வரவேண்டும் என்பதால் அவளை மட்டும் தனியாய் வரச்சொல்லிவிட்டு வந்திருந்தனர்”. 

அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருக்க அர்ஜுன் அர்ச்சனா மூலமாக மீராவை பற்றி தெரிந்து கொண்டவன் இந்த “சான்சை” பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று யோசித்துக்கொண்டே ரஞ்சித்துக்கு கால் செய்தான்.

 அவனும்,” சொல்லுடா மாப்பிள்ளை!” என்று கேட்க அவன் அவனிடம்,” எங்கடா இருக்க?” என்றதும் வெளியில் போயிட்டு இருக்கேன் என்று அவன் சொன்னதுதான் நேரம் இங்கு அர்ஜுன் அவனிடம் “டேய் மடையா! உனக்கு ஏன்டா இவ்வளவு நல்ல எண்ணம்”

“நீ மட்டும் ஜாலியா என்னோட சிஸ்டரோட என்ஜாய் பண்ற” 

ஆனா ,”அடுத்தவனோட லவ்ல நல்ல இடமா பார்த்து ‘ஆப்பு’ வைத்து விடு!” என்று கூறி அவன் சிறிது ரெஸ்ட் எடுக்கவும் ரஞ்சித் அவனிடம் ” என்ன தான்டா உனக்கு ப்ராப்ம்” என்றான்.

” இன்னுமா உனக்கு புரியலை?”

நான் மீராவை லவ் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் தான் அவ உன்னோட “தங்க ஊசி” இப்ப அவ எனக்கு “பொண்டாட்டி”.

 நான் போய் கூட்டிட்டு வரலாம்னு ஆசையா இருந்தா,” இப்படி நீ போனா என்ன அர்த்தம்” என்றவனுக்கு அங்கு மாறி மாறிச் சிரிக்கும் சத்தம்  கேட்க “டேய் ஏன்டா லூசு மாதிரி சிரிக்கிற” என்றான் எரிச்சலுடன்.

 இப்போது சந்தியா அவனிடம் “ஹலோ ப்ரோ” என்ன ஒரே அடியா “என் ஆள வெளுத்து வாங்கறீங்க” நாங்க வேற ஒரு வேலை விஷயமா வெளியில போறோம். 

நீங்க போய் உங்க “மும்தாஜை” கூட்டிட்டு வரலாம்.

 நான் போன் பண்ணி அம்மா கிட்ட சொல்லிடறேன் என்றாள்.

“சாரி சந்தியா” என்று அர்ஜுன் சொல்ல இந்த ஒரு தடவை “பொழைச்சு போ” என்று கூறி போனை அணைத்தாள். 

அவர்கள் காரை ஒரு அனாதை ஆசிரமம் முன்னே நிற்க வைத்து விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

 அங்கு அவள் ,”ஏற்கனவே ரெடியாய் வைத்திருந்த துணிமணிகள் மற்றும் இனிப்புகள்,பொம்மைகளை அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்து விட்டு அங்கிருந்த மதரிடம் நன்கொடையாய் ஒரு தொகையையும் கொடுத்து விட்டு வந்தாள்”. 

அவளை அப்படியே இமைக்காமல் பார்த்தான் ரஞ்சித். 

அவள் அவனிடம் “சாரி” உங்க கிட்ட முதல்ல சொல்லல.

 ஒரு “சர்ப்ரைஸாக” இருக்கட்டும்  என்று சொன்னவளின் வாயை பொத்தி தன்னுடன் அணைத்துக் கொண்டு அவன் நெற்றியில் தன் இதழ் பதித்தான்.

“ஏன்டி இப்படி” என்று கேட்டவனிடம் ,”நேத்ரா விட்டு கொடுக்கலனா நீங்க எனக்கு கிடைச்சு இருக்க மாட்டீங்க “

அதனால அவங்க “ஆத்ம திருப்திக்காக என்னால முடிஞ்சதை செய்தேன்” அவ்வளவுதான் என்றவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

பின்பு இருவரும்   காரில் வீட்டுக்கு கிளம்பினர்

இங்கு அர்ஜுன் அர்ச்சனாவிடம் கூறிவிட்டு மீராவை கூட்டிவர “சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில்” காத்துக் கொண்டிருந்தான். 

“டிரெயின் வந்ததுதான் நேரம் அவன் சென்று ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டான்.

மீரா, அழகு பதுமை போல் குங்கும நிற புடவையில் மெதுவாக வந்து கொண்டிருந்தாள்” 

அவளைப் பார்த்ததும் அவன் முகமெங்கும் “பல்பு” எரிய அவன் வெளியே வந்தான்

அதற்குள் மீரா பின்னால் திரும்பி  “ஏய் நந்து இன்னும் என்னடி பண்ற ” என்று கேட்கவும் “இதோ வந்துட்டோம்” என்று கூறிக்கொண்டே நந்தினி வர அவள் பின்னால் கோகுல் வந்தான். 

அவர்களைப் பார்த்ததும் அவன் முகம் “காத்து போன பலூன் போலாகி விட்டது”. 

மீரா அவர்களை தேடி விட்டு திரும்பியவள் ,”அங்கு வாட்டமான முகத்துடன் அமர்ந்திருந்த அர்ஜுனை பார்த்துவிட்டாள்”. 

