Advertisement

சாரிங்கிற வார்த்தை எல்லாம் பத்தாது இல்லை பவி. நான் உனக்கு ரொம்ப அநியாயம் பண்ணிட்டேன். நீ என்னைக்கும் என்னை மன்னிக்க மாட்ட…. நீ மன்னிக்கிற மாதிரி தப்பையும் நான் பண்ணலை…”

அவன் புலம்புவதை அவளால் பார்க்க முடியாமல்போதும் நிறுத்துங்க.” என்றாள் பவித்ராபிரபாகர் அவளைத் திகைத்துப் போய்ப் பார்க்க

ரொம்பக் கோபமாத்தான் இருந்தேன். இப்படி ரோஷமே இல்லாம இருக்கியே பவின்னு என்னையே மனசுக்குள்ள திட்டிட்டுதான் இருந்தேன்.”

ஆனா நீங்க பண்ண மத்த விஷயத்தை நினைச்சு நான் என்னையே தேத்திப்பேன். இந்தக் காலத்தில வரதட்சணை வாங்காம யாரு கல்யாணம் பண்றா?”

காதலிச்சு ஓடிப்போன உங்க தங்கை கூட எல்லா நகைகளையும் மாட்டிகிட்டுதான் போனாஅவ அந்த நகையைப் போடாம போயிருந்தாஅவ கல்யாணம் நடக்காம கூடப் போயிருக்கலாம்ஆனா நீங்க, உங்க வீட்ல இருந்து என்ன கொண்டு வந்தேன்னு? என்னை ஒருநாளும் கேட்டது இல்லை.”

அதைக் கூட விடுங்க. எங்க அம்மாவுக்கு நீங்க செய்யணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. ஆனா அவங்க நிலைமையைப் புரிஞ்சிகிட்டு, அவங்க இருக்க வீடும் வாங்கிக் கொடுத்துருக்கீங்க.” 
நான் அதையும் நினைச்சு பார்க்கணும். கசப்பான விஷயத்தையே நினைச்சு தொங்கிட்டு இருந்தாவாழ்க்கையை வாழவே முடியாது.”

எதோ என்னோட போறாத நேரம்நான் கஷ்ட்டபடனும்னு இருந்திருக்கு. நான் எந்தத் தப்பும் செய்யலைன்னு, நீங்க இப்ப தெரிஞ்சுகிட்டீங்களேஎனக்கு அதே போதும்.”

மத்தவங்களைப் பத்தி எனக்குக் எந்தக் கவலையும் இல்லை…. நாம இப்ப போலவே எப்பவும் இருக்கலாம். நான் எதுவும் நினைக்க மாட்டேன்.”

பவித்ரா பேசி முடித்து விட்டு பிரபாகரை பார்க்க…. அவன் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தான்.

இங்க வா…” என அவன் அவளை அழைக்கபவித்ரா சென்று அவன் அருகில் கட்டிலில் உட்கார்ந்தாள்.

அவளைத் தன் மடியில் சாய்த்து, அவள் முகம் பார்த்தவன், “நீ வேணா ரொம்ப நல்லவளா இருக்கலாம். ஆனா என்னால அப்படி இருக்க முடியாது.” என்றான்.

ஏன்? என்பது போல் பவித்ரா பார்க்க….

அன்னைக்கு வேணா அவங்க பொண்ணைக் காப்பாத்த தேவி சித்தி அப்படிப் பேசி இருக்கலாம். யாரா இருந்தாலும் அப்படித்தான் பண்ணுவாங்க. ஆனா அதுக்குப் பிறகு உண்மையைச் சொல்லலைனாலும், பிரபா போய்ப் பவித்ராவை கூடிட்டு வான்னு சொல்லி இருக்கலாம்.”

இப்பவரை அவங்க எதுவும் தப்பு செய்யாத மாதிரியே தான் பேசுறாங்க. இதுல திரும்ப நாம விட்டுகொடுத்து போனா, அவங்களுக்கு ரொம்ப இளக்காரம் ஆகிடும். அப்புறம் உன்னை மதிக்கவே மாட்டாங்க.”

