Advertisement

மண்ணில் ஓர் சொர்க்கம் 

சொர்க்கம் 1

கதிரவன் காலைப்படுக்கையில் இருந்து எழுந்தருளுகின்ற அதிகாலை நேரம் அது. அந்த அழகிய வீட்டின் சமையல் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 

அந்த வெளிச்சத்தில் தாய்க்கே உரிய அழகோடு மீனாட்சி காபி கலந்து கொண்டிருந்தார். அப்போதுதான் தன் அறையை விட்டு வெளியே வந்தார் செழியன்.

எப்போது அவர் அறையை விட்டு வந்தாலும் முதலில் அவர் கண்கள் தேடுவது அவர் மனைவியான மீனாட்சியை தான். இதை மீனாட்சி கண்டித்தாலும் உள்ளூர மகிழ்வது அவரின் குணம். 

இப்போது காபி டிரேயுடன் மீனாட்சி வர அவரை பார்த்து கண் சிமிட்டினார் வரின் அன்பு கணவர். பதிலுக்கு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு காபி கோப்பையை நீட்டினாள் மீனாட்சி. 

 பின்பு ஹாலின் மூலையில் இருந்த இன்றைய செய்தித்தாளை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு மாடிப்படி ஏறி முதல் தளத்தை அடைந்து அங்கிருந்த ஒர்  அறையை தட்டினார்.   உள்ளே இருந்து “அம்மா நான் எழுந்துவிட்டேன்” ஒர் கம்பீரமான ஆண் குரல் ஒலித்தது. 

னக்கு காபி வேணாமா  ரஞ்சித் என்று மீனாட்சி கேட்கும்போதே கதவு திறந்து தன் அம்மாவை சில நிமிடங்கள் அப்படியே பார்த்தவன் பின்பு அவர் கால்களில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டு காபியை வாங்கிக் கொண்டான். 

மகனின் தலையை கோதி  அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சீக்கிரம் ரெடியாகி கீழே வாடா என்று கூறிக்கொண்டிருக்கும் போதே இன்னைக்கு சரண்யாவுக்கு முக்கியமான எக்ஸாம்னு  சொன்னாடா  மறந்துட்டேன். 

ஐயோ போச்சே ! அந்த கழுதை இன்னும் தூங்கிட்டு இருப்பாளே என்று அவர் கூறும் போது அம்மா அவள் என்ன சின்ன குழந்தையா நீங்கள்  வருத்தப்பட அவள் பார்த்து கொள்வாள் என்று கூறிவிட்டு காலி கோப்பையை டிரேயில் வைத்து விட்டு சென்றுவிட்டான் ரஞ்சித்.

அடுத்த அறையின் கதவை தட்டும் போது உள்ளே எரியும் விளக்கை பார்த்தவரின் மனம் அமைதியானது. 

உள்ளே இருந்து ஓர் இனிமையான குரல் “அம்மா நான் படித்து விட்டேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறிக் கொண்டு கதவைத் திறந்த மகளிடம் காபியை கொடுத்து விட்டு அவளின் முடியை கோதி விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவர் கீழே இறங்கிச் சென்று சமையலறை வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார்

சிறிது நேரம் கழித்து ரஞ்சித்தும் சரண்யாவும் பேசிக் கொண்டு கீழே இறங்கி வந்தனர். 

அதற்குள் மீனாட்சி காலை உணவினை மேசையில் எடுத்து வைத்திருந்தார். இவர்களுடன் செழியனும் சேர அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார் மீனாட்சி. எப்போதும் போல சரண்யாவால் அமைதி காக்க முடியவில்லை.

அண்ணா, நீயெல்லாம் எப்படித்தான் இந்த காலேஜ் எக்ஸாம்லாம்ழுதினியோ தெரியல அதைப் படிக்க புத்தகத்தை திறக்கும் போதே தூக்கம் வந்திடுது  அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் அவள் தலையில் ஒரு குட்டு வைத்து அதெல்லாம் சரியாகிவிடும் இப்போதுதானே ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்திருக்க போகப்போக பழகிடும்.   அண்ணா போகப்போக பழகிடும் நீ சொல்றது லெக்ச்சர்ஸ்கக்ககு தானே என்று கூற

அங்கு அனைவரும் சிரிக்க ரஞ்சித் அவளை முறைத்தான். பின்பு இருவரும் கிளம்புகையில் மீனாட்சி அவர்களிடம் என்று இருவரும் சீக்கிரமாக வந்து விடுங்கள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கும் என்றார்.

