Advertisement

அத்தியாயம் – 8

பெயர் சூட்டு விழா முடிந்து, இவர்கள் வீடு போய்ச் சேர்ந்த போது, மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. கீழே ஹாலில் தேவியோடு வசுந்தராவும் தர்ஷினியும் இருந்தனர்.

தேவி பவித்ராவையே முறைத்து பார்த்துக் கொண்டிருக்க…. அவள் அவரைக் கண்டுகொள்ளாமல்தங்கள் அறைக்குள்
சென்று உறங்கிக் கொண்டிருந்த மகனை கட்டிலில் படுக்க வைத்தாள்.

வெளியே யாருடனோ பேசிவிட்டுத் தாமதமாக வந்த பிரபாகர்சாப்பாடு அனுப்பினேனேசாப்டீங்களா சித்தி…” என்றதற்குத் தேவி பதில் சொல்லாமல் இருக்க….. சித்ராவோ இல்லை என்பதாகத் தலையசைத்தார்.

ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க? எங்க சித்தப்பாவும் காமினியும்?” என்றவன், மாடிக்கு சென்று அவர்கள் இருவரையும் அழைத்து வந்தான்.

எங்க பவித்ரா?” எனக் கேட்டவன், தங்கள் அறைக்குச் சென்றுபவித்ரா, வா வந்து சாப்பாடு எடுத்து வை.” என்றதும், பவித்ரா திரும்பி அவனைக் கோபமாகப் பார்க்க….பிரபாகர் அறைக்குள் வந்தான்.

என்ன சாப்பாடு எடுத்து வைன்னு சொன்னா முறைக்கிற?”

பவித்ரா பதில் சொல்லாமல் மெளனமாக நிற்க…. “இங்க பாரு உன்னைத் தினமும் அவங்களுக்குச் சாப்பாடு போடுன்னு சொல்லப் போறது இல்லை. இன்னைக்கு நம்ம மகனுக்குத் தான பேர் வைக்கிற விழா நடந்தது. அவங்க மண்டபத்துக்கு வரலைஇங்கையாவது கவனிக்கனுமா வேண்டாமா….”

நான் அவங்களை வர வேண்டாம்ன்னு சொல்லலை…”
ஏன் உன் மேல தப்பு இல்லை?” என்று அவன் கேட்டதும் பவித்ரா முகம் மாற….

நல்லவேளை சித்தியும், சித்தப்பாவும் மண்டபத்துக்கு வரலை…. இன்னைக்கு நிறையப் பேர் என்கிட்டே கேட்ட மாதிரி, அவங்களைப் பார்த்து கேட்டிருந்தா அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?”

அவங்களுக்கு இந்த நிலைமை வர நீயும் ஒரு காரணம் பவித்ராஅது இல்லைன்னு மட்டும் சொல்லாத…”

நாம அடிச்சிகிட்டு ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம போகணும்ன்னுதான், இங்க ஒரு கூட்டம் அலையுது. அதுக்கு இடம் கொடுக்காத…. போய் ஒழுங்கா சாப்பாடு எடுத்து வை…”

பிரபாகர் குரலில் இருந்த கண்டிப்பு பவித்ராவுக்கு மறுக்கும் துணிவை தராததால்…. அவள் அறையை விட்டு வெளியே சென்றாள்.

அதுவரை சாப்பிடாமல் வீம்பாக அமர்ந்திருந்த தேவி, பிரபாகர் பவித்ராவையே பரிமாற அனுப்பவும், அவளை நக்கலாகப் பார்த்துக்கொண்டே எழுந்து வந்தார்.

பவித்ரா முகத்தில் எதையும் காட்டாமல் மூவருக்கும் வாழை இலையில் உணவு பரிமாறினாள். அவள் எல்லோருக்கும் முதல் தடவை பரிமாறி முடித்த போதுசரியாக ஸ்ரீராம் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு பசியால் அழுதான்.