அதுக்காகப் பிரிஞ்சு போகலாம்ன்னு சொல்றீங்களா…. இதுக்கு நீங்க என்னைக் கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம். நான் வந்து உங்க குடும்பத்தைப் பிரிச்சிட்டதா தான் எல்லோரும் பேசுவாங்க.”

இதுல உன்னைக் குறை சொல்ல என்ன இருக்கு? யாரு தப்பு செஞ்சாங்கன்னு எல்லோருக்கும் தெரியும்.”

வேற வழி இல்லையா?”

யாழினும், சித்தியும் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டா பார்க்கலாம். ஆனா அவங்க கேட்க மாட்டாங்க. எனக்குத் தெரியும்.”

இப்ப என்ன பண்றது?”

நாம ஒன்னும் பண்ண வேண்டாம். அமைதியா மட்டும் இருஅவங்களே ஆரம்பிப்பாங்க பாரு.”

எப்படி எனப் பவித்ரா யோசிக்க… “நீ என்னை நிஜமாவே மன்னிச்சிட்டியா…” எனப் பிரபாகர் திரும்ப கேட்க…. பவித்ரா வார்த்தையால் பதில் கொடுக்காமல்.. அவன் இதழில் முத்தமிட்டு தன் அன்பை வெளிபடுத்தஅவனும் அவளைக் காதலுடன் தழுவிக்கொண்டான்.

பவித்ராவிடம் பிரபாகர் சொன்னது போலத்தான் நடந்தது.

இவ என்ன முடிவு செய்றது? இவ இஷ்ட்டப்படி நான் இருக்கனுமா? எனக்கு யாரும் பிச்சை போட வேண்டாம் என இப்படி எல்லாம் தேவி பொருமிக்கொண்டு இருக்க… “சரி இப்ப என்னதான் பண்றது சொல்லு?” எனச் சிதம்பரம் கேட்க….

நாம தனியா போயிடலாம்.” என்றார்.

அப்ப வியாபாரம்?”

நாம தனியாபோறோம்ன்னு சொன்னா தானா வந்து கால்ல விழுவாங்க பாருங்க. ” எனத் தேவி திமிராகச் சொல்ல…. பிரிவை கண்டிப்பாகச் சோமசேகரும், பிரபாகரும் விரும்பமாட்டார்கள் என்று சிதம்பரமும் நினைத்தார்.

ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக எல்லாம் நடந்தது. அவர் சென்றுநாங்க தனியாகப் போகிறோம்.” என்று சொன்னதற்கு, பிரபாகர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. உடனே ஒத்துக்கொண்டான்
என்னைக்கா இருந்தாலும் இவங்களால பிரச்சனை வந்திட்டுதான் இருக்கும் என நினைத்து சோமசேகரும் மறுக்கவில்லை

அவர்கள் உடனே ஒத்துக்கொள்ளவும் சிதம்பரத்திற்குப் பயம் வந்துவிட்டது. அவரால் தனியாகப் போய் இப்படிச் சம்பாதிக்க முடியுமாஅதோடு யாழினி வீட்டினரின் தலையீடு வேறு இருக்கும். பெண்ணைக் கொடுத்திருக்கும் போது, அவர்களை ரொம்பவும் கடிந்தும் பேச முடியாது.

அதனால் அவராகவே முந்திக்கொண்டுவியாபாரம் எப்பவும் போலவே இருக்கட்டும்.” என்றார்
பிரபாகர் அதற்கு உடனே பதில் சொல்லவில்லைஅவன் யோசிக்க… 
வேண்டாம் பா.. நீ இப்பவே பிரிச்சு வாங்கிட்டு போயிடு. அப்புறம் உன் சம்பந்தி வீட்டு ஆளுங்களை எல்லாம் உள்ள விடுவ…. அதை எங்களால பார்த்திட்டு இருக்க முடியாது.” என  சோமசேகர் கண்டிப்பாக சொல்லிவிட்டார்
     
இல்லை அப்படியெல்லாம் நடக்காது. நான் என்னால முடிஞ்ச வரை உங்களோட சேர்ந்து வியாபாரம் பார்த்திட்டு. அப்புறம் உங்களுக்கே விட்டுடுறேன். எனக்கு அப்ப என்னோட பங்கு எவ்வளவோ, அதுக்குப் பணமாவோ இல்லை சொத்தாவோ கொடுத்திடுங்க.” என்றார்.