சரி என்று இருவரும் கூறும் போது அவர்களின் கண்கள் தங்கள் தந்தையிடம் பேசிக்கொண்டன.

அவர் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்பது போல தலையசைத்ததால் இருவரும் காரில் கிளம்பி சென்றனர். 

சரண்யாவின் காலேஜில் அவளை இறக்கி விடும் போது அங்கிருந்து ஒரு பெரிய கூட்டம் தன் தங்கையை நோக்கி வருவதை பார்த்ததும் புன்னகைத்து கொண்டே காரில் ஏறி சென்று ஷ்டி மல்ட்டி மீடியா என்ற நியான் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த பெரிய கட்டிடத்தின் முன்பு நிறுத்தினான். 

அப்போதுதான் உள்ளே சென்று கொண்டிருந்த அர்ஜுன் திரும்பி பார்த்தான்.  அவனைப் பார்த்து ரஞ்சித் ஓடிவந்து அணைத்துக் கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்  பின்பு பேசிக் கொண்டே உள்ளே சென்றனர்.

 ரஞ்சித்,அர்ஜுன் ,அர்ச்சனா மூவரும் கல்லூரி தோழர்கள்.அவரவர் இருக்கையில் அமரும்போது இன்னும் அர்ச்சனா வராததை கவனித்துக் கொண்டனர்.

 இருவரும். அப்போது உள்ளே ஒரே கேலியும் கிண்டலுமாக நான்கு பெண்கள் உள்ளே வந்தனர். அதில் ஒருத்தி என்ன அர்ச்சனா இன்னைக்கு உன்னோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் அமைதியா இருக்காங்க? என்றாள்.

அதற்கு இன்னொருத்தி இருக்காதா பின்ன இன்னைக்கு தானே புது எம்டி வராங்க என்றாள்

அப்போது அங்கு வந்த ஆபீஸ் பியூன் ஒருவர் அர்ச்சனாவிடம் சென்று மேடம் உங்களை மேனேஜர் பார்க்க வர சொன்னார் என்றதும் சரி அண்ணே நான் பார்க்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கும் போது “ஹாய் அர்ச்சு” என்று ஒரே குரலில் ரஞ்சித்தும் அர்ஜுனும் ராகம் பாட அவளும்  சிரித்ததுக்கொண்டே “ஹாய் பாய்ஸ் “என்றாள்.

அப்போது அர்ஜூன் மட்டும் ,”அட அட என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு “என்று கிண்டலடிக்க அவள் மீண்டும் சிரிக்கும் போது அவர்களின் இன்டர்காம் அலறியது. 

அதை எடுத்துப் பேசிவிட்டு மூவரும் மேனேஜரின் அறைக்குள் சென்றனர். அங்கு  தன் வேலையில் மூழ்கி இருந்த நரேந்திரன் அவர்களை  சிறு புன்னகையுடன் வரவேற்றான்.

அவர்களிடம் புதிய எம்டியை வரவேற்பதற்கான வேலைகளை பற்றியும் கம்பெனியின் சில ப்ராஜெக்ட் ஒர்க் பற்றியும் கூறி அனுப்பினான்.

அவனுடைய வாய் வார்த்தைகளை உதிர்த்தாலும் அவனுடைய கண்கள் மட்டும் அர்ச்சனாவிடமே நிலைத்தன. 

அவள் கண்களால் மிரட்டியதை அவன் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் தொடர்ந்து கொண்டிருக்க இதை அனைத்தையும் கண்டும் காணாதவர்கள் போல அர்ஜுனும் ரஞ்சித்தும் அமர்ந்திருந்தனர்.

 அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தவுடன் அர்ச்சனா ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.அதை பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டே கம்பெனியின் வாயிலுக்கு  சென்றனர். 

அவர்களுடன் சிரித்துக்கொண்டே மற்ற  நண்பர்களான கோபி,ஸ்ரீராம் ,சைலஜா ,வித்யா உடன் சென்றனர். 

அவர்கள் அங்கு நின்று அரட்டை  அடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு அழகிய கார் ஒன்று நிறுத்தப்பட்டு அதன் கதவு திறக்கும் ஓசை கேட்டது.  

பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் அழகுடன் ஓர் அழகிய தேவதை காட்டான்  புடவையில்  எளிமையாய் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அவளைப்பார்த்து அனைவரும் தோழமையுடன் புன்னகைத்துக்கொண்டிருந்தனர்.ஒருவனைத் தவிர,

(அவங்க அப்பவே கனவுக்கு போயாச்சு) அவளும் அதே போல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் நின்றாள்

நரேந்திரன் கண்சைவில் அர்ச்சனா அவளிடம் பூங்கொத்தினை நீட்ட அவள் அதை தோழமையுடன் பெற்றுக்கொண்டு நன்றி கூறினாள். பின்பு அனைவரும் புடை சூழ அவள் அவளது அறையினுள் சென்றாள்

அங்கு நேத்ரா எம்டி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பலகை மேசை மீது வைக்கப் பட்டிருந்தது. 

அவளிடம் கம்பெனியின் முக்கிய தகவல்கள் மற்றும் வொர்க்கர்ஸ் இன்ஃபோ அடங்கிய பைல்களை கொடுத்துவிட்டு தன்னிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கும்படி சொல்லி விட்டு தன் அறைக்கு வந்தான் நரேன்.

 அவள் அவளுடைய வேலையில் மூழ்கி இருக்கும்போது,” மே கம் இன் மேடம் ” என்ற கம்பீரமான குரல் அவளை நிமிரச் செய்தது. 

அவள் சிறுதலை அசைவுடன் அவனை வரவேற்றாள். அவளிடம்,”ஹாய் மேடம், ஐ அம் ரஞ்சித்” என்றான். 

அவள் அவனிடம் என்னை நேத்ரா என்றே கூப்பிடலாம் என்றாள். அவனும் சிறு புன்னகையுடன் எனக்கு மூன்று மணிக்கு ஒரு முக்கியமான வேலை உள்ளதால் நான் இப்பொழுது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றான்.

அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்றாள்

அவன் நன்றி  நேத்ரா என்று கூறும்போது,”மச்சி ஓப்பன் தி பாட்டல் ” என்ற மங்காத்தா திரைப்பட பாடல் அவன் செல்லில் ஒலிக்க அதை அணைக்க அவன் படாத பாடுபட்டு கொண்டிருப்பவனை பார்த்த அவளால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட, அவளது சிரிப்பை  ரசித்துக்கொண்டே சாரி என்றான்.

அவள் அவனிடம் இருந்த தன் பார்வையை விலக்கி தன் வேலையில் செலுத்தினாள். அவன் அறையை விட்டு வெளியே வர அனைவரும் அவனுக்காக காத்திருந்தனர்.

அப்போது அர்ஜுன் அவனிடம் ரிங்டோன் எப்படி? என்று கேட்க அவனோ அவன் முதுகில் இரண்டு அடி கொடுக்க ,அர்ச்சனா அவனை தூரத்த மற்ற நண்பர்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போதே அவள் கால் தவறி கீழே விழும் நேரத்தில் நரேன் அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான். 

கணநேரத்தில் நிகழ்ந்துவிட்ட இந்த காட்சியை தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அருகில் வர அர்ச்சனா அவனிடமிருந்து விலகி நின்றாள். 

அதேசமயம் கோபி வித்யாவை ரசனையுடன் பார்க்க அவள் கண்டும் காணாதவள் போல் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். 

அர்ஜுன் திரும்பவும் வந்து  என்ன ஆச்சு அர்ச்சு என்று  வினவ அவன் முதுகில் இரண்டு அடி தலையில் இரண்டு குட்டு வைக்க அவனோ ஐயோ என்ன காப்பாத்துடா ரஞ்சு என்று அவனிடம் சரணடைய அவனும் அவனை நோக்கி வேகமாய் வர அவன் தன் தலையில் கை வைத்துக் கொண்டான்

வந்தவன் அவனை அணைத்துக்கொண்டு ,”எவ்வளவு அடிச்சாலும் தாங்கறியே நீ ரொம்ப நல்லவன்டா “என்று கூற அனைவரும் சிரித்து விட்டு வீட்டிற்கு செல்ல தயாரானார்கள்.

 நேத்ரா  தன் அறையில் இருந்தபடி ஜன்னல் வழியாக பார்த்தவளுக்கு பூரிப்பாய் இருந்தது. 