பிரபாகர் அவனைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான். “நீ போய் அவனைப் பாரு. நான் இங்க பார்த்துகிறேன்.” எனத் திலகா சொல்ல…. “இல்லை இருக்கட்டும்.” எனப் பவித்ரா அங்கேயே இருந்தாள்.

பவித்ரா…” எனப் பிரபாகர் அழைத்தும், அவள் போகாமல் அங்கேயே நிற்க…. அவள் கையில் குழந்தையைக் கொடுத்தவன், அவளைப் பார்த்து முறைத்து விட்டு வெளியே சென்றுவிட்டான்.
ஸ்ரீராம் விடாமல் அழுகவும், பவித்ரா அவனோடு அறைக்குள் சென்றாள். மகனுக்குப் பால் கொடுத்து அவன் பசியாறியதும், அவன் உடைகளை மாற்றி, அவனை மீண்டும் உறங்க வைத்தாள். பிறகு அவள் புடவையை மாற்றிவிட்டு மகன் அருகில் கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள்.

மாலை அவள் மீண்டும் எழுந்த போதுநன்றாக இருட்டி விட்டது. பதறி எழுந்தவள், வேகமாகத் தலைவாரி முகம் கழுவிக்கொண்டு வெளியே சென்றாள்.

ஹாலில் திலகா மட்டுமே இருந்தார். “இன்னும் ஸ்ரீராம் எழுந்துக்கலையா…. ரெண்டு நாளைக்கு அலுப்பாதான் இருக்கும். மண்டபத்தில எல்லோரும் தூக்கி கையிலேயே வச்சிருந்தாங்க இல்லையா…” என்றார்.

அவர் சொன்னதற்கு அமோதிப்பாகத் தலையசைத்த பவித்ராஅத்தை, நைட்டுக்கு என்ன செய்யட்டும்?.” எனக் கேட்க….

பிரியாணியே நிறைய இருக்குஅதை வீணாக்க வேண்டாம். எல்லோரும் அதையே சாப்பிட்டுக்கலாம்.”

உன் சின்ன மாமாவுக்கு மட்டும் நைட்டுக்கு இட்லிதான். சித்ரா வந்து எதாவது சட்னி செய்வா…. அவர் ஹார்ட் ஆபரேஷன் பண்ணதுல இருந்து நைட் கம்மியாதான் சாப்பிடுவார்.” என்றார்.

பவித்ராவுக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. என்னது ஹார்ட் ஆபரேஷன் பண்ணாங்களா…. அதுதான் மாமா ரொம்ப மெலிஞ்சு போய் இருக்கார். அத்தையும் அந்தக் கவலையிலதான் சரியா சாப்பிடாம இப்படி ஆகிட்டாங்க போலஎன அவளாகவே ஊகித்துக் கொண்டாள்.

இந்த இருந்திருந்தா சித்ரா அத்தைக்கு உதவியா இருந்திருக்கலாமே என நினைத்தவள், இதைக் கூடத் தன்னிடம் சொல்லவில்லை…. தான் அந்த அளவுக்கு வேண்டாதவள் ஆகிவிட்டோம் என நினைத்தவளுக்கு மேலும் கோபமாக வந்தது.
மகன் எழுந்ததும், அவனுக்குப் பால் கொடுத்து முகம் துடைத்தவள், அவனைத் தூக்கிக்கொண்டு வந்து திலகாவிடம் கொடுத்தாள். அதற்காகவே ஆவலோடு காத்திருந்தவர், பேரனை கையில் வாங்கி ஆசையாக முத்தமிட்டார்.

சித்ரா இரவு எட்டு மணி போலத்தான் மாடியில் இருந்து இறங்கி வந்தார். அவரோடு வினீத்தும் வந்தான். இருவரும் சிறிது நேரம் ஸ்ரீராமை வைத்துக்கொண்டு இருந்தனர். பிறகு சித்ரா எழுந்து சமையல் அறைக்குச் செல்லபவித்ராவும் அவரோடு சென்றாள்.

