Advertisement

சுடும் நிலவு



அத்தியாயம் – 3

பவித்ரா தன் புகுந்த வீட்டின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏற்ப தானும் பழகிக்கொண்டாள். காலையில் எழுந்து தங்கள் அறையைச் சுத்தம் செய்துவிட்டு, அப்படியே குளித்து விட்டு வந்து விடுவாள். பிறகு சமையல் அறைக்குச் சென்று உதவுவாள்.

காலையில் எல்லோருக்கும் டிபன்தான். மதியம் எல்லோருமே வீட்டிற்கு வந்து சாப்பிடுவார்கள். சுதாகரும், யாழினியும் கல்லூரி உணவகத்திலும், காமினியும், வினீத்தும் படிக்கும் பள்ளியில், அங்கேயே அவர்களுக்கு மதிய உணவு வழங்குவதால்யாருக்கும் சாப்பாடு கட்டும் வேலை இல்லை.

சுதாகர் முதுகலைப் படிப்பின் இறுதி ஆண்டிலும், யாழினி இன்ஜினியரிங் இறுதி ஆண்டிலும், காமினி பன்னிரெண்டாம் வகுப்பிலும், வினீத் பத்தாம் வகுப்பிலும் இருந்தனர்.

காலையில் கண்டிப்பாக இட்லி இருக்கும். அதோடு பொங்கல், பூரி, அல்லது தோசை செய்வார்கள். நிறையப் பேர் என்பதால்இரண்டு வகையாகப் பிரித்துச் செய்யும் போது.. எளிதாக இருக்கும்.

காலை உணவு முடிந்து அனைவரும் வேலைக்குக் கிளம்பிய பிறகு, ஒரு பெண் வந்து பாத்திரம் விளக்கி, வீட்டை பெருக்கி துடைத்து விட்டு செல்வாள்.

பதினோரு மணிக்கு மேல்தான் மதிய சமையல் ஆரம்பிப்பார்கள். ஒருநாள் திலகா, மறுநாள் தேவி, அதற்கு அடுத்த நாள் சித்ரா என ஒருவர் நின்று சமைக்கமற்றவர்கள் காய் நறுக்கி தருவது, சமைத்த பாத்திரத்தை கழுவி வைப்பது என உதவுவார்கள். அதனால் வேலை சீக்கிரமே முடிந்து விடும்.

எந்த மாமியார் நின்று சமைத்தாலும், பவித்ரா அவர்கள் உடன் இருந்து, அவர்கள் சமைப்பதை பார்த்துக்கொண்டே அவர்களுக்குத் தேவையானதை எடுத்து கொடுத்து உதவுவாள்.

முதலில் அவள் வேலை செய்ய வந்த போது, “நாங்க பார்த்துக்கிறோம் நீ போ…” என வசுந்தரா அவளை விலக்கி வைக்கவே பார்த்தார்.
 அதற்குத் தேவி வேறு ஒத்து ஊததிலகா என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார்

யார் வீட்டில்? யார் யாரை விலக்குவது என நினைத்த சித்ரா, “மருமகள் வந்த பிறகும் மாமியார் நாங்களே எல்லா வேலையும் பார்க்கனுமா…. நீயும் பாரு பவித்ரா.” என்றார். அதுதான் சரியென்று திலகாவும் சொன்னார்.

சித்ராவும், பவித்ராவும் பேசிக்கொண்டே வேலை செய்வார்கள். அதனால் வேலை செய்யும் அலுப்பே தெரியாது.

முன்னாடி எல்லாம் வீட்டு வேலைக்கு ஆள் இல்லை…. உங்க மாமாங்க எல்லாம்நீங்க பொம்பளைங்க வீட்ல சும்மாதான இருக்கீங்க.. நீங்களே பண்ணுங்கன்னு சொல்லிடுவாங்க. பிரபாதான் பிறகு சொல்லி…. எதோ ஒரு நேரத்துக்காவது ஆள் வச்சு கொடுத்தான்.” சித்ரா சொல்ல
நம்ம ஆளு பரவாயில்லை.. என நினைத்துக்கொண்டாள் பவித்ரா.

