Advertisement

ஸ்மிரிதியின் மனு – 36_1
ஸ்மிரிதியின் பதிலில் லேசாக கலவரமடைந்தான் மனு.  அவன் இந்தப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.  அவன் அணுகுமுறையில் இருந்த பிழையை அவள் பதிலைக் கேட்ட பின்தான் உணர்ந்தான்.  அவளுடன் மறுபடியும் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது அவர்கள் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
வீட்டின் வெளிப்புறம் வண்ண சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜகஜோதியாக இருந்தது.  அந்த அலங்காரத்தைப் பார்த்து சந்தோஷமடைந்த ஸ்மிரிதி,
“யார் ஐடியா இது?”
“அம்மாதான்..நம்ம ஊர்லே வாழை மரம், லைட் அலங்காரம் எல்லாம் செய்வாங்களாம்…இங்கே வாழை மரத்துக்கு எங்க போகறது அதான் தீபாவளிக்கு போடற லைட்டைப் போட சொன்னாங்க.”
“எல்லாம் ஆன் ட்டிதான் யோசிக்கணுமா? நீங்க மூணு பேரும் என்ன செய்யறீங்க?”
“ஸ்மிரிதி பேபி..அம்மா பாவம்னா நீயே அவங்களுக்கு உதவி செய்..எங்களை விட்டிடு.” என்று சொன்னவன் அடுத்த நாள் காலையில் சிவகாமிக்கு அவள் செய்ய போகும் உதவியால் அந்த வீட்டு ஆண்கள் மூன்று பேரும் அவளுக்கு உதவியாளாராக மாறப் போவதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை. மனுவிற்கு ஸ்மிரிதி பதில் சொல்லுமுன் அவர்களின் கட்டளைக்காகக் காத்திருந்த காரோட்டி,
“பிட்டியா (பாப்பா).” என்று குரல் கொடுத்தான்.
கேட்டருகே சென்ற ஸ்மிரிதி திரும்பி பார்த்து,“விரேந்தர்..நீ கிளம்பு.” என்றாள்.
அவன் கிளம்புமுன் மனுவின் அருகே வந்து,”வாழ்த்துகள் லாயர் ஸாப்.” என்று மனுவிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு சென்றான்.
“நீ பிட்டியா..நான் லாயர் ஸாப்..என்ன லாஜிக்? ”
“நான்  பிட்டியா..மனிஷ் பையா..ஸேம் லாஜிக்.”
“அடிப்பாவி..நீ எப்பவும் பிட்டியாவாவே இருக்க போற..எனக்கும், மனிஷுக்கும் மட்டும்தான் வயசு ஏற போகுதா?”
“சேச் சேசே..இனிமே நீ எப்பவும் லாயர் ஸாப் தான்..மனிஷ் எப்பவும் பையாதான்..அப்பா எப்பவும் அவனுக்கு ஸாப் தான்..அவன் நம்ம எல்லாருக்கும் விரேந்தர்.” என்று சிரித்து கொண்டே விரேந்தரைப் பற்றி ஸ்மிரிதி விளக்கம் கொடுத்தபடி மாடிப்படி ஏறியவுடன் வாசல் கதவு திறந்தது.
வாயிற் கதவைத் திறந்தது பிரேமா.  வரவேற்பறையில் வேறு யாருமேயில்லை.  அவர் மட்டும் விழித்து கொண்டிருந்தது அவருக்கு ஸ்மிரிதியுடன் தனிமையில் பேச தேவை இருக்கிறது என்று உணர்ந்து,”நீ அத்தைகிட்ட பேசிட்டு வா.” என்று சொல்லி அவனறைக்குச் சென்றான் மனு.