அவர் சொன்னது ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததால்…. மற்ற இருவரும் ஒத்துக்கொண்டனர்.

சிதம்பரத்தின் குடும்பம் அவர்களுக்கு இருந்த இன்னொரு வீட்டிற்குச் சென்றனர். “எல்லாம் உன்னால தான்.” எனக் காமினி யாழினியை திட்டிக்கொண்டே சென்றாள்.

மாடியில் சின்ன ஹாலும் நான்கு அறைகளுமாக இருந்த வீட்டை, ஒரு அறையை ஹாலோடு சேர்த்து பெரிதாகிவிட்டு இன்னொரு அறையைச் சமையல் அறையாக்கி அதில் சோமசேகர் குடும்பம் தனிக்குடித்தனம் செய்யபிரபாகர் குடும்பம் எப்பவும் போலே கீழே இருந்தனர்.

ஒருவரை அனுப்பிவிட்டு மற்ற இருவரும் சேர்ந்து இருப்பது நன்றாக இருக்காது என்றே இந்த முடிவு. தனித்தனி சமையல் ஆனால் வியாபாரம் மட்டும் சேர்ந்துதான்.

பவித்ராதான் புலம்பிக்கொண்டே இருந்தாள். “நான் கொஞ்சம் விவரமா இருந்திருக்கலாம். இந்த யாழினியை நம்பி ஏமந்திட்டேன். இப்ப என்னாலதான் இப்படி ஆகிடுச்சு.”

அவள் வருந்துவதைப் பார்த்த பிரபாகர்அப்படியெல்லாம் எதுவும் இல்லைஇது என்னைக்கோ நடக்க வேண்டியது, இன்னைக்கு நடந்திருக்கு அவ்வளவுதான்.” 
ஒரு குடும்பம் சேர்ந்திருக்க அந்த வீட்ல இருக்கிற எல்லோரும் நினைக்கணும். என் பொண்டாட்டியை மதிக்காம அலட்சியமா நடத்திறவங்களோட சேர்ந்து என்னால இருக்க முடியாது.” என்றான்.
அவன் இன்னும் யாழினியோடு பேசுவது இல்லை. பவித்ராவும் பேசுவது இல்லை.
 
சித்ரா அவர் வீட்டு வேலை முடித்து வந்துவிட்டால் எல்லோரும் சேர்ந்து கீழேதான் இருப்பார்கள். சிதம்பரம் குடும்பத்தோடு அதிக ஒட்டுதல் இல்லைஇருந்தாலும், பார்த்தால் பேசிக்கொள்வார்கள்.
பிரபாகர் சொன்ன இடத்திலேயே தர்ஷினியின் திருமணம் நடந்து முடிந்தது. அதில் வசுந்தரா மிகவும் மகிழ்ந்து போய் இப்போது இவர்கள் பக்கம் வந்துவிட்டார். அவர் வருவார் போவார் அவ்வளவுதான். மற்றபடி யாரும் அவரிடம் ரொம்பவும் விழுந்து பேசுவது இல்லை.
  
ஸ்ரீராமின் முதல் பிறந்த நாள் விழா முடிந்து, களைத்துப் போய்த் தங்கள் அறைக்கு வந்த பவித்ராவிடம், பிரபாகர் ஒரு விண்ணபத்தைக் கொடுக்கஅதை வாங்கிப் பார்த்தவளுக்கோ மிகுந்த மகிழ்ச்சி.

டீச்சர் ட்ரைனிங் படிக்கனும்ன்னு ஆசைப்பட்ட இல்லைநீ காலேஜ்ல போய்ப் படிஅம்மாவும் சித்தியும் ஸ்ரீராமை பார்த்துப்பாங்க. அடுத்து மேல கரஸ்ல M. sc.,யும் படி.” 

நீ வேலைக்கும் போகலாம். உனக்கு வேலைக்குப் போகணும்னு ரொம்ப ஆசை தான…” பிரபாகர் சொல்ல…. 
நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன் போதாதா என கேட்காமல் தன்னுடைய விருப்பத்திற்கும் ஆசைக்கும் மதிப்பளித்த கணவனை பவித்ராவுக்கு இன்னும் பிடித்தது

மூன்று வருடங்களுக்குப் பிறகு….

