Advertisement

அத்தியாயம் – 9

மறுநாள் காலை எழுந்த பிரபாகர் அவளோடு முகம் கொடுத்தே பேசவில்லை…. மகனை கையில் வைத்துக்கொண்டு ஹாலில் உட்கார்ந்து திலகாவோடும், சுதாகரோடும் பேசிக்கொண்டு இருந்தான்.

குளித்துவிட்டு வந்து அவன் சாப்பிட உட்காரவும், “பவித்ரா…” எனத் திலகா அழைக்க…. “அம்மா, அவ வேலையா இருப்பாநீங்களே எடுத்து வைங்க.” என்றான்.

திலகா அழைத்ததும் வந்த பவித்ரா, அவன் சொன்னதைக் கேட்டு முகம் வாடினாள். பிறகு சாப்பிட்டதும் வெளியே கிளம்பி சென்றுவிட்டான்.

காலை உணவு முடிந்ததும், தங்கள் அறைக்கு வந்த பவித்ரா குழந்தைக்கு உடலில் எண்ணெய் தேய்த்து உருவி விட்டவள், பின்னர்க் குளிக்க வைத்து அவனுக்கு உடைமாற்றி, பால் கொடுத்து உறங்க வைத்துவிட்டே வெளியில் வந்தாள்.

அப்போது ஹாலில் நிறையப் பேர் இருந்தனர். தேவிதான் அவர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அவருடைய உறவினர்கள் போலஎன நினைத்தவள், அப்போதுதான் வந்தவர்களை நன்றாகப் பார்த்தாள்.

அதில் இரண்டு தம்பதிகளை அவள் ஏற்கனவே பார்த்து இருக்கிறாள். அவர்கள் யாழினியை பெண் கேட்டு வந்திருந்தனர். அதோடு அவர்கள் வீட்டுப் பையனைத்தான் யாழினி இப்போது திருமணம் செய்திருக்கிறாள்.

யாழினியின் புகுந்த வீட்டினர், அதுதான் உபசரிப்புப் பலமாக இருக்கிறது என நினைத்தபடி சமையல் அறைக்குச் சென்றாள்.
இவள் போவதற்குள் சித்ராவும் திலகாவும் சேர்ந்து மதிய சமையலே முடித்து விட்டனர்.

இவ்வளவு சீக்கிரமாகவா என நினைத்தவள், அப்போதுதான் கவனித்தாள் சித்ரா தனித்தனியாக மூன்று அடுக்குகளில் சாப்பாடு கட்டுவதை.

யாருக்கு அத்தை?”

உன் வீட்டுகாரனுக்கு, என் வீட்டுக்காரருக்கு அப்புறம் சுதாகருக்கு.”

ஏன் எப்பவும் வீட்டுக்கு வந்து தான சாப்பிடுவாங்க?”

இன்னைக்கு வரமாட்டாங்க.”

ஏன்?” பவித்ரா கேட்க… “அது அப்படித்தான்.” என்றவர், உணவை கட்டி எடுத்து வைத்துவிட்டு, மீதி இருந்த பண்டங்களைப் பாத்திரத்தில் போட்டு ஓரமாக எடுத்து வைத்தார்.

இவ்வளவு கொஞ்சமா இருக்கு?”

இப்போ எல்லாம் மாறிடுச்சு பவித்ரா…. தேவி அக்கா அவங்களே சமையல் செஞ்சுப்பாங்க.” என்றார்.

பவித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை…. அவள் சமையல் அறையை ஒதுங்க வைக்கதிலகா பாத்திரம் கழுவினார்.

வேலை முடித்ததும் கீழே திலகாவின் அறைக்குள் சென்று உட்கார்ந்து விட்டனர். பவித்ரா சென்று தன் மகனை தூக்கிக் கொண்டு வந்தாள்.

அவனைத் தரையில் போர்வை விரித்துப் படுக்கப் போட்டுஅவன் கையைக் காலை அசைப்பதை மூவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் அசைவ சமையல் வாசனை மூக்கை துளைக்கதேவி வந்திருப்பவர்களுக்குச் சமைக்கிறார் எனப் புரிந்து கொண்டாள்.

அவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து சத்தமாகப் பேசி சிரித்தனர். அடுத்து சமையல் தயாரானதும், சாப்பிட அமர்ந்தவர்கள், வெகு நேரம் சென்றே அங்கிருந்து எழுந்தனர். திரும்ப மீண்டும் ஹாலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர்.

அந்த வீட்டில் மற்றவர்களும் இருக்கிறார்களே என்று எல்லாம் நினைக்கவில்லைஎதோ அவர்கள் மட்டும் இருப்பதாக நினைப்பு.

இவர்கள் மூவரும் சென்று சமையல் அறையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு வந்தனர்.

என்ன அத்தை இதெல்லாம்? யாரும் இவங்களைக் கேட்கிறது இல்லையா….”

உனக்குப் புரியலையா…. நாம எப்ப கேட்போன்னு தான் அவங்க காத்திருக்காங்க.”

எதுக்கு?”

அப்பதான உங்களுக்குப் பிடிக்கலையா.. வீட்டை விட்டு போங்கன்னு சொல்லத்தான். கம்பெனியிலும் அப்படித்தான். அடுத்து இங்க இருந்து கிளம்பி அங்கதான் போவாங்க.”

சித்ரா சொல்ல… “மெதுவா பேசு அவ வந்திட போறா…” என்றார் திலகா….

உங்க சிதம்பரம் மாமாவோட போறது போல அங்கயும் போய் அழிச்சாட்டியம் பண்றது. வியாபாரத்தில மூக்கை நுழைக்கப் பார்ப்பாங்க. அதனால இப்ப முக்கிய வேலைகள் எல்லாம் என் வீட்டுக்காரர், பிரபா, சுதாகரே பார்த்துப்பாங்க. சிதம்பரம் மாமாவை ரொம்ப விடுறது இல்லை.”

சிதம்பரம் மாமா இவங்க சொல்றது எல்லாம் கேட்பாரா என்ன?”

உனக்கு இந்தக் குடும்பத்தைப் பத்தி தெரியாது பவித்ரா. தேவி அக்கா கல்யாணம் பண்ணி வந்த புதுசுல…. அவங்க ஒன்னு விட்ட அண்ணன்னு ஒருத்தரை கூடிட்டு வந்து, நம்ம கம்பெனியில விட்டிருக்காங்க. கொஞ்ச நாள்லயே ஏகப்பட்ட சுரண்டல், அப்புறம் உன் மாமனார் அவர் அப்பாகிட்ட சொல்லி, சிதம்பரம் மாமாவை கூப்பிட்டு கண்டிச்சிருக்காங்க.”

சரி சரின்னு போனவர், வீட்டுக்குப் போய்ப் பொண்டாட்டி பேச்சு கேட்டுட்டு திரும்ப வந்து, சொத்தை பிரிச்சு கொடுங்க, நான் தனியா போறேன்னு நின்னாராம். அப்ப எங்களுக்குக் கல்யாணம் ஆகலை.”

அதெல்லாம் இப்ப பிரிக்க முடியாது. சின்னவனுக்கும் கல்யாணம் ஆகட்டும் பார்த்துக்கலாம்ன்னு மாமா சொல்லிட்டாராம். அதுக்குள்ள பெரிய தொகையைக் கையாடல் பண்ணி அவரு மாட்டிகிட்டாரு…. அதுக்கப்புறம் உன் மாமனாரே அவரை வெளியே விரட்டிட்டார். அது யார் தெரியுமாஅதுதான் யாழினியோட மாமனார்.”

பவித்ராவுக்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. இப்படி ஒரு குடும்பம் இந்த வீட்டிற்குள் நுழைய நாமும் காரணம் ஆகிவிட்டோமே என நினைத்தாள்.

ஏன் சோமசேகர் அவள் மீது கோபமாக இருக்கிறார் என இப்போது புரிந்தது. இனி புரிந்து என்ன பயன்?