குளிர் சாதனப் பெட்டியில் இருந்து சிறிது புதினா சட்டினியை எடுத்துக் கிண்ணத்தில் வைத்த சித்ரா, கொஞ்சம் பூண்டு சட்னியும் செய்தார்.

மாமாவுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ணாங்களாமேஎனக்கு இன்னைக்குத் தான் தெரியும். இப்ப நல்லா இருக்காங்களா? தொந்தரவு ஒன்னும் இல்லையே….” பவித்ரா மெல்ல கேட்க

இல்லைஇப்ப நல்லாத்தான் இருக்கார்.” என்ற சித்ரா மேலும் பேச்சை வளர்க்கவில்லைஅதனால் பவித்ராவும் அமைதியாக இருந்தாள்.

சட்னி செய்துவிட்டு சித்ரா இட்லி ஊற்றபவித்ரா ஒருபக்க அடுப்பில் பிரியாணி சுட வைத்தாள். அப்போது சுதாகரும் வந்துவிடமுதலில் அவனுக்கும் வினீத்துக்கும் சென்று உணவு பரிமாறினாள்.

சித்ராவும் அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டார். அவர்கள் சாப்பிடும் போதே வீட்டுக்கு வந்துவிட்ட சோமசேகர் கீழே நிற்காமல் மாடிக்கு சென்றுவிடவேகமாக உணவு அருந்தி முடித்த சித்ரா, அவருக்கு உணவை ஒரு ட்ரேயில் அடுக்கி மாடிக்குக் கொண்டு சென்றார்.

முன்பெல்லாம் சோமசேகர் உணவை கீழேயே முடித்துக்கொண்டே மாடிக்கு செல்வார். யாரும் மாடிக்குக் கொண்டு சென்றெல்லாம் சாப்பிடுவதில்லை.
சிறிது நேரத்தில் தேவியும் காமினியும் கீழே இறங்கி வந்தனர். அப்போது சரியாகச் சிதம்பரமும் வெளியே இருந்து வந்தார். அவர்கள் மூவரும் உட்கார்ந்து சாப்பிடபவித்ரா மகனை தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்துவிட்டாள்.

இரவு பிரபாகர் எப்போதையும் விடச் சற்று முன்பே வந்துவிட்டான். அவன் அறைக்குள் வந்த போது, பவித்ரா மகனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

முகம் கைகால் கழுவி உடை மாற்றி வந்தவன், பவித்ராவின் அருகே கட்டிலில் அமர்ந்துஸ்ரீராம்….” எனக் குரல் கொடுக்க…. தந்தையின் குரல் கேட்டதும், மகனும் பால் குடிப்பதை மறந்து தந்தையைப் பார்த்துச் சிரித்தான். பதிலுக்குப் பிரபாகர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி.

மகனின் முகத்தைத் தன் பக்கம் திருப்பிப் பவித்ரா பால் கொடுக்க முனைய…. பால் குடிப்பதும், தந்தையைப் பார்த்துச் சிரிப்பதுமாக மகன் இருந்தான்.

டேய் ! ஒழுங்கா குடி. இல்லைனாஉங்க அப்பாகிட்ட போ….” எனப் பவித்ரா அதட்ட….

நீ குடிடா செல்லம், அதுக்குள்ள அப்பா சாப்டிட்டு வந்திடுறேன்.” எனப் பிரபாகர் எழுந்து கொண்டான்.

அவன் உணவு மேஜையில் சென்று அமர…. திலகா மகனுக்குப் பரிமாற வந்தவர், “இன்னும் பவித்ராவும் சாப்பிடலை…” என்றார்.

அப்ப சரி, நான் அவளோட சேர்ந்து சாப்ட்டுகிறேன். நீங்க சாப்டீங்களா மா….”

நான் சாப்பிட்டேன்.” என்ற திலகா மருமகளிடம் சென்று பேரனை வாங்கியவர்பிரபா உனக்காகச் சாப்பிடாம இருக்கான். நீயும் போய் அவனோட சாப்பிடு. நான் இவனை இங்கயே வச்சிருக்கேன்.” என்றார்.

