Advertisement

சுடும் நிலவு

அத்தியாயம் – 2

திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. திருமணச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டிலேயே பார்த்துக் கொண்டனர். மண்டபம் சாப்பாடு எல்லாம் அவர்கள் செலவு தான். மாப்பிள்ளை வீட்டில் இரண்டாயிரம் பேருக்கு மேல் திருமணத்திற்கு வந்திருந்தனர். அதே பவித்ரா வீட்டில் நூறு பேருக்குள் தான்.

வீட்டை தனது மூத்த மருமகனுக்கே கனகா எழுதி கொடுத்து இருந்தார். அதனால் அவர் காலம் வரை அவர் அந்த வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம். அதில் வந்த பணத்தில் பவித்ராவுக்குச் சில நகைகள், சில புடவைகள் மட்டும் வாங்கி இருந்தனர். வங்கியில் கனகா பேரில் இருந்து பணத்தைப் பிரபாகர் எடுக்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டான்.

திருமணதிற்கு வந்தவர்கள் யாரும் ஏன் வசதி குறைவான வீட்டில் பெண் எடுத்தீர்கள் என்று எல்லாம் கேட்கவில்லை…. பெண் அழகாக இருப்பதால்எடுத்திருப்பார்கள் எனப் புரிந்து கொண்டனர். அதோடு இவர்கள் வீட்டில் இல்லாத பணமா….

திருமணதிற்கு வந்த உறவினர்களை விடத் தொழில்முறை நண்பர்களே அதிகம். அதனால் பிரபாகருக்கு அவர்கள் அனைவரையும் தெரிந்து இருந்தது. அவர்கள் வருவதும், அவனோடு பேசுவதும், புகைப்படம் எடுப்பதும், என மதியம் வரை சென்று விட்டது.

கடைசியாகக் குடும்பப் படம் எடுத்தனர். அப்போதுதான் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பவித்ரா பார்க்கிறாள். பிரபாகரின் தம்பி அனைவரையும் அறிமுகம் செய்தான்.

அண்ணி, நான் சுதாகரன், உங்க கொழுந்தன். உங்க மெயின் மாமியார் யாருன்னு தெரியும் இல்லையாஅதோ எங்க அம்மா திலகாஅவங்க பக்கத்தில இருக்கிறவங்க தேவி சித்தி, அவங்க பக்கத்தில இருக்கிறவர் சிதம்பரம் சித்தப்பா, அவருக்குப் பக்கத்தில இருக்கிறது சின்னச் சித்தப்பா சோமு, அதுக்குப் பக்கத்தில இருக்கிறவங்க சித்ரா சித்தி, அதுக்கு அடுத்து இருக்கிறது வசுந்தரா அத்தை, அவங்க பக்கத்தில பாஸ்கர் மாமா.”

பின்னாடி இருக்கிறது எல்லாம் நம்ம வீட்டு வானரப்படை…. இதுங்க ரெண்டும் சிதம்பரம் சித்தப்பா பொண்ணுங்க யாழினி, காமினி. அடுத்து இவன் வினீத் சின்னச் சித்தப்பா பையன். அவர் வசுந்தரா அத்தை பையன் மோகன், அவர் பக்கத்தில வாணி அக்கா அவங்க பக்கத்தில தர்ஷினி, வசுந்தரா அத்தையோட ரெண்டாவது பொண்ணுஎன்று இதுவரை சத்தமாகப் பேசியவன்இதைதான் அண்ணன் தலையில கட்டணும்ன்னு நினைச்சாங்க. நல்லவேளை அண்ணா தப்பிச்சிட்டார்.” என்றான் கிசுகிசுப்பாக.

…” என்ற பவித்ராவின் பார்வை தர்ஷினியிடம் செல்ல…. அவளும் அப்போது இவளைத்தான் முறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

என்ன டா உங்க அண்ணிக்கு எல்லோரையும் அறிமுகம் செஞ்சாச்சா?” முக்கியப் பிரமுகரை வழியனுப்ப சென்றுவிட்டு வந்த
பிரபாகர் கேட்கசுதாகர் சிரித்தான்.

சரி இந்தப்பக்கம் வாபோட்டோ எடுப்போம்.” என்றவன், பவித்ராவின் அருகில் சென்று நின்றான். அவனுக்காகத்தான் அனைவரும் காத்திருந்தனர்.

மாலை நான்கு மணிக்கு மேலேதான் நல்லநேரம் என்பதால்அதுவரை மண்டபத்திலேயே இருந்தனர். அதன்பிறகே புதுமணத் தம்பதிகளை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை வீடு சென்றனர். பவித்ராவுக்குத் துணையாகத் தாமரையும், சரணும் அவர்களோடு பெண் வீட்டு சார்பாக இன்னும் சில உறவினர்களும் உடன் வந்தனர்.
அவர்களது பெரிய வீட்டை பார்த்துப் பவித்ரா திகைத்தாள். நாத்தனார் முறைக்கு யாழினி வந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள். சாமி அறையில் விளக்கு ஏற்றியதும், தன் தந்தை படத்துக்கு முன்பு மனைவியோடு பிரபாகர் விழுந்து வணங்கினான்.

