Advertisement

ஸ்மிரிதியின் மனு – 28_2
“மனிஷுக்கு தமிழ் புரியாதுன்னு அவனைப் பக்கத்திலே வைச்சுகிட்டு இவ்வளவு விவரமா பேசிக்கிட்டு இருக்கியா?”
“உன் ஸாலாவை உன் பொறுப்புலே வைச்சு நீயே அவனுக்குத் தமிழ் கத்து கொடு.”
“வாய்ப்புக் கிடைச்சா செய்வேன்..அவன் தீதியை அவளோட தாய்மொழிலே திட்ட சொல்லித் தருவேன்.” என்று சொன்ன மனு அறிந்திருக்கவில்லை அவனுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறதென்று, அதைக் கேட்டு கொண்டிருந்த ஸ்மிரிதியும் அறிந்திருக்கவில்லை அவள் தம்பி சுத்த தமிழனாகப் போகிறானென்று.
“வேற என்ன விஷயம்..நான் கிளம்பணும்.” என்று ஸ்மிரிதியை அவசரப்படுத்தினான் மனு.
“மனிஷை அழைச்சுகிட்டு போகறதைப் பற்றி அப்பாகிட்ட ஃபோன்லே பேசிடு..அவனைத் துணையில்லாம எங்கையும் அனுப்பறதில்லை..வீரேந்தர் ஃப்ரீயா இருந்தா நான் அவனை உங்கக்கூட அனுப்பறேன்..அவனை ஜாக்கிரதையா பார்த்துக்கணும்..உன்னாலே முடியாதுன்னா நானும் கூட வரேன்.”
“ஸ்மிரிதி..அவனைப் பார்த்துக்க நான், மாறன் இரண்டு பேர் இருப்போம்..உங்க ஆளுங்களும் இருப்பாங்க..நீ உன் ஷாப்பிங்கைப் பாரு..பாய்ஸ் விஷயத்திலே தலையிடாத.” என்றான் மனு.
“என்னோட ஷாப்பிங்கை கேர்ல்ஸ் பார்த்துக்கறாங்க..அதனாலதான் பாய்ஸோடதை நான் பார்த்துக்கலாம்னு நினைச்சேன்.” என்று மனுவை மறுபடியும் சீண்டினாள் ஸ்மிரிதி.
“சரி..அப்ப உன்னோட ஷாப்பிங்கலே எல்லாம் யுனிஸெக்ஸா இருக்கட்டும்..டயம், மணி, எஃபர்ட்டை மிச்ச படுத்தும்..நீயும், நானும் ஒரே போலே போட்டுக்கலாம்” என்று சொல்லி சிறிது இடைவெளிக்குப் பின் “அவிழ்க்கலாம்.” என்று ஸ்மிரிதியை பதிலுக்கு சீண்ட “இராட்சசன்” எனறு ஸ்மிரிதியின் பதிலைக் கேட்டு சிரித்துவிட்டு ஃபோனை அணைத்தான் மனு. 
“ஸ்மிரிதி கா, இது ரொம்ப அ ந் நியாயம்..எனக்கு நீங்க இப்படியொரு விஷயம்ன்னு சொல்லவே இல்லை.” என்று ஸ்மிரிதியிடம் சண்டையிட்டாள் ஜனனி.
“என்னை ஏன் கேட்கற..உன் மனு அண்ணனைக் கேளு..வக்கீல் ஏதாவது ஸ்ட் ராங்க பாயிண்ட் வைச்சிருப்பான்.” என்றாள் சிரித்துக் கொண்டே ஸ்மிரிதி.
“ஐயோ..நீங்க அக்கான்னா அவரு எப்படி அண்ணனாக முடியும்..அவரு அண்ணன்னா நீங்க எப்படி அக்காவாக முடியும்?’