இவங்களைப் பத்தி தெரிஞ்சுதான், பிரபா அவங்க யாழினியை பொண்ணு கேட்டு வரும் போதுபொண்ணு கொடுக்க மாட்டோம்ன்னு சொல்லி திருப்பி அனுப்பினான்.”

ஆனா ஏற்கனவே அவங்க யாழினியை கைக்குள்ள போட்டிருந்தது யாருக்கும் தெரியலை…. யாழினி அவங்க பக்கம் சாயத் தேவி அக்காவும் ஒரு காரணம். எதோ பொய்யா உங்க மாமனார் அவங்க அண்ணன் மேல பழி போட்டதா அவங்க யாழினியை நம்ப வச்சிருந்தாங்க.”
எப்பவும் அவங்க யாழினிகிட்ட தப்புத் தப்பத்தான் நம்ம வீட்டை பத்தி சொல்லித் தருவாங்க. எதோ அவங்க வீட்டுக்காரர் தான் உழைக்கிற மாதிரியும், பிரபா சும்மா அதிகாரம் பண்ற மாதிரியும்தான் சொல்றது. அதுதான் அவ பிரபாவை எடுத்து எரிஞ்சு பேசுற காரணம்.”

சிதம்பரம் மாமாவையும் நல்லா மூளை சலவை செஞ்சு வச்சிருக்காங்க. அவருக்கு ரெண்டுமே பொண்ணுங்க இல்லையாஅதனால நாம அவருக்குச் சரியான பங்கு கொடுக்காம ஏமத்திடுவோமாம்.”

அப்படி இப்படின்னு நிறையச் சொல்லி வச்சிருக்காங்க. அதனால இந்த வீட்டையும், அதே மாதிரி கம்பெனியில அதிகம் வருமானம் வர்றதையும் அவங்க எடுத்துக்கணும்ன்னு நினைக்கிறாங்க. அதுக்குத்தான் இதெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க.”

இப்படியெல்லாம் பண்ணா மட்டும்?” பவித்ரா கேட்க….

நாமலே முதல்ல சண்டையை ஆரம்பிச்சோம்ன்னு வை…. அதையே சாக்கா வச்சு சொத்தை பிரிச்சிட்டுப் போகத்தான். அதனால்தான் நானும் திலகா அக்காவும் எங்களால பிரச்சனை வந்துடக் கூடாதுன்னு கவனமா இருக்கோம்.”

சில நிமிடங்கள் அங்கே கனத்த அமைதி நிலவஇப்போது திலகா பேச்சை ஆரம்பித்தார்.

எஸ்.கே கம்பெனிஸ் ஒருநாள்ல உருவாகினது இல்லைமுதல்ல ஒரு பெரிய கடை மட்டும்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா தான் மத்த வியாபாரம் எல்லாம் ஆரம்பித்து, இந்த அளவுக்கு வளர்ந்திருக்கோம். இதுல எல்லோரோட உழைப்பும் இருக்கு.”

அப்ப எல்லாம் கடை பசங்க வீட்லதான் சாப்பிடுவாங்க. எத்ததனை பேறுக்கு சமையல் பண்ணி போட்டிருப்போம். உட்கார நேரம் இருக்காது. அப்புறம் நல்லா வளர்ந்த பிறகுதான் அவங்களுக்குத் தங்கிருந்த இடத்துலேயே தனியா சமைக்கவும் ஏற்பாடு பண்ணாங்க.”

உங்க மூன்னு மாமாவுமே உட்கார நேரம் இல்லாமசரியா நேரத்துக்கச் சாப்பிடமா தான் இதையெல்லாம் உருவாக்கினாங்க. இப்ப வேற யார் கையிலையோ கொடுத்து எல்லாத்தையும் அழிக்கப் பார்க்கிறாங்களேஇதெல்லாம் அந்தக் கடவுளுக்குக் கூடப் பொறுக்காது.”

