Advertisement

ஸ்மிரிதியின் மனு – 17_1
 மஞ்சு நாத்தை எதிர்பார்க்கவில்லை மனு. ஆனாலும் உடனே சுதாரித்து கொண்டு,”ஃபைன்..ஸ்மிரிதி எங்க?” என்று கேட்க,
“இன்னிக்குள்ள உங்ககிட்ட பேசறேனு சொல்ல சொன்னா.” என்று அவன் மனுவிற்குத் தகவல் சொல்ல,
“எவ்ரிதிங் ஒகே?” என்று மனு அவனிடம் கேட்க,
“எப்பவும் போல.” என்று மஞ்சு நாத் பதிலில் மனு யோசனையில் ஆழ்ந்தான். கார்மேகம் சொன்னதேயே மஞ்சு நாத்தும் சொல்ல, ஸ்மிரிதியினுடைய வாழ்க்கையில் எப்பவும் போல என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். அது ஸ்மிரிதியிடம் கேட்க வேண்டிய கேள்வி என்பதால் மஞ்சு நாத்துடன் பேச்சைத் தொடராமல்,
“ஒகே பை.” என்று சொல்லி போன் இணைப்பைத் துண்டித்தான் மனு.
“மனு உன்னைப் பற்றி கவலைப்படறான்..எவ்ரிதிங் ஒகேவானு கேட்டான்.” என்று மஞ்சு நாத் ஸ்மிரிதியிடம் சொல்ல,
”நான் பார்த்துக்கறேன்..நீ எனக்கு டாக்ஸிக்கு சொல்லிடு.” என்றாள்.  அவர்கள் படுக்கையறையிலிருந்து வெளியேறி அவன் மனைவிக்கும் அவளின் சினேகிதிக்கும் தனிமையை ஏற்படுத்தி கொடுத்தான் மஞ்சு நாத். 
அவன் வெளியேறியவுடன்,“ஸ்மிரிதி..மனு எப்படி இருக்கான்?” என்று சுசித் ரா கேட்க,
“நல்லா இருக்கான்..அப்படியேதான் இருக்கான்..சிகரெட் பாக்கெட்டை வைச்சு அவனை நாக் அவுட் (knock-out) செய்தேன்…என் டிரைவிங் திறமைல உன் காரைக் காக்பிட் ஆக்கி அதிர்ச்சியான, அதிசயமான அனுபவம் கொடுத்தேன்..கார் பறந்திடும், கவுந்திடும்னு கலவரப்பட்டாங்க அம்மா, ஆன் ட்டி, மனு மூணு பேரும்.” என்றாள் ஸ்மிரிதி.
“நிஜமாவா ஸ்மிரிதி..அதிர்ஷ்டசாலிங்களுக்குத் தான் அந்த மாதிரி அனுபவம் கிடைக்கும்..அன்னிக்கும் எனக்கு அதிர்ஷ்டமில்லை..வெளில இருந்துதான் பார்த்தேன்.” என்றாள் சுசித் ரா
“அது வேற.. ஆகே..பீச்சே (முன்னாடி, பின்னாடி)..கார் கண்ட் ரோல் கையைவிட்டு போன அனுபவம்.” என்றாள் ஸ்மிரிதி.
“அதுக்கு நீ காரணமில்லை.” என்றாள் சுசித் ரா.
“நாந்தான் காரணம் சுசித் ரா..வேற யாருமில்லை.” என்றாள் ஸ்மிரிதி.
“அதைப் பற்றி இப்ப பேசி என்ன ஆகப்போகுது..விடு..முடிஞ்சுப் போன விஷயம்.” என்றாள் சுசித் ரா.
“அதை முடிஞ்சுப் போனதா யாரும் நினைக்கலை.” என்றாள் ஸ்மிரிதி.
“இன்னும் எல்லாரும் அதைப் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்களா?” என்று கேட்டாள்.