மனுவின் தலை மறைந்தவுடன்,”இன்னைக்கு காலைலே கல்யாணமாயிருக்கு அதுக்குள்ள என்னை அத்தைன்னு அழகா கூப்பிடறான்..உன்கிட்ட காலைலேர்ந்து கத்தி பேசாதேன்னு எத்தனையோ முறை சொல்லியும் இப்பவும் கத்தி பேசி, சிரிச்சுகிட்டு வர.” என்று பிரேமா ஆரம்பிக்க,
அவர் கையைப் பிடித்து இழுத்து சோபாவில் அமர வைத்த ஸ்மிரிதி,”அம்மா, விரேந்தர் பற்றி சொன்னேன்..சிரிப்பு வந்திடுச்சு..எதுக்கு டென்ஷன் ஆகறீங்க? மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டீங்களா?”
“எல்லாம் சரியா சாப்பிடறேன்..உனக்கு கல்யாணம் ஆகலேன்னு இவ்வளவு நாள் கவலைப்பட்டேன்..இப்ப கல்யாணமாகி நீ நல்லா இருக்கணும்னு கவலை வந்திடுச்சு.”
“இதை சொல்லத்தான் முழிச்சுகிட்டு இருந்தீங்களா? இரண்டு நாளா ரெஸ்ட் இல்லாம அலையறீங்க..நாளைக்கே திரும்ப பெங்களூர் போகணும்..இப்ப தூங்காம எதுக்கு உங்களுக்கு இந்த வேலை?” என்று ஸ்மிரிதி கோபப்பட,
அப்போது அவளின் கையை அழுத்தமாக பிடித்து கொண்ட பிரேமா,”ஸ்மிரிதி.. உன் கோபத்தை, வார்த்தைகளோட வேகத்தை குறைச்சுக்க.. கல்யாண வாழ்க்கையே வேற..இதுவரைக்கும் நீ நம்ம வீட்லே இருந்த மாதிரி இங்கே இருக்க முடியாது.. “என்று பேசியவரை இடைமறித்து,
“நான் சண்டைக்காரி இல்லை மா.”
“மனுவோட ஏட்டிக்கு போட்டி செய்யாத.” என்று பட்டென்று பிரேமா சொன்னவுடன் அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளாத ஸ்மிரிதி,
“அவனுக்காகதான் எல்லாம் செய்தேன்னு உங்ககிட்டையும், அவன்கிட்டையும் அதை விளக்கி சொல்லியாச்சு..அவனோட எங்கே போட்டி போடறேன்?” என்று புரிந்து கொள்ளாமல் அவள் பதில் சொன்னதைக் கேட்ட பிரேமா,
“ஐயோ ஸ்மிரிதி ஏன் இப்படி இருக்க…அவன்  பாடினா உடனே நீயும் பாடணுமா?”
“அம்மா.” என்று குரலை உயர்த்திய ஸ்மிரிதியை மறுபடியும்,”கத்தாதே..மெதுவா பேசு..சிவகாமியும் இப்பதான் தூங்க போனா.”
உடனே குரலைத் தாழ்த்திக் கொண்டு,”மனுக்குப் போட்டியா பாடலே..மனுவோட பொண்டாட்டியா பாடினேன்..அவனுக்குப் புரிஞ்சிடுச்சு.” என்றாள் ஸ்மிரிதி.
“அவனுக்குப் புரிஞ்சிடுச்சு சரி..எல்லாத்லேயும் நீ அவன் பொண்டாட்டின்னு  உனக்குப் புரிஞ்சிடுச்சா?” என்று டீச்சர் இப்போது அவர் வேலையைச் சரியாக செய்து அவர் பெண்ணுக்கு இந்த முறை அவர் சொல்ல வந்ததைச் சரியாகப் புரியவைத்தார்.
அவரின் கேள்விக்கு வெறும் தலையசைப்பில் பதிலளித்த ஸ்மிரிதியிடம்,
“அப்ப மனு சொல்றபடி நீ கேட்கணும்…அவனுக்கு விட்டுக் கொடுத்து போகணும்.” என்று கணவனை அனுசரித்து போக மகளுக்கு அறிவுறுத்தினார்.