ரஞ்சித் அவசரமாய் தன் தங்கையின் காலேஜ் வாசலில் காரை நிறுத்த அவளோ அவனை முறைத்து விட்டு காரில் ஏறிச் சென்று பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். அவளை சமாதானம் செய்யும் பொருட்டு ஒரு ஐஸ்கிரீம் பார்லர் எதிரில் வண்டியை நிறுத்தினான்.  

அதை சற்றும்எதிர்பார்க்காத சரண்யா தன் அண்ணனை கட்டிக்கொண்டு ஐ லவ் யூ அண்ணா என்றாள்.

 அவனும் அவள் தலையை கோதி விட்டு கொண்டு லவ் யூ டூ சரண் என்றான். பின்பு இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு செல்ல மணி 6 ஆகியிருந்தது. வாசலிலே கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்த மீனாட்சியை பார்த்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இறங்கிச் சென்று தோப்புகரணம் போடுவது மாதிரி நடிக்கவும் மீனாட்சி அவர்களின் காதை திருகி விட்டு உள்ளே இழுத்துச் சென்று அவர்களை ரெடியாகி வரச் சொல்லிவிட்டு தன் கணவரின் பக்கம் திரும்பினார். 

அவரோ நான் எப்பவோ ரெடி என்பதுபோல உட்கார்ந்திருக்க அவரிடம் என்னங்க நாம இரண்டு நாள் அங்க  தங்கி விட்டு வரலாமா? என்றாள்.

 அவர் அதற்கு உன் இஷ்டம் என்று கூறவும் அதிர்ச்சியில் அவரை பார்த்து கண் சிமிட்டி விட ஒரு நிமிடம் அவர் ரோமியோ போலாகிவிட்டார்.

பின்பு அனைவரும் காரில் ஏறிக்கொள்ள ரஞ்சித் காரை ஓட்டிக் கொண்டே அம்மாவிடம் பேசிக் கொண்டே வர சரண்யா தன் அப்பாவிடம் தன் வீர பிரதாபங்களை பற்றிக் கூறிக் கொண்டே வந்தாள்

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கார் ஒரு வீட்டின் முன் நிற்க உள்ளே இருந்து கோதாவரி ஓடோடி வ  அவரின் அன்பு கணவர் சுப்பு அவர்களின் பிள்ளைகள் அஷ்வந்த்மீரா உடன் வந்தனர்.தன் தங்கையிடம் திரும்பி என்ன மீனாட்சி ஏன் இவ்வளவு நேரம் ஆச்சு நீங்க வர என்று வினவ அதற்குள் ரஞ்சித் என்ன பெரியம்மா இரண்டு நாள் இங்கு தானே இருக்க போறோம் என்று கூற அவர் அவன் முடியை கோதிவிட அந்த நேரம் பார்த்து சரண் தாங்க முடியல என்று கூற ஆமாம் என்று கூறிக்கொண்டு மீரா தன் தங்கையை உள்ளே அழைத்துச் சென்றாள். 

அதன் பின்பு வீடு களைகட்டத் தொடங்கியது.  

சமையலறையில் மீனாட்சியும் கோதாவரியும் பேசிக்கொண்டிருக்க தோட்டத்தில் இந்தியாவின் வேளாண்மையைப் பற்றி சுப்புவும் செழியனும் விவாதிக்க உள்ளே திருவிழாவிற்கான உடைகள் மற்றும் நகைகள் பற்றி   சரண்யாவும் மீராவும் பேசிக்கொண்டிருந்தனர்.  

அஷ்வந்த் ,ரஞ்சித்திடம் சென்று நாம் சிறிது நேரம் வெளியே சென்று வரலாமா என்று கேட்க அவனும் தலையை அசைத்துக்கொண்டே அவனுடன் சென்றான். 

போகும் வழி எல்லாம் கிண்டல் அடித்துக்  கொண்டே வந்த அஸ்வந்தை பார்த்து ரஞ்சித் அவனிடம் உனக்கு எப்ப அண்ணா கால் போட்டு என்று கேட்கவும் அவன் அவனிடம் திரும்பி,” ஒய் திஸ் கொலவெறி” என்று கூறும் போதே அவன் செல் அலறியது. அலைபேசியை எடுத்துப் பேசி அவன் முகம் பிரகாசித்ததை ரஞ்சித் கவனித்தான்.

Advertisement