ஆனாலும் பார்க்காதது போல் அவள் செல்லவும் ,”இவ்வளவு நேரமா என்ன பண்றா?” என்று எண்ணி திரும்பிய அர்ஜுன் அவனை கடந்து முன்னால் செல்பவர்களைப் பார்த்து விட்டு ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்து மீராவின் முன் நின்றான்”. 

அவள் எவ்விதம் முகம் மாற்றமும் இல்லாமல் அவனை நோக்கினாள்.

 நந்தினி அர்ஜுனிடம் “ஹாய் அண்ணா நீங்க அர்ஜுன் தானே! நாம வானதி மேரேஜ் மீட் பண்ணியிருக்கோம்” என்றவளிடம் ஆமாம்! என்று கூறிவிட்டு அவர்களின் பைகளை எடுத்துக்கொண்டு தன் காருக்குச் சென்றான். 

பெண்கள் இருவரும் பின் சீட்டில் அமர கோகுல் அர்ஜுனுடன் முன் சீட்டில் அமர்ந்தான்.

அர்ஜீன் மட்டும் கண்ணாடியின் வழியாக மீராவை கவனித்துக் கொண்டு வந்தான்.

அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளாமல் வீட்டை அடைந்தனர். 

மீனாட்சி அவர்களை ஓடிவந்து வரவேற்க,” மீரா அவரின் கழுத்தை கட்டிக்கொண்டாள்”. 

பின்பு,” அவரின் கன்னத்தில் அர்ஜுனை பார்த்துக்கொண்டே முத்தமிட்டாள்”

” ஐயோ தாங்கல” என்று ரஞ்சித் புலம்பினான். 

“உனக்கு பொறாமை டா” என்ற மீராவிடம் அப்படியா என்று கூறிவிட்டு கோதாவை தூக்கி சுற்றவும் “ஏண்டா என்னோட அம்மாவை தூக்கின” என்று அவனிடம் சண்டைக்கு வந்தாள்.

” போடி நீ போய் வேணும்னா உங்க அம்மாவை தூக்கி சுற்று” என்று கூறவும்  “உன்ன”… என்று கூறி கொண்டே அவனை துரத்தினாள்.

 அப்போதுதான் வீட்டினுள் நுழைந்த சரண் அவளின் கையை பிடித்து நிறுத்தி “ஏண்டி என்னோட அண்ணன துரத்துற?” என்று கேட்கவும் அவள் செந்திலிடம் திரும்பி “அத்தான் உங்க பொண்டாட்டிய பார்த்துக்கோங்க அப்புறமா வந்து ஏன்மா என்னோட பொண்டாட்டி அடிச்சனு கேட்கக்கூடாது” என்று கூறி விட்டுச் செல்ல செந்தில் சிரித்துக்கொண்டே நிற்கவும் சரண் தன் மகளை அவனிடம் கொடுத்துவிட்டு “இருடி நானும் வரேன் இப்ப என்ன பண்றேன் பாரு” என்று கூறி விட்டுச் செல்ல அஷ்வந்த் மீராவுக்கு உதவியாய் வர வானதி சரண்யாவுக்கு உதவியாய் வந்தாள்.

 ரஞ்சித்தை அவர்களால் பிடிக்க முடியாததால் ,”அவர்கள் சந்தியாவை உதவிக்கு அழைக்க இப்போது ரஞ்சித் மாட்டிக் கொண்டாள்”. 

மீரா, செந்தில் அங்கு சிரித்துக் கொண்டிருக்க இங்கு,” வானதியும் சரண்யாவும் மாறி மாறி ரஞ்சித்தின் தலையில் குட்டு வைத்தனர்”. 

இப்படியே சிறிது நேரம் போக ஸ்ரீராம், சைலஜா, கோபி, வித்யா மற்றும் நரேனும், அர்ச்சனாவும் தங்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர்.

மாலையில் வெளியில் சென்றிருந்த பிரசன்னாவும் வர அவனை அனைவருக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்போதே வேதிகா யாழினியை துரத்திக் கொண்டு வரவும் அவளையும் சேர்த்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார் மீனாட்சி.

செழியன் சரண்யாவிடம் ஏதோ சொல்ல அவள் சிரித்துக்கொண்டே வந்து வேதிகாவிடம் “ஹாய் ஐ அம் சரண்யா”,” சிஸ்டர் ஆஃ ரஞ்சித்” என்றவளை அவளுக்கும் பிடித்துப்போய் விட்டது. 

சரண் மூலமாக மீரா,வானதி என அனைவருடனும் விரைவில் பழகிவிட்டாள் வேதிகா. 

இப்படியே நேரம் கழிய மீனாட்சி,வசந்தி,கோதா என பெண்கள் மூவரும் பேசிக்கொண்டே சமையலை முடிக்கவும் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். 

ஆண்கள் ஒருபுறம் பெண்கள் ஒருபுறம் என அமர்ந்தாலும் அவரவர் ஜோடிக்கு எதிரில் அவரவர் அமர்ந்திருந்தனர். 

இளவயதினர் அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு சென்றதும் பெரியவர்கள் இப்போது சாப்பிட அமர்ந்தனர். 

Advertisement