இப்போது அவர் சொல்ல வந்ததை மிக சரியாக புரிந்து கொண்ட ஸ்மிரிதி, சிறிது நேரத்திற்கு முன் மனுவுடன் காரில் நடத்திய உரையாடலை வேறு விதமாக கொண்டு சென்றிருக்க வேண்டுமோ என்ற மன குழப்பத்தில்,”அம்மா..இதுக்கு மேலே இப்ப வேணாம்.” என்றாள்.
அவள் பதிலில் பிரேமா திருப்தியடையாமல் சஞ்சலத்துடன் இருப்பதைப் பார்த்து,”உங்க மாப்பிள்ளை சொல்றபடி கேட்கறேன்.” என்று பதில் சொன்ன போது ஸ்மிரிதியும் தெளிவாகியிருந்தாள்.
அவளை நம்பமுடியாமல் பார்த்த பிரேமாவின் கையின் மேல் அவள் கையை வைத்து,”முதல்லே மனு சொல்றதுதான் கேட்பேன்..பிராமிஸ்.” என்றாள் ஸ்மிரிதி.
“தாங்க்ஸ்..ஸ்மிரிதி.” என்று மன நிம்மதியுடன் அவரறைக்கு சென்ற பிரேமா அறிந்திருக்கவில்லை முதல்முறை மட்டும்தான் மனுவுக்கு ஓட்டுநர் உரிமையென்று.
மனுவின் அறைக்குள் ஸ்மிரிதி நுழைந்தபோது அவன் இரவு உடைக்கு மாறி, படுக்கையில் இளைப்பாறி கொண்டிருந்தான்.  அவளின் உடைகள் இருந்த ஒரு பெட்டியை எடுத்து படுக்கை மீது வைத்து,”இதை ஒபன் பண்ணு நான் பாத் ரூம் போயிட்டு வரேன்.” என்று கட்டளையிட்டு விட்டு பாத் ரூமிற்குள் சென்றாள்.  
அவள் வெளியே வந்தபோது அந்தப் பெட்டி திறக்கப்படாமல் அப்படியே இருந்தது.
“நீ மட்டும் இராத்திரிக்கு வேற மாத்திகிட்டு இருக்க.”
“வேண்டாத வேலைதான்..ஆனா நீ எப்ப வருவேன்னு தெரியலே..அதுவரைக்கு அப்படியே உட்கார்ந்திருக்க முடியாதில்லே.”
“ஓ..டிரைவர் ரைடுக்கு ரெடியா இருக்கணும்னு நினைச்சாரு போலே.”
“யெஸ்..என் ஸ்குரூக்கு காத்துகிட்டிருக்கேன்.” என்று அவன் பதில் சொல்ல, அவனின் பதிலில் பொதிந்திருந்த அர்தத்தைப் புரிந்து கொண்ட ஸ்மிரிதி,  பெட்டியிலிருந்து அவள் கையில் கிடைத்ததை அவன் மீது வேகமாக வீசினாள்.
அதைக் கேட்ச் பிடித்தவனைப் பார்த்து,”பொண்டாட்டிகிட்டயே அசிங்கமா பேசற.”
“இது அசிங்கமா..உன்னோட ஸ்குரூவைத் தேடி கொடுன்னு புருஷனாகறதுக்கு முன்னாடியே நீதானே என்கிட்ட மனு கொடுத்த.” என்று வஞ்சனை செய்யாமல் அவள் செய்கையை வெளிப்படையாக வக்கீல் விமர்சிக்க,
மறுபடியும் அவன் மேல் அவள் கையில் கிடைத்ததை விட்டெறிய, அதைக் கேட்ச் பிடிக்காமல்,”பேபி..நோ..நாட் திஸ் கேம்..இந்த விளையாட்டு வேணாம்.” என்று சொன்னவனின் குரலில் கொஞ்சமாக எரிச்சல் தெரிய, உடனே பிரேமாவின் அறிவுரை மனதில் வர, படுக்கையிலிருந்து பெட்டியையும், அவள் விட்டெறிந்த துணிகளையும் வேகமாக எடுத்து அறையின் மூலையில் குவித்தாள்.