“என்னை கவனமா ஓட்டுன்ணு அம்மா சொன்ன போதும் சரி..தண்ணி, சிகரெட் பழக்கமெல்லாம் இல்லாத நல்லவன் ராம்ன்னு மனு சொன்ன போதும் சரி..அவங்க எல்லாரும் என்னைப் பற்றி அதே போலதான் நினைச்சுகிட்டு இருக்காங்கன்னு நான் புரிஞ்சுகிட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ அவங்களுக்குப் புரிய வைச்சிருக்கலாமில்ல?” என்று கேட்டாள் சுசித் ரா.
“அப்படி செய்ய ஆரம்பிச்சா என் வாழ்க்கைல நான் வெறும் விளக்கம்தான் கொடுத்துகிட்டு இருக்கமுடியும்..யார் வாழ்க்கைலேயும் விளக்கெத்த முடியாது..என் செயல் எதுக்கும் நான் யாருக்கும் விளக்கம் கொடுக்கறதில்லை.” என்றாள் ஸ்மிரிதி.
“உன்னைப் புரிஞ்சுக்க நினைக்கறவங்களுக்கு நீ விளக்க வேண்டியதில்லை…அவங்களே முயற்சி செய்வாங்க.”
“சில சமயம் விளக்க வேண்டியிருக்கு..எங்கம்மாகிட்ட இப்பதான் என்னோட ஸ்கூல் லைஃப் பற்றி சொன்னேன்..அவங்களுக்கு அதிர்ச்சியா இருந்திச்சு.” என்றாள் ஸ்மிரிதி.
“எங்கம்மாகிட்ட இதுவரைக்கும் நான் சொன்னதில்லை.” என்றாள் சுசித் ரா.
“எல்லாத்தையும் சொல்றத்துக்கு நம்ம எல்லாருக்கும் பீஜி இருந்தாங்க..இருக்காங்க.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்டு யோசனையான சுசித் ரா,
“அவங்க மட்டுமில்லை ஸ்மிரிதி, நீயும் தான் இருக்க..இன்னிக்கு நான் இவ்வளவு தைரியமா எனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுகிட்டு ஒரு குழந்தைக்குத் தாயா இருக்க முடியும்னு நினைக்கறத்துக்குக் காரணம் நீங்க இரண்டுபேரும் தான்…வாழ்க்கையே வேணாம்னு நான் முடிவெடுத்திடுவேனோன்னு என்னைப் பெற்றவங்க பயந்தபோது..தைரியமா என் சுமையைத் தாங்கிகிட்டது நீ..என்னை அவங்க மடிலத் தூக்கி வைச்சுகிட்டது பீஜி..
உன்னை ஸ்கூலேர்ந்து ஸஸ்பெண்ட் செய்தபோது அதுலேர்ந்து வெளிய வர்றத்துக்கு உனக்கு எத்தனை தைரியம் தேவைப்பட்டிருக்கும்னு எனக்குப் அப்பதான் புரிஞ்சுது ஸ்மிரிதி.. நான் டாக்டராக லாயகில்லன்னு முதலே தைரியமா சொல்லியிருந்தா என்னோட ஒரு வருஷ படிப்பு, உன்னோட ஒரு ஸெமஸ்டர் படிப்பு வீணாகியிருக்காது.” என்றாள் சுசித் ரா.
“நான் அதை அப்படி பார்க்கலை..அந்த அனுபவம் கொடுத்த தைரியத்திலதான் உனக்குப் பிடிச்சதை நீ படிக்க முடிஞ்சுது, பிடிச்சவரைக் கல்யாணம் செய்துக்க முடிஞ்சுது..காலேஜ் பாடத்தைத் தள்ளி போட்டு வாழ்க்கைப் பாடத்தைக் கத்துகிட்டோம். ” என்றாள் ஸ்மிரிதி.
“அந்த வாய்ப்பு கிடைச்சதுனாலதான் பழசையெல்லாம், பழக்கத்தையெல்லாம் முயற்சி செய்து மாற்றிகிட்டேன்.” என்றாள் சுசித் ரா.
“பயம்தான் பலீவனம் சுசி..நீ தைரியமா இரு..எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றாள் ஸ்மிரிதி.