திலகா சொல்வதைக் கேட்கும் போதேபவித்ராவுக்கு அவ்வளவு வருத்தமாக இருந்தது. மீண்டும் சித்ரா தொடர்ந்தார்.

நமக்கு ஒரு பையன்தான். அவங்க என்ன வேணுமோ எடுத்திட்டு போகட்டும், நீங்க டென்ஷன் ஆகாதீங்கன்னு சொன்னா என் வீட்டுக்காரர் கேட்டா தான….”

எவ்வளவு கஷ்ட்டப்பட்டு உருவாக்கினோம். அதை யாரோ வந்து அழிக்கிறதை பார்த்திட்டு இருக்கச் சொல்றியான்னு ஒரே கத்து. இப்படி டென்ஷன் ஆகியே உடம்பை கெடுத்து ஆபரேஷன் வரை கொண்டு போயிட்டார்..”

பிரபா ஒருநாள் இல்லைனாலும், கம்பெனியில போய் அங்க வேலை செய்றவங்களை அரட்டி உருட்றது.”

இங்க வீட்ல வந்து அதிகாரமா உட்கார்ந்துகிறது. இவங்க வந்திருக்கிறது தெரிஞ்சாலே நம்ம வீட்டு ஆளுங்க வீட்டுக்கு சாப்பிட கூட வரமாட்டாங்க. உங்க சின்ன மாமாவும் அங்கேயே சாப்டிட்டு கொஞ்ச நேரம் படுத்து எழுந்துப்பார்.”

ஐயோ ! ரொம்பப் பெரிய சிக்கலா இருக்கும் போலையே.. இதுல இருந்து எப்படி வெளிய வருவது எனப் பவித்ரா தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

சரி அவங்கவங்க ரூமுக்கு போங்க. நாம ரொம்ப நேரம் பேசிட்டு இருந்திட்டோம். இதுக்கே என்ன நினைச்சிட்டு இருக்காளோ…” திலகா சொன்னதும், அவரவர் அறைக்குச் சென்றனர்.
மாலை பவித்ரா வெளியே வந்த போது, அந்தக் கும்பல் அங்கு இல்லைஹப்பாடா என நினைத்தவள், சமையல் அறைக்குச் சென்றாள்.

சித்ரா அன்று வழக்கமான நேரத்திற்குக் கீழே வந்த போதுபவித்ரா எல்லாமே செய்து தயாராக எடுத்து வைத்திருந்தாள்.

டெய்லி இட்லியே கொடுத்தா.. மாமா எப்படிச் சாப்பிடுவாங்க. இன்னைக்கு எண்ணெய் இல்லாத சப்பாத்தியும், தேங்காய் போடாம காய்கறி குருமா பண்ணியிருக்கேன்.” என்றாள்.

நான் செஞ்சேன்னு மாமாகிட்ட சொல்லிடாதீங்க.” பவித்ரா சொல்லசித்ரா சிரித்தார்.

அன்று சோமசேகர் சாப்பிடும் போதுஆபரேஷன் பண்ணாலும் பண்ணேன், நீ என்னை ரொம்பக் காயப் போட்டுட்டடெய்லி இட்லி சாப்பிட்டு நாக்கே செத்து போச்சு. இன்னைக்குத் தான் வாயுக்கு ருசியா இருக்கு. இனிமே ஒருநாள் இட்லி பண்ணா ஒருநாள் சப்பாத்தி பண்ணு, ரொம்ப நல்லா இருக்கு.” அவர் சொல்ல

நான் செய்யலைஉங்க மருமகள் தான் செஞ்சா..” என்றார் சித்ரா.

சோமசேகர் பதில்சொல்லாமல் அமைதியாக இருக்க…. “உங்களுக்கு யார் மேலையோ இருக்கிற கோபத்தைப் பவித்ரா மேல காட்டுறது நியாயமா?” சித்ரா கேட்க….

பிரபா கூடத்தான் அவ மேல கோபமா இருந்தான்.”