“ஒரு நிமிஷம்..நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் செய்துக்கணும்..அதுக்கு அப்பறம் தான் விளையாட்டெல்லாம்.” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டவன் பதிலெதும் சொல்லாமல் படுக்கையிலிருந்தபடி அவளையே பார்த்து கொண்டிருந்தான்.  வேக வேகமாக அவள் போட்டிருந்த நகைகளை கழட்டி விட்டு அறையின் விளக்கை அணைத்து இருட்டாக்கியவள் கண் சிமிட்டும் நேரத்தில் அவன் மீது வந்து விழுந்தாள்.
அதை எதிர்பார்க்காத மனு,”ஹா.” என்று சத்தம் செய்ய,”எதுக்கு சத்தம் போடற? ” என்று கணவனை மனைவி அதட்ட, அவளுக்குப் பதில் சொல்லாமல் அவளை இறுக அணைத்தவனை அதிர்வலைகள் அடுத்தடுத்து தாக்கின. அன்று காலையிலிருந்து அலங்கார சிலையாக அவனருகே உலா வந்த ஸ்மிரிதி அப்போது அபிஷேக சிலையாக அவன் மேல் படுத்து கிடந்ததில் சிலையாகி போனான் மனு.
அவன் சிலையானதைப் பொருட்படுத்தாமல்,”மனு..டிரைவ் ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி ஒரு கிரவுண்ட் ரூல் ஃபிக்ஸ் பண்ணனும்..அண்ட் நோ பிரேக்கிங்க் ஆஃப் தட் ரூல். என்றாள்.
அதைக் கேட்டவுடன் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.  அவளின்  விதிமுறையை ஏற்கனவே யுகித்திருந்தவன்,“என்ன வேணும்னாலும் ஃபிக்ஸ்  செய்துக்க பேபி.” என்று அவளுக்கு விட்டுக் கொடுத்தான் அந்த விடாக்கண்டன்.
“ஓகே..முதல் டிரைவ் உன்னோடது மனு.” என்று அவள் விதிமுறையை விளக்கி பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தாள் அந்தப் பிடிவாதக்காரி.
“வேணாம் பேபி..ஆண், பெண் பாகுபாடு நான் பார்க்கறதில்லை..எல்லாத்திலேயும் நாம இரண்டு பேரும் சரிசமம், சம உரிமை, சமவாய்ப்பு.” என்றான் அவளின் அனைத்தும் துறந்த அந்த அணைப்பில் அவனையே துறந்து அர்த்தனாரியாகியிருந்த மனு.
“ஃபைன் மனு பேபி..ஆனா முதல் தடவை நான் நோஸ் ஸ்குரூ..நீ டிரைவர்.. அதை மாற்ற விரும்பலே..அதுதான் நியாயம்..அதுக்கு அப்பறம் நான் டிரைவர்..நீ ஸ்குரூ.. ஸ்குரூஸ்லேயும் இருபாலர் இருக்கு, டிரைவர்ஸ்லேயும் இருபாலர் இருக்காங்க..சம உரிமை, சம வாய்ப்பு..என்ன சம்மதமா?” என்று அந்த நேரத்திலும் அவள் அறவழியைக் கடைப்பிடித்தாள் ஸ்மிரிதி.
அவன் மனைவியின் அறவழியைப் பற்றி சிறிது யோசித்த பின்,
“பேபி..இது நமக்கு ஒத்துவராது..இராத்திரி முடியறதுக்குள்ள நீயே அதை ஒத்துகிட்டு அந்த வழிமுறையை ஒதுக்க போற.” என்று இயற்கையின் சீற்றத்தில் சீரமைப்பும், சீர்திருத்தமும் சிக்கி தவிக்க போகிறது என்று சரியாக கணித்திருந்தான் வக்கீல்.