“எது முடியும் முடியாதுங்கறது நீதான் முடிவு செய்யணும்.” என்று ஜனனியின் முடிவிலிருந்து அவளை விலக்கிக் கொண்டாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி..அதுதான் சரி..அப்பவே இது புரிஞ்சிருக்கணும்..என்ன செய்ய? இந்த டீச்சருக்கு எல்லாம் லேட்டாதான் புரியது.” என்று வருத்தப்பட்டாள் ஜனனி.
“எனக்கும் லேட்டாதான் புரிஞ்சுது..ஸோ நோ ஃபீலிங்ஸ்..ஒகே.” என்று அவளைத் தேற்றினாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி..ஒரு முக்கியமான விஷயத்துக்காக ஃபோன் பண்ணினேன்.”
“என்னது?”
“பிரேமா ஆன்ட்டிக்கு எந்தக் கலர் பிடிக்கும்? ரிசெப்ஷனுக்கு மூணு சினேகிதிங்களும் ஒரே போலே புடவைக் கட்டிக்கணும்னு சிவகாமி ஆன்ட்டி ஆர்டர் போட்டிருக்காங்க..இங்க பக்கத்திலே ஒரு ஊர்லே நெசவு செய்யறாங்க..நாளைக்கு நானும், அத்தையும் அங்கே போய் அவங்க மூணு பேருக்கும் வேற வேற கலர்லே ஒரே மாதிரி டிசைன்லே வாங்க போறோம்..
சிவகாமி ஆன்ட்டி கலர் சொல்லிட்டாங்க.. அவங்களோட அளவு பிளவுஸ் அத்தைகிட்ட இருக்கு அதை போல தைச்சு கொண்டு வர சொல்லியிருக்காங்க..பிரேமா ஆன்ட்டி பிளவுஸ் அளவு தெரிஞ்சா அவங்களுக்கும்  இங்கையே தைச்சு கொண்டு வந்திடுவேன்.” என்றாள் ஜனனி.
“அம்மாக்கு பெஸ்டல் ஷேட்ஸ் வாங்கு..பிரைட்டா உடுத்த மாட்டாங்க..அவங்களோட புடவை, பிளவுஸை சுசித் ராகிட்ட அனுப்பிவிடு….அவளேத் தைச்சு கொண்டு வந்திடுவா.” என்றாள் ஸ்மிரிதி.
“சரி..பெங்களூருக்குக் கொரியர் செய்திடறேன்.”
“நீ என்ன போட்டுக்க போற ரிசெப்ஷனுக்கு?”
“பிரண்ட்ஸுங்கதான் ஸேம்மா உடுத்தணும்னு..நான் என் கல்யாணத்துக்கு வாங்கின புடவைலே  ஏதாவது ஒண்ணு உடுத்திப்பேன். ” என்றாள் ஜனனி.
அதைக் கேட்ட உடன் அவள் அம்மாவின் சினேகிதிகள் போல் அவள் சினேகிதகளுக்கும் ஒரே போல் புடவை வாங்க முடிவு செய்து,”ஒரு வேலை செய்..உனக்கு ஒரு புடவை..மீரா ஆன்ட்டிக்கு ஒரு புடவை..அப்பறம் அங்கேயே இன்னும் மூணு புடவை ஒரே டிஸைன்லே  வாங்கிடு..எனக்கு, சுசித்ராக்கு, மெஹக்கு..எனக்கு நீயே செலெக்ட் செய்திடு..அவங்களுக்கு என்ன கலர்னு அவங்களை உனக்கு மெஸெஜ் செய்ய சொல்றேன்..எல்லாத்துக்கும் சேர்த்து உன் அக்கவுண்டலேப் பணம் போட்டிடறேன்.”
“அந்த இடத்திலே வாங்கற புடவையை மெஹக் உடுத்திப்பாங்களா? அவங்க லெவலுக்கு பொருந்தி வருமா?” என்று சந்தேகமாகக் கேட்டாள் ஜனனி.