தன் ஆடைகளைத் திருத்திக்கொண்டு வெளியே வந்த பவித்ரா, தன் கணவனுக்கும், தனக்கும் உணவை இரண்டு தட்டுகளில் பரிமாறினாள்.

நீயேன் இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்த? குழந்தைக்கு வேற பால் கொடுக்கிற…. சரியா நேரத்துக்குச் சாப்பிடு.” பிரபாகர் சொல்லபவித்ரா பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கஅவளைக் கூர்மையாக ஒரு பார்வை பார்த்தவன், பிறகு சாப்பிடுவதில் கவனம் செலுத்தினான்.

அப்போது மாடியில் இருந்து இறங்கி வந்த சித்ரா அவர்களைக் கவனித்தார். ஆனால் எதுவும் பேசவில்லைநேராகச் சமையல் அறைக்குச் சென்றுவிட்டார்.

சாப்பிட்டதும் பிரபாகர் அறைக்குச் சென்று விட, அவனிடம் பேரனை கொடுத்து விட்டு திலகா வெளியே வந்தார். பவித்ரா சென்று பாத்திரம் கழுவநீயேன் இந்த நேரத்தில் தண்ணியில கை வைக்கிற சளி பிடிச்சிக்கப் போகுது.” திலகா சொல்லச் சொல்லபவித்ரா பதில் சொல்லாமல், வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அதைப் பார்த்து சித்ராவுக்கே ஒரு மாதிரி இருக்கபிரபாகர் வேறு அங்கு வந்துவிட்டான்.

திலகா மீண்டும் சொல்ல…. “அம்மா, அவ வீம்புக்கு பண்றா…. நீங்க ஏன் அவகிட்ட கெஞ்சுறீங்க? பேசாம போய்ப் படுங்க.” என்றவன், வேறு எதுவும் சொல்லாமல் திரும்ப அறைக்குள் சென்றுவிட்டான்.

தன் கணவருக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொண்டிருந்த சித்ராஉன்கிட்ட பிரபாகர் என்ன சொன்னானோ எனக்குத் தெரியாது. ஆனா இதுவரை அவன் உன்னை இங்க யார்கிட்டயும் விட்டுக் கொடுத்து பேசினது இல்லை.” என்றார்.

அதுதான் மொத்தமா என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாரேஅதுலேயே எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.” என்றாள் பவித்ரா கோபம் குறையாதவளாக….

நீயே யோசிச்சு பாரு அன்னைக்கு எல்லோரும் எவ்வளவு டென்ஷன்ல இருந்தாங்க. அப்பவே உன்னை எல்லோரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஏன் சுதாகர் கூட உன்னைத்தான் குறை சொன்னான். அதனாலதான் பிரபா உன்னைக் கொண்டு போய் உங்க வீட்ல விட்டுட்டு வந்திருப்பான்.”

உன்னை மத்தவங்க பேசுறதை கேட்டுட்டு இருந்திருக்கனும்ன்னு சொல்றியாஇல்லை உனக்குச் சப்போர்ட் பண்ணி பேசுற நிலை அப்ப இருந்ததா….”

யாழினியை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லிட்டு, உன்னையும் உங்க வீட்ல கொண்டு போய் விட்டான். ஆனா அதுக்குப் பிறகு நடந்தது உனக்குத் தெரியாது.”

உங்க வீட்டு பொண்ணு ஓடிப்போயிடுச்சாமேன்னு கேட்காத ஆள் இல்லைஅவங்களுக்கு வேற பதில் சொல்லணும். நாம சாதாரணக் குடும்பமா இருந்தா கூடப் பரவாயில்லையாருக்கும் தெரியாம இருந்திருக்கும்.”