“நீ சொல்றததைதான் கேட்கணும்னு நான் ரூம்குள்ள வர்றவரைக்கும் உன் மாமியார் என்னை மைண்டை வாஷ் செய்தாங்க..ஸோ நோ பிரேக்கிங் ஆஃப் ரூல்..ஃபர்ஸ்ட் டைம் உன்னோடதுதான்..அப்பறம் என்னோடது.” என்று அவளுக்குச் சாரதியாகும் வாய்ப்பிற்கான வழிமுறையை மீண்டுமொருமுறை வலியுறுத்தினாள் ஸ்மிரிதி.
“ஒகே பேபி.” என்று அவன் டெஸ்ட் டிரைவை ஆரம்பித்தான் மனு.  
முதல் முறை என்பதால் சில தடுமாற்றங்கள், தயக்கங்களுக்குப் பின் ஸ்குரூவின் வளைவுகளில், மேடு, பள்ளங்களில், நெளிவு, சுளிவுகளில், ஏற்ற, இறக்கங்களில் சுவாரசியமாக சாரதி பயணிக்க அதில்  இறுகியிருந்த அவனின் இலக்கு இளகி, இணங்கி அவனுடன் இணைய ஆரம்பிக்க அதுவரை ஒருவருகொருவர் புரியாதப் புதிராக உணர்ந்திருந்த அவ்விருவரும் அன்றைய இரவு ஒருவருக்குள் ஒருவர் பொருந்தி புரியாத புதிருக்கு விடையாக மாறிப் போயினர்.
விதிமுறைக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றிய விளையாட்டில் சாரதியும், ஸ்குரூவுமாக மாறி மாறி சவாரி செய்து அவர்களின் புது பயணத்தில் சில சமயம் இருவருமே ஸ்குரூவாக பொருந்தி, சில சமயம் இருவருமே சாரதியாக மோதி, பல சமயம்  யார் ஸ்குரூ, யார் சாரதியென்று பிரித்து சொல்ல முடியாத அளவிற்கு இருவரும் இரண்டறகலந்து அடுத்த வழிமுறைக்கான இல்லற வாழ்வை இனிதே ஆரம்பித்தனர். 
காலையில் மனு கண் விழித்தபோது அவன் மேல் அவள் கால்களைப் போட்டு, அவன் வயிற்றை அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.  அவளைப் பரிவுடன் பார்த்து கொண்டிருந்தவனின் மனதில் அவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு உறவு ஏற்பட இருக்கிறது என்பதால்தானோ என்னவோ இத்தனை வருடமாக வேறு எந்த விதமான உறவையும் அவர்கள் இருவரும் முயன்று பார்க்கவில்லை என்று தோன்றியவுடன் அவனின் சண்டி ராணியை சவாரி செய்ய ஆசை வந்தது சாரதிக்கு.
“என்ன பண்ற மனு?” என்று தூக்க கலக்கத்துடன் கேட்டாள் ஸ்மிரிதி.
“கணவனோட கடமையை செய்யறேன் இல்லைனா நான் கடமை தவறிய கணவனாயிடுவேன் என் கடமைத் தவறாத மனைவிக்கு.” என்று வக்கீல் பதில் அளித்தான்.
“ரொம்ப குழப்பற மனு..சிம்பிலா சொல்லு.”
“ஃபைன்.. இந்த சவாரிக்கு நாந்தான் சாரதி.” என்று சுற்றி வளைக்காமல் மனைவியின் வளைவுகளை சுற்றி வர ஆரம்பித்தான்  கணவன்.