அப்படின்னு உங்ககிட்ட அவன் சொன்னான்னா…. முதல்ல கோபமாத்தான் இருந்தான். ஆனா அதுக்காக எப்பவும் பொண்டாட்டி மேல கோபமா இருப்பானா என்ன?”

அப்புறம் ஏன் பொண்டாட்டியை போய்க் கூப்பிடாம இருந்தான்.”

இந்த வீட்டு சூழ்நிலை போற மாதிரியா இருந்துச்சு. அவளாவது அங்க நிம்மதியா இருக்கட்டும்ன்னு நினைச்சிருக்கலாம்.”

உங்களுக்கு உங்க அண்ணன் குடும்பத்தைப் பத்தி தெரியாதா….”

சித்ரா சொன்னதற்கு அப்போது சோமசேகர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. சித்ராவும் மேலும் அதைபத்தி பேசாமல் விட்டுவிட்டார்.

இரவு பிரபாகர் சாப்பிடும் போது, கீழே வந்த சித்ராபவித்ரா உங்க மாமா நீ செஞ்ச சப்பாத்தியும் குருமாவும் சாப்டிட்டு ரொம்பப் பாராட்டினார். அவருக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வேணுமாம்.” எனச் சொல்ல…. பவித்ரா மகிழ்ந்ததை விடப் பிரபாகர் மிகவும் மகிழ்ந்து போய் விட்டான்.

சித்ரா உள்ளே சென்றதும்எனக்கும் அதேதான் போலரொம்ப நல்லா இருக்கு பவி.” அவன் சொல்ல….

உங்க அப்பா சித்தப்பா எல்லோரையும் பார்த்தா பயமாயிருக்குநீங்க இப்பவே கண்ட்ரோல்லா இருங்க.” அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவன், “இன்னைக்கு ஸ்ரீராம் சீக்கிரம் தூங்கிட்டான்.” என்றான்.

ஆமாம். அவன் சாயங்காலம் தூங்கலை அதுதான்.”

பிரபாகர் கதவு எல்லாம் சரியாகப் பூட்டி இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு வந்து படுத்தவன், பக்கத்தில் படுத்திருந்த மனைவியைத் தன் பக்கம் மெல் திருப்ப, பவித்ரா அழுது கொண்டிருந்தாள்.

இன்னைக்கு என்னடி ஆச்சு?” பிரபாகர் சலிப்பாகக் கேட்க….

நான் உங்ககிட்ட வேலைதான கேட்டேன். உங்களை யாரு என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா?”

திரும்ப ஆரம்பிச்சிட்டா என்பது போலப் பிரபாகர் அவளை நொந்து போய்ப் பார்க்க….
இப்ப என்னால தான் இவ்வளவு பிரச்சனையும்.” எனப் பவித்ரா முடிக்க…. அவன் அவளைத் திகைத்துப் போய்ப் பார்த்தான்.

இன்னைக்கு வந்த கும்பலை சொல்றியாஅது பார்த்துக்கலாம் விடு.” பிரபாகர் சொன்னதும், எழுந்து உட்கார்ந்த பவித்ராநான் ஏன் அன்னைக்கு அப்படிப் பண்ணேன் தெரியுமா…” என எதோ சொல்ல வர….

பவித்ரா, நானே இப்ப நீ இங்க வந்ததும்தான் நிம்மதியா இருக்கேன். ப்ளீஸ் திரும்ப அதை ஆரம்பிக்காத. நமக்குக் கல்யாணம் ஆகி மூன்னு மாசம் தான்டி சேர்ந்தே இருந்திருக்கோம். ஒரு வருஷம் ஆச்சு. என்னை ரொம்பச் சோதிக்காத பவி. ஸ்ரீராம் வேற எழுந்திட போறான்.” என்றவன், மனைவியை ஆசையாகத் தழுவ….

பவித்ராவும் மற்றதை விட்டு கணவனோடு கூடலில் சங்கமித்தாள். ஆனாலும் மனதின் ஒருபக்கம், இதை எப்படிச் சரி செய்வது என்றே ஓடிக்கொண்டு இருந்தது.












Advertisement