“அவளுக்கு அந்த மாதிரி உடுத்தி பழக்கம் கிடையாது ஆனா என் கல்யாணம் ரிஸெப்ஷன்லே  நான் கட்டறதைப் போல புடவைக கட்டிக்க என் பிரண்ட்ஸ் நோ ந்னு சொல்ல மாட்டாங்க..அதானலே அவ கண்டிப்பா நான் வாங்கி கொடுக்கறதைக் கட்டுவா..நீ புடவையை செல்க்ட் செய்து அவளுக்கு ஃபோட்டோ அனுப்பிவிடு..நாங்க மூணு பேரும்  ஒரே போல புடவைக் கட்ட போகறதுனாலே எங்க மூணு பேருக்கும் ஒரே போல டிஸைன்லே சுசித் ராவை பிளவுஸ் தைக்க சொல்றேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“மீரா ஆன்ட்டி யாரு?’
“கபீரோட அம்மா..எனக்கும் அவங்க அம்மா போலே..அதனாலே அவங்களுக்கும் ஒரு புடவை எடுத்திடு.” என்றாள் ஸ்மிரிதி.
“ஐயோ ஸ்மிரிதி..அத்தனை ஹோட்டல் இருக்கறவங்களுக்குப் போய் என்னைப் புடவை செலக்ட் செய்ய சொல்ற.” என்று அலறினாள் ஜனனி.
“நான் வாங்கி கொடுக்கறது எதுவாயிருந்தாலும் மீரா ஆன்ட்டி கட்டுவாங்க.”
“கல்யாணத்துக்கு டயம் கம்மியா இருக்கே…உங்க எல்லாரோடதையும் அங்கேயிருந்தே நான்  சுசித்ராவுக்கு அனுப்பி விடட்டுமா?
“நான் அவகிட்ட பேசணும்..அவளாலே எல்லாருக்கும் பிளவுஸ் டிசைன் செய்ய முடியுமான்னு தெரியலே..நான் உன்கிட்ட சொன்ன பிறகு நீ அவளுக்கு கொரியர் செய்.” என்றாள் ஸ்மிரிதி.
 “சரி.” என்று சொல்லி சதிகாரர்களோடு அவளை அறியாமல் சேர்ந்து கொண்டாள் ஜனனி.
முன்பே சொன்னது போல் அவளால் ஒரு பிளவுஸ்கூட டிஸைன் செய்து தர முடியாது என்று சுசித்ரா மறுத்துவிட அவர்கள்  மூவரின் புடவை, பிளவுஸுடன் பிரேமா, மீரா இருவரின் பிளவுஸும், புடவையும் சேர்ந்து மும்பைக்கு சென்றது. ஆனால் ஸ்மிரிதி அறியாதது அவளின் மாமியாரின் பிளவுஸும் மும்பையில் மெஹக்கின் மேற்பார்வையில் தைக்கப்பட்டதென்று.
கோயமுத்தூரில் அவருக்காக வாங்கிய புடவையும், பிளவுஸும் மெஹக்கிடம் மும்பையில் இருந்ததென்று சிவகாமி அறிந்திருக்கவில்லை. ஸ்மிரிதியின் விருப்பப்படி ஒரே டிஸைனில் மூன்று பிளவுஸ் மும்பையில் தைக்கப்பட்டது ஆனால் அது வேறு மூன்று பேருக்காக என்று ஸ்மிரிதியும் அறிந்திருக்கவில்லை. கல்யாண வேலைகளில் சிவகாமி பிஸியாக இருக்க, அவளுடைய சொந்த வேலைகளில் ஸ்மிரிதி பிஸியாக இருக்க, ரிசெப்ஷனில் அவர்கள் இருவரையும் மோத வைத்து வேடிக்கை பார்க்க சதி திட்டம் தீட்டப்பட்டிருபதைப் பற்றி அறியாமல் மாமியார், மருமகள் இருவரும் இருளில் இருந்தனர் .

Advertisement