காலை காபிக்காக ஸ்மிரிதி அவள் அறையிலிருந்து வெளியே வந்த போது வீடே அமைதியாக இருந்தது. அவள் நேரே கிட்சனுக்குள் நுழைந்தாள்.  சிவகாமி எதையோ மிக்ஸியில் அரைக்க ஏற்பாடு கொண்டிருந்தார். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் திரேன் ஸ்மிரிதியைப் பார்த்து,”நமஸ்தே தீதி.” என்றான்.
“தீதி இல்லை..பாபி.” என்று திரேனைத் திரும்ப திருத்தினார் சிவகாமி.
“காபி வேணும் திரேன்.” என்றாள் ஸ்மிரிதி,
“இரண்டு நிமிஷம்.” என்றான்.
“மனுவுக்கா?’ என்று விசாரித்தார் சிவகாமி.
“அவன் தூங்கிகிட்டிருக்கான்.” என்று பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
அப்போது கிட்சனுக்குள் நுழைந்த பிரேமா, “குளிச்சிட்டு வந்திருக்கியா இல்லை அப்படியே எழுந்து வந்திட்டியா?” என்று அம்மாவாக விசாரணையை ஆரம்பித்தார்.
“காபி குடிக்கறத்துக்கு குளிக்கணும்னு அவசியமில்லை மா.” என்றாள் மகள்.
சினேகிதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.  அதன்பின் இருவரும் ஸ்மிரிதியைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தனர்.  அவர்கள் கண்களுக்கு நைட் ஸுட்டில் தூக்க கலக்கத்துடன் இருந்த ஸ்மிரிதிதான் தென்பட்டாள்.  அவள் தோற்றத்தை வைத்து அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.  அதனால், 
“திரேன்..காபி கலக்காத.” என்று கட்டளையிட்டார் பிரேமா.
“அம்மா.” என்று அலறினாள் ஸ்மிரிதி.
“நீ போய் முதல்லே குளிச்சிட்டு வா..அப்பறம் நீயே கலந்துக்க.” என்றார் கண்டிப்புடன்.
“மதர் இன் லா ஜி..நீங்க யார் கட்சி? உங்க பழைய சினேகிதியா இல்லை உங்க புது சினேகிதியா?” என்று அரசியல் தந்திரத்தை ஒரு கப் காபிக்காக உபயோகித்தாள் அந்த இளம் அரசியல்வாதி.
“என்ன டீ..ஒரு கப் காபிக்கு கட்சி ஆரம்பிக்கற நீ.” என்று அதிர்ச்சியானார் பிரேமா.
“முதல்ல வீட்டுகுள்ள, சின்ன சின்ன விஷயங்கள்ளதான் இதையெல்லாம் டிரை செய்யணும்..அப்பதான் எங்க தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு அதை சரிப்படுத்தி வெளியே கொண்டு போய் வெற்றி பெறமுடியும்.” என்றாள் ஸ்மிரிதி.
அவளின் விளக்கத்தை கேட்டவுடன்,“திரேன்..ஸ்மிரிதிக்கு காபி கலந்து கொடு.” என்றார் சிவகாமி.
“அம்மா, பார்த்தீங்களா….என் மதர் இன் லா உங்களை மாதிரி மைண்ட் வாஷ் செய்ய மாட்டாங்க மைண்ட் யூஸ் செய்வாங்க அதான் அவங்க மருமகளை அவங்களோட புது பிரண்ட் ஆக்கிட்டாங்க.” என்றாள் புன்னகையுடன் ஸ்மிரிதி.
“நீ இப்ப காபி குடிச்சுக்க..மனு எழுந்து வந்த அப்பறம் அவனுக்கு நீதான் காபி கலந்து தரணும்.” என்று அவரின் புது பிரண்டிற்கு, மகனின் புது மனைவிக்குப் பொண்டாட்டியாக பிராக்டீஸ் கொடுக்க ஆரம்பித்தார் சிவகாமி.

Advertisement