Advertisement

ஸ்மிரிதியின் மனு – 16_2
பிரேமாவின் திடீர் கேள்வி புரியாமல், “அவங்க அம்மானுதான் சொன்னான்..ஷிவானியா? அது யாரு மா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“அவனுக்கு ஷிவானினு யாரோ கிளோஸா இருக்கறதா சிவகாமி சொன்னா..அவளோட நிறைய நேரம் ஃபோன்ல பேசறானாம்..சிவகாமி..ஷிவானி பெயர் பொருத்தும் நல்லா இருக்குதுனு என்கிட்ட கோயமுத்தூரில சொல்லிகிட்டிருந்தா..அது என்னை உறுத்திகிட்டு இருந்திச்சு..இப்ப உன்கிட்ட சொல்லிட்டேன்.” என்றார் பிரேமா.
அவர் சொன்னதைக் கேட்டு கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தாள் ஸ்மிரிதி.
“எதுக்கு இப்ப சிரிக்கற?”
“உங்க பிரண்டை நினைச்சா சிரிப்புதான் வருது..அவங்க பசங்க தங்கம்னு சொன்னாங்க இப்ப அவங்களேத் தகரம்னு நினைக்கறாங்க..பெற்றவங்களுக்குதான் குழந்தைகங்க மேல நம்பிக்கை குறையுது..மற்றவங்களுக்கு இல்ல..உங்க பிரண்டுகிட்ட சொல்லுங்க..
மனுகிட்ட யாராவது நிறைய நேரம் ஃபோன்ல பேசறாங்கன்னா அவங்க கண்டிப்பா கிளையண்டா இருக்கணும் இல்ல இன்னொரு வக்கீலா இருக்கணும்.”
“நீ சொல்றது புரியல.”
“ஷிவானிகிட்ட நிறைய நேரம் பேசறது வேலை விஷயமாயிருக்கும்.” என்று தெளிவுப்படுத்தினாள் ஸ்மிரிதி.
“உனக்கு எப்படி மனுவைப் பற்றி தெரியுது?”
“அவனைப் பற்றி முழுக்க தெரியாது..ஆனா ஃபோன்ல பொண்ணுங்ககிட்ட அன்பா பேசறவன் கிடையாது.. அப்படிப் பேசி பழகறவனா இருந்தா கல்யாணமாகாம பிரம்மச்சாரியா இப்பவரை சுத்திகிட்டிருக்க மாட்டான்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவனுக்குத் தமிழ் பொண்ணா தேடிகிட்டு இருக்கா சிவகாமி..அதான் அவன் கல்யாணம் லேட்டாகுது.” என்றார் பிரேமா.
“இந்த மாதிரி கண்டிஷனெல்லாம் போடறாங்களா கலெக்டரம்மா.” என்று கிண்டல் செய்தாள் ஸ்மிரிதி.
“இது மட்டும்தான்னு நினைக்கறேன்..மனுக்கு என்ன எதிர்பார்ப்புனு எனக்குத் தெரியலை.” 
“அவன் எதிர்பார்பெல்லாம் இனி யாருக்கு வேணும்.” என்றாள் ஸ்மிரிதி.
“இந்த மாதிரி அவன்கிட்ட பேசாத.. இப்படி பேசினா எந்தப் பிரச்சனையும் முடிவுக்கு வராது.” என்றார் பிரேமா.
“மாம்..ப்ளீஸ்..நோ அட்வைஸ்..வக்கீலை என் வழில நான் வழிக்கு கொண்டு வருவேன்.” என்றாள் ஸ்மிரிதி.
அவளுக்கென்று தனியாக ஏற்பாடு செய்திருந்த கெஸ்ட் ரூமை மறுத்துவிட்டு அன்று இரவும் கோயமுத்தூர் ஹோட்டலில் உறங்கியது போல் அம்மாவும், பெண்ணும் ஒரே கட்டிலில் உறங்கினர்.
அடுத்த ஒரு வாரத்தை பெங்களூரில் சுசித்ராவுடன் கழித்தாள் ஸ்மிரிதி.  அந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பிரேமாவை சந்திக்க சென்றாள்.  ஒவ்வொரு மாதமும் மறக்காமல் மஞ்சு நாத்துடன் செக் அப்பிற்கு செல்ல வேண்டுமென்றும், ஜலந்தர் வருவதை பற்றி யோசிக்க வேண்டுமென்றும் ஸ்மிரிதி ஓயாமல் அறிவுறுத்த அவள் வற்புறுத்தலின் பேரில் ஜலந்தர் வருவதைப் பற்றி யோசனை செய்வதாக வாக்களித்தார் பிரேமா. 
அன்று காலையிலிருந்து விடாமல் சுசித் ரா அழுது கொண்டிருக்க அவளைச் சமாதானப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மஞ்சு நாத் ஸ்மிரிதியின் அறைக்கு வந்து,
“அழுதுகிட்டிருக்கா..என்ன செய்ய?” என்று கேட்டான்.
“நான் போகணும்..ஒருவாரம் இங்க இருந்தாச்சு..தில்லில வேலை இருக்கு..எங்க சரக்கெல்லாம் வந்து இறங்கியிருக்கு..அதைச் சரி பார்த்து உங்களுக்கு, கபீருக்கு அப்பறம் ஜன்பத்ல ஒரு கடைக்கும் விலைப் போட்டு பிரிச்சு அனுப்பனும்..இனி இங்க இருக்கமுடியாது..நீ கவலைப்படாத..நான் இப்ப சொல்றத நீ வாய மூடி கேட்டுகிட்டு இரு..உன்கிட்ட அவ ஏதாவது என்னைப் பற்றி கம்ப்ளெயண்ட் செய்தா பேசாம இரு..ரியாக்ட் செய்யாத.” என்று எச்சரித்து விட்டு விடுவிடுவென்று பக்கத்து அறைக்குப் போனாள் ஸ்மிரிதி.
அங்கு படுக்கையில் ஒருக்களித்து  அழுதுகொண்டிருந்த சுசித் ராவின் மேல் அவள் போனை விட்டெறிய அது சற்று தள்ளி விழ, சுசித் ரா திரும்பி பார்த்தாள்.
“எழுந்திரு..ஆஸ்பத்திரி போகலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“எதுக்கு?” என்று சுசித் ரா கேட்க,
“உனக்கு அம்மாவாக விருப்பமில்லை..அந்த விருப்பத்தை ஆஸ்பத்திரில நிறைவேத்திட சொல்லிடறேன்..உங்க ஆஸ்பத்திரிங்கறதுனால நீ செய்யப் போற விஷயம் வெளிய வராது..அப்பறம் அவங்ககிட்டையே சொல்லி இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு எடுத்திடலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஷட் அப் ஸ்மிரிதி..என்னை ஒரு குழந்தைக்கு அம்மாவா நினைச்சுப் பார்க்க முடியலை..எனக்குப் பயமா இருக்குனு சொன்னேன்..குழந்தையே வேணாம்னு சொல்லல..இவ சொல்றதைக் கேட்டீங்களா?” என்று மஞ்சு நாத்தைப் பார்த்து கேட்டாள் சுசித் ரா.
அவன் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க, ஸ்மிரிதி அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள்.  அதைக் கேட்டவுடன் கணவன், மனைவி இருவரும் தலை குனிந்தனர்.
“அந்தப் பயத்தைப் போக்கறத்துக்குதான் சிகரெட் தேவைப்படுதா?” என்றாள் ஸ்மிரிதி.
“வண்டில எப்படி சிகரெட் பாக்கெட் வந்ததுனு எனக்கு யோசனையா இருந்திச்சு..இதுதான் காரணம்னு இப்பதான் புரிஞ்சுது. ஆரம்பத்திலேயே பயந்துகிட்டு சிகரெட் தேவைப்படுது அதுக்கு அப்பறம் வேற என்ன தேவைப்படுமோ?
நான் எத்தனையோ முறை சொல்லிட்டேன்..இதுதான் கடைசி….நீ பயந்த காலமெல்லாம் முடிஞ்சு போயிடுச்சு..இப்ப நீ சுயமா முடிவெடுத்து வாழ்ந்துகிட்டு வர..திடீர்னு உனக்கு எப்படி உன் மேல சந்தேகம் வந்திடுச்சுனு எனக்குப் புரியலை..
உங்கம்மாவைப் போல நீ மாறிடுவேனு பயப்படவேணாம்….உங்கம்மா மாதிரி நீ உன் குழந்தைய வளர்க்க மாட்ட..இது எல்லாத்துக்கும் அப்பறம் உன் மேலேயே உனக்கு சந்தேகம் வருதுனா அது சரியில்ல.. அதனால குழந்தைப் பிறக்கறதுக்கு முன்னாடியே நீங்க இரண்டு பேரும் ஒரு முடிவுக்கு வர்றது நல்லது.” என்றாள் ஸ்மிரிதி.
“நான் ஆஸ்பத்திரிக்கு வர மாட்டேன்..என் குழந்தை எனக்கு வேணும்..என்கூடவே வைச்சுப்பேன்..நல்லா வளர்ப்பேன்..ஹாஸ்டலெல்லாம் அனுப்ப மாட்டேன்.” என்று படபடப்புடன் பதில்லளித்தாள் சுசித் ரா.
“அது சரி..ஸ்கூலைப் பற்றி யோசனை செய்யறேன்னா நல்ல முன்னேற்றம்தான்..ஹாஸ்டல் அனுபலேனா என்னை மாதிரி ஒரு பிரண்ட் அதுக்கு கிடைக்காது.” என்று ஸ்மிரிதி சொன்னவுடன்,
ஸ்மிரிதியைப் படுக்கைக்கு இழுத்து அணைத்துக் கொண்ட சுசித்ரா அழுகையுடன்,
“நான் சும்மாதான் அந்தப் பாக்கெட்டை வைச்சுகிட்டிருந்தேன்….குழந்தைக்குக் கெடுதலா இருக்கற எதையும் நான் செய்ய மாட்டேன்..ப்ராமிஸ்.” என்று வாக்குறுதி அளித்தாள்.
“அந்தப் பாக்கெட்டை அவ யூஸ் செய்ய நான் விட்டிருப்பேனா?” என்று ஸ்மிரிதியைப் பார்த்து மஞ்சு நாத் கேட்க,
“அப்ப எதுக்கு வாங்கி கொடுத்த?”
“அவளுக்கு அது தேவைப்படுதான்னு பார்க்கறத்துக்குதான்..இப்பவரைக்கும் அவளுக்கு அது தேவைப்படலை.” என்றான் மஞ்சு நாத்.
“அவளுக்கு அது தேவைப்பட்டது போது உன்னை மாதிரி ஒரு ஆள் அவ வாழ்க்கைல இல்லை..இப்ப நீ இருக்கும்போது அது தேவைப்படாது.” என்றாள் ஸ்மிரிதி.
“அதை நான் புரிஞ்சுகிட்டேன் ஸ்மிரிதி.” என்றாள் சுசித் ரா.
“அந்தப் பாக்கெட் என் தேவையை பூர்த்தி செய்திச்சு.” என்று சொல்லி சுசித் ராவைப் பார்த்து கண் சிமிட்டினாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி.” என்று அதிர்ச்சியுடன் விளித்தாள் சுசித் ரா. அவளுக்குப் பதில் சொல்லுமுன் ஸ்மிரிதியின் ஃபோன் ஒலிக்க, 
கட்டிலருகே நின்று கொண்டிருந்த மஞ்சு நாத் அவள் ஃபோனில் அழைப்பது மனு என்று தெரிந்தவுடன்,
“இட்ஸ் மனு.” என்றான். 
அதைக் கேட்டவுடன் சுசித் ரா விருட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு,
“மனு வளவன்?” என்று ஸ்மிரிதியைக் கேள்வியாய் பார்க்க,
“ஸேம்ம்ம்ம்..” என்று ராகம் இழுத்தாள் ஸ்மிரிதி.
“எப்படி..அவன் எதுக்கு உனக்கு ஃபோன் செய்யறான்?” என்று அவள் கேட்கும்போது ஃபோன் அடித்து ஓய்ந்தது.
“கோயமுத்தூர் கல்யாணத்தில சந்திச்சோம்..தில்லில மெஹக் ஹோட்டல் ரூம்ல அவன், அவன் தம்பி, புது கல்யாண ஜோடி ராம், ஜனனி எல்லாருக்கும் டின்னர் ஏற்பாடு செய்தேன்..அப்பறம் எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு அவங்க அம்மவோட வந்தான்.” என்றாள் ஸ்மிரிதி. 
“இதெல்லாம் மெஹக் என்கிட்ட சொல்லவே இல்ல.” என்றாள் சுசித் ரா.
“நீ யார்கிட்டையாவது பேசற நிலைல இருந்தியா?  உன் விஷயம் பற்றி எல்லாருக்கும் எப்ப சொல்ல போற?”
அதற்கு சுசித் ரா மௌனம் காக்க,
அப்போது ஸ்மிரிதியின் ஃபோன் மறுபடியும் அடிக்க ஆரம்பித்தது.
“நான் எடுத்து பேசட்டுமா?” என்று மஞ்சு நாத் ஸ்மிரிதியிடம் கேட்க,
“உனக்கு எப்படி மனுவைத் தெரியும்?” என்று சுசித் ரா அவனைக் கேட்க,
“கோயமுத்தூர் ஏர் போர்ட்ல ஸ்மிரிதி அறிமுகப்படுத்தி வைச்சா.” என்றான் மஞ்சு நாத்.
“ஏன் என்கிட்ட நீங்க சொல்லலை?” என்று சுசித் ரா அவனைக் கேள்வி கேட்க
“அன்னிக்கு அது எனக்கு முக்கியமா படலை..ஸ்மிரிதி வாஸ் அப்செட்.அதுதான் முக்கியமாப் பட்டிச்சு” என்றான் மஞ்சு நாத்.
அவர்கள் மூவரும் ஸ்மிரிதியின் ஃபோனை பார்த்து கொண்டிருந்தபோது அது அடித்து ஓய்ந்தது.  அடுத்த நொடி மறுபடியும் ஒலிக்க ஆரம்பித்தவுடன்,
“நீயே பேசு அவன்கிட்ட..இன்னிக்கு எப்படியும் அவனோட நான் பேசுவேனு சொல்லிடு.” என்று மஞ்சு நாத்திடம் சொன்னாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் ஃபோனை ஸிலைட் ஒபன் செய்து,”ஹாய் மனு, மஞ்சு நாத் ஹியர். எப்படி இருக்கீங்க?” என்றான் மஞ்சு நாத்.

Advertisement