பவித்ரா ஒரு திருமணதிற்குச் சென்றிருக்கஅங்கே ஒருவன் அவளை விழுந்து விழுந்து உபசரித்தான். இவன் ஏன் நம்மை இவ்வளவு கவனிக்கிறான்? என அவள் யோசிக்கும் போதே

நீங்க காமினியோட அண்ணி தானஎன் பேரு சரத். நாங்களும் வியாபாரம்தான் பண்றோம்.” என அவன் வழியபவித்ராவுக்குப் புரிந்துவிட்டது.

ஐயோ சாமி ! ஏற்கனவே ஒருத்தி கல்யாணம் பண்ணி என்னைச் சாவடிச்சது பத்தாதா….திரும்பவுமா…” என நினைத்தவள், அன்றே பிரபாகரிடம் சொல்லிவிட்டாள்.

அவனா, நல்ல பையன்தான். திரும்ப உன்கிட்ட வந்து பேசினாஉங்க வீட்டு ஆளுங்களோட வந்து பொண்ணு கேளுன்னு சொல்லு….” பிரபாகர் சொல்லபவித்ரா புன்னகையுடன் சரியென்றாள்.

சரத் அவன் பெற்றோருடன் வந்து பெண் கேட்டது சிதம்பரத்திடம் அல்லபிரபாகரிடம். பிரபாகரின் தங்கை என்றுதான் அவனுக்குக் காமினியை பிடித்தது. அவனுக்கு அவன்மேல் அவ்வளவு மரியாதை. சுதாகரிடம் சொல்லி அனுப்பசிதம்பரம் இங்கே வந்து அவர்களுடன் பேசினார்.

காமினிக்கு அந்த இடமே முடிவு ஆனது. பிரபாகர் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் அத்தனை ஏற்பாடுகளையும் அவன்தான் செய்தான். யாழினியின் திருமணதிற்கு யாரையும் அழைக்காததால்காமினியின் திருமணத்தை வெகு விமர்சையாக செய்தனர். சிதம்பரத்தால் மட்டும் தனியே அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது. அதை அவரும் உணர்ந்து இருந்தார்

பவித்ரா இரண்டாவது குழந்தை உண்டாகி இருந்த போதும், வந்த விருந்தினர்களைக் குறையில்லாமல் கவனித்துக் கொண்டு இருந்தாள்.

இன்னும் தேவியும் யாழினியும் அப்படியேத்தான் இருந்தனர். தவறு தங்கள் பக்கம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் இருந்தும் மாறவில்லை. சிலர் இப்படித்தான் இவர்களை எல்லாம் திருத்த முடியாது. ஆனால் பிரபாகரும் பவித்ராவும் அப்படியில்லைஅவங்களோட குணம் அவ்வவளவுதான் அதற்காக நாமும் அப்படி இருக்க முடியுமா என நினைப்பவர்கள்
யாழினிக்கு இன்னும் குழந்தை உண்டாக வில்லை. “பவித்ராகிட்ட குழந்தை உண்டாகி இருக்கேன்னு பொய் சொன்னா இல்லைஅதுதான் கடவுள் தண்டிச்சிட்டார்.” என வசுந்தரா சொன்ன போதுஅதை கேட்டு மகிழும் அளவுக்கு அந்த வீட்டில் யாரும் கல்மனம் படைத்தவர்கள் அல்ல…. 
இதே வீட்டில் வளர்ந்த பெண். அவள் கஷ்ட்டப்பட வேண்டும் என அங்கிருக்கும் யாரும் நினைக்க மாட்டார்கள். திலகா அவளுக்காக கோவிலுக்கு சென்று விளக்கு  போட்டுக்கொண்டுதான் இருந்தார்

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டு போவதே இல்லை…. என்பதற்கு ஏற்பபிரபாகர் தொழிலில் மேலும் மேலும் முன்னேறபவித்ரா அவனுக்கு உற்ற துணையாகக் காரியம்யாவிலும் கைகொடுக்கஅங்கே அவர்கள் இல்லறம் நல்லறமாகச் சிறந்து விளங்கியது.

Advertisement