ஹாலில் சிவப்புக் கம்பளம் விரித்து அதில் பவித்ராவோடு அவள் அக்காவும் இன்னும் சிலரும் உட்கார்ந்து இருக்கபிரபாகர் சரணோடு சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தான்.

எல்லோருக்கும் ஸ்வீட் மிச்ஷருடன் காபி வந்தது. அதை அருந்தி முடித்ததும், பவித்ராவின் உறவினர்கள் கிளம்பி விடஅவள் அக்கா, அக்கா வீட்டுகாரர் மட்டும் இருந்தனர். அண்ணி அண்ணியென்று காமினி பவித்ராவோடு ஒட்டிக்கொண்டு இருந்தாள். யாழினியும், தர்ஷினியும் எப்போதும் ஒன்றாகவே இருந்தனர்.

வீட்டு ஆட்கள் ஆகட்டும், வேலை ஆட்கள் ஆகட்டும் எதற்குமே பிரபாகரிடம் தான் வந்து நின்றனர். பிறகு அவன் சொல்வது போல் செய்தனர்.
இரவு உணவு முடிந்ததும், பவித்ராவிடம் வந்த சித்ரா அவளை அழைத்துக்கொண்டு போய்ப் பிரபாகர் அறையில் விட்டார். கீழ் தளத்தில் தான் அவனது அறை இருந்தது.

பவித்ராவை அங்கிருந்து சேரில் உட்கார வைத்த தாமரை, தலை அலங்காரத்தைக் கலைத்து விட்டு, தலை வார ஆரம்பித்தாள். அப்போது ஒரு பெரிய கவர் நிறையப் பூக்களைச் சித்ரா கொண்டு வந்து உள்ளே வைக்கஅவர் பின்னாலே பிரபாகர் வந்தான்.

எதுக்குச் சித்தி இவ்வளவு பூ…”

இல்லைஉங்க ரூம் அலங்காரம் பண்ணதான்.” அவர் தயக்கமாகச் சொல்ல

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். முதல்ல வெளிய கொண்டு போங்க. வீட்ல வயசு பிள்ளைங்களை வச்சிக்கிட்டு இதெல்லாம் தேவையா….” அவன் சொல்லிகொண்டிருக்கும் போதேதேவியும், வசுந்தராவும் வந்தனர்.

என்ன பிரபா இப்படிச் சொல்லிட்ட? இதெல்லாம் முறை தான…. பவித்ராவுக்கு ஆசை இருக்கும் இல்லையா…” வசுந்தரா சொல்ல….

நான் அப்படி உங்ககிட்ட சொன்னேனா…” என்ற வார்த்தை பவித்ராவின் தொண்டைவரை வந்து விட்டது. ஆனால் அப்படிப் பட்டென்று கேட்க முடியாமல் மெளனமாக இருந்தாள்.

எதுவும் வேண்டாம். எல்லோரும் எப்பவும் போலச் சாதரணமா இருங்க.” சொல்லிவிட்டு பிரபாகர் வெளியே சென்று விட…. மற்றவர்களும் அவன் பின்னே சென்றனர். செல்வதற்கு முன் பவித்ராவை பார்த்துக் கேலியாக வசுந்தரா சிரித்து விட்டு சென்றார்.

உன் வீட்டுக்கார் சொல்றதும் சரிதான். இந்த வீட்ல எல்லாம் ரெண்டு கெட்டான் வயசுலதான் இருக்குங்க. அவர் அப்படிச் சொன்னதுக்குப் பிறகு புடவை மாத்த கூட யோசனையா இருக்கு. நீ பிறகு மாத்திக்கோ…” தாமரை சொன்னதற்கு, பவித்ரா சரி என்றாள்.

அவள் பிறகு அணிய வேண்டிய புடவையைத் தாமரை எடுத்து மேஜையில் வைத்தாள். பவித்ரா சென்று முகம் மட்டும் கழுவிவிட்டு வரஇருவரும் வெளியே வந்தனர்.

தாமரை அப்போதேஅவள் கணவருடன் தங்கள் வீட்டிற்குக் கிளம்ப…. அவர்களை வாசல் வரை வழியனுப்ப வந்த பிரபாகர்இன்னைக்கு நைட் இங்கேயே தங்கலாமே…” என்று சொல்லஅதையே சித்ராவும் சொன்னார்.