“இன்னும் குழந்தையைப் பற்றி பீஜிக்கு சொல்லலை..அவங்ககிட்ட சமாசாரத்தை சொல்லும் போது சங்கடமில்லாம சந்தோஷத்தோட சொல்லணும்னு நினைக்கறேன்..இல்லேன்னா மஞ்சு நாத்தே அவங்கிட்ட இதுக்குள்ள சொல்லியிருப்பானே.” என்றாள் சுசி த் ரா.
“முதல்ல நீ பீஜிகிட்ட பேசு..அப்பறமா அவன் பேசட்டும்.” என்றாள் ஸ்மிரிதி.
மஞ்சு நாத் பேச்சில் புகுந்தவுடன், மனுவும் சினேகிதிகள் பேச்சினுள் புகுந்தான்.
“மனுவ சந்திச்சதைப் பற்றி அவன் ஏன் என்கிட்ட சொல்லலை?” என்று கேட்டாள் சுசித் ரா
“மறந்திருப்பான்..நான் அன்னிக்கு கொஞ்சம் அப்ஸெட்தான்..மனு அவன் வாயை வைச்சுகிட்டு சும்மா இல்லாம ஏதாவது சொல்லிகிட்டு இருந்தான்.” என்றாள் ஸ்மிரிதி.
“உன்னை ஏர் போர்ட்ல சந்திச்ச பிறகு நீ அப் ஸெட்டா இருக்கேனு போன் செய்தான்..அதான் நான் உடனே கபீருக்கு போன் போட்டு உன்னை தில்லி ஏர்போர்ட்ல மீட் செய்ய சொன்னேன்.. அதுக்குள்ள நீ அவன் ஹோட்டல்லதான் அன்னிக்கு நைட் தங்க போறேனு  சொன்னான் கபீர்.”
“அன்னிக்கு நைட் நான் அவன் ஹோட்டல்ல தங்கினது சிவகாமி ஆன் ட்டிக்காக..என் அம்மாக்காக அவங்க பிளானை மாத்தினாங்க நான் அவங்களுக்காக என் பிளானை மாத்திக்கிட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி. பிரேமாவைப் பற்றி பேச்சு வந்தவுடன்,
“ஆன் ட்டி பற்றி என்ன முடிவு செய்திருக்க?”
“ஜலந்தர் வர்றதைப் பற்றி யோசிக்க சொல்லியிருக்கேன்..யோசிக்கறேன்னு சொல்லியிருக்காங்க..அடுத்த வருஷம் ஸ்கூல் ஆரம்பிக்கறவரை டயமிருக்கு..தல்ஜித்கிட்ட வந்துட்டாங்கன்னா அவன் பார்த்துப்பான்..நானும் அடிக்கடி போயி அவங்களைப் பார்க்கமுடியும்.”
“அதுவரை நாங்க பார்த்துக்கறோம்.” என்றாள் சுசித் ரா.
“அதான் நான் கவலையில்லாம இருக்கேன்.” என்ற ஸ்மிரிதி மனுவைப் பற்றிய பேச்சை மறுபடியும் ஆரம்பிக்காமல் மௌனமாக, சுசித் ராவோ அவன் அப்படி என்ன பேசினான் என்று அறியும் ஆவலில் இருந்தாள்.
 “அன்னிக்கு  உன்னை அப்ஸெட் செய்யற மாதிரி என்ன சொன்னான் மனு?”
“ஒரு சந்தர்பத்தையும் மிஸ் செய்யாம நான் செய்ததெல்லாத்தையும் எனக்கே தெளிவா ஞாபகப்படுத்திகிட்டிருந்தான்..வக்கீல் லேசுல எதையும் மறக்க மாட்டான் போல.”
“ஏன் மறக்கலை ஸ்மிரிதி?” என்று கேட்டாள் சுசித் ரா.
“எனக்கும் அவங்க எல்லாருக்கும் நடுவுல பத்து வருஷம் இருக்கு..அவங்க யாரும் மாறலை..அப்படியே இருக்காங்க..அம்மாவும், ஆன் ட்டியும் டீச்சர் அதனால நான் செய்த தப்புதான் அவங்க இரண்டு பேருக்கும் நினைவுல இருக்கு..மனுவும் அதே மனுவா இருக்கறதுனால நானும் அதே ஸ்மிரிதினு அவன் நினைச்சுகிட்டிருக்கான்..அவன் செய்யறது கரெக்ட்..சொல்றது கரெக்ட்..அதுக்குதான் வக்கீலாகியிருக்கான் போல..அவனோட  பார்வைல மட்டும் எல்லாத்தையும் பார்த்தா போதும்.”
“அது அவனோட தொழில்..வாழ்க்கைல அப்படி இருக்க முடியாது.”
“அதனாலதான் அவனுக்கு இப்ப குழப்பம் ஆரம்பிச்சிருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“எப்படி?”
“முக்கியமான விஷயம் மாறி போயிருச்சு..அதனால கொஞ்சம் தடுமாற்றம்.” என்றாள் ஸ்மிரிதி.
அதற்குள் அறைக்கு வெளியே ஃபோனில் பேசிக் கொண்டிருந்த மஞ்சு நாத், “உன் டாக்ஸி வந்திடுச்சு.” என்று தகவல் சொல்ல உள்ளே வந்தவுடன்,
அந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்னவென்று சுசித் ரா அவளை விசாரிக்குமுன்,”நான் கிளம்பறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ மறுபடியும் எப்ப வருவ?” என்று அவள் காரியத்தில் கவனமானாள் சுசித் ரா.
“இப்போதைக்கு என்னால எதுவுமே கியாரண்டியா சொல்ல முடியாது..அம்மாவ ஜலந்தருக்கு ஷிஃப்ட் செய்யணும்..அவங்க அங்க வந்த பிறகு நான் அவங்களோட டயம் ஸ்பெண்ட் செய்ய விரும்பறேன்..
என்னோட ஆளுங்ககிட்ட சொல்லி உன் கடைக்கும், கபீர் ஹோட்டலுக்கும் மட்டும் தனியா சரக்கு வர்றத்துக்கு ஏற்பாடு செய்யணும்..தில்லில நான் செய்துகிட்டு இருக்கற வேலையை அம்மா வந்த பிறகு செய்ய முடியாது..மாசத்தில ஒரு தடவை ஜெய்ப்பூர், உதய்ப்பூர் போகலம்னு இருக்கேன்..நிறைய டை அப் செய்யணும்..
அதனால எனக்கு எப்ப முடியுதோ அப்ப நான் உன்னை வந்து பார்க்கறேன்..நேக்ஸ்ட் டைம் தைரியமான அம்மாவா உன்னைப் பார்க்கணும்…டேக் கேர்….இப்ப உன் கடைக்குப் போயிட்டு அங்கேயிருந்து  நேர ஏர்போர்ட்.’ என்று முடிவெடுத்தாள் ஸ்மிரிதி
அன்று இரவு ஏழு மணி போல் மனுவின் போன் அழைக்க, அழைப்பை ஏற்று,
“சொல்லு.” என்றான் மனு.
“எங்க இருக்க?” என்று ஸ்மிரிதி கேட்க,
“ஆபிஸ்லதான்.” என்றான்.
“நான் ஜன்பத்ல இருக்கேன்..அட் ரஸ் சொல்றேன் வா.” என்று மனுவிற்கு அவள் இருக்கும் இடத்தை சொன்னாள். 
ஜன்பத் மார்கெட்டில் வரிசையாக கலைவினைப் பொருட்களை விற்கும் கடைகளில் ஒன்றின் வாசலில் கையில் ஒரு ஹொல்டால் பையுடன் நின்று கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. அவளருகில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். மனுவைப் பார்த்தவுடன்,
“அங்கிள்.. வரேன்.” என்று அவரிடம் விடைபெற்றுக் கொண்டாள்.
“ஹாய் பேபி.” என்றான் அவளுக்கு ஹெல்மெட்டை எடுத்து கொடுத்த மனு.
ஒரே ஒரு நொடி அவனைப் புரியாமல் பார்த்த ஸ்மிரிதி அடுத்த நொடி அர்த்தபுஷ்டியாகப் புன்னகைத்து வார்த்தையை வீணாக்காமல் அவளுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றிய வக்கீலை வாஞ்சையுடன் பார்த்தாள்.
அவள் புரிந்து கொண்டு விட்டாள் என்று அவள் பார்வையிலேயேப் புரிந்து கொண்டவன்,“எங்க போகலாம்?” என்று அவன் கேட்க,
“உன் இஷ்டம்.” என்று சொன்னவளை ஒரு ரவுண்ட் அடித்து, மறுபடியும் அதே தெருவிற்குள் நுழைந்து சரவண பவன் எதிரே வண்டியை நிறுத்தினான் மனு.
ஹோட்டலில் ஒரே ஜன நெருக்கடி. அவர்கள் இரண்டு பேர்தான் என்றவுடன் அவர்களுக்காக உடனே மாடியில் இடம் ஒதுக்க, அங்கே சென்று அமர்ந்தனர் இருவரும்.  அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்தபின் அவன் எதிரே அமர்ந்திருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“உன் கால்கிட்ட வைச்சுகிட்டிருக்கியே அதுலதான் உங்கப்பாகிட்டே இருந்ததைத் தூக்கிகிட்டு போனியா?” என்று விசாரணையை தொடங்கினான் மனு.
ஆரம்பிச்சுடான் டா வக்கீல் அவன் வேலையை என்று கடுப்பான ஸ்மிரிதி,“செக் எடுத்துகிட்டு போக அந்த பேக் வேணாம்..ஹாண்ட் பாக் போதும்.” என்றாள்.
“உங்கப்பா எப்பலேர்ந்து செக்கெல்லாம் கொடுக்கறாரு?” என்று அவன் நக்கலாகக் கேட்க,
“எங்கப்பா எல்லாம் கொடுப்பாரு..கார்மேகம்கிட்ட எது கேட்டாலும் கிடைக்கும்…கேஷா இல்லை காசோலையாங்கறது நம்ம சாயீஸ்.எனக்கு எப்போதும் செக்தான்.” என்று அப்பாவை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் ஸ்மிரிதி.
“ஆமாம்..பொண்ணு கேட்டானு பதினைஞ்சு வயசுல கார் ஓட்ட கத்து கொடுத்தவரு..காம்பன்ஸேஷனா புது கார் வாங்கி கொடுத்தவரு..இப்ப நீ கோடி கணக்கல கேட்டாலும் கொடுப்பாரில்ல?” என்றான் கிண்டலாக மனு.
“பதினாலு.” என்று சாவகாசமாகப் பதில் அளித்தாள் ஸ்மிரிதி
“உன் கால கட்டி போட முடியலை அதனாலதான் கையெழுத்து வாங்கின காகித்தை வைச்சு எல்லாத்தையும் கம்ப்ளீட்டா கட்டி போட்டாரு.” என்றான்.
“அன்னிக்கு நான் மேடுல இருந்த கிரவுண்டுக்கும் (ground)..பள்ளத்துல இருந்த கேட்டிற்கும் (gate) பல முறை ஓட்டினேன்…ரிவர்ஸ்ல.. தண்ணில பதட்டமில்லாம ப்ரெஸ் (press), ரிலீஸ் (release)  செய்தேன்.” என்று அவள் வண்டி ஓட்டியதைப் பற்றி பெருமையாக பேசினாள் ஸ்மிரிதி.
“அப்படி ஓட்டினவ ஏன் வண்டியை போய் மரத்தில மோதின? நீ தப்பு செய்யலைன்னா உங்கப்பா ஏன் புது கார் வாங்கி கொடுக்கணும்..அவர் தப்பை மறைக்கவா?”  

Advertisement