ஊர்லையே பெரிய குடும்பம்நம்ம வீட்ல இப்படி ஒரு விஷயம் நடந்தா கேட்கவா வேண்ணும். கொஞ்ச நாள் உன்னோட ரெண்டு மாமனாரும் வெளிய போகாமலே இருந்தாங்க. வெளிய எல்லோரையும் பிரபா தான் சமாளிச்சான்.”

இங்க வீட்ல வேற தேவி அக்கா பிரச்சனை பண்ணிட்டே இருந்தாங்க. மகளை நினைச்சு ஒரே அழுகை. அப்புறம் உடம்பு சரியில்லைன்னு வேற படுத்திட்டாங்க.”

பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைனதும், சிதம்பரம் மாமா, மகள் மேல இருந்த கோபத்தில இருந்து இறங்கி வந்தார். அப்புறம் அவங்க நினைச்ச மாதிரி யாழினி இங்க வந்து போக ஆரம்பிச்சதும்தான், கொஞ்சம் சமாதானம் ஆனாங்க.”

யாழினியோட சேர்ந்து பிரச்சனையும் வர ஆரம்பிச்சது. அதை நினைச்சு டென்ஷன் ஆகியே உன் சின்ன மாமனார் உடம்பை கெடுத்துகிட்டார். அடுத்து அவருக்கு ஆபரேஷன். அவர் வேலைகளையும் பிரபா தான் பார்த்தான். இதுல அவனுக்கு ஆஸ்பத்திரிக்கு அலையிற வேலை வேற….”
 
நீ இருந்தாலும் இல்லைனாலும், யாழினி அவ நினைச்சதை நடத்தி இருப்பாஆனா அதை அவ பெத்தவங்க ஒத்துப்பாங்களா…. அவங்க உன் மேலதான் பழி போட்டாங்க. உன்னை எப்பவும் திட்டிட்டே இருப்பாங்க. இதுல நீயும் இங்க இருந்திருந்தா நிம்மதியா இருந்திருப்பியா சொல்லு…. அதுக்குத்தான் பிரபா உன்னை அங்கேயே விட்டு வச்சிருந்தான்.”

உன்மேலும் தவறு இருக்குதானே…. அவ்வளவு பெரிய முடிவை, நீ மட்டும் எப்படி எடுக்கலாம்? அதனால எல்லோரும் எவ்வளவு கஷ்ட்டப்பட்டோம் தெரியுமா…. இன்னும் அடுத்து என்ன நடக்குமோன்னு எல்லோரும் கவலையிலதான் இருக்காங்க.”

இதுல நீ வேற அவன் பொறுமையைச் சோத்திக்கிற மாதிரி நடந்துக்கிற…. பார்த்து இருந்துக்கோநான் அவ்வளவுதான் சொல்வேன்.”

நான் இதை உன்கிட்ட அப்பவே சொல்லி இருப்பேன். நாம ரெண்டு பேரும் பேசுறதை பார்த்தா கூடத் தேவி அக்கா எதாவது ஒரு பிரச்சனையைக் கிளப்புவாங்க. அதனாலதான் அப்ப பேசலை…..”

சித்ரா சொல்லிவிட்டு மாடிக்கு சென்று விட…. இந்த யாழினி புதுசா என்ன பிரச்சனை கொண்டு வந்தாஎனப் பவித்ரா அதையே யோசித்துக்கொண்டு இருந்தாள்.

இவளுக்குத் தேவையில்லாம உதவி பண்ணி பெரிய சிக்கலாகிடுச்சு போலையே என நினைத்தவளுக்கு, பிரபாகர் இருக்கும் அறைக்குச் செல்லவே பயமாக இருந்தது. அவனை வேறு நன்றாக வெறுப்பேற்றி இருந்தாள்.

அவள் அறைக்குள் சென்ற போதுஸ்ரீராம் தொட்டிலில் உறங்கி கொண்டு இருந்தான். பிரபாகர் கட்டிலில் படுத்து இருந்தான். பவித்ராவும் சென்று கட்டிலில் மறுபக்கம் அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.


Advertisement