இல்லை நீங்கதான் இத்தனை பேர் இருக்கீங்களேபிறகு நாங்க வேற எதுக்கு?” என்ற தாமரைகொழுந்தனாரேஎன் தங்கச்சியைப் பத்திரமா பார்த்துக்கோங்க.” என்றாள்.
சரிங்க அண்ணிநீங்க அண்ணனை பத்திரமா பார்த்துக்கோங்க.” பிரபாகர் பதிலுக்குக் கேலி செய்ய

இப்படி எனக்குப் பேச ஆள் இல்லாமதான், நான் இத்தனை நாள் கஷ்ட்டபட்டேன்.” என்றான் சரண்.

ஐயோ ! ஆமாம் இவரை நாங்க அப்படியே கொடுமை படுத்திட்டோம். பேசாம ஒழுங்கா வண்டியை எடுங்க.” என்ற தாமரை பவித்ராவை பார்க்கஅவள் அழுகையை அடக்கி கொண்டு இருக்கிறாள் என நன்றாகவே தெரிந்தது.

ஷ்எதுக்கு அழுகை? காலையில நாங்க வந்திடுறோம்.” எனத் தன் தங்கையை மெல்லிய குரலில் சமாதானம் செய்துவிட்டு தாமரை கிளம்பினாள்.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவே பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதுவரை பவித்ரா ஹாலிலேயே உட்கார்ந்து இருந்தாள். அவளோடு காமினி, சுதாகர் மற்றும் வினித் பேசிக்கொண்டு இருந்தனர்.

எல்லோரும் படுக்கப் போங்கசித்ரா குரல் கொடுக்க….” அதன்பிறகே எழுந்து சென்றனர். அவர்கள் எல்லோரும் மாடிக்குச் சென்றதும், பவித்ராவை பார்த்துநீயும் உன் ரூமுக்கு போ பவித்ரா.” என்றார்.

அறைக்குள் வந்து கதவை தாழிட்டவள், காலையிலிருந்து கட்டியிருந்த திருமணச் சேலையைக் களைந்து மடித்து அங்கிருந்து சேரில் விரித்து விட்டவள், குளிக்கச் சென்றாள். விரைவாகக் குளித்து முடித்தவள், தன் அக்கா எடுத்து வைத்திருந்த சேலையைக் கட்டாமல், மிருதுவான ஒரு சேலையை எடுத்து கட்டினாள்.

முகத்திற்கு லேசாகப் பவுடர் போட்டு பொட்டு வைத்தவள், நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக்கொண்டாள். அது அவளுடைய நெடுநாள் ஆசை. ஒருமுறை கண்ணாடியில் தன்னைச் சரிபார்த்து விட்டு சென்று கதவை திறந்தாள்.

அவள் எப்போது கதவை திறப்பாள் எனக் காத்திருந்தது போல்கதவை திறந்ததும் பிரபாகர் உள்ளே நுழைந்தான். அவனை எதிர்பார்க்காததால்திகைத்து போய் விழித்தவள், பிறகே வேகமாக விலகி வழி விட்டாள்.
 
உள்ளே வந்தவன் கதவை தாழிட செல்ல… “பவித்ரா…” என வெளியில் இருந்து சித்ரா அழைத்தார்.

பவித்ராவை பார்த்து புன்னகைத்தவன், “ நீ போய் என்னன்னு கேளு…” என்றான்.

என்ன அத்தை கூப்பிடீங்களா?” பவித்ரா கேட்க

திரும்பு…” என்றவர், அவள் தலையில் இருந்த பூவை எடுத்துவிட்டுநெருக்கமாகக் கட்டியிருந்த மல்லிகை சரத்தை தலை நிறைய வைத்து விட்டவர், “போய் உங்க மாமியார் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ…” என்றார் கிசிகிசுப்பாக.

திலகா ஹாலில் தான் இருந்தார். பவித்ரா சென்று அவர் காலில் விழஅவளை ஆசிர்வாதம் செய்தார்.

இன்னும் கொஞ்சம் நல்ல புடவையே கட்டியிருக்கலாம்.” என்றார் வசுந்தரா….

எதற்கு? பிறகு அதற்கும் எதாவது குதர்க்கமாகச் சொல்லவா என நினைத்தவள், வெளியே அமைதியாக நின்றாள்.

சரி நீ போ…. ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிடுச்சு.” என்றபடி சித்ரா பால் செம்பும் டம்ளரும் கொடுக்க…. பவித்ரா தங்கள் அறைக்குச் சென்றாள்.

அவள் செல்வதையே நான்கு பேரும் நின்று பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இந்தச் சாதா புடவையிலும் ஆள் அழகா தான் இருக்கா…” தேவி சொல்ல

அதுதான் இவளையே கட்டணும்ன்னு பிடிவாதமா பிரபா கட்டியிருக்கான்.” என்றார் வசுந்தரா


Advertisement