பவித்ரா சோம்பி இருந்து பார்க்கவே முடியாது. எதாவது அவளே இழுத்து போட்டு செய்வாள். பூஜை அறையைத் தினமும் துடைத்து, சாமி படத்துக்குப் பூ போட்டு விளக்கு ஏற்றுவாள். அவர்கள் வீட்டில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மட்டும் தான் பூஜை செய்வது வழக்கம், பவித்ரா வந்துதான் தினமும் செய்கிறாள்.
அதேபோல் அவள் மற்றவர்கள் வேலையையும் இழுத்து போட்டு செய்வதைப் பார்த்த சித்ராஇன்னைக்கு உன்னால முடியுது செய்றநாளைக்கு முடியாம நீ செய்யாம விட்டுட்டா வீனா பிரச்சனை வரும். அவங்கவங்க வேலை அவங்கவங்க பார்க்கட்டும் விட்டுடு.” என்றார்.

அதிலிருந்து அதேபோல் பவித்ரா நடந்துகொண்டாள். வீட்டு அலங்காரம், அவளுக்கு மிகவும் பிடித்தமான வேலைஅதில் யாரும் அக்கறை காட்டாததைப் பார்த்து, அவளே செய்ய ஆரம்பித்தாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு கட்டிய வீடுதான். அதனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும். அவ்வளவு செலவு செய்து கட்டிய வீட்டை, யாரும் பராமரிக்காததைப் பார்த்து பவித்ராவுக்கு வருத்தமாக இருக்கும்.

என்னங்க ஜன்னலுக்கு ஸ்க்ரீன் எல்லாம் இப்ப அழகழகான டிஸைன்ல வருது. அதே போலச் சோபா கவர், டைனிங் டேபிள் கவர் எல்லாம் வாங்கணும்.” பவித்ரா பிரபாகரிடம் கேட்க….

உனக்கு என்ன வேண்ணுமோ சித்தியை கூடிட்டு போய் வாங்கிக்கோ…. நமக்குத் தெரிஞ்ச பெரிய கடை இருக்குநீங்க போய் வாங்கிட்டு, பில்லை எனக்கு அனுப்ப சொல்லிடுங்க.” என்றதும், சித்ராவை அழைத்துக்கொண்டு சந்தோஷமாகக் கடைக்குக் கிளம்பி விட்டாள்.

பிரபாகரிடம் சொன்னது போக.. மேலும் சிலது வாங்கினாள். வாசலில் தொங்க விட அழகான தோரணங்கள், நடுவில் கடிகாரமும் அதைச் சுற்றி நிறையப் புகைப்படங்கள் வைப்பது போன்ற போட்டோ ப்ரேம் என்று விதவிதமாக வாங்கினாள்.

அவள் வாங்குவதைப் பார்த்த சித்ராபவித்ரா, உன் ப்ருஷன் ஒரு பைசா விடாம கணக்கு கேட்பான். நீ முதல் தடவையே இவ்வளவு செலவு வச்சாஅடுத்தத் தடவை உன்னைக் கடைக்கு அனுப்பமாட்டான், பார்த்துக்கோ…” என எச்சரிக்க

பவித்ரா அவர் எதோ விளையாட்டுக்கு சொல்கிறார் என்று நினைத்தாள். ஆனால் உண்மையிலேயே பிரபாகர் காசு விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவன் என விரைவிலேயே புரிந்து கொண்டாள்.

அன்று மதியம் மூன்று மணிபோல் வீட்டுக்கு சாப்பிட வந்த பிரபாகர்அப்படி என்ன வாங்கின ? காட்டு…” என்றதற்கு, நைட் சொல்றேன் எனப் பவித்ரா சமாளித்தாள்.

மாலை காமினியும், வினீத்தும் வந்ததும், மூவரும் சேர்ந்து வாங்கிய பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்தனர். ஹாலில் இருந்த ஜன்னலுக்கு அலங்கார திரைசீலைகள் மாட்டி, சோபாவை துடைத்து அதன் மேல் வண்ண துணிகளை விரித்தனர்.

உணவு அறைக்கும் ஹாலுக்கும் நடுவில் இருந்த அலங்கார வளைவில்அழகான பல வண்ணங்களில் கோர்த்த முத்துச் சரத்தை தொங்க விட்டனர். மேஜை மீதும் புதிய விரிப்புகள் விரித்தனர்.

ஹாலில் கிடந்த திவானுக்கு எம்ப்ராய்டரி செய்த விரிப்பையும், அதன் மேல் போட உருளை தலையணையும் வாங்கி இருந்தாள்.

போட்டோ ப்ரேமில் புகைப்படங்களை வைத்தாள். பிரபாகரும் அவளும் சேர்ந்து எடுத்த போட்டோ கூட அதில் இருந்தது. அதை ஹாலில் நன்றாகத் தெரியும் இடத்தில் மாட்டினாள்.

இருள் சூழ்ந்த நேரத்தில் விளக்கை போட்டதும், வீடு பளிச்சென்று ஒளிர்ந்தது. சித்ரா பாராட்ட…. திலகா கூட மருமகளை மெச்சுதலாகப் பார்த்தார்.

மாடியில் ஒரு தனிப்படை ரகசிய ஆலோசனையில் இருந்தது. அது வேறு யாரும் இல்லைதேவி, வசுந்தரா, யாழினி மற்றும் தர்ஷினிதான்.
இதெல்லம் வெட்டி வேலைஅத்தானை கைக்குள்ள போட்டுக்கத்தான் இப்படிச் செய்றா…” தர்ஷினி ஆரம்பிக்க….

இவதான் இந்த வீட்டையே தூக்கி நிறுத்துற மாதிரி ரொம்பப் பில்டப் கொடுக்கிறா…” என்றார் தேவி

இல்லாத குடும்பத்தில இருந்து வந்தவ தானஅதுதான் காசை எடுத்து வாரி இறைக்கிறாயாரு வீட்டு காசு?…” என வசுந்தரா மெதுவாக நஞ்சை விதைத்தார்.

வசுந்தரா நேரடியாக எதிலுமே தான் மாட்டிக்கொள்வது போல் பேசமாட்டார். இது போல ஜாடையாகப் பேசிவிட்டு அவர் போய் விடுவார். இவர் பேசியதை பேசி மற்றவர்கள் தான் மாட்டிக்கொள்வார்கள். சித்ரா ஒருவர்தான் அவரிடம் கவனமாக இருப்பார்.

மாலை வீட்டுக்கு வந்த சுதாகர்இப்பதான் வீட்டுக்கு ஒரு ரிச் லுக் வந்திருக்கு….சூப்பர் அண்ணி…” எனப் பாராட்டபவித்ராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பவித்ராவின் சின்ன மாமனார்கள் இருவரும் பாராட்டவில்லை.. அதே சமயம் இதெல்லாம் எதற்கு என்றும் கேட்கவில்லை…. அவர்கள் பாட்டுக்கு சாப்பிட்டு அமைதியாக மாடிக்கு சென்றுவிட்டனர்.

இரவு கடைசியாக வீட்டுக்கு வந்த பிரபாகர். வீட்டை பார்த்ததும், பெரிதாகப் புன்னகைத்தான். அதைப் பார்த்து பவித்ராவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

என்னங்க நல்லாயிருக்கா…” அவனுக்கு உணவை எடுத்து வைத்துக்கொண்டே பவித்ரா ஆவலாகக் கேட்க….

நல்லா இருக்கு….” என்றவன், சாப்பிடுவதில் கவனம் செலுத்தமேலும் அவன் எதுவும் சொல்லாததில்….
பவித்ராவுக்குச் சொத்தென்று ஆகிவிட்டது.

சாப்பிட்டு முடித்ததும் ஹாலுக்கு வந்து, அவன் வழக்கமாக உட்காரும் இடத்தில் உட்கார்ந்து, அன்றைய வரவு செலவுகளை எழுதும் புத்தகத்தைக் கையில் எடுத்தவன், பவித்ராவை பார்த்துஇன்னைக்கு எவ்வளவு செலவு ஆச்சு? பில் எடுத்திட்டு வா…” என்றான்.

நான் சொன்னேன்ல…” என்பது போல் சித்ரா பவித்ராவை பார்த்து சிரித்தார்.

தங்கள் அறைக்குச் சென்று பில்லை எடுத்துக்கொண்டு வந்தவள், “என்னங்க அந்தக் கடையில நிறையத் தள்ளுபடி போட்டிருந்தாங்கஅதனால எல்லாம் விலை கம்மிதான்.” என்றாள்.

நீ பில்லை கொடு நான் பார்த்துக்கிறேன்.” பிரபாகர் பிடிகொடுக்காமல் சொல்ல

அவங்க இன்னும் உங்களுக்குப் பில் அனுப்பலையா? எஸ்.கே வீட்டுக்காரங்கன்னு சொன்னதும், எங்களுக்கு அவ்வளவு மரியாதை…” பவித்ரா சிரித்துக்கொண்டே சொல்ல…. பிரபாகர் பதில் சொல்லாமல், பில்லுக்காகக் கையை மட்டும் நீட்டினான்.

ஐயோ ! இன்னைக்கு என்ன ஆகப்போகுதோ தெரியலையே?… எல்லோரும் வேற இருக்காங்களே…. இவங்க முன்னாடியே திட்டிடிடுவாரோஎனப் பவித்ரா பயந்து கொண்டே இருந்தாள்.

சுருட்டி இருந்த பில்லைவிரிக்க விரிக்கநீளமாகச் சென்று கொண்டே இருந்தது. அவளை ஒருமாதிரி பார்த்தவன், மொத்த தொகையை முதலில் பார்த்தான்.

மொத்த தொகையைப் பார்த்த பின்னும், அவன் எதுவும் சொல்லவில்லை. அவன் முகத்தில் இருந்து அதிகமா கம்மியா என ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை….

தனித்தனியாக ஒவ்வொரு பொருளையும் அதன் விலையையும் ஆராய்ந்தான். இடத்தில் இருந்து எழுந்து சென்று பார்த்தான். “இது என்ன?” எனப் பட்டியலை காட்டி பவித்ராவிடம் கேட்க… “அது மாடியில இருக்கிற ரூம்களுக்கு வாங்கின ஸ்க்ரீன் துணிங்க…” என்றதும், மாடிக்கே சென்று அதையும் பார்த்து விட்டு வந்தான்.

மொத்தமாக எத்தனை பொருட்கள் இருக்கிறது என்று எண்ணியவன், அத்தனையும் வீட்டிற்க்கு வந்துவிட்டதா என்று பார்க்க…. பில்லில் இருந்த ஒரு பொருள் குறைந்தது.

அந்தப் பில்லில் எழுதியிருந்தது வேறு புரியவில்லை… “என்னது இது?” பிரபாகர் கேட்கபவித்ரா முழித்தாள்.

கடையிலேயே எண்ணி பார்க்க மாட்டியாஅவன் கொடுத்தா அப்படியே வாங்கிட்டு வந்திடுவியா?”

எதை விட்டோம் எனப் பவித்ரா யோசிக்கும் போதே…. “தரைக்குப் போட மிதியடி வாங்கினியே பவித்ரா….” எனச் சித்ரா எடுத்துக்கொடுக்கபிறகுதான் அவளுக்கு நினைவு வந்தது. அதை எடுத்து வந்து காட்டினாள்.

ம்ம்.. சரி. முதல் தடவை அதனால நிறைய வாங்கியிருக்கப் பரவாயில்லை.” என்றதும்தான் பவித்ராவுக்கு மூச்சே வந்தது.
விட்டால் போதும் என அவள் சமையல் அறைக்குச் செல்ல….
அவள் பின்னே உள்ளே வந்த சித்ராஇனி நீ ஷாப்பிங் போவ…” எனக் கேலியாகக் கேட்க….

அம்மாடியோ ! நான் போக மாட்டேன் பா…” பவித்ரா கண்களை பெரிதாக விரித்து சொல்ல…
“அது ! அந்த பயம் இருக்கட்டும். அவன் கொடுத்த கொடைச்சல்ல… நீயே வழிக்கு வந்த பார்த்தியா… அதுதான் பிரபா…” சித்ரா சிரித்துக்கொண்டே சொல்ல… 
“ரொம்ப பெருமைதான்.” என்றாள் பவித்ரா நொந்து போய். பிறகு இருவருமே வாய்விட்டு சிரித்தனர